நான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உண்மையா வதந்தியா தெரியாது]] அதாவது சவுதியில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய ஒரு மலையாளியின் லக்கேஜை சோதனை செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள்,
லக்கேஜினுள் தங்கம் இருப்பதாக கருவி காட்டி குடுக்க, மலையாளியிடம் கேட்டபோது தங்கம் இல்லவே இல்லை என்று சொல்ல, லக்கேஜ் பிரிக்கபட்டது. பிரிச்சு பார்த்தால் தங்கம் இல்லை. சரின்னுட்டு மறுபடியும் பாக்ஸை திரும்ப கட்ட சொல்ல மலையாளியும் திரும்ப கட்டினான்.
மறுபடியும் கருவி சோதனையில் பீப் பீப் சவுண்ட் வர, மறுபடியும் பிரிக்க சொன்னார்கள். மறுபடியும் நன்றாக சோதனை செய்தார்கள். ஒன்றுமே இல்லை. மறுபடியும் பெட்டியை கட்ட சொன்னார்கள். மறுபடியும் கருவி பீப் பீப்.......
மறுபடியும் பெட்டியை அவிழ்க்க சொன்னார்கள், அவிழ்த்து உள்ளே இருந்த பெரிய பெரிய சோப் கட்டிகளை அறுத்து பீஸ் பீசாக்கி சோதனை செய்தும் உஹும் ஒன்றுமே இல்லை. மறுபடியும் பெட்டியை கட்ட சொன்னார்கள், ஹி ஹி மறுபடியும் பீப் பீப்....
இப்பிடி பல முறை சோதனை செய்தும் தங்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை [[மலையாளியா கொக்கா]] ஒரு கஷ்டம்ஸ் ஆபீசர் [[நம்ம உணவு ஆபீசர் அல்ல]] மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சார், மலையாளியிடம் விசாரித்தார்.
ஹலோ சேட்டன் உங்க லக்கேஜ்ல கண்டிப்பா தங்கம் இருக்கு ஏன்னா மிஷின் [[அசின் அல்ல]] பொய் சொல்லாது என்று வடிவேலு ரேஞ்சுக்கு அழாத குறையாக கேட்டும் சேட்டன் அசரவில்லை.
பின்பு அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து செட்டனிடம் சொன்னார்கள், சேட்டன் நீ நிச்சயமா தங்கம் கடத்துகிறாய் என்பது நல்லாவே தெரியுது, அதனால எந்த டெக்னிகல அயிட்டத்தை உள்ளே வச்சிருக்குறேன்னு சொன்னா உன்னை விட்டுர்றோம் [[தங்கத்தையும்தான்]] என்று அழ...
உஷாரான சேட்டன், அப்போ கஸ்டம்ஸ் எவரிதிங் கிளியர் பேப்பர்ல கையெழுத்து போட்டு தாருங்கள் என கேட்க, ஆபீசரும் சைன் போட்டு கொடுத்தார். அப்புறமா பெட்டி பக்கம் வந்த சேட்டன், பெட்டியை அவிழ்த்து, பெட்டி கட்டிய பிளாஸ்டிக் கயிறை அறுத்து காட்ட.....உள்ளே பிளாஸ்டிக் கயிறுக்குள் தங்கம் நம்ம எலக்ட்ரிக் ஓயருக்குள் இருக்குமே அப்பிடி இருந்ததாம்...!!!
சரி எப்பிடி பெட்டியை பிரித்து சோதனை செய்யும் போது கருவிக்கு தெரியாம போச்சு...??? அங்கேதான் நிக்குறார் நம்ம சேட்டன்... ஹி ஹி. அதாவது ஒவ்வொரு முறையும் பெட்டியை அவிழ்க்கும் போதும், அந்த பிளாஸ்டிக் கயிறை சேட்டன் அப்பாலிக்கா தூக்கி போட்டுடுவார். பின்னே எப்பிடி கருவிக்கு தெரியுமாம் ஹே ஹே ஹே ஹே பெட்டியை கட்டும் போது மட்டுமே சேட்டன் கயிறை அப்பாலிக்கா இருந்து எடுத்து கட்டுவார், கருவி "ங்கே"....!!!!
டிஸ்கி : இது காதில் கேள்வி பட்டு சுவாரஸ்யமா நண்பர்களுக்குள் பேசிகொண்டிருப்போம்...!!!
டிஸ்கி : நேரில் பார்த்த இன்னும் பல டக்கால்டி'கள் உண்டு, ஒன்னொன்னா சொல்றேன் என்ன...!!!