Thursday, June 28, 2012

இது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான அவசர பதிவு...!!!யாருமே அறியாதவாறு காங்கிரஸ் அரசு ஒரு அநியாயமான திட்டத்தை கொண்டு வந்துருக்கிறது அது, இனி வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்தில் 12.5 சதவீதம் டாக்ஸ் அடித்து கட் பண்ணிதான் கொடுக்குமாம்...!!!

உங்க அம்மாவுக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் அனுப்பினால் கூட 750 ரூபாய் கட் செய்துவிட்டே கொடுப்பார்களாம், அதாவது நீங்கள் சம்பாதித்து 10000 ரூபாய் அனுப்பினால் 1250 ரூபாய் கட் பண்ணிவிட்டு பாக்கி பணத்தைத்தான் கொடுப்பார்களாம், சசிதரன் பிள்ளை கேரளா முதல்வர் உமன் சாண்டிக்கு காரசாரமாக லட்டர் எழுதி உள்ளாராம், ஏன்னா வெளிநாட்டு பணம் கேரளாவில்தானே வந்து குவிகிறது...!!!

நரசிம்மராவ் காலத்தில் இப்படி இந்த நிலைமை இருந்ததால்தான் உண்டி என்று சொல்லப்படும் ஹவாலா மோசடிகள் அதிகமாக நடந்தது, அதனால் நாட்டில் தீவிரவாதம் அதிகரிப்பதை அறிந்த ராவ் அதை உடனடியாக ரத்து செய்தார்....!!!

இப்போ மறுபடியும் அதே சட்டம் அமலுக்கு வருமானால் ஹவாலா மறுபடியும் செழித்தோங்கும், தீவிரவாதமும் தன் கோரை பல்லை நீட்டும் என்பதில் சந்தேகமே இல்லை, சத்தியமா நாடு உருப்படப்போறதில்லை, உருப்பட்டாலும் காங்கிரஸ்காரன் உருப்படவிடமாட்டான்....!!!

எங்களுக்கு உண்டி என்ற ஹவாலா இருக்கு, அனுப்பும் சார்ஜும் மிச்சம் போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும்........கொய்தா வாழ்க.......பின்லேடன் வாரிசுகள் வாழ்க......சவூதி வாழ்க......எல்லாரையும் வாழவைக்கும் நாதாரி அமெரிக்கா வாழ்க போங்கடா வெண்ணைகளா....!!!

டிஸ்கி : ஜூலை ஒன்னாம் தேதி முதல் இது அமலாகிறது, என்னப்போல வெளிநாட்டில் இருப்பவர்கள் சந்தோஷமாக உண்டி நபரை அணுகவும், நம்மை நல்லவனாக வாழவைப்பதும் ஆட்சியாளர்கள்தான், கெட்டவனாக மாறவைப்பதும் இந்த நாதாரிங்கதான் உண்டா இல்லையா கமெண்டில் கும்மி, இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்கள் பிளீஸ்......

டா[க்]ஸ்'கி : ஹவாலா பணத்தால் வளரும் தீவிரவாதம் வாழ்க, இதற்க்கு முழுபொறுப்பும் காங்கிரஸ் தலைமையையே சாரும்...!!!

நன்றி : பக்கத்து நாட்டில் இருக்கும் நம் எல்லாருக்கும் தெரிந்த நண்பர் கடுமையான [[க்ய்ய௪த௯௩௧ஹ்பி ]] கோபத்தில் எனக்கு போன் செய்து இப்பதான் இந்த மேட்டரை சொன்னார், வேண்ணா பாருங்கள் அவர் கமேண்ட்சும் இப்போ காரசாரமா வரும் பாருங்கள்...!

Tuesday, June 26, 2012

ஏடாகூடா பிறப்பே நான் தமிழ் தலீவன் செப்புகிறேன் கேள்...!


நான்காம் தேதி கலைஞரின் பழம் ச்சே ச்சீ பலம் தெரிந்துவிடும்.....!!!
---------------------------------------------------------------------------------------
இவிங்க மனசுக்குள்ளே இன்னா நினைக்குறாங்கன்னா...?

பழகிரி : உள்ளே போனால் களி கூட ஸ்லோ பாய்சன் வச்சாலும் வச்சிருவானுங்க அதனால முதல்நாளே அஞ்சாநெஞ்சனுக்கு நெஞ்சி வலின்னு ஆஸ்பிட்டல் போயிற வேண்டியதுதான்.
பழம் மொழி : நாம உள்ளே போனால்......அப்பிடியே மறுபடியும் பூலான்தேவி சகாக்கள் கூட திகார்ல போட்டுருவாங்க....அதனால ஐயோ என் பையனுக்கு ஸ்கூல் தொடங்கிருச்சு'ன்னு சொல்லிருவோம்.

ஸ்பாலின் : எனக்கு மெட்ராஸ் ஐ வந்துருக்கு அதனால நான் எங்கும் வரமுடியாது, என்னையும் எவனும் பார்க்க வராதீக'ன்னு சொல்லிருவோம்.

