Wednesday, January 29, 2014

தொட்டால் தொடரும் கொஞ்சம் ரிலாக்ஸ்...!

என்னடா ஒரே தொடரா எழுதிகிட்டு இருக்கானேன்னு நினைச்சிராதீகப்பூ, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு தொடரலாம் சரியா ? [[நோ நோ பேச்சு பேச்சாத்தான் இருக்கோணும்]]

@சின்னதா விரலை வெட்டி போட்டுகிட்டு, ஹேண்டிகேப் என்று சொல்லி அரசாங்க சலுகை வேலை பெற்றவங்களும் இருக்காங்க, உண்மையாகவே ஹேண்டிகேப் ஆளுங்க அந்த அரசாங்க வேலைக்கு அப்ளை செய்து, காலம் காலமாக காத்து இருக்குறவங்களும் இருக்காங்க...!

@ஊருல நிலத்தை விற்று பிசினஸ் பண்ணலாம்னு பணம் கொண்டு இங்கே [[பஹ்ரைன்]] வந்த பங்களாதேசி ஒருவன், ஒரே நாளில் இந்தியன் டிஸ்கோவில் ஒரு நடன அழகிக்கு மாலை போட்டு மொத்தப் பணத்தையும் இழந்து நிற்பதை பார்த்தபோது, ஒரு மனிதனின் நிலைமை ரெண்டு மணி நேரத்தில் மாறி விடுவதை பார்க்கும் போது மனதில் ரணம்...!

@ஒரு மலையாளி நண்பனை பங்களாதேஷ் நபர் ஒருவன் கோபப்படுத்திட..

"ப்போ குத்தா"க்காப் பட்டி...பில்லி"க்கா பூச்ச.....ன்னு திட்டினானே பார்க்கனும். விழுந்து விழுந்து அந்த சூழ்நிலையிலும் நான் சிரிச்ச சிரிப்பை பார்த்து கோபப்பட்ட நண்பனும் அலறி சிரிக்க, சமாதானம் நிலவி விட்டது.

ஹிந்தியில் குத்தா என்பது நாய், மலையாளத்தில் பட்டி என்றாலும் நாய்"தான்  [[குத்தாக்கா பட்டி]], ஹிந்தியில் பில்லி என்றால் பூனை, மலையாளத்தில் பூச்ச என்று சொல்வார்கள்...!

@கேரளாவில், பேஸ்புக்கில் தனது போட்டோக்களை கேவலமாக வெளியிட்டவனை சைபர் கிரைமில் புகார் குடுத்தும் போலீஸ் ஏற்காததால், கோர்ட் போயி அங்கும் நியாயம் கிடைக்காமல் விஜிதா என்கிற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தற்போதைய தகவல்படி, அந்த போலீஸ் எஸ் ஐ சஸ்பென்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.

நீதி : தோழிகளே, சகோதரிகளே கவனமாக இருங்கள்.

@இங்கே வேலை செய்யும் மனோ'ஜ் என்னும் ஆளு நல்லவனா கெட்டவனான்னு பொண்ணை கட்டி கொடுக்கும் மாப்பிளைகிட்டேயே வந்து விசாரிச்சது என்கிட்டே மட்டும்தான்னு நினைக்கிறேன்...!

"அவனைப் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு வாங்க காப்பி சாப்புட்டுட்டே சாவகாசமா பேசுவோம்"ன்னுட்டு

காப்பி வரவச்சு குடிக்க வச்சிட்டு, "அதோ அந்த பையன் மனோஜ் பற்றி வெவரமா சொல்லுவான்னு சொல்லிட்டு நான் கேஷ் கவுண்டரில் போயி [[மும்பை ஏர்போர்டில் அப்போது வேலை]] உட்கார்ந்தேன்.

அவனிடம் இவர்கள் விவரம் கேட்க...அவன் என்னைப் பார்த்த பார்வையில் சீவலப்பேரி ஆளுங்களுக்கு விஷயம் புரிஞ்சிருச்சு போல...

எங்கடா முதுகுல இருந்து அருவாளை உருவப் போறானுகளோன்னு வாசல் பக்கமா கண்ணோட்டமாகவே இருந்தேன் [[எல்லாம் ஓடுறதுக்குதான்]]

என் நண்பனை "தம்பி நீங்க போங்க"ன்னு அவனை அனுப்பினாங்க, எனக்கு கால் கிடுகிடு...

