Monday, October 31, 2011

அந்த மொரோக்கா'காரி......!!!!

யாரு பேசுதது மனோ அண்ணனா நல்லா இருக்குதியளா....? நான் நல்லா இருக்குதேன்.....அந்த மொரோக்கா'காரி.....[[லைன் கட்டாகிறது]]

மொரோக்கா'காரி பேச்செடுத்தாலே மனுஷன் டென்ஷன் ஆகிறாரே, ஆபீசரை மடக்கி கேட்டுரவேண்டியதுதான்...

காலையிலயே ரவுசு ஆரம்பிச்சிருச்சே இன்னைக்கு எவனெல்லாம் மாட்டப்போறானுவளோ...

ஏ புள்ளே, குளிக்க தண்ணி வெலாவி வச்சிருக்கியா, எலேய் சன்முகபாண்டி அந்த அருவாளை நல்லா சாணை பிடிச்சி வய்யிலேய், ஓமனல்லூர்ல இன்னிக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு...

ஹலோ என்ன ஹோட்டல்ல ரெண்டு பேரு குடிச்சிட்டு வந்து தகராறு பண்றானுவளா சரி சரி அவனுகளை மடக்கி பிடிச்சி வச்சிருங்க இதோ நான் கிளம்பிட்டே இருக்குதேன், காலையிலயே கை அரிச்சிது, அப்போவே நெனைச்சேன்...

எலேய் நான் தனி ஆளு இல்லை என் பின்னாடி காடு, மலை, வானம், மேகம் எல்லாம் இருக்கு பிச்சிபுடுவேன் பிச்சி....

ஹோட்டல்ல தகராறு பண்ணுன உன்னை ஏன் இந்த காட்டுக்குள்ளே கொண்டு வந்துருக்கேன் தெரியுமா...? சிலரை அருவாளால போட்டாதான் சாவாணுவ, ஆனா நான் சிலரை இப்பிடி காட்டுக்குள்ளே கொண்டு வந்து பேசிப்பேசியே கொல்லுவேன்...

நான் ரொம்ப கோவக்காரனாம் அதான் யோகா படிடா ராஸ்கல்'ன்னு ஆபீசர் பெல்ட்டால நாலு போடு போட்டு உக்காரவச்சிட்டார்....

தனியாதாம்லேய் இருக்குதேன் சொல்லுலேய், என்னாது சிபி'யை தூக்கனுமா...? யாரு மனோ அண்ணன் சொன்னாவ்ளா...? அப்ப சரி நான் நாளைக்கு வந்து கெட்ச் போட்டு தாரேன், எந்த தியேட்டர்ல கில்மா படம் பார்த்துட்டு, எந்த வழியா வாராம்னு...

எலேய் ஆள் அனுப்புதேன், தேளி மீன் குழம்பு, நண்டு ரோஸ்ட், நல்லி எலும்பு கறி, மோர், ரசம் எல்லாம் எடுத்துட்டு சீக்கிரமா பாவநாசம் வந்துடு, இங்கே பதிவர் சந்திப்பு நடக்குதாம். அப்பிடியே ஆபீசரின் ஆபீசுக்கு போயி அவர் பெல்ட்டையும் கையோட கொண்டு வாலேய் சண்முகப்பாண்டி...

நீங்க எதுக்கு அண்ணாச்சி கவலை படுதீங்க நான் இருக்கேம்ல்லா பாத்துகிடுதேன், எவனாவது வந்தாம்னா சொருகிப்புடுவேன் அண்ணாச்சி....

எவனுக்காவது தைரியம் இருந்தா எங்க அண்ணனை தொட்டுருங்கலேய் பாப்போம், இல்லன்னா அடிச்சிருங்கலேய் பார்ப்போம்...[[மனோ : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]

ஆபீசர்கிட்டே நண்பர் திவானந்தா [[திவான்]] போட்டோ அனுப்பி தாங்க, பதிவர் கும்மி போஸ்ட்களுக்கு அவர் போட்டோ கொஞ்சம் வித்தியாசமா டெரரா இருக்கணும்னு கேட்டதும், உடனே அனுப்பி தந்தார், அந்தப்போட்டோக்களை பார்த்ததும் எனக்குள் எழுந்த கும்மிதான் இந்த பதிவு ஹி ஹி....

Sunday, October 30, 2011

அரபியின் வழிப்பறி...!!!

 பஹ்ரைனில் நடந்த உண்மை சம்பவம்.

எட்டு வருஷம் முன்பு, மாலை நான்குமணி டியூட்டிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்துதான் போவேன். டிரான்ஸ்போர்ட் இருந்தாலும் காத்திருப்பது எனக்கு பிடிக்காத காரணத்தால் நடந்துதான் போவது வழக்கம். ஆட்களையும் கடைகளையும் ரசித்தவாறு செல்வதுண்டு.


அப்படி போகும் போது எல்லா நாட்களிலும் நான் போகும் அதே நேரம் ஒரு அம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா வீட்டை பூட்டிவிட்டு வெளியே போவதை எல்லாநாளும் கவனிப்பேன், பார்க்க தமிழ் ஆண்டி மாதிரி இருக்கும்.


அருகில் வரும்போது எப்போதும் நான் ஆச்சர்யகாக பார்ப்பது அவர் போட்டிருக்கும் தங்கச்செயினை, செயின்'ன்னு சொல்றதை விட தங்கவடம் இல்லை இல்லை சைக்கிள் செயின் மாதிரி ஒரு செயின் இடுப்புவரை நீளமாக அணிந்திருப்பார்கள், எனக்கு பார்க்க பார்க்க ஆச்சர்யமா இருக்கும்!!!!


சும்மா தெனாவட்டா ஆம்பிளை மாதிரி அலட்சிய பார்வையும், அகங்கார நடையுமாக செல்லும் அவர்களை அதிசயமாகத்தான் எல்லாரும் பார்ப்பார்கள். இத்தனைக்கும் எல்லாநாளும் விதவிதமான சேலையில் வருவதை பார்ப்பதற்கு [[வயசு அம்பதுக்கும் மேல்]] அழகாதானிருக்கும்...!!!


ஒருநாள், எனக்கும் அவர் வீட்டிற்கும் இடையே ஒரு நூறு அடி தூரத்தில் நான் வந்துகொண்டிருக்கும் போது, அந்தப்பெண் கதவை பூட்டி வெளியேறுவதை கவனித்துக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தேன்....


