Sunday, July 31, 2011

செய்தியும் லொள்ளும்....!

ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை...கைது!: நில மோசடியில் அடுத்த திருப்பம்........!!!


[[தயாளுவின் கணக்குப்பிள்ளை கைது எப்போது...??]]


காருக்குள் "அலங்கோலம்': சோதனையிட்ட போலீசுக்கு "அதிர்ச்சி'


[[அடங்கொய்யால]]


மும்பை : மும்பை கடற்கரையில், சிறிய சரக்குக் கப்பல் தரை தட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் எம்.வி. விஸ்டம் என்ற சரக்குக் கப்பல், கொழும்பிலிருந்து, குஜராத்தின் ஆலாங் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, மும்பையின் ஜுகு கடற்கரையில் தரை தட்டியது. 


[[நாஞ்சில் மனோ எங்கே போனாலும் பிராப்ளம் ம்ஹும்]]


உள்ளாட்சி தேர்தல் வைகோ முடிவு என்ன?திருநெல்வேலி:மத்திய அரசு கொண்டுவரும் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக, தமிழக முதல்வருடன் இணைந்து, தமிழகத்தின் குரல் ஒலிக்க வேண்டும் என, வைகோ தெரிவித்தார். 




[[ஹா ஹா ஹா ஹா மறுபடியும் முதல்லே இருந்தா...??? முடியல]]


புதுடில்லி:"எந்த இடத்தில் அனுமதி கொடுத்தாலும் போராட்டம் நடத்த தயார்' என, காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
[[அண்ணே உங்களையும் காங்கிரஸ்'காரன் வாழவிடமாட்டான் போல]]



சத்தான கல்வி கொடுக்க அரசு போராடுகிறது : விஜயகாந்த் 

சென்னை:""மாணவர்களுக்கு, தரமான கல்வி கொடுக்கத்தான் இன்றைய அரசு போராடுகிறது. எனவே, கருணாநிதியின் போராட்ட சூழ்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்,
[[மூனா கானா'வின் சூழ்ச்சியினால அவர் குடும்பமும் கட்சியும் கோர்ட்லையும், ஜெயில்லயுமா நாறிபோயி கெடக்கே ஹி ஹி]]

ஆம்னி பஸ்களுக்கு ஈடுகொடுக்கத் திணறும் அரசு விரைவு பஸ்கள்....!!!

[[அம்மாவுக்கு ஈடு குடுக்க முடியாத திமுக'ன்னு சொல்லுங்க]]

அமெரிக்காவின் கடன் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படுமா?

[[போங்கடாங்]]

எனக்கு எதிரி அந்த அரசியல்வாதிதான்! அஜீத் ஆவேச பேட்டி!! 

[[மூனா கானா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்ட ஆவேசம் இன்னும் அடங்கலை தலைக்கு...!!!]]


தனுஷ் குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர்......!!!
[[ஆண்டாவா இவனுகளை நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை நீ காப்பாத்து]]

குண்டர் சட்டத்தில் எஸ்ஸார் கோபி கைது? 
[[ஆவலாய் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அ நெ கைது எப்போது...??? ரொம்ப ஆர்வமா இருக்கு..!!]]

மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது வழக்கு.....!!!

[[குமரி மாவட்டத்துல ஏகப்பட்ட நிலத்தை அண்ணன் [[போடாங்]] வளைச்சி போட்ட்ருக்காராம்...!!]]


அமெரிக்கா பாக்., உறவில் மீண்டும் சிக்கல்....!!!
[[ஐயய்யோ பாகிஸ்தான்'காரன், அமெரிக்கா'காரன் கையை பிடிச்சி இழுத்துட்டான்]]


நன்றி : தினமலர்.















Friday, July 29, 2011

பெண்களின் மிஸ்டு கால் மன்னர்கள்...!!!

காப்பி பேஸ்ட்டின் "தானை தலைவன்" எங்கள் அண்ணன் சி பி'யின் ஒரு சூப்பர் டூப்பரும், பெண்களுக்கு உபயோகமான ஒரு கட்டுரை குங்குமம் வார இதழில் வந்துள்ளது...!!! பொதுவா சிபி'தான் காப்பி பேஸ்ட் பண்ணுவான், ஒரு மாறுதலுக்கு சிபி'யின் கட்டுரையை நான் காப்பி டைப் [[நல்லா பாருங்க "காப்பி டைப்"]] பண்ணி போட்டுருக்கேன்.

மிஸ்டுகால் வில்லங்கம்...!!!

சுகந்தியின் மொபைல் போனுக்கு அந்த மிஸ்டுகால் வந்திருந்தது. நீண்ட நேரம் யோசித்து பார்த்தால். ம்ஹும்....யாருடைய நம்பர் என்று தெரியவில்லை. "கூப்பிட்டு பார்ப்போமே" என்று அந்த எண்ணை அழைத்தாள்...

"உங்க நம்பர்ல இருந்து ஒரு மிஸ்டுகால்  வந்திருந்தது" என்றாள்.

"ஹாய் நீங்க கல்பனா'தானே...?" மறுமுனையில் வசீகரிக்கும் ஆண்குரல், அந்தகுரலின் வசீகரத்தை ஒரு வினாடி ரசித்த சுகந்தி, "இல்லைங்க.............ராங் நம்பர்"என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் சுகந்தி, அந்த சம்பவத்தை அதோடு மறந்தும் விட்டாள்.


நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு அழைப்பு, "கல்பனா இருக்காங்களா?" - அதே குரல்..! 
"இல்லீங்க, மறுபடியும் தப்பான நம்பருக்கு கூப்பிட்டு இருக்கீங்க, உங்களுக்கு என்ன நம்பர் வேணும்..?? [[இந்த கேள்வியே தப்பு, பேசாம போனை கட் பண்ண வேண்டியதுதானே]] சுகந்தி கேட்டாள். அவன் சொன்னான், "ஐயோ....இது என் நம்பராச்சே..!! என்றாள் சுகந்தி.

"தப்பா நினைச்சிக்காதீங்க, நான் அண்ணா யூனிவர்சிட்டியில பி ஹெச் டி பண்ணிட்டு இருக்கேன், சில தகவல்களை தேடி அலையுறேன், கல்பனாகிட்டே அந்த தகவல்கள் கிடைக்கும்னு சொன்னாங்க, யூனிவர்சிட்டியில அவங்க நம்பர்னு இதைதான் குடுத்தாங்க" - அவன் குரலில் கொஞ்சம் கவலை தெரிந்தது [[அடேங்கப்பா நடிப்பை பாரு ராஸ்கல்]] 

அண்ணா யூனிவர்சிட்டி, ஆராய்ச்சி மாணவன் என்றதும் சுகந்தியின் மனதில் கொஞ்சம் வியப்பு, இவளும் எம்.பில் முடித்து விட்டு டாக்டரேட் ஆராய்ச்சி கனவில் இருப்பவல்தான். "என்ன ஆராய்ச்சி பண்றீங்க சார்..? [[தேவையா இது...??]] 

"என்னை நீங்க விஜய்'ன்னே கூப்பிடலாம் [[டாகுட்டருக்கு வச்சிட்டான்ய்யா ஆப்பு]] சார்னு கூப்புடுற அளவுக்கு இன்னும் வயசாகலை" என சிரித்து கொண்டே சொன்னான்......"நான் நானோ டெக்னாலஜில ரிசர்ச் பண்றேங்க!" 

"ஒ....ரியலி! நான் கூட அதே ஏரியாவுலதான் ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கேன்" என்றாள் சுகந்தி, "வாவ்....நீங்க கூட ஸ்டுடண்டா ! இஃப் யூ டோன்ட் மைண்ட்...எனக்கு கொஞ்சம் தகவல் தர முடியுமா ?" 
"தகவலனு சொன்னா..?" 


"உங்க ஆராய்ச்சிக்கு நீங்க பத்திரமா மூட்டை கட்டி வச்சிருக்கிற விஷயம் எதுவும் தரவேண்டாங்க ! ஏதோ போனா போகுதுன்னு ரெண்டு, மூணு தகவல்கள் குடுத்தீங்கன்னா கூட போதும்" - அவன் சிரிக்க சுகந்தியும் சிரித்தாள் [[வெளங்கிரும்]] 

"நீங்க எங்கே தங்கி இருக்கீங்க...??" சுகந்தி கேட்டதும், அவன் அண்ணா நகரில் ஒரு முகவரியை சொன்னான், சுகந்தி ஆச்சர்யமானாள், அவள் அதற்கு பக்கத்து தெருவில்தான் வசிக்கிறாள் [[அவ்வ்வ்வ்வ்வ்]]

சில நாட்களுக்கு பின் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சந்தித்து கொண்டார்கள், அந்த பழக்கம் முதலில் ஆரோக்யமான கல்வியில் ஆரம்பித்து, பிறகு கொஞ்ச கொஞ்சமாக ஜாலி, அன்பு, காதல் என தடம் மாறியது [[நாசமா போச்சி போ]]

"என்ன மேடம் ஒரு நாள் கூட வீட்டுக்கு கூப்பிட்டு அப்பா, அம்மாவை அறிமுகபடுத்த மாட்டேங்குறீங்க.....ஒரு கப் காப்பி தர மாட்டேங்குறீங்க ? [[ஆஹா இப்பவாது சுகந்தி நீ உஷார் ஆகலியே அவ்வ்வ்வ்வ்]]] என்று விஜய் [[டாகுடர் விஜய் அல்ல ஹி ஹி]] சீண்ட, அன்றே அவனை வீட்டிற்கு அழைத்து வந்தாள். வீட்டில் அவர்களை தவிர யாரும் இல்லை, மனதுக்கு பிடித்தவருடனான மாலை [[கயிறு]] பொழுது அவர்கள் மேல் ஒரு மெல்லிய போர்வையாய் படர்ந்தது, நெருக்கமும், இணக்கமும் எல்லை தாண்ட வைத்தது [[அடப்பாவிகளா...!!]] 


முதலில் குற்ற உணர்வாய் தோன்றிய விஷயம், பிறகு அடிக்கடி நடந்தது. ஆனாலும் ஒரு முறை கூட அவன் வீட்டை பார்க்க வேண்டும் என அவளுக்கு தோன்றவே இல்லை [[ம்ஹும் அம்புட்டு மயக்கம்]] 

திடீர் என ஒரு நாள் விஜய் காணாமல் போய் விட்டான், அவன் செல்போன் ஸ்விச் ஆஃப் செய்யபட்டிருந்தது, சுகந்திக்கு பதற்றம் அதிகரித்தது, அவன் சொன்ன அப்பார்ட்மென்ட்ல் விசாரித்தால், அப்படி யாரும் அங்கு இருந்திருக்கவில்லை, யூனிவர்சிட்டியிலையும் அப்படி யாரும் ஆராய்ச்சி மாணவன் இல்லை...