கடி பிரதர்ஸ் : நாங்க உடன்பிறப்புகளுக்காக உலக சுற்றுலாவில் இருப்பதால்....அப்பிடின்னு சொல்லிருவோம், கொய்யால நம்மையும் குண்டாவுல உள்ளே தூக்கி போட்டுரப்போராணுக.

கலீஞர் : பாசமிகு உடன்பிறப்பே......என் குடும்பத்தார் யாவரும் பாய்சன் புகுந்துரும்னு ச்சே ச்சீ உடல் நிலை சரியில்லாததால் அவர்கள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் கண்மணிகளே, நீங்கள்தான் கட்சியின் தூண்கள் வேணுமானால் ஆ ராசாவை அனுப்புகிறேன் அவன் என் உயிர் தம்பி [[கொய்யால]]

உளவுத்துறை டிஸ்கி : உள்ளே [[ஜெயிலுக்கு]] போறவங்களுக்கு சாப்பாட்டுல ஸ்லோ பாய்சனும், கலீஞரை போல கட்டுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு குடும்ப 'கட்'டுபாடும் பண்ண சிறை நிர்வாகம் தயாராகிறது, அப்புறம் சிறைக்கு செல்லும் தண்ணீர் பைப் எல்லாம் கட் பண்ண சொல்லி உத்தரவு வந்துள்ளது [[நாறி சாவுங்கடா வெண்ணைங்களா....]]
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அந்நாட்டு அதிபர் சர்தாரி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சரப்ஜித் சிங் விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது...!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பயங்கரவாதி அபு ஜுண்டாலுக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதுதொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்,'' என, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர மாநில பெண் அமைச்சருமான பவுசியா கான் தெரிவித்துள்ளார்.

# நான் ஒரு பதிவில் சொல்லியிருந்தேன் [[http://nanjilmano.blogspot.com/2012/05/blog-post_15.html]] மும்பை தாக்குதலில் நம் நாட்டு அரசியல் நாதாரிங்க சிலபேர் இருக்காங்கன்னு இப்போ புரியுதா எங்கே நெறி கட்டினால் எங்கே வலிக்குதுன்னு...? சவூதி தப்பிச்சிடுச்சு அம்புட்டுதேன்...!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொது வாழ்வில் எனது பணி தொடரும் என தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னர் பிரணாப் முகர்ஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

#உன்னையெல்லாம் அமெரிக்காகாரன் கோவணத்தோடு இமிக்கிரேஷனில் நிக்க வச்சாலும் சூடு சுரனை இருக்காதுடா ஏன்னா உன் தலைமை அப்பிடிபட்டது....!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரசியல்வாதிகள் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிக்க
ஆவணங்களோடு அரசியல் கட்டிடங்களும் சேர்ந்து தீ குளிக்கின்றன...!

# நான் ரசித்து, கோமதி நடராஜன் அக்கா பேஸ்புக் வாலில் சுட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------

மலையாளியின் இன்னும் ஒரு சதி திட்டம் .
வெளிநாடு வாழ் மக்களின் நீண்ட கனவு மதுரை சர்வதேச விமான நிலையம் வேண்டும் என்று ,அது இப்போது பகல் கனவு ஆகிவிடும் என்ற அளவிற்கு மலையாளி சதி திட்டம் தீட்டிஉள்ளான் .ஆம் மதுரை விமானநிலையம் வந்து விட்டால் திருவன ந்த புரம் மற்றும் கொச்சின் விமான நிலையத்தின் வருவாய் குறைந்து விடும் . ஏனெறால் தென் தமிழகத்தின் மக்கள் எல்லோரும் அந்த வழியாகத்தான் வருகிறார்கள் .இதை தடுக்க மலையாளி திட்டம் தீட்டி அதற்க்கு திறப்பு விழாவும் செய்துவிட்டான் .ஆம் கொச்சின் to மதுரைக்கு connecting flight விடுகிறான் .இது ஊரில் இருபவர்களுக்கு connecting flight தானே விடட்டும் என்று நினைப்பார்கள் .ஆனால் அதுதான் இல்லை .மதுரை வரவேண்டிய அனைத்து விமானங்களையும் கொச்சி வரவைத்து விட்டு விட்டார்கள் .அங்கிருந்து மதுரைக்கு flight பிடித்து வந்தால் அவனது வருமானம் பெருகும் ,மேலும் சுற்றுலா வருபவர்கள் நேரடியாக மதுரைக்கு வரமாட்டார்கள் .இதனால் மதுரையின் வருமானம் குறையும் .இந்த பிரச்சனையை ஊரில் அரசியல் பேசும் மக்களுக்கும், மந்திரியின் காதில் விழுகுமா !!!!!!!!!


# தமிழர்களே உஷாரா இருங்கோ....!

Sunday, June 24, 2012

ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் மோதினால்...? உண்மை சம்பவம்...!