திடீரென ஒரு அரபி அந்த அம்மா மீது பாய்ந்து, செயினை இழுக்க முயல அது கட்டியாக இருந்தமையால் அறுபடவில்லை, இதற்கிடையில் சுதாரித்த அந்த அம்மா, அரபியை கட்டி பிடித்துக்கொண்டு ஹெல்ப் ஹெல்ப் என்று அலற, நான் ஓடினேன் வேகமாக, நான் அருகில் வருமுன் சுதாரித்த அரபி, அந்த அம்மாவை உதறி தள்ளிவிட்டு ஓடிவிட்டான்...!!!


ஆண்டவா என் செயின் பத்திரமா இருக்கு'ன்னு மூச்சு வாங்கிட்டு நின்னாங்க, நான் அருகில் போயி என்னாச்சுன்னு கேக்க, தமிழ்ல பொரிஞ்சாங்களே பார்க்கணும் [[ஹா ஹா ஹா ஹா]] என் ஹஸ்பண்ட்டுக்கு போன் பண்ணனும் மொபைல் தரமுடியுமான்னு கேக்கவும் கொடுத்தேன் சத்தமா விஷயத்தை சொல்லி அழுதாங்க...


அப்புறமா மெதுவா கேட்டேன், நானும் உங்களை பலமாசமா பார்த்துட்டுதான் இருக்கேன் இம்புட்டு பெரிய தங்க செயினை போட்டுட்டு ஒய்யாரமா போற நீங்கள் மாட்டுவீங்கன்னு, என்னை முறைத்துவிட்டு வீட்டினுள் போயிடுச்சு...


அந்த அரபி செயினை பிடுங்கும் போது அருகில் நெறைய இந்தியா'காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்...!!! அவர்கள் வேடிக்கைதான் பார்த்தார்களே ஒழிய அரபியை பிடிக்கவில்லை, ஏன் அரபிகள் கூட அங்கே நின்று கொண்டுதான் இருந்தார்கள் அவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை...!!!


நான் ஒருவன் மாத்திரமே ஓடி வந்துள்ளேன், மெதுவா ஒரு மலையாளி அண்ணாச்சிக்கிட்டே கேட்டதுக்கு, ஏதாவது பிரச்சினைன்னா யாருப்பா போலீஸ்கிட்டே போயி அழுறது, அடுத்து பிடிபடும் அரபியின் ஆட்கள் வந்து மொய் வைக்கும் போது என் கதி...?? [[யதார்த்தம்தான்]]


ஆடம்பரம் வேணும்னா இப்பிடியா நகை அணிவது...?? என் நெருங்கிய சொந்தத்தில் என் அண்ணி ஒருவர் இப்படி நகைகள் அணிந்து பெருமையா நடந்து செல்வது வழக்கம், மும்பையில் இருந்து ஊர்போனவர், தான் கொண்டுவந்த எல்லா நகைகளையும் அணிந்து கொண்டே விருந்துக்கு போக நெல்லை பஸ்நிலையத்தில் காத்திருந்தாராம்...


எப்பிடி தெரியுமா...? முந்தானையை தலையோடு கூட சேர்த்து நகைகளை மறைத்தவாறே நின்னாராம், குழந்தைகளை பார்த்துவிட்ட உறவுக்காரர் ஒருவர் அருகில் போயி பார்த்துவிட்டு, ஊருக்கே டமாரம் அடித்ததும் அல்லாமல், இங்கே நெல்லையில பயங்கரமா களவு நடந்துட்டு இருக்கு, கொலையும் நடந்துட்டு இருக்குன்னு குண்டையும் போட்டுட்டு போயிருக்கார்.


வெடவெடத்துப்போன அண்ணி அலறியடிச்சி திரும்ப ஊருக்கே ஓடினாராம், இதை இப்பவும் சொல்லி சிரிப்போம்....

நான் தெரியாமதான் கேக்குறேன் இம்புட்டு ஆடம்பரம் தேவையா....???!!! இதில் கேரளா பெண்களை பாராட்டுவேன், எவ்வளவு நகை இருந்தாலும், ஒன்னு ரெண்டு சின்ன சின்ன செயின்கள்தான் அணிகிறார்கள், ம்ஹும் நம்ம தமிழ்பெண்கள் ரொம்பதான் அலப்பறை செய்கிறார்களோன்னு தோணுது...!!!


அடுத்தநாள் வேலைக்கு செல்லும் போது, அந்த அம்மா அதேபோல வீட்டை பூட்டி வெளியேறினார்கள், அருகில் வந்ததும் குட் ஆஃடர் நூன் என்றார், நான் வணக்கம்னு சொல்லிட்டே செயினை பார்த்தேன் ஹி ஹி, என்ன பாக்குறீங்க செயினை கழற்றி எங்க சொந்தகாரங்க வீட்டுல பத்திரப்படுத்திட்டோம்னு சொன்னாங்க, 


ம்ம்ம்ம் செயின் இல்லாமல் இப்போதான் அழகா இருக்கீங்க மேடம், இதை முதல்லயே செய்திருந்தா இப்படி அரபிக்காரனை கட்டிபிடிச்சி உருண்டுருக்க வேண்டியதில்லைன்னு, உள்குத்தா சொல்லவும், புரிஞ்சி சிரிச்சுட்டு வெக்கத்துல ஒரு ஓட்டம் ஓடுனாயிங்க பாருங்க ஹா அழகு....!!!!

குத்துங்க எஜமான் குத்துங்க....!!!

