Friday, April 29, 2011

வெடி'வேலு


ரஜினி நடிக்கும் படத்தில் திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டதே? வடிவேலு பதில்

 
திமுக தலைவர் கலைஞரை, நடிகர் வடிவேலு 29.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, 

திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக [[சூரியன் என்றாலே  பிரகாசம்தான் ஹி ஹி]] உள்ளது. கருத்துக்கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பயன் அடைந்தோர் [[??????]]  பட்டியல் அதிகமாக இருப்பதால், கலைஞர் அய்யாவின் வெற்றி உறுதி. மக்களின் எழுச்சியை நான் பார்த்தேன். பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் நுழைந்து போகும்போது மக்கள் ஆரவாரம் செய்தனர். குழந்தைகள் முட்டையை கையில் எடுத்து வந்து காட்டியது [[ஹா ஹா ஹா ஹா]]  போன்றவைகளையெல்லாம் பார்க்கும்போது பயன் அடைந்தவர்கள் ஓட்டே திமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பை பெற்று தரும். ஏழை எளிய மக்கள் தங்களது நன்றி கடனை செலுத்தியுள்ளனர். இந்த சந்தோஷத்தை [[!!!!!!]] பகிர்ந்து கொள்வதற்காக கலைஞர் அய்யாவை இன்று நான் சந்தித்தேன் என்றார்.

நடிகர் ரஜினியின் ராணா படத்தில் நடிக்க திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, 

ராணா படமாக இருக்கட்டும், காணா [[சமாளிபிகேஷன்]] படமாக இருக்கட்டும், எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவில்லை. மக்களை சென்றடைந்த திட்டங்களை பற்றி நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இதனால் என்னை சினிமா கேரியரில் இருந்து தூக்கினாலும், தூக்காவிட்டாலும் நான் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும் என்றார்.


நன்றி : நக்கீரன்.


டிஸ்கி : வடிவேலு நல்லா காமெடி பண்ணுகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே.....



Thursday, April 28, 2011

மாங்'கனி"

காலையிலே எட்டு மணிக்கு அலாரம் அடிக்க, [[இந்தியன் டைம் பத்தரை]] எழும்ப சோம்பல்பட்டு டியூட்டியை [[ கிர்ர்ரர்ர்ர் ]] நினைத்து அலறி எழும்பி லைட்டை போட்டுவிட்டு ஏசியை அனைத்து விட்டு, டிவி'யை ஆன் பண்ணினேன். கிச்சனில் போயி குடிக்க சுடுதண்ணி காய்ச்சினேன் [[கொன்னியா உனக்கு அது மட்டும்தானேடா  தெரியும்]] டிவி செய்தியை கேட்டவாறே, அப்போ திடீர்ன்னு "நெல்லை மாநகராட்சி"ன்னு சத்தம் காதில் விழ, எனக்கு சங்கரலிங்கம் "உணவு உலகம்" ஆபீசர் நினைவுக்கு வர டிவி முன்பு ஓடி வந்தேன். வேறே சிலபல செய்திகள்ஓடிகொண்டிருந்தது. நான் காத்திருந்தேன்..... ஆங்... நியூஸ் வந்துருச்சு அது கீழே....


ரசாயன கல் வைத்த பத்து டன் மாம்பழங்கள் நெல்லை மாநகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யபட்டன. மேலும் விரிவான செய்திகள், 


இது மாம்பழம் சீசன் என்பதால்  சேலம் தருமபுரி மாவட்டங்களில் இருந்து , ரசாயன கல் வைத்த மாம்பழங்கள் நெல்லைக்குள் வருவதாக நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, மாநகராட்சி அதிகாரி திருமதி : சாந்தி தலைமையில் அதிகாரிகள் குழு  விற்பனைக்கு வந்த பத்து டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.


