யப்பா ஒரு வழியா ஈரோட்டை புயல்கள் இரண்டும் கடந்துருச்சு, ரயில் கொஞ்சம் முன்னமே வந்ததால் வீடு சுரேஷ்'க்கு வரமுடியவில்லை என்று சொன்னதால் வரமுடியவில்லையம், திருப்பூர் வரட்டுமான்னு கேட்டார், இந்த ரயில் திருப்பூர் வராதுய்யா'ன்னு சொன்னதும் சரிண்ணே அப்புறமா சந்திக்கலாம்னு சொல்லிட்டார்.
சேலம் தாண்டி ரயில் ஈரோட்டை நோக்கி விரைந்ததுமே நெஞ்சம் டப் டப், பின்னே நண்பனை பாக்குறதுன்னா சும்மாவாய்யா.! சேலம் தாண்டி வந்துட்டு இருக்கேம்ன்னே என்று சொன்னதும் [[ஆன்லைன்லதான் நம்பர் பெட்டிக்குள்ளே இன்னொரு போன்ல மாட்டிக்கிச்சு]] அவனை உன் நம்பரை அனுப்புன்னு சொன்னதும் [[எனக்கு என் நம்பர் தெரியலை ஹி ஹி]] அனுப்பினான் நான் போன் செய்தேன் சிபிக்கு.....
அண்ணே இன்னும் அரைமணி நேரத்தில் ரயில் ஈரோடு வந்துரும்ய்யா.
சிபி : அப்பிடியா ஈரோடு வந்ததும் வெளியே தலையை காட்டிட்டு வா உன் கோச் நம்பர் சொல்லு [[கொய்யால எத்தனை தடவைதான் சொல்றது?]]
நம்பரை சொன்னேன்.
சிபி : தம்பி என்ன வேணும் உனக்கு ? தண்ணீர் [[ராஸ்கல் எந்த தண்ணின்னு கேக்கவே இல்லை]] ஸ்நாக்ஸ் சம்திங்..?
மனோ : வேண்டாம் அண்ணே.
சிபி : ஏதாவது புக்ஸ் வேணுமா என்ன வேணும்னு சொல்லு வாங்கிட்டு வாரேன்.
மனோ : ஒன்னும் வேணாம் அண்ணே நீ வந்து சேர்.
சிபி : ஓகே [[ கஞ்சன் பாவி]]
ரயில் ஈரோட்டை நெருங்கியதும் வந்தது காவேரி நதி, பார்க்க பறந்து விரிந்து அழகாக இருக்கிறது ஆனால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை....!!!
ஆனால் தென்னை மரங்களும், வயல்களும், மஞ்சள் கலரில் ஒரு வயல் போல தெரிந்தது வயலா மஞ்சளா தெரியவில்லை ஆனால் அழகோ அழகு போங்க, ஈரோடு சிட்டியை விட கிராமங்கள் அம்புட்டு அழகாக இருக்கும் என்று மனசு சொன்னது...!!!
ஈரோடு ஸ்டேஷன் நெருங்கவும் வாசலில் நின்ன அண்ணாச்சியை உள்ளே இழுத்து விட்டுட்டு நான் வாசலில் நிற்கவும் முறைத்தார் பாருங்க அவ்வ்வ்வ்வ்வ்...!
பிளாட்பாரத்தில் ரயில் புகவும் தேடினேன் சென்னிமலையானை, அட கொன்னியா அங்கேயும் கண்ணாடி போட்டுட்டுதான் நின்னுட்டு இருந்தான் [[நீ மட்டும் யோக்கியமா?]]
இறங்கியதும் ஓடிவந்து கட்டி பிடித்துக்கொண்டான், அருகே இருந்த பயணிகள் ஜெர்க்காகி ஆச்சர்யமாக பார்க்க தொடங்கினார்கள்...!
