கோபலலிதா : இங்கே இந்த மீட்டிங்கை அவசர அவசரமாக கூட்டியதின் காரணங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், நான் மறுபடியும் ஒருமுறை சொல்லிவிடுவதே நல்லது என்று போடாநாடு மீது சத்தியமாக சொல்லிக்கொல்[ள்]கிறேன்,
வேலூரை தெரியுமா? பாளையங்கோட்டையை தெரியுமா? புழல் தெரியுமா? ஏன் அந்தமானைக் கூடத் தெரியுமா என்று கேட்கிறார்கள்...?
டிமுக ஆட்சியிலும் எங்கள் ஆட்சியிலும் எத்தனையோ யானைகளும், பானைகளும், யாகங்களும் செய்தும்..... "கரண்டு" வந்தபாடில்லை டமிழகத்துக்கு, கடைசி முயற்சியாக கேரளா கோடாங்கியையும் வரவைத்து உறுமி அடித்துப் பார்த்தும் பிரயோசனமில்லாமல் போன படியால்தான் பிரபல[!] பதிவர்களாகிய உங்களை அழைத்து ஐடியா கேக்க தோணியது, அமைச்சர்களை விட பதிவர்களிடம் நிறைய ஐடியாக்கள் இருப்பதாக அறிந்தே இந்த கூட்டத்தை கூட்டியுள்ளேன். இனி உங்கள் எண்ணங்களை சொல்லலாம்.
பொ.செல்வம் : மம்மா...டினகரனை கட்சியை விட்டே தூக்கினால்தான் டமில் நாட்டுக்கு மின்சார விமோசனம் கிடைக்குமென்று செங்கல் கோட்டையன் சொல்லசொன்னார்...என்று சொல்ல, மம்மா முறைக்கிறார்..
பசிகலா : அக்கா அக்கா...நான் வேணா மைசூர் போயி சொல்லமாடன் சாமிக்கு கிடாவெட்டி போட்டு குடும்பமாக மங்களம் பாடிவிட்டு வந்துறட்டுமா..? கரண்டு உடனே வந்துரும்...
சிபி [பதிவர்] : ஆமா உடனே வாயை பொளந்துரும்....பசிகலா வெறியாக அண்ணனை பார்க்க, டேபிளுக்கு கீழே பம்முகிறான்.
பக்கி : ஒன்று செய்யலாம் மம்மா, கேமரூன் காட்டுக்குள்ளே இருக்கும் காட்டுவாசிகளை போடாநாடு அழைத்து வந்து, கும்மாகுத்து நடனம் ஆடச்செய்து, பாம்பில் ஊறவைத்த ஒயின் கொடுத்து தீக்கொளுத்த சொல்வோம், உடனே கரண்டு பப்பரப்பான்னு வந்துரும்.
பக்கத்தில் அமர்ந்திருந்த சிபி ஓங்கி ஒரு கொட்டு கொடுக்க, பக்கி கலவரமாகிறான்.
பவர் அமைச்சர் : மம்மா, இது வேற்காடு ஏழுமுகத்தின் சதி என்றே நினைக்கிறேன், என்னை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதபடி தாங்கள் என்னிடம் பேசுவதுபோல மிமிக்கிரி செய்து என்னை செயல்படமுடியாதபடி செய்வதாக எனக்கு ரகசிய தகவல் வந்துருக்கு....இதை சப்பிரமனியன் சுவாமி சொல்லசொன்னார்.
நாஞ்சில்மனோ : அடிங்"கொய்யா"ல"....என்று எழும்பவும், பக்கி டேபிளுக்கு கீழே காலால் ஒரு மிதி கொடுக்க, கலவரமாகி பயத்துடன் நடுங்கியவாறு மெதுவாக, மம்மா..... அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா "கொய்யா" மரத்துல இருந்து கரண்டு எடுக்கலாம்னு நினைக்கிறேன் காரணம் இணையதளங்களில் "கொய்யா" என்று சொன்னதுமே பலர் ஷாக் ஆகிறார்கள், எதுக்கும் பப்துல் கலாமிடம் சொல்லி விஞ்ஞானிக்க சொல்லவும்.