ஹோட்டல் பேரும் சொல்லமாட்டேன், போலீஸ்ஸ்டேசன் பேரும் சொல்லமாட்டேன், ஆள் பெயரும் சொல்லமாட்டேன், பொண்ணு பெயரும் சொல்லமாட்டேன் ஆனால் சம்பவம் மட்டும் உண்மை...! ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு இது நல்லாவே தெரியும்...!கொஞ்ச நாளைக்கு முன்னாடி அந்த ஸ்டார் ஹோட்டலில் டிஸ்கோதே படு சுவாரஸ்யமாக நடந்து கொண்டிருந்தது. இளைஞர்களும் இளைஞிகளும் குதுகலமாக நடனமாடி களித்துகொண்டிருந்தனர், அதில் தமிழக போலீஸ் உயர் அதிகாரியின் [[டில்லிகாரர்]] மகளின் நண்பிகளும், நண்பர்களும் உல்லாசமாக நடனமாடி களித்து கொண்டிருந்தனர்.


இந்த பொண்ணு மீது ஒரு மதுரை பாண்டியனுக்கு பயங்கர மையல், அந்த பொண்ணு போற இடமெல்லாம் போயி டார்ச்சர் கொடுப்பது இந்த பாண்டியனின் வழக்கம், அந்த பொண்ணும் சும்மாயில்ல அவளுக்கும் நல்ல நண்பர்கள் நெட்வொர்க் மற்றும் எதற்கும் துணிந்து நிற்பவர்கள், நம்ம லகுட பாண்டி என்னா டார்ச்சர் கொடுத்தாலும் அவங்களும் இவனுக்கு நல்லா உல்டா டார்ச்சர் குடுத்துட்டு இருந்துருக்காங்க...!!!


மையல் கொள்வதும் அது காதலாக மாறுவதும் சினிமாவில்தான் போல, நம்ம லகுடபாண்டி சினிமான்னு நினச்சிட்டானோ என்னவோ, அல்லது நம்ம செல்வாக்கை காட்டி மசிய வைக்கலாம் என்ற நப்பாசையோ தெரியல, விடாமல் விரட்டி இருக்கிறான், அவளும் இவனை விடலை, இவன் குரூப் எங்கே போகுதோ அங்கே அவளின் குரூப் ஹாஜர் ஆகும், அவளின் குரூப் எங்கே போகுதோ அங்கே லகுடபாண்டி குரூப்பும் ஹாஜர் ஆகும்...!


பயங்கரமாக வாய் தகராறு நடக்கும், பச்சை பச்சையாக [[சிகப்பா ஏன் இல்லைன்னு கேக்கப்புடாது]] திட்டிக்கொல்வார்கள் ச்சே ச்சீ திட்டிகொள்வார்கள், அப்புறம் மேனேஜர்கள், செக்கியூரிட்டிகள் தலையிட்டு சமாதானம் செய்து அனுப்புவார்கள்....!


நல்லா தண்ணியடிச்சு கூத்தடிச்சிட்டு சரக்குல போயி வீட்ல உறங்கினாலும், காலையில் எழும்பியதும் இருவரும் போனில் திட்டி சவடால் விடுவாயிங்களாம், நான் இன்னைக்கு இந்த இந்த ஹோட்டலுக்கு இந்த இந்த நேரத்துக்கு போறேன் முடிஞ்சா மாஞ்சா இருந்தா வந்து பாருடா[டி]ன்னு ரெண்டு பேரும் போனிலும் முட்டிப்பாங்களாம்...!


அன்னைக்கும் அப்பிடிதான் இரண்டு குரூப்பும் செமையா போட்டியா ஆடியிருக்காங்க, கொஞ்சம் சண்டை வரும் அடுத்து சமாதானம் அடுத்தும் சண்டை சமாதானம் இப்பிடி போயிட்டு இருக்கும்போது நம்ம லகுடபாண்டிக்கு மப்பு ஏறிப்போச்சு, "டேய் இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாக்காமல் விடவே மாட்டேன்'னு தகராறு செய்ய, அவளும் 'இன்னாடா இன்னா பண்ணுவே கொய்யா' என்று களத்தில் இறங்க முதன்முதலாக ரெண்டு குரூப்பும் அடிதடியில் இறங்க, லகுடபாண்டியின் நண்பனுங்க நண்பிகள் எல்லாம் ஓடிவிட, பாண்டிக்கு செமத்தியான அடி....!!!


அந்த பொண்ணு எதையெல்லாம் கொண்டு அடித்தாள் என்று சொல்லமாட்டேன், அய்யா நல்ல மப்பில் இருந்ததால ஒன்னுமே பிரியல ச்சே புரியலை, 'உன்னை விடமாட்டேன்டி விடமாட்டேன்டி'ன்னு மட்டும் உளறிகிட்டே இருக்க......

போலீசுக்கு போன் பண்ணுனதும் அந்த பொண்ணுதான், போலீஸ் வந்தது பொண்ணுக்கு சல்யூட் அடித்து விட்டு லகுடபாண்டியை அங்கேயே நாலு மொத்தும் மொத்திவிட்டு மாமியார் வீட்டுக்கு கூட்டி சென்றார்கள், இதுல இன்னொரு சுவாரஸ்யம் என்னான்னா அந்த பொண்ணு போலீஸ்கிட்டே தான் யார் என்பதை சொல்லி, தன் அப்பாவுக்கும் போன் செய்துவிட்டாள் [[நல்ல அப்பா கொய்யால]] நம்ம பாண்டி இருக்கானே அவன் யாருன்னு வாயே திறக்காமல் இருந்ததுதான் ஆச்சர்யம்...!!!