முன்பு ஒரு சமயம் நான் மும்பையில் இருந்து ஊர் போன போது நடந்த சம்பவம். எங்கள் ஊரிலேயே உள்ள ஒரு பெண்ணை நண்பன் லவ்வி கொண்டிருந்தான். ஆனால் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் வீட்டில் கடுகடுமையான எதிர்ப்பு. நண்பர்கள் வழக்கம் போல சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்கள். ஓடிப்போகவும் முடியாத நிலை. நண்பன் பிளேடால் கைகளில் கீறி கொண்ட காயங்களை பார்த்து நொறுங்கி போனேன். யோசிக்க ஆரம்பித்தேன் ஹி ஹி ஹி ஹி நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே...நண்பர்களை அழைத்து கொண்டு எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்கு போனேன், அந்த கிணறு நாங்கள் சிறுபிள்ளைகளில் குதித்து சாடி குளித்த கிணறு அதின் ஆதி அந்தம் நல்லாவே தெரியும் எங்களுக்கு. பிளான் ரெடியானது, அதன்படி...[[ அந்த கிணற்றில் இப்போது யாருமே குளிப்பது கிடையாது, எப்பவுமே அதில் ஆறு எழு அடி தண்ணீர் இருக்கும். ஆனால் அந்த சமயம் இடுப்பளவுதான் தண்ணீர் இருந்தது]]

ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஊரே உறங்கிட்டு இருக்கும் நேரம், நண்பனின் காதலி, ஓ என அலறிக்கொண்டே ஓட....ஊராரும் எழும்ப, காதலி ஓடிபோயி கிணற்றில் குதித்து விட்டாள்....!!! [[எங்கள் நண்பர்கள் குழு தயாராய் பார்த்து கொண்டு இருந்தோம்]]  பின்னாலேயே ஓடி வந்த நண்பன், அவனும் கிணற்றில் குதிக்க ஊரே அல்லோலகல்லோல பட்டது.

அந்த பெண்ணுக்கு நீச்சல் தெரியாது. எப்பிடியோ காப்பாற்றி பெண்ணையும் நண்பனையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்து பஞ்சாயத்து நடந்தது. எவ்வளவு அன்பு இருந்தால் இந்த பெண் அவனுக்காக கிணற்றில் குதித்து இருப்பாள் என்று நாங்கள் ஸ்துதி ஏற்ற [[ஹி ஹி நாடகாசிரியர் மனோ]] 

இரண்டு வீட்டாரும் சாதி மறந்து சம்பந்தி ஆனார்கள். ஊரே வாழ்த்த கல்யாணம் நடந்தது.

சரி இனி நாடகம் எப்பிடி அரங்கேறியது...??? சொல்றேன். . . . . 

இரண்டு நாள் முன்பே முதலில் நான் கிணற்றினுள் குதித்து ஆழம் எவ்வளவு என பார்த்தேன். தண்ணீர் இடுப்பளவுதான் இருந்தது. காதலனையும் குதிக்க சொன்னென் அவனும் குதித்து ஊர்ஜிதம் செய்தான். அப்புறமா காதலியை ரகசியமாக அழைத்து வந்து, செயல் முறை விளக்கினேன். அவள் பயந்துபோனாள் [[நீச்சல் தெரியாது]] , அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு...


அப்புறம்தான் அவளுக்கு தைரியம் [[என் மீது இரக்கபட்டோ என்னவோ]] வந்தது. நாடக அரங்கேற்றமும் வந்தது, அவள் கிணற்றில் குதிக்கும் போது நண்பர்கள் நாங்கள் எல்லோரும் சுற்றி உள்ள மரங்களின் மேலே இருந்தோம் [[ம்ஹும் குரங்கே]] ஊராருக்கு தெரியாது. 

அப்புறம் என்ன டும் டும் டும் டும்தான்....


டிஸ்கி : நண்பனின் காதலியின் அண்ணனுக்கு ஒரு டவுட்டு வர, தற்செயலாக அந்த கிணற்றை சுத்தி பார்த்திருக்கிறான். அவனுக்கு லேசாக பொறி தட்ட, என் நினைவும் வர டவுட் கிளீயராகிருச்சி. ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம்  [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன். அண்ணன் காரனுக்கு எங்கள் நாடகம் புரிஞ்சி போச்சு. ஆனால் என்ன ஒரு விஷயம்னா, அதுக்குள்ளே நண்பனுக்கும் காதலிக்கும் கல்யாணம் முடிஞ்சி போயிருந்தது.

டிஸ்கி : பெண்ணின் அண்ணன் இப்போதும் எனக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள் [[வேற எதுக்கு முதுகுல டின் கட்டத்தான் ஹி ஹி ஹி]]  அடகொன்னியா மூணு குழைந்தங்க உன் தங்கச்சிக்கு பிறந்த பிறகும் ஏன் இந்த கொலைவெறி...??? 


இப்போ இடையில் ஒரு லீவுக்கு போன போது அவனை ஒரு கல்யாண வீட்டில் பார்த்தேன். அவன் என்னோடு பேசவில்லை நானும் பேசவில்லை, ஆனால் அவன் என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான். என் மனைவி அதை கண்டு என்னிடம் சொன்னாள். ஹி ஹி ஹி மேட்டரை நான் சொன்னதும் குஷி ஆகிவிட்டாள், ஏன்னா நாங்களும் காதலிச்சிதானே கல்யாணம் செஞ்சோம் [[இரு வீட்டாரின் சம்மதத்தோடு]]....

இது ஒரு மீள்பதிவு, யார்லேய் அங்கே கல்லெடுக்க கீழே குனியுறது....?
ள்பதிவு...[[யாருலேய் 

Saturday, October 29, 2011

பதிவுலக கடையடைப்பு....!!!

மொத்த உலகத்திலும் பிளாக்கர் வேலை செய்யவில்லை.....!!!!??? அதனால் சிபி தற்கொலை முயற்சி..[[ஏன் இந்த கொலைவெறி]] இப்பிடித்தான் லேசா கொளுத்தி போட்டேன் பஸ்'ல [[Buzz]] என்னா கும்மு கும்மிருக்காயிங்க பாருங்க [[படிங்க]] கீழே...1 : ஓடிய பதிவர் பாடிய பாட்டு உங்களுக்காக....அறியாத வயசு....புரியாத மனசு!

2 : கூகுளாண்டவர் இன்று தரிசனம் நிறுத்தப்பட்டதால்......
பதிவரை சினிமா பாக்க போக சொன்னார் டேமேஜர்!

3 :அலகு குத்த ரெடியானார் அண்ணன் சிபி.......!

4 : இன்று பதிவுகம் மூடப்பட்டதால்.....
பதிவர்கள் பாதிப்பு...சீக்கிரம் கடை திறக்க சொல்லி கோயிலில் பிரார்த்தனை!

5 : பிளாக்கர் ஒப்பன் ஆகாவிட்டால் மாபெரும் போராட்டம் விக்கி உலகம் தலைமையில் நடைபெறும்..


6 : பதிஉலகம் இன்று பாதி உலகமானது..

7 : பதிவுலகம் தவிப்பு, பிரபல பிளாக்கர்கள் சைக்கோ ஆகிவிட்டார்கள்..

8 : பதிவுலக வரலாற்றில் திருப்பம்....கடையடைப்பு காரணமாக மண்டயுடைப்பு ஏற்படுமா!

