Sunday, May 26, 2013

முக்கிய செய்தி முக்காத செய்தி...!


கூப்பிட்டாளேன்னு நண்பி வீட்டுக்கு போனவன் பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி வந்தான், என்னடான்னா...ஆத்தீ எம்மாம் பெரிய நாய் வளர்குறா அவ"ன்னு சொல்றான் [ஹா ஹா ஹா ஹா செத்தான் கொமாரு]] 
----------------------------------------------------------------------------------

முக்கிய செய்தி முக்காத செய்தின்னு போட்டு எதுக்குடா எங்களை கொல்லுறீங்க...?

வலைத்தளங்களில் மிதி வாங்கிய அம்மிணிக்கு பெரிய நட்சத்திரம் பாட சான்ஸ் குடுத்துருக்காராம்...!
--------------------------------------------------------------------------------

உன்கிட்டே உதவி கேட்டா ஒன்னு ஓகே சொல்லணும் இல்லைன்னா முடியாதுன்னு சொல்லணும் அதை விட்டுட்டு அதோ அவன்கிட்டே கேளுன்னு சொல்லுற நண்பனை பக்கத்தில் ஒட்ட விடாமல் இருப்பது மனுஷனுக்கு அழகு, என்னா நான் சரியாதான் பேசுறேனா...?
--------------------------------------------------------------------------------
கை நனையாம மீன் பிடிக்கனும்னா நடக்குற காரியமா...? ஆனாலும் கை நனையாமல் மீன் பிடித்து தின்று விட்டு பி ஏ"வை மாட்டி விடுறவன் அரசியல்வாதி.
-------------------------------------------------------------------------------
மக்களே நல்லா நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இலங்கை தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிவிட்டு பின்னாலேயே இலங்கையில் தன் வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்கள் கேடி பிரதர்ஸ், தேர்தல் வருகிறது இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
------------------------------------------------------------------------------

பெண்கள்தான் மிஸ் கால் குடுத்து கொல்றாயிங்கன்னா இப்போ ஆண்களும் மிஸ் கால் குடுத்து கொல்றானுக ராஸ்கல்ஸ்....
-----------------------------------------------------------------------------

எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீர் ஒரு அருமருந்து [[அந்த தண்ணி இல்லீங்கோ]] ஆண்டவனின் படைப்போ படைப்பு...!
---------------------------------------------------------------------------
"திமுக என்றாலே எதுக்கு சார் இம்புட்டு கடுப்பாகுறீங்க நீங்க...?"

"நெஞ்சிக்கு நீதி" நான்கு பாகத்தையும் படியுங்க உங்களுக்கே தானாக புரியும் எழுத்துக்கும் இவிங்களுக்கும் என்ன சம்பந்தம்னு" சொன்னேன்.
-----------------------------------------------------------------------------

மேனேஜ்மென்ட் தொழிலாளியை பற்றி சிந்திக்காமல், மெனெஜ்மெண்டை பற்றியே சிந்திக்கிறது, தொழிலாளியும் இப்போ உஷார் ஆகி, தொழிலாளியைப் பற்றி சிந்திக்குது ஆனால் மேனேஜ்மென்ட் தொழிலாளியும் மேனேஜ்மென்ட் பற்றி சிந்திக்கனும்னு சொல்லுது...என்ன எளவோ ஒரு மண்ணும் புரியல...!

மன்மோகன் சிங் மாதிரி ஏதாவது ஆ[ப்]ஃபர் கிடைத்தால் நலமாக இருக்கும் ஹி ஹி...
-------------------------------------------------------------------------

வாக்கிடாக்கியில சார்ஜர் தீர்ந்தது தெரியாம ஒரு இஞ்சினியரை கூப்பிட்டு கூப்பிட்டு சிக்னல் கிடைக்காம திட்டிட்டு இருக்கான் இன்னொரு இஞ்சினீயர், போயி ரெண்டு கொட்டு கொடுத்து சொன்னால்...ஹி ஹி..ன்னு சிரிக்கிறான் அடங்குங்கடா...
-----------------------------------------------------------------------
எங்க ஹோட்டலில் வேலைப் பார்க்கும் ஒரு டிரைவர் ஒரு கோடி ரூபாய்க்கு வீடு கட்டிக்கொண்டு இருக்கிறான், ஒரே ஒரு பெண் பிள்ளை இருக்கு ம்ம்ம்ம்ம் மாப்பிளை கொடுத்து வச்சவன், நாங்களும்தான் இத்தனை வருஷமா வெளி நாட்டுல இருக்கோம், நியாயத்துக்கு வாழ்க்கை இல்லை.