காப்பி குடிச்சுட்டு முறைச்சு பார்த்துட்டு வந்த மாதிரியே தோணுது எனக்கு, நடுங்கிட்டு எழும்பி நின்னேன்...

பக்கத்துல வந்ததும் படார்ன்னு என் கையை பிடிச்சுட்டு "எலேய் மாப்பிளேய் மன்னிச்சிருலேய்..ஊர்ல இருந்து உங்க கல்யாணத்துக்குதான் வந்துருக்கேன், நான் பொண்ணோட சின்னைய்யா..உம்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சிலேய் மாப்பிளேய்...வந்ததும் உக்காரவச்சி காப்பி வாங்கி குடுத்துட்டு பேசுனீகளே அது நம்ம குடும்பத்துக்கே ஒத்துப்போகும் பண்பு...சந்தோசம்... கல்யாணத்தன்னைக்கு சந்திப்போம் என்ன"

சும்மா விட்டுருவோமா என்ன ? மும்பை ஏர்போர்ட் முழுவதையும் அருவாள் மச்சான், மாமன்மார்களுக்கு இலவசமா சுற்றிக் காட்டி அனுப்பினேன், மனம் குளிர்ந்து போனார்கள்...!


Monday, January 27, 2014

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...தொடர்...

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....தொடர்.. மூன்றாம் பாகம்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...தொடர்...நான்காம் பாகம்.

கார் கோவளம் நோக்கி சீறிப் பாய்கிறதுன்னு நினச்சிட்டு இருந்த எனக்கு, வண்டி "மேடு" பள்ளம்"ன்னு சிறிய சாலையில் கரடு முரடா போயிகிட்டு இருக்கு, ஒ ஷாட் கட்டா போறாங்க போலன்னு நினச்சிட்டு இருந்ததும் கார் ஒரு இடத்தில் நின்றது.
[[விஜயன் மற்றும் சுதன், ஆட்டோவுக்காக வெயிட்டிங்]]

ஒரு தெரிந்த ஆட்டோக்காரர் வந்தார், மணிகண்டனும், செட்டியாரும் அதில் கிளம்பி போனார்கள்...நானும் விஜயனும், ஆபீசரும், சுதனும் காரில் இருந்து கீழே இறங்கி பேசிக் கொண்டும் போட்டோக்கள் எடுத்த வண்ணமாக இருந்தோம்.

கொஞ்ச நேரத்தில் அந்த ஆட்டோ மட்டும் திரும்பி, ஒரு "உருவ" ஒற்றுமை வைத்து ஒரு நபரைக் கூப்பிட...அந்த நபரும் ஆட்டோவில் கிளம்பிப் போனார்...போனவர்கள் திரும்ப நேரமானதால், அருகே வீடுகளில் வசிப்பவர்கள் சந்தேகப் படக்கூடாது என்று [[கேரளா ஆச்சே கேக்கவா வேண்டும் ?]] கார் ரிப்பேர் ஆனது போல பாவ்லா செய்து கொண்டிருந்தோம்.
[[ஆயுர்வேதிக் மசாஜ் எப்பிடி இருக்கும் என்ற சிந்தனையில் இருக்காரோ விஜயன் ? டிரைவர் மற்றும் சுதன்]]

கேரளா தலைநகரில் ச்சூச்சூ போறதுக்கு ஒரு கக்கூசும் இல்லாததால் சுதன் கார் பக்கத்துலேயே தன கடமையை நிறைவாக செய்து முடித்தார்.

நானும் விஜயனும் அப்பாலிக்கா கொஞ்சதூரம் நடந்து, செடிகளுக்கு ஜல உரம் கொடுத்து வந்தோம், அங்கே வீடுகள் நெருக்கமாக இல்லாமல் மிகவும் தள்ளி தள்ளியேதான் இருக்கிறது, கேரளா மக்கள் எப்போதும் செடி கொடி மரங்கள் சூழவேதான் வாழ்கிறார்கள், வீட்டையும் அப்படியே வைத்துள்ளார்கள்...! ரொம்ப நேரமா போனவிங்களைக் காணோம், சுதன் கடுப்பாகிட்டே இருக்கார் [[நானும்தான் ஹி ஹி...]]