ரயில் உள்ளே அழைத்து வந்து அமரவைத்தேன், லேப்டாப்பை காண்பித்தேன், டேய் நீ இன்னும் திருந்தலையா'ன்னு திட்டினான் [[ஹி ஹி ]]
சரி வா போட்டோ எடுப்போன்னு ரெடியாகவும் எனது ரயில் நண்பன் உள்ளே வரவும் பரஸ்பரம் அறிமுகம் செய்து விட்டு, போட்டோ எடுக்க சொன்னேன், ரயில் உள்ளே ஒரே இருட்டு சரி வாங்க வெளியே போயி எடுக்கலாம்னு வெளியே வந்து போட்டோக்கள் எடுத்து கொண்டோம், அவர் பெயர் நித்தியானந் [[அவ்வ்வ்வ்வ்வ்]]
அப்புறம் பரஸ்பரம் பேசிகொண்டிருக்கும் போதே விக்கி பக்கி'க்கு போனை போட்டு மிஸ்கால் அடித்தால் அந்த பரதேசி மூன்று முறை போனை எடுத்து என் காசை காலி பண்ணிட்டு [[டேய் டேய்]] ஹி ஹி தம்பி உன் நம்பர் வரவில்லை அதான் எடுத்துட்டேன் என்று சமாளித்தான், சிபியும் அவனோடு பேசினான்.
இப்பிடி பேசிட்டு இருக்கும் போதே சிபிக்கு ஒரு போன் வரவும், நாஞ்சில்மனோ வந்திருக்கிறான் பேசுறீங்களா என்று என்னிடம் போனை தந்தான், யாருடா அண்ணா எனவும், ராஜி [[ காணாமல் போன கனவுகள்]] என்றான்.
ஹலோ தங்கச்சி எப்பிடி இருக்கீங்க?
ராஜி : நல்லா இருக்கேன் அண்ணா நீங்க எப்பிடி இருக்கீங்க?
நான் : வீட்டில் எல்லாரும் நலமா?
ராஜி : ஆமாண்ணா எல்லாரும் நல்லா இருக்காங்க..
நான் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ...டேய் சிபி என்னடா லைன் கட்டாகிருச்சு...
சிபி மறுபடியும் போன் பண்ணவும் ராஜி போனில் சார்ஜர் அவுட்டே..
சரி நான் ஊர் வந்ததும் பேசுறேன்ம்மா'ன்னு சொல்லி இருக்கேன்...
சரி வாடா சிபி நீதான் ஒண்ணுமே குடிக்க மாட்டியே வா ஏதாவது சப்பிடுவோம்னு சொன்னதும் சரி வான்னு கூட்டிட்டு போயி ஒரே ஒரு சமோசா வாங்கி தந்துட்டு நீதான் எங்க ஏரியாவுக்கு வந்துருக்கே நான்தான் காசு கொடுப்பேன்னு பெருந்தன்மையாக சொன்னான் பாருங்க, ராஸ்கல் அங்கே இருக்கிறான் ராஸ்கல்...!
ஒரு வழியாக ரயில் கிளம்பவும், பிரியா விடை கொடுத்து கட்டிபிடித்து பிரிந்தோம், மறுபடியும் நெல்லையில் சந்திப்பதாக சொல்லி, ஆபீசருக்குக்கும் போன் பண்ணி விஷயத்தை சொன்னதும், எப்போ வேணும்னாலும் வாங்க மனோ, ஒருநாள் முன்பு மட்டும் சொல்லிருங்க எல்லா ஏற்பாடும் பண்ணிருவேன்னு சொன்னார்...!!
நன்றி மக்கா சிபி, நன்றி ஆபீசர் உங்கள் அன்புக்கு நன்றி நன்றி.....!!!
ஒரு ஃபிகரை பார்த்துட்டு சிபி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க, அதை அவனே சொல்லட்டும் கொய்யால....
டிஸ்கி : அக்கம் பக்கம் நின்றிருந்த பயணிகள் எங்கள் அன்பை பார்த்து ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டிருந்தனர் எங்கள் மனம் உவகை கொண்டது, ஈரோடும் இனி என் தாய் மண்ணுதான்...!!!
டிஸ்கி : அக்கம் பக்கம் நின்றிருந்த பயணிகள் எங்கள் அன்பை பார்த்து ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டிருந்தனர் எங்கள் மனம் உவகை கொண்டது, ஈரோடும் இனி என் தாய் மண்ணுதான்...!!!