பன்னி குட்டி : கோடாங்கியும் சரி, சொல்லமாடனும் சரி, யானையும் சரி, பானையும் சரி, போடாநாடும் சரி, கொய்யாவும் சரி இவைகளால் கரண்டை கொண்டு வரமுடியாது ஆனால்...
கோபலலிதா : ஆனால் என்ன ஆனால்...? சொல்லுங்க சொல்லுங்க மிஸ்டர் பன்னி.....நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்.
நாஞ்சில்மனோ : நாசமாபோச்சுபோ....
பன்னி குட்டி : மனோவை முறைத்தவாறே....மம்மா, அந்த கோடாங்குளம் பணு உலையை திறந்தோம்னா கரண்டு வெடிச்சிரும்..... ச்சே ச்சீ.... கிடைச்சிரும் என்பது என் தாழ்மையில்லாத கருத்துன்னு சொல்லமாட்டேன்னு சொல்லி........ சொல்லாம இருக்கமாட்டேன்.
சரிப்பு போலீஸ் : எட்றா அந்த அருவாளை...
பம்சை அரசன் பாபு : தம்பி அடங்கு, பெரியவிங்க பேசிட்டு இருக்கோம்ல...?
"பலியுகம்" தினேஷ் : பலாயி போலாயி கோலாகி நொந்து கொசு வந்து கோடியில் ஆடி படியில் வெந்து காலரா போலரா தைங் தக்கா தை ஆடியது...
பரசன் : வேகமாக எழும்பி வந்து தினேஷ் காலில் விழுகிறார் [[கோபலலிதா முறைக்கிறார்]] தெய்வமே...நீங்க இம்புட்டு நாளும் எங்கே இருந்தீக....? கரண்டே வேண்டாம்டா சாமீ ஆளை விடுங்க...என்று தலைதெறிக்க வாசலை நோக்கி ஓடுகிறார்.
கே ஆர் விஜயன் : இங்கே கூடியிருக்கும் அமைச்சர்களால் வாயே திறக்கமுடியாமல் இருக்கிறார்களே இதற்கும் கரண்டுக்கும் என்ன சம்பந்தம், இவர்களை ஏன் மம்மா அவர்கள் அழைத்து இருக்கிறார்கள் என்ற காரணம் புரியாமல் யோசித்து கொண்டே இருக்கிறேன்.
பக்கி : யோவ் இதென்ன உம்ம நாகர்கோவில் ஆபீஸ்ன்னு நினைச்சீரா..? "கொய்யால"ன்னு அந்த நாதாரிப் பயலை என்னைக்கோ திட்டுனதை மனசுல வச்சிகிட்டு கொய்யாவுல இருந்து கரண்டுன்னு போட்டு குடுக்குறான் ஓய்...
ஒழுங்கா பியட்னாம் போயி சேருவேனா இல்லை பாஸ்போர்ட்டை புடுங்கிட்டு ஆப்பு அடிப்பானுகளான்னு ஆடிப்போய் இருக்கேன், ஐயோ என் ஆபீஸ்ல ஐந்தாவது வந்து சேர்ந்த அந்த ஸ்டெனோ காத்து இருக்குமே...
பன்னி குட்டி : ஆமா இவரு பெரிய கவர்னரு, டேய் அங்கே இருக்குறதே நாலே நாலு இந்தியாக்காரனுக, அதுகளும் பச்சைபாம்பை பிடிச்சி தின்னுட்டு டவுசரோட அலையுறானுக...இங்கே வேலூர்ல கொஞ்சநாள் இருந்துட்டுப் போய்யா...
கோபலலிதா : பதிவர்கள் என் பொறுமையை சோதிக்க வேண்டாம்...அமைச்சர்கள் போலவே அமைதியாக இருங்கள், பஜயகுமார் குண்டாந்தடியோடும், பளர்மதி மீன் வாலோடும் வாசலில் இல்லை என்பதை இங்கே நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.
கே ஆர் விஜயன் தன் இரு செருப்பையும் கழட்டி கக்கத்தில் வைத்துக்கொள்கிறார்.
ரகசியமாக நாஞ்சில்மனோ காதில்...
