Wednesday, July 31, 2013

அய்யய்யோ ஓடியாங்க ஓடியாங்க கள்ளன் கள்ளன்...!

பஹ்ரைன்ல இருந்து லீவுக்கு ஊர் போன எங்கள் பெரியப்பா மகன், கன்னியாகுமரிக்கு போக பைக்கில் போகும் போது பொத்தயடி வழியில் மத்தியான நேரம், யாருமற்ற ஒரு பாதையில் போக...அங்கே ஒரு பேங்கில் வேலை பார்க்கும் எங்கள் சித்தப்பா மகள் நடந்து வருவதைக் கண்டு, பிரேக் அடித்து, அக்கா...என்று கூப்பிட...

சட்டென்று அவனை பார்த்துவிட்டு கழுத்தில் இருந்த நகையை கெட்டியாக பிடித்துக்கொண்டு கீழே குனிந்து உட்கார்ந்து கொண்டு...
"அய்யய்யோ ஓடிவாங்க ஓடிவாங்க காப்பாத்துங்க காப்பாத்துங்க கள்ளன் கள்ளன்..." என்று கத்த....தம்பிக்கு புரிந்து போயிற்று தான் அக்காளை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும், அல்லாமலும் தாடி, ஆளும் நல்ல கலர், கருப்பு வைரம்....!

கொஞ்ச நேரம் "கள்ளன் கள்ளன் காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று கத்திய அக்காவுக்கு காப்பாத்த யாருமே வரவில்லை என்றதும், மெதுவாக கண்ணை திறந்து பார்க்க....

பைக்கில் இருந்து இறங்காமல், அக்கா நான்தான் என்று அவன் பெயரை சொல்ல.....எங்க அக்கா சிரிச்ச சிரிப்பு இருக்கே, இப்பவும் அவர்களைப் பார்க்கும் போது  இதை சொல்லி சொல்லி சிரிப்பேன்.

கள்ளன் என்று அலறிய தம்பி பைக்லேயே வீடு போயி சேர்ந்து, தம்பிக்கு சாப்பாடும் கொடுத்து எங்கள் நிலைமையையும் [[நாடோடி வாழ்க்கை]] நாங்கள் பல வருடங்கள் எங்கள் குடும்பங்களை சந்திக்க முடியாமல் இருப்பதையும் சொல்லி அழுதிருக்கிறாள்....!
------------------------------
--------------------------------------------------------

இப்போ இங்கே பஹ்ரைனில் [[ஊரிலும்தான்]] ஐ போன் மற்றும் சாம்சங் கேலக்ஸ்சி போன்ற சாதனங்கள் வருகையால் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புகள் பெருகி வருகிறது, எழுபது சதவீதம் பேர்களிடமும் இந்த போன்கள் இருக்கிறது.
 
சும்மா போறவாற இடங்களில் எல்லாம் இவர்கள் இதை உபயோகிப்பதால், வாய்பேச்சு குறைந்து, விரல்கள் மட்டுமே நர்த்தனம் ஆடுகின்றன, வீட்டுல மனைவி பிள்ளைங்க கூட பேசுவாங்களோ இல்லையான்னும் தெரியல...!
பாவிங்க ரோட்டுல நடக்கும் போதும், ரோட்டை கிராஸ் பண்ணும்போதும் இதை நோண்டிகிட்டே நடப்பதுதான் நான் சொல்லும் விபத்தின் காரணம்...உதாரணமாக....
 
வேலை முடிந்து லாண்டரியில் துணி வாங்கும்படி போய்கொண்டிருந்தேன், அங்கிட்டும் இங்கிட்டும் கார்கள் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ரோட்டினை கடக்கவேண்டும் என்பதால், கார்கள் வராததை யூகித்து ரோட்டை கடக்கும் வேளையில் கவனித்தேன் ரோட்டுக்கு அங்கிட்டு எதிரே ஒருத்தன் ஐ போனை நோண்டிக் கொண்டிருந்தான்.
 
நானும் கிராஸ் செய்ய அவனும் கிராஸ் செய்ய....அவன் போனை நொண்டிக்கொண்டே ரோட்டை கடக்க முயல....நான் எதிரே வருவது தெரியாமல் போனை டைப்ப.....நான் அப்படியே ரோட்டில் நின்றுவிட்டேன், காரணம் இவன் என்னை கவனிக்காமல் வந்து கொண்டிருக்கிறான்.
 
எப்படியும் என்மீது மோதுவான் என்று ஸ்டெடியாக நின்று கொண்டேன், நான் யூகித்தபடியே சரியாக என்மீது வந்து மோதினான், மோதியவன் அதிர்ச்சியாக பார்க்கவும் நான் ஒரு அப்பு அப்ப போவது போல பாவனை செய்ய [[மிரட்டலுக்குதான் அதுக்குள்ளே நம்மள அவன் அடிச்சுறப்டாது இல்ல]] குனிந்து ஓடினான் பாருங்க, அந்த நேரம் ஏதாவது கார் வந்து மோதினால் ?
அக்கரை கடந்து ஹிந்தியில பச்சையா திட்டினேன், செத்துறப் போறேடா பரதேசின்னு...!

எப்பா நம்மாளுங்க யாரும் ரோட்டுல நடக்கும் [[கடக்கும்]] போது தயவுசெய்து ஐ போன் மற்றும் இன்டர்நெட்டுகளை உபயோகிக்காதீங்க, எப்பவும் ஒருப்போல இருக்காது ஆமா...!


மனோ"தத்துவம் : சாணி அள்ளுனாலும் சாணக்கியமா இருக்கனும்.

 

Sunday, July 28, 2013

எலேய் அருதப்பய மொவன...!


சைக்கிள் குரங்கு பெடல் மிதிச்சு பழகுனப்போ ஒரு பாட்டி மீது போயி மோதி கீழே தள்ளிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடும்போது "எலேய் அருதப்பய மொவன எலேய் நீ துரைராசு மொவன்தானேலேய்  [[மகன்]] போலெய் போலெய் உன் வீட்டுக்கே வந்து உன்னை கொன்னேப்புடுவேன்"ன்னு சொல்ல...

அப்புறமாதான் தெரிஞ்சிது எங்க அப்பாவும் சின்ன பிள்ளையில இந்த பாட்டி மேலே இதே ஸ்டைல்ல சைக்கிளை ஏத்தி இருக்கார், அதான் கரெக்ட்டா நான் யாருன்னு கண்டுபிடிச்சுருக்கு கிழவி அவ்வவ்....!

எங்க அப்பா சிரிச்ச சிரிப்பு இருக்கே....இப்பவும் அப்பா சிரிப்பு காதில் கேட்கிறது இனிமையாக....!
---------------------------------------------------------------------------------

அமேரிக்கா வாங்க, கனடா வாங்க, ஆஸ்திரேலியா வாங்க, சிங்கப்பூர் வாங்க, மலேசியா வாங்க, தாய்லாந்த் வாங்க, பிலிப்பைன்ஸ் வாங்க, லண்டன் வாங்க, பாரீஸ் வாங்க, சுவிஸ் வாங்க, துபாய் வாங்க, எகிப்து வாங்க, எத்தியோப்பியா வாங்க, இஸ்ரேல் வாங்கன்னு கூப்பிடுறாங்களே அல்லாமல் ஒரு செல்லமும் பிளேன் டிக்கெட் அனுப்புறேன்னு சொல்லவே மாட்டேங்குறாங்க, இது எனக்கு மட்டும்தானா ?
------------------------------------------------------------------------------------
இப்பமும் ஊருக்கு போனால் காலை ஆறு மணிக்கு மேல எங்க அம்மா என்னை தூங்க அனுமதிப்பது இல்லை, எழும்பலைன்னா தெரியாத மாதிரி தண்ணீர் என் முகத்துக்கு வந்துவிடும்.

