Wednesday, November 30, 2011

என்னை நீ காப்பி அடிச்சா நான் உன்னை காப்பி அடிப்பேன்....!!!

நாமதான் சில நேரம் முக்கியமான, உபகாரமான பதிவுகளை ரசிச்சு படிச்சிட்டு மற்றவங்களும் தெரிஞ்சிகிடட்டுமேன்னு காப்பி பேஸ்ட் பண்ணி இன்னாருக்கு நன்றின்னு போடுறோம்னு பார்த்தா கொய்யால நான் சிவாஜி சந்தானம் சாரை பேட்டி எடுத்த பதிவையும் ஒருத்தன் நன்றி கூட போடாமல் தினமலர் பெயர்ல பிளாக் வச்சு காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கான்...!!!சரி பேட்டியைத்தான் போட்டுருக்கான்னு பார்த்தால், தமிழ்வாசி பிரகாஷ் சாட்டுல வந்து மக்கா உங்க "பிரபல பதிவர்களின் பாடல் காமெடி கும்மி'யையும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறான்னு லிங்க் குடுத்தாரு, அட கொய்யால...!!!


ஏற்கனவே டினமலர் பத்திரிக்கைக்கும் எனக்கும் வாய்க்கா சண்டை நடந்துட்டு இருக்கு, ஏன்னு கேக்குறீங்களா...? டினமலர் பத்திரிக்கை நடுநிலை இழந்து பலகாலம் ஆயாச்சு, என்னைக்கு நடிகைகள் விஷயத்தில் அண்ணாச்சி கைதாகி உள்ளே போனாரோ, அதோடு அந்த பத்திரிக்கை டமால், மறை கழண்டு போச்சு...!!! [[ஜெயில்ல என்னத்தை திங்க குடுத்தானுகளோ தெரியலை]]


விக்கிக்கு ஆன்லைன்ல போயி டேய் அண்ணா தினமலர் என் பதிவை திருடிட்டான்னு சொன்னேன் மூதேவி கிடந்தது சிரியா சிரிக்கிறான் ராஸ்கல், நீ காப்பி பேஸ்ட் பண்ணினேதானே அதான் உன்னையும் காப்பி பேஸ்ட் பண்ணுரானுகன்னு சிரிக்கிறான் [[இருடி வச்சிருக்கேன் உனக்கு]] 


அப்புறம் சொன்னான் மெயில் அனுப்பி கேளுடா தினமலருக்குன்னு சொல்லிட்டு, பதில் வரலைன்னா சாணியை கரைச்சிருவோம் நாளைக்குன்னு சொல்லிட்டு [[சண்டைன்னா என்னா சந்தோஷம்ய்யா இவனுக்கு ஆகிர்ர்ர் த்தூ]]  குளிக்க போயிட்டான் குளிச்சி பலகாலம் ஆச்சாம்...!!!


சரி மெயில் அனுப்புவோம்னு கிளம்பும்போது, பிரகாஷ் ஆன்லைன்ல இருப்பதை கண்டு, அவருக்கு சாட் பண்ணி விஷயத்தை சொன்னேன், அவரும் செக் பண்ணிட்டு இது தினமலர் பத்திரிக்கை இல்லை அண்ணே, இது தமிழ் தினமலர் அப்பிடின்னு இருக்குன்னு சொல்லிட்டார், ஆஹா தினமலர் தப்பிடுச்சே....!!!


அடுத்து ஆன்லைன்ல வந்த "நாய் நக்ஸ்"நக்கீரனும் அதை உறுதி செய்தார் ஹி ஹி சண்டை போடணும்னு இருந்த தக்காளி ஆசையில மண்ணு விழுந்துருச்சுன்னு மண்ணுல உருண்டு அழுதேன் ஹி ஹி.....


அந்த லிங்க் கீழே குடுத்துருக்கேன், அதை ஒப்பன் பண்ணுனா ரொம்ப ஸ்லோவா இருக்கு, தகராறும் செய்யுது எனவே சிபி அண்ணனை போல தைரியம் உள்ளவர்கள் [[ஓஹோ]] போய் பாருங்கள்.
ஒப்பன் பண்ணாதீங்க வைரஸ் இருக்கிறதாம்...!!!