உட்கார்ந்து யோசித்தவளுக்கு [[ரூம் போட்டு யோசித்ததின் விளைவு இது ]] விஷயம் புரிய ஆரம்பித்தது, அவன் ராங் நம்பரில் ஆரம்பித்த ராங் நபர் !! [[ஹய்யோ ஹய்யோ]] எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறான், இவளுடைய குடும்பம், படிப்பு ரசனை எல்லாம் தெரிந்து கொண்டே வலையில் வீழ்த்தியிருக்கிறான்...

இது ஏதோ ஒரு சுகந்தியின் கதையல்ல...தமிழகத்தில் பல இடங்களிலும் பலவகைகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியே...சைபர் க்ரைமுக்கு வரும் பல்வேறு புகார்கள் பயமுறுத்துகின்றன,மிஸ்டுகால், ராங் நம்பர் போன்றவை கூட தூண்டில் ஆகும் என்பதை பலரும் யோசித்து கூட பார்ப்பதில்லை, 

"யாரோ அழைத்திருக்கிரார்களே....முக்கியமான சமாச்சாரமோ [[ஹி ஹி]] என திரும்ப அழைத்தாள் போச்சு !!! தெரியாத எண்ணிலிருந்து பெண்களுக்கு மிஸ்டுகால் வந்தால், திரும்ப அழைக்காமல் இருந்தாள் உசிதம். பேசியே ஆகவேண்டும் என தோன்றினால் வீட்டு ஆண்களிடம் கொடுத்து பேச சொல்லுங்கள், "என் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்ததிருந்ததா....இருக்காதே" என பார்ட்டி எஸ்கேப் ஆகிவிடுவார்...

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு புகைப்படங்களை வைப்பதும், தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் ரொம்பத் தப்பு, அந்த படங்களை பார்த்து, எண்ணைப்பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை வரும் ஆபத்து உண்டு, மின் அஞ்சலிலோ, எஸ் எம் எஸ் மூலமாகவோ, இணையதளங்கள் மூலமாகவோ கிடைக்கும் தேவையற்ற எண்களுக்கு போன் செய்யவே செய்யாதீர்கள், இது சிக்கலை காசு கொடுத்து வாங்குவதற்கு சமம்...

மிஸ்டு கால், ராங் கால் போல இன்னொரு விஷயம் ராங் எஸ் எம் எஸ், முதலில் "குட்நைட்" என்று ஒரு எஸ் எம் எஸ் வரும்" யாரது??? என்று நீங்கள் திருப்பி எஸ் எம் எஸ் அனுப்பினால் நீங்கள் அவனுடைய லிஸ்டில் சேர்ந்து விடுவீர்கள், பின் சிக்கல் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம்...!!


ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் [[சொல்லுங்கண்ணே]] தெரியாத,எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ் எம் எஸ் போன்றவற்றை நிராகரித்து விடுங்கள், தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்....!!!

குங்குமம் வார இதழுக்காக சி. பி. செந்தில்குமார் [[அட்ரா சக்கை சி பி'னும் சொல்லலாம்]]

நன்றி : குங்குமம்.


Thursday, July 28, 2011

ஒரு பிரபல பதிவரின் தொடர் வெற்றி...!!!!!!

ஸ்கூலுக்கு குழந்தையை [[மும்பை]] விடபோன என் வீட்டம்மாவுக்கு போன் செய்து, செல்லம் அங்கே கடையில ஜூனியர் விகடனோ, ஆ விகடனோ, குமுதம் நாளிதழ் இருந்தால் எல்லாம் வாங்கிட்டு வாம்மா'ன்னு சொன்னேன், அவளும் சரி அத்தான் என சொன்னாள்....

கொஞ்சநேரvம் களிஞ்சதும் அவளிடமிருந்து போன், அத்தான் ஒரு வார இதழும் இல்லை ஆனால் குங்குமம் [[வார இதழ்]] தான் இருக்கு வாங்கிட்டு வரட்டுமா'ன்னு கேட்கவும் நானும் வாங்கிட்டு வாம்மானு சொன்னேன்...


அவள் கொண்டு தந்ததும் நான் அதை வாசிக்காமல், பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்தேன், குங்குமம் டேபிளில் இருந்தது, கொஞ்ச [[அதிக]] நேரம் கழிச்சி தலைப்பை பார்த்தேன் அங்கே...
'பெண்களை மயக்கும் மிஸ்டுகால் வில்லன்கள்" என்று எழுதி இருந்தது....!!!


அடடா உடனே படிக்கனுமேன்னு தோணியதும், பிரகாசின் பதிவில் கமெண்ட்ஸ் போடும் பிஸியில் இருந்தமையால், படிக்காமல் மறந்து பதிவில் பிஸி ஆகிவிட்டேன், நேற்று மதியம் என் மனைவி, குங்குமம் படித்துவிட்டு, அத்தான் பாருங்க, நீங்க ஒரு ஆளை [[நண்பனைதான் ஹி ஹி]] மூதேவி மூதேவி'ன்னு திட்டி எழுதுவீன்களே [[அவ்வ்வ்வ்வ்]] அந்தாளுதான் "பெண்களை மயக்கும் மிஸ்டுகால் வில்லன்கள்" என்ற கட்டுரையை எழுதி இருக்கார் போல என சொல்லவும் ஆச்சர்யமாக விரித்து படிக்க ஆரம்பிச்சேன்....!!!


