இம்முறை டிஸ்கோவில் தகராறு செய்து செக்யூரிட்டிகளால் தாக்கப்பட்டு நாட்டாமை ரூமுக்கு கொண்டு வரப்பட்டு, என்னைக் கண்டதும் வெலவெலத்துப் போனான், ஏற்கனவே பூசை கிட்டியதால் உடனே அவனை பிளாக் லிஸ்ட் செய்து வெளிய அனுப்பி, ரிஷப்சனில் அவன் போட்டோ ஒட்டி வைத்துவிட்டேன்.
மறுபடியும் ஒரு வாரம் கழித்து வந்தவனை, எம்புட்டோ கெஞ்சி கேட்டும் ரூம் கொடுக்கவே இல்லை, உடனடியாக வெளியேற்றப் பட்டான்.
கொஞ்சநாள் கழித்து இரண்டு ரூம்கள் ஆன்லைனில் புக் செய்யப்படுகிறது, அன்று எனக்கு லீவு வேற, இவனும் அவளும், மற்றும் இரண்டு நண்பர்களும் வந்து நிற்க, பதறிப்போன ரிஷப்சனிஷ்ட், புக்கிங் என்பதால் டிராவல் ஏஜென்சியில் ஹோட்டல் பெயர் டேமேஜ் ஆகிறக்கூடாது என்பதற்காக இரண்டு ரூம் கொடுத்து விட்டாள். இவனுக்கும் பெண்ணுக்கும் ஒரு ரூம், மற்ற நண்பர்களுக்கு ஒரு ரூம்.
அன்று முழுவதும் சரக்கடித்து விட்டு டிஸ்கோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான், அலம்பலும் ஓவராக இருந்துள்ளது.
அடுத்த நாள் நான் டியூட்டியில் இருக்கும் போது, அந்த பெண் கீழே இறங்கி வந்து என்னை எங்கே என்று விசாரிக்க, நான் வெளியே வந்ததும் இரண்டு கன்னத்திலும் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தம் கொடுத்தாள் [[இது அரபிகள் ஸ்டைல், ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் பிரியமானவர்களுக்கு இப்படி முத்தம் கொடுப்பது வழக்கமே, இது வளைகுடா நாடுகளில் வசிப்போருக்கு தெரியும்]] மனதில் கடுப்பாக இருந்தாலும், வேற வழி இல்லை, மன்னிப்பு கேட்டாள். காபி ஷாப் போயி சரக்கடித்துவிட்டு ரூமுக்கு போய் விட்டாள்.
அப்புறம்தாம்ய்யா அலும்பு ஆரம்பிச்சுது...
திடீரென போன் வர, உடனே என்னை ரூமுக்கு வரும்படி அழைத்தாள், எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பிச்சுது, மனோ இன்னைக்கு நீ செத்தடே'ன்னு மனசு சொல்லுது, ஆனாலும் ஒரு செக்கியூரிட்டியை கூட்டிக்கொண்டு ஓடினேன் அங்கே.
ரூம் பெல் அடித்ததும் ஓடி வந்து கதவை திறந்தவள் என் கூட நிற்கும் காவலாளியை முறைத்து விட்டு, என் கையை பிடித்து உள்ளே இழுக்க நான் காவலாளி கையை சேர்த்தே பிடித்து இழுத்து சென்றேன்.
அங்கே அந்த அரபி பேச்சு மூச்சு இல்லாம கிடந்தான், "ஐய்யய்யோ என் மாப்பிளை செத்து போனான் செத்து போனான்" என்று அவள் அலற....நான் கிடுகிடுன்னு நடுங்க....வெளிக்காட்டிக்காமல் அவன் நெஞ்சில் கைவைத்து நாலு அமுக்கு அமுக்க...ஜெர்க் ஆனவன் போல மூச்சு வந்தது.
ரெண்டும் மூக்கு முட்ட சரக்கில்....
டேக் கேர் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் [[ஓடிவிட்டேன்]] அடுத்த அரைமணி நேரத்தில் அடுத்த ரூமில் இருந்து போன்....அவளேதான் "உடனே ரூமுக்கு வரவும்" [[ஆண்டவா ]]
மறுபடியும் அடுத்த ரூமுக்கு முன்பு போல போனேன், அங்கே அந்த மற்ற இரண்டு நண்பர்களுடனும் சேர்ந்து, "பொல்லாத" ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தாள், என்னைப் பார்த்ததும் நீயும் வந்து ஆடு என்று பிடித்து இழுக்க...நான் மறுத்துவிட்டு...
"எதுக்கு என்னைக் கூப்பிட்டாய் ?"
"என் மாப்பிளை செத்துட்டானா உயிரோடே இருக்கானா போயி பார்த்து சொல்லேன்" அவ்வ்வ்வ்வ்....
" போடீங்..." என்று திட்டிவிட்டு வந்துவிட்டேன்.
மறுபடியும் போன்....
அலறுகிறாள் ஓடிவா ஓடிவா என்று, மறுபடியும் அவள் ரூமுக்கு ஓடிப்போயி கதவைத்திறந்தால், அந்த இரண்டு நண்பர்களும் அவளை நிர்வாணமாக்கி நாசம் செய்து கொண்டிருக்க...அவள் மாப்பிளை என்பவன் சரக்கில் மல்லாந்து கிடக்க...
ரேப் செய்ய எத்தனித்தவர்களும் நல்ல மப்பு அவளும் நல்ல மப்பு, ஸ்லோ மோஷனில் எல்லாம் நடக்குது அங்கே, அதிரடியாக செக்கியூரிட்டியும் நானுமாக நாலு சாத்து சாத்தி, அரபிகள் ரெண்டு பேரையும் ரூமில் கொண்டுபோய் தள்ளினோம்.
அவள் உடலெங்கும் நகமும், பல்லும் பட்ட தடங்கல்....திரும்பி இவள் ரூமுக்குள் வந்து பார்க்கும்போது அப்படியே நிர்வாணமாக மட்டையாகிப் போனாள், ஒரு துணியை எடுத்து போர்த்தி விட்டு டோரை லாக் செய்துவிட்டு வந்துவிட்டேன்.
அடுத்த நாள் அவளைப் பார்க்கும் போது கிழிந்த புது துணி போல கந்தலாகி இருந்தாள், என்னைப் பார்த்ததும் அதே முத்தங்கள்...மனசு ரணமாகிப் போனது எனக்கு "நேற்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு "
"ஒ நல்லா தெரியுமே..."
"என்னத் தெரியும் ?"
"என் ரூமில் வந்து அவர்கள் என்னைப் பலவந்தப் படுத்துனதும் நீ வந்து நாலு அப்பு அப்பி அவனுகளை இழுத்துப் போனதையும், எனக்கு போர்த்தி விட்டதும் தெரியுமே "
"உன் வீட்டய்யாகிட்டே சொன்னியா ?"
"அவன் கெடக்கான் குடிகாரப்பய"
"அப்போ நீ ?"
"ஐ டோன்ட் லைக் யுவ்வர் அட்வைஸ் ஓகே ?"
"அடுத்த தடவை உன்னை நான் இங்கே பார்த்தேன் பிச்சிபுடுவேன் பிச்சி ஓகே ?"
செல்லக் கோபத்தில் போய்விட்டாள்.
அப்புறம் ரொம்பநாள் கழித்து ரூம் எடுக்க வந்தவர்களுக்கு பகலில் யாரும் ரூம் கொடுக்காததால் திரும்ப போய்விட்டதாக அசிஸ்டென்ட்கள் சொன்னார்கள் நான் நிம்மதி மூச்சு விட்டேன்.
அன்று இரவு ராத்திரி ஒருமணிக்கு இவர்கள் இருவரும் கையைப் பிடித்தபடி ரிஷப்சனில் என்னை நோக்கி வர, திகிலடித்தது எனக்கு, அந்த பெண் கர்பமாக இருக்கிறாள், உண்டாகி ஆறு மாதம் போல தெரியுது...!
ரிஷப்சனில் லேசாக வயிறை முட்ட செய்து என்னை அருகில் அழைத்தாள், அவனும் கூடவே அவள் கையைப் பிடித்த வண்ணம், "அய்யய்யோ ரூம் இல்லை ரூம் இல்லை" என்று நானும் மொரோக்கோ"வும் கதற...
என்னை அருகில் வா என்று கூப்பிட, கர்ப்பமாக இருந்தபடியால் பழைய படி முத்தம் கொடுக்க இயலாத படியால், மொரோக்கோ என்னை பிடித்து தள்ளிவிட...அதே பழைய முத்தங்கள்...!
"ரூம் கிடையாது ஆமா சொல்லிப்புட்டேன்"
"நாங்க வேற ஹோட்டல்ல தங்கி இருக்கோம் போதுமா ?"
"இங்கே எங்கே ?"
"டிஸ்கோ போறோம்"
"வயித்துல குழந்தையை வச்சிகிட்டு டிஸ்கோவா ?"
"கல்லிவல்லி" [[டோன்ட் கேர்]] என்று சொல்லி அன்னநடை நடந்து போகுது மெதுவாக...
சொல்லுங்க என்ன வாழ்க்கை இது ? எனக்கு மனசு முழுவதும் ரணம்....
முற்றும்......நன்றி.....