நிர்வாண உலகத்துல நாமதான் கோமணம் கட்டிகிட்டு திரியுறோம் என்னாத்தை சொல்ல போங்க...!

அன்புடன்..
நாஞ்சில்மனோ 

Monday, May 20, 2013

பதிவரிடம் மிதி வாங்கிய பிரபல பதிவர்கள்...!

விக்கியும், சிபி'யும், மனோ'வும் அக்கரைக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்கவேண்டி வந்தது, அங்கே ஆற்றங்கரையில் அழகிய பெண்ணொருத்தி தன்னையும் ஆற்றை கடக்க உதவ வேண்டும் என்று சொல்ல, சிபி'யும், விக்கியும் மறுத்து விடுகிறார்கள் "இது எங்கள் பிளாக்கர் தர்மத்திற்கு எதிரானது" என்று.

ஆனால் மனோ'வோ அந்தப் பெண்ணை தோளில் சுமந்து கரையேற்றுகிறான். பயணத்தின் போது இந்த இருவரும் மனோ'வை கேள்வி கேட்டபடியே வருகிறார்கள்.
இரவானதும் ஒரு சத்திரத்தில் தங்குகிறார்கள், இரவு இரண்டு மணிக்கு சிபி எழும்பி மனோவை எழுப்பி கேள்வி கேக்குறான் "என்ன இருந்தாலும் நீ அந்த பொண்ணை தோளில் சுமந்திருக்கக் கூடாது" என்கிறான்.

அடுத்து மூன்று மணிக்கு விக்கி எழும்பி மனோவை எழுப்பி "என்னதான் இருந்தாலும் நீ அந்த பொண்ணை சுமந்து இருக்கக் கூடாது" என்கிறான்.

பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிபிக்கு மனோ ஓங்கி ஒரு மிதி கொடுக்க, அலறி எழும்புகிறான், விக்கிக்கு அடுத்த மிதி விழும் என தெரிந்ததும் சுவரோடு போயி ஒட்டி கொள்கிறான்.

"ஏன்டா நாதாரிகளா நான் அந்த பொண்ணை சுமந்ததை கரையில் இறக்கி விட்டேன், ஆனால் நீங்கள்தான் அந்த பொண்ணை இப்பவும் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள் நான் எப்பவோ இறக்கி வச்சாச்சு போங்கடா வெண்ணைகளா போயி தூங்குங்க"

சத்திரம் அமைதியாகிறது.

இது ஒரு சீன கதை ஹி ஹி....
---------------------------------------------------------------------------------------------------

குடிச்சிருக்கான்னு கன்பார்ம் பண்ண ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா, டாக்டர் ரூமுக்கு போயி நின்னதும் ஊதாமலேயே பலூன் வெடிச்சிருச்சாம் - சொல்லிட்டு சிரியா சிரிக்கான் நண்பன் 
----------------------------------------------------------------------------------------------------
கஜினி படத்துல அமீர்கான் தலை மூணு மூணா தெரிஞ்சிதுன்னு சொல்லிட்டு ராஸ்கல் விமர்சனமா எழுதி இருக்கே? நீ ஒரு ஃபுல் ஓட்காவை காலி பண்ணிட்டு படத்துக்கு போனதை நான் சொல்லவே மாட்டேன் - யாருக்கோ 
-------------------------------------------------------------------------------------------------
ஆக இந்த ரம்ஜானுக்கும் நாஞ்சில்மனோ'வை உங்களுக்கு பார்க்க குடுத்து வைக்கல போல, லீவை ஒரு கிளி கொத்திகிட்டு போயிருச்சு. கிளி வரட்டும் அப்புறமா ஊருக்கு வாறன் ஆபீசர்.
---------------------------------------------------------------------------------------------------

கருணாநிதி முன்பில் கால்மேல் கால் போட்டு அமரும் ஒரே நபர் நாஞ்சில் மனோகரன், சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தின் போது திமுக கொடியை தேரின் உச்சியில் கொண்டுபோய் குத்தி வைத்தவர், எப்போதும் அதிகாரம் என் கையில் என்று சொல்லாமல் கையில் கோலுடன் இருப்பவர், நாஞ்சில் மனோகரன் தாய் மொழி மலையாளமாம்...! எனக்கு இப்போதான் தெரியும்...!