 டிஸ்கி : நேற்றுதான் "உணவு உலகம்" மாம்பழம் ரெய்டு பற்றியும், ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை தின்பதால் வரும் விளைவு பற்றியும் விபரமாக எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ரெய்டில் நம்ம ஆபீசர் இருந்தாரா இல்லையா என்பதை அரிய உங்களைபோல நானும் அவர் பின்னூட்டத்துக்கு காத்திருக்கிறேன். இதன் மூலம் "நெல்லை மாவட்ட மாநகராட்சி" அதிகாரி திருமதி : சாந்தி அவர்களுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும், நம்ம சங்கரலிங்கம் ஆபிசருக்கும் நாஞ்சில்மனோ வலைத்தளம் சார்பாக ஒரு ராயல் சல்யூட். உங்களை போல சில அதிகாரிகளால்தான் ஏழை பாளைகளின் உயிர் கொஞ்சமாவது தப்புகிறது. வாழ்த்துக்கள் மக்கா உங்க எல்லாருக்கும். உங்கள் அதிரடி தொடரட்டும்......


ஒரு ஆச்சர்யம் : ஆயிரம் கிலோ மீட்டர் ஒய்வு எடுக்காமலே பறக்குமாம் புறா...!!!!!!!!


வார்னிங் : சிபி, மரியாதையா இந்த பதிவு முழுசையும்  படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடு, எடக்கு மடக்கா டச் பண்ணிட்டு ஓடினே கம்னாட்டி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா....


ஆச்சர்யம் 2 : கம்பியூட்டரை பார்க்க கண்  கூசியதால், தலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்களில் ஒருவர்...!!!! ஹே ஹே ஹே ஹே ஆங்...... பெயர் சொல்லமாட்டேனே.....[[வீட்ல ஒரு மாதிரியா பார்த்துருக்காங்க அவரை]]

Wednesday, April 27, 2011

தமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்

தமிழக அமைச்சர்'களின் போன் நம்பர்கள்....


NamePortfolioPhone(O)Phone(R)
Kalaignar M Karunanidhi
Chief Minister
25672345
Prof.  K. Anbazhagan
Minister for Finance 
25672265
Thiru Arcot N. Veerasamy
Minister for Electricity and Rural Industries
25672283
Thiru M.K. Stalin
Minister for Local Administration 
25674113
Thiru Ko.Si. Mani
Minister for Cooperation  
25673209
Thiru Veerapandi S. Arumugam
Minister for Agriculture 
25672232
Thiru Durai Murugan
Minister for PWD 
25671427
Dr.  K. Ponmudi
Minister for Higher Education 
25671142
Thiru  K.N. Nehru
Minister for Transport 
25671386
Thiru M. R. K. Panneerselvam
Minister for Backward Classes 
25670682
Thiru I. Periasami
Minister for Revenue and Law 
25670374
Thiru N. Suresh Rajan
Minister for Tourism 
25671129
Thiru Parithi Ilamvazhuthi
Minister for Information and Publicity 
25679136
Thiru E.V. Velu
Minister for Food 
25670204
Thiru Suba Thangavelan
Minister for Housing and Slum Clearance 
25671118
25673036
Thiru K.K.S.S.R. Ramachandran
Minister for Health 
25671184
Thiru T.M. Anbarasan
Minister for Labour 
25673126
Thiru N. K. K. P. Raja
Minister for Handlooms 
25670720
Thiru Thangam Thennarasu
Minister for School Education 
25670203
Thiru S. N. M. Ubayadullah
Minister for Commercial Taxes 
25671696
Thiru T. P. M. Mohideen Khan
Minister for Environment 
25672631
Thiru N. Selvaraj
Minister for Forests 
25671512
Thiru M. P. Saminathan
Minister for Highways 
25674020
Dr. (Tmt.) Poongothai
Minister for Social Welfare 
25672939
Tmt. Geetha Jeevan
Minister for Animal Husbandry 
25670866
Tmt. Tamilarasi
Minister for Adi Dravidar Welfare 
25670401
Thiru K. P. P. Sami
Minister for Fisheries 
25675099
Thiru U. Mathivanan
Minister for Dairy Development 
25670997

ஆக்ரியா [[கடைசியா]] என்னெல்லாம் கேள்வி கேக்கணுமோ கேட்டுக்கோங்க. வெளிநாட்டில் இருக்குறவங்க கோட் நம்பர் சேர்த்துகோங்க. 




