Thursday, June 30, 2011

தம்பி தம்பிடோய்....

சாமிக்கு போட ஒருமுழம் பூ வாங்கி வந்த அண்ணன் குருவி, 
தம்பி குருவி'கிட்டே பத்திரமா பார்த்துக்க சொல்லிட்டு போச்சாம், 
திரும்பி வந்த அண்ணன் குருவி 
பூ அளவு குறைவாக இருக்கவும் தம்பி குருவியை கொத்தி கொன்னுருச்சாம், 
அப்புறமா பூவில் தண்ணி தெளிச்சி பார்க்கும் போது 
பூ அளவு சரியாக இருக்கவே,
துக்கம் தாளாத அண்ணன் குருவி 
இப்போதும் எங்கள் ஊரில்
 ""தம்பி தம்பிடோய் சித்திரகுட்டிடோய் பூ எத்திடோய்""ன்னு அழுதுட்டே பாடி திரியுது....!!! 
இப்போ கூட எங்க வீட்டு பக்கமா பாடி அழுதுட்டு இருக்கு, 
மனசுக்கு பாரமா இருக்கு..
ஆனால் அந்த குருவியை பார்க்கத்தான் முடியவில்லை....!!!


டிஸ்கி : எங்கள் ஊரில் இதை பாட்டி கதையாக சொல்கிறார்கள்...!!!


டிஸ்கி : எனக்கு நெட் சரியாக ஒர்க் ஆகவில்லை நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள்....


டிஸ்கி : படம் போட முடியலைப்பா.....

Tuesday, June 28, 2011

குற்றாலம் பிரயாணம்

ஆபீசரிடமிருந்து விடை பெற்று கொண்டு நான்கு சக்கர சைக்கிள் குற்றாலம் நோக்கி சீறி பாய்ந்தது சிபியையும் செல்வாவையும் ஏற்றிக்கொண்டு...

குற்றாலத்தில் நாங்கள் சாப்பிட்ட நொங்கு....

இரவு நேரம் என்பதால் அக்கம் பக்கம் இடங்களை ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் சிபி கூட பேசிட்டே போயிட்டு இருந்தேன் செல்வா நல்லா தூங்கிட்டே வந்தான், சிபி அரை மயக்கத்துலையே என்கூட பேசிட்டு [[நான்தான் பேசினேன்]] வந்தான் [[நடிச்சுட்டு வந்தான் ராஸ்கல்]]


என் மச்சினன் சைக்கிளை மிக லாவகமா ஓட்டிட்டு இருந்தான் [[நான்தான் குலை நடுங்கிட்டு இருந்தேன் ஏன்னா அவன் புது டிரைவர், அது இந்த ரெண்டு நாதாரிக்கும் தெரியாது ஹே ஹே ஹே ஹே]]


நேரே ஆபீசர் ஐடியா படி தென்காசி'ல போயி ஹோட்டல்ல ரூம் போட போனோம், சிபி மூதேவி மூஞ்சிய பார்த்ததும் ஒரு பய ரூம் தரமாட்டேன்னுட்டான்....!!!!

தென்காசி சைக்கிள் நிலையம் ஸாரி பேருந்து நிலையம்...

எப்பிடியோ காலை கையை பிடிச்சி நானும் என் மச்சினனும் ஒரு ஹோட்டல்ல ரூம் ரெடி பண்ணினோம். ஆனா அங்கே எங்கள் அட்ரஸ் உள்ள ஐடி கார்ட் கேட்டார்கள். நான் உடனே எனது பான் கார்டை எடுத்து பந்தாவாக [[சிபிக்கு முன்]] எடுத்து கொடுக்க...

தென்காசி ஆட்டோ ஸ்டேன்ட்....

அந்த ரிசப்ஷனிஸ்ட், எனது பான் கார்டில் காறி துப்பி இது செல்லாது என சொல்ல நான் சிபி'க்கு முன் கூனி குறுகி போனேன். சரி டேய் மூதேவி உன் ஐடி கார்டை குடுடா நாயே என்றேன். சொன்னான் பாருங்க அதுக்கு பதில்....


நான் எங்கே போனாலும் எந்த புரூப்பும் வச்சிக்கிரதில்லை [[புரூப் இல்லாம அடி வாங்கிட்டு வருவானோ]] என்பதை பாலிசியாக வச்சிருக்கேன்னு சொன்னான் பாருங்க, அங்கேயே தூக்கி போட்டு நாலு மிதி மிதிக்கனும்னு தோணவே, சரி என்னதான் இருந்தாலும் நாதாரி நண்பனாயிட்டானேன்னு விட்டுட்டேன் அந்த ராஸ்கல....


அடுத்து நாங்கள் படும் சிரமத்தை கவனித்த ரிஷப்சனிஸ்ட், சார் டிரைவர் லைசென்ஸ் இருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னதும் நிம்மதி ஆச்சு, எலேய் மச்சினா ஆல்பர்ட் வாடா மாப்பிளை உன் டிரைவிங் லைசென்சை குடுன்னு சொன்னதும்...