டிஸ்கி : ஏண்டா காப்பி பேஸ்ட் போடுறதுதான் போடுறே சிபி அண்ணன் "முன்பு" செய்தது போல ஒரு நன்றியாவது போடப்டாதா ஆக்கங்கெட்டவனே...!!!


பஸ்கி : எலேய் இனியும் இப்பிடி செஞ்சேன்னா, மவனே நம்ம திவானந்தா'வின் அல்லக்கை சண்முகபாண்டியனை அருவாளோடு அங்கே அனுப்பிருவேன் சாக்குரதை...!!!

மனோ'தத்துவம் : தோல்விதான் வெற்றியை நிர்ணயிக்கிறது...!!!Tuesday, November 29, 2011

வரதட்சினை வாங்கினால், அவளுக்கு நீ அடிமை....!!!

ஒரு வாரத்துக்கு முன்பு பஹ்ரைனில் நடந்த சம்பவம், என் மனதை பாதித்து, அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

மாலை சமயம் எட்டு மணி, நானும் எனது நண்பர்களும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவகம், அங்கே சாப்பிடுவதற்காக நண்பர்களோடு சென்றிருந்தேன், உள்ளே நுழைந்ததும், இன்னும் இரண்டு நண்பர்கள் உள்ளே அமர்ந்திருந்ததை நாங்கள் கண்டதும், அவர்கள் எங்களையும் அழைத்ததால், அவர்களுடன் போயி அமர்ந்தோம்.


அதில் ஒருவன் மலையாளி, ஒருவன் கர்நாடகா, ஒருத்தனுடைய குடும்பம் கேரளாவில் இருக்கிறது இன்னொருவனுடைய குடும்பம் பஹ்ரைனில் அவன் கூடவே உள்ளது....


சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு ஜாலியா பழைய நினைவுகளை சொல்லி சிரி சிரி என சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தோம், எல்லாருமே ஹோட்டல் ஃபீல்டுல வேலை பார்ப்பவர்கள், சாப்பாடும் பரிமாறப்பட்டது. ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருக்கும் போதே மலையாளி நண்பனுக்கு ஒரு மிஸ்கால் வந்தது,


எடுத்துப்பார்த்தவன் பதறியபடி போன் பேச எச்சில் கையோடு வெளியே போனான், திரும்பி வந்தவன் என் மனைவியின் போன் என்றான் நாங்கள் ஒன்றுமே சொல்லவில்லை, கொஞ்சநேரம் கழித்து போனே வருகிறது, இவன் சாப்பிட்டபடி போனை அட்டன்ட் பண்ணினான்....


ஐயோ நான் நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன், என்னது மணி ஒன்பதரையா இதோ இப்பவே போறேன் வீட்டுக்கு சரி சரி என போனை கட் செய்தான், என்னடான்னு கேட்டா அவன் சொன்னது, ராத்திரி ஒன்பது மணி ஆச்சுன்னா நான் என் ரூமில் இருக்கணும் என்பது என் மனைவியின் ஆர்டர் என்றான்...


அதான் உன் மனைவி கேரளாவில் அல்லவா இருக்கிறாள் நீ ரூமில் இருப்பதாக பொய் சொல்லவேண்டியதுதானே என்றால், டேய் அவள் சித்தப்பா மகன் என் பக்கத்து ரூமில் இருக்கிறான், அவனுக்கு போன் செய்து கேட்டு விடுவாள், நான் என்னென்ன பண்ணிட்டு இருக்கேன்னு அவன் அவளுக்கு சொல்லிருவான் என சொல்லி வேதனைபட்டு கொண்டிருக்கும் போதே....


கர்நாடகா நண்பனுக்கு போன் வருகிறது, அவனும் போனை எடுத்து இதோ பத்து நிமிஷத்தில் வந்துடுறேன் செல்லம்னு அலறினான், இப்படியாக மறுபடியும் மறுபடியும் இவர்களுக்கு போன் வந்து கொண்டிருக்க கடுப்பான மற்ற நண்பர்கள் அவர்களை பயங்கரமாக கிண்டல் செய்து கொண்டிருந்தோம்...