"மக்கா, நிலைமை சரியில்லை போல தெரியுது ஓய், அன்னைக்கு எருமைநாயக்கன்பட்டியில் நடந்த அதே களேபரம் இங்கேயும் நடக்கும்னு தோணுது எதுக்கும் பேப்பர் அருவாளை சுருட்டி தூரப்போட்டுட்டு, செருப்பை கழட்டி கையில் வைத்துக்கொள்ளும் ஒய்"
சிபி : மம்மா அவர்களே, உங்கள் அமைச்சர்கள் யாவரும் தனிமையில் மொட்டைமாடியில் நின்று வீரவசனம் பேசுகிறார்களே ஒழிய, எங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவே தயங்குகிறார்களா அல்லது பசிகலா'வுக்கு பயப்படுகிறார்களா என்றே தெரியவில்லை, கரண்டு என்னாச்சுன்னு பதிவர்கள் கேட்டா...
வேலூரை தெரியுமா? பாளையங்கோட்டையை தெரியுமா? புழல் தெரியுமா? ஏன் அந்தமானைக் கூடத் தெரியுமா என்று கேட்கிறார்கள்...?
பக்கி : மனசுக்குள்' இன்னையோட இவன் செத்தான்டா...அப்பாடா இனி ஒரு நாளைக்கு பத்து பதிவு போட்டு தமிழனை கொல்ல ஒருத்தன் பிறந்துதான் வரனும் ஸ்ஸ்ஸ் அபா தப்பிச்சுதுடா பதிவுலகம்...சத்தமாக, ஆங்.... சிபி அண்ணன் என்ன சொல்றான்னு எனக்கு கேக்கவே இல்லை மம்மா, அவன் யாருன்னே எனக்குத் தெரியாது, ஆனால் நாஞ்சில்மனோ அவனுக்கு பினாமின்னு கே ஆர் விஜயன் சொல்ல சொன்னாரு.
கே ஆர் விஜயன் : ஆஹா......எருமைநாயக்கன்பட்டியேதான்....
பம்சை அரசன் பாபு : கொய்யாவில் இருந்து "கரண்ட்" என்பது நல்ல விஷயமே மம்மா அவர்களே, டரர் குரூப்பிடம் மற்றும் நாஞ்சில்மனோ நண்பர்களிடமும் சொன்னால் கொய்யாக்களை அமோகமாக விளைவிப்பார்கள் என்பது என் கருத்து..
பன்னி குட்டி : ஆஹா சொந்த செலவுலேயே தம்பி சூனியம் வைக்குறானே...சத்தமாக, கொய்யா என்பது என்ன...? அதனூடே 'ல' சேரும் போதுதான் ஷாக் அடிக்கிறது என்பது என் தாழ்மையில்லாத கருத்து.
கோபலலிதா : அப்போ "ல" என்ற வார்த்தையில் கரண்ட் இருக்குறதா சொல்றீங்களா மிஸ்டர் பன்னி..?
சின்னவீடு சுரேஷ் : அவருக்கு அம்புட்டு அறிவு பத்தாதுங் மம்மா, நான் சொல்லுறேனுங்.....இப்போ ஒரு நாயை பாருங்...அப்பிடியே குனிஞ்சி கல்லெடுத்தா நாய் ஷாக் ஆகுதா இல்லையா..? அந்த கல்லு'ல இந்த "ல" இருக்கு பாருங்க அதான் "ல"வுல கரண்டு இருக்குன்னு சொல்றோமுங்...
கோவை டைம் : அடிங்கொய்யால....மனதுக்குள், டாஸ்மாக் கடையை நாரடிச்சுட்டு வந்து பேசுறப் பேச்சப்பாரு....?
பளர்மதி : மம்மா நான் உள்ளே வரட்டுமா சத்தம் கேட்டாப்ல இருக்கு என்று மீன்வாலை சுருட்ட...சிபி அண்ணன் சுவற்றோடு பல்லிபோல ஓட்டுகிறான்.
