கல்யாணமான புதிது...நல்லா சாப்பிட்டுக்கிட்டு இருந்த எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை, பசியும் இல்லை...
வீட்டம்மா அவள் அம்மாவிடம் சொல்ல, அவங்களும் வந்து ருசியா சமைச்சு தந்தாலும், சாப்பாடு இறங்கவில்லை, கவலையான அவர்கள் என்னெல்லாமோ கைமருந்து கொடுத்து என் வயிறை அதகளமாக்கினார்கள்.
ஆனாலும் சரியாகவில்லை, அப்போ எதேச்சையாக இதைக் கேள்விப்பட்ட உறவினர் ஒருவர், மஞ்சகாமாலை இருந்தாலும் சாப்பிட மனசு இருக்காதென்று சொல்ல, இரவு சிறுநீரில் சோற்றை இட்டு, காலையில் பார்த்தால் மஞ்சளாக இருக்க...
மும்பையில் எங்கள் ஏரியாவில் [அந்தேரி கிழக்கு] கோல்டோங்கிரி என்ற இடத்தில் ஒரு மூதாட்டி, காசுக்காக இல்லாமல் ஒரு தொண்டாகவே மருந்து கொடுப்பதாக சொல்ல கேள்விப்பட்டு...அங்கே போனோம்.
போனது சாயங்கால வேளையாக இருந்த படியால் அந்த பாட்டி, நாளைக்கு காலை சூர்ய உதயத்திற்கு முன்பு வரவேண்டுமென்று சொல்ல...
அடுத்தநாள் சென்றோம் அதிகாலையில்...கியூ இருந்தது...
உக்கார வச்சு, மூக்கில் [நாம படிக்கும்போது நிப்பில்ல இங்க் ஊத்துவோமே பென்னில்] நிப்பிள் வச்சு மருந்தை உறுஞ்சி உள் மூக்கில் ஊற்றுகிறார், சுர்ரென்று பிடிக்கும், மூன்று நான்கு முறை ஊற்றி விட்டு, கொஞ்சூண்டு குடிக்க சுடவச்ச நெய் தருகிறார்...முடிந்தது.
ஒருமணி நேரம் கழித்து சோடா வாங்கி குடிக்க சொல்கிறார், அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து வந்து காட்ட சொல்கிறார், என்ன...சோடா குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கினதும், சற்று நேரத்திற்கெல்லாம் தும்மல் வர ஆரம்பிக்கிறது...
தும்மலோடு மூக்கில் சளி வர தொடங்க...அப்பிடியே கொஞ்ச நேரமானதும், மூக்கில் சொறிச்சல் மாதிரி வர ஆரம்பிக்கும், சீந்த சீந்த மஞ்சள் மஞ்சளாக சளி கொட்டிக்கிட்டே இருக்கும், கடுப்பாக இருக்கும், மூக்கு காந்தும்...
நாலைந்து மணிநேரம் கழிச்சு அப்பிடியே நார்மல் ஆகி, படிப்படியாக குறைந்து, அப்புறம் லேசாக சளி கட்டியாக போக ஆரம்பிச்சு ஸ்டாப் ஆகிரும், பத்தியம் கிடையாது, அன்று முழுவது புளிப்பு மட்டும் சாப்பிடக்கூடாது, வேற என்ன வேணாலும் சாப்பிடலாம்.
இரண்டுநாள் கழித்து போனதும், ஆளைப் பார்த்ததுமே பாட்டி [நோயின் தன்மையை] கண்டு பிடிச்சிருது, மறுபடியும் அதே மருந்தை ஊற்ற, மறுபடியும் சளி பிச்சிகிட்டு மஞ்சள் மஞ்சுளா கொட்டுச்சு...
மறுபடியும் போனோம், இப்போ குணமாக்கிருச்சுன்னு சொல்லுச்சு பாட்டி...
ஆக, முத்திப் போச்சுன்னா ஆறேழு தடவை மருந்து ஊத்தவேண்டி வரும், எங்கள் குடும்பம் மற்றும் சுற்று வட்டார ஏரியா மக்கள் யாவரும் போயி பயன் பெரும் இடமது, பாட்டியின் கணவர் உயிரோடு இருந்தபோது செய்த தொண்டு, இறக்கும் தருவாயில்தான் இந்த மருந்தின் பார்முலாவை கிழவிக்கு சொல்லிக் கொடுத்தாராம்.
அதேப்போல பாட்டியும் மரிக்கும் தருவாயிலதான், சொந்த மகனுக்கு கூட சொல்லிக் குடுக்காம மருமகளுக்கு பார்முலாவை சொல்லி கொடுத்துட்டு இறந்து போயிருக்கு...!
பாட்டி மருமகள்தான் இப்போ அங்கே டாக்டர், நாம் கொடுக்கும் காசை வாங்கி கொள்கிறார்கள்...!
என் அனுபவம்...பசிக்காமல், சாப்பிடப் பிடிக்காமல் வயிறு எப்போதுமில்லாமல் ஒரு புது மார்க்கமாக தெரிய வந்தால், உடனே மஞ்சக்காமாலை வைத்தியரையும் மறக்காமல் சென்று பாருங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------
[[கேரளா நண்பனின் அக்காள் மகனுக்கு மஞ்சகாமாலை முற்றி, வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள், இனி மரணம்தான் என்று...
யாரோ ஒருவர், சாவக்கிடந்தாலும் "பாபநாசம்" கொண்டுபோ பிழைக்க வைத்துவிடுவார்கள் என்று உறுதியாக சொல்ல...
அப்போதே காரில் தூக்கிப்போட்டு பாபநாசம் விரைந்து வந்து, மருந்து கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
பாபநாசம் பஸ்நிலையத்தின் அருகில் யாரிடம் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள் வழி.
சிம்பிள் மருத்துவம் இருந்தும், மனிதர்கள் விழிப்புணர்வு இல்லாமல் மரணத்தை தழுவுவது மனதுக்கு சஞ்சலமாக இருக்கிறது.]]