கொஞ்சநேரம் கழித்து மலையாளி நண்பனின் போனடிக்க எடுத்தவன் தாறுமாறாக திட்டி விட்டான் மனைவியை, என் என்னை இப்படி படுத்துகிறாய், நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு அரைமணி நேரம் தாமதமாக நான் ரூமுக்கு போனால் என்ன, என்ன நீ பஹ்ரைன்லையா இருக்கிறாய்..? ஊரில்தானே இருக்கிறாய் என திட்டுகிறான், எங்களுக்கு சங்கடமாக இருந்தது...


அடுத்தவனுக்கும் போன் வந்தது, அவனும் தாறுமாறாக திட்ட தொடங்கினான், என்ன எல்லா நாளும் ஒன்பது மணின்னா உன் மடியிலதானே இருக்கிறேன், ஒருநாள் அரைமணி நேரம் லேட்டா வந்தா என்னா குறைஞ்சி போகும் உனக்குன்னு திட்டுறான்....

நாங்கள் அமைதியாக இருந்து விட்டு அவர்களை உடனே கிளம்ப சொன்னோம், பாதி சாப்பாட்டுலையே எழும்பி நண்பர்கள் போவதை கண்டு மனசு தாங்காமல் நாங்களும் சாப்பிடாமல் எழும்பி விட்டோம்...

ஏன் இப்படி சில மனைவிகள் புருஷனை படுத்துகிறார்கள் என்பதை விசாரித்தபோது, என் அனுபவத்தையும் வைத்து சோதித்தபோது எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள்.....

மலையாளி நண்பன் வாங்கிய வரதட்சனை நூறு பவுன் நகை, பத்து லட்சம் ரூபாய் கேஷ், கர்நாடகா நண்பன் வாங்கிய வரதட்சனை நூற்றி இருவது பவுன் நகை, எட்டு லட்சம் ரூபாய் கேஷ் கறாராக கேட்டு வாங்கி இருக்கிறார்கள்.....!!!! இது என் நண்பர்களே சொன்னது, பின்னே எப்பிடிய்யா மனைவி உங்களை மதிப்பார்கள், நீங்கள் ஒரு விற்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட ஒரு ஜடமாகதானே உங்களை கருதுவார்கள் மனதில்...?!!!!


அப்போ நீ என்ன யோக்கியமான்னு நினைப்பவர்களுக்கு, நான் வரதட்சிணையாக ஒன்றுமே வேண்டாம் என சொல்லியே திருமணம் செய்தேன், நாங்கள் தங்கம் உபயோகிப்பது கிடையாது, நான் வரதட்சனை வாங்கி திருமணம் செய்யதால் பத்து லட்சம் ரூபாய்க்கு வரன் ரெடியாக இருந்தது..!!!


நான் வரதட்சணை வேண்டாம் என்று சொன்னதால் சம்பிரதாயத்துக்கு ஏதும் கொடுக்கவேண்டும் என சொல்லி எழாயிரம் ரூபாய் தந்தார்கள் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்...

என் மனைவி குடும்பத்தில் என்னை மிகவும் மதிப்பார்கள், மாமியார் வீட்டில் போயி விறைத்து கொண்டு அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் குழந்தையாக என்னையும் ஏற்று கொண்டார்கள், என் மனைவி இப்போதும் என்மீது மரியாதையும் அன்பு, பாசம் காட்ட இந்த வரதட்சினை விஷயத்தை சொல்லி காட்டி கிண்டலடிப்பாள், பிழைக்க தெரியாத மாப்பிளைன்னு ஹி ஹி...


நான் எங்கேயும் விருந்தினர் வீட்டிற்கோ, கல்யாணம் போன்ற நிகழ்ச்சிக்கோ, லேட்டாக போகும் போது, மனைவி இருக்கும் இடம் வந்ததும் அவள் எழும்பி நின்று விடுவாள், ஏன் என்று புரியாமல் ஒருநாள் கேட்டேன், என்னன்னு தெரியலை அத்தான், உங்களை பார்த்ததும் என்னை அறியாமலே எழும்பிருதேன் என்றாள்...!!! யோசிச்சு பாருங்க பத்து லட்சம் ரூபாய் வரதட்சினை வாங்கி இருந்தால் என் நிலை என்ன..?


என் பிளாக்கை என் குடும்பத்தில் பலரும் படிக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்....!!!