டிஸ்கி : எப்பிடியும் இவங்க லைனுக்கு வரப்போறதில்லை, போன்'ல அம்புட்டவனையாவது  வாழ்த்தி கேள்வி கேளுங்க.


Tuesday, April 26, 2011

இன்று சில தகவல்கள்

இன்று சில தகவல்கள்....



நம்ம மகாத்மா காந்திக்கு இரண்டு கைகளாலும் கடிதம் எழுதும் பழக்கம் உண்டாம்....!!!!! [[காந்தின்னா சும்மாவா]]



பாலாவின் இயக்கத்தில் உருவாகும் 'அவன் இவன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது.....[[சிபி'க்கு ஆப்பு உறுதி ஆகிருச்சி]]



மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெறும் 'நீலவானம்...' பாடல் காட்சி முழுவதும் ரிவர்ஸ் ஷாட்டில் எடுக்கப்பட்டதாம்.கமலின் மனைவி விபத்தில் இறந்துவிடுவார். அதிலிருந்து அவர் உயிர்த்தெழுந்து காரில் ஏற.......[[எத்தனை படத்திதில்தான் முதல் மனைவியை கொல்லுவீங்க]]



இந்தியாவில் லோக்பால் சட்டத்தால் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியுமா?.........[[ முதல்ல அந்த கமிட்டியையாவது ஒழுங்கா கூட்டுங்க]]


ஐ.நா., : இலங்கையில் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடந்த ஒருமாத காலத்தில் போராட்டத்திற்கு தொடர்பு இல்லாத 10 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்களை குண்டு போட்டு கொன்றுள்ளது என்றும், சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர் என்றும் ஐ.நா., சபை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [[இதைத்தானே கொன்னியா அப்பவே இருந்து கரடியா கத்திட்டு இருக்கோம் போங்கடா கொய்யால]]



ஸ்பெக்ட்ரம் ஊழலில், முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருவரும் கூட்டுச்சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் இடம் பெறவில்லை. [[ "தொடர்பு இருப்பதாக" யோவ் நம்ம மக்கள் டபுள் மீனிங்'ல நினைச்சிர போறாங்கய்யா]]


புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. [[ நாசமாபோச்சி போங்க]]



பெங்களூரு சிறையில் இருந்து முத்துலட்சுமி விடுவிக்கப்பட்டார்...[[ ஐயோ பாவம் ]]




சென்னை: "ஸ்பெக்ட்ரம் ஊழலில், பயனடைந்த கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா...[[ இனி நீங்க வந்து என்னல்லாம் லந்து குடுக்க போறீங்களோ கிர்ர்ரர்ர்ர்ர் ]]





 சென்னை : ""இலங்கை பிரச்னை, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளின் நல்லுறவை வளர்க்க வேண்டியது பற்றியும் விரிவாக விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம்,'' என்று, முதல்வர் கருணாநிதி கூறினார்....[[ புதுசா சொல்றாராம் யப்பா நடிப்பு திலகமே, எனக்கென்னமோ இவர் சோனியாகானை மிரட்டுற மாதிரி தெரியுது ]]



ஒரு ஸ்பெஷல் டிஸ்கி : கிரிக்கெட் நடக்கும் போது நம்ம தக்காளி [[விக்கி]] பக்கத்து வீட்டுல உள்ள கிரிக்கெட்டே தெரியாத [[என்னை மாதிரி]] அமெரிக்கன், சைனாக்காரன், ஜெர்மன்காரனை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு கூட்டிட்டு போயி கிரிக்கெட் பார்க்க வைப்பாராம், அவனுகளும் இவர் கும்மி அடிக்கும் போது, அவனுகளும் [[ஒன்னும் புரியாமலேயே]]  சேர்ந்து கும்மி அடிப்பானுகளாம், வேற வழி....??? கிரிக்கெட் முடிஞ்சி பார்த்தா அவனுக மூர்ச்சை ஆகி கிடக்குரானுகளாம் [[ஏன் இந்த கொலைவெறி]]



நன்றி : தினமலர் 

Sunday, April 24, 2011

சந்தேகம்

எனக்கு சில சந்தேகங்கள்....