என் பையன் இப்போ பனிரெண்டு மணி வரை தூங்குறான் அவனை என்ன செய்தும் எழுப்ப முடியவில்லை என்கிறாள் வீட்டம்மா.

"சரி சரி தூங்கட்டும் தூங்கட்டும், உத்திரவாத காலம்னு ஒன்னு வருமில்லையா அப்போ தூங்க முடியாதே இப்போ ரெஸ்ட் எடுக்கட்டும் விடு" என்றேன்...!
-------------------------------------------------------------------------------------
குழந்தைகள்ன்னா எனக்கு உசிருன்னு தெரிந்தே பிரித்து வைத்துவிட்டானா ஆண்டவன்....ஐ மிஸ் யூடா செல்லங்களே, என் குழந்தைகள், அக்காமார், அண்ணனுங்க குழந்தைகள் படை சூழ தெம்பா நடந்து போன, பர்ஸ் பதம் பார்க்கபட்ட நாட்கள் கவிதையின் உச்சமான பனித்துளி நினைவுகள்...!
-------------------------------------------------------------------------------------
எங்கள் சொந்தத்தில் ஒரே குடும்பத்தில் தமிழ் பேராசிரியர் மற்றும் ஹெட் நர்ஸ் தம்பதிகளின் பிள்ளைகள் இருவர் அதில் ஒருத்தன் பாதிரியார் [[பாஸ்டர்]] ஆகிட்டான், இன்னொருத்தன் மகா ரவுடி......!
இது எப்பிடி ஒரே வீட்டுக்குள் சாத்தியமாயிற்று என்று இப்போதும் எனக்கு ஆச்சர்யமே....!
------------------------------------------------------

தன் வாழ்வில் முன்னேற விரும்புபவன் ஆறு குணங்களை விட்டுவிட வேண்டும் என்கிறது விதுரநீதி. அவை 1. தூக்கம், 2. சோர்வு, 3. அச்சம், 4. கோபம், 5. சோம்பேறித்தனம், 6. காரியத்தை ஒத்திப்போடுதல்.
------------------------------
------------------------------------------------------


பொறுத்தவன் பூமி ஆள்வான்....
  • மனோ'தத்துவம் : பொறுத்தவன் ஆண்டி ஆவான்...!

Friday, July 26, 2013

திருநெல்வேலி போலீஸுக்கு அடி உதை, ஏன்...?

ஒரு பையன் தற்கொலை பண்ணிக்கப் போனான்.
ஆனா, கடைசியில மனம் திருந்திட்டான்.
*
*
*
ஏன்?
*
*
*
ஏன்னா?
*
*
*
கடைசியிலதான் அவன் காதலி அந்த
வார்த்தையை சொன்னா...
*
*
*
என்ன சொன்னா?
*
*
*

"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா!"

நன்றி : வானம்
----------------------------------------------------------------------------------
அனைத்து நாடுகளிலும், வாழும் இலங்கை தமிழர்களிடையே, பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும்' என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்//

முதல்ல இந்தாளை தூக்கி கடல்ல போடுங்கய்யா, இந்தாளு வாயை திறந்தாலே அங்கே தமிழனை கொல்கிறார்கள், தமிழன் தமிழன் என்று உசுப்பேத்துற தெலுங்கன் வாழ்க ப்பூப்ப்....
------------------------------------------------------------------------------------
தனித் தெலங்கானா அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதியில் 23 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
------------------------------------------------------------------

நெல்லையில் கைதிகளை ஆஜர்படுத்த கோர்ட்டுக்கு சென்ற போலீசாரை வக்கீல்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் 40 வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதை கண்டித்து, வக்கீல்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் கோர்ட்டுக்கு வரவும் தடை விதித்துள்ளனர்.
---------------------------------------------------------
கன்னியாகுமரியில் நேற்று காலை திடீரென கடல் நீர் உள்வாங்கியது. விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 2 படகுகளும் தரை தட்டி நின்றன. இதனால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நீண்ட நேரமாக துவங்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து தரை தட்டிய படகுகள் இயல்பு நிலைக்கு வந்தது. தொடர்ந்து படகுகள் இயக்கப்பட்டது.
---------------------------------------------------------
பதினான்காவது வருஷம் கார்கில் வெற்றி கொண்டாட்டம்//

என்னைப் பொறுத்தவரை கார்கில் போரில் நாம் தோற்று விட்டோம்...!
-------------------------------------------------------

அரிதான ஒரு படம், அண்ணன் பிரபாகரனும், அண்ணன் வைகோ"வும் கூட ஒரு புலிக்குட்டி....! உங்கள் பார்வைக்கு.
-----------------------------------------------------------------------

மனோ'தத்துவம் : எல்லாருக்கும் எல்லாமே தெரியும்னு நாம பேசனும்.

Thursday, July 25, 2013

சேலத்து மாம்பழத்திலும் வில்லங்கமா...?

முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகைகள், மும்பை ரெட்லைட் ஏரியாவில் [[அரசின் அனுமதியில் நடக்கும்]] தொழில் செய்தால் போலீஸ் கைது செய்யுமா? - என்னய்யா உங்க சட்டம்? தமிழ்நாடும் மும்பையும் இந்தியாவுலதானே இருக்கு ?
---------------------------------------------------------------------------------------
நாம ஒன்னு பேசுனா நமக்கு கீழே இருக்குறவன் நாலு பேசுறான், கைபிள்ளன்னு நினச்சிட்டான் போல, உண்மையான சுபாவத்தை இன்னைக்குதான் பார்த்துருப்பான்னு நினைக்கிறேன் - அருவா பலமாக வெளியே வந்துருச்சு, பயபுள்ள ஆடிப்பூட்டான், வெளியே போயி டேமேஜர்ன்னு திட்டி இருப்பானோ ஹி ஹி...?
---------------------------------------------------------------------------------------
சேலத்து மாம்பழம் சேலத்தில் விளையல்லயாமே அப்பிடியா ?  ஒரு பதிவில் படித்தேன், அப்போ அது சேலம் மாம்பழமா இல்ல "சேலத்து" மாம்பழமா ? அப்போ "சேலத்து" என்றால் என்ன? தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.
--------------------------------------------------------------------------------------
கனிமொழிக்கு முக்கிய பதவியை வழங்க கருணாநிதி திட்டம் - இதற்குதான் ஆசைபட்டாயா கருணா ? முக்கிய பதவியை முக்காமல் கொடுப்பதற்கு ?
----------------------------------------------------------------------
ஆங்கிலேயர் ஆட்சியில் நமக்கு குற்றாலத்தில் குளிக்க தடை இருந்தது, ஆங்கிலேயர்கள் மட்டுமே குளிக்கலாம், அதற்காக நம்மாளுங்க கோர்ட் படிகள் ஏறியும் மசியாத அரசாங்கம், தொடர் போராட்டங்களால், அவர்கள் குளிக்கும் போது நாம் குளிக்க கூடாது என்று ஆனதாம்....! எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை ?
-----------------------------------------------------------------------
காசுக்காக தடாலடி செய்திகளை போடும் மீடியாக்களை விட, வலைப்பதிவுகள் காசுக்காக செய்திகள் போடுவதில்லை, பத்திரிக்கைகளுக்கு நன்றி என்று போர்டு போட்டு வந்த சினிமாக்கள் எல்லாம் இப்போது இணையதளங்களுக்கு நன்றி என்று போட்டு வருகின்றன...!
----------------------------------------------------------------------
கச்சதீவை பற்றி வாய் கிழிய பேசும் எழுதும் பத்திரிகை மீடியாக்கள், இந்தியா இலங்கை கடல் எல்லை எங்கே இருக்கிறது என்பதை போயி பார்த்து தங்கள் மீடியாக்களில் வெளி இடலாமே ?
---------------------------------------------------------------------

ஹன்சிகாவுடன் காதல் ஒப்புக்கொண்ட சிம்பு - அய்யோடா சொப்பனசுந்தரி கதை மாதிரி இருக்கே ? ஆமா இது எத்தனை கை மாறி வந்துருக்குன்னு தெரிஞ்சுமா காதல் ? அவ்வ்வ்வ்வ்.....!!!