ஆமாம் சி பி செந்தில்குமார்'ன்னு போட்டுருக்கு...!!! ஆனாலும் எனக்கு சந்தேகமாகவே இருக்கவும், சிபி'க்கு போனை போட்டேன் உடனே பிட்டு படம் பார்த்துட்டு இருந்தானோ அட்டு படம் பார்த்துட்டு இருந்தானோ தெரியலை ராஸ்கல் என் போனை அட்டென்ட் பண்ணிட்டு ஹா ஹா ஹா ஹா'ன்னு சிரிச்சிட்டே இருக்கான் [[ராஸ்கல்]] 


டேய் டேய் நிறுத்துடா உன் சிரிப்பை, ஆமாம் சாப்பிட்டியா [[ஓசி சாப்பாடு]] ஆமாம்.........சரி குங்குமத்துல நீ ஏதாவது எழுதினியா கேட்குமுன்னே டெலிபோன் கட்டானது, கடுப்பான நான்.........சரி நம்ம போன்ல காசு தீந்துருக்குமொன்ற டவுட்ல, செக் பண்ணினேன் ஹி ஹி ஆமா காசு முடிஞ்சி போச்சி......!


அப்புறம் வோடா [[வடை இல்லை]] போன்ல  காசு போட்டுட்டு மறுபடியும் போன் பண்ணினேன் அப்பவும் ஹி ஹி ஹி ஹி'ன்னு சிரிச்சிட்டே இருக்கவும் நாலு @#$%$#@@###@@$$$$$$$$##$$%@@ திட்டு திட்டவும் நார்மலானான்.....!!!


டேய் மக்கா குமுதத்துல'ன்னு நான் ஆரம்பிக்கவும் இடைமறித்தான், ஆமாம் குங்குமத்துல எழுதுனது நாந்தேன், அது மட்டுமா, ஆ விகடன்ல இந்த வாரம் எழுதி இருக்கேன், என்னமோ ஒரு தலைப்பு சொன்னான் மறந்து போச்சு.....ஆனால் அவன் குங்குமத்தில் எழுதிய கட்டுரை மிகவும் பெண்களுக்கு உபயோகம் உள்ளது என்பது என் மனைவியின் பாராட்டில் தெறிந்தது..!!! வாழ்த்துக்கள்'டா மக்கா.....


நண்பர்களின் எழுத்துக்கள் பேப்பரிலோ, வார இதழ்களிலோ வரும்போது மனசுக்கு என்னவோ நாமே எழுதுன ஃபீலிங்கும், பெருமையுமா இருக்கு இல்லையா........??? என் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......!!!


டிஸ்கி : டேய் கில்மா பத்திரிக்கைகளுக்கு சற்று தள்ளியே இரு, ஏன்னா உன்னை கடுமையாக கண்காணிப்பதாக உளவுத்துறை "ஆபீசர்கிட்டே" இருந்து ரகசிய தகவல் எனக்கு வந்துருக்கு சாக்குரதை....


டிஸ்கி : படங்கள் எல்லாம் குங்குமம் வார இதழில் சுட்டது ஹி ஹி........

நன்றி குங்குமம்.


Wednesday, July 27, 2011

உங்கள் அலைபேசி பாதுகாப்பானதா...???



எங்கு பார்த்தாலும் அலைபேசி ஹேக்கிங் என்ற செய்தி பரவலாக உள்ளது.உங்கள் அலைபேசி பாதுகாப்பானதா ?இல்லை என்கின்றனர் வல்லுனர்கள்.ஆம் யார் வேண்டுமானாலும் உங்கள் அலைபேசியின் உள்ளே நுழைந்து தேவையான தகவல்களை பெற இயலும்.

பிஷ்ஷிங்(Phishing) என்ற முறை இங்கும் பயன்படுகின்றது.உங்கள் நண்பர்களே உங்கள் மின்னஞ்சலுக்கு தொடுப்புகளை(links) அனுப்பினாலும் கவனமாக இருங்கள்.பலருக்கு இது பற்றி தெரிந்திருந்தும் கவனக்குறைவாக இருந்து விடுகிறார்கள்.

பரவலாக உங்கள் அலைபேசி ஹாக்   செய்யப்படுவதற்கு காரணம் நீங்கள் தரவிறக்கும்  பயன்பாட்டான்களே(Applications).
நீங்கள் நோக்கியா பயன்படுத்தினால் நோக்கியா ஸ்டோர் அல்லது   Symbianking.com  தளத்தில் இருந்து பயன்படுத்துங்கள்.

ஐ- போன்  பயன்படுத்துபவர்கள் உங்கள் போனை ஜெயில் பிரேக் செய்யாவிட்டால் பிரச்சினை எதுவும் இல்லை.

நீங்கள்  ஆன்ட்ராய்டு பயன்படுத்துவர் என்றால் உங்களுக்கு தலைவலி தான்.கணினியில் எப்படி விண்டோசில் ஏகப்பட்ட வைரசுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டோ அதோ போல் தான் ஆன்ட்ராய்டு.இதன் ஸ்டோர் தேவையற்ற பயன்பாட்டான்களை உடனே நீக்குவதில்லை.இதனால் பாதிக்கபட்டவர்கள் ஏராளம்.


உங்கள் போன்களை கவனமாக பயன்படுத்தும் காலம் வந்து விட்டது.
உஷார்!! 

டிஸ்கி : இது நண்பன் "புதியயுகம்" எனக்கு அனுப்பிய மெயில்..............................................................!!!

மும்பையில் நண்பர்களுடன் நான்....

Tuesday, July 26, 2011

முடிந்தது ரயில் பயணம்....