போலீஸ்ஸ்டேசன் கொண்டுபோயி தரையில் உக்காரவச்சு நாலு மிதி மிதிச்சும் போதை தெளியலை, டேய் உன் பெயர் என்னடா உன் அப்பன் பெயர் என்னடான்னு கேட்டும் தலையை தொங்க போட்டுட்டே இருந்துருக்கான்[[போதை]] சரி கொஞ்சநேரம் பொருப்போம்னு போலீஸ் காத்திருந்தது....!!!


கொஞ்சநேரம் கழித்து சிலிர்த்து எழும்பிய லகுடபாண்டி, யோவ் நான் எங்கே இருக்கேன்னு முனக....போலீஸ் எஃப் ஐ ஆர் போட ஃபைலை ரெடியாக்கிட்டு இவனை தூக்கி சேரில் உக்கார வைத்து கேட்டார்கள்......

போலீஸ் : டேய் உன் பெயர் என்னடா...?

பாண்டி : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ பயாநிதி....

போலீஸ் : உன் அப்பன் பெயர் என்னடா...?

பாண்டி : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........மு க பழகிரி..................!!!?

[[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]] கத்தியை ஆப்பாக்கி அதிலே உட்கார்ந்த கதையா ஜெர்க்கான போலீஸ், உடனே ஸ்டேசன் இன்ஸ்பெக்டருக்கு போனை போட, ரவுண்ட்ஸில் இருந்த அவர் அலறியடித்துக்கொண்டு ஓடிவர, பாண்டியை பார்த்து கதறி இருக்கார், ஐயய்யோ தம்பிக்கு சின்னபிள்ளையில ஸ்கூல் போகும் போதும் வரும் போதும் நான்தானே உங்களுக்கு பாதுகாப்பு கொடுத்துட்டு இருந்தேன், என் ஸ்டேசனிலயே இப்பிடி ஆகிப்போச்சே....யோவ் ஏன்யா எனக்கு உடனே போன் பண்ணலைன்னு சத்தம் போட்டுவிட்டு பாண்டியை வீட்டில் கொண்டு போயி விட்டுட்டு வீட்டுக்கும் தகவல் சொல்லிட்டார்...!


கொதித்தெழுந்த பழகிரி அந்த பொண்ணை என்னா செய்கிறேன் பார் என்று கர்ஜிக்க, அதே போலீஸ் உயர் அதிகாரி என்னா வேணாலும் பண்ணு நான் சந்திக்க ரெடின்னு சவால் விட, வீட்டு பெரியவரிடம் இருந்து பழகிரிக்கு அட்வைஸ் வந்தது, உன் பிள்ளையை ஒழுங்கா வளக்காமல் அடுத்தவன் மீது கோபம் கொள்ளகூடாது கண்மணி என்று கறார் அழுத்தம் வந்தது, ஏன்னா அந்த பொண்ணு குடும்பம் டில்லில செல்வாக்கான குடும்பம் என்பதை அறிந்த பழகிரி சைலன்ட்....!!!


ம்ம்ம்ம்ம்ம் அதுக்கப்புறம்தான் பாண்டி கார்த்திகை மாசத்து பிராணி மாதிரி அலையுதுன்னு தெரிஞ்சி, அவன் லவ் பண்ணுன பொண்ணையே கல்யாணம் கட்டி வச்சி மேடையில கோட்டு போட்டுட்டு பாட்டு பாடினார் பழகிரி....!!!

டிஸ்கி : இம்புட்டு சம்பவமும் நடந்தது அவிங்க ஆட்சியில் இருக்கும் போதுதான்...!

கடைசியாக ஒரு வேதனை போட்டோ...!!!
நாடு நல்லா வளரும் வளரனும் கொய்யால....!

Thursday, June 21, 2012

மண்பானை தண்ணீரில் தாய்மை இருக்கு....!

நான் குழந்தையாக இருக்கும் போது [[ விவரம் அறிந்து]] சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமத்தார் எல்லாரும் போவது சாமிதோப்பு அய்யா பதி பின்புறமுள்ள தெற்கு வீட்டு நாடார் என்று சொல்லப்படும் தெக்குட்டி நாடார் வீட்டு முன்புதான் மீன்கடை [[சந்தை]] கூடும், காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் சந்தை பதினோரு மணிக்குதான் முடியும். அக்கம் பக்கத்து கிராம மக்கள் தங்கள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறி, பழங்கள், கிழங்குகள், நெல்லிக்காய்கள், மாங்கா, மாம்பழம் என சந்தையில் வைத்து விற்பதும், என்னைப்போல வெளி தேசத்துக்கு போயி திரும்புவர்களை கண்டால் அன்பாக காசின்றி கொடுத்தும் மகிழ்வார்கள்.மீன்கள்......... கீழமணக்குடி, கன்னியாகுமரி, வடக்கு தாமரைகுளம் இப்பிடியாப்பட்ட இடங்களில் இருந்து வியாபாரிகள் மீன்களை கொண்டு வருவது உண்டு, ஞாயிறு தவிர எல்லா நாட்களும் சந்தை உண்டு, சந்தை என்று யாரும் சொல்லமாட்டார்கள், மீன்கடை என்றே சொல்வது வழக்கம் இப்போதும்...!