Tuesday, July 23, 2013

உங்க ஹோட்டல்ல கில்மா உண்டா...?

ஆன் லைன்ல சீப் ரேட்டுல [[ரம்ஜான்]] ரெண்டு பேருக்கு ரூம் புக் பண்ணிட்டு, மூனு பொண்டாட்டி [[அரபி]] ஆறு குழந்தங்கள [[பெரிய]] கூட்டிட்டு வந்தான் பாருங்க, அவரு அறிவாளியாம், நமக்கு அறிவில்லைன்னு சிம்பாலிக்கா நாடகம் காட்டுனான் பாருங்க, விடுவோமா நாம யாரு ? எல்லாருக்கும் எக்ஸ்ட்ரா சார்ஜ் போட்டு அவன் பர்ஸ் வெயிட்டை குறைச்சொம்,வச்சொமில்லை செக்கு.
---------------------------------------------------------------------------------------------

பஹ்ரைனில் சூடு நெருப்பைப் போல கொளுத்துகிறது, ஏசி'யில் இருந்தும் வேர்த்து ஊற்றும் அளவுக்கு சூடு....! கட்டிட வேலை தொழிலார்களை நினைத்தால் மனசு விம்முகிறது...!
---------------------------------------------------------------------------------------------
எங்கள் ஹோட்டலுக்கு ஓமானில் இருந்து வந்த ரெண்டு விருந்தினர் முன்னிலையில் எங்கள் இரண்டு ஸ்டாஃப்கள் கேலியாக அவர்களுக்கு தெரியாது என்று நினைத்து ஹிந்தியில் பேசிவிட, பஞ்சாயத்து என்னிடம் வந்தது.

" ஏன்டா மஸ்கட்ல, ஓமான் நாட்டுல இருக்குற அரபிகளுக்கு ஹிந்தி பேசத்தெரியாவிட்டாலும் அவர்களுக்கு நன்றாக புரியும் என்பது இன்னுமா தெரியாம இருக்கீங்க ?"

"தெரியாம போச்சு சார் எம்புட்டோ மன்னிப்பு கேட்டும் அவனுக உங்ககிட்டே கூட்டிட்டு வந்துட்டானுக"

" சரி அவன் என்ன கேட்டான் முதலில் உங்களிடம் ?"

" உங்க ஹோட்டல்ல கில்மா உண்டா என்று கேட்டான் சார், நான் சொன்னேன் இது இண்டர்நேஷனல் ஹோட்டல் உலக முழுவதும் எங்களுக்கு நாலாயிரத்திற்கும் மேலான ஹோட்டல்கள் உண்டு, இங்கே நல்லவர்கள் மட்டுமே வருவார்கள் என்றேன், அதற்கு அவர்கள் என்னை திட்டினார்கள், அதான் கேலியாக சிரித்து விட்டோம்" என்றான்.

அரபிகளை பார்த்து நான் " ஓகே டியர் கால் போலீஸ்..."

"ஒய்....?"

" நீ கூப்புடுறியா போலீஸை இல்ல நான் கூப்பிடட்டுமா...?" என்று சத்தமாக சொல்லிவிட்டு போலீஸுக்கு போன் செய்வது போல ஆக்க்ஷன் செய்ய....வல்லா..... என்று அலறி ஓடுனாணுக பாருங்க சிரிச்சு வயிறு வலி இன்னும் தீரல...! கில்மா வேணுமாம்ல கொய்யால.

நீதி : எல்லாருக்கும் எல்லா பாஷையும் தெரியும்னு "நம்ம" மனசுல நினச்சுகிட்டு பேசணும் ஆமா....
------------------------------------------------------------------------------------------------ 
என் நண்பன் ஒருவனிடம் ஆயிரம் தினார் [[சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்]] வட்டிக்கு வாங்கிய ஒரு பங்களாதேஷ் பெங்காலி ஒருவன், காசை திருப்பி தர நண்பன் வீட்டுக்கு வருகிறேன் என்று போன் செய்துவிட்டு நண்பன் ரூமிற்கு வந்தவன், பணத்தை கொடுக்குமுன்பே ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டான் அந்த இடத்திலேயே...!

ஆம்புலன்ஸ் வர அவர்களே சொல்லிவிட்டார்கள் ஆள் காலி என்று, பெங்காலி பாக்கெட்டில் இவன் காசு, நண்பர் ஒருவர் அவனிடம் கேட்டார் "அவன்தான் செத்து போயிட்டான்னு முதல்லையே உனக்கு தெரிஞ்சுதே உடனே அவன் பாக்கெட்டில் கையை போட்டு பணத்தை எடுக்க வேண்டியதுதானே கேனையா...?"

"அது எப்பிடி இறந்து போனவன் பாக்கெட்டில் கையைப் போட்டு பணத்தை எடுப்பது" என்று மனிதாபிமானம் பேச....எனக்கோ கண்ணில் கண்ணீர் முட்டிவிட்டது, இவளவுக்கும் நண்பன் ஒரு மலையாளி....!
--------------------------------------------------------------------------------------------------
டியூட்டியில் எங்கள் ஹோட்டல் செக்கியூரிட்டி [[அரபி]] ஒருவன், சர் எனக்கு தலை கிறு கிறுன்னு வருது உடனே ஆஸ்பிட்டல் போகனும்னு சொல்லவே....

"அப்பிடியா உடனே இதோ கார் ஏற்பாடு செய்கிறேன்" என்று இன்டர்காம் பட்டனை அழுத்தப் போக.

"சர் சர் வேணாம் என்கிட்டே கார் இருக்கு அதுல போயிக்குறேன்"

"ஏ உனக்குத்தான் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"ரடிக்குதே அப்புறம் எப்பிடிய்யா காரை ஓட்டுவே...?" 

"அப்பிடி ஒன்னும் பலமா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்ல சர் நான் போயிருவேன் நோ பிராப்ளம்"

"ஓகே டேக் கேர் ஏதானும் உதவி வேணுமானால் எனக்கு உடனே போன் செய் ஓகே.."

"ஓகே நன்றி சார் [[சுக்ரன்]]..."

நானும் கொஞ்சம் பதட்டமாக எங்கே அட்டாக் கிட்டாக் வந்து பிரச்சினை ஆகிற கூடாது என்று, இவன் கிளம்பி போன டைம் திரும்பி வந்த டைம் எல்லாம் எல்லாம் எழுதி ஜி எம்"மிற்கு ரிப்போர்ட் அனுப்பி வைத்தேன்.

அடுத்தநாள் என்னை சந்தித்த ஜி எம்....."என்ன மனோஜ், நேற்று உசேன் ஹாஸ்பிட்டல் போனானோ ? உனக்கு நல்லா தெரியுமா...? என்றார் 

"சர் அவன்தான் தலை கிர்ர்ரடிக்குது ஹாஸ்பிட்டல் போகனும்னு சொன்னான் அதான் அனுப்பினேன்"

"சரி, தலை கிர்ர்ர்ர்ரடிக்குரவனை அவன் காரில் எப்படி போக அனுமதித்தாய் ? "

"அவன் என்னால் போக முடியும் என்று தீர்க்கமாக சொன்னதால் அனுப்பினேன் சர்..."