அந்த பையன் உரிமையோடு என்னை நோக்கி வரவும், பாப்பா'ம்மா'கிட்டே உடனே கேட்டேன் யாரும்மா இது உன் தம்பியா என்று, அவள் ஹா ஹா ஹா ஹா என சிரித்து விட்டு சொன்னாள் ஆமாம் அண்ணா நல்லா பாருங்க தம்பிதான் "கூர்மதியன்" என்றவுடன் சட்டென ஞயாபகம் வந்தான் "தம்பி கூர்மதியன்" ஹா ஹா ஹா ஹா [[உஷார் ஆகிருவோம்ல]] ஆபீசர்'தான் என்னை விட ஷார்ப் ஆச்சே கை கொடுத்து நலம் விசாரித்தார் தம்பியை.....!!!
தம்பி கூர்மதியன்...

அவன் என்னிடமும் ஆபீசரிடமும் திரும்ப திரும்ப கேட்ட [[புலம்பின]] கேள்வி, அண்ணா என்னை மறந்துட்டீங்க, அண்ணா என்னை மறந்துட்டீங்க......எவ்வளவோ சொல்லியும் அவன் சமாதானமாக வில்லை, எனக்கு மனசு வருந்தினாலும், தம்பி என் சூழ்நிலை அப்பிடிம்மா நான் ஜாலியா சுத்துறேன்னு நினைக்காதே நான் பர்சனலா சில வேலைகளுக்காக வந்துருக்கேன், என் நெருங்கிய எல்லாருக்கும் இது தெரியும் ஏன்னா பாப்பா'ம்மா'கிட்டேயே கேட்டுக்கோ அவளே சொல்லுவாள் என ஆறுதலாக சொன்னேன்....

தம்பி கூர்மதியன், நான், ஆபீசர், கல்பனா பாப்பா எடுத்த போட்டோ....

முடிந்தால் கண்டிப்பாக சென்னை வருவேன்னு சமாதான படுத்தினேன் [[மெட்ராஸ் பவன், என்ன கேக்குதா...?? சாப்பாடு ரெடி பண்ணி வையும் ஒய் ஆபீசரும் நானும் வரப்போறோம்]] விட்டா தம்பி அழுதுருவானொன்னு [[பாசம்]] கவலையா இருந்துச்சு......!!!
 

இப்போதும் அவன் பாசமா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை, என் கண்ணுக்குள்ளேயே இருக்கான், வயசு குறைவாக இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் பாசம், அன்பு என்பது எல்லாருக்கும் ஒன்றுதான் இல்லையா...??? [[துடுக்குத்தனமா பேசுரானேன்னு [[பதிவுலகில்]] கோபம் வந்தாலும் அவன் பாசமா உரிமையோட இருக்கான் என்பதையும் கொஞ்சம் மனசுல வச்சிக்கனும் நானும், அதே போல அண்ணன் நன்மையை சொல்லும் போது கேட்டுக்கனும் நீயும் சரிதானே மக்கா...]] 


அது ஒரு உணர்வுபூர்வமான சந்திப்பு....!!! தம்பியை, தங்கச்சியை சந்திச்சி போட்டோ எடுத்துட்டு [[டேய் டேய் ஹி ஹி ஹி ]] ரயில் கிளம்பினாலும் எங்களுக்கு இவர்களை பிரிய மனசில்லை, பாப்பாவும், தம்பியும்தான் கிளம்புங்க கிளம்புங்க என் ரயிலில் ஏற்றி அனுப்பினார்கள், அவர்கள் மறையும் வரை நான் கை அசைத்து கொண்டே இருந்தேன்....!!! [[ ஒரு நாள் வரும் நாம் எல்லாரும் குடும்பமாய் வந்து ஒரு நாள் இரு நாள் என அவரவர் வீட்டில் அமர்ந்து மெதுவாக பேசி மகிழும் நாள்.....நான் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்]]

ஈரோடு...

ம்ம்ம் அப்புறமா நானும் ஆபீசரும் நல்ல ஜாலியா பேசிட்டு இருந்துட்டு, மதுரை வரவும் ஆபீசர் இறங்க ரெடியானார், எனக்கோ மனசு அவரை விட விரும்பவில்லை, இவரை இப்பிடியே மும்பைக்கு கடத்திருவோமான்னு நினச்சி நான் மனசுக்குள்ளே சிரிச்சிகிட்டேன், பின்னே,  அன்பு உள்ளம் கொண்டவங்க நம்ம கூட இருக்கனும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது இல்லையா.....!!! 


மதுரை வந்ததும் ஆபீசர் கம்பீரமாக இறங்கி, பிரியா [[அந்த பிரியா இல்லை பிச்சிபுடுவேன் பிச்சி]] விடை பெற்று சென்றார்............ ஆபீசர் த கிரேட்.............!!!! உங்க அன்புக்கு நன்றி நன்றி ஆபீசர்.......!!!!

அடுத்துதான் இருக்கு சிபி'க்கு சோதனை ஹே ஹே ஹே ஹே.......[[கழுதை சந்தோஷத்தை பாரு மனோ'வுக்கு]]...........!!!


ஆபீசர் சிபி'யை ஈரோடு ஸ்டேசனுக்கு வர சொன்ன நேரம் மாலை அஞ்சரை மணிக்கு சரியா....!!! அப்புறமா நான் நல்லா படுத்து உறங்கிவிட்டேன், மதியம் சாப்பிடவும் இல்லை காரணம் காலையில ஆபீசர் தந்த டிபனின் வெயிட் அப்பிடி.... நிம்மதியா சில பல கனவுகளுடனும் ரயிலின் தாலாட்டுடனும் தூங்கி போனேன்....!!!

சுசீந்திரம் பாலம்....