நாங்கள் பள்ளிக்கூடம் போகனும்னாலும் மீன்கடை போகனும்னாலும் ஒரே வழிதான், ஸ்கூல் லீவு நாட்களில் அம்மாவின் முந்தானையை பிடித்து கொண்டு மீன்கடை போவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, [அதிலும் நான் கடைகுட்டி செல்லபிள்ளை வேறு] அம்மா என்னை கண்டிப்பா கூட்டிட்டு போயி நெல்லிக்காய் மாம்பழம் கொய்யா எல்லாம் அன்பா வாங்கி முந்தானையில் துடைத்து திங்க தருவாள்....!


கையில் காசில்லைன்னா அம்மா மீன்கடைக்கு கூட்டிப்போகாமல் செய்யும் தந்திரம் எனக்கு இப்பவும் நியாபகம் இருக்கு...!!! 'எலேய் தம்பி.........அம்மா மீன்கடைக்கு போறேன், நீ வீட்டுல சும்மா இருக்காம மேல உரியில வச்சிருக்குற கருப்பட்டியை எட்டாதுன்னு நினைச்சி ஸ்டூலை போட்டு ஏறி எடுத்து தின்னேன்னு வச்சிக்க அம்மா வந்து பிச்சிபுடுவேன் பிச்சி'ன்னு அழகா வழிகாட்டி தந்துட்டு போவாங்க, அப்புறம் மீன்கடைக்கு நான் போவேனாக்கும்...? கருப்பட்டி காலி ஆகி இருக்கும், அம்மா வந்து ஒன்னுமே சொல்லமாட்டாள்...!!

[[இந்த செடிக்குள்ளே பாம்பு இருப்பதாக சொல்வார்கள், ஆனால் நான் பார்த்ததே இல்லை]]

அப்பா வியாபாரம் விஷயமாக தூத்துக்குடி [[சீசன் நேரம்]] அடிக்கடி போவார், அண்ணன்கள், அக்கா வெளியே கான்வென்ட் படிப்பு, நான் மட்டும் அம்மா கூட சுத்திட்டு இருப்பேன். எங்கம்மாவுக்கு எல்லாமே நான்தான்....!!!


ஸோ சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேன் சரி விஷயத்துக்கு வருவோம், அப்படி மீன்கடை, ஸ்கூல் போகும் போதும் திரும்பும் போதும் ஒரு வீட்டில் "மண்பானையில்" தண்ணீர் ஊற்றி வைத்து ஒரு அலுமினிய கிளாசையும் கயிற்றில் கட்டி தொங்க விட்டுருப்பார்கள் அந்த வீட்டில், போவோர் வருவோர் எல்லாருமே அங்கே தண்ணீர் குடிப்பது வழக்கம்...!


அந்த காலகட்டத்தில் நல்ல குடிநீர் எங்கும் கிடைக்காது, [[இப்போதான் கார்பரேஷன் தண்ணி வந்துருக்கு]] எங்களுக்கும் குடிநீர் வேண்டுமானால் ஒன்னரை கிலோமீட்டர் நடந்து போயிதான் எடுத்து கொண்டு வரவேண்டும் அப்படி தண்ணிக்கு கஷ்டபட்ட நேரமது...!!!

நான் ஸ்கூல் போகும் போதும் திரும்பும் போதும், மீன்கடை போகும் போதும் திரும்பும் போதும் நானும் அம்மாவும் அங்கே மண்பானை தண்ணீர் குடிப்பதுண்டு, சில நேரங்களில் அந்த பானைக்குள் கொஞ்சம் வேர்களை போட்டு வைத்து தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள், அய்யோ மணம்னா அப்பிடி ஒரு மணம்...! [என்ன வேர்'ன்னு நியாபகம் இல்லை] 


இது தொடர்கதையா நடக்கும் போது, எனக்குள் ஒரு கேள்வி எழும்பியது, ஏன் நம்ம வீட்டுலும் அப்பிடி ஒரு "மண்பானை" வைத்து தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று தோன்றியது. அம்மாவிடம் கேட்க பயம் காரணம் ஒன்னரை கிலோமீட்டர் தாண்டி போயி தண்ணீர் பிடித்து வருகிறாள் அம்மா, இப்போ சொன்னோம்னா அடி மங்காத்தாதான்னு நினச்சு பேசாம இருந்துட்டேன்.

அப்புறம் கொஞ்ச நாளைக்கு அப்புறம் தூங்கும் போது அம்மா பாசத்தோடு என் தலையை கோதிகொண்டிருக்கும் போது கேட்டேன், அம்மா எதுக்கும்மா அந்த வீட்டுல மட்டும் தண்ணீர் பானை வச்சிருக்காங்க வேற யார் வீட்டுலயும் அப்பிடி இல்லையேன்னு கேட்டேன், அம்மா சுருக்கமா ஒரு கதை சொன்னாள் அந்த வீட்டைப்பற்றி.....


