Sunday, December 29, 2013

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...! தொடர்......

கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.

மறுபடியும் வீட்டுக்கு வந்து, பெட்டியை பிரித்து லாப்டாப் மட்டும் எடுத்துக்கொண்டு, நண்பனின் டிரைவரை அழைத்து நாகர்கோவில் போகணும் என்றதும் உடனே கார் கொண்டு வந்துவிட்டான்.

மறுபடியும் விஜயனுக்கு போன் செய்ததும், ஆபீசர் மற்றும் நண்பர்கள் யாவரும் நாகர்கோவில் நெருங்கி கொண்டிருப்பதாக சொன்னார்.


நான் விஜயன் ஆபீஸ் பக்கம் போயி கொஞ்சம் அளவளாவிக் கொண்டிருக்கும் போதே ஆபீசரும் நண்பன் சுதன் மற்றும் கௌதம், செட்டியார் என்னையும் விஜயனையும் அலாக்காக தூக்கி, திருவனந்தபுரம் நோக்கி விரைந்தது கார்....

பல விஷயங்கள் ஜாலியாக பேசிக்கொண்டே சென்றோம், சுதனை போன தடவை பாவநாசம் போக சந்தித்தபோது மிக மிக அமைதியாக இருந்தார், நானும் சுதன் டைப் அப்பிடிபோல என்று நினைத்தது, இப்போதான் தெரிஞ்சுது அவர் பேச்சில் சரவெடி என்று.

என்னமா பேசுறார், ஒருவேளை கல்யாணம் ஆனப்பிறகு பேசக் கத்துகிட்டாரோ ?

கார் வெகுவாக சீறிக்கொண்டிருந்தது, ஆபீசர் முன்பு வேலைப் பார்த்த குழித்துறை அலுவலகம் சென்று சாப்பிட்டு விட்டு அங்கிருந்து திருவனந்தபுரம் போகலாம் என்று ஏற்கனவே செட் பண்ணி வச்சிட்டுதான் வந்துருக்காங்க.

ஆபீஸ் இருந்த இடம் சுவர்க்கம் [[அலுவலகம்]] என்றால் அது மிகையாகாது சுற்றி இருந்த மரங்கள் மேடு பள்ளங்கள் கண்களை வெகுவாக கவர்ந்து குளிமையாக இருந்தன, ஆபீசர் அலுவலகத்துக்குள் போனதும் அங்கே எல்லாரும் பரபரப்பானார்கள்.
பிசினஸ்  மேன்கள்,பல ஆபீசர்கள் என யாவரையும் ஆபீசர் அறிமுகப்படுத்தினார், சாப்பாடுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது, சாப்பாடு சுதன் ஏற்பாடுன்னு ஆபீசர் சொன்னார், அருமையான சாப்பாடு, கொஞ்சமாக சாப்பிட்டாலும் ருசியாக இருந்தது.
[[ஆபீசர்கள், தொழிலதிபர்கள் அறிமுகம்]]

ஆபீசர் வழக்கம் போல மெதுவாக அமர்ந்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார், நாங்கள் யாவரும் சாப்பாட்டு அறையில் இருந்து வெளியே வந்த பிறகும் ஆபீசர் வெளியே வரவில்லை, தனியாக ஏதும் கவனித்தார்களான்னு ஒரு சின்ன சந்தேகம் ...ஹி ஹி.

அப்புறம் யாவரிடமும் விடை பெற்று ஆபீசரை வழக்கமாக கிண்டல் பண்ணிக்கொண்டே  வந்தோம்,இன்றைக்கு ஏதாவது ஆடு என்னை வெட்டுங்கய்யான்னு வரும்னு பார்த்தால், அடுத்த நாள் காலைவரை ஒரு ஆடும் சிக்கவில்லை.
[[சிக்கன், மீன் என்று செம கலக்கல் காக்டெயில்]]

ஆனால் கார் மட்டும் நாங்க போகவேண்டிய இடத்துக்கு சரியான நேரத்திற்கு போகாமல் எங்கேயோ சுற்றுவது போல ஒரு டவுட் வந்துட்டே இருந்துச்சு....