ரயில் ஒரு ஸ்டேசனில் நிற்கும் போது எனக்கு திடீரென முழிப்பு தட்டியது, சும்மா படுத்துகிட்டே பிளாட்பாரம்ல நடந்து போன ஒரு ஆள்கிட்டே கேட்டேன் இது எந்த ஊர்'னு, ஐயய்யோ..........ஈரோடு.........அடிச்சிபிடிச்சி எழும்பி சிபி'யை தேடினேன் ரயிலுக்கு வெளியே வந்து ஆளையே காணோம்...!!!

எங்க ஊர் உப்பளம்....

என்னடா கோச் நம்பர் சரியாதானே சொன்னேன், என்னாச்சி ஆளை காணோமே ஒரு வேளை மாலை, மேளம் தாளம் தப்பட்டையோடே வருவானோன்னு பார்த்தும் மூதேவியை ஆளைக்காணோம்....!!! இந்த ராஸ்கல் நம்மளை ஏமாத்திபுட்டான்னு கடுப்புல போனை போட்டேன்....!!!

கே ஆர் விஜயன் தற்போது தாய்லாந்தில் லந்து பண்ணிகொண்டிருப்பதாக ஆக்கப்பூரவமான தகவல்கள் வருகிறது ஹி ஹி...

ஹலோ எங்கேடா இருக்கே'னு கேட்டேன், அவன் என்கிட்டே கேட்டான் நீ இப்போ எந்த ஊர்பக்கம் வந்துட்டு இருக்கேன்னு, டேய் நான் ஈரோட்டுல நின்னுட்டு இருக்கேம்டான்னு சொன்னதும் திட்டினான் பாருங்க திட்டு @#$%@##$$%%%@@###$௪$ர்##௪$%ப்ர௪௫௪௩ர௩௪௩௪@வ##$$௫%%#௩#$%^%$#@@!##௪$..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....


நாயே மணி எத்தனைடா உன் வாச்'ல பாரு, அண்ணே மூணரை அண்ணே.......ராஸ்கல் நீ அஞ்சரை மணிக்கு வாறேன்னு சொல்லிட்டு, மூணரை மணிக்கு உன்னை யார்டா வரசொன்னது ராஸ்கல் அப்பிடின்னு அவனால எவ்வளவு திட்ட முடியுமோ அம்புட்டு திட்டிட்டு போனை கட் பாண்ணுனானா இல்லை தூக்கி சுவர்ல எறிஞ்சானான்னு சத்தியமா எனக்கு தெரியாது ஹி ஹி...!!!

ஹி ஹி ஆக, இரண்டு மொக்கைங்க சந்திக்க முடியாமல் போச்சு ஹி ஹி [[எலேய் மக்கா இனியும் அதே ரயில்ல வந்து உன்னை சந்திப்பேன்லெய் மக்கா கவலை படாதே]] 


ஆபீசர் வச்ச சூனியம் இது, எனவே சிபி அண்ணே ஒருக்கா கூட போன் செய்து என்னை எம்புட்டு திட்டினியோ அம்புட்டு திட்டையும் அவர்கிட்டேயும் ஒப்புவி, ஏன்னா ஈரோட்டுல மும்பை எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்னு சத்தியமா எனக்கு தெரியாது, ஆபீசர்'தான் உனக்கு டைம் சொன்னார்....[[அப்பாடா ஆபீசரை கோர்த்து விட்டாச்சு இனி நிம்மதியா தூங்கலாம் ஹி ஹி]]



பயணம் முற்றும்.


Monday, July 25, 2011

அரசின் கவனத்திற்கு...





அதிரைக்காரன் said...


அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன்இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம்செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

நன்றி.

அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com
கடந்த எனது பதிவில் மேற்கொண்டவாறு கமெண்ட்ஸ் போட்டுருந்தார் நண்பர் அதிரைக்காரன், அவர் வேண்டுகோளில் இருந்த நியாயம் என்னையும் உசுப்பேத்தியதால், நானும் இதை மீள் பதிவாக போட்டு என் வலைதள நண்பர்களுக்கு தெரிய தருகிறேன்...!!

Sunday, July 24, 2011

ரயில் பயணம் தொடர்....

வசமா சிபி'கிட்டே கோர்த்து விட்டுட்டார் ஆபீசர், உடனே அவனுக்கு போனும் பண்ணிட்டார், தம்பி சிபி உன் தம்பி கரிக்ட்டா ஈரோட்டுக்கு சாயங்காலம் அஞ்சரை மணிக்கு வந்து சேருவான் மீட் [[கொல்லு]] பண்ணிக்கொன்னு சொன்னதுதான் தாமதம் பயலுக்கு பயங்கர சந்தோசம், ஆனால் விதி எனக்கு ஆதரவா சலங்கை கட்டி ஆடுனது அப்புறமா சொல்லுறேன் ஹி ஹி....

டிக்கெட் பரிசோதகர் வந்தார், என்னிடம் டிக்கெட் கேட்டவர் ஆபீசரை பார்த்ததும் சற்று ஜெர்க் ஆகி நாலு எட்டு தள்ளி நின்னு டிக்கெட்டை பார்த்துட்டு பட படவென பென்னால் மார்க் செய்துட்டு, மறுபடியும் ஆபீசரை ஒரு லுக் விட பயந்து என்னையும் ஓகே........... "சா.......ர்"........[[அவ்வ்வ்வ்வ்வ்வ்]] னு சொல்லிட்டு என்னை அழவச்சிட்டு போனார்.....!