9 : ரோட்டில் போய் கொண்டு இருந்த பதிவர் கீரை விற்பவரை சைட் அடித்த குற்றத்திற்காக கைது!

10 : பிரபல பதிவர்கள் மோட்டுவளையை வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்..

11 : பதிவருக்கு வாந்தி மயக்கம்........பதிவுலகம் ஒரு நாள் கடையடைப்பு!

12 : முக்கிய நடிகர் அமெரிக்க பயணம்....முக்கிய பதிவர் ஆப்பிரிக்கா பயணம்!

13 : காத்து வாங்கும் பதிவுலகமும் விட்டத்தை பார்க்கும் பதிவர்களும்!

14 : அப்பாடா தமிழ் இனி மெல்ல வாழும்..

15 : காத்து வாங்கும் பதிவுலகமும் விட்டத்தை பார்க்கும் பதிவர்களும்!

16 : கோமாளி செல்வா ஈரோட்டை விட்டே எஸ்கேப்...


17 : பதிவரின் மரண மொக்கைகளை தாங்க முடியாமல் பதிவுலகம் தள்ளாட்டம்!

18 : அமைதிப்பதிவர் கொந்தளிப்பு....ஈரோடு மக்கள் தத்தளிப்பு!

19 :  - பதிவுலகை நாரடிக்கிரவனுங்க இங்கேயும் வந்துட்டானுங்க ஒடுங்கலேய்..

20 : உம்ம எழுத்தெல்லாம் பேஸ்புக்'ல நான் களவாண்டு போட்டுட்டு இருக்கேன் என் பெயரில் ஹி ஹி 

டிஸ்கி : மேலே குத்திய கும்மாகுத்துக்கு சொந்தக்காரன் "விக்கி உலகமும்" கொஞ்சூண்டு "நாஞ்சில்மனோ"வும், ம்ஹும் வெளங்கிரும்.

மீள் பதிவு.

Friday, October 28, 2011

கத்தாஃபியின் வீழ்ச்சியும், லிபியாவின் வளர்ச்சியும்...!!!

து இல்லை... நடனக் கூடங்கள் கிடையாது... வீதிகளில் கைகோத்த காதலர்களைப் பார்க்க முடியாது... பொது இடங்களில் பெண்கள் பேசுவதுகூட குற்றம். ஆனால், மேற்கத்தியப் பாலியல் படங்களைப் பார்க்க, இணையதள மையங்களில் நிரம்பி வழியும் இளைஞர்கள்... இதுதான் லிபியா!
மம்மர் கடாஃபியின் ஆட்சியில் ஒரு புறம் மக்களின் சுதந்திரமும் ஜனநாயகமும் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்த நிலையில்... மறுபுறம் அவர்கள் உலக நாடுகளை வேட்கையோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

கடாஃபி ஒவ்வொரு லிபியனுக்கும் கல்வி முதல் கழிப்பறை வரை எல்லா வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், அவர்களிடம் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டார். அவற்றைக் கேட்டவர்களுக்கு மரணத்தை மட்டுமே அவர் பதிலாக அளித்தார். ''இந்தப் புவிக்கோளத்தில் ஜனநாயகம் என்பது எங்குமே இல்லை, லிபியா நீங்கலாக!'' என்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரமாண்ட விழா ஒன்றில், 'அரசர்களுக்கு எல்லாம் அரசர்’ என்று தனக்குத் தானே பட்டம் சூடிக்கொண்டார் கடாஃபி. உண்மையாகவே தன்னை அப்படித்தான் நினைத்துக் கொண்டார். ஆங்கில நாட்காட்டி முறைக்கு மாற்றாகப் புதிய நாட்காட்டி முறையை அவர் உருவாக்கியதாகட்டும்;

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த காண்டலீனா ரைஸைக் காதலிக்கிறேன் என்று சொன்னதாகட்டும்; ஐ.நா. சபையில் உரையாற்ற 15 நிமிஷம் அனுமதி வழங்கப் பட்டபோது 100 நிமிஷங்கள் இடைவிடாது பேசி வெறுப்பேற்றியதாகட்டும்... எல்லாமே அந்த எண்ணத்தின் வெளிப்பாடுகள்தான்.


மன்னர் இத்ரிஸிடம் இருந்து 1969-ல் ரத்தமில்லா ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்ததில் தொடங்கி, ஆட்சியில் இருந்த 42 ஆண்டுகளும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார் கடாஃபி. ''அப்துல் நாசர் என் வழிகாட்டி. ஸ்டாலினும் ஹிட்லரும் என் முன்மாதிரிகள்!'' என்று சொன்னவர், தனது சித்தாந்தங்கள் அடங்கிய 'பச்சைப் புத்தகம்’ (கிரீன் புக்) உலகின் போக்கையே மாற்றும் என்று நம்பினார்.

உலகின் எண்ணெய் வளத்தில் இரண்டு சதவிகிதத்தைப் பெற்று இருக்கும் லிபியாவில் கிடைக்கும் எண்ணெய், முதல் தரமானது. குறைந்த சுத்திகரிப்புச் செலவுகளே போதும். மேலும், இன்னமும் ஆய்வை விரிவுபடுத்தினால், லிபியா வின் எண்ணெய் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த முடியும். இதனால், எப்போதுமே லிபிய எண்ணெய்ச் சந்தையைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தன அமெரிக்க - ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்கள்.ஆனால், கடாஃபியோ தேசிய எண்ணெய் நிறுவனம் மூலம் நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தை லிபிய அரசு வசம் வைத்துக்கொண்டார். மேலும், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றாக சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் எண்ணெய் வர்த்தக உறவை உருவாக்கிக்கொண்டார். 

தவிர, விடுதலைக்காகப் போராடும் ஆயுதக் குழுக்களுக்கு உதவுவதை கடாஃபி வழக்கமாகக்கொண்டு இருந்ததால், மேற்கு உலகம் எப்போதும் அவரை வெறுப்புடனே பார்த்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் வெளிப்படையாகவே 'பைத்தியக்கார நாய்’ என்று கடாஃபியை வர்ணித்தார். அப்போது, ''அமெரிக்கா உலகின் அழிவு சக்தி. அமெரிக்கர்கள் என்னைப் பாராட்டினால்தான் நான் வெட்கப்பட வேண்டும்!'' என்று சொன்னார் கடாஃபி.