பாதியில் சாப்பாட்டை விட்டு ஓடிய அதே நண்பர்கள் இப்போது சொல்கிறார்கள், வரதட்சினை வாங்கி சாபத்தை வாங்காதீங்கடான்னு சொல்லி அழுகிறார்கள்....!!!

டிஸ்கி : இது என் அனுபவம்.

Monday, November 28, 2011

பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால் காமெடி கும்மி...!!!

விஜயகாந்த் முதற்கொண்டு, விஜய், அஜித், சொம்பு ச்சே ச்சீ சிம்பு, தனுஷ், பவர்ஸ்டார், ரித்தீஷ் ஏன் நடிகைகள் குஷ்பு, சினேகா, ரஞ்சிதா [[நித்யா]] சினேகா, த்ரிஷா, இவர்களெல்லாம் நான்தான் அடுத்த முதல்வர்னு சொல்லும்போது, பிரபல பிராப்ள பதிவர் நாஞ்சில்மனோ'வாகிய நான் ஏன் 2016 ல தமிழக முதல்வர் ஆகக்கூடாது...????
கிராபிக்ஸ் போட்டோ உபயம் மதுரை தமிழன்.

மொள்ளமாரி, முடிச்செருக்கி அப்பிடிப்பட்டவன் எல்லாம் அரசியலில் இருந்து, அமைச்சரா இருக்கானுக சிலர், ஏன் நம்ம பதிவுலகில் உள்ள சிபி, விக்கி, சத்ரியன், ராஜி, வானதி எல்லாம் ஏன் அமைச்சர் ஆகக்கூடாது ஹி ஹி.....

நான் முதல்வர் ஆனால் எந்தெந்த பதிவர்களுக்கு எந்தெந்த இலாக்காக்கள் கொடுக்கப்படும் என்பதை சொல்லுறேன் கவனமா படியுங்க....

சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.


விக்கி : வெளியுறவு துறை அமைச்சர் [[அப்பிடி ஒன்னு இருக்கா..?]]

கவிதைவீதி : சட்டமன்ற புலவர்.

கருண் : மாமியார் வீட்டு அமைச்சர் ஸாரி கல்வித்துறை அமைச்சர்.

ஆபீசர் : உணவுத்துறை அமைச்சர். இவருக்கு தப்பு செஞ்சவிங்க யாரைவேண்டுமானாலும் பெல்ட்டால் அடிக்க உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது, ஸ்பெஷல் பெல்ட் வியட்னாம்'ல இருந்து வந்துகிட்டே இருக்கு.

திவானந்தா : ரவுடி துறை அமைச்சர், அதாவது என்கவுண்டர்ல போட்டு தள்ளுறது.


கல்பனா : சுற்றுலாத்துறை அமைச்சர்.

கே ஆர் விஜயன் : வனத்துறை அமைச்சர்.

"என் மனவானில்" செல்வி : முறுக்கு துறை அமைச்சர்.


மொக்கைராசு மாமா : நகைச்சுவை துறை அமைச்சர்.

நாய் நக்ஸ் : சுகர் வாரியம் அமைச்சர்.

நிரூபன் : பிஞ்சி போன காதல்துறை அமைச்சர்.

பன்னிகுட்டி : பயடேட்டா துறை அமைச்சர்.


"கோமாளி"செல்வா : ரேடியோ துறை அமைச்சர்.

சிரிப்பு போலீஸ்" ரமேஷ் : சிங்கை டூ தமிழ்நாடு நல்லுறவு அமைச்சர்.

ஆமீனா : பதிவர்கள் துறை அமைச்சர்.

கோமதி அக்காள் : சிரிப்பு துறை அமைச்சர்.

சத்ரியன் : கவிதை துறை அமைச்சர்.

ருஃபினா : புத்தகம் துறை அமைச்சர்.


தேனம்மை லட்சுமணன் : பத்திரிக்கை துறை அமைச்சர்.

சிநேகிதி : தாய்மார்கள் துறை அமைச்சர் [[குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காதவங்களுக்கு அடி நிச்சயம்]]

மேனகா : சமையல் துறை அமைச்சர்.

சென்னை பித்தன் : அறநிலை துறை அமைச்சர்.

