Monday, November 29, 2010

நகைசுவை

ஒரு ஆங்கிலேயன் காந்தி'கிட்டே கேட்ட கேள்வி இது...
இந்தியர்கள் நீங்க எல்லோரும் ஏன் வித்தியாசமான  கலர்களில் இருக்கிறீர்கள்?
எங்களை பார், நாங்க எல்லோரும் ஒரே கலர்'ல இருக்கிறோம்.....
காந்தி சொன்னார், உயர்தர குதிரைகள் வித்தியாசமான கலர்களில்தான் இருக்கும்.
ஒரே கலரில் இருப்பது கழுதை மட்டுமே.......
 

Sunday, November 28, 2010

பள்ளி கூடம்

என் மலையாளி நண்பன் ஒருவன் என்னிடம் எப்போதும் சொல்லும் சொல் என்னத்தெரியுமா? தமிழைப் போல மலையாளமும் மிகவும் தொன்மை[[!!!]] வாய்ந்தது என்று தர்க்கம் பண்ணுவான்,
நானும் விடாமல் தர்க்கம் பண்ணி கடைசியா ஒரு நாள் இந்த கேள்விய கேட்டேன், சரி அப்படியானால் "பள்ளி கூடம்" இதை மலையாளத்துல சொல்லுன்னா, அவன் வித்யாலயா'ன்னு சொல்றான்! அது ஹிந்தி ஆச்சேடா'ன்னா, திரு திருன்னு முழிக்கிறான். போ போயி வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்'ன்னு அனுப்பிட்டேன். ஸோ நண்பர்களே, இனி மலையாளி யாராவது உங்களை மடக்கி கேள்வி கேட்டால், இந்த பிட்டை போட்டுருங்க......

Tuesday, November 23, 2010

காதல்

பொங்கி வரும் காதலை
 அள்ளி தெளிக்க
 பூக்கள் ஏராளம் உள்ளது,
 வீட்டம்மா சம்மதிக்கணுமே.....
 
 

கண்ணீர்

என் அருகில் நீ இருந்தால் உலகை மறப்பேன்,
உன் அருகில் நானிருந்தால் நீ உலகை மறப்பாய்,
நம்மை உலகம் பார்த்து தன்னையே மறக்கும்,
ஆனால் இப்போது நாம் அருகருகில் இல்லை,
உலகம், கண்ணீர் சிந்துகிறது.... 

Sunday, November 21, 2010

ரசித்தது

நான் ரசித்த மதனின் [ஆனந்த விகடன்] ஹாய் மதன் பகுதியில் இருந்து....
கேள்வி : இராமாயண [புராண] அரக்கர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?
பதில் : அநேகமாக "ஒயிட் அண்ட் ஒயிட்'டில்!!!
 

வலி

ரயில் பயணத்தின்
நண்பன்
தொலைந்தே போனான்
கனவை போல
மனதில் பாரம்....
 

Saturday, November 20, 2010

கவிதை

கனவிலே தேவதை!
காதல் ரசம் பொழிந்தாள்!
உருகியது என் ரத்த நாளங்கள்..

Friday, November 19, 2010

நான் ரசித்த நிஷாராமின் கவிதை

கடனாலே வந்த நட்பு வட்டியாலே போகும்
 சீட்டாலே வந்த நட்பு கழிவோடு போகும்
 விழாவாலே வந்த நட்பு மொய்யோடு போகும்
 ஆலயத்தில் வந்த நட்பு அன்னதானத்தோடு போகும்
 குடியாலே வந்த நட்பு வெறியோடு போகும்
 கடையாலே வந்த நட்பு கடனாலே போகும்
 உறவாலே வந்த நட்பு அலுப்பாலே போகும்
 பயணத்தால் வந்த நட்பு பாதியிலே போகும்
 இனையத்தில் வந்த நட்பு வைரஸால் போகும்
அறிவிப்பாளரோடு வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்
 ரெலிபோனால் வந்த நட்பு கார்ட் வெட்டோடு போகும்
 போகும் பொய்யான நட்ப்பெல்லாம் பாதியிலே பொய்யாகி போகும்

மலையாளி ஜோக்

கேரளாகாரன் நம்ம ஊர்ல வந்து நம்மாள் ஒருத்தன்ட்ட இங்கே சின்னவீடு கிடைக்குமான்னு கேக்க போக நம்மாளு ஸ்டெப்னி'யதான் சின்னவீடுன்னு கேக்கிறான்னு அடிக்க போக, அக்கம் பக்கம் இருந்தவர்கள் பிடித்து விசாரிக்கும் போது கேரளா'காரன் சொன்னானாம், இவன் சம்சாரம்[[ பேச்சு]]  சரியில்லைன்னு... மொத்த கூட்டமும் மொக்கிடிச்சு மொக்கி... ஹா ஹா ஹா.

Monday, November 15, 2010

அரபியும் வாழை இலையும்


ஒரு கேரளா ரெஸ்டாரெண்ட்'க்கு இரண்டு அரபிகள் மதிய சாப்பாட்டுக்காக சென்றனர். அந்த ஹோட்டலில் வாழை இலை போட்டு பரிமாறுவது வழக்கம். அரபிகள் அமர்ந்ததும் இலையை கொண்டு விரித்து வைத்து விட்டு கூட்டு கொண்டு வர வெயிட்டர் போனார், திரும்பி வந்தால் இலைய காணோம்! வெயிட்டர் நெருங்கி வந்ததும் அரபிகள் சொன்னார்கள் "ஒன்ஸ்மோர்" [[இலையத்தான்]] ப்ளீஸ்" ஆக வாழை இலைய கீரை'ன்னு நெனைச்சி உள்ளே தள்ளிட்டாங்க!!! அப்பிடி அரபிகள் கீரை நன்றாக சாப்பிடுவார்கள்.

Sunday, November 7, 2010

அன்பு

அன்று,
 ஆஸ்பத்திரியில் அம்மா,
தூக்கம் வராமல் தவித்தேன்,
அம்மாவின் சேலையால் போர்த்தினார் அப்பா,
நிம்மதியாய் தூங்கினேன்.
இன்று,
வெளிநாட்டில் நான்,
தூக்கம் வராமல் தவித்தேன்,
என்னோடு கொண்டு போன,
மனைவியின் சேலையை போர்த்தி கொண்டேன்,
நிம்மதியாய் தூங்குகிறேன்.
 

Thursday, November 4, 2010

விபத்துகள்

நம்ம கார்லயோ பைக்லையோ யாராவது தவறாக இடித்து விட்டால் உடனே நாம் என்ன செய்வோம்???


டாய் பேமானி, நாயே, மண்டை மகனே, மாவிடியா மவனேன்னு திட்றோமா இல்லையா??
ஆனால், அரபு நாடுகளில் அப்பிடி இல்லை!!!
தவறாகவே இடித்து விட்டாலும், இறங்கி போயி கை கொடுத்து வாழ்த்துக்கள் சொன்ன பிறகு, போலீசுக்கு போன் பண்ணி சொல்லிட்டு சைலன்ட் ஆகி விடுகிறார்கள்!!!!
ஏன் நாம மட்டும் இப்பிடி????

கன்யாகுமரி டூ காஷ்மீர்





கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்தியா ஒரே நாடேன்னு 1980  களில் இந்தியா முழுவதும் உள்ள பஸ்களிலும் மற்ற வாகனங்களிலும் விளம்பரம் கொடுக்கப் பட்டிருந்ததே, அப்போ இந்த பிரிவினைவாதிகள் [[அருந்ததிராய் போன்றவர்கள்]] என்னத்தை புடுங்கி கொண்டிருந்தார்கள்??? 
இப்போது இந்தியா ஹைஸ்பீடில் முன்னேறி கொண்டிருக்கும் இந்த வேளையில், அவற்றை தடுக்க பாகிஸ்தான் அமெரிக்காவின் சதி பேச்சை கேட்டுட்டு கல்லெறிவது, வானத்தை நோக்கி துப்புவதற்கு சமம்.  

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!