'தம்பி, கொஞ்சநாளைக்கு முன்னாடி............ அந்த வீட்டுல வெள்ளை சேலை உடுத்துட்டு ஒரு அக்கா இருக்காங்களே அவங்க மாப்பிளை ஒரு விபத்தில் சிக்கி தண்ணீர் தாகத்தால் தண்ணீர் கிடைக்காமல் இறந்து போனாருப்பா, தண்ணீர் மட்டும் குடிக்க கிடச்சிருந்தால் பிழைச்சிருப்பாராம், அந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால் அவர் செத்து போயிட்டார். இவளவுக்கும் அந்த அக்காளும் அந்த அண்ணனும் வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள்...! [[அந்த காலத்து காதல் கல்யாணம்னா நமக்கு தெரிஞ்சதுதானே யப்பா...!!!]]

அவங்க கல்யாணம் செய்தது அந்த அண்ணன் வீட்டுல பிடிக்காததால் ஏத்துக்கிடல, ஆனா அந்த அக்கா வீட்டுல ஏத்துகிட்டாங்க, நல்லா படிச்சவங்க, இந்த விபத்துல அந்த அண்ணன் இறந்து பத்து வருஷமாகியும் அந்த அக்கா வேற கல்யாணமே கட்டிக்கல, இதை அறிந்த அந்த அண்ணன் வீட்டார் அந்த அக்காவை காலில் விழுந்து மருமகளா ஏத்துகிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சொத்தில் பங்கும் கொடுத்துட்டாங்க...!


இனி கல்யாணமே வேண்டாம் என்றிருந்த அந்த அக்காவுக்கு தன் மாப்பிளை தண்ணீர் கிடைக்காமல்தானே செத்து போனாருன்னுட்டு, இப்படி "மண்பானை" வைத்து ஊருக்கே தண்ணி ஊத்திட்டு இருக்காள் புரியுதா...?

அம்மா சொன்னது அப்போ எனக்கு புரியாவிட்டாலும்......... இப்போது எங்க ஊர் மீன்கடை அடுத்த [[கோட்டையடி]] ஊருக்கு மாறிடுச்சு [[அப்பவே]] 


இந்தத்தடவை ஊர் போனபோது என் மனைவியும் நானும் [[அம்மாவுக்கு நடக்க முடியாது]] மகளுமாக மீன்கடை போவது வழக்கமாக இருந்தது, போகும் வழியில் ஒரு மண்பானை கடையை கண்டேன், மண்பானை தண்ணீர் சூப்பராக இருக்குமேன்னு நினச்சி ஒரு பானை வாங்கி வந்து தண்ணீர் ஊத்தப்போனேன், இதை கவனித்த எங்கள் பக்கத்து வீட்டு பாட்டி எலேய் என்ன பண்ணுத...? புது பானையை சூடு பண்ணி ஆவி காட்டித்தான் தண்ணி ஊத்தி வைக்கணும்னு சத்தம் போட்டு விட்டு அவர்களே அடுப்பில் வைத்து சூடு பண்ணி ஆவி காட்டி தந்தார்கள். ரெண்டு நாள் தண்ணி ஊத்தி ஊத்தி தூர ஊத்திட்டு அப்புறமா தண்ணீர் ஊத்தி வச்சி குடிங்க என்றார்...!

அப்புறம் அந்த தண்ணீரை நானும் அம்மாவும்தான் விரும்பி குடிப்போம், மனைவி பிள்ளைங்களுக்கு பிடிக்கலை, [[ம்ஹும் மும்பை ஜீவிகளுக்கு தெரியுமா இதன் ருசி..?]] 

இப்படி இருக்கையில் ஒரு நாள் வழிபோக்கர்கள் நான்கு பேர் என் அண்ணன் வீட்டு பின்னாடி களைப்பால் வந்து [[சைக்கிளில்]] இறங்கி நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள் நான் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தேன், அப்போது எங்க வீட்டு காம்பவுண்டுக்குள் வந்த அவர்களில் ஒரு முதியவர் [[என் அண்ணன் வீட்டில் யாருமில்லை அப்போது]] என்னிடம், தம்பி குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமான்னு கேட்டார்.

நானும் ஓடிப்போயி செம்பில் சாதாரண [[குடிநீர்தான்]] தண்ணீர் கோரினேன், என்ன நினைத்தேனோ தெரியவில்லை பாவம் என்று நினைத்து அந்த "மண்பானை" தண்ணீரை மொண்டு கொடுத்தேன், முழுவதையும் குடித்தவர்.......தம்பி இன்னொரு செம்பு தண்ணீர் கிடைக்குமா என்றார். ஓ தாராளமா என்று சொல்லி மீண்டும் மொண்டு கொடுத்தேன். குடித்தவர் என் கையை பிடித்து கொண்டு சொன்னார், தம்பி.............25 வருஷத்துக்கு முன்னாடி இறந்துபோன என் மனைவியின் கையால் குடித்த இந்த "மண்பானை" தண்ணீரை இன்னைக்குதான்ய்யா உன் கையால குடிச்சிருக்கேன்......!