டிஸ்கி : உலகத்துலேயே திருவனந்தபுரம் டூ நாகர்கோவில் வரை எலும்பு முறிவு ஆஸ்பத்திரியின் எண்ணிக்கை அறுபத்து நான்கு, இது நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்த தகவல், இப்போ எத்தனைன்னு தெரியாது....!

சொல்றேன்........

Wednesday, December 18, 2013

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....!

வாழ்க்கையில் நாம் நினைப்பது சில நடக்காது என்பது மறுபடியும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது என் வாழ்கையில்...!


மும்பையில் இருந்து [[ஏன் பஹ்ரைனில் இருந்தும்]] ஆசையாசையாக நண்பர்களையும், என் அம்மாவையும் சந்திக்க சென்ற எனக்கு ஏமாற்றமாகவே திரும்ப வேண்டிய சூழ்நிலை.
[[எங்கள் ஊர் மருந்துவாழ் மலை]]

இருந்தாலும் சில உயிர் நண்பர்களை சந்தித்தது மனசுக்கு ஆறுதலாக இருந்தாலும், பார்க்காமல் இருந்த நண்பர்களை பார்க்க முடியாமல் திரும்பியது, நான் கூட ஏன் ஆபீசர், விஜயன் கூட எதிர்பார்க்காத ஒன்று என்றால் அது மிகையில்லை.
[[எனது பால்ய நண்பன் ராஜகுமார் மருந்துவாழ் மலை மற்றும் பொத்தயடி டாஸ்மாக் கடை அருகில்]]

மும்பை டூ நாகர்கோவில் டூ நெல்லை டூ மேக்கரை டூ சென்னை டூ மும்பை என்று இருந்த புரோகிராம், காலையில் விரைவாக எழும்பி பெட்டி கட்டி ரெடியாக வைத்துவிட்டு, டிபன் சாப்பிட்டு, என்னடா இன்னும் ஆபீசர் போன் வரலையே என்று காத்திருந்தும் ஆபீசர் போன் வரவில்லை.

விஜயனுக்கு போன் செய்தேன், இதோ இப்போ ரெடியாகி விடும் ரெடியாக இருங்கள் என்றார், நானும் உற்சாகமாக அம்மாவிடம் பிளாக் காபி போட்டு தாம்மா என்று வாசல் படியில் உட்கார்ந்து இருந்தேன்.

விஜயன் போன்.....

"மனோ, ஆபீசர் போன் செய்தாரா ?"

"இல்லையே என்னாச்சு ?"

"மேக்கரையில் புக் செய்து வைத்திருந்த ரூம், அதில் தங்கி இருந்தவர்கள் இன்னும் ரூமை காலி செய்யவில்லையாம்"

"ம்ம்ம்ம்"
[[நம்ம ஆபீசர் சங்கரலிங்கம்]]

"இன்னும் அதற்காகத்தான் ஆபீசர் வெயிட் செய்துட்டு இருக்கார் நீங்களும் ஒரு ஒன் ஹவர் வெயிட் பண்ணுங்க"

"ஓகே"

எப்படியும் ரெடியாகி விடும் என்று நினைத்து மறுபடியும் ஒரு முறை பெட்டியை செக் செய்து பார்த்துக் கொண்டேன்.

கொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் விஜயன் போன்..."மனோ, மேக்கரையில் ரூம் கிடைக்கவில்லை அதனால் திருவனந்தபுரம் போகலாம் என்று சுதன் ஆபீசரிடம் ஐடியா சொல்லி இருக்கார் இருந்தாலும் அவர்கள் கிளம்பும் போது சொல்கிறேன்" என்றார்

அப்பவே பொடீர்னு மனசுக்குள்ளே ஒரு சத்தம்....

நண்பன் ராஜகுமாரை அழைத்து, "வாய்யா விஜயனிடம் இருந்து போன் வரும் வரை எங்கேயாவது சுற்றலாம்" என்றேன்

பொத்தயடி மலையடிவாரம் போகும் போது விஜயனின் போன்..."மனோ, ஆபீசரும், சுதனும், செட்டியார் கவுதமும் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், திருவனந்தபுரம் போவதற்கு" என்றார்

என்னடா வடக்கே நோக்கி போகவேண்டிய ஆளுங்க [[வண்டி]]மேற்கே நோக்கி வருகிறார்களே என்று நினைத்து....
[[தம்பானூர் [[திருவனந்தபுரம்]] நோக்கி விரையும் கார்]]

ராஜகுமாரிடம் "எட்றா வண்டியை டாஸ்மாக் நோக்கி" என்றேன்......