அப்புறம் லேப்டாப் சார்ஜ் உயிரை விட்டுருச்சி ஏன்னா நான் சார்ஜர்ல வைக்க மறந்துட்டேன், அதுக்கு ஆபீசர் லேப்டாப் வச்சிருக்குற லட்சனமாய்யா இதுன்னு மனசுக்குள்ளே திட்டிட்டு ஆப் பண்ணி தந்தார் சாக்கு'குள்ளே வைக்குமாறு.....ஹி ஹி...!!!


அப்புறமா அவர் எனக்காக கொண்டு வந்த [[நெல்லை பதிவர் சந்திப்பு நடந்த ஹோட்டல் சாப்பாடு]] அதே ஜானகிராமன் ஹோட்டல் டிபன் எடுத்து தந்தார் சாப்பிடுங்க மனோ என்று, சூப்பரா பூரி பாஜி, ரெண்டு இட்லி வாவ் சூப்பர்.........!!!  ரசிச்சி சாப்பிட்டேன்.....[[நன்றி ஆபீசர்]] அப்புறம் மெதுவா பதிவுலகம், நண்பர்கள் அப்பிடி இப்பிடியா சுவாரஸ்யமா பேசிட்டே வந்தோம்.....! 



விருதுநகர் நெருங்கிட்டே இருந்துச்சு பாப்பா'ம்மா தனியா வந்துருப்பாளேன்னு கொஞ்சம் நெர்வசாவே இருந்துச்சி மனசுக்கு, சீட்ல இருந்து ரயில் வாசலுக்கு நான் புறப்படவும் ஆபீசர் நான் முகம் துடைக்க வச்சிருந்த துண்டை [[டவல்]] எடுத்து என் தோளில் போட்டு விட்டார் இருக்கட்டும் மனோ என்று......!!! எனக்கு கொஞ்சம் மனசு பட பட.....[[எனக்கு ஏதாவது வித்தியாசமா நடக்கும்னு தெரிஞ்சா அதாவது நான் நேசிக்கும் யாரா இருந்தாலும் சரி எனக்கு இப்படி லப்டப் அடிக்கும், எனக்கு புரிஞ்சும் போகும் நல்லதுதான் நடக்கும்னும்]]......!!! 


ரயில் விருதுநகர் பிளாட்பாரம் நெருங்கவும் ஆபீசரும் நானும் ரயில் வாசலில் நின்று கொண்டே......... பாப்பாவை நான் ஆவலாய் தேட, ஆபீசர் சொன்னார், மனோ நான் சொன்னா மாதிரி பாப்பா நம்ம கம்பார்ட்மென்ட் எங்கே நிக்குமா அங்கே நிப்பாள் பாருங்கன்னு சொன்னார்....!!! ஆபீசர் சொன்னா அப்பீல் உண்டா என்ன அவருக்குதான் எல்லாம் அத்துபடி ஆயிற்றே....!!!


அதேபோல பாப்பா'ம்மா நின்னுட்டு இருந்தாள் கையில் பெரிய பார்சலோட, ரயில் நின்றதும் நானும் ஆபீசரும் வெளியே இறங்கினோம், ஓடி வந்து கையை பிடித்துகொண்டாள் பாப்பா, நலம் விசாரிக்கும் போதே, அண்ணா உங்க மகள் எங்கே'ன்னு கேட்டாள், ஏய் நானும் ஆபீசரும்தானே வர்றதா சொன்னேம் பிள்ள, பிள்ளைங்களுக்கு ஸ்கூல் இருக்குல்ல மும்பயிலன்னதும் சாந்தமாகி அந்த பார்சலை என்னிடம் தந்து ஜாய்'கிட்டே [[என் மகள்]] குடுக்க சொல்லி தந்தாள்......!!


இப்பிடி நானும் ஆபீசரும் பாப்பா'ம்மாகிட்டே பேசிட்டு இருக்கும் போதே [[ ரயில் அங்கே நின்னது ரெண்டே நிமிஷம்தான்னு நினைக்கிறேன்]] ஒரு இருவது வயசு மதிக்க தக்க ஒரு பையன் உரிமையோடு எங்களை நோக்கி வந்தான்............!!!.......... என் மனசு..... கட..... கட...... தட..... தட....... [[ஆபீசர்தான் எதுக்கும் பயப்படாத சிங்கமாச்சே, நான் பச்சை பிள்ளையாச்சே..!!!]]


தொடரும் தட தட ரயில் பயணம்......


டிஸ்கி : பதிவின் நீளம் கருதி சுருக்கி இருக்கேன் அடுத்த பதிவில் அதாவது நாளை இத்தொடர் முற்றும் [[அப்பாடா தப்பிச்சீங்களா]] 





Saturday, July 23, 2011

ரயில்பயணத்தில் பதிவர்கள் சந்திப்பு

காலை 6 : 55 க்கு மும்பை எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டுமென்பதால் நண்பன் ராஜகுமாரிடம் காலை ஆறு மணிக்கு வந்து நாகர்கோவில் கூட்டி செல்லுமாறு சொல்லியிருந்தேன், ஏன்னா நடந்த பார்ட்டி அப்பிடி.....


அவனும் காலையிலேயே வந்துட்டான். பட படவென கிளம்பினேன் காரணம் ஆபீசர் நெல்லையில் அதே ரயிலில் என் கூட மதுரை வர [[ஆபீசியல்]] இருந்ததால் பயம் கூடி போச்சு அவர் கையில் பிரம்பு வச்சிகிட்டு காத்திருக்குறது மாதிரியே பிரம்மையா இருந்துச்சு...