என்னா மணம்ய்யா என்னா மணம், நம்ம மண்ணுக்கு உயிர் இருக்குய்யா உயிர் இருக்கு, அதில் தாயின் கருணை இருக்கு, உங்களைப்போல உள்ளவர்கள் எல்லாம் இதை அறியாமல் இருக்கிறீர்களேன்னு நான் வருந்தின நாட்கள் உண்டுய்யா, ஆனா உன்னை மாதிரி மண்ணை நேசிக்கிற தம்பிகளும் இருக்கீங்கன்னு இப்போ புரிஞ்சிகிட்டேன் நல்லா இருய்யா ராசா'ன்னு ஆசீர்வதிச்சுட்டு போனார், நான் நெகிழ்ந்து போனேன் என் மனைவி பிள்ளைகள் "ங்கே"........பின்னர் அவர்களுக்கும் விளக்கி சொன்னேன்...!

அப்புறம்தான் எனக்கு அந்த மீன்கடை அக்காவின் தண்ணீர் பந்தல் நினைவுக்கு வர, அம்மாவிடம் ஓடிபோயி கேட்டேன், அம்மாவுக்கு நினைவில்லை, நாங்கள் தண்ணீர் குடித்தது, அந்த அக்காளின் கதை எல்லாம் அம்மாவுக்கு கொஞ்சம்தான் நியாபகம் இருக்கு மறந்து போச்சாம் [[வயசாகிருச்சுல்ல]]

நண்பனை அழைத்து கொண்டு அந்த வீட்டுக்கே போயி பார்த்தேன் விசாரித்தேன், ஆனால் எப்பவோ அந்த வீட்டை வித்துவிட்டு எங்கே போனார்கள் என்றே யாருக்கும் தெரியவில்லை, தனிமையில் இருக்கும் போது அந்த அக்காளையும், "மண்பானை" தண்ணீரையும் நினைத்தால் கண்கள் கண்ணீரால் முட்டும்....!!!

இந்த நிகழ்ச்சி என் அடி மனதில் இப்போதும் ரணமாய் முனகி கொண்டேதான் இருக்கிறது, ஒரு "மண்பானை" வாங்கப்போயி, புரியாத வயசில் கேட்ட சம்பவம், நாம் விவரம் அறியும் போது நினைத்து பார்க்கையில் என்னா வலி வலிக்குது மனசுக்கு இல்லையா......

அந்த அக்கா இப்போ எங்கே எப்படி இருக்கிறாளோ...? ஆனால் அவளின் வைராக்கியமான நல்ல குணத்திற்கு அந்த அக்காள் இப்போது நல்லாத்தான் இருப்பாள் என்று என் உள் மனசு நிச்சயமாக சொல்கிறது...!

அக்கா...... இந்த பதிவு உன் புனிதமான கால்களுக்கு சமர்ப்பணம்.

டிஸ்கி : நான் வாங்கிய அந்த "மண்பானை"தான் என் மகள் தலையில் சுமந்து வருகிறாள், இது ஏற்கனவே பேஸ்புக்'கில் போட்ட படம்தான் இருந்தாலும் உங்கள் பார்வைக்காக மறுபடியும் பகிர்ந்துள்ளேன்.Tuesday, June 19, 2012

நம்ம பிரதமருக்கு கோவம் வந்தால்...?

நம்மாளுங்களுக்கு கோவம் வந்தால் எப்பிடியெல்லாம் திட்டுவாங்கன்னு கொஞ்சம் ரிலாக்ஸா பார்ப்போமா...??? [[சீரியசா பார்க்கப்புடாது]]

டெய்லர் - கொய்யால பிரிச்சி பிரிச்சி தைச்சிப்புடுவேன்.

பனை தொழிலாளி : சும்மா ஏறு ஏறுன்னு ஏறிப்புடுவேன் ஜாக்கிரதை.

செருப்பு தொழிலாளி : சும்மா பிய்யி பிய்யின்னு பிச்சிபுடுவேன்.


டிரைவர் : ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிப்புடுவேன் பேமானி.

ஆசாரி : சும்மா தேயி தேயின்னு தேச்சுபுடுவேன் தேச்சி.

கொத்தனார் : செங்கலை கொத்துற மாதிரி கொத்திபுடுவேன் கொத்தி.


ஆட்டோ டிரைவர் : சும்மா டர்ர்ர் டர்ர்ர்ன்னு ஓட்டிருவேன்.

கம்பியூட்டர் இஞ்சினியர் : வைரஸை அனுப்பி உன்னை பார்ட் பார்ட்டா பிரிச்சிருவேன் பிரிச்சி.


பிளாக்கர் [[சிபி அல்ல]] : உன்னை ஹேக் பண்ணி இப்பவே தூக்குறேன் பாரு.

டவுண் பஸ் டிரைவர் : உன்னை சுத்தி சுத்தி அடிக்கலை என் பேரை மாத்திக்கேறேன்.


போலீஸ் : முட்டிக்கு முட்டி பேத்துருவேன் [[இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே]]

முதலாளி : இப்பவே தூக்கிருவேன்.

கலெக்டர் : நான் யாருன்னு உனக்கு தெரியுமா...? என்னை யாருன்னு உனக்கு தெரியுமா..? [[எல்லாமே ஒன்னுதாம்டி]]


அரசியல்வாதி : இப்பவே உன்னை குண்டாஸ்ல தூக்கி போடல நான் எம் எல் ஏ இல்லைடா.

அடகு கடை செட் : நான் வச்சிக்கிறேன்டா உன்னை.

அக்கவுண்ட்டன்ட் : இப்பவே உன் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிருச்சு கணக்கு வச்சிருக்கேன்.

மிலிட்டரி [[விக்கி அல்ல]] : சுட்டுபுடுவேன் சுட்டு.


வாத்தியார் : பிரம்பால விளாசிப்புடுவேன் விளாசி.

ஆபீசர் : எலேய் பெல்டை உருவினேன் ரத்த விளார் ஆகிருவே ஜாக்கிரதை.


போஸ்ட் மேன் : வீசிப்புடுவேன் வீசி.

பட்டறைகாரர் : சூடு பண்ணி அடி அடின்னு அடிச்சி நிமித்திருவேன்.

கேஷியர் : எண்ணி எண்ணி அடிப்பேன்.


டீக்கடை : மூஞ்சில வெண்ணியை ஊத்திருவேன்.

சலூன் அண்ணாச்சி : சும்மா வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புடுவேன்.


ஒயின் ஷாப்காரன் : உன் வாயில பினாயில ஊத்திப்புடுவேன்.

மீனவன் : உன்னை இப்பவே கடிச்சி துப்பிருவேன்.

வேட்டைக்காரன் [[விஜய் அல்ல]] : உன்னை வலை விரிச்சி பிடிக்கலைன்னா பார்த்துக்கோ.

மளிகை கடைக்காரன் : இருடி உன்னை இப்பவே பார்சல் பண்ணுறேன்.


திருடன் : இப்பவே உன்னை உடைக்கிறேன் பாரு.

ரயில் ஓட்டுனர் : உன்னை டக்கு புக்குன்னு இப்பவே ஊதல பாரு கொய்யா.

பாக்கு வியாபாரி : இப்பவே உன்னை கடிச்சி குதப்பி துப்பிருவேன்.

டாக்டர் : பிடிச்சி வச்சி குத்து குத்துன்னு குத்திப்புடுவேன்.


கடைசியாக.......

மன்மோகன் சிங் கோவம் வந்தா என்ன சொல்வாரு...?


கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் [[காது கேட்டாதானே]] தீர விசாரிப்பதும் பொய், சோனியா அம்மா சொல்வதே மெய், அய் எனக்கு கோவம் வராதே வராதே வராதே.....!!!

டிஸ்கி : படங்கள் சும்மா உங்கள் ரசனைக்காக [[வேதனை]]...!

Sunday, June 17, 2012

நாட்டு நடப்புகளும், வேதனைகளும், சந்தோஷங்களும்...!

நாட்டு நடப்புகளும் வேதனைகளும், சந்தோசங்களும்...

# போலீஸ் வாகனத்துக்கே பாதுகாப்பு இல்லை, இரும்பு ஜாலிகளால் பின்னப்பட்ட வாகனங்களில் ரோந்து போகிறார்கள், அப்பிடின்னா மக்களுக்கு என்னய்யா பாதுகாப்பு...?


# என் மகனோடு படித்த [[மும்பை]] நான்கு மாணவிகள் பத்தாவது வகுப்பில் தோற்றுப்போனதினால், பெற்றோர் வீடு திரும்புமுன் தற்கொலை - இன்னும் கூடுதலான கவுன்சிலிங் தேவை, மற்றும் அல்லாது இந்த முறை மகாராஷ்ட்ரா பரீட்சை தேர்வு மிகவும் கெடுபிடியாக நடந்துள்ளதாக குற்றசாட்டு வந்துள்ளது....!!!


# பஹ்ரைனில் கார்பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட எட்டு கார்களை ஒரே நேரத்தில் கொளுத்திய நரகாசுரனை அரசாங்கம் வெளியே காட்டவுமில்லை, மீடியாவின் வாயையும் பூட்டி விட்டது....!!!


# நாம் அமைதியாக இருந்தாலும், நாம் பயந்துவிட்டோம் என்று எண்ணி மிரட்டிய ஒரு சேட்டனை பத்தே நிமிஷத்தில் ரூமை செக் அவுட் பண்ணிய வேகத்தை பார்த்து மிரண்டு போன எங்கள் ஜெனரல் மேனேஜர், அவனையும் இம்புட்டு நாள் பயங்காட்டி வச்சி இருந்துருக்கான் அந்த சேட்டன், பொறுமைக்கும் அளவு உண்டா இல்லையா ஹி ஹி...!!!


# பழசையே போட்டு போட்டு மாவரைத்து லைக் போட சொல்லி மிரட்டும் பேஸ்புக் நண்பர்கள் [[நான் விக்கியை சொல்லலை]]


# நிறைய பேசும் கலைஞரை பேசாம சனாதிபதி ஆக்கினால் என்ன...? தொல்லை அதோடு ஒழியுமே...!!! ஓ அங்கேயும் நாலு குடும்ப வாரிசும் மல்லுக்கு போயிருமோ ஹா ஹா ஹா ஹா...!!!


# சாட்டிங்கில் வந்து, மனோ நலமா'ன்னு கேட்டுட்டு, நான் இன்னைக்கு ஒரு பதிவு போட்டுருக்கேