பஜினியின் அடுத்த படம் பெயர் "ஈழன்"...ஹீரோ யாருன்னு நான் சொல்ல வேண்டியதில்லை, தயாரிப்பு கண்டிப்பா லைக்கா"வாத்தான் இருக்கும் இருக்கணும்...கதை என்னான்னா...?
ரெண்டு தலைமறைவுக்கு ச்சே ரெண்டு தலைமுறைக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து சிலோனுக்கு போன குடும்பத்துல இருந்து "ஒருத்தர்" கிளம்புறார், எங்கேன்னு கேக்கப்டாது...
அவர் பெயர் "கருணா ஈழன்" அங்கே நடந்த கலவரத்தில் ரொம்பவே பாதிக்கப்படுகிறார், மனைவி பிள்ளைகளை தொலைத்து அனாதையாகிறார், இதனிடையே சில பல இயக்கங்களில் சேர்ந்து இவரது கொள்கை அவர்களுக்கு பிடிக்காததால் இவரை பல இடங்களில் இருந்து நாயைவிட கேவலமாக துரத்தி விடுகிறார்கள்...
சரி இனி மனைவி பிள்ளைகளோடு வாழ்வோம் என்று தனது பெயரை "ஈழன்" என்று சொல்லி, அவர்களை தேடி அலைகிறார், பாடல்கள் அதிர்கின்றன, "ஈழன்டா...பருப்புடா...கஜினிடா...பெட்ரோல்டா"ன்னு...
ஈழன் என்று சொல்லியும் தன் குடும்பத்தை கண்டுபிடிக்க இயலாமலும், ஒருவேளை கூஜபக்ஷே குடும்பத்தை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்க, உடனே தன் பெயரை "கருணா" என்று மாற்றுகிறார்...
"கண்ணையாடா...நான் பச்சோந்திடா...பிச்சிப்பாருடா...தேங்காய் நாருடா"ன்னு பிண்ணனி பாட்டு போட்டு பிச்சு எடுக்கிறார்கள்...
கருணாவாக மாறி கூஜபக்ஷே வீட்டுக்குள்ளேயே போயி "ஜாகை"யை மாற்றுகிறார்.
அப்புறம் [வேற என்ன இருக்கப் போகுது ?] மனைவி பிள்ளையை கண்டுபிடித்தாரா ? கலவரத்தில் தன் குடும்பத்தைக் கடத்திக் கொண்டு போன கூஜபக்ஷேவை என்ன விதமாக த[க]ண்டித்தார் ? என்பதை வெண்திரையில் காண்க...
சிரிக்க மட்டுமே.