தொடரும்.....

டிஸ்கி : சென்னை நண்பர்கள் மன்னிச்சு........ மன்னிச்சு...... மன்னிச்சு.... உங்களை இந்த தடவையும் பார்க்க எனக்கு "கொடுப்பினை இல்லாமல் போனது" என்பதுதான் உண்மை.


Sunday, December 8, 2013

பலவந்தமாக சமயலறையில் மாட்டின பதிவர் !

காலையில்....

"பாப்பாவை நான் ஸ்கூல் கொண்டு விட்டுட்டு வரட்டுமா பிள்ளே ?"

"ஒன்னும் வேண்டாம் ஸ்கூல் போற வழியில்தான் உங்க "குண்டா" நண்பனுங்க நின்னுட்டு இருக்கானுக, உங்களைக் கண்டால் காலையிலேயே தூக்கிட்டுப் போயிருவானுக, நானே பாப்பாவை விட்டுட்டு வாறேன்"

"அவ்வ்வ்வவ்"

"என்ன அவ்வ்வ்வவ்?"

"இல்ல வடாபாவ் சாப்புட்டுட்டு வரலாம்னு நினைச்சேன்"
"அதெல்லாம் வெளியில சாப்பிடப்டாது"

"கிழிஞ்சிது போ" மனசுக்குள்ளே

"ஆங்...மனசுக்குள்ளே என்ன சொன்னீங்கன்னு எனக்கு நல்லாப் புரியுது"

"அவ்வ்வ்வவ் இது வேறயா ?"

"சரி நான் பாப்பாவை விட்டுட்டு வாரேன்"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

சரி வடாபாவ் வாங்கிட்டு வருவாங்கன்னு நினைச்சா......வெறும் பாவ் மட்டும் வருது....
"என்ன இது ?"

"ஆங் பாவ்.....பட்டோட்டோ பாஜி பண்ணித் தாறேன் பாவ் கூட சாப்பிடுங்க, அப்புறம் எழும்புங்க, அந்த ரெண்டு பட்டட்டோவை எடுத்து நறுக்கித் தாங்க சீக்கிரம்"

"வசமா மாட்டிகிட்டியோ மனோ ?" மனசுக்குள்ளே

"அதான் அப்பவே சொன்னேம்ல நீங்க மனசுல என்ன நினைகிறீங்கன்னு"

"சீக்கிரம் பட்டட்டோ நறுக்கிட்டு, இந்த ரெண்டு வெங்காயத்தை நறுக்குங்க"

"இதெல்லாம் அநியாயம் இல்லியா?"

"மனசுக்குள்ளே அது இதுன்னு நினைக்காம சீக்கிரம் வெட்டுங்க"

"யாரை ?"

"அருவா காலுக்கு கீழேதான் இருக்கு வேணுமா?"

"ஏன் ஏன் இப்பிடி கொலைவெறியா இருக்கே ? நறுக்குன்னா நறுக்குறேன், வேட்டுன்னா ச்சே ச்சீ வெட்டுன்னா வெட்டுறேன், இன்னும் என்னவெல்லாம் நறுக்கணும் தா...."

"நாலு பச்சைமிளகாய் எடுத்து நறுக்குங்க, அப்புறம் நாலஞ்சி பல் பூண்டு எடுத்து, கொஞ்சூண்டு இஞ்சி எடுத்து நல்லா இந்த கப்புல போட்டு இடிச்சு தாங்க"

"அவ்வ்வ்வ்வ்வ்வ் ஊருக்கு டிக்கெட் எடுத்திட்டியாலேய் தம்பி..."

அவனும் என் அவஸ்தை புரிந்தவனாக [[சிரிச்சுட்டே இருக்கான் ராஸ்கல்]] "ஆமா டாடி அது நேற்றைக்கே எடுத்தாச்சு"

"எலேய் நீ சும்மா இரு, நீங்க இங்கே வாங்க அந்த சட்டியை அடுப்புல தூக்கி வச்சி அடுப்பை பத்த வையுங்க"
"நீ எனக்கு எம்புட்டு செல்லம் தெரியுமா ?" ஹி ஹி...

"மஸ்கா மாலீஸ் ஒன்னும் வேண்டாம், கொஞ்சூண்டு எண்ணெய் சட்டியில ஊத்துங்க, கொஞ்சூண்டு கடுகு அள்ளிப் போடுங்க...."

"அய்யய்யோ அம்மா ஆத்தா....கடுகு வெடிச்சி சிதறுதே"

"ம்ஹும்....எனக்கு இத்தனை நாள் எப்பிடி இருந்திருக்கும், ம்ம்ம்ம்ம் அந்த கறிவேப்பிலை எடுத்து சட்டியில போடுங்க"

"அய்யய்யோ சட சட'ன்னு பொரிஞ்சி இப்பிடி பயங்காட்டுதே...?"

"அந்த வெட்டுன வெங்காயத்தை உள்ளே அள்ளிப் போடுங்க, போட்டு கிண்டி"கிட்டே இருங்க.."

"சென்னை போனா கண்டிப்பா கிண்டி போவேன்"
"நான் கரண்டி எடுத்து கிண்டி"ன்னு சொன்னேன், அப்புறம் அந்த இடிச்சி வச்ச இஞ்சிப்பூண்டு எடுத்து போட்டு வதக்குங்க"

"நீதான் இப்போ என்னை வதக்கிட்டு இருக்கே"

"என்ன ?"

"ஹி ஹி" காலுக்கடியில் அருவாள் சாக்கிரத மனோ....

"அப்புறம் அந்த அவித்த மேஸ் பட்டட்டோ எடுத்து உள்ளே போட்டு நல்லா கிண்டுங்க அப்பிடியே கொஞ்சூண்டு மஞ்சள் போடி.........ச்சே ச்சீ மஞ்சள் பொடி....."

"நான்தான்னா உனக்குமா டங் சிலிப் ஆகுது ?"

"ஆங் உங்களுக்கு வாக்கப்பட்டுருக்கேனே....சரி....இனி ஏதாவது சட்டியில போடனுமான்னு "நல்லா" யோசிச்சு சொல்லுங்கப் பார்ப்போம் ?"

"ப்பூஊஊஊ.........உப்பு போடனும், இது கூட எனக்குத் தெரியாதா என்ன ?"

"ச்சே இன்ட்ரஸ்டா போயிகிட்டு இருந்தது இப்பிடி சப்புன்னு போயிறிச்சே...?"
ஆஹா.....இதை சொல்லைன்னா பூரிக்கட்டை அடி குடுக்கலாம்னு பிளான் பண்ணி இருப்பாயிங்க போல....

ஆக...பட்டட்டோ பாஜி ரெடி, கீழே இறக்கி வச்சி...ஒரு பாத்திரத்தில் போட்டு, பாவ் கையிலெடுத்து பியித்து என் வாயில் ஊட்டி விட்டாள் செல்லம்....சுவர்க்கம் பூமியில் தெரிந்தது எனக்கு....!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் "மனோ"கரா...?

Sunday, December 1, 2013

நண்பனின் நண்பனுக்கு அசத்தலாக உதவிய பதிவுலக சக்கரவர்த்தி !

கீழே உள்ள ஸ்கூல் பையன் லிங்கை வாசித்து விட்டு அப்புறமா கீழே வாசிக்கவும்.


ஷாபி சேட்டன் பஹ்ரைன் வந்துவிட்டதாக அறிந்த நான், அவருக்கு போன் பண்ணவில்லை காரணம் அவர் லீவுக்கு போயிருந்த நாட்களுக்கான பணி சுமைகளை தீர்த்து முடிக்கும் பிஸி என்னவென்று எனக்குத் தெரியும் அதனால் அவரை தொந்தரவு செய்ய இயலவில்லை.
ஒரு பிரச்சினை காரணமாக ஜி எம்"மை காணப் போன எனக்கு, அவர் இல்லாததால் முதலாளி ஆபீசில் இருந்தபடியால் முதலாளி செகரட்டரி "மனோஜ் அந்த ஆளை பார்ப்பதை விட முதலாளி இருக்கிறார் அவரைப் பார்த்து செல்" என என்னை சோபாவில் அமரவைக்க...

கொஞ்ச நேரம் கழித்து முதலாளி ஆபீசில் இருந்து திடீரென வெளியே வந்தது ஷாபி சேட்டன், என்னைப் பார்த்ததும் கட்டி அணைத்துக் கொண்டு, கரம் பற்றினார், பயங்கர பிஸி கையில் மூன்று போன்கள், மூன்றுமே ரிங்காகிக் கொண்டிருக்கிறது பேசக்கூட நேரமில்லாமல் பேசினார்.

மனோஜ்.....உன் நண்பன் செய்த உதவியை என் வாழ் நாட்கள் முழுவதும் மறக்க மாட்டேன், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல சென்னையில் இருந்தேன், உன் நண்பன் ஸ்கூல் பையன்தான் எனக்கு கண்ணாக இருந்தார், மிகவும் நல்ல குணமும் நல்ல மனசும் நிறைந்தவர் உன் நண்பன். [[பிடித்த கையை விடவே இல்லை]]

படபடவென்று பேசினார், செகரட்டரி மேடம் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார், கண் ஆபரேஷன் என்னாயிற்று என்று கேட்டதற்கு, ஆபரேஷன் செய்ய வயது பத்தாது என்று பெங்களூரில் டாக்டர் சொல்லிவிட்டதாக சொன்னார்.

முன் பின் தெரியாத ஒரு நண்பன், அவன் வீட்டிற்கே என் குடும்பத்தை அழைத்து விருந்து வைத்தான் என்றால் ? ஒ மை காட்....நான் கொடுத்து வைத்தவன்...தமிழன் விருந்தோம்பல் பற்றி படித்து இருக்கிறேன், ஆனால் நேரில் இப்போதுதான் பார்கிறேன், இதே கேரளா என்றால் முன் பின் தெரியாதவனை அவன் இருக்கும் தெரு பக்கம் கூட கூட்டிட்டு போகமாட்டான்...!

ரொம்ப நன்றி மனோஜ்.....ஸ்கூல் பையனுக்கும் அவர் குடும்பத்திற்கும் எனது நன்றிகளை சொல்லிவிடு, இனி சென்னை போனால் உன் நண்பர்களை பார்க்காமல் திரும்ப மாட்டேன் என்று கண்ணில் கண்ணீர் மல்க கூறினார், இன்னும் பிடித்த கையை விடவே இல்லை.

அவர் பேசிய ஒவ்வொரு  பேச்சிக்குமிடையில் அவரின் கரத்தின் இறுக்கம் எனக்கு பல அர்த்தங்களை புரிய வைத்துக் கொண்டிருந்தது, நண்பன் உதவிய உதவி எப்படி என்று அவர் பேசியதை விட, கரம் பற்றலை வைத்து நன்றாக உணர்ந்து கொண்டேன்.

கடைசியாக அவர் என்னிடம் கேட்டது "சென்னை ரொம்ப அழகா இருக்குல்ல ?"

"அப்பிடியா நான் பார்த்ததில்லை அங்கே போனதே இல்லை சேட்டா"

கிண்டல் பண்றானோன்னு நினைச்சுட்டே "என்ன நீ பார்த்ததில்லையா ?"

"நான் மும்பைவாசின்னு உங்களுக்கு தெரியும்தானே ? அதனால கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி'யோடு சரி, இப்போ ஆபீசர் நண்பராக கிடைத்தமையால் நெல்லையையும் சுற்றி பார்த்து வருகிறேன் அதோடு சரி, முடிந்தால் இம்முறை நண்பர்களை சந்திக்க போகவேண்டும்" என்றேன் ஆச்சர்யமாக பார்த்து சென்றார்.

ஸ்கூல் பையனுக்கும் அவர் குடும்பத்துக்கும், உதவிய நண்பர்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை சொல்லி வணங்குகிறேன்....

பதிவுலகம் எனும் ஒற்றை சொல் மூலம் நண்பர்களை பெற்ற நான் பாக்கியம் நிறைந்தவன் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது...!

ஷாபி சேட்டனை சந்தித்தபின் பதிவு எழுதலாம் என்று இருந்தேன் ஆனாலும் சற்று தாமதமாகி விட்டது.

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!