"நீ உருப்படுறாப்ல இல்லே மனோஜ்..."

புரிஞ்சிபோச்சு எனக்கு செக்யூரிட்டி எனக்கு பல்பு கொடுத்துட்டான்னு...!

"என்னாச்சு சர்...?"

"அடேய்.......... அவன் நீ ரிப்போர்ட் எழுதி அனுப்பிய டைம் முழுவதும் அவன் கேர்ள் ஃபிரண்ட் கூட k f c ரெஸ்ட்டாரண்ட்ல இருந்து சாப்புட்டுகிட்டு இருந்தான், நானும் அங்கேதான் இருந்தேன்"

ச்சே இப்பிடியா பல்பு குடுப்பானுக முடியல....!

படங்களுக்கு நன்றி கூகுள்.


Monday, July 22, 2013

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

பதிவுலகம் தன்னை மறுபடியும் மீண்டும் ஒரு எழுச்சிக்கு தயார்படுத்த எழும்புவதில் எனக்கு எல்லையில்லா சந்தோசம், காணாமல் போன பதிவர்கள் புத்துணர்ச்சியோடு திரும்பி வருவது மனதுக்கு சந்தோசம், இதில் டெரர் குரூப் தம்பிகள் உற்சாகத்தோடு மீண்டும் எழுத வேண்டும், விக்கி உலகம் விக்கி'யும் பதிவுகள் அதிகம் எழுதவேண்டும் என்பது என் ஆவல்...!

காணாமல் போன கனவுகள் [[http://rajiyinkanavugal.blogspot.com/2013/07/blog-post_8644.html]] தலைப்பில் பதிவுகள் எழுதி வரும் தங்கை ராஜி'யின் "என் முதல் கணினி அனுபவம்" என்ற தொடருக்கு அவரின் பதிவுலேயே தொடர் எழுத எனக்கும் அழைப்பு இருக்கும் என்ற பயத்தில்தான் அவரின் பதிவை வாசித்தேன்.

அப்பாடா என் பெயர் இல்லையென்றதும் சந்தோஷத்தில் கமெண்டிவிட்டு ஓடியே போனேன்.

ஆனால் நாம ஓடினாலும், நீ எங்கே போனாலும் உன்னை விடுறதா இல்லைன்னு தம்பி தமிழ்வாசி பிரகாஷ் மாட்டிவிட்டுட்டான், என்ன செய்ய உங்க தலை எழுத்து ஹி ஹி இதோ எனது கணினி அனுபவங்களை சொல்றேன்.

எனக்கு வேலை பார்க்கும் இடத்தில்தான் கணினி அறிமுகம் அதுவும் பஹ்ரைனில், ஆரம்ப காலத்தில் நான் வெயிட்டராக வேலை செய்யும் போது வேலை சம்பந்தப்பட்ட ஃபைல்களை, பில்களை சேவ் செய்து வைப்பதுதான் என் வேலை.

படிப்படியாக பதவி உயர்வு பெற்று உயர்ந்து ரிஷப்ஷன் இன்சார்ஜ் ஆனபிறகுதான் கம்பியூட்டர் என் வசம் ஆனது என்றாலும், அது வேலை விஷயத்திற்குதான் பயன்பட்டது.

அந்த நேரத்தில் நண்பர் ஒருவருக்கு வேலையும் விசாவும் அரேஞ்ச் செய்து கொடுத்ததுக்கு அன்பளிப்பாக, நான் ஒரு முறை ஊர் வரும்போது, தனது லேப்டாப்பை என் மகனுக்கு கொடுத்துவிடு என்று சொல்லி அன்பளிப்பாக தந்தார்.

அதை ஊருக்கு [[லேப்டாப்கள் ஊரில் பெரிய பணக்காரர்களின் கையில் இருந்த நாட்கள்]] கொண்டு போயி நானும் மகனும் வீடியோ கேம் விளையாடினோம்.

அந்த சமயம் என் அக்கா பொண்ணு வந்து எனக்கு லேப்டாப்பின் சில விஷயங்களை சொல்லி தருவாள், நானும் சந்தேகங்களை கேட்டறிந்து லேப்டாப் கை வண்ணத்திற்கு வந்தது.

இங்கே பஹ்ரைன் வந்து வேலையில் ஜாயின் செய்யும்போது என்னை புதியதாக நட்சத்திர ஹோட்டலுக்கு அனுப்பினார்கள் அங்கே நெட் கனெக்ஷன் இருந்தபடியால், தமிழ் நியூஸ் பேப்பர் படிக்க கூகுளில் தட்டும்போது பல பதிவுகள் கண்ணுக்கு தெரிய, பதிவர்களுக்கு அவர்கள் மெயிலில் கமெண்ட்ஸ் அனுப்புவேன்.

எனக்கு அப்போது வலைத்தளம் இல்லாதிருந்தது. அப்புறம் மெதுவாக பேஸ்புக் நண்பர்கள், வலைத்தள நண்பர்கள் மூலமாக கணினியில் கலக்கி வருகிறேன்...!
front office சம்பந்தப்பட்ட வேலைகள்தான் எனக்குத் தெரியும் கணினியில், ஆனால் ஆடிட்டிங் சுத்தமா தெரியாது அதற்க்கு தனி கோர்ஸ் உண்டாம், இப்போது எங்கள் ஹோட்டல் நைட் ஆடிட்டிங்கையும் நான்தான் செய்கிறேன் ஒரே மாதத்தில் நைட் ஆடிட்டிங் நான் படித்து முடித்தது, எனக்கு டிரைனிங் தந்த பஹ்ரைன் அரபியே ஷாக் ஆகிவிட்டான்...!

எனக்கு முன்பு மூன்றுபேர் நைட் ஆடிட்டிங் தெரியாமல் கற்று கொடுத்தும் புரியாமல் வேறு இடங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர், எங்கள் ஹோட்டல் ஜி எம் இப்பவும் சொல்வார், "மனோஜ்........... ஜி எம் ஆகும் நாள் தூரத்தில் இல்லை அவன் கைகளுக்குள்தான் இருக்கிறது" என்பார்.

ஆக இதுதான் என் கணினி அனுபவம்.....அப்பாடா தப்பிச்சேன் நான் இனி யாரை கோர்க்கலாம் ?

மெட்ராஸ் பவன் சிவகுமார் 

கோவைநேரம் ஜீவா 

கே ஆர் விஜயன் 

உணவு உலகம் ஆபீசர் சங்கரலிங்கம் 

நாய் நக்ஸ் அண்ணன் நக்கீரன் 

மாட்டுனாயிங்கபா......வாங்க வாங்க பதிவுலகத்திற்கு உயிர்கொடுப்போம், வசதியாக இதோ சென்னை பதிவர்கள் சந்திப்பும் நடைபெற இருக்கிறது இல்லையா....!

Sunday, July 21, 2013

கிராமத்து மாந்தோப்பு வாசனை எப்படி இருக்கும் ?!

சின்ன பிள்ளையில் காற்றோடு பெய்யும் முதல் மழை எப்போடா வெறிக்கும் என்று ஆவலாக காத்திருப்போம், மழை நின்றவுடன் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நாங்க சிட்டாக பறந்து ஓடுவது மாந்தோப்புக்குதான்.

ஏனெனில் காற்றிலும் மழையிலும் அசைந்து மாங்காய்கள் கீழே விழுந்து கிடக்கும் அதை பொருக்கத்தான் இந்த ஓட்டம், அந்த மழையில் மாந்தோப்பின் மணம் இருக்கே...கோடி கொடுத்தாலும் மிகையாகாத மணம்...!
துளி துளியாக சொட்டும் மாமரத்தின் மழைநீர் அடடா தேகத்தில் சொட்டும் போது கிடைக்கும் சுகம் இருக்கே..... சொல்லி மாளாது, முதல் மழையில் விடைத்து கோபத்தில் எழும் பாம்புகளின் கோபம், எங்களைக் கண்டதும் அதுகள் ஓடும் வேகத்துலேயே புரியும்...!

இப்பிடித்தான் ஒருநாள் ஒரு மழை நாளின் போது, மாங்காய் பொருக்க ஓடினேன், மாங்காய்கள் பொருக்கி முடிந்ததும் இன்னும் எங்கேயாவது கிடக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய புதரினுள் ஒரு பெரிய விடலை மாங்காய், அதுவரை யார் கண்ணிலும் படவில்லை, அதைப்போல கண்ணைக் கவர்ந்த மாங்காய் எனக்கு கிடைக்கவும் இல்லை.
மனதில் சந்தோசம் புரையோட அக்கம் பக்கம் சுற்றி பார்த்தேன் எல்லாருமே போய்விட்டார்கள்....ஆஹா எனக்கே எனக்கா என்று அப்படியே நின்று அழகு பார்த்தேன் சற்று நேரம்.

சரி எடுப்போம் என்று குனிந்து எடுக்கவும் சடேரென்று ஒரு பாம்பு என்மீது பாய்ந்து தாவி ஓடியது.....!

இனி நீங்களே சொல்லுங்க முதல் மழைக்கு இனி மனோ மாங்காய் பொருக்க போவான்  போவான் போவான் போவான் ???
அடுத்த மழையும் வந்தது.......மழை நின்றதும் எல்லா வீட்டிலிருந்தும் பசங்க மாந்தோப்புக்கு ஓட.......நான் போகாமல் வாசலில் நின்று கொண்டிருந்ததை எங்க அம்மா பார்த்தாங்க.

என்னை தோளோடு கட்டி பிடித்தபடி "என்ன தம்பி நீ போகலையா மக்ளே [[மகனே]] ?

"போகலைம்மா எனக்கு மாங்காய் பிடிக்கலை [[மாங்கான்னா எனக்கு உசுருன்னு பெத்தவளுக்கா தெரியாது ?]]"

"எலேய் தம்பி.....பாம்பு பார்த்தியோ மக்ளே...?" [[அம்மான்னா அம்மாதான் போங்க...!]]

"ஆமாம்மா....பெரிய பாம்பு, அப்பிடியே என்மேல ஜம்ப் பண்ணி ஓடிச்சும்மா நல்லவேளை கடிக்கல..."
" அந்த பாம்புகள் ஒன்னும் கடிக்காதுலேய் தம்பி, மாறாக நம்மளை கண்டதும் பயந்து ஓடிவிடும் அதனால பயப்படாமல் போயி மாங்காய் பொருக்கி சாப்பிடு என்ன..."

அம்மா சொன்னா தைரியத்துக்கு கேக்கவா வேணும் ? ஓடினேன் பாருங்க....அன்னைக்குதான் எல்லா நாட்களையும் விட கூடுதலாக மாங்காய் பொருக்கி வந்தேன்....!


Thursday, July 18, 2013

சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன் என்றார் ஒரு எழுத்தாளர்...!!!

நான் காந்தி அல்ல என்றுதான் முதலில் பெயர் வைத்தார்கள், காந்தியவாதிகளின் கடுமையான எதிர்ப்பால் "நான் மகான் அல்ல" என்று பெயர் வைத்தார்கள், அதுதான் ரஜினியின் "நான் மகான் அல்ல." 

சின்ன வயசுல பேப்பரில் படித்த நியாபகம்...!
-----------------------------------------------------------------------------------------------------------
இங்கே மும்பையில் மெட்ரோ ரயில் வருமுன் கட்டப்பட்டு கொண்டிருக்கும் பாலங்கள் எல்லாம் பாளம் பாளமாக இடிந்து விழுந்து கொண்டிருக்குறது அதான் கொஞ்சம் பயமா இருக்கு.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆரம்ப காலத்தில் அதாவது நான் வலைத்தளம் தொடங்கும் முன்பு அநேகம் நாவல்கள் புஸ்தகங்கள் வாசிப்பது உண்டு அதில் மிகவும் பிரபலமான எழுத்தாளர் தமிழ் தமிழ் தமிழன் தமிழன் என்று உயிரை விட்டு எழுதுபவர் ஒருவருக்கு, ஈழத்தில் நடந்த இனப் படுகொலை பற்றி நீங்கள் எழுதினால் பலரை சென்றடையுமே என்று படுகொலை படங்களை அவருக்கு மெயில் அனுப்பினேன்.

வந்த பதில் "இனி நீ எனக்கு இதுமாதிரி மெயில் அனுப்பினால் சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன்" 

 பின்னே என்ன மண்ணாங்கட்டிக்குடா தமிழன் தமிழ்ன்னு எழுதுறீங்க ? உங்களுக்கு காசு பணம் புகழ் சம்பாதிக்க மட்டும்தான் தமிழனும் தமிழும் தேவைப்படுகிறதா ?
---------------------------------------------------------------------------------------------------------
சூது கவ்வும் படம் பார்த்தேன், என்கவுண்டர் வெள்ளைதுரையாக  வரும் பிரம்மாவுக்கு பின்னாடி வச்சிருந்த துப்பாக்கிய [[கள்ள]] எடுக்கும்போது துப்பாக்கி வெடித்து இடுப்பை பதம் பார்த்தது இல்லையா ?

உண்மையிலேயே என் நண்பனின் மாமா ஒருவருக்கு இப்படி கள்ள துப்பாக்கி வெடிச்சு புட்டம் பதம் பார்க்கப்பட்ட கதை உண்டு.

என்ன படத்துல நம்ம பிரம்மா துப்பாக்கிய [[கள்ள]] எடுக்கும் போது வெடிச்சுது நம்ம நண்பனின் மாமாவுக்கு பைக்கை கிக்கடிச்சப்போ வெடித்தது.

துப்பாக்கியை பின்னாடி இடுப்பில் வைக்கும் போது புல்லட்டை லோடு செய்து வைக்கனும்னு எந்த பரதேசிங்க இவனுகளுக்கு சொல்லி கொடுத்தானுகளோ தெரியல. இல்லைன்னா லாக் செய்தும் வைக்கலாமே.
-----------------------------------------------------------------------------------------------------------
ஒபியம் விளைச்சல் குறைவால் அடிக்கடி போர்களை ஒத்தி வைத்து இருக்கிறார்கள் முகலாயர்கள்...! அப்போ கஞ்சா அடிச்சுட்டுதான் சண்டை போட்டுருக்காங்க இல்லையா ?!!!
------------------------------------------------------------------------------------------------------------
ராத்திரி முழுவதும் நைட் ஆடிட்டிங் பண்ணுறதுக்கு முடியாமல் கம்பியூட்டர் மக்கர் பண்ண, எத்தனையோ முறை ரீஸ்டார்ட் செய்தும் பலனில்லாமல், போடாங் கொய்யா என்று டென்ஷனில் அமர்ந்துவிட்டேன், ஜி எம்"முக்கு என்னடா பதில் சொல்லவென்று.

காலையில் டியூட்டி மாற வந்த பெண் ரிஷப்சனில் வந்தவளிடம், இவளுக்கு என்னத் தெரியப்போகுதுன்னு சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன், எங்கே காட்டு என்றவள் என்ன மந்திரம் செய்தாளோ, அப்புறம் மக்கர் பண்ணாம சமத்தா ஆடிட்டிங் செய்ய உதவுச்சு, ம்ம்ம்ம்ம் "பெண்கள் என்றால் இப்போது கம்பியூட்டரும் இறங்க ஆரம்பிச்சுடுச்சு" போல....!