தமிழனுக்கு பிரச்சினைன்ன உடன் அதற்க்கு பேச்சு வார்த்தை நடத்தவோ, சமாதானம் செய்யவோ காங்கிரஸ் அரசு மலையாளிகளை நியமிப்பது ஏன்...? சமாதானமே ஆகிற கூடாது என்பதற்காகவா...?

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரும் போது, என் நண்பர் [[குளைச்சல் காரர்]] சொன்னார், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப சிதம்பரம் ம்ம்ம்ம் நாடு பெரும் வளர்ச்சி அடையும்னு சொன்னார்!!!! நண்பா இப்போ என்னாச்சு....??? ஸ்பெக்ட்ரம் பற்றிதான் தீர்க்கதரிசனம் சொன்னீரோ...???

கிளார்க்கா வேலை செய்கிறவனுடைய கையில் துப்பாக்கி குடுத்தால் என்ன செய்வான்....??? அதே போலதான், உள்துறை ப சிதம்பரம் கையில்.....!!!!!



 அடுத்து, வாத்தியார் கையில ஸ்கேல் இருக்கலாம், ராணுவம் இருந்தால் என்னாகும்...? 

அதே போலதான் ராணுவ மந்திரி ஏ கே ஆன்டணி...!!!


எல்லாவற்றுக்கும் மேலாக, நுனி நாற்காலியில் நடுங்கிய படி அமர்ந்திருக்கும் பிர்ர்ர்ரர்தமர்.........!!!!



சரி அடுத்த ஆட்சியிலாவது தமிழகத்தில் பவர் கட் ஆவாமல் இருக்குமா....??? 



பீர் விஸ்கி விலை குறையுமா அப்பிடீன்னு ஒரு குடிமகன் கேக்குறான்....???

வளைகுடா நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு வீட்டு லோன் தராமல் ஆயிரம் ஃபார்மாலிட்டி சொல்லி ஓட விடுறாங்களே அது ஏன்...?




தமிழன் பணத்தை தின்னும் ஹீரோக்கள் [[மலையாளி]] வளைகுடா நாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தும் போது, தமிழனை கேகேகேகேவலமா பேசுறாங்களே அது ஏன்...???


மலையாளிகள் தமிழனை "பாண்டி" என்று ஏளனமாக பேசுகிறார்களே, "பாண்டி"யின் உண்மையான அர்த்தம் என்ன....???


டிஸ்கி : படங்கள் எல்லாம் கூகுள்'ல சுட்டது.....

Friday, April 22, 2011

பதிவர் அறிமுகம் 2

சின்ன குழந்தையாக இருந்தபோது நாம் அம்புலிமாமா கதைகள் படிச்சு ரசிச்சிருக்கோம், அதே மாதிரி இப்போ உள்ள சூழ்நிலைக்கேற்ப எளிமையான எழுத்தில் கதை எழுதி அதில் சூப்பரான அறிவுள்ள கருத்துகளை மனதில் பதிக்கும் விதமாக எழுதி வருகிறார் நான் கீழே சொல்லும் பதிவர். 

அவர் எழுத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது எனது அங்கலாயிப்பாக இப்போதும் இருக்கிறது.....!!!! 

அவருடைய பதிவுக்கு எப்போ  நான் கமெண்ட்ஸ் போட்டாலும், உடனே நன்றி சொல்லி மெயில் அனுப்பும் பண்பு எனக்கு இன்னும் அவங்க மீது மரியாதையை ஏற்படுத்தியது....

பாருங்க அவருடைய அறிமுகமே எவ்வளவு அக்கறையாக இருக்கிறது என்று..


எதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், 
வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே
 உங்கள் பாட்டியின் குறிக்கோள்.. 
 இப்படிக்கு 
ருக்மணி சேஷசாயி

இவர்கள் லிங்க் : http://chuttikadhai.blogspot.com/2011/04/65th.html

65th தன் கையே தனக்குதவி

தன் கையே தனக்குதவி.
ஒரு கிராமத்தில் கந்தசாமி  என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப் படித்து வந்தான்.

அவர்களுக்கு அந்த ஊரில் கொஞ்சம் நிலம் இருந்தது. கந்தசாமி அந்த நிலத்தில் பயிரிட்டிருந்தார். நேரம் கிடைக்கும்போது வடிவேலுவும் பயிரைப் பாதுகாக்க வயலுக்குச் செல்வது வழக்கம்.அந்த வருடம் நல்ல மழை பெய்ததால் கந்தசாமியின் நிலத்தில் நல்ல விளைச்சல் கண்டிருந்தது. தினமும் காலைவேளையில் தன் மகன் வடிவேலுவை அழைத்துக் கொண்டு விளைந்து கதிர் முற்றிய பயிரைப் பார்த்துச் செல்வார். வடிவேலுவும் பயிர் பற்றிய கேள்விகளை அவரிடம் கேட்பான் கந்தசாமியும் மகிழ்ச்சியுடன் அவனது கேள்விகளுக்குப் பதிலுரைப்பார்.

      தினமும்வயல் வரப்பில் நின்று இவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்த வயலில் விளைந்த பயிர்களுக்கிடையே ஒரு குருவி கூடு கட்டித் தன் குஞ்சுகளை வளர்த்து வந்தது. தினமும் அப்பாவும் மகனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அந்தக் குஞ்சுகள். மாலையில் வீடு திரும்பும் தங்களின் தாயிடம் வடிவேலுவும் கந்தசாமியும் பேசிக்கொண்டதைச் சொல்லும்.

      அன்று தாய்க் குருவி வழக்கம்போல இரை தேடப் புறப்பட்டது. புறப்படும் முன் தன் குஞ்சுகளிடம் அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதைக் கவனித்துத் தன்னிடம் கூறும்படிக் கூறிவிட்டுச் சென்றது. வழக்கம்போல கந்தசாமி தன் வயலுக்கு வந்து பார்வையிட்டார். 

      அந்த வயல் முழுவதும் கதிர் முற்றித் தலை சாய்ந்திருந்தது. கந்தசாமி தன் மகனைத் திரும்பிப் பார்த்தார்.
"வேலு, நம்ம வயலில் கதிர் முற்றித் தலை சாய்ஞ்சிடுச்சு. இனிமேல் அறுவடை செய்திடலாம். நீ நாளைக்கு நம்ம கதிரை அறுக்க ஆளுங்களைக் கூட்டி வந்துடு." என்று கூறியபோது வடிவேலுவும் "சரி அப்பா" என்று கூறினான். 

அன்று மாலையில் தங்களின் தாய்க் குருவி வந்தவுடன் குஞ்சுகள் கீச் கீச்சென்று கத்தித் தங்களின் அச்சத்தைத் தெரிவித்தன. செய்தி என்ன என்று கேட்டபோது குஞ்சுகள் அழுது கொண்டே அறுவடை நடக்கப் போவதைத் தெரிவித்தன.

அந்தத் தாய்க் குருவியோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தன் குஞ்சுகளுக்கு தைரியம் கூறிற்று."குழந்தைகளே, நிலத்துக்கு உரியவர் தன் மகனிடம் தானே சொல்லியிருக்கிறார். நீங்கள் பயப்படாமல் இருங்கள்."

சமாதானம் கூறிய தாய்க் குருவி மீண்டும் மறுநாள் இரைதேடப் புறப்பட்டது.அன்றும் கந்தசாமி வயலுக்கு வ்ந்தார்.
தன் மகனைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார்."வேலு, நாளைக்கு நீயே போய் ஆட்களை அறுவடைக்குக் கூட்டிவா." என்று கடுமையாகக் கூறினார்.அவனும் "சரி அப்பா" என்று அச்சத்துடன் பதிலளித்தான்.

