பத்து கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லுங்க இல்லைன்னா கனவுல வந்து
கண்ணை குத்திருவேன்னு ஏஞ்சல் மேடம் சொன்னதால, உண்மையாவே கனவுல
வந்துறப்பிடாதே அதான் உடனே பதில் சொல்லிட்டேன்.
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
கொண்டாட விரும்புகிறீர்கள்?
கலைஞர் போல [[அவரது குணமல்ல குடும்பம்]] கொண்டாடுவேன்.
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
கப்பல், ரயில் மற்றும் விமானம்...... ஹி ஹி......சரி விடுங்க...கிட்டார் இசை மற்றும் டிரம்ஸ் அப்புறம் பெண்களின் மனசு !
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
பெண்களுடன் பணி புரிவதால் சிரிப்புக்கு பஞ்சமில்லை,
எனக்கு சிரிப்பு வந்தால் இழவு வீட்டுலேயும் சிரிச்சு தொலைச்சிருவேன்,
சீரியஸான இடங்களுக்கு போனால் ஒன்று என் அக்காள் என் கூட இருந்து
கவனிச்சுப்பாங்க, இல்லைன்னா வீட்டம்மா.
சிரிச்சு செமையா வாங்கி கட்டியிருக்கேன் !
விழுந்து விழுந்து சிரிச்சதுன்னா நம்ம விஜயன் பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டது, அதாவது....
மலேசிய
அரசாங்கம் புதுசா ஒரு ரூல்ஸ் கொண்டு வந்துருக்காம் "முஸ்லீம் அல்லாதோர்
அல்லா என்று சொல்ல கூடாதாம்" அதுக்கு விஜயன் பதில்..."செத்தாண்டா
மலையாளிகள்" என்று...ஏன்னா ஒரு நாளைக்கு எந்த மலையாளியாக இருந்தாலும் சராசரி நூறு தடவையாவது அல்லா [[இல்லை]] என்ற வார்த்தையை பிரயோகிப்பார்கள்...
மலேசியாவின் தண்டனை தெரியும்தானே ?
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
இங்கே
[[பஹ்ரைன் மற்றும் மும்பை]] பவர்கட் இருப்பது இல்லை அப்படியே ஊரில்
இருந்தாலும் வெளியே காற்று வாங்க மற்றும் தோப்பு காட்டில் சிறிய வேலைகள்
செய்துவிட்டு லேஸா மப்பும் ஏத்திகிட்டு வர வேண்டும்.
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
ஆஆ...முப்பத்தி ஒன்பதுதானே தாண்டியிருக்கு அவ்வ்வ்வ்....
என்னைப்போல நாடோடியாக வாழாதீர்கள், அருகில் தாய் தந்தை ஆதரவும் அன்பும், மனைவி பிள்ளைகளின் அன்பு இல்லாமல் அப்பா வாழ்ந்து விட்டேன் [[இருக்கிறேன்]] நீங்கள் அப்படி இல்லாமல் சேர்ந்தே வாழுங்கள்.
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
ஏழ்மை மற்றும் நோய்கள் !
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
பலரிடமும் கேட்பதுண்டு அதில் என் மனதை அசைத்த ஒரு அட்வைஸ் விஜயன் மற்றும் நம்ம ஆபீசரும் சொன்னது,
"மனோ எப்போதும் ஒருப்போல இருக்காது நாலு காசு சேர்த்து வைக்கனும் நமக்கு
வயசாகிட்டு இருக்கு என்பதை நினைவு கொள்ள வேண்டும்" என்றதுதான், உஷாரா
இருக்கேன் ஆண்டவர் கிருபையில்...!
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?
கேள்வியே இல்லை தூக்கிப்போட்டு மிதிதான்...[[பயந்துராதீக]]
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இதில் சொல்வதற்கு என்ன இருக்கு ? நண்பனுக்கு நண்பனின் மனசு நன்றாகவே தெரியும் கட்டிபிடிக்கும் பொது ஆறுதலாக உணர்வான்.
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
சத்தம்
காட்டாமல் நண்பர்களுக்கு போன் போட்டு வர செய்து பாட்டல் பற பற...சாப்பாடு
நற நற...அப்புறம் வீட்டம்மா வந்து தர தர அவ்வ்வ்வ்....
தொடர ஆசைப்படுபவர்கள் தொடரலாம்.