இன்றைய சூழலை அவர் ஓரளவுக்கு யூகித்து இருந்தார் என்றே சொல்ல வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ''லிபியா கூடிய விரைவில் புதியதோர் அரசியல் யுகத்துக்குள் நுழையப் போகிறது...'' என்று சொன்ன அவர், நாட்டின் ராணுவம், உள்துறை, வெளியுறவுத் துறைகள் நீங்கலாக, அனைத்துத் துறைகளுக்கும் நேர்மையான தேர்தல் நடத்தத் திட்டமிட்டார்.

எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் வகையில் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க இருந்தார். ஆனால் பதவி வெறி, அவர் தவறுகளில் இருந்து அவரை மீள்வதற்கான பாதைகளை வலுவாக அடைத்து விட்டது.

அரபு உலகப் புரட்சியின் தொடர்ச்சியாக லிபிய மக்களும் கிளர்ச்சியில் இறங்கியபோது, அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுடன் எண்ணெய் நிறுவனங்களும் பின்னின்று சவக் குழியைத் தோண்ட... பாதாளத்தில் வீழ்த்தப்பட்டார் கடாஃபி. 'லிபியாவின் சுதந்திரம்’ என்று கடாஃபியின் மரணத்தைக் கொண்டாடுகிறார்கள், லிபிய மக்கள். முழுமையாக அப்படிச் சொல்லிவிட முடியாது.


அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அமைத்துள்ள பொம்மை அரசாங்கத்திடம் இருந்து உண்மையான சுதந்திரத்துக்காக இன்னொரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் விரைவில் அவர்களுக்கு ஏற்படலாம்!

டிஸ்கி :


நன்றி ஜூனியர் விகடன்.

Thursday, October 27, 2011

இசை ஞானி ராக்ஸ்....!!!

இசைப்பின் இசைஞானிபோல் இசைக்க அஃதிலார்
இசைப்பினும் இசைக்காமை நன்று!!

777711177777777777777777¶¶¶¶¶§¶¶§77777777711111111
777777777777777777773¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§177777777777777
777717777777777777§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶1777777777711
7777777777777777§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶77777777771
777777777777777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶7777777777
77777777777777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§§¶¶777777777
7777777777777¶¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶¶¶¶¶¶¶§§¶¶¶77777777
777777777777¶¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶§§¶¶¶7777777
77777777777¶¶§¶¶¶¶¶¶¶¶§§§¶¶¶¶§¶¶¶¶¶¶§¶¶§¶¶¶¶777777
77777777777¶§¶¶¶¶¶¶¶¶¶§§§¶¶¶¶33¶§§§§¶§¶¶§¶§¶377777
7777777777§¶§¶¶¶¶¶¶¶¶§§§¶3¶¶§33§§¶§§¶¶§¶¶§§¶¶77777
7777777777¶¶¶¶¶¶¶¶¶¶¶§§¶§§3§¶§3¶§§¶¶§§¶¶¶3¶§¶¶7777
7777777771¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§§§7§¶§§3¶3¶¶§333¶3¶¶§¶1777
777777777§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶¶§¶§§§§¶§31§33§§¶§¶¶777
777777777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶¶¶§§§33¶33§13§13§§§§¶¶777
777777777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶§¶¶§3311331¶3131§3¶§73¶177
777777771¶§§¶¶§¶¶¶¶¶¶§¶§¶¶§33113311131¶§§7¶111¶¶77
77777777§¶§§¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶§31113311771733¶§§§77¶¶77
77777777¶¶¶¶§§¶¶¶¶¶¶¶§¶§¶§377117777777173§1¶37¶¶77
77777777¶¶¶§§¶¶¶¶¶¶¶¶¶§¶¶377777777777777117§¶3¶¶77
77777777¶¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§1777777777777777711¶¶¶¶77
77777777¶§¶¶§¶¶¶¶¶§¶¶¶§¶§37777777777777777173¶¶377
77777771¶¶¶§¶¶¶¶¶¶¶¶¶¶§§317777777777777777111§¶§77
7777777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§33377777777777777777173¶¶77
7777737¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶¶§33377777777777777777173¶¶77
7777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶¶§331377777777777777777111§377
777§¶§§¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶§§111777777777777777771113¶777
777¶§¶§§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶177777777777777777771113§777
771¶§§¶§¶¶¶¶¶¶¶§¶¶313§31777777777777777771711§3777
773¶§§§¶¶¶¶¶¶¶¶¶¶§1731§¶§7777777¶177777771711¶3777
77§¶¶§¶¶¶¶¶¶¶§§¶7§¶§177§¶¶177777§377777771173¶1777
77¶¶3§§¶¶¶¶¶§¶¶373¶¶¶¶171¶¶37777§¶77777777173¶7777
77¶¶§¶§¶¶¶¶¶¶§¶§7¶¶77¶§¶¶§¶¶§177777777777717§¶7777
77§¶¶¶§¶¶¶¶¶¶¶¶3§¶¶37¶¶71¶¶§1317777777777777¶¶7777
77§¶¶33¶¶¶¶¶¶§§3§¶¶¶71177¶¶77¶177171§¶§17117¶§7777
77§¶¶§§¶¶¶¶¶§¶§1713317771§¶77¶77¶773§§§¶1717¶37777
773¶¶¶§¶¶¶¶§¶¶§17777771177¶7¶371§71§13777177¶77777
771¶§¶¶¶¶¶¶¶§¶¶171777777717¶¶771173§7§3¶3711377777
777¶¶§¶¶¶¶¶§¶¶§§77771111173¶§77777377§¶§¶§717§7777
777¶¶¶¶¶¶¶¶¶§¶§¶¶77777777§§§3777771171§77¶71737777
777¶¶¶¶¶¶¶¶§¶§¶¶§31177777¶33177717771771§117717777
777¶¶§¶¶¶¶¶¶¶¶§¶37777771¶¶¶37777177777711117777777
7777¶¶¶¶¶¶¶¶¶¶¶§177777¶¶73¶17777777777711777377777
777777¶¶¶¶¶¶§¶¶§17771¶¶¶71§77777177777777773177777
777777¶¶¶¶¶§¶§§§1771§1¶§71§77777137777777773777777
777777¶¶¶¶¶¶§¶§317713¶¶¶§3177777711777777717777777
777777¶¶¶¶¶¶¶§§31771§¶¶¶¶¶§77777771777777117777777
777771¶¶¶¶¶¶§§§3711§¶¶¶¶¶¶¶77777771777711177777777
777777¶¶¶¶¶§¶§333¶¶¶¶¶¶¶¶¶¶17771773777771177777777
777777¶¶§¶¶¶§§33¶¶¶¶¶¶¶¶¶¶¶§13¶¶377177771177777777
7777773¶§¶¶§§§§§¶¶§§¶§§¶¶¶¶§¶¶¶7777777171177777777
7777771¶§¶§§§¶§§¶¶§¶¶¶¶§§71¶¶¶¶3777777171177777777
777777§¶¶¶¶§¶¶§3¶¶¶§¶§¶¶777§33¶¶¶77777771777777777
777777§¶¶¶§¶§¶§§¶3§¶¶§73¶§11717¶¶17777711777777777
777777§¶¶¶§§¶¶§§13§¶§¶7771331113¶11717111777777777
7777771¶¶¶§§¶¶§373§¶§§77777717¶¶¶¶1711717777777777
777777§¶¶¶§§¶§§333§§¶¶¶177777777¶¶1717777777777777
777777¶¶¶¶§§§¶§§§§3§¶¶¶¶¶3777777¶¶7717777777777777
777777¶¶¶¶¶¶§§§§§31773¶¶¶¶¶37777§37117177777777777
777777¶¶§¶¶¶¶¶§¶§3317713¶3§31171117777377777777777
777777¶¶¶¶¶¶¶¶¶¶¶§§7777777771177171773777777777777
7777773¶§¶¶¶¶¶¶¶¶¶¶§77777777717771173§777777777777
7777777¶¶§§¶¶¶¶¶¶¶¶¶317777771717171¶¶1777777777777
7777777§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶3711771777777¶¶§¶777777777777
77777777¶¶¶§§§¶¶¶¶¶¶¶¶§3331777771¶¶¶3¶177777777777
77777777¶¶§§¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶13§113¶¶¶§¶¶777777777777
777777773¶§§§¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§1§¶¶¶¶777¶77777777777
7777777777¶§§§¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶3§¶§¶¶777§¶77777777777
77777777777§§§§§¶¶¶¶¶¶¶¶¶§¶¶¶¶33§7777¶777777777777
777777777777133333§§¶¶§¶§3¶§3733777777317777777777