Tuesday, July 16, 2013

ஏ ஓடாதீங்க ஓடாதீங்க ஒரு சின்ன கதை சொல்லுதேன்...!

"டைம் ஆகுதுங்க புறப்படுங்க" மனைவி அவசரப்படுத்தினாள்.

"நான் வரலைம்மா நீ போயிட்டு வா" புருஷன்.

"மூன்று வருஷமாக காதலிச்சு கல்யாணம் செஞ்சதுக்காக நம்ம கண்டுக்காம இருந்தவங்க இப்போ என் தங்கச்சி கல்யாணத்துக்கு அழைப்பு வச்சிருக்காங்க, வாங்கங்க போயிட்டு வருவோம்"

"நான் அங்கே வந்தால் எனக்கும் மரியாதை இருக்காது உனக்கும் மரியாதை இருக்காதும்மா இந்த பாழாய் போன ஜாதியால்...நீ போயிட்டு வாம்மா நான் வரல..."

எவளவோ கெஞ்சிப்பார்த்தும் மாரி  மறுத்துவிட்டான், அவன் இனி வரமாட்டான் என்று புரிந்தவுடன் குழந்தையை தூக்கிவிட்டு புறப்பட்டாள் தன் தாய்வீடு நோக்கி...

பஸ் பிடித்து வேர்க்க விறுவிறுக்க வீட்டை நோக்கி ஓடினாள், பின்னே மூன்று வருஷம் போக முடியாத பிறந்த வீடாயிற்றே....

பஸ்ஸின் குலுக்கம் தாலாட்ட பழைய நினைவுகளில் மூழ்கிப்போனாள்....
ஆச்சாரம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவள் அமுதா, அமுதாவின் அப்பா புதிதாக வீடு கட்டும் போது கொத்தனார் வேலைக்குப் போனவன் மாரி, அந்த ஒரு மாதத்திலேயே காதல் வந்து விட்டது இருவருக்கும்.

சாப்பிடப்போறேன்னு மத்தியானம் வீட்டுக்குப் போனாலும் சாப்பிடாமல் திரும்பி வருவான், அமுதா அவனுக்கு இங்கே சாப்பாடு எடுத்து ஒளித்து வைத்துக் கொடுப்பாள், காலையிலும் சாப்பிடாமல்தான் வரவேண்டும் என்று கன்டிஷன் இடும் அளவுக்கு காதல் முற்றி......!

ஓடிப்போயி கல்யாணம் செய்து ஒரு குழந்தையும் பிறந்து விட்டது....ஆனாலும் பெற்றவர்கள் வீட்டிலிருந்து யாருமே பார்க்க வரவே இல்லை இவளும் போகவில்லை.

இந்த நிலையில்தான் தங்கை கல்யாணத்திற்கு அழைப்பு வந்தது, அப்பாவே வந்து பத்திரிகை  கொடுத்துவிட்டு போனார், அதனால்தான் ஆர்வமாக போகிறாள்.

வீட்டிற்கு போனதும், வாம்மா என்று அப்பாவோ அம்மாவோ தங்கையோ அண்ணன்களோ கூப்பிடவே இல்லை, அவள் குழந்தையை யாரும் தொடக்கூட இல்லை, பொண்ணுக்கு அலங்காரம் செய்யும் இடத்தில் தங்கையை தொடக்கூட அனுமதிக்கவில்லை.

எல்லா சொந்தமும் அவளை ஒரு அந்நியமாகவே பார்த்துக் கொண்டிருந்தார்கள், சாப்பாடு வாசனை, அவளுக்கு சாப்பிட ஆசையாக இருந்தது, ஆனால் சாப்பிட யாருமே சொல்லவில்லை.

அவளுக்கு புரிந்தது, குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துவிட்டு, அங்கே தண்ணீர் கூட குடிக்கப் பிடிக்காமல் அடுத்த பஸ்ஸை பிடித்து கணவன் வீட்டுக்கு வந்தாள்.

குடிசைக்குள் மாரி கஞ்சி குடித்துக் கொண்டிருந்தான், இவள் போனதும் இவள் வாயில் கஞ்சியை ஊட்டினான். அவளுக்கு அது தேவாமிர்தமாக இனித்தது, உலகம் புரிந்தது நெஞ்சம் நிறைந்தது....!

டிஸ்கி : பின்னே சிறுகதை நாங்களும் எழுதுவோம்ல.....!Sunday, July 14, 2013

ரஜினிகாந்த் ஏன் ஏசி'யில் இருக்க வேண்டும்...?

ஏசி'ல இருந்தால் நல்லா வெள்ளை ஆகிறலாம்னு யாருய்யா சொன்னது ? 
நம்ம ரஜினி, கேப்டன் கூடத்தான் ஏசி'ல இருக்காங்க ஏன் நான் கூட ஏசி'லதான் இருக்கேன், நாங்க இன்னும் வெள்ளை ஆகவில்லையே.

[[பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ஆமா...]]
-------------------------------------------------------------------------
காகிதத்தில் எழுதி வச்சா 
செல்லரிச்சு போகுமுன்னு 

கண்ணுக்குள்ளே எழுதி வச்சேன் 
காதலென்னும் காவியத்தை...!

- எங்கிட்டே மோதாதே 
---------------------------------------------------------------------------

அஞ்சும் பொண்ணாப் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான்னு தமிழ்ல ஒரு சொல் உண்டுன்னு என் மலையாளி நண்பன் ஒருத்தன்கிட்டே சொன்னேன், போடாங் கொய்யான்னு அவன் ஒரு கதை சொன்னான்.
"கேரளாவில் மூன்றோ நான்கோ பெண் குழந்தைகள் பெற்ற பெற்றோர்கள் பாக்கியவான்கள், ராஜா மாதிரி கால்மேல் கால்போட்டு உக்கார்ந்து சாப்பிடலாம், காரணம் சொல்றேன் கேளு......முதல் குழந்தையை மட்டும் பத்தாங் கிளாஸ் படிக்க வைத்தால் போதும் அப்புறம் அது எப்பிடியாவது நர்சுக்கு படிச்சு எங்கேயாவது வேலைக்கு சேர்ந்திடும்.

அதோடு பெற்றோர்களின்  கடமை ஓவர், அந்த பொண்ணு சம்பாதிச்சு அடுத்த தங்கச்சியை இன்ஜினியரிங் படிக்க வச்சுட்டு வெளிநாடு போயிரும், அடுத்தவள் சம்பாதித்து அடுத்த தங்கச்சியை எம்பிபி எஸ் படிக்க வைத்து டாக்டராக்கி விடுவாள்.

இப்பிடியே சொல்லிட்டே போகலாம்....அடுத்து....

வெளிநாடு போன அக்கா அங்கேயே இன்ஜினியரிங் வேலைக்கு தங்கச்சியை அழைத்துக் கொண்டு அங்கேயே மனசுக்கு பிடித்தவனை ஊரில் வந்து கல்யாணம் செய்து கொள்கிறாள் மற்றவர்களும் அப்படியே....! வாழ்க்கை ஜெகஜோதியாக ஜொலிக்குறது அவர்கள் தம் வீட்டில்...!

இப்போ சொல்லு எப்பிடி அரசன் ஆண்டி ஆவான்னு ? பெற்றோர்கள் கால்மீது காலை மட்டும் அல்ல தலையணையும் வைத்து சுகித்து வாழ்கிறார்கள்...போடாங்................ நீயும் உன் பழமொழியும்....!"

நான் : இல்ல சேட்டா  இந்த மானம் மரியாத........[[இடைமறிக்குறான்]]

"போடோ  ரெயிம...."

அப்போ இந்த சொல்லு தமிழ்நாட்டுக்கு மட்டும்தானா.....அவ்வவ்.....
-------------------------------------------------------------------------------------

சாதாரணமா பேக்கிங் செய்யப்பட்ட ஜூஸை ஒரு குலுக்கு குலுக்கி விட்டு குடிப்பதுதானே வழக்கம் ? இங்கே ஒரு நாதாரிப்பய மினரல் வாட்டரை வாங்கி குலுக்கிட்டு [[அன்னைக்கு பீரை குலுக்கி லேப்டாப்பை நாசமாக்குன அதே பன்னாடைதான்]]  குடித்தான் பாருங்க விடுவேனா நானு............ எடுத்தேன் பாருங்க ஓட்டம், வீட்டுலப் போயிதான் நின்னேன்.....சேருறது எல்லாமே எகன்னை மொகன்னையாதான் இருக்கானுங்க.

டிஸ்கி : எப்பிடியெல்லாம் தலைப்பு வைக்கவேண்டி இருக்கு பாருங்க, பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி ச்சே மனோ.....Thursday, July 11, 2013

கள்ள நோட்டை நாம் அறிவது எப்படி ?

நல்ல நோட்டா... கள்ள நல்லநோட்டா என்பதை
மக்கள் தெரிந்துகொள்வது எப்படி? 


              சமீபத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை கைது செய்திருக்கிறது போலீஸ். அப்படியென்றால் நம் கையில் வைத்திருக்கும் எந்த நோட்டும் கள்ளநோட்டாக இருக்கலாம். எப்படி தெரிந்துகொள்வது? நாம் பயன்படுத்தும் பணத்துக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சென்னையிலுள்ள ரிசர்வ் பேங்க் இந்தியாவின் (Reserve Bank of India) தலைமை அலுவலக கருவூல பகுதி அலுவலர்களிடம் கேட்டபோது,  “நல்லநோட்டு...தனிச்சிறப்பு வாய்ந்த காகிதமும் நன்கு கூழாக்கப்பட்ட பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த நோட்டுகளை எண்ணும்போது  'பட பட'வென சத்தம் உண்டாகும். ஆனால், கள்ளநோட்டில் தரம் குறைந்த காகிதம் பயன்படுத்தப்படுவதால் தடிமனையும் தரத்தையும்  வைத்து கண்டுபிடிக்கலாம். இரண்டாவது... புற ஊதா விளக்கு ஒளியில் (அல்ட்ரா வைலட் லைட் எனப்படும் விளக்குகள் தனியாகவே இருக்கின்றன!) நன்றாக ஜொலிக்கும் மையினால் (fluorescent Ink) நல்லநோட்டு அச்சடிக்கப்படுகிறது. பணத்தில் உள்ள நம்பர்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே சீராக இருக்கும். மேலும், சிவப்பு நிறத்தில் பெரிதாக பளிச்சென்று தடிமனாக இருக்கும். 1000 ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல் பாகத்தில் கருநீல நிறத்திலும், இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் சிவப்புநிறத்திலும் அச்சடிக்கப்படுகிறது. ஆனால், கள்ளநோட்டில் பெரும்பாலும், வரிசை எண்கள் ஒரே சீராக இல்லாமல்...எண்களில் சைஸ் சிறியதாகவும்...இடைவெளி விட்டும் இருக்கலாம். மேலும், கள்ளநோட்டுகள் புற ஊதா விளக்கொளியில் (அல்ட்ரா வைலட் லேம்ப்) ஜொலிக்காது. மூன்றாவது...500....1000 ரூபாய் நோட்டுகளில் மத்தியில் மதிப்பு இலக்கம் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். சற்றே சாய்த்துப்பார்த்தால் அந்த பச்சை நிறம் நீல நிறமாக மாறித்தெரியும். கள்ளநோட்டில் பச்சைநிறம் நீலநிறமாக தெரிய வாய்ப்பில்லை. நான்காவது...மகாத்மா காந்தி படத்திற்கு இடதுபுறம் இருக்கும் 100, 500,1000 ரூபாய் நோட்டுகளில் பாதுக்காப்பு இழை சாளரம் சாளரமாகத் தெரியும். மேலும்...வெளியே பாதி தெரிந்தும், உள்ளே பாதி பொதிந்தும் இருக்கும். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாகத் தெரியும். பாரத் என்று ஹிந்தியிலும், RBI (RESERVE BANK OF INDIA-வின் சுருக்கம்!) என்று ஆங்கிலத்திலும் மாறி மாறி அச்சடிக்கப்படிருக்கும். 1000 ரூபாய் நோட்டில் கூடுதலாக... 1000 என்ற இலக்க எண்ணும் அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். 2005 க்கு பின்பு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளில் பச்சையாக தெரியும் இழை வெவேறு கோணங்களில், பார்க்கும்போது நீல நிறமாக தெரியும். அல்ட்ரா வைலட் வெளிச்சத்தில் முன்பக்க எழுத்துக்களும் சேர்த்து மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். ஆனால், கள்ளநோட்டிலோ வெள்ளி நிற பெயிண்ட் ஒட்டப்பட்டிருக்கலாம். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாக தெரியாது. பாதுகாப்பு இழை போன்ற ஒன்றை ஒட்டியிருப்பார்கள். கறுப்புக்கோடு வரைந்திருப்பார்கள்.
பாதுகாப்பு இழையில் நிறம் மாறும் தன்மை இருக்காது. இதெல்லாம் மிக உன்னிப்பாக கவனித்துப்பார்த்தால் தெரியும்.  ஐந்தாவது...ஒளி ஒதுக்க முறையில் மகாத்மா காந்தியின் உருவம் சினிமா ஸ்லைடுபோல் தத்ரூபமாக தெரியும். நகல் (செராக்ஸ்) எடுக்கமுடியாத பல்திசைகோடுகளும் இருப்பதை மகாத்மாகாந்தியின் உருவத்தை வெளிச்சத்தில் பார்த்தால் தெரியும். காகித தயாரிப்பு நிலையிலேயே, நீர்குறியீடும் (வாட்டர்மார்க்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கள்ள நோட்டிலோ உண்மையான நோட்டை காப்பியெடுக்கும் முயற்சியில் மகாத்மா காந்தியின் படம் தெளிவாக இல்லாமல்...கார்ட்டூன் படம்போல் இருக்கலாம். வெளிச்சத்தில் பணத்தை தூக்கிப்பார்த்தால் இந்த வித்தியாசத்தை தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதையெல்லாம்...குறைந்த பணத்தை கையில் வைத்திருக்கும்போது நாம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துக் கொண்டுபோகும்போது வங்கிகள் அதற்கான தரமான மெஷின்களை வைத்து கள்ளநோட்டா நல்லநோட்டா என்று கண்டறிய வேண்டும். மேலும், வங்கிப் பணியாளர்களும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்” என்கிறார்கள் ஆலோசனையாக.


நன்றி : ம . மனோ மற்றும் நக்கீரன் 

Tuesday, July 9, 2013

கறுப்பு பணத்தில் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் திட்டம்...!

ந்தியத் திருநாட்டில், நவீன இந்தியாவில் ஆண்டுதோறும் கறுப்புப் பணம் பறிமுதல்தான் எத்தனை கோடிகள்...

- லஞ்சப் பணமாக சிக்குவது கோடிகளில்...
- திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கோடிகள், தங்க ஆபரணங்கள் கணக்கில்    கொள்ளா இருப்பு...
- மருத்துவ பல்கலைக்கழக தணிக்கை அதிகாரி வீட்டில் கணக்கில் வராத லஞ்சப் 
   பணமும் கோடிகளில்...
- கிரிக்கெட் விளையாட்டில் விளையாட்டு வீரர்களை ஏலத்தில் வாங்கவும் கோடிகள்...
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புரளுவதும் கோடிகள்...

இப்படி நாள்தோறும் பெருகிவரும் கோடிகள்தான் எத்தனை எத்தனை.

- இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 103 கோடி.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்க்கை வாழ்பவர்கள் 25 கோடி.
- ஒருவேளை கஞ்சிக்கும் இல்லாதார் 30 கோடி. 

என்ன முரண்பாடு...? 
மக்களுக்கு என்ன அடிப்படைத் தேவை ?.  இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை கற்க கல்வி, சுகாதரமான வாழ்விடம் ஆகியவை.

சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளை கடக்கிறோம். தனக்கென வாழ்விடம் இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை கோடி?. ஒருவேளை உணவுக்கும் நாயாய், பேயாய் அலைந்து, உழைத்து உண்ணும் மக்கள் எத்தனை கோடி?.

அடிப்படை வசதியில்லாத - சுகாதாரச் சீர்கேட்டுடன் வாழும் மக்கள்தான் எத்தனை கோடி...? இது தனி மனித கோளாறு என்று புறந்தள்ளிவிடல் கூடாது ; முடியாது.

ஒரு பக்கம் ஆயிரமாயிரம் கோடிகளாய் கறுப்புப் பணம் புழங்குவதும்... ஒரு பக்கம் ஆயிரமாயிரம் கோடிகளில் லஞ்சம் தாண்டவமாடுவதும்... ஒரு பக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் இவ்வளவு என்று புள்ளி விபரம் கூறுவதும்...  என்ன ஐந்தாண்டு திட்டம்... என்ன அதன் வளர்ச்சி?.

 இத்தனைக் கோடி கறுப்புப் பணம், லஞ்சப் பணத்திலிருந்தே வறுமையில் வாடும் வேலையற்றோர், இருப்பிடம் இல்லாதோர், கல்வியறிவு அற்றோர்க்கு என நலவாழ்வுக்கு குறைந்த பட்சம் ஒரு குடிமகனுக்கு (இல்லாதோருக்கு) ஒரு கோடி திட்டத்தில் அவனது வாழ்வாதாரத்துக்கு வழிகாட்ட முடியாதா? என்பதே நம்முன் எழும் கேள்வி.
உதாரணமாக :

ஒரு குடும்பத்துக்கு ஒரு கோடி திட்டம் என்ற வகையில் அவர்கள் வாழ ஒரு இடம், இல்லம் அமைத்து தந்து அதனை விற்கவோ ,அடமானத்துக்கு வைக்கவோ, வாடகைக்கு விடவோ அனுமதிக்காமல் அவை அவர்களில் வாரிசுதாரருக்கு, வாரிசு அல்லாத பட்சத்தில் உறவுகளுக்கு மட்டுமே என்று வரையறை தந்தும்... கட்டாய வேலைவாய்ப்பு அவரவர் தகுதிக்கேற்ப உருவக்கி தொழில் அல்லது பணி தந்தும்... கட்டாயக் கல்வியை நடைமுறைப் படுத்தி வறுமையில் வாடும் குடும்பத்தினர்க்கு வழிகாட்டி வாழ்வாதாரத்துக்கு அடிப்படை திட்டம் தீட்டினால்தான் என்ன...? இது சாத்தியம் தானே...?

திருப்பதியில் கொட்டிக்கிடக்கும் வருவாயிலிருந்து இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் இலவச கல்வி தரலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

கறுப்பு பணம் - லஞ்சப் பணம் - தனிமனித சொத்துக் குவிப்பு இவைகளை கொண்டே மக்கள் நலதிட்டங்களுக்கும், அடிப்படை வசதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உருவாக்கிவிடலாமே... இதில் என்ன தயக்கம் இங்கு ஆளும் அரசியலர்க்கு. மேலும், ஒரு அரசு என்று ஏன் இருக்கிறது ? எதற்கு இருக்கிறது ?.

மக்களாக பிறந்த எல்லோருக்கும் பசி, தாகம் இருக்கிறது. அவர்கள் வாழ ஓரிடம் வேண்டியிருக்கிறது. குளிர், வெய்யிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும், மானத்தை காத்துக்கொள்ளவும் ஆடை அணிய வேண்டியிருக்கிறது.  அத்தியாவசியமான சுய தேவையை பூர்த்தி செய்து கொள்வதோடு ஒவ்வொரு மனிதனும் தன் குடுபத்தின் கடமைகளை நிறைவேற்றவும் தனக்கென ஒரு வேலையினை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது தவிர்த்து தன்னுடைய இனம், சமுதாயம், தேசம் இவற்றுக்கெல்லாம் ஆற்ற வேண்டிய கடமை ஓவ்வொருவருக்கும் உண்டு.

பலர் கூடி வாழுகிற சமூகத்தை, அவர்களது பல நற்செயல்களில் இடையூறு இல்லாமல் சமூகம் முழுவதும் நலம் பெறும் வகையில்  சீராக வைத்திருக்க வேண்டும் இப்படி செய்வது ஓர் அரசின் கடமை. 
இதனை தவிர்த்து... தங்கள் சுய நலத்துக்காக சமூக வளர்ச்சி என்ற பெயரில் ஆலைகள் சமைப்பதும், அணைகள் கட்டுவதும், நாற்சக்கர சாலைகள் அமைப்பதும்... விண்ணில் உலா வர வழி செய்வதும் சரியான மக்கள் நல வளர்ச்சித் திட்டம் என்று சொல்லிவிட முடியுமா ?.

வளர்முக நாடுகளில், நவீன இந்தியாவில் அரசுக்கும் தனிமனிதர்களுக்கும் எத்தனை நன்மைகள் வளர்ச்சிகள் இருந்தாலும் ஏற்றத்தாழ்வான - அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு சமூகம், வளர்ச்சியை நோக்கி நடை போடுகிறது என சொல்வது என்ன பம்மாத்துத்தனம்.

 இந்தியாவின் பாதுகாப்புக்கென காவலர்களையும், நீதி மன்றங்களையும் வளர்த்து கோடிக்கணக்கில் செலவிடுவதும் தேவைதான். எனினும் ஆளும் அரசுகள் அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்த நலன்களை கருதாமல், அரசின் பணிகள், திட்டங்கள் பணம் பண்ணும் தொழிலாக ஆக்காமல், அடிப்படை வசதியற்ற மக்களுக்கு சேரவேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே வறுமையைப் போக்கும் வழியாகும்.
அரசுகள் தங்கள் சாதனைகளை வெளிச்சமிட்டுக்காட்ட செலவுகள்தான் எத்தனை கோடிகள்... மாநாடுகள், அரசு விழாக்கள், அரசுகளிடையே பேச்சுவார்த்தைகள், அவை புறக்கணிப்பு என்ற பெயரில் விரயமாகும் கோடிகள் எத்தனை... இந்தக் கோடிகளில் வறுமையால் வடும், அடிப்படை வசதிகளற்ற மக்களுக்கு சில கோடிகளை ஒதுக்கினால் என்ன...?

அடிப்படை வசதிகள் அற்ற எந்த தேசத்துக்கும், அரசுக்கும் பேரிடியாய், பேரிடராய் உருவாகுவதே தீவிரவாதம் - நக்சல்கள் என்பதை அரசு எப்போது உணருகிறதோ - வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுகிறதோ அப்போதே ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியும்.

அப்படி ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டால்தான் பல்வேறு நிறத்தவராய், இனத்தவராய், மொழியினராய், கலாச்சார பண்பாடுடையவராய் வாழும் இத்திருத் தேசத்தை வளம்பெற செய்ய முடியும் என்பதை உணர்வோம்.

நன்றி : கோ . எழில் முத்து மற்றும் நக்கீரன் 


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!