ரமணி குரு : சிந்தனை துறை அமைச்சர்.

மகேந்திரன் : புவவர் துறை அமைச்சர்.

வெளங்காதவன் : கப்பல் வியாபாரத்துறை அமைச்சர்.


காட்டான் : விசா'துறை அமைச்சர்.

துஷ்யந்தன் : விளையாட்டு துறை அமைச்சர்.

"கலியுகம்"தினேஷ் : தண்ணி தொட்டித்துறை அமைச்சர்.

"தமிழ்வாசி"பிரகாஷ் : இன்ஜினியரிங் பேர்பார்ட்ஸ் துறை அமைச்சர்.

"மெட்ராஸ் பவன்"சிவகுமார் : போக்குவரத்து துறை அமைச்சர்.

பிரபாகரன் : டாஸ்மாக் துறை அமைச்சர். [[மரியாதையா கமிஷன் வந்துறனும், இல்லைன்னா திவானந்தா அல்லைக்கை சண்முகபாண்டியை அருவாளோடே அனுப்பி வச்சிருவேன் ஹி ஹி]]


அஞ்சாசிங்கம் : சண்டை துறை அமைச்சர்.

சிவா : நடிகைகள் துறை அமைச்சர்.

கோகுல் : கொங்கு மண்டல துறை அமைச்சர்.

அரசன் : ஹைக்கூ கவிதை அமைச்சர்.

ராஜி : ஜவுளித்துறை அமைச்சர்.

ஐ ரா ரமேஷ் : மின்சாரத்துறை அமைச்சர் [[ஹா ஹா ஹா ஹா மாட்னாருய்யா]]

கே எஸ் எஸ் ராஜ் : சுகாதாரத்துறை அமைச்சர் [[ஆனால் இவர் குளிக்கமாட்டார் ஹி ஹி]]


பொன்னர் அம்பலத்தார் : ரகசியத்துறை அமைச்சர்.

"நல்லநேரம்"சதீஷ் : சட்டமன்ற ஆஸ்தான ஜோசியர்.

அம்பாலடியாள் : கண்ணீர் கவிதை துறை அமைச்சர்.

ராஜராஜேஸ்வரி : தமிழ்நாடு கவர்னர்.


சரி இனி எல்லாரும் ஒழுங்கா கவர்னர் மாளிகை போயி பதவி பிரமாணம் எடுத்துக்கோங்க, அடுத்து, வாங்குற கமிஷன்ல பாதி, முதல்வரான நாஞ்சில்மனோ டேபிளுக்கு வந்துரனும், சேட்டை பண்ணி கமிஷன் எனக்கு வரலைன்னா ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அடிக்கடி முந்திரி சபை ச்சே ச்சீ மந்திரி சபை மாற்றி அமைக்கப்படும், சட்டசபையில் தினமும் வேஷ்டி கிழிக்கப்படும் என்பதால், சண்டையில் கிழியாத வேஷ்டி வாங்கி கொல்லவும் ஸாரி கொள்ளவும்...

நான் அடிக்கடி போடாநாடு போயி ரெஸ்ட் எடுப்பதை யாரும் கண்டுக்கப்புடாது, குண்டக்க மண்டக்க விலையை ஏற்றுவேன், அதனால மக்களிடம் எனக்கு நல்ல பெயர் கிடைக்க கோயபல்ஸ் வேலை செய்யணும்...

அடுத்து எனக்கு ஒரு நாளைக்கு மூன்று நான்கு பாராட்டுவிழா சினிமாத்துறையினர் செய்து தரணும் இல்லைனா, தமிழ் சினிமாவுக்கு மலையாளம் தலைப்பு வைக்க சொல்லி சட்டம் கொண்டு வந்துருவேன்.

அஜீத், விஜய், ரஜினி, கமல் எல்லாரும் கண்டிப்பாக விழாவுக்கு வரவேண்டும், இல்லையெனில் திவானந்தா தலைமையில் குண்டாந்தடிதுறை களமிறக்கப்டும், மிரட்டப்படுவார்கள், அல்லது வலுகட்டாயமாக கதற கதற தூக்கி வரப்படுவார்கள்.


டிஸ்கி : எம்புட்டு அடிக்கனுமோ அம்புட்டு அடியுங்க மிதியுங்க ஆனால், கல்லெடுத்து மட்டும் எறிஞ்சிபுடாதீங்க, ஏன்னா எனக்கு கல்லுலதான் கண்டம்னு எங்க கோமதி அக்கா "நல்லநேரம்"சதீஷ்'கிட்டே ஜோசியம் பார்த்துட்டு சொன்னாங்க ஹி ஹி...

பிஸ்கி : சும்மா சும்மா சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க ஹி ஹி...

பஸ்கி : பதிவர்கள் ஒரிஜினல் படம் போடுவது போரா இருக்கு, இனியும் தொடர்ந்து போடுவாயானால் நான் மலையில் இருந்து குதிச்சிருவேன் என்று என் கால் சுண்டு விரலை பிடித்து சிபி கதறியதாலும், விக்கி டைம்பாம் பார்சல் அனுப்பப்படும் என்று மிரட்டியதாலும், படங்கள் போடவில்லை, கண்டிப்பா படம் போடணும்னு சொல்லுறவிங்க கீழே கமெண்டுங்க...

Sunday, November 27, 2011

எனக்குள் நான் பயங்கரடேட்டா....!!!

நண்பன் கோகுல், எனக்குள் நான் [[பயங்கர டேட்டா]] பதிவுக்கு தொடர்பதிவு எழுத சொல்லி கேட்டுருந்தார், சரி நண்பன் வேண்டுகோளை தட்டமுடியுமா, அதான் எனக்குள்ளே உறங்கும் [[உறுமும்]] என்னை சொல்லி இருக்கேன் ஹி ஹி.....

நான் : நான் ஒன்றும் பிரபல பதிவர் சிபி, விக்கி மாதிரி பிராப்ள ச்சே ச்சீ பிரபல ஆளு கிடையாது, உங்களுக்கு நான் நாஞ்சில்மனோ, அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காளுக்கு நான் மனாசே, நண்பர்களுக்கு மனோஜ், மனைவி குடும்பத்தாருக்கு மனோ...


சந்தோஷ தருணங்கள் : குழந்தைகளுடன் குழந்தையாக இருப்பது, விக்கி'யை சாட்டிங்கில் திட்டி தீர்ப்பது, ஆபீசர் [[சங்கரலிங்கம்]] அருகில் அமர்ந்து இருப்பது, கே ஆர் விஜயனுடன் ஊர் சுற்றுவது, மனைவி குழந்தைகளுடன் வெளியே போயி சாப்பிடும் நேரம், பஹ்ரைன் மலையாளி நண்பர்களுடன் ஜாலியாக அரட்டையடித்து சிரிப்பது.....!!!


மறக்க முடியாதது : நெல்லை பதிவர் சந்திப்பை, ஏன்னா இனி அப்பிடி மொத்தமாக ஒரே இடத்தில் பதிவர்கள் சந்திப்போமா தெரியவில்லை...!!!


வாழ்க்கை : கடுமையாக போராடிகிட்டு இருக்கேன் ஒற்றை மனிதனாக, இதுவும் சுகமாகவே இருக்கிறது...!!


காதல் : முதல் காதல் சோகத்தில் முடிந்தது [[தோல்வி அல்ல]] அடுத்த காதல் தென்றலாக வந்து, என்னை அணைத்தவள்தான் என் மனைவி லீதியாள், இரு வீட்டு பெற்றோரின் சம்மதப்படி கல்யாணம் மும்பையில் நடந்தது, எனக்கு காதல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.


நட்பு : நட்புன்னு நம்பி ஏமாந்த கதைகள் நிறைய உண்டு, அதைவிட ஏராளமான நல்ல நட்புகள் என்னை சுற்றி இருக்கிறார்கள் ஏன் நீங்களும் கூடத்தான்....!


மரணம் : சர்வ சிருஷ்டியையும் உண்டாக்கிய தெய்வம் கையில் இருக்கிறது, இதை முற்றிலும் நம்புகிறவன்...!!!


சோகம் : ஈழத்தமிழ் மக்களின் நிலை...!!!


கோபம் : மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது...!