நன்றி : இசை ஞானி பக்தன்.

டிஸ்கி : தீபாவளி காய்ச்சல் முடிஞ்சிருச்சி, முதல்ல வீட்டை சுத்தம் பண்ணுங்க, நேற்று சரக்கடிச்சவிங்க எல்லாம் லெமன் ஜூஸ் ஸ்ட்ராங்கா போட்டு குடியுங்க, இல்லைன்னா புளிச்ச மோர் குடியுங்க.

"மனோ"தத்துவம் : காதலுக்கு பயந்தவன் நல்லா இருந்ததா சரித்திரம் பூகோளம் ஒன்னுமில்லை...!!!Tuesday, October 25, 2011

வாங்க கேசியோ கத்துக்கலாம்...!!!

நான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட் [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[!]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன வயசுலே இருந்தே எனக்கு கீபோர்ட் படிக்கணும்னு தீராத ஆசை, காதல். 


இது எனது கீபோர்ட்.

சர்ச்'ல கீபோர்ட் பிளே பண்ணுரவிங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கும், நமக்கும் இப்படி முடியலையேன்னு, கல்யாணமாகி நான் பஹ்ரைன் வரும் வரை அது கைகூடவில்லை, பஹ்ரைன் வந்தும் சர்ச் போகும் போது அங்கே கீபோர்ட் வாசிப்பவர்களை பார்க்கும் போது ஆசையாக இருக்கும்.

என் மனைவியின் அண்ணன் சபை போதகராக இருப்பதால், அவர் கற்றுக்கொள்ள கிளம்பினார், மியூசிக் மாஸ்டரிடம், மாதம் இருபது தினார் மாசத்துக்கு நான்குநாள் டியூஷன். ஒரு கீபோர்ட் சொந்தமாக வாங்கினார். கிளாஸ் ஆரம்பம்.

யமகா கீபோர்ட் வந்ததும், எனக்கும் படிக்க ஆசை வர, பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை, மச்சான் சொன்னார் கவலைப்படாதே நான் உனக்கு சொல்லி தருகிறேன்னு சொன்னதும் அல்லாமல், அவர் அங்கே படித்து விட்டு வருவதை எனக்கு சொல்லித்தர ஆரம்பித்தார்.


ஒன் டூ த்ரீஃபோர் என சொல்லி சரிகம பதனிச படிக்க ஆரம்பித்தேன், முதலில் வலது கைமட்டுமே பிராக்டிஸ் நடந்தது, இப்படியே ஒரு ரெண்டு வருஷம் வலது கை பிராக்டிஸ் செய்தும் எந்தபலனும் இல்லை. ஒரு முன்னேற்றமும் இல்லை, நான் வலது கையால் வாசிப்பேன அல்லாமல் சர்ச்'ல பிளே பண்ணத்தெரியாது...?

பிறகு அதே பிராக்டிஸ் இடது கைக்கு மாறியது, என் மச்சான் எவ்வளவோ முயற்சி செய்தும் [[மூனுவருஷம்]] இடது கை பிராக்டிஸ் செய்யமுடியாமல் போயிற்று, அவர் ஆர்வம காட்டாமல் விட்டு விட்டார், ஆனால் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு டிரம்ஸ் கற்று கொடுக்கவே ஐயா டிரம்ஸ்'ல இன்ட்ரெஸ் எடுத்து போகவே நான் அனாதையானேன்.


ஆனாலும் கற்றுக்கொள்ளும் வெறி அடங்கவில்லை, எப்போதும் கீபோர்ட் என் ரூமில் வைத்திருப்பேன், நான் என் மச்சானைவிட நல்லா வாசிப்பது தெரிந்துகொண்டு என் மச்சானுக்கு கடுப்பு வேற ஹி ஹி அதுக்கு நான் என்ன செய்ய... அப்புறம் சும்மா தெரிஞ்சதை வைத்து இசை வெள்ளத்தில் மிதப்பேன்.