அப்பாடா ஒருவழியா ஆயுர்வேதிக் மசாஜ் முடிஞ்சி வந்தாங்க பாருங்க, அவங்க எங்களை நெருங்கியதும் குப்பென்று ஆயுர்வேதிக் தைலக் கலவையின் மணம் நாசியை துளைத்தது, நம்ம செட்டியார் நான்கு கையால் அங்கே பரதம் ஆடியதாக [[?]] மணிகண்டன் அவரை கலாயித்து கொண்டே வந்தார்.
சரி இனி மனோ அண்ணனை கோவளம் பீச் பக்கம் ஸ்பெஷலா கூட்டிட்டு போவோம்னு சுதன் வண்டியை கிளப்ப சொன்னார், [[இங்கே கொஞ்சம் சென்சார் இருக்கு]] போற வழியிலேயே என்னையும் சுதனையும், மணிகண்டனையும் இறக்கி விட்டுட்டு ஆபீசரும், விஜயனும் போய்விட...

யோவ் சுதன் என்னைய்யா இது"ன்னு கேட்டேன், அவங்க கோவளம் பீச் போறாங்க, அப்போ நாம ? நாம வேறொரு பீச்சிக்கு போறோம் அண்ணே வாங்க..
[[கிளுகிளுப்பாக ஆட்டோவில் மணிகண்டன்]]

இனி வேற ஒரு ஆட்டோ பிடிச்சு இன்னொரு பீச்சிக்கு வண்டி கிளம்புச்சு [[பீச் பேரு மறந்து போச்சு]] ஒரு இருபது நிமிட நேரப்பயணம்....அந்த ஆயுர்வேதிக் ஹாஸ்பிட்டல் முன்பு என்னையும் சுதனையும் இறக்கி விட்டுட்டு, மணிகண்டன் போயிட்டார்.


[[ஆட்டோ வந்து யூ டர்ன் அடிக்குது, ஆபீசருக்கு இடைவிடாமல் அண்ணியின் போன் வந்துட்டே இருக்கு...ஆஹா...]]

உள்ளே போனதும் ஒரே தைலம் வாசனை...என்னமோ...புத்துணர்ச்சி தந்து கொண்டிருந்தது, டாக்டர் இன்னும் வரவில்லை என்றார்கள், கொஞ்சம் வெயிட்...டாக்டர்கள் வர........அவசரமா படபடப்பாக இருக்கும்போதே விக்கி"யும், கேசவப்பிள்ளையும் கான்பரன்ஸ் கால்"ல வாராங்க அண்ணே உங்க கூட பேசணுமாம்"ன்னு சுதன் போனை தர..."யோவ்...எந்த இடத்துல எப்பிடி... படபடப்பா உக்காந்துட்டு இருக்கோம்ன்னு தெரியாம, பிஸின்னு போனை கட் பண்ணும்ய்யா டாக்டர்ஸ் வந்தாச்சு..."

பணம் பே செய்து விட்டு ஆளுக்கொரு அறையில் போனோம்...அங்கே....? தடவும் ஸாரி தொடரும்.....!

Wednesday, January 15, 2014

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...தொடர்...

 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...! தொடர்......இரண்டாம் பாகம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....தொடர்.. மூன்றாம் பாகம்

அடுத்தநாள் காலையில் வாக்கிங் போவதற்காக கிளம்பினோம், செட்டியார் புலம்பிகிட்டே இருந்தார் சுதனிடம், வாக்கிங் போறதுக்கு பேன்ட் போடப்போன ஆபீசர டவுசர் போட வச்சி கிளம்பினோம்.
[[திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் முன்பு சுதன்]]

கீழே ஒரு டீ'கடை இருக்க, டீ சாப்பிட சென்றோம் அங்கே பலகாரங்களும் இருக்க, டீ ஆர்டர் பண்ணி விட்டு நிற்கும் போதுதான் சுதன் சொன்னார், இன்னைக்கு நாம கோவளம் பீச் போறோம் அங்கே ஆயுர்வேதிக் மசாஜ் செய்யப் போறோம்ன்னு சொன்னதுதான் தாமதம், செட்டியார் கண்கள் அகன்று ரெண்டு வடையை கையில் எடுத்தார், அது வரை வடை வேண்டாம்ன்னு சொன்னவர்.

[[வெரசா வாங்கய்யா மசாஜ் போகனும்ல்ல, சுதன்]]

வடையை எடுத்தவர் உடனே சாப்பிடவில்லை வாக்கிங் போகும் போது கையிலேயே வைத்துருந்தார், "உலகிலேயே கையில் வடையை வைத்துக் கொண்டு வாக்கிங் போனவர் செட்டியார் மட்டுமே" [[அவ்வ்வ்வவ்]]
[[ஆத்"தீ"..... கையில் வடையுடன் செட்டியார் வாக்கிங்..]] 

திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் வழியாக வாக்கிங் போகும் வழியிலேயே செட்டியார் ஒரே தொனதொனப்பு சுதனிடம், மசாஜ்ல என்ன என்ன ஸ்பெஷல் உண்டு ? அது இது என்று கேட்டுக் கொண்டே வந்தார், சுதன் கொஞ்சம் வேகமாக போனதும் தொனதொனப்பு விஜயன் பக்கமா மாறிடுச்சு.
[[மெடிக்கல் காலேஜ் பக்கம் ஒரு பைக் மற்றும் ஸ்கூட்டர் ஷோ கிரவ்ண்ட்]]

மாறி மாறி போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம், திரும்பிய போது எல்லாரும் ஒரு சூப்பர் மார்கெட்டின் உள்ளே நுழைந்தார்கள், நானும் என்னடான்னு உள்ளே போனேன், என்னத்தையோ "பலமாக" தேடினார்கள், நானும் பராக்கு பார்த்துட்டு நின்னேன்.
கொஞ்ச நேரம் ஆகியும் அவர்கள் தேடிய பொருள் கிடைக்கவில்லை போல, அந்த பொருள் இருக்கும் இடத்தில்தான் நான் நிக்குறேன், கடையை மொத்தமாக சுத்தி வந்த செட்டியார், என் பக்கம் வர, என்னய்யான்னு கேட்டதும் அந்த பொருளை சொன்னார், ஷாக்"கான நான் அதோ இருக்குன்னு சொன்னதும் படார் என்று எடுத்தார் பாருங்க என்னா வேகம் என்னா வேகம்...
[[டைரக்டர்கள் கவனத்திற்கு.... சுதன் வில்லனுக்கும் பொருந்துவார் காமெடிக்கும் பொருந்துவார் போட்டோ ஷெசனே தேவையில்லை செம பேஸ் கட்......... ஆனா இவர் போட்டுருக்கது என் கண்ணாடி இல்லை ஹி ஹி]]

அப்புறம் காலை கடன்கள் யாவும் முடித்து காரில் கிளம்பினோம், மணிகண்டன்தான் எங்களை வழி நடத்தி செல்லும் சாரதி, போகும் வழியில் தாக சாந்தி செய்ய ஒரு பாரில் போக முடிவானதும், கார் ஒரு பார் அருகில் பார்க் செய்யப்பட, விஜயனும், ஆபீசரும் காரில் இருந்து கொள்ள, நாங்க நான்கு பேரும் பாரில் ஏறினோம்.
[[பொசுக்கு பொசுக்குன்னு போன் வருதுய்யா ஆபீசருக்கு...அண்ணியா  இருக்குமோ ?]]

வெளியில் இருந்து பார்க்க ஏதோ சினிமா தியேட்டர் போல இருந்த பார், உள்ளே கேரள மொடாக் குடிகாரர்களின் கொட்டாரமாக இருக்கிறது , எந்த அயிட்டமாக இருந்தாலும் டோக்கன் கவுண்டரில் டோக்கன் வாங்கி பார்"மேனிடம் கொடுத்துதான் அயிட்டம் வாங்க வேண்டும்.
[[கோவளம் எந்த வழியா போகணும்ன்னு ரோசிக்கிறார் ச்சே யோசிக்குறார் விஜயன்]]

ரெண்டு லார்ஜ் ஏற்றிக்கொண்டு கூலி வேலை செய்துவிட்டு, அடுத்தும் உடனே வந்து  ரெண்டு லார்ஜ் ஏற்றிக் கொண்டு போகும் குடிமகன்கள், அடுத்து அங்கே குடிப்பவர்களிடமே பிச்சை எடுத்து குடிக்கும் பாவங்கள், டேபிள் மேஜை எல்லாம் பகல் குடிகாரர்கள் [[ஹி ஹி]] நிரம்பி வழிகிறார்கள்...!

தாகம் தீர்ந்து காரில் ஏறி........... ஆயுர்வேதிக் டாக்டரை பார்க்கும் வேகத்தில் கார் சீறியது கேரளாவின் தலைநகரில்.....!!!

.சொல்றேன்....

Sunday, January 12, 2014

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....தொடர்....

 கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.