அன்று மாலை வழக்கம்போலத் தாய்க்குருவி தன் கூட்டிற்கு வந்தது. அன்றும் கந்தசாமியும் வடிவேலுவும் பேசிக் கொண்டதைக் கூறின குஞ்சுகள்.அவற்றைப் பார்த்துத் தாய்க் குருவி "பயப்படாதீர்கள். அவர் அறுவடை செய்ய மாட்டார். அவர் அறுவடை செய்வதாகத் தெரிந்தால் நான் வீடு மாற்றிவிடுவேன்." என்று கூறித் தைரியமாக இருக்கும்படிக் கூறியது தாய்க் குருவி.

மறுநாள் காலையும் இரைதேடப் புறப்பட்டது தாய்க் குருவி. வழக்கம்போல கந்தசாமி என்ன பேசுகிறான் என்பதைக் கேட்டுத் தன்னிடம் கூறும்படி கூறிச் சென்றது தாய் குருவி. அன்று கந்தசாமி வடிவேலுவுடன் வராமல் தனியே வ்ந்தார். கதிர்கள் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டார்.

பின் தனக்குள் பேசிக் கொண்டார்."சே, என்ன பையன் இவன். ஒரு ஏற்பாடும் செய்யாமல் விட்டு விட்டானே. இனி அவனை நம்பிப் பயனில்லை.நாமே களத்தில் இறங்கவேண்டியதுதான்." என்று புலம்பியவாறே வீடு நோக்கி நடந்தார்.  

மாலையில் வீடு திரும்பிய தாய்க் குருவியிடம் குஞ்சுகள் முறையிட்டன. நாளைக்கு அவரே களத்தில் இறங்கப் போகிறார். இச் செய்தியைக் கேட்ட தாய்க் குருவி" நான் வேறு இடம் பார்த்து வரும் வரை பத்திரமாக இருங்கள். நாம் வேறு வீடு கட்டிக்கொண்டு போய்விடலாம்." என்று கூறிச் சென்றது.

இப்போது வேறு வீட்டுக்குக் குடிவந்து விட்டது அந்தக் குருவிக் குடும்பம். அப்போது அந்தக் குருவிக் குஞ்சுகளில் சற்று கெட்டிக்காரக் குஞ்சு கேட்டது."அம்மா, மூன்று நாட்களாக இடம் மாற்றாத நீ இப்போது மட்டும் ஏன் மாற்றினாய்." 

"அதுவா, மூன்று நாட்களாக அந்த முதலாளி மற்றவர் உதவியை நாடினார். அதனால் அவர் வேலை நடக்காது என்று தெரிந்து  கொண்டேன். ஆனால்  இப்போது தானே அந்த வேலையைச் செய்வதாகக் கூறியபோது இனி அந்தவேலை முடிந்துவிடும் எனப் புரிந்து கொண்டேன். இனியும் நாம் அங்கிருப்பது நமக்கு ஆபத்து அதனால் வேறு பாதுகாப்பான இடத்தைத் தேடி வந்துவிட்டேன்."

"அம்மா, தன் கையே தனக்குதவி என்பதை அந்தப் பெரியவர் இப்போது புரிந்து கொண்டிருப்பார் இல்லையா?" என்று கூறிச் சிரித்தது அந்தப் பொல்லாத புத்திசாலிக் குருவி.

தாய்க் குருவியும் சிரித்தபடியே "அவர் புரிந்து கொண்டாரோ இல்லையோ நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்"என்று கூறித் தன் குஞ்சுகளை அணைத்துக் கொண்டது.


டிஸ்கி : உங்கள் கனிவான ஆதரவு கிடைத்தால் இன்னும் தொடருவேன்....


Thursday, April 21, 2011

இலவசம்






VS



#
#

#

#

#

#

*

#

#

#

#



டிஸ்கி : இது என் நண்பன் அணில் அண்ணன் அனுப்பிய ஈமெயில்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!