கார்லதான் உறங்குனான்னா இந்த பிசாசு போட்டோவுலையும் உறங்குது பாருங்க...

என்ன மச்சான், லைசென்சா அப்பிடின்னா.....??? டேய் சைக்கிள் [[கார்]] ஓட்ட லைசென்ஸ் வச்சிருப்பியே அதை குடுடா, ஸாரி மச்சான் எனக்கு லைசென்சே கிடையாதுன்னு சொல்ல அடபாவி பயலுகளா ஒரு மார்க்கமாத்தான் குற்றாலம் தள்ளிட்டு வந்துருக்காணுக போல.....!!!


டேய் சிபி போடா போயி செல்வாகிட்டே ஏதாவது ஐடி ஏதும் இருக்கான்னு கேளுடா நாயே'ன்னதும் ஓடினான் பாருங்க ஒரு ஓட்டம், நாலஞ்சி கார்கள் சடன் பிரேக் போட்டு நின்னுச்சி நெல்லை பாஷையில் அவனுக திட்டினது இந்த பயலுக்கு புரியலை போல, என் மச்சினன் கி கி கி கி'ன்னு சிரிச்சிட்டு நின்னுட்டு இருந்தான்.


கார்'ல உறங்கிட்டு இருந்த செல்வாவுக்கு நாலு மிதி போட்டு எழுப்பினான், டேய் தம்பி உன்கிட்டே ஐடி ஏதாவது இருக்கான்னு கேட்க, அவன் அவனுக்கே உரிய பதிலை சொல்ல, மிரண்டு போனான் கண்ணாடி சிபி,

ஒரு வழியா செல்வாவின் ஐடியை கொடுத்து ரூம் போட்டோம்..[[இதனால் சொல்ல வரும் நீதி என்னான்னா இனி சிபி கூட ஊர் சுத்த போறவிங்க கொஞ்சம் உஷாரா இருந்துக்கொங்க]]


கொஞ்சம் மழை தூறிக்கொண்டே இருந்ததால் நல்ல குளிரா இருந்தது தென்காசி........

தொடரும் பயணம்........

டிஸ்கி : என்னாது சிபி'யை குரங்கு கடிச்ச மேட்டரா....??? அது குற்றாலத்துல இது தென்காசி'ல.......!!!

டிஸ்கி : தமிழ்வாசி"யின் விஜயகாந்த் வீடியோ மேட்டரை பற்றி பேசியதும் என் மச்சினன் உடனே பிரகாஷின் போன் நம்பரை கேட்டான் ஹி ஹி நான் குடுக்கலை காரணம், மச்சினன் பாளையங்கோட்டையில் விஜயகாந்த் கட்சியின் ஏதோ ஒரு பதவியில் தீவிரமா இருக்கான் ஹே ஹே ஹே ஹே தமிழ்வாசி சாக்குரதைலேய்....ஹா ஹா ஹா ஹா.....

Monday, June 27, 2011

அதிரடி [[நெல்லை]] சந்திப்பு கடைசி பாகம்

ஆபீசர் சங்கரலிங்கம், ஆக்கபூர்வமான செயல்பாட்டின் தந்தை என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அவர் மனசு ஒரு பிஞ்சி குழந்தையின் மனசு என்பது நான் பார்த்து பேசி பழகி, அவரிடம் உணர்ந்து கொண்டேன்...!!!!

நான் சந்திப்புக்கு வந்ததே ஒருமணி நேரம் லேட்டாதான், ஹாலில் நுழைந்ததுமே என்னை தெரிந்து கொண்டு உள்ளே அழைத்து [[இம்சை அரசனும்'தான்]] அருகில் அமர்த்தி அழகு பார்த்தார். மைக்கும் உடனடியாக என்னிடம் தந்தார் ஆபீசர்....!!! [[சிபி அப்போது கீழே கல்லை தேடினான் என்று அப்புறமாதான் செல்வா சொன்னான் குற்றாலத்தில் வைத்து ம்ஹும் ராஸ்கல்]]


ஒவ்வொரு பதிவராக பேசி கொண்டிருக்கும் போதே, இடையிடையே வெளியே போயிட்டும் வந்துட்டும் இருந்தார் ஆபீசர். நான் கவனிச்சிட்டே இருந்தேன். அது மீடியா'காரர்களுக்கு அட்வைஸ் செய்யவும், சாப்பாடு ரெடி ஆகிருச்சா'ன்னும் அக்கறையோடு பார்த்து கொண்டிருந்தார்....!!!


இடையிடையே வந்து சபையை கண்ட்ரோலிலும் வச்சிகிட்டார் நேர்த்தியாக, போட்டோ எப்பிடி எப்பிடி எடுக்க வேண்டும்னு டைரக்ஷன் சொல்லிட்டும் இருந்தார். 




ஆக்கப்பூர்வமாக உண்டியல் பணம் வசூல் செய்து ஒரு பெரிய சாதனையை செய்தும் காட்டினார் மட்டுமல்லாது அதை தொடரவும் செய்கிறார் தன்னடக்கமாக....!!!