பேய் நக்ஸ் பக்கீரன் : மம்மா, பாவம் பயபுள்ள கரண்டு இல்லாம கஷ்டப்படுவானேன்னு நினச்சி விசாரிக்கப் போனை போட்டா, இந்த நாஞ்சில்மனோ போனை எடுக்கவேமாட்றான் மம்மா...இவனுக்கு கரண்டு ஒரு கேடா? [[யோவ் அண்ணே, சரக்கடிச்சா மட்டும் தம்பிக்கு போனா பிச்சிபுடுவேன்பிச்சு]]
சென்னை பவன் : சென்னை பட்டணத்திலே அதுவும் மம்மா பக்கத்தில் நாங்கள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு கவலையேது, மஞ்சாசிங்கம் பாரில் ஏறி சட்டையை கழட்டினால் கரண்டும் நாணும்...கண்ணாடியை சற்று மூக்கில் தூக்கி வைக்குறார் விரலால்...
பன்னி குட்டி : அதென்னடா கொக்காமக்கா வந்ததுல இருந்தே பாக்குறேன் மினிஸ்டர்ங்க ஒரு பயலும் வாயே திறக்கமாட்றானுக, பன்னி குட்டிபோட்ட கணக்கா...? பிச்சிபுடுவேன் பிச்சி, மம்மா இருக்காங்களேன்னு பம்மிட்டு இருந்தா ஓவரா சீனைப் போடுறானுக கம்னாட்டிக பேசாம இருந்து, கொய்யால...ஐயோ மம்மா மன்னிச்சு, பவர் இல்லாத கடுப்புல ஒவ்வொருத்தனுக்கும் பவர்ஸ்டார் படங்களின் டிவிடி"யை பார்சல் அனுப்பி வலுக்கட்டாயமாக பாக்க வச்சிப்புடுவேன் ஜாக்கிரதை.
கோபலலிதா : மிஸ்டர் பன்னி.... கூல்....இப்போ பிரச்சினை கரண்டை பற்றினது...
பன்னி குட்டி : மெதுவாக...ஆமா, இதுக்கு பேசாம சுடுகாட்டுல போயி குடும்பம் நடத்தலாம், சத்தமாக....ஒ...மம்மா...கொய்யா"ல இருந்து தாராளமா கரண்டு எடுக்கலாம் கேன் யு அப்ரூவல் பிளீஸ்...
பலேசியா சில்வி டீச்சர் : அய்யோடா..."ல"வுல கரண்டா...? நாங்க இங்கே மலேசியாவுல 'ல' போட்டுதான் பேசுவோம்'லா....மேடம், "ல"வுல சத்தியமா'லா கரண்டு'லா இருக்கு'லா....
நாஞ்சில்மனோ : நாசமாபோச்சுபோங்க இனி அங்கேயும் கரண்டு இல்லாம போயிரும் அவ்வ்வ்வ்...
பக்கி : யாருடா அங்கே அழுவுறது..? வாயி'ல' குத்திப்புடுவேன், அய்யூ இங்கேயும் 'ல"வா?
அமைதியாக இருக்கும் சாப்பாடு உலகம் கோபமாக எழும்பும்முன், அவர் பாடிகாட் திவானந்தா சுவாமிகள் எழும்பி உருட்டுகட்டையால் பக்கியை ஒரு போடுபோடுகிறார்... அண்ணன் சைலண்ட் ஆகிறான்.
சிபி : ஆக...... கி'ல்'மா என்றாலும் பதிவுலகம் ஷாக் ஆகிறது ஸோ அதிலும் 'ல' இருக்கிறது என்பதை தாழ்மையாக மம்மாவின் காலை பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
பன்னி குட்டி : நாதாரி என்னை உள்ளே தூக்கி போட்டுறாதீங்கன்னு கெஞ்சுறதை எப்பிடி நாசூக்கா சொல்லுறான் பாரு....உருப்பட்டுரும் நாடு கொய்யாமக்கா ச்சே ச்சீ கொக்காமக்கா...
கோபலலிதா : 'ல'வில் கரண்டு இருப்பதாக சொன்ன பதிவர்களுக்கு எனது அரசு வரிவிலக்கு[!] அளிக்க சட்டம் கொண்டுவரும், இனி யாருமே பதிவர்கள் கூட 'ல' என்பதை யூஸ் பண்ணக்கூடாது, மீறுபவருக்கு பவர்ஸ்டார் படத்தை தனியாக அமர்ந்து தியேட்டரில் பார்க்கவைக்கப்படுவர் கதற கதற..... 'ல'வில் கரண்டு இருப்பதை கண்டுபிடிக்க பப்துல் கலாம் தலைமையில் குழு அமைக்கப்படும் என்பதை தெரிவிப்பதோடு.....