திமுக"வில் அதிக பட்சமாக தெலுங்கர்கள் இருப்பது தெரியும், ஆனால் நாஞ்சில் மனோகரன் மேட்டர் ஒரு மேட்டர்தான்...!

Monday, May 13, 2013

கண்ணீர் அஞ்சலி.....!

கண்ணீர்....

நண்பனின் மரணம்.....

பட்டாபட்டி....சந்தோஷமாக இறைவனடி சேர்ந்தாய் எங்களை தவிக்க விட்டு விட்டு....நீ சந்தோசமாக இருடே....மக்கா அங்கே.....ஆனால் நாங்கள்...?


வானத்தில் இருந்து எங்கள் கண்ணீரை பாருடே மக்கா....!

உன் பிரிவில் வாடுவது உன் குடும்பம் மட்டும் இல்லை மக்கா.....நாங்களும்தாம்டே....

உன் குடும்பத்துக்கு ஆறுதலையும் தேறுதலையும் எல்லா வல்ல இறைவன் கொடுக்க வேண்டுகிறேன்.....

அண்ணனை விட்டுட்டு போயிட்டியேடே!

என் கண்ணீரை எந்த வார்த்தையில் சொல்லுவேம்லெய் மக்கா புரியலைடே....

உன்னை நான் நேரில் பார்த்தில்லை....உன் எழுத்துகள் என்னை ஒரு நிலைப்பாட்டில் வைத்திருந்தது....ஆனால் இனி......?

போடே...போடே....நாங்களும் அங்கேதானே வரவேண்டும் அன்று உன்னை கட்டி அணைப்பேன் நெஞ்சோடு.....தூங்கு செல்லம் தூங்கு.....ஆறுதலாக தூங்கு....உலகம் நமக்கு போராட்டம்தான்.....இப்போ நீ தூங்கு என் செல்லம் தூங்கு....

நாஞ்சில் மனோ வலைத்தளம்.......நம்முடைய நண்பனுக்காக.....அஞ்சலியும்....அவர் தம் குடும்பத்துக்கு இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறது.

கண்ணீர்கள்..... என்னோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

மாரடைப்பே....உனக்கு ஒரு மாரடைப்பு வராதா.....

மரணமே உனக்கு ஒரு மரணம் வாராதா...

ஏய்....நாசமா போன கண்ணீரே உனக்கு ஒரு கண்ணீர் வாராதா....

என் நண்பனை கொண்டு போயிட்டியே.....

உன்னை கொண்டு போக யாருமே இல்லையா....

நண்பா..... நண்பா.... நண்பா.......

வாறேம்டேய்....நாங்களும் உன்னைப் பார்க்க....

உன் வழிதனை நிறைவேற்றுவேன் நானும் முடிந்தவரை....எனக்குத் தெரியும் உன் எண்ணம்....

தூங்குடேய் மக்கா நிம்மதியாக தூங்கு....நாங்கள் உன் பின்னால்....!

கண்ணீர் அஞ்சலி.....!


Sunday, May 12, 2013

ஹோட்டலில் ஒரு அமெரிக்காகாரனும் மொரோக்காகாரியும்...!

எப்போதுமே வீட்டம்மா என்கூட பேச வேண்டுமென்றால் மிஸ் கால் கொடுப்பதுதான் வழக்கம், ஏதாவது அவசரமென்றால் மட்டுமே போன் செய்வாள்.

அப்படி இருக்க நேற்று வழக்கத்துக்கு மாறாக போன் வருகிறது, இப்படி போன் வரும்போது வெளிநாட்டில் என்னைப்போன்றோர் பதட்டமடைந்து விடுவோம். வந்த போனை கட் செய்துவிட்டு நான் போன் செய்தேன்.

"ஹலோ...ஹலோ..."

".................................."

"ஹலோ ஹலோ...."

"வ்வ்வ்வ் ம்ம்ம்ம்ம் ஆவ்வ்வ்வ் ஆஆஆஆ....அவ்வ்வ்வ்வ்..." [[அழுகை]]

என் மகள் ஜோய் என்பது புரிந்து விட்டது.