இப்படி இருக்க எங்கள் சர்ச்சில் ஒரு அண்ணன் சொன்னார் என் ஆர்வத்தை பார்த்துட்டு, கன்னியாகுமரி'யில இருந்து ஒரு ஆள் புதிதாக பஹ்ரைன் வந்து இருக்கிறார், அவர் பார்டைமாக கீ போர்ட் கற்று தருகிறார் மாசம் பத்து தினார்தான் பீஸ் வாங்குறார்னு சொன்னதும் நானும் மச்சானும் அவரை போயி பார்த்தோம். ஓகே சொல்லிவிட்டார்.


அடுத்து அவர் வந்து என்னெல்லாம் படிச்சீங்க சொல்லுங்கன்னு கேட்டுட்டு, அவரும் சொல்லி தந்தார் ஒரு வருஷம். ஆக நான்கு வருஷம் ஆச்சு ஒரு முன்னேற்றமும் இல்லை, அதையும் மச்சான் நிப்பாட்டிட்டாரு.

எனக்கு தாகம் அடங்கவில்லை எப்பிடியாவது கற்று கொள்ளனும்னு, இப்பிடி ஒரு ஆறுமாசம் கழிஞ்சது, மறுபடியும் இதே மாதிரி ஒருவர் கிடைச்சார் அவரும் கன்னியாகுமரிதான், அவர் வந்து சொன்ன முதல் வார்த்தை, முதலில் படித்தவகளை முற்றிலும் மறந்து விடுங்கள் நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் எனக்கூறினார்.


என் மச்சான் கொஞ்சம் மேதாவி'தனம் காட்டினது அவருக்கு பிடிக்கவில்லை, அவரும் வாராவாரம் வந்து நோட்ஸ் குடுத்து டியூசன் எடுப்பார், அப்படி இருக்க ஒருநாள், சும்மா ஊர்பேச்சு வரும் போது எனக்கு எந்த ஊர்னு கேட்டார், என் ஊர் பெயரை கேட்டதும், எங்க அக்காளை அங்கேதான் கட்டி கொடுத்திருக்கொம்னு சொன்னார்.

பெயர் விலாசம் கேட்கும்போது, எங்க பெரியப்பா மகனுக்குதான் கட்டிகுடுத்துருப்பது தெரிஞ்சது, ஆக சொந்தக்காரனாகி விட்டார், எங்கே எனக்கு சீக்கிரமா கத்து தந்துருவாறோன்னு நினைச்ச மச்சான், கொஞ்சம் தில்லுமுல்லு காட்ட, இவருக்கு கோபம், வெளிகாட்டி கொள்ளவில்லை....


அப்புறம் மச்சான் நிறுத்திகொண்டார் காரணம் பிராக்டிஸ்'ன் கடுமை அப்பிடி, மாஸ்டர் பெயர் ராபர்ட், எனக்கு வாராவாரம் என் ரூமிற்கே வந்து டியூஷன் எடுத்தார், பனிரெண்டு மணிநேரம் வேலை முடிந்தும் நேரத்தை பொருட்படுத்தாமல், பிராக்டிஸ் செய்யசொன்னார்....

நிற்க : கேசியோ படிப்பவர்கள் தினமும் ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பிராக்டிஸ் செய்யவேண்டும் [[நான் என் பெட் அருகில் எப்போதும் தயார் நிலையில் வைத்து இருப்பேன் எப்பல்லாம் முழிப்பு வருதோ அப்பெல்லாம் பிராக்டிஸ் செய்வேன்]]


நிற்க : நாம் எம்புட்டு பிராக்டிஸ் செய்யுறோமோ அவ்வளவு சீக்கிரம் கேசியோ படிக்கலாம் "மாஸ்டர் நல்லவராக" இருந்தால்....

மிகவும் கஷ்டமான நோட்ஸ் தரும்போது சுனங்குவேன், சுனங்கும் அந்த இடத்தில்தான் அடுத்த ஸ்டெப்பே இருக்குன்னு உற்சாகப்படுத்துவார், இப்போ இன்னொரு விஷயம் என்னான்னா ராபர்ட் எனக்கு கேசியோ கற்று தருவது ஊரிலும், எங்கள் சபையிலும் எல்லாருக்கும் தெரிந்து விட்டதால், மாஸ்டருக்கு எப்பிடியும் எனக்கு கற்று தந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் மாட்டிக்கிட்டார் [[பாவம் ஹி ஹி]]


நிற்க : இப்படி கஷ்டமான நோட்ஸ் பிராக்டிஸ் வரும்போது இடையில் படிக்காமல் பலர் ஓடி போகிறார்கள் என்று மாஸ்டர் வருத்தப்படுவார்.  ஆக எங்கே நமக்கு கஷ்டமான நோட்ஸ் பிராக்டிஸ்'க்கு வருதோ அந்த இடத்தில் அழகான இசையின் மாற்றமும் இருக்கும், அந்த மாற்றத்தின் ருசியை அறிந்து விட்டால், வாசிக்க வெறியே வந்துரும் இன்னும் இன்னும் ஆவலை தூண்டும்.

ராத்திரி பகலாக விழுந்து விழுந்து பிராக்டிஸ் செய்தேன், சொல்லமறந்துட்டேன், இந்த மாஸ்டர் ஆரம்பத்துலையே இரண்டு கைகளுக்குமே பிராக்டிஸ் கொடுத்தது ஆச்சர்யம் அதை பின்னால் சொல்கிறேன்.


ஒரே வருஷம்தான் வெரிகுட் என சொல்லி அவர் பாட நான் கேசியோ [[கீபோர்ட்]] வாசிக்க அமர்களமாக ஆசீர்வதித்து, இனி போயி சர்ச்ல தைரியமா பிளே பண்ணுன்னு சொன்னார், 

அடுத்தவாரமே சர்ச்சில் எனது அரேங்கேற்றம், நண்பர்கள், சர்ச் மெம்பர்கள் போதகர், சொந்தங்கள் எல்லாம் வாயடச்சி போனார்கள், எப்பிடிய்யா படிச்சே எனக்கும் சொல்லிதான்னு நச்சரிப்பு வேற, இதுல என் மச்சானுக்குதான் காதுல புகை, காசு குடுத்து படிக்கப்போனவரு அவரு, ஆனால் படிச்சதோ நான் ஹி ஹி...

கீபோர்ட் வாசிப்பது ஒன்லி ஃபோர் சர்ச்'க்கு மட்டும்தான் என்பது நான் கொண்ட உறுதி, இங்கே நடன பார்களில் கீபோர்ட் வாசித்தாலே செம காசு, இருந்தாலும் மனம் கொண்ட வைராக்கியம் அதேபோல் இப்பவும் இருக்கிறது.


சரி இனி விஷயத்துக்கு வருவோம், இந்த கீபோர்ட் கத்துகுடுக்கும் மாஸ்டர்'கள் சிலர் வெறும் காசுக்காக காலம் தாழ்த்துகிரார்கள், ராபர்ட் போன்ற மாஸ்டர்கள் காசுக்காக அல்ல, உண்மையான ஈடுபாட்டுடன் செய்கிறார்கள், பாருங்கள் என் மச்சான் மூணு வருஷம் படித்தும் பொது இடத்துல வாசிக்க இயலவில்லை, முதலிலேயே இரண்டு கையிலும் பிராக்டிஸ் கொடுக்கலாமே அதை பணத்துக்காக அவர்கள் செய்வதில்லை..!!!

அடுத்த மாஸ்டர், அவரும் பணத்துக்காக சரியாக சொல்லிகுடுக்கவில்லை...!!!!

நிற்க : நீங்கள் கற்றுகொள்ளப்போகும் மாஸ்டர், பணத்துக்காக செயல் படுகிறாரா, அற்பணிப்புடன் செயல் படுகிறாரா என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள்.


நான் எப்போதும் கீபோர்ட் ரூமில் வைத்திருப்பேன், ஊருக்கு கொண்டு வந்தாலும் திரும்ப கொண்டு போயிருவேன், நன்கு படித்த பின்னரும் நாள்தோறும், பயிற்சி செய்வேன் காரணம் ரெண்டுநாள் கேப் வந்துச்சுன்னா விரல்கள் இறுக்கமாகி விடும், அடுத்து கீபோர்ட் வாசிப்பவர் நகங்களே வைக்கக்கூடாது, காரணம் உணர்வுகள் விரலில் இருந்துதான் ஆரம்பிக்கிறது, ஏ ஆர் ரஹ்மானும் மற்ற இசை அமைப்பாளர்களும், கண்ணை மூடிக்கொண்டு கீபோர்ட் வாசிப்பதை கவனித்தீர்களா..?? அது அந்த உணர்வுதான்...!!! 


போனதடவைக்கும் முந்தின முறை லீவில் போனபோது என் மகனுக்கும் இரண்டு கைகளிலும் பிராக்டிஸ் மற்றும் சிலபாடல்களும் சொல்லிகுடுத்துட்டு, அவனை டியூஷன் அனுப்ப சொல்லிட்டு வந்துட்டேன், முதல்நாள் கிளாஸ் போனவனிடம் மாஸ்டர் கேட்டிருக்கிறார், உனக்கு கீபோர்ட் பற்றி ஏதாவது அடிப்படை தெரியுமான்னு கேட்க, இவன் எனக்கு கொஞ்சம் பாடல்கள் பிளே பண்ண தெரியும்னு சொல்ல...

சரி பிளே பண்ணு பார்ப்போம்னு சொல்லவும், என்மகன் சூப்பரா வாயால் பாடி "இரண்டு கையால்" பிளே செய்ய, வாத்தியாருக்கு ஆச்சர்யம், இது யார் சொல்லி தந்தார்கள் என கேட்க இவன் எங்க அப்பா சொல்லி தந்தார்கள் என சொல்ல, அப்போ உங்க அப்பாவுக்கு கீபோர்ட் தெரியுமான்னு கேட்டுருக்கிறார். ஆமாம் எங்க அப்பாவுக்கு தெரியும் சர்ச்ல அப்பாதான் ஆர்கன் பிளேயர்னு சொல்ல, ஒரு வருஷத்துக்கு மேலே உள்ள நோட்ஸ் குடுத்து படிக்க சொல்லி இருக்கிறார். என்ன இசை தெரிஞ்சவன் இருக்கான்னு தெரிஞ்சா இவங்க பணம் பப்பு வேகாதுன்னு இவர்களுக்கு நன்றாக தெரியும்.


ஆறேமாசத்தில் என் மகன் படித்து முடித்துவிட்டான், இப்போ சர்ச்ல சார்தான் கீபோர்ட் பிளேயர், நான் ஊருக்கோ, மும்பையிலோ சர்ச் போனால், கீபோர்ட் வாசிப்பவர்கள் நெர்வஸ் ஆகிவிடுவார்கள், இசையில் சின்ன தப்பு நடந்தாலும் இசை படித்தவர்களுக்கு கோபம் வந்துரும், எங்கே தப்பு செய்கிறார்கள், எந்தப்பாட்டுக்கு எந்த ஸ்கேல் போடணும்னு, நமக்கு தெரியும்...

இசை தெரியாதங்களுக்கு தப்பை உணரமுடியாது, மும்பையில் சர்ச் உள்ளே நுழைந்ததுமே, மியூசிக் வாசிக்கும் தம்பிகள் தங்களுக்குள்ளே கிசுகிசுப்பார்களாம் நாஞ்சில்மனோ வந்தாச்சுடோன்னு, இதை என் மகன் சொல்லி சிரிப்பான், பசங்க எல்லாரும் பேஸ்புக், டுவிட்டர், பஸ், வலைதளங்களில் இருப்பதால் அவர்களுக்கும் நான் நாஞ்சில்மனோ'தான்....!!!


இன்ட்ரெஸ்ட் இருக்கா துணிஞ்சி போயி படியுங்க, ரொம்ப ஈசிதான், நல்லா பிராக்டிஸ் பண்ணுங்க, படிச்சிட்டீங்கன்னா அதன் சுவையே வேறு, ஊரில் இருக்கும் போது எங்கள் வீட்டில் இசை மழைதான், என் மகன் கீபோர்ட் வாசிக்க நாங்கள் பாடல்களை பாட'ன்னு செமையா இருக்கும், என் மகளும் படிக்கவேண்டும் என்றாள், சின்ன பொண்ணு கைவிரல் இன்னும் கொஞ்சம் வளரனும், அடுத்தமுறை லீவுக்கு போகும் போது என் வீட்டில் மூனாவதாக ஒரு இசையாளினி ரெடியாக்கப்படுவாள்.

டிஸ்கி : மேலே சொல்லியுள்ளது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

டிஸ்கி : விக்கி'க்கு வார்னிங், இன்ட்லி இன்ட்லி இன்ட்லி ஹி ஹி....

"மனோ"தத்துவம் : வாயை அகலமாக்கினால் அடி உறுதி....!!!!


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!