கே ஆர் விஜயன் : மெதுவாக மனோவிடம், எலேய் மக்கா அழுகுன பழச்சாறு நாற்றம் வந்தாப்புல இருக்கே பார்த்தீரா ஓய்..?
நாஞ்சில்மனோ : அட ஆமாய்யா....
விஜயன் கலவரமாகிறார் செருப்பை இறுக பிடித்துக்கொள்கிறார்...
வெளியே கலவரமான சத்தம் கேட்கிறது....வாசலில் நின்ற பளர்மதியும் பஜெயகுமாரும் வாந்தியெடுக்க வாசலைவிட்டு ஓடுகிறார்கள்....
வேகமாக தள்ளாடியபடி உள்ளே வருகிறார் கப்பல் "கேப்டன்"........ அரங்கம் மொத்தமும் டாஸ்மாக் வாடை பரவுது....
"டாய்......ராஜாக்கலு வந்துலு..... டாய்..... ராஜாக்கலு போயிலு....நீயாலு எனக்கு சம்பளம் தாறேலு...? நான் இங்கேலு ஒரு புதிர் கட்சியாலு இருந்தும்லு என்னைக்கேக்காமலு எப்பிடிலு கூட்டம்லு நடத்தலாம்லு...?
ஏய்....கேட்டுக்கலு....'ல'...'லு'...'லி' தெலுங்குலு...கரண்டை 'ல"வுல இருந்து எடுக்க விட்டுருவேனாலு பார்ப்போமாலு..."என்று பாட்ட'லை' சுழட்ட....
விஜயன் செருப்பை மனோ மீது எறிந்துவிட்டு அவன் தோளில் மிதித்து ஜன்னல் எட்டிப்பிடித்து தாவி ஓடுகிறார், சிபி....ஒரே ஜம்பில் பக்கி இடுப்பில் ஏறி உட்கார, பக்கி ஓடமுடியாமல் தடுமாறி கீழே விழுகிறான்...சின்னவீடு உடம்பை தூக்கி ஓடமுடியாமல் நின்று கதகளி ஆடுகிறார்...பன்னி, கேப்டனுக்கு தட்டாமாலை காட்டி அவரை கிர்ர்ர்ராக்கி விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்...
சில்வி டீச்சர் ஹேன்ட் பேக்கை தோளில் போட மறந்து [[பயந்து]] தலையில் மாட்டிக்கொண்டு ஏர்போர்ட் நோக்கி ஓடுகிறார்....சென்னை பவன், மஞ்சாசிங்கம் இவரை தள்ளிட்டு ஓடிய வேகத்தில் காணமல் போன கண்ணாடியை தரையில் தேடுகிறார்...
சாப்பாட்டு உலகம் மெதுவாக எழும்பி வந்து கேப்டன் முன்பு நின்று அலட்டிக்காமல் ஒரு லுக் விட, கேப்டன் தள்ளாடியபடி சற்று பின்வாங்குகிறார், சாப்பாடு உலகம் பின்னாடியே வந்த திவானந்தா சுவாமி கேப்டனை விரலைக்காட்டி, நாக்கை ரெண்டாக மடித்துக்காட்டி பயமுறுத்துகிறார்....
எதுக்குமே அசையாமல் அமர்ந்திருக்கும் கோபலலிதாவை பார்த்து, சாப்பாடு உலகம் சொல்கிறார்....
நீங்க நல்லா இருப்பீங்க மேடம்..... நல்லா இருக்கனும்... கரண்டைப்போல..வாழ்க வாழ்க....!
நீங்க நல்லா இருப்பீங்க மேடம்..... நல்லா இருக்கனும்... கரண்டைப்போல..வாழ்க வாழ்க....!
டிஸ்கி : சும்மா தமாஷா நினச்சுக்கோங்க ஹி ஹி....
டிஸ்கி : என் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி...
டிஸ்கி : என் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி...