கொல்லாம்பழம் [முந்திரி பருப்பு பழம்] சீசன்ல எங்க ஊர்ல கலர்கலரா விதவிதமா பழுத்த பழங்கள் கிடைப்பதுண்டு....துண்டுதுண்டா வெட்டிப்போட்டு உப்பும் மிளகும் கலந்து ருசிக்க ருசிக்க ரசித்து சாப்பிடுவதுண்டு....
திகட்டியதும், மிஞ்சிய பழங்களை சாறெடுத்து கண்ணாடி பாட்டல்களில் ஊற்றி மண்ணுக்குள்ளே புதைச்சு ஊறவைப்போம்...ஐந்தாவது நாள் குப்பிகளை வெளியே எடுத்து, புளியங்காயில் உப்பு தேய்த்து அந்த கொல்லாம்பழ சாறை [கள்ளாம்] குடிப்போம், ஒருமாதிரியா புளிச்சிட்டு சுவையாக இருக்கும்.
ஒருநாள் எங்க அம்மா வீட்டுக்கு பின்னால வீடு பெருக்கினப்போ, கேஸ் முட்டி ஒரு குப்பி மூடி மண்ணுக்குள்ளிருந்து மேலே எழும்பி நிற்க...தோண்டி எடுத்தா...கொல்லாம்பழ கள்ளு...[போதையெல்லாம் இருக்காது]
எங்க ஊர்ல மூன்று தெரு உண்டு...தெருத் தெருவா அவுந்த என் டவுசரை தூக்கி பிடிக்கவச்சி ஓடவிட்டு தோண்டி கயிறால் வெளுத்து விட்டாங்க அம்மா...
ஆனால் அந்த பழ சாறை மண்ணுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தது எங்க சின்ன அண்ணன் என்பது அம்மாவுக்கு தெரியாது நானும் சொல்லவில்லை...நான் அடி வாங்க வாங்க ரசிச்சிகிட்டே பின்னாடியே ஓடிவந்தான் பாருங்க அந்த வில்லன்ன்ன்ன்ன்...
வாழ்க்கை குறிப்பிலிருந்து மாறாத நினைவுகள்.