Sunday, February 23, 2014

ஒரு பரிசுத்தவானின் வேஷம் கலைந்தது !

ஒரு ஐந்து வருஷங்கள் முன்பு நான் தங்கி இருந்த பிளாட் ரூமில் மூன்று பேருக்கு போவதற்கான ஈரோப்பியன் பாத்ரூம் இருந்தது, அந்த பாத்ரூம் மீது உட்கார்ந்து கக்கா போறதுக்கும் பதில் அதற்கு மேலே குத்தவச்சு உக்காந்து கக்கா போறவனை கண்டு பிடிக்கவே முடியலை.

ரெண்டு பேரைக் கேட்டால் நானில்லை நானில்லை என்கிறார்கள், என்மீதும் ஒருவன் சந்தேக கேள்வி கேட்டான், அந்த மேல் சீட் ஷூ கறை படிந்த அந்த சீட்டை கோபத்துடன் ஒருநாள் மப்பில் பிய்த்து எரிந்து விட்டேன்.

மறுபடியும் மறுபடியும் அதே ஷூ கறை....என்னடா செய்யவென்று நொந்து கொண்டிருந்தோம் சம்பந்தப் படாதா மற்ற ரெண்டு பேரும்.

ஒருநாள் நான் டியூட்டி முடிந்து வந்து உடைகளை களைந்து விட்டு பாத்ரூம் போனேன், அங்கே ஈரோப்பியன் பாத்ரூம் ரெண்டாக உடைந்து கிடக்க...கூடவே அநியாயத்துக்கு ரத்தமா கிடக்கு.

எனக்கு உடனே புரிந்துவிட்டது, எவம்லேய் சல்மானியா ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருக்கிறதுன்னு விசாரிச்சா எங்க மூன்று பேரில் ஒருத்தன்தான், ராஜஸ்தானை சேர்ந்தவன்...!

ஆஸ்பத்திரி போயி பார்த்து ஏண்டா ஏன்"ன்னு கேட்டுட்டு வந்தோம், அப்புறம் அவனை இந்தியன் டாய்லெட் இருக்கும் இடத்திற்கு மாற்றினோம், சுத்தம் பார்க்கவேண்டியதுதான் அதற்காக இப்பிடியா ? கொய்யால புட்டம் பதம் பார்க்கப்பட்டது !

தெரிஞ்சோ தெரியாமலோ ஈரோப்பியன் பாத்ரூம்ல போயி மேலே ஏறி உக்காந்துராதீக...ஒன்னும் மிஞ்சாது சாக்கிரத.
---------------------------------------------------------------------------

ஊர்ல எங்கவீட்டுக்கு பக்கத்துலேயே ஒயின்ஷாப் இருக்கு, பைபாஸ் ரோடு என்பதால் வாகனங்கள் வேகத்தை தடுக்க ஊருக்கு அங்கிட்டும் இங்கிட்டுமாக ஸ்பீட் பிரேக் அமைக்கப் பட்டது.

ஆக...எங்க வீட்டு முன்னாடி ஒரு ஸ்பீட் பிரேக்கர் இருக்கு, ஊர்ல  முன்னாடி போயிருந்தப்போ நல்ல தூக்கத்தில் ஐயோ அம்மா ஆத்தா என்று சத்தம் கேட்க வெளியே எழும்பி வந்து பார்த்தால், பைக்கோடு விழுந்து கிடந்தவனுக்கு எங்க அம்மா தண்ணீர் குடிக்க கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அடி அவளவாக பலம் இல்லை என்றாலும், கால்முட்டு கைமுட்டு எல்லாம் ரத்தக் களறியாக இருந்தது அம்மா ஏதோ முதலுதவி மாதிரி தைலம் தடவி விட்டாள்.

அப்புறமாதான் தெரிஞ்சிது சரக்கடிச்சுட்டு வாறவன் அடிக்கடி இந்த இடத்தில் விழுவதும் அம்மா தண்ணீர் கொடுப்பதும், மருந்து தடவி விடுவதுமாக தொடர்ந்து நடக்கிறது என்று.

இதுல ஒரு காமெடியும் நடந்துச்சு, நாம சரக்கடிப்பது எங்க வீட்டாருக்கு நல்லாவே தெரியும், இருந்தாலும் இதுல ஒரு பரிசுத்தவான் வேஷம் போட்டவனின் வேஷமும் இங்கேதான் கலைந்தது.

எங்க பெரியப்பா மகளை [[அக்கா]] கட்டிய அத்தான் ஒருவன் இதே ஸ்டைலில் விழ அங்கேயும் அம்மாவும் எங்க அண்ணனும் ஹாஜர் ஆக...பரிசுத்தவான் வேஷம் தொக்கடீர்ன்னு கலைஞ்சி போச்சு...!

இப்போ அந்த ஸ்பீட் பிரேக்குகள் அகற்ற பட்டுவிட்டன, இப்போ என்னன்னா கோழி ஆடுகள் பலி ஆகிகொண்டும், சரக்கடிச்சுட்டு வாறவன் ஆட்டுக்குட்டியை [[பைக்ல வாரவனுக]] லபக்கிட்டு போறதுமா இருக்கு, விளையாடி திரியும் குழந்தைகளை காப்பாற்று தெய்வமேன்னு வேண்டிக்குவேன்.

Wednesday, February 19, 2014

காவல் கைதிகளின் விடுதலை !

அம்மிணிங்க தொல்லை தாங்காம ஸ்டாப் ரூம்ல போயி கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு போயி உட்கார்ந்தேன், கொஞ்ச நேரத்தில் பரிச்சயமே இல்லாத மலையாளி சேட்டன் விரைவாக வந்தான்.