ஸ்டேசன் வந்து பி என் ஆர் செக் பண்ணினேன் ஹி ஹி போன தடவை மாட்னா மாதிரி மாட்டி தொலைக்க புடாதே, நண்பன் கே ஆர் விஜயன் பக்காவாக டிக்கெட் எடுத்து தந்து விட்டார் என்ற சந்தோஷத்தில் s 3 சீட் நம்பர் 17
ல போயி பக்காவா உக்காந்துட்டேன்....


ரயில் தட தட என நெல்லை நோக்கி ஸாரி மும்பை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது, காற்று சுகமாக என்னை தழுவியது, உறக்கம் கண்ணை கிறக்க உறங்கி போனேன்...


திடீரென ஒரு இடத்தில் ரயில் நிற்கவும் பதற்றமாக எழும்பி பார்த்தேன்...ஆத்தீ நாங்குநேரி வந்துருச்சி அடுத்து திருநெல்வேலி, நாஞ்சில் மனோகரன் மாதிரி ஆபீசர் தடியுடன் நிப்பாறேன்னு பயந்து பாத்ரூம் ஓடி முகம் கழுவி காத்திருந்தேன் நெல்லைக்காக ஸாரி ஆபீசருக்காக...


கரீக்டா வந்தாருய்யா ஆபீசர், அதிகாலை என்றாலும் செம ஃபிரஷா வந்துருந்தார் வெரி ஸ்மார்ட்டாக...!!! அவர் ரயில் உள்ளே வந்ததும் அவருடைய பணியாள் ஏதோ ஒரு பார்சலை பக்கத்தில் கொண்டு வைத்து விட்டு போனார், பார்வையாலேயே நன்றி சொல்லி போக சொன்னார் அவரை ஆபீசர்.....


அப்புறம் சந்தோஷமாக பேசிகொண்டிருந்தோம், அப்புறமா சொன்னார் தினகரன் பத்திரிக்கைல எடக்கு மடக்கா நியூஸ் போட்டு அதுக்கு உத்திரவாதமான அதிகாரியை கைது செய்யவேண்டும்னு நியூஸ் போட்டுருக்குறதா கடுப்பாக சொன்னார், கலெக்டர் தலையிட்டு தினகரன் மண்டையை டமால் ஆக்கியதையும் சொன்னார்....!!!


இந்த சிபி ராஸ்கல் தொல்லை தாங்க முடியலை கொஞ்ச நாளா, ஏன்னா என்கிட்டே லேப்டாப் இல்லவே இல்லை என்று போற வாற இடமெல்லாம் சொல்லிட்டு திரியுரானே இதுக்கு ஒரு முடிவு கட்டனுமேன்னு தோணிச்சி.....


உடனே செயல்பட்டேன் ஹி ஹி என் லேப்டாப்பை பேக்கில் இருந்து உருவி எடுத்து ஆபீசர் கையில குடுத்து பிளே பண்ணுங்க ஆபீசர்'ன்னு குடுத்தேன், ஆபீசரும் ஆர்வமாக வாங்கி ஒப்பன் பண்ணினார்....


அங்கே கௌசல்யா மேடம் பதிவை படிச்சிட்டு கமெண்ட்ஸ் போட்டார் இன்னும் அப்பிடியே பிளே பண்ணிட்டு இருக்கும் போதே, தங்கச்சி பாப்பா'மாவுக்கு [[கல்பனா]] போன் பண்ணி சொன்னேன், ஏலே பிள்ளை அண்ணனும் ஆபீசரும் விருதுநகர் வழியா வந்துட்டு இருக்கோம்னு...ஏன்னா நெல்லை ரெண்டாவது பதிவர் சந்திப்புக்கு கூப்புடலைன்னு செம கடுப்புல இருப்பாளே, கொஞ்சம் சமாதானபடுத்துவோம்னு, ஆபீசரும் பேசினார்...பாப்பா'ம்மாவும் உடனே ரயில்நிலையம் வருவதாக சொன்னாள்...!!!

திருப்பெருங்குன்ரம்

அப்புறமா ஆபீசர் சொன்னார், மனோ தங்கச்சிக்கு போன் பண்ணிட்டோம் சரி, கோவில்பட்டி வழியாதானே போறோம் இம்சை அரசனுக்கும் சொல்லிருங்க அவர் வருத்த பட்டுற போறார்னு சொல்லவும் அவருக்கும் போனை போட்டோம், ஹி ஹி தம்பி நான் வரலைன்னு காட்டமா சொல்லிட்டார்......


ஓகே சரி மனோ ஈரோடு வழியாதானே போறீங்க நம்ம சிபி'க்கும் சொல்லிருங்க அவரும் ஸ்டேசன்ல உங்களை வந்து பாப்பாருல்ல, என சொல்லிக்கொண்டே அந்த மூதேவிக்கு போனை போட்டார், அவன் எப்பிடி பட்ட ஆளு, பதிவுலையே என்னை நாறடிச்சி கும்புட வைக்குறவன் நேர்ல பாத்தா என்னாவுறது ஆபீசர் இப்பிடி கோர்த்து விடுராறேன்னு மனசு தவிக்குது.....!!


பயணம் தொடரும்..........

டிஸ்கி : விருதுநகரில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது எனக்கும் ஆபீசருக்கும்...

டிஸ்கி : டேய் சிபி அண்ணா, நல்லா பார்த்துக்கோ லேப்டாப்பை, இனி அண்ணனை நாஞ்சில் மனோ அண்ணா'ன்தான் னு கூப்பிடனும் என்ன...???

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!