"என்னம்மா செல்லம் என்ன ஆச்சு ஏன் அழுறே சொல்லும்மா..."

"மம்மி என்னை அடிச்சுட்டாங்க வ்வ்வ்வ்வ் ஆஆஆ ம்ம்ம்ம்..."

"ஒ அப்பிடியா நீ திருப்பி அடிச்சுரும்மா..."

"அடிச்சா மறுபடியும் அடிக்குறாங்க வ்வ்வ்வ்வ்...."

"அப்போ வெளியே போயி ஒரு கல்லை எடுத்து எறிஞ்சிட்டு ஓடிரு, இல்லைன்னா வீட்டுக்கு வெளியே இருக்கும் கடி நாயை வீட்டுக்குள்ளே இழுத்துட்டு வந்து மம்மிகிட்டே விட்டுரு..."

"ஐ....ஓகே டாடி...இப்பவே கல்லேடுத்துட்டு வாறன்...ஆனா டாடி, நீங்க பேசுனதை ஸ்பீக்கர்ல மம்மி கேட்டுட்டாங்களே...ஹா ஹா ஹா ஹா..."

அடப்பாவிபய மகளே இப்பிடியா கோர்த்து விடுறது?

"என்ன மனசுல உள்ளதெல்லாம் வெளியே வந்துருச்சோ...?" வீட்டம்மா.

"அது வந்து வந்து நொந்து பாப்பா வந்து....."

"என்ன உளருதீங்க...?"

"பாப்பா அழுதா இல்லையா அதான் சமாதானப்படுத்தலாம்னு...."

"அதுக்கு கடி நாயும், கல்லுமா...?"

"ஹி ஹி நீ என் செல்லம்ல....அதான் மெல்ல பாப்பாவை சமாதானப் படுத்தலாமேன்னு...."

"அவள் என்ன பண்ணுனா தெரியுமா...?

"ஒ அப்பிடியா ? அப்போ அடி பின்னிரு விட்டுறாதே அவளை..."

"மாட்டுனீங்களா அவளும் இதோ ஸ்பீக்கர் போன்ல கேட்டுட்டுதான் இருக்கா ஹா ஹா ஹா ஹா...."

போனை அம்மா கையில் இருந்து புடுங்கி...

"டாடி ஆப் அச்சா நஹிஹே, மெரெசெ ஏக் பாத் கர்திஹோ மம்மிசே ஏக் பாத் கர்த்திஹோ, ஜாவ் மை ஆப்சே பாத் நஹி கர்ணா ஜாத்தி ஹூம்..."[[நீங்க நல்ல டாடி இல்லை, அம்மாகிட்டே ஒரு பேச்சு பேசுறீங்க என்கிட்டே ஒரு பேச்சு பேசுறீங்க போங்க நான் உங்ககூட இனி பேசமாட்டேன்]]

அடப்பாவிகளா......பிராது கொடுத்தவளும் பிராது கொடுக்கப்பட்டவளும் ஒன்னு சேர்ந்துட்டு நாட்டாமைய தீர்ப்பு சொல்லவிடாம, காமெடி பீசாக்கிப் புட்டாயிங்களே...

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...."

"என்ன அவ்வ்வ்வ்...? தலையில கொஞ்சம் எண்ணெய் தேச்சி முடி சீவி விடலாம்னு முடியைப் பிடிச்சா உங்க மக என்னை அடிச்சிட்டா, அதான் ரெண்டு போடு போட்டேன், உடனே நேரே உங்களுக்கு போனடிச்சிட்டா...அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்துருக்கு..."

"உன்னை மாதிரின்னு நான் சொல்லவே இல்லை சொல்லவே இல்லை..."

"கொன்னேப்புடுவேன்"

பொண்ணு பிள்ளைங்க பண்ணும் சேட்டைகள் மனசுக்கு சந்தோசமாதான்ய்யா இருக்கு இல்லையா...?
---------------------------------------------------------------------------
அமைச்சர்கள் குறித்து விரைவில் முடிவெடுக்க பிரதமரிடம் சோனியா காண்டி வலியுறுத்தல்//

கேனப்பய ஆட்சியில் நாமளும் கேனப்பய போல வாழ்கிறோமென்னு நினைக்கும் போது மனசு வலிக்குதாய்யா......டெல்லி நாடாளுமன்றத்தில் ஒரு பூகம்பம் வந்த்துறாதான்னு மனசு ஏங்குதய்யா...!

ஒட்டு மொத்த கவர்மெண்டையும் கையில வச்சிட்டு இந்த இத்தாலி அம்மாவின் பேச்சைப் பாருங்க, மக்களே இனியாவது கொஞ்சம் உணர்வடையுங்கள். என்னாமே வேஷம்தான் என்று அறியுங்கள்.
----------------------------------------------------------------------------------------------
ஒன்னு அந்த பக்கமா போ அல்லது இந்த பக்கமா போ....

எதுக்குய்யா நடுவுல நின்னுகிட்டு அவனையும் போக விடாம இவனையும் போக விடாம லந்து குடுக்குறீங்க, கடைசில ரெண்டு பக்கமும் இல்லாம நீ ஓடவேண்டி வரும் ஜாக்கிரதை - யாருக்கோ

----------------------------------------------------------------------------------------------

டியூட்டில இருக்கும் போது வயர்லஸ் திடீரென அலற.....ஹோட்டல் செக்கியூரிட்டி...

"மனோஜ் அவசரமா பத்தாவது ஃபிளோருக்கு ஓடிவா..."

நாமள ஓடிப்போ"ன்னுதானே எல்லாரும் சொல்வாயிங்க இதென்னடா புதுப்பழக்கம்ன்னு நினைக்குமுன்னே...

"மனோஜ் அவசரமா ஓடிவா..."

"என்ன பிராப்ளம்னு சொல்லு முதல்ல அப்புறமா நான் தீர்மானிக்குறேன் ஓடி வரணுமா இல்ல ஓடிப்போகனுமான்னு..."[[ஹி ஹி]]

"ஐயோ மனோஜ் ஒரு ரூம்ல பயங்கர சத்தமா இருக்கு ஓடிவா..."

"என்னா சத்தம்னு சொல்லுய்யா, சண்டைன்னா சொல்லு ஜம்ப் பண்ணி ரோட்டுல விழுந்து ஓடிருதேன்..."

"இல்ல இல்ல சண்டை இல்லை ஓடிவா..."

அவசரமா வயர்லஸ்ஸ கையில பிடிச்சுட்டே ஓடினேன் பத்தாவது மாடிக்கு.....அங்கே செக்கியூரிட்டியை காணோம்....!
"அடேய் எங்கேய்யா இருக்கே நீ...?" வயர்லெசில்

"நான் கீழே வந்துட்டேன், நீ அந்த எட்டாம் நம்பர் ரூம் பக்கத்துல போ இதோ நான் வந்துட்டே இருக்கேன்"

"ஓகே"

குறிப்பிட்ட அறையின் முன்பு போனால் பலத்த சத்தம்.....நல்லபாம்பும் சாரை பாம்பும் சங்கமிக்கும் சப்தம்...கொஞ்ச நேரம் ஷாக் ஆகி நின்றுவிட்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்....கொய்யால....

செக்கியூரிட்டிக்கு போட்ட போடில் மெடிக்கல் லீவு எடுத்துட்டு போயிட்டான்....என்னாக் கொலைவெறில சுத்துறாயிங்க பயபுள்ளங்க.
சரி அந்த ரூம்ல எந்த நாட்டுக்காரங்க தங்கி இருக்காங்கன்னு பாஸ்போர்ட்டை செக் செய்யும்போது, ஒரு அமெரிக்கனும், மொரோக்கோகாரியும் [[அமெரிக்கன் பாஸ்போர்ட்]] தங்கி இருக்காங்க...ஆஹா...அனுபவிங்க மக்கா...!
----------------------------------------------------------------------------------------------

ஒரு மனிதனின் வாழ்க்கை மரணத்தோடு நின்று போவதில்லை உதாரணம் பலபேர் இருக்காங்க இருந்தாலும் சிலபேர் பெயரை சொல்றேன்...

காமராஜர், அறிஞர் அண்ணா, என் எஸ் கிருஷ்ணன், எம்ஜியார், பெரியார், அம்பேத்கார், இந்திரா காண்டி[[காந்தி அல்ல]] , மகாத்மா காந்தி, முல்லைப் பெரியார் அணையை கட்டிய பென்னி குக், சுபாஷ் சந்திரபோஸ், எங்கள் அண்ணன் பிரபாகரன்.............!


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!