என்னைக்கண்டதும்...

"என்ன நலமா ?"ன்னு கேட்டுட்டு என்னை சட்டை செய்யாமல் பக்கத்து ரூமில் உள்ள ச்சூச்சூ இடத்துக்கு போயி மறுபடியும்...

"என்ன சேட்டா நலமா ? என்றான்.

நானும் "சுகம்" என்றேன்...

"ஊர்ல எல்லாரும் எப்பிடி இருக்காயிங்க ?"

"நல்லா இருக்காங்க"

"நாட்டுல மழை உண்டா ?"

"மழை இல்லை ஆனால் நன்றாக குளிர் இருந்தது" மலையாளத்தில் உரையாடல் நடக்குது.

"கள்ளு இப்பவெல்லாம் கடையில ஈசியா கிடைக்குதா ?"

"எங்க ஊர்ல ஈசியா கிடைக்குது ஆனால் உங்க கேரளா தலைநகர்ல கியூவுல நிப்பாட்டி வச்சிட்டாங்க"

"பரமன் பொண்டாட்டி வர்கீஸ் கூட ஓடிப் போயிட்டாளாம் தெரியுமா ?"

" ஆஆ....."

அப்புறமாதான் பின்னாடி போயி கவனித்தேன் ராஸ்கல் போன்ல இயர் போன் வச்சி அவன் நண்பனோடு பேசிட்டு இருந்ததை...

எப்பிடியெல்லாம் கிளம்புறானுக !

---------------------------------------------------------------------

இங்கே இரவு கிளப்புகள் டிஸ்கோ டிஸ்கோதே போன்ற விளையாட்டுகளை இரவு இரண்டு மணிக்கு அடைத்துவிட வேண்டும் என்பது கட்டாய ரூல்ஸ், எங்க ஹோட்டலிலும் இதெல்லாம் உண்டு அதில், இந்தியன் நடன கிளப் உண்டு, அதற்கு ஒரு பெங்களூர்"காரிதான் முதலாளி.

நாள்தோறும் நான்கு மணிவரை ஆட்டத்தை நிறுத்தாமல் கதவை உள்ளே பூட்டி வைத்துவிட்டு கூத்து நடக்கும் நானும் எம்புட்டோ வார்னிங்கும், சத்தம் போட்டாலும் கண்டுகிட மாட்டாள், நானும் பாவம் பொழச்சி போகட்டும்ன்னு கண்ணடைப்பது உண்டு.

இப்போ ஒருவாரமா எனக்கு ஈவ்னிங் ஷிப்ட் டியூட்டி ஆகிருச்சு, இப்பதான் நம்ம வேல்யூ அம்மிணிக்கு தெரிஞ்சிருக்கு, புதுசா இரவு டியூட்டிக்கு வந்த மேனேஜர், அவனின் உண்மையான வேலையை காட்டிவிட அதிர்ந்த அம்மிணி நாந்தானான்னு பார்க்க வந்தவளுக்கு கடும் அதிர்சி, ஆளு வேற பேசவும் முடியாமல்...."மனோ ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டு போனாளாம். [[உங்களுக்கெல்லாம் பட்டாதானே தெரியுது ?]]

இப்போவெல்லாம் ரெண்டு மணிக்கு செக்கியூரிட்டி ரெய்டு விட்டு அலற வச்சிகிட்டு இருக்கோம்.
-------------------------------------------------------------------------

காவல் கைதிகளின் விடுதலை, மனதுக்கு மகிழ்ச்சி, அது அரசியல் காரணகளுக்காக இருந்தாலும் அம்மா"வின் நெஞ்சுரத்தை பாராட்டத்தான் செய்ய வேண்டும் !

இனி வரும் காலங்களில் அவர்கள் சுதந்திரப் பறவையாக பறந்து சுகமாக வாழவேண்டும்.....வாழுவார்கள்...!


Friday, February 14, 2014

வாங்க கொஞ்சமா காக்டெயில் சாப்பிடுவோம் !

@எத்தனை வாசிம்கான்களை இந்திய பார்டர்ல போயி தமிழ்ல பேசி அழிச்சிருப்பாரு எங்க கேப்டன், அவருக்கா முடியெடுக்க ச்சே ச்சீ ஸாரி முடிவெடுக்க தெரியாதுன்னு சொல்றாங்க ?

@ஒரு இன்டர் நெட் கஃப்பே"ல போயி ஒரு சி வி பண்ணித்தர முடியுமான்னு கடைக்காரன்கிட்டெ கேட்டதுக்கு அவன் என்னைய மேலேயும் கீழேயும் பார்த்துட்டு முடியாதுன்னு சொல்லிட்டான், பயிற்சி பத்தாதோ ?

@நல்ல நகைசுவை உணர்வோடு நடித்து நம்மையும் கி கி பண்ண வச்ச நடிகை ஊர்வசி"யை சினிமா உலகம் கண்டு கொள்ளாத மாதிரி, அதே மாதிரி நடிக்கும் நடிகை தேவ[[திவ்ய]தர்ஷினி"யையும் மறந்து வருகிறது !

@இன்றைக்கும் ஒரு அரபி என் பேயரைக் கேட்டான் கேட்டுட்டு பேந்த பேந்த முழிச்சுட்டு போறான், அப்பிடி என்னய்யா சொன்னே ? எல்லாம் வழக்கமா சொல்றதுதான் "யூசுப் ஜேம்ஸ் கிருஷ்ணய்யர்" சவூதி ஒழுங்கா போயி சேர்வானா இல்லை எங்கேயும் முட்டிக்குவானான்னு தெரியலையே...ரோதனை பண்ணாதீங்கடான்னா கேட்டாதானே ?