 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...! தொடர்......இரண்டாம் பாகம்

கார் போகுது போகுது போயிகிட்டே இருக்கே"ன்னு நினச்சிட்டே இருக்கும் போது சுதனுக்கு போன் வர, மேக்கரையில்தான் ரூம் கிடைக்கவில்லை என்றால், திருவனந்தபுரத்திலும் ஹோட்டலில் ரூம் [[நாங்கள் எதிர்பார்த்த]] கிடைக்கவில்லை என தெரியவர, பின்பு சுதன் மற்றும் ஆபிசரின் நண்பர் மணிகண்டன் அவர்கள் அப்பார்ட்மென்ட் பிளாட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ரெண்டு பெட்ரூம் கொண்ட பிளாட் அது திருவனந்தபுரம் மெயின் ரோட்டுலேயே அழகாக இருக்கிறது, நாங்கள் அங்கே போனதும் உற்சாகமாக எங்களை வரவேற்றார், பழைய நண்பன் போலவே பரஸ்பரம் பேசிக்கொண்டோம், அவர் தாடி சூப்பர்...
[[பூட்டப்பட்ட ரூம் அடுத்தநாள் திறந்தபோது ஒரு கிளிக்]]

அவரவர் உடைகளை களைந்து விட்டு சற்றே ரிலாக்ஸ் ஆனோம், சாப்பாடு பந்தி பரிமாறும் போதுதான் பல விஷயங்கள் பேசப்பட்டது, பிளாட்டில் ரெண்டு பெட்ரூம்னு சொன்னேனில்லையா ? அதுல ஒரு ரூம் பூட்டி கிடக்க, என்னய்யா மணிகண்டன் அந்த ரூம் பூட்டி கிடக்கே என்ன சமாச்சாரம் என்று ஆபீசர் கேட்க....
[[மணிகண்டன் மற்றும் விஜயன்]]

"அது" வந்து.....அந்த டோர் லாக்காகி திறக்க மாட்டேங்குது, நாளைக்கு கார்பெண்டரை கூப்பிட்டு சரி பண்ணனும் என்றார், சுதன் நம்பவே இல்லை, திடீர்ன்னு நாம வந்ததால அயிட்டத்தை ரூமுக்குள்ளே வச்சி மணிகண்டன் பூட்டிவிட்டதாக சொல்ல, முதல் பலி ஆடு மணிகண்டன் ஆனார்.
 
[[சுதன் மற்றும் செட்டியார்]]

ரூமை திறந்து அயிட்டத்தை காண்பி என்று ஒரே கோஷம்.....அப்பிடியே மேட்டர் "அந்த" விஷயத்திற்கு தாவியது, ஆயக்கலை அறுபத்து நான்கு'தானே உங்களுக்கு தெரியும் ? எங்களுக்கு எழுபத்து நான்கு கலைகள் தெரியுமே [[எங்களுக்குன்னு என்னை எதுக்கு ஓய் கை காட்டுநீரு அவ்வவ்]] என்று சொல்ல, மொத்த நண்பர்களும் செட்டியாரை ஆ....... எனப் பார்க்க...

அவரு சொன்னாரு பாருங்க....... "நீங்கெல்லாம் வெறும் மாவுதான், அதுல வெறும் தோசைதான் போடுவீங்க, நாங்க [[மறுபடியும் என்னை எதுக்குய்யா கை காட்டுதீரு]] அப்பிடியில்ல, மாவுல தக்காளி போட்டு தக்காளி தோசை பண்ணுவோம், வெங்காயம் போட்டு வெங்காய தோசை பண்ணுவோம், தேங்காய் போட்டு "தேங்காய்" தோசை பண்ணுவோம், வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு மிக்ஸ் தோசை பண்ணுவோம்...."ன்னு அடிக்கிகிட்டே போக மொத்தபேருக்கும் தலை கிரர்ர்ர்ரர்ர்ர்ர்......
[[ஆவேசமாக ஆபீசர் போனில்]]

செமையா சிரிச்சு சிரிச்சு உருண்டோம், பல பல பேச்சுகள் என நேரம் போவது தெரியாமல் ஜாலியானோம்......அப்புறம்தான் சுதன் சொன்னார், மனோ அண்ணே...நீங்க பார்க்க வேண்டிய இடம் [[கண்டிப்பாக]] நாளை காலையிலதான் இருக்கு என்று உசுப்பேத்த....

அடுத்த நாள் காலையில போகவேண்டிய இடத்தை சொன்னதும் நம்ம செட்டியார் வாக்கிங் போனபோது ரெண்டு வடையை பத்திரமாக கையில் கொண்டு வந்ததையும்.....

சொல்றேன்.....


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!