பஹ்ரைனில் பங்களாதேஷை சேர்ந்த பங்காளிகள் ஊருக்கு போக தீவிரிக்கிறார்கள்....!!! செத்தாலும் ஊர் போக பிரியபடாத இவர்கள் நாடு திரும்ப தீவிரிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இவர்கள் எம்பசி எப்போதும் ஈ அடிச்சிட்டுத்தான் இருக்கும் ஆனால் இப்போது அங்கே பயங்கரமாக கியூ'வாக இருக்கிறது. நான் ஆச்சர்யமாக சில பங்காளிகளிடம் விசாரித்தேன். அவர்கள் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆம் இவர்கள் இனி வேலைக்காக போக போவது இந்தியாவாம்....!!! ஏற்கனவே கேரளாவில் பங்காளிகள் வந்து இறங்கி கொண்டிருப்பதாக கேரளா நண்பர்கள் சொன்னார்கள். கூடவே சில இடங்களில் களவும், அதற்காக கொலையும் அங்கே [கேரளா] பங்காளிகள் செய்துள்ளார்களாம். கேரளா
வரை வந்தவர்கள் கண்டிப்பாக தமிழ்நாட்டுக்குள்ளும் வந்திருக்கலாம் மக்களே உஷாரா இருந்துகோங்க.
பஹ்ரைனில் பங்காளிகளும் நம்ம ஆளுங்களும் ஊர் போவதால் இங்கே ரியல் எஸ்டேட் அடி வாங்கும் என நம்ப படுகிறது. உதாரணம், சிங்கிள் அட்டாச் டூ பாத்ரூம் ரூம்கள் நூறு தினார், நூற்றி இருபது தினார் வரை இருந்த ரூம்கள் இப்போது ஐம்பது தினாருக்கு கிடைப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்...!!! [ஒரு தினார் நம்மூர் ரூபாய்க்கு நூற்றி இருபது சொச்சம் வரும்]
அடுத்து என் மலையாளி நண்பன் ஒருவன் சொன்ன கமெண்ட்ஸ் : டேய் இனி
அரபி பயலுகளும் நம்மூருக்கு வேலைக்கு வந்துருவானுக கொய்யால அப்பிடி வந்தா
எங்க தென்னைமர தோட்டத்துல தேங்காய் பறிக்க விடுவேன் பாரு அதுவும் ஒவ்வொரு
தேங்காயா ஏறி பறிக்க வச்சி பெண்டேடுப்பென்னு [[அடபாவி]]
டிஸ்கி : நானும் ஊர் திரும்புகிறேன் மக்கா....
இது எப்பிடி இருக்கு ஹி ஹி ஹி ஹி...
ஊர்ல எங்க அண்ணன் பொண்ணு பொம்மி'யோட கைபிடிச்சி ஊர்கதை பேசி ஊரை சுத்துனது நியாபகம் வந்துருச்சிலேய்......