அப்புறமா சூப்பரா பதிவர் சந்திப்பு முடிஞ்சதும், சாப்பிட போனோம் பஃபே சாப்பாடு அருமையா செய்து இருந்தார்கள் [[பின்னே பிடிச்சி உள்ளே கிள்ளே போட்டுற போறாருன்னு பயந்துட்டாயின்களோ]] ஆபீசர் பம்பரமாக சுழண்டு கொண்டு இருந்தார், அவர் சொன்னது போல இது குடும்ப விழா ஆச்சே யாரும் மனசு நோகாமல் இருக்கணுமே என்ற அக்கறை அவர் கண்ணில் தெரிஞ்சது...!!!


எல்லாரும் திருப்தியா சாப்பிட்டோம் சிபி தவிற, ராஸ்கல் பத்து பிளேட் உள்ளே தள்ளிட்டு சர்வர் கையில ஆப்பை அடி வாங்குன பின்பும் சாப்பாட்டு திசையையே பார்த்துட்டு இருந்தான் மூதேவி...[[ஹா ஹா ஹா மாட்டுனியாடா]]


எல்லாரும் கை குலுக்கியும் கும்பிட்டும் பி......ரி.......யா......விடை பெற்று கொண்டிருந்தனர் ஆனால் ஆபீசருக்கு இன்னும் எல்லோரும் அவர் கூடவே இருக்க வேண்டும் என்ற தவிப்பு இருந்தது என்னவோ உண்மை, எனக்கும்தான்.....!!!


எல்லாரையும் வழி அனுப்பி விட்டு ஆபீசரும் நானும், சிபியும், கவுசல்யா'வும், செல்வாவுமாக ஹோட்டலுக்கு வெளியே வந்தோம். வந்து ஆபீசர் நம்ம செல்வாவை ஒரு [[ரேடியோ ஜாக்கி]] வேலைக்கு இண்டர்வியூ'க்காக அழைத்து சென்றார்..[[இது செல்வாவுக்கு தெரியாமல் நடந்த சர்பரைஸ்]]



செல்வாவும் ஆபீசரும் போய்விட்டு சிபி தங்கி இருந்த அஞ்சி நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து விடுவதாக சொல்லி விட்டு அவனை உடன் அழைத்து சென்றார்...!!! ஒரு ஒரு மணி நேரம் கழித்து வந்தார்கள்.


மணி மாலை ஆறு ஆகி இருக்க கிரண் டீவியில் நியூஸ் வந்தது நம் பதிவர் சந்திப்பு பற்றி எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது....!!! நாங்கள் குற்றாலம் போக சிபி தீவிரமாக [[???]] இருந்த படியால் உடனடியாக வெளியே புறப்பட்டோம்.

சிபி ஹோட்டல் ரூமை நாறடித்து விட்டதாக [[ரிஷப்சனில்]] அங்கே ஃபைன் கட்ட சொல்ல அவன் அவர்கள் காலை கட்டி பிடித்து அழுது கொண்டிருந்ததை என் ஓரக்கண்ணால் பார்த்து சந்தோஷமாக ரசித்து கொண்டிருந்தேன் ஹி ஹி ஹி...


அப்புறமாக ஆபீசர் இன்னும் எங்களை அனுப்ப மனம் இல்லாதவராக, சரி வாங்க காப்பி குடிக்கலாம்னு கூப்பிட்டார் சரி ஏதாவது ஹோட்டலில் சாப்பிடிடலாம்னு சொன்னதும், இன்னும் அவருக்கு எங்களை அனுப்ப மனம் இல்லாதவராக, நல்ல காப்பி வேணுமா வேண்டாமான்னு கேட்டார். 

நாங்களும் நல்ல காப்பி வேணும்னு [[பன்னி குட்டியின் அந்த காப்பி இல்லை]] சொல்லவும் சரி அப்போ நம்ம ஆபீசுக்கே போயிருவோம்னு கூட்டிட்டு போனார். அடேங்கப்பா....!!! போற வழியில போற வாரவிங்க எல்லாரும் ஆபீசருக்கு சல்யூட் வைக்கிராயிங்க....!!!

போற வழியில ஒரு இடிச்சி தரைமட்டம் ஆக்கப்பட்ட பில்டிங்கை காட்டி சொன்னார் இதுதான் என் ஆபீசுன்னு [[அவ்வ்வ்வ் சின்ன பிள்ளையை இப்பிடியா கலவர படுத்துறது..?? அதுக்கு தனி பதிவு வச்சிருக்கேன்]] அந்த இடிக்கப்பட்ட இடம்தான் முன்னால் ஆபீசாக செயல்பட்டுள்ளதாம், இப்போது அதே இடத்தில் புதுசா ஆபீஸ் கட்டுவதாக சொன்னார்...


அப்புறமா தற்காலிகமாக செயல்படும் ஆபீசுக்கு அன்புடன் அழைத்து சென்றார். எங்களை அமர வைத்து காப்பி வாங்கி தந்தார் [[சிபி காப்பி குடிக்கமாட்டானாம் பால்'தான் குடிப்பானாம், ராஸ்கல் பச்சை புள்ளைன்னு நாம புரிஞ்சிகிடனுமாம் போடாங்]] சூப்பரா இருந்துச்சு. இடையே சிபி'க்கு போன் வர, அவனை யாரோ ஒரு வில்லன் [[வில்லி]] செமையா மிரட்ட வெளியே தெரிச்சி ஓடிட்டான் ராஸ்கல்....


நேரம் இருட்டியதால் குற்றாலம் சீக்கிரமாக நாங்கள் கிளம்ப எத்தனித்தாலும், ஆபீசருக்கு எங்களை பிரிய மனமே இல்லை, எங்களுக்கும்தான்...ஒரு வழியா பிரியா விடை.........

கடைசியாக ஆபீசர் முகத்தில் நான் கண்டது, பெற்ற மகளுக்கு சீர் செனத்தி செய்து, மணவாளன் வீட்டுக்கு மன நிறைவுடன் அனுப்பிய ஒரு தந்தையின் சமாதானம் அவர் முகத்தில் ஜொலிப்பதை கண்டேன். எவ்வளவு அற்புதமாக அழகாக நேர்த்தியாக இந்த குடும்ப [[பதிவர்]] சந்திப்பை நடத்தினார் பாருங்கள்....!!!!


மிக்க நன்றி ஆபீசர், நீங்க எங்களுக்கு தந்தையுமானவன்......!!!!!

டிஸ்கி : நிறைய பொறாமையால் பொசுங்கும் நண்பர்களின் [[ஹி ஹி]] வேண்டுகோளுக்கு இணங்க பதிவர் சந்திப்பு நிறைவு பெறுகிறது....

டிஸ்கி : இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் குற்றாலம் டூர் ரவுசு ஆரம்பம்.......


டிஸ்கி : மேலே படத்தில் இருக்கும் குரங்குதான் சிபி'யையும் செல்வாவையும் கடித்து குதறி பழி வாங்கியது, 

Sunday, June 26, 2011

அதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடர்ச்சி...4


டிஸ்கி : இந்த பதிவர் சந்திப்பில் "ஒரு காதல் ஜோடி" அட்டகாசமா நம்மை ரசிச்சிட்டு இருந்ததை எத்தனை பேர்கள் கவனிச்சீங்க சொல்ல முடியுமா......??!!!! 


தொடரும் காதல்..........!!!!!

அந்த காதல் ஜோடி ரத்னவேல் அய்யாவும் அவர் மனைவியும்தான்....!!! எனக்கு முதலில் அய்யாவின் மனைவியை சரியாக அடையாளம் தெரியவில்லை, அவர்களும் ஒரு பதிவரா இருக்ககூடும் என்றே கருதினேன். 


அவர்கள் இருவரும் நம்மை எல்லாம் குழந்தைகளாக எண்ணி ரசிச்சிட்டு இருந்ததை நான் கவனிச்சிட்டே இருந்தேன்...!!!


மைக் கைமாறி கைமாறி போகும் போது ரத்னவேல் அய்யா பேசியதும் அடுத்து அவர் மனைவிக்கு போகாமல் வேறு பதிவர் கைக்கு மைக் போனதும் மைல்டா ஒரு டவுட் வந்தது. 


அப்புறம் பதிவர் சந்திப்பு முடிந்து சாப்பாட்டு நேரம்தான் கவனித்தேன். அவர்கள் ஜோடியாக இருந்து சாப்பிட்டு கொண்டிருப்பதை....!!! அப்புறம்தான் இந்த மரமண்டைக்கு புரிஞ்சது ஆஹா இது தம்பதிகள்ன்னு, 


நான் அருகில் போயிருந்து பேசிகொண்டிருக்கும் போதே பாப்பா'ம்மா கல்பனாவும் அவர்கள் அருகில் வந்து அமர்ந்து பேசி கொண்டிருந்தாள். நல்ல அன்பாக என்னை நலம் விசாரித்தார்கள்.


அவர்கள் பிளாக்கை பற்றியும், அவர்கள் ஒரு சரணாலயத்தை பற்றி எழுதி இருந்ததை பற்றியும் அய்யா'கிட்டே கேட்டதும், பதில் வந்தது அம்மாகிட்டே இருந்துதான்...!!! எனக்கு அப்பமே நல்லா புரிஞ்சி போச்சி இது சூப்பர் டூப்பர் "காதல்" ஜோடின்னு....!!!


இவர்கள் பறவைகளையும், மிருகங்களையும் அருமையா நேசிக்கிறவர்கள் என்பது அவர்கள் பதிவுகளிலும் நான் நேரில் பார்த்த போதும் நன்றாக உணர்ந்து கொண்டேன். 


பூர்வ ஜென்மம் என்பது உண்மையா....??? நான் அதை நம்புகிரவனில்லை, ஆனால் இந்த அன்பின் இணைபிரியா தம்பதிகள் எனக்கு தாய், தந்தையாக தோன்றியது எப்படி....??? என் தங்கச்சி பாப்பாவும் அவர்கள் அருகில் வந்திருந்து பேசி கொண்டிருந்தாளே இது என்ன உறவு...??!!!!!


நினச்சி பார்க்கும் போது ஆச்சர்யமா இருக்கு...!!! ஒருவேளை எனது மூதாதையர் விருதுநகரில் இருந்து பிழைப்புக்காக கன்னியாகுமரி வந்ததால், அந்த மண் பாசமா..??!!! அல்லது நான் நம்பாமல் இருக்கும் பூர்வஜென்ம பந்தமா..?!!! மலைப்பாக இருக்கிறது மனதில்.....!!!!


இந்த "காதல்" ஜோடி நேரில் மட்டுமில்லை போட்டோவிலும் இணை பிரிவதில்லை என்பது இன்னும் என்னை ஆச்சர்ய படுத்தும் விஷயம்...!!!


டிஸ்கி : இவர்களும் அவர்கள் தம் குடும்பமும் பல்லாண்டு வாழ்ந்து முன்னுதாரணமாக திகழ ஆண்டவனை வேண்டுகிறேன்.


டிஸ்கி : நெட் என்னை விட வேகம் குறைவாக இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை.

           நேசம் தொடரும்............

அடுத்த பதிவில் ஆபீசர் வருகிறார் கையில் விலங்குடன், ஒடுங்கலேய் ஒடுங்கலேய்.....

டிஸ்கி : போட்டோ எல்லாம் ரத்னவேல் அய்யா பதிவில் இருந்து சுட்டது. அவர் பிளாக் லிங்க் கீழே......

Friday, June 24, 2011

நாஞ்சில் நாட்டு பதிவர் சந்திப்பு தொடர்ச்சி

நாகர்கோவில் தாண்டி பார்வதிபுரம் வரை கொஞ்சம் டிராஃபிகாத்தான் இருந்துச்சி, ஆனாலும் விஜயன் சிறப்பாக சைக்கிளை ஓட்டினார் அசால்ட்டாக அவர் சைக்கிள் ஒட்டிய விதம் ரசிக்கும் படியாக [[கொலை நடுக்கம்னு சொல்ல மாட்டேன்]] இருந்தது...!!!


போலீசாரின் கவனத்திற்கு....

கன்யாகுமரி மாவட்டத்தில் நூறில் இருபது பேர்கள்தான் பைக்கில் சைட் மிரர் வைத்திருக்கிறார்கள்...!!! மீதி பேர் மிரரே இல்லாமல்தான் பைக் ஓட்டுகிறார்கள்...!!!??? [[அடபாவிகளா, ஹெல்மேட்தான் வைக்கிறது இல்லை மிரராவது வச்சிட்டு பைக் ஓட்டுங்க அடிங்.....]] 


பார்வதிரம் தாண்டியதும் அழகான மலைகள், வாழை......வாழை......வாழை தோப்புக்கள் ம்ஹும் பார்க்க கண்கள் ஆயிரம் வேண்டும் அழகு அழகு அழகு...!!! அதை தாண்டி போகும் வழியில் ஒரு குளம் இருக்கு. அந்த குளத்தில்தான் அலைகள் ஓய்வதில்லை படத்தை சூட் பண்ணிட்டு செம்மையாக "வாங்கி" கட்டிட்டு போனதாக பாரதி ராஜாவை சொல்வார்கள்...!!!


அப்புறமா தக்கலை'ல இருந்து வலப்பக்கமா திரும்பி, பத்பனாபுரம் கோட்டை தாண்டி சைக்கிள் வேகம் எடுத்தது, இடையிடையே விஜயனுக்கு போன் வந்துட்டே இருந்தது, பைக்கை நிறுத்தி விட்டு போன் பேசிய நண்பனை பாராட்டியே ஆக வேண்டும்...!!!

ஏ யப்பா அப்புறமா ஒரு பதினஞ்சி கிலோமீட்டராவது இருக்கும் ரோடு இருக்கும் விதம் கோலம் கண்டீங்கன்னா பக்கத்துல ரப்பர் தோட்டத்துல இறங்கி போயி தற்கொலை பண்ணத்தான் தோணும் போல இருக்கு ரோடு....!!! கண்டிப்பா பழக்கம் இல்லாத ஆளுங்க கூட போனீங்கன்னா திரும்பி வரும் போது பைக் வீல் ரெண்டையும் தோல்லதான் சுமந்துட்டு வரணும் ஜாக்குரதை!!!


முட்டைகாடு, குமாரபுரம், குலசேகரம், திற்பரப்பு வாழ் மக்கள் கண்டிப்பாக தெய்வ அனுக்கிரகம் பெற்றவர்கள்தான் சான்சே இல்லை, காரணம் அங்கே இருக்கும் இயற்க்கை சூழல் அழகு குளுமை அருவி நீரின் பால் போன்ற  வெள்ள ஓட்டம் அடடா அழகு அழகு .......!!!!


அப்பாடா ஒருவழியா அருவிக்கு வந்து சேர்ந்தோம். சைக்கிள் [[பைக்]] பார்க்கிங்குக்கு அஞ்சி ரூபா மொய், அருவியில் குளிக்க ஒரு ஆளுக்கு மூன்று ரூபா மொய் குடுத்தோம்.


சல சல சல'ன்னு அருவி வஞ்சனை இல்லாமல் பொங்கி வழியுது பால் போல, மக்கள் சந்தோசமா குளியல் போடுறாங்க, என்ன குற்றாலம் மாதிரி இல்லைன்னாலும் குடும்பமா பாதுகாப்பா குளிக்கலாம். "உற்ச்சாக" ஆட்கள் மிக குறைவு என்பது சந்தோஷமான விஷயம்.


பாரதிராஜா வாங்கி கட்டிய குளம்...

விஜயன் வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்தார். என்னையும் போஸ் குடுக்க வச்சி நாரடிச்சதை பார்த்த மக்கள் கல்லை தேடுவது தெரிஞ்சதும் நான் உஷார் ஆகிட்டேன் ஹாய் ஹாய்....


அருவியில போயி தலையை வச்சதும் சந்தோசம் தாங்க முடியலை சும்மா பலமா மசாஜ் செய்வது போன்ற சட சட அடிகள் போல அருமையா இருந்தது, குளிக்காமல் கரையில் இருந்து நண்பர்களை போட்டோ எடுத்துட்டு இருந்த ஒரு தம்பி இடம் தன் கேமராவை குடுத்து போட்டோ எடுக்க சொன்னார் விஜயன், அந்த தம்பி சூப்பரா மனம் கோணாமல் போட்டோ எடுத்து தந்தான் அந்த முகம் தெரியா தம்பி  [[நன்றி தம்பி]]


நல்லா குளிச்சொம்ய்யா  குளிச்சோம் குளிச்சோம், அருவியில் குளிச்சுட்டு இருந்த ஒரு சொட்டை மண்டை ஆளை என்னிடம் காட்டி விட்டு சொன்னார் விஜயன், யோவ் இவர் தலையில அருவி தண்ணி விழுந்தா என்ன ஆகும்னு கிண்டல் பண்ணினார்....


அப்புறமா குளிச்சிட்டு இருக்கும் போதே நல்லா பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சி, சாப்பிட கிளம்பினோம். அருவியை விட்டு வெளியே வந்தால் வலப்பக்கமாக இருக்கிறது ஒரு ஹோட்டல் அருமையாக இருந்தது சாப்பாடு, சாப்பிட்டு காசை கொடுத்துட்டு நன்றி சொல்லி கிளம்பினோம்.


ஹி ஹி ஹி ஹி மறுபடியும் அருவியில போயி சாடினோம். அப்பாப்பா சாயங்காலம் வரை ஒரே குளியல் குளியல் குளியல்தான், குற்றாலத்துல மெயின் அருவியில சரியான மூடுல நண்பர்கள் இல்லாததால் சரியா குளிக்க முடியாத ஆதங்கத்தை நண்பன் விஜயன் தீர்த்து வைத்தார் ஆனந்தமாக  குளிச்சோம்...!!!


மறுபடியும் நாகர்கோவில் பயணம் [[அந்த ரோடு அவ்வ்வ்வவ்வ்வ்வ்]] இயற்க்கை அள்ளி கொடுத்துருக்கும் வளம் [[வனம்]] அருமையா இருக்கு அங்கே..ஆனால் அதை பயன்படுத்த தெரியாத அரசாங்கங்களை திட்டி தீர்த்து கொண்டே பயணித்தோம்....!!!


நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட்க்குதான் கூட்டிட்டு போறார் விஜயன்னு நினச்சா மக்கா நேரே மறுபடியும் அவர் வீட்டுக்கே கூட்டிட்டு போயிட்டார் [[பாசம்]] அங்கே அவர் குழந்தைகள் ஸ்கூல்'ல இருந்து வந்திருந்தார்கள், என்னை அவர்களுக்கு அறிமுக படுத்தினார். விஜயன் மனைவியும் அதே இன்முகத்துடன் வரவேற்றார்...

ஒருபையன் பெயர் அர்ஜூன், ஒரு பெண் குழந்தை பெயர் மூனிஷா, விஜயனும் அவர் மனைவியும் நல்ல அழகு, ஆனால் அவங்க ரெண்டு பேரோடவும் குழந்தைகள் ரொம்ப ரொம்ப அழகு, ஆண்டவன் அமரிக்கையான வாழ்க்கையை கொடுத்துருக்கார், கொஞ்சமா இருந்தாலும் நிறைவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை தொடர வேண்டிகொண்டது மனசு....

அர்ஜூன் சூப்பரா தொட்டியில அழகழகான மீன்கள் வளர்கிறான். அப்புறமா அஞ்சி குட்டி  குருவிகளையும் வளர்க்கிறான் ஆர்வமாக....!!! வீடும் ரொம்ப சுத்தமா அழகா இருக்கு....!!!

அப்புறம் எல்லாருக்கும் விடை கொடுத்து கிளம்பும் போது விஜயன் மனைவி சொன்னார், அடுத்த முறை வரும் போது குடும்பத்தை கூட்டிட்டு வாங்கன்னு [[கண்டிப்பா கூட்டிட்டு வாருவேன் மேடம்]]

அப்புறமா நாகர்ோவில் பேரூந்து நிலையம் கொண்டு வந்து விட்டார் நண்பன் விஜயன். 

டிஸ்கி : பதிவுலகம் என்றால் என்னவென்று [[சிலருக்கு]] தெரியாத இந்த உலகில், பதிவுலகம் எல்லாருக்கும் தெரியும் முன் என் நண்பர்கள் வட்டம் ஆலமரம் போல் விரிந்திருக்கும் என்பது என் கண் முன் தெரிகிறது......உங்களுக்கு.....???!!!

டிஸ்கி : நன்றி நண்பா........

டிஸ்கி : இனி  அதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடரும் "அந்த காதல் ஜோடியை பற்றி"

டிஸ்கி : நாளை நானும் விஜயனும், எனது மாற்று திறனாளி நண்பன் ராஜகுமாரும் கன்யாகுமரி சுற்றி பார்க்க போகிறோம்....







Thursday, June 23, 2011

நாஞ்சில் நாட்டின் பதிவர் சந்திப்பு

தொடர் பதிவுக்குள் இன்னொரு பதிவும் எழுத வேண்டிய அவசியம் வந்துருச்சு அது, நண்பன் [[பதிவர்]] நாஞ்சில் நாட்டுக்காரன், கே ஆர் விஜயனை நேற்று சந்தித்ததை பற்றிதான்....!!!

அவர் லிங்க் கடைசில இருக்கு பார்த்துக்கோங்க, முந்தாநாள் நானும் விஜயனும் பேஸ்புக்கில் நக்கல் பண்ணி கொண்டிருந்த நேரம் அவர் கேட்டார் நீங்க இப்போ எங்கே இருக்கீங்கன்னு, நான் ஊர்லதாம்யா இருக்கேன் மீட் பண்ணுவோமா நான் சிட்டி [[நாகர்கோவில்]] வரட்டுமா'ன்னு கேட்டேன். அவரும் ஓ தாராளமா வாங்கனு சொன்னார்.


அப்போ சரிய்யா ஏதாவது ஒரு சினிமா பார்க்க போகலாமுன்னு சொன்னேன். அவர் சொன்னார் இல்லை மக்கா எனக்கு குழந்தைகளை ஸ்கூல் கூட்டிப்போனும், கூட்டி வரணுமே எனவே சினிமாவுக்கு நோ [[சினிமா மேல என்ன கடுப்போ ம்ஹும்]] சொல்லிட்டார்.

விஜயனின் கடையின் முன்பு...

அடுத்து நான் சொன்னேன் யோவ் அப்பிடின்னா திற்பரப்பு அருவில குளிக்க போவோமான்னு கேட்டேன். ஹி ஹி ஹி ஹி அவர் சொன்னார் என்னே ஒரு டெலிபதி நான் சொல்லும் முன் நீங்களே சொல்லிட்டீங்களேன்னு ஆச்சர்யபட்டு ரைட்டு நாளை கிளம்பி வாங்க போகலாம்னார். [[மறக்காம கூலிங் கிளாஸ் போட்டுட்டு வாங்க இல்லைன்னா அடையாளம் தெரியாதுன்னு சொல்லி என்னை அழ வச்சிட்டார் பாவிகளா]]

அடுத்தநாள் [[அதான் நேற்று]] அடிச்சி பிடிச்சி பஸ் பிடிச்சி போயி சேர்ந்தேன் நாகர்கோவில் பாஸ்டாண்டுக்கு, சரி விஜயன் வரதுக்குள்ளே ஒரு டீ குடிப்பமேன்னு ஆர்டர் பண்ணி டீ'யை வாயில் வைக்குமுன் விஜயன் என் முன்பு ஹாஜர்....ம்ஹும் எல்லாம் கூலிங் கிளாஸ் மகிமைதான் போங்க....

விஜயனின் கடையின் முன்பு...

என்ன மாயமோ மந்திரமோ தெரியலைப்பா, பதிவுலக நண்பர்களை முதமுறையா பார்த்தாலும் என்னவோ பத்து வருஷம் முன்பு ஏதோ கைபிடிச்சி ஊர் ஊரா சுத்தி திரிஞ்சி ஃபிகர்களை சைட் அடிச்சி அவளுக அண்ணன்காரனுகளால் தோலுரியப்பட்டு, முதுகுல டின்கட்டி அடி வாங்கிட்டு விடுடா விடுடா மக்கா இதெல்லாம் நமக்கு புதுசா என்ன என [[ஹி ஹி ஹி ஹி]] ஆறுதல் கூறிய ஆருயிர் நண்பர்களாவே கண்ணுக்கும், மனதிற்கும் தோன்றுவது மிக மிக ஆச்சர்யமாக இருக்கு!!!!!


விஜயனும் அப்படியேதான் தெரிஞ்சார்...!!! அப்புறமா அவர் சைக்கிளில் [[பைக்"தாம்டேய்]] என்னை ஏற்றி கொண்டு [[திற்பரப்புக்கு கொண்டு போறார்னு நினச்சா]] நேரே அவர் வீட்டுக்கு கொண்டு போயிட்டார். வீட்டு கேட்டை திறந்ததும் காளைமாடு மாதிரி ஒரு நாயை கட்டி போட்டுருதாயிங்க அவ்வ்வ்வ்வ்வ்வ் கடிச்சிச்சின்னா கண்டிப்பா அஞ்சி கிலோ கறியை குதறிபுடும், குலை நடுங்கி போனேன். ஆஹா ஆரம்பமே ஒரு மாதிரியா இருக்கே....[[ஆனா அது நம்ம விஜயனை போலவே சோம்பேறியாம், பின்னே பதிவு எழுதுறதுல விஜயன் சோம்பேறி ஆச்சென்னு மனசுல நினச்சிகிட்டேன்]]


வீட்டினுள் கூட்டிட்டு போனார், அங்கே அவர் மனைவி [[அவங்க பெயரை கேட்க மறந்துட்டேன் ஸாரி]] என்னை சகோதரனை போல வரவேற்று நலம் விசாரித்தார் [[அட இங்கேயும் ஏதோ ரொம்ப நாள் பழகிய சொந்தகாரங்க வீடு போல மனசுக்கு தோன்றியது இன்னும் ஆச்சர்யமா இருக்கு...!!!]] அப்புறமா சூப்பரா ரஸ்னா ஜூஸ் போட்டு தந்தாங்க [[சூப்பர் டேஸ்ட்]] கொஞ்சம் நொறுக்ஸ்ம்...!!!


அப்புறமா அங்கிருந்து விடை பெற்று [[நாய்'கிட்டேயும்தான் அவ்வ்வ்வ்வ்வ்]] விஜயன் அப்பா, அம்மா'வையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு கிளம்பினோம். மறுபடியும் சைக்கிள் புறப்பட்டது [[சரி சரி]] ஹை அண்ணன் திற்பரப்பு கூட்டிட்டு போறார்னு சந்தோசமா நம்பி கிளம்பினா சைக்கிள் ரூட் மாறி போகுது, யோவ் என்னய்யா'ன்னு கேட்டா ஹே ஹே ஹே ஹே நம்ம கடையையும் பார்த்துட்டு போவோம்னு கூட்டிபோனார்..

அவர் கேமரா, மெமரி கார்ட், சிடி, டிவிடி இது சம்பந்தமாக ஒரு கடை வச்சிருக்கார் நாகர்கோவில் வுமன் காலேஜ் பக்கம் [[ ஒரு மாதிரியான இடத்தில்தான் கடை வச்சிருக்கார் போல ஹி ஹி தமாஷ் தமாஷ்]] கடை ரொம்ப சூப்பரா இருக்கு, கடையில் ஒரு சின்ன பொண்ணு வேலை செய்யிறாங்க [[இவங்க பேரையும் கேட்க மறந்துட்டேன் ஸாரி]] அழகா இருந்தாங்க, அவிங்களுக்கும் என்னை தெரிஞ்சிருக்கு கூலிங் கிளாஸ் எங்கேன்னு கேட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்.......!!! [[ஒரு குரூப்பாதான் திரியுராங்களோ மனோ சூதானமா இருந்துக்கோ ஆமா]]

நானும், ஹரீஷும்..

அப்புறமா இன்னொரு பதிவரையும் சந்திக்க வச்சாரு விஜயன், அவர் பெயர் ஹரீஷ், "மாப்பிளை ஹரீஷ்"ங்கற பேர்ல முன்பு எழுதினாராம். இப்போ ஒன்றும் எழுதவில்லை என சொன்னார் [[என்னை மாதிரி தருதலைகளை கண்டு பயந்துட்டாரோ என்னவோ ஹி ஹி ஹி ஹி]] நல்ல நட்பாக பேசி பழகி போட்டோ எல்லாம் எடுத்தான் தம்பி ஹரீஷ்...!!!

ஹே ஹே ஹே ஹே அப்புறமென்ன நேரே ஜூட் திற்பரப்பு அருவி நோக்கி.......!!!



தொடரும் அருவி...........




டிஸ்கி : இந்த பதிவை எழுதிட்டு இருக்கும் போதே இன்டர் நெட் சதி செய்தபடியால் நேற்று போடமுடியவில்லை.....!!!!


டிஸ்கி : நெட்டின் சதியை சரி செய்ய விஜயனிடம் வந்தேன், அவரும் நண்பன் [[பதிவர் "மாப்பிளை" ஹரீஷ்]] ஹரீஷும் சூப்பராக செட் செய்து தந்தார்கள் [[நன்றி மக்கா]]


டிஸ்கி : இந்த பதிவை நண்பன் விஜயன் கடையில் இருந்துதான் பதிவிடுகிறேன்....


கே ஆர் விஜயன்....
http://www.krvijayan.blogspot.com/


"மாப்பிளை"ஹரீஷ்..
http://www.nanharish.blogspot.com/

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!