@காதல் கத்தி என்னை எப்போ குத்தி கொல்லப் போகுதோ"ன்னு கவிதை எழுதியிருக்கான் ஒருத்தன், "எலேய் உன்னை இன்னுமாலேய் சுனாமி தூக்காம விட்டுருக்கு ?"

@ஒரு ஆங்கிலப்பாடல் டிவி"ல ஓடிட்டு இருக்க, "இது என்னுடைய ஃபேவரட் பாட்டு" என்று பிலிப்பைனி அம்மிணி சொல்ல, எனக்கு கெட்டதோ ச்சே கேட்டதோ "இது என்னுடைய ஃபாதர் பாட்டு"  "என்னாது உன் அப்பன் பாட்டா?"ன்னு நான் ஷாக் ஆக, வெலைண்டன்ஸ் நாள் அதுவுமா ஒரே சண்ட, ஸாரி கேட்டும் அழுதுகிட்டு போகுது, பிலிப்பனிகளின் உச்சரிப்பு அப்படி !

@நடிகைகள் தொப்புளில் பம்பரம் விட்டாயிங்க, ஆம்ப்லேட் போட்டாங்க, இப்போ புது டிரண்ட் என்னான்னா தொப்புள்ள நெல்லிக்காய் உருட்டுறதாம் ! என்னமா ரோசிக்குறாயிங்க ?

@கேப்டன் எதோ வித்தியாசமான கொக்டெயில் அயிட்டம் சாப்புடுதாரோன்னு டவுட்டா இருக்கு, இல்லைன்னா இப்பிடி தாறுமாறா டெல்லி, சிங்கப்பூர்"ன்னு போகமாட்டாரே ? மக்களைப் பற்றி அவருக்கு இருக்கும் கரிசனை நமக்கும் உண்டுல்ல அதான் சொன்னேன்.

@இங்கே கொஞ்சம் கலவரம் [[பஹ்ரைன்]] நடந்து கொண்டிருப்பதால், போலீஸ் அங்குமிங்குமாக ரோந்து போயிட்டு இருக்காங்க, நேற்று ராத்திரி நான் டியூட்டி முடிஞ்சி வரும் வழியில், டவுசர் டீ சர்ட் போட்டுட்டு ஒரு மலையாளி வேகமாக நடந்து வந்தான், தூரத்தில் அவன் நடந்து வந்ததே எனக்கு வித்தியாசமாக தெரிய, கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தேன்...

நான் கணித்தது சரிதான், சரியாக அவன்  போலீஸ் முன்பு வரவும் இடுப்பில் சொருகி இருந்த பாட்டல் கீழே விழுந்து உடைய, சுதாரித்தவன் ஓடினான் பாருங்க ஓட்டம், போலீஸ் துரத்தல அவனை, அவங்க சிரிச்ச சிரிப்பும், நான் தூரத்தில் இருந்தே சிரிச்ச சிரிப்பு அதுவும் என்னை தாண்டிதான் ஓடுறான் ஹய்யோ ஹய்யோ....! இதெல்லாம் நமக்கு முன்னே நடக்குதே நாராயணா !

Sunday, February 9, 2014

பிராப்ள பதிவரின் அதிரடி வருகை, அதிர்ந்த இந்தியாவின் தலைநகரம் !

அவசரமாக ஒருமாத லீவில் பஹ்ரைன் கிளம்ப நேரம் வந்தபடியால் ஒன்வே பிளேன் டிக்கட் எடுக்கலாம்ன்னு நானும் வீட்டம்மாவும், பாப்பா"ம்மாவுமாக கிளம்பினோம், எப்போதும் பதிவாக டிக்கட் எடுக்கும் ட்ராவல்ஸ் ஆபீஸில் போயி கேட்டேன்.

எல்லா பிளைட்லயும், ஒரே ரேட்டு, சாதாரணமா ஏழாயிரம் ஒன்பதாயிரம் என்று [[சீசன் டைம் அல்ல]] எடுக்கும் டிக்கட் விலை அவன் சொன்னது 23000 ரூபாய், எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.
[[சீக்கிரமா அப்பாவை அனுப்பிருவோம்லேய் அப்பா தொல்லைகள் தாங்க முடியல...மும்பை ஏர்போர்ட்]]

ஆஹா என்னமோ ஆளைப்பார்த்து ஆட்டைய போடுறானா இல்லை உண்மையா என்று வேறே ஒரு ட்ராவல்ஸ் ஆபீஸ் போனோம், எனக்கு நான்காம்தேதி டிக்கெட் வேண்டும் சீப்பாக எந்த ஏர்லைன்ஸ் என்றாலும் பரவாயில்லை என்று சொன்னேன்.

ஒரு பதினைந்து நிமிடத்தில் சொன்னான், "அங்கிள் [[அங்கிளா ?]] ஏர் இந்தியா பிளைட் இருக்கு ஆனால் நீங்கள் மும்பை டு டில்லி போயி அங்கே ஏர்போர்டில் நான்கு மணிநேரம் காத்திருந்து டெல்லி டூ பஹ்ரைன் போகவேண்டும் என்று சொல்ல...சம்மதித்தேன்.
[[டில்லி ஏர்போர்ட், யூனிபார்மில் ஏர்போர்ட் ஸ்டாஃப், அங்கே இருக்கும் அம்மிணி பாவம் அவர் ஒரு பயணி]]

ஆன்லைனில் அவனுக்கு புக் செய்ய தாமதம் ஆனபடியால், ஏற்கனவே பல் சுத்தம் செய்ய எண்ணி இருந்தபடியால், வீட்டம்மா "பல் ஆஸ்பத்திரி பக்கத்துலதான் இருக்கு வாங்க பத்து நிமிஷத்துல பல் கிளீன் பண்ணி விட்டுருவாள்" [என்னாது டாக்டர் பொண்ணா ?]] விட்டுருவோமா என்ன, அழகான மராட்டி டாக்டர் பல்லை பேர்க்காமல் கிளீன் செய்து விட்டாள், எனக்குதான் பல் கிளீன் செய்தாங்க ஆனால் நான் காட்ட வேண்டிய ஆக்ஷன் எல்லாம் என் பொண்ணு செய்துகிட்டு இருக்கு அவளுக்கு பல் கூச ஆரம்பிச்சுடுச்சு.