நினைப்பது : சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்...!!! [[நன்றி பாக்யா]]


கவர்ந்த வரிகள் : துஷ்டனை கண்டால் தூர விலகு [[பைபிள் வசனம்]]


ஒய்வு கிடைத்தால் : ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது, மனைவி பிள்ளைகளுடன் போனில் அரட்டை, நண்பர்களுடன் பார்களில் சாப்பிடுவது சாப்பாடு மட்டும்தான் ஹி ஹி...!!!


பலம் : தெய்வ நம்பிக்கை....!!!

பலவீனம் : ஓவர் செலவு, கண்ட்ரோல் பண்ண முடியவில்லை....!!!


டிஸ்கி : ஒ இனி தொடர் பதிவுக்கு ஆளை கூப்பிடனுமா, போன தொடருக்கே [[குழந்தை உலகம்]] கூப்பிட்ட ஒருத்தன் [[ராஸ்கல்ஸ்]] சத்தத்தையும் காணோம், ம்ம்ம்ம் யாரை போட்டு குடுக்கலாம்....??

பன்னிகுட்டியை அழைக்கிறேன், காமெடியா இல்லை சீரியஸா போட்டாலும் சுவாரஷ்யமா இருக்கும் அடுத்து, கில்மா நாயகனை [[சிபி]] அழைக்கிறேன், கவிதைவீதி'யை அழைக்கிறேன்.

மனோ'தத்துவம் : நான் உழைக்கிறேன் நான் சாப்புடுறேன் உனக்கென்னடா....?

சுதந்திரம்.....!!!


கொடிகாத்த குமாரனா அவரு யாரு
அவரு எங்கே கொடி வித்தாரு....

வாஞ்சிநாதனா அவரு யாரு
அவரு எங்கே கஞ்சி குடிச்சாறு....

ஆசீர்வாதமா [மும்பை] அவரு யாரு....
அவரு எங்கே ஆசீர்வதிக்கபட்டாரு....

வ உ சியா அவரு யாரு...
அவரு ஏன் செக் எழுதினாரு
என்று.....

 நக்கல் பண்ணி 
டாஸ்மாக்கில்
லயித்து கொண்டாடும் வாலிபனே....

நீ அருந்துவது
மதுவல்ல.....

அந்த மாவீரர்களின்
மனைவி, குடும்பத்தின்....

தியாகத்தையும்
ரத்தத்தையும்தான் என்பதை
நினைவில் கொள்.....................!!!!

டிஸ்கி : மீள்பதிவு.

Friday, November 25, 2011

ஈழம் பற்றி நாம் அறியாத தகவல்கள்....!!!


அன்புடையீர் ,வணக்கம்.
"இலங்கையில் தமிழீழம் "(Tamil nation in srilanka)-எனும் நூலாசிரியர்,ஈழத்தமிழர்களுக்காக உலக முழுதும் குரல் கொடுத்து வரும் அமெரிக்க எழுத்தாளர்...


இடதுசாரி விமரிசகர்,மொழிபெயர்ப்பாளர், கியூபா போன்ற இலத்தின் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தபோது கடுமையாக விமரிசித்த மார்க்சிய அரசியல் ஆய்வாளர்ரான் ரைட்னவருடன்  
ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியினை 13-11-2011-அன்று   புதுச்சேரியில் ஏற்பாடு செய்திருந்தோம்.காணொளி இத்துடன் இணைத்து அனுப்பப் படுகிறது.

பா.செயப்பிரகாசம்.(சூரியதீபன்)
தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு.
அலைபேசி; 94440 90186


 அமரந்தா உரை
 http://www.youtube.com/watch?v=kDmU1uyab9M

தோழர் பா.செயபிரகாசம் உரை
http://www.youtube.com/watch?v=_7x62_BKNP0
ரான் ரைட்னவர் உரை
http://www.youtube.com/watch?v=o9idcEVY1rY

டிஸ்கி : இந்த கூட்டமைப்பு அன்பர்கள் எனக்கு அனுப்பிய இமெயில் இது, இதில் நாம் அறியாத அரிய உண்மை தகவல்கள் இருக்கிறது, எனவே பதிவுலக நண்பர்களும், வாசகர்களும் இதை அறிந்துகொள்ளும்படி என் தளத்தில் பகிர்ந்துள்ளேன்...!!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!