டிக்கட் வாங்கிட்டு, பாப்பா பிறந்தநாளுக்கு கடையில போயி கேக் ஆர்டர் பண்ணிட்டு வந்தோம்.
[[டெல்லி டியூட்டி ஃபிரீ]]

பஹ்ரைன் கிளம்பும் நாள் வந்ததும், எல்லாமுறையும் சர்வதேச விமானம் நிலையம் மூலமாக வந்த, போன எனக்கு, உள்ளூர் விமான நிலையம் புதிது, அதுவும் டில்லி ரொம்ப புதிது, டில்லியில் ஏதும் பிரச்சினை என்றால் ரயில் பிடித்து மும்பை போயி சேர பணம் எடுத்து வைத்துக் கொண்டேன்.

கண்ணீரோடு குடும்பத்திடம் இருந்து விடை பெற்று போர்டிங் கார்டு வாங்கப்போனால், லக்கேஜ் இருபத்தி ஐந்து கிலோ, பதினைந்து கிலோதான் கொண்டுபோக முடியும் என்று கவுண்டரில் சொல்ல, "யோவ் நான் டில்லி போகலைய்யா பஹ்ரைன் போறேன்"ன்னு கோபமாகவும் உஷாராகிட்டன் "ஸாரி சார் வெரி ஸாரி" என்று லக்கேஜை உள்ளே விட்டான் [[எக்ஸ்ட்ரா கிலோவுக்கு பணம் குடுத்தா அது இவன் பாக்கெட்டுல, மக்களே கவனிச்சுக்கோங்க]]

கடுமையான காவல் சோதனைகள் தாங்கமுடியவில்லை, பெல்டை வரை கழட்டி காட்டவேண்டி இருக்கு, கடுமையான கெடுபிடிகள், லேப்டாப் வேற கையில இருந்ததால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

பிளேனில் ஏறுமுன்பு போர்டிங் கார்ட் செக் பண்ணி கிழித்து தரும் இடத்தில் நான் போனதும் [[வரிசையில் நின்னுதான்]] இரண்டு பெண்களில் ஒருத்தி கிழித்து கொடுத்த பேப்பரை திருப்பி வாங்கி என்னை ஒரு லுக் விட்டு சீட் நம்பரை பென்னால் வெட்டிவிட்டு வேறொரு நம்பரை எழுதினாள், நன்றி சொன்னதும் அல்லாமல் எனக்கு ஒரு டவுட்டு, சீட் நம்பர்ல என்னமோ சூனியம் வச்சிட்டாளோன்னு.
[[கம்பளம் வேலைப்பாடுகளுடன் ஏர்போர்ட் தளம்...!]]

பிளேன் உள்ளே போயி எக்னாமிக் சீட் தேடிப் போன என்னை ஏர்ஹோஸ்ட் செக் செய்துவிட்டு என்னை பிளைட்டின் முன்பக்கம் அழைத்து சென்று "பர்ஸ்ட் கிளாஸ்" சீட்டில் அமர வைக்க, அப்பத்தான் புரிந்தது அந்தப் பெண்ணின் லுக்கும், சூனியம் வச்சிட்டான்னு பயப்பட்டதும், மனதில் அப்பெண்ணுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்.

டில்லி...

பஹ்ரைன், கத்தார், துபாய், ஷார்ஜா, அபுதாபி, குவைத், மும்பை, திருவனந்தபுரம் ஏர்போர்ட் எல்லாம் பார்த்துருக்கேன் ஆனால் டில்லி ஏர்போர்ட் போல எங்கும் சுத்தம் பார்க்கவில்லை, கிளீன்..... கிளீன்..... கிளீன்... எங்கும் கிளீன், அந்தந்த டிப்பார்ட்மேண்டுக்கு தனிதனி யூனிபார்ம் அதுவும் குளிருக்கான ஜாக்கெட்டும் அப்படியே.
[[மதியம் மூன்று மணி வேளையிலும் பொழியும் பனி !]]

வாக்கிடாக்கியில் ஹிந்தியில்தான் பேசுகிறார்கள், எங்களை மாதிரி ஆங்கிலத்தில் இல்லை, என்ன...பத்தடிக்கு பத்தடி தூரத்துக்கு ஏ கே நாப்பத்தேழு கன்"னுடன் ராணுவ வீரர்கள் ரெடியாக பொசிஷனில் நிற்கிறார்கள்.

டில்லியில் தங்கி இருக்கும் வெங்கட் நாகராஜ் அண்ணனை தொடர்பு கொள்ள ஆசையாக இருந்தது அவர் நம்பர் இல்லை, இருந்திருந்தால் நான்கு மணிநேரம் டில்லியில் பார்க்கமுடிந்த இடங்களை பார்த்து இருக்கலாம், இல்லைன்னா அண்ணனையாவது பார்த்திருக்கலாம்.

சூப்பர் ஏர்போர்ட், உலகில் எல்லா ஏர்போர்டிலும் "டியூட்டி ஃபிரீ"ன்னு மட்டும்தான் எழுதி வச்சிருப்பாங்க அனால் இங்கே "டில்லி டுயூட்டி ஃபிரீ"ன்னு போர்ட் வச்சிருக்காங்க, அநியாய விலை, அருகில் இருக்கும் கடைகளில் காப்பி டீ 130 ருபாய் மினிமம், இலவச குடி தண்ணீர் பைப் குடிக்கவே அருவருப்பு, காரணம் தண்ணீர் மேலாக பாயும் வசதி செய்துள்ளார்கள். வாய் வைத்துதான் குடிக்க வேண்டும் !
[[ஏர்போர்டில் வண்டியில் உட்கார்ந்தே போகனுமா ? இதே போல நிறைய கார்கள் இலவசமாக...!]]

ஸ்மோக்கிங் ரூம் செமையாக அதுவும் ஜாலிகள் அமைத்து இயற்கையாகவே செய்து இருக்கிறார்கள், சிகரெட்டும் உள்ளேயே விற்கிறார்கள், உள்ளே இருந்து வெளியே பார்த்தால் மதியம் மூன்று மணி நேரத்திலும் பனி கீழே இறங்கி எதையும் பார்க்க முடியால் மேகம் மறைத்து வைத்துள்ளது.
[[பனிப் பொழிவின் நடுவே பரப்பரப்பாக இயங்கும் பணியாட்கள் !]]

வெள்ளை சுள்ளையுமாக அரசியல் வியாதிகளையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது, டில்லிக்கு போனாலும் கும்பலாத்தான் போயி வருவாங்க போல, நான்கு மணி நேரமும், பச்சை தண்ணீர் குடிக்காமல் ஒரே ஒரு காப்பி வாங்கி குடித்துவிட்டு, அடுத்த பிளைட் பிடிக்க கிளம்பினேன், பின்னே டில்லி வரை வந்துட்டு எதுவும் குடிக்காம வந்தால் தலைநகரின் மானம் என்னாவது ?

டிஸ்கி : எத்தனையோ முறை [[தைமூர் முதற்கொண்டு யுத்தத்தில் ]] தரைமட்டமாக்கப்பட்ட, ரத்தக்குளியல் நடந்த இடம்தான் டெல்லி, இருந்தாலும் பலமுறை பீனிக்ஸ் பறவையாக எழும்பி, இப்போதும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கும் டில்லி மக்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...!


Tuesday, February 4, 2014

பெண்ணுக்கு நீச்சல் கத்து கொடுக்காதவன் எல்லாம் ஒரு பதிவரா ?

எனது ட்விட்களில் சில...

@என்னால நீ கெட்டாய் உன்னால நான் கெட்டேன், நாம கெட்டது அடுத்தவனுக்கு கொண்டாட்டமாக போச்சு - தமிழனின் ஒற்றுமை

@கலகலவென்று சிரிப்பூட்டும் நண்பர்கள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள், என்றும் இளமையாக இருப்பார்கள்...!

@நன்னாரி சர்பத்தில் பழுத்த வாழைப்பழம் கலந்து தருவது கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலம், அதில் கொஞ்சம் ஐஸ்சும் கலந்தால் தேவாமிர்தம் !

@ஒவ்வொரு சாதிக்குள்ளும் உட்பிரிவு வெளிப்பிரிவுன்னு வேற இருக்காமே ? ஹா ஹா ஹா ஹா சாவுங்கடா....!

@மனிதனை மனிதன் கொல்ல எத்தனை எத்தனை ஆயுதங்கள், இவைகளை வைத்து என்ன சாதிக்கப் போகிறான் மனிதன் ?

@ஏவுகணை தாக்குதலில் இந்தியா நம்பர் 1: சிவதாணுபிள்ளை // ஒருவேளை சோத்துக்கு கூட வக்கில்லாமல் இருக்கும் 30 கோடி மக்களுக்கு இதனால் இன்னா லாபம்டேய் ?

@காதலிக்கும் போது, உன் பெயரை சொன்னால் என் வாவில் தேன் துளி"ன்னு கவிதை எழுதியவன், கல்யாணத்துக்கு அப்புறம் போன்ல சனியனே"ன்னு திட்டுறான் அவ்வ்வ்வ்வ்....!

@சாப்பாட்டு விஷயத்தில் வயிற்றுக்கு வஞ்சமில்லாமல் சாப்பிடுகிறார்கள் அரபிகள்...!

@கோவம் வார மாதிரி திட்டுறத விட்டுபுட்டு இப்பிடி சிரிப்பு வார மாதிரியா திட்டுவாயிங்க ?

@நீச்சல் குளத்துல எனக்கு நீச்சல் கத்து தாறியான்னு ஃபிகர் கேட்டதுக்கு முடியாதுன்னு சொன்ன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன் போல.... போங்கப்பா....

@பூமி உருண்டை என்பதை கண்டறிந்து, பூஜ்ஜியத்தை கண்டறிந்தான் தமிழன், வாழ்க்கையும் ஒரு உருண்டை என்ற தத்துவத்தையும் அதனுள் அடக்கினான் தமிழன்....!!

@எண்ணெய் தேச்சி சீயக்காய் ஷாம்பூ போட்டு குளிச்சாலும் கூட, எண்ணெய் பிசுக்கு கொஞ்சம் அப்பிடியேதானே இருக்கு, அப்புறம் எதுக்கு குளிக்கணும் ஹி ஹி.

@எட்டப்பனுக்கும் தொண்டைமானுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை பெயர்களைத் தவிர...!

@பிங்க் கலர் பெண்களுக்கு ஃபேவரிட் என்றால், ஆண்களுக்கு...? எனக்கு ஜெர்மன் சிகப்பு பிடித்தமான கலர்...!

@கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, என்று அன்றைய திரைப்படங்கள் அவர்களை ஊக்குவித்தன, இன்றைக்கு "போடாங்கோ போடாங்கோ"ன்னு திரைப்படங்கள் வருகிறது ! நம்ம ஆளுங்களுக்கும் "போடாங்கோ"தான் பிடிக்குது போல...!

Sunday, February 2, 2014

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தொடர்...!

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....தொடர்.. மூன்றாம் பாகம்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...தொடர்...நான்காம் பாகம்


சுதன் ஒரு அறைக்குள் செல்ல, நான் பரப்பரப்பாக அந்த அறைக்குள் நுழைந்ததும், டிரெஸ்ஸை கழட்ட சொன்னார் டாக்டர், அப்புறமாக உள்ளாடையை கழட்டிவிட்டு இதை கட்டிக்கோ என்று ஒரு வெள்ளை துண்டு பீஸை கொடுத்து கட்டிக்கோன்னு சொன்னதும் நடுங்கிப் போனேன்.
[[தாயின் அன்பு உள்ளத்தோடு திருநெல்வேலியில் எனக்காக வந்து வாழ்த்தி வழியனுப்பி சென்ற  என் செல்லம் ஆபீசர்...]]

கூச்சத்துடன் வேண்டாம் என்று சொன்னாலும் விட்டாதானே...பலவந்தமாக கழட்டி மாட்டி விட்டு, ஒரு சின்ன ஸ்டூலை போட்டு அதில் உட்கார சொன்னார்கள், உட்க்கார வைத்து நவரத்தின எண்ணைன்னு நினைக்கிறேன் மணமும் அப்பிடிதான் இருந்தது.

தலை நிறைய ஊற்றி தலையில் ஆரம்பித்தது மசாஜ், உச்சி குளிர்ந்து மூளை பப்பரப்பா ச்சே பரவசமாகியது, மசாஜ் வேணாம்ன்னு கோவளம் பீச் போன விஜயன், ஆபிசரின் நினைப்பெல்லாம் இங்கே அல்லவா இருக்கும் என்று எண்ணி சிரித்துக் கொண்டேன்.

தலையை கசக்கி பிழிந்தார் டாக்டர்....
[[கம்பீரமாக ஆபீசர், அவர் தோளில் கைபோட தந்த சுதந்திரம் ஆஹா...கண் வலியிலும் சிலாகித்தேன்...!]]

அப்புறமாகத்தான் அடுத்த மசாஜ்...மசாஜ் செய்யவென்றே பிரித்யேகமாக ஒரு கட்டில் இருக்கிறது, அதில் ஏறி குப்புற படுக்க வைத்தார்கள், முகத்தில் இருந்து ஆரம்பித்தது மசாஜ்.

நரம்புகள் தென்னி மூர்ச்சை ஆகிறக் கூடாது என்பதற்காக பேசிக் கொண்டே இருக்கிறார்கள் டாக்டர், நம்மை ரியாக்ஷனைக் கண்டு செயல்படுகிறார்கள், நமக்கு ஏற்கனவே உள்ளடிகள் பட்டு வலிக்கும் இடங்களில் அவர்கள் கை வைத்ததும் நமக்கு வலிக்கிறது என்பதை கண்டறிந்து, அந்த இடத்தில் அழகாக தேய்த்து வலியை போக்குகிறார்கள்.
[[இது எவம்லேய்..?]]

இடுப்பு பக்கமா மசாஜ் நகர்ந்த போதுதான் டாக்டர் அலறி ஓடினார், காரணம் குப்புற கிடந்த நான் படார் என்று பெட்"டை விட்டு சாடி எழ...கதவு பக்கமாக ஓடிய டாக்டர் திரும்பி பார்த்து, நான் ஓகே என்று தெரிந்ததும்தான் அருகில் வந்தார்.

"என்னாச்சு என்னாச்சு ?" மலையாளத்தில்...

 "தயவு செய்து இடுப்பில் கைவச்சிறாதே, இடுப்புல கைவச்சா சப்புன்னு அடிக்குறது என் [[குடும்ப]] வழக்கம்"

"ஏன் ?"

"ரொம்ப கூச்சமா இருக்கும் அதான்" [[ஹி ஹி]]

டாக்டருக்கும் நான் புதுசா தெரிய, அவங்க சிரிச்ச சிரிப்பு கோவளம் வரை கேட்டுருக்கும்னு நினைக்கிறேன் அம்புட்டு சிரிப்பு...மறுபடியும் படுக்க வைத்து இடுப்பில் கைவைக்கவும் நான் ஜம்ப் செய்வதும் டாக்டர் சிரிப்பதுமாக மசாஜ் தொடர்ந்தது...

"நீ இதுக்கு முன்னாடி மசாஜ் பண்ணினது கிடையாதா ?"

"இந்த கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் எனக்கு புதுசு"

"இந்த மசாஜ் பண்ணுனதுக்கு அப்புறமா பாரு உடம்பும் மனசும் லகுவாகிடும்"

"சும்மாவா பின்னே அம்புட்டு காசு குடுத்துருக்கேனே"

நரம்புகளை எல்லாம் மீட்டி, மறைந்து இருக்கும் நரம்புகளை வெளியே வரவைத்து, நரம்பை பலம்கொண்ட மட்டும் உருவி உருவி தேய்க்கிறார்கள், வலிக்கவும் செய்கிறது, சுகமாகவும் இருக்கிறது, கலைஞரின் குடும்பமும் அரசியலும் போல...
[[கிறுக்கு பய மாதிரி இருக்கும் என்னை, விஜயன் ஹீரோ ஆக்கி எடுத்த போட்டோ, அவருக்குள்ளே இருக்கும் போட்டோ ரசனை வெளியே வந்த நிமிடம் இது...!]]

இடுப்புல இக்லி"ன்னு தெரிஞ்சதும் டாக்டர் செம ஜாலி ஆகிட்டார், அப்பப்போ இடுப்பை பதம் பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார், அப்பறம் மல்லாக்க படுக்க வைத்து மறுபடியும் மசாஜ் தொடர்ந்தது.

அப்பாடா எப்படியோ ஒன்னரை மணிநேரம் மசாஜ் முடிந்ததும், இதமான சூடு தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள், சோப்பு டவல் இன்னபிற இத்யாதிகள் செய்து தருகிறாகள்.

உடம்பும் மனசும் டாக்டர் சொன்னது மாதிரியே இலகுவாக தெரிந்தது, சுதனுக்கு இன்னும் "ஆபரேஷன்" முடியாததால் ஆஸ்பத்திரில இருந்து வெளியே வந்து, மணிகண்டனும் நானும் சுதனுக்கு காத்து நிற்கும்போது ஒரு சர்பத் கடை தெரிய, ஒரு லெமன் ஜூஸ் குடிப்போமென்று கடைக்கு போனோம்.
[[நண்பன் ராஜகுமாருடன் விஜயன்...]]

அங்கே ஒரு பெரியவர் இருக்க லெமன் ஜூஸ் கேட்டதும் அவர் சொன்னார், சோடா மிக்ஸ் பண்ணி தரட்டுமா என்று கேட்க, சூப்பரா இருக்குமே ரெண்டு தாங்க என்று சொல்லி எம்புட்டு என்று கேட்டதும், எண்பது ரூபாய் என்றதும் நூறு ரூபாய் நோட்டை குடுத்து விட்டு வந்து அமர்ந்து சோடா குடித்து விட்டு கிளாஸ் கொடுக்கும் போது பாக்கி பணம் கேட்டால்...

நீ காசே தரவில்லை என்கிறார், மணிகண்டனுக்கு ஷாக்...எனக்கு புருஞ்சி போச்சு என்னடா கேரளா தலைநகர்ல ஒருத்தனும் இன்னும் நம்மளை ஏமாத்தலையே ஒரு வேளை நம்மை பார்த்து பயந்துட்டாங்களோன்னு நினைச்சேன் சரியாப்போச்சு.

அப்புறம் என்ன மறுபடியும் பணம் கொடுத்துட்டுதான் வந்தோம் ம்ஹும் நாமெல்லாம் ஆரு ?
[[விஜயன் ஆபீஸ் முன்பாக]]

சுதன் வர...மறுபடியும் ஆட்டோ இருபது நிமிஷமாக ஓட..... ரோட்டுலதாங்க, கோவளத்தில் இருந்து ஆபீசரும் விஜயனும் செட்டியாரும் வந்துசேர, செமையா சாப்புட்டுட்டு நாகர்கோவில் நோக்கி விரைந்தது கார்.

மசாஜின் தாக்கமோ என்னமோ காரில் செமையா கிறக்கமும் உறக்கமும், பேச்சும் சந்தோசமுமாக வர, நண்பன் ராஜகுமார் போன்...

"லே மக்கா எங்க இருக்க ?"

"மார்த்தாண்டம் தக்கலை தாண்டி வந்துட்டு இருக்கேன் மக்கா"

"நான் நாகர்கோவில் வரணுமா உன்னை பிக்கப் பண்ண ?"

"ம்ம்ம் சரி அப்போ நீ நம்ம விஜயன் ஆபீஸ் வந்துரு"

ராஜகுமார் விஜயனுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்தாலும் அவனுக்கு ஆபிசரை பார்க்க மிகவும் ஆசையாக இருந்தான், இரவு நேரங்களில் நான் இல்லாமல் எங்கேயும் போகமாட்டான், காரணம் நகைகள் வாங்க விற்க தொழில் செய்கிறான், இவனிடம் தாலிக்கொடி செய்து கொடுக்க சென்டிமென்ட் பார்க்கும் பெண்கள் நிறைய உண்டு, நல்ல கைராசி என்று சொல்வார்கள் சுத்துபட்டு கிராமங்களில்...!
[[விஜயன் ஆபீஸ் கொஞ்சம் தள்ளி இருக்கு, அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதி, உமன் காலஜ் சற்று தள்ளி இருக்கு, நாகர்கோவில் பஸ் நிலையம் போகும் சாலை]]

விஜயன் ஆபீஸ் முன்பு வந்ததும் ஆபீசரையும் ராஜகுமாரையும் மீட் பண்ண வச்சுட்டு, நாளை கழித்து மும்பைக்கு ஒரு டிக்கட் புக் பண்ணி வச்சிருங்க விஜயன், நான் நாளைக்கு வந்து வாங்கி கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, நண்பர்கள் யாவருக்கும் விடை கொடுக்க...விஜயன் ஆபீஸ் போயிட்டுத்தான் வீட்டுக்குப் போவேன் என்று சொல்ல...ஆபீசரும், சுதனும், செட்டியாரும் நண்பக்களுமாக அவர்கள் கார் நெல்லை நோக்கி சீறிப்பாய்ந்தது.


மறுநாள் விஜயன் சொன்னதுபோல டிக்கெட் புக் செய்து வைத்து இருந்தார், அதுவும் கன்பார்ம் டிக்கட் என்பது ஆச்சர்யம் [[நன்றி மக்கா]], அவரிடம் பிரிண்டர் இல்லாமையால் அவர் நண்பர் ஆபீஸ் போனோம், கரண்டு கட்டாகிருச்சு...அப்போதுதான் மின்வெட்டினால் எவ்வளவு மக்கள் கஷ்டபடுகிறார்கள் என்பதை நேரில் அறிந்தேன்...!

"நான் ஊர் வந்து மூன்று நாளாகியும் எங்க ஊர்ல கரண்ட் கட்டே ஆகலை விஜயன்...!"

"ஆ...அப்படியா" என்று வடிவேலு மாதிரி ஷாக் ஆகிட்டார்.

அப்புறமா கீழே இருந்த ஜெராக்ஸ் கடையில போயி பிரிண்டர் எடுத்து விஜயன் ஆபீஸ் போயி போட்டோக்களுக்கு போஸ் குடுத்து, விஜயனிடம் பிரியா விடை பெற்று வீட்டுக்கு வந்தால்....

வீட்டுல கரண்ட் இல்லை, ஆ..அப்பிடியான்னு விஜயன் ஷாக் ஆனது பட்டென்று நினைவில் வந்து போனது [[அதுக்குள்ளேவா பொறாமை பத்திக்குச்சு ?]]

அடுத்தநாள் ரயில் பிடிக்க அரைகுறை நிறைகுறைய நண்பனின் காரை வரவச்சி [[லேட்டாகிருச்சு]] ரயில்வே ஸ்டேஷன் வந்தால் [[நேற்று ராத்திரி கண்ணுக்குள்ளே ஏதோ விழுந்து உறுத்திகிட்டே இருந்துச்சு]] ஒரு போலீஸ் என்னை நிப்பாட்ட...... ஏற்கனவே கண்ணு எரிச்சல்ல நான் வந்துட்டு இருக்கேன்.
[[டிக்கட் பிரிண்டர் எடுக்கப் போன விஜயன் நண்பனின் ஆபீஸ்]]

"என்னய்யா ?" என்று ஒரு வெடி வெடிச்சென், போலீஸ்"கார் பயந்துட்டார் போல [[ஹி ஹி]] சார் நீங்க போங்க சார்  என்று பம்மி பதுங்க, எனக்கோ மனதில் சிரிப்போ சிரிப்பு...ரயில் நாகர்கோவிலை கடந்து போகும்போது ஆபிசரின் போன்...

"ஹலோ மனோ இப்போ ரயில் எந்தப்பக்கம் வந்துட்டு இருக்கு ?"

"வள்ளியூர் தாண்டி வந்துட்டு இருக்கேன் ஆபீசர்"

"என் கம்பார்மேன்ட் நம்பர் எஸ் ஃபோர்"

"அது நேற்றே விஜயன் தந்துவிட்டார், ஆமா உங்களுக்கு ரயில் இஞ்சின் எந்தபக்கமா இருக்கு ?

"தெரியலையே ஆபீசர்" [[கண்டிப்பாக ஆபீசர் நொந்து போயிருப்பார்ன்னு நினைக்கிறேன் ஹி ஹி]] நானே ரயிலுக்கு மேலேயும் கீழேயுமா முந்தயநாள் நடு ராத்திரி வரை முங்கிட்டு எழும்பமுடியாம வந்துட்டு இருக்கேன் அவ்வ்வ்வவ்...

"மனோ சாப்பிட என்ன வேணும் ?"

"மெது வடையும், இட்லியும் ஆபீசர்" நான் ஆபீசர் ஆபீசர்"ன்னு போன்ல பேசிட்டு இருக்குறதை கேட்டுட்டு பக்கத்தில் இருந்தவர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போனார்கள். எனக்கு கண்வலி தாங்கலை, எப்படா திருநெல்வேலி வரும் ஆபிசரை பார்த்துவிட்டு படுத்து தூங்கவேண்டும் போல இருந்துச்சு.
[[அழகு விஜயன்..!]]

நெல்லை வந்து சேரவும் ஆபிசரை தேடினேன் தூரத்தில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார், அருகில் வந்து மெதுவடையும் இட்லியும் தந்துவிட்டு, என் வீட்டிற்காக அல்வா மற்றும் முறுக்கு என்று தின்பண்டங்கள் கொண்டு வந்தார் [[மிக்க நன்றி ஆபீசர்]], ஒரு தாயின் அன்பு ஆபீசரிடம் தெரிந்தது மறுபடியும் அங்கே...!

சரி போட்டோ எடுப்போம் என்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டு பிரியா விடை பெற்றோம்...ஆபீசர் ரயிலில் என் சீட்டில் வந்து அமர்ந்துவிட்டுதான் போனார்[[இது எப்பவும் வழக்கமே]], அவரை கவனித்த டிக்கட் பரிசோதகருக்கு என்ன தோணிச்சோ தெரியலை ரயிலில் எல்லாரிடமும் டிக்கட் கேட்ட பரிசோதகர்கள், மும்பை வரும்வரை என்னிடம் யாரும் டிக்கட் கேட்கவில்லை, நானாக கொடுத்தும் வேண்டாம் என்று சொன்னார் ஒரு பரிசோதகர், ம்ம்ம் ஆபிசரின் கம்பீரம் அப்படி...!!!

டிஸ்கி : ஒரு பைசா செலவில்லாமல் கேரளா தலைநகரை சுற்றி காட்டிய ஆபீசர், சுதன், மணிகண்டன், செட்டியார், விஜயன் மற்றும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்....

டிஸ்கி 2 : மீண்டும் சென்னை நண்பர்கள் ஒருமுறை கூட மன்னிச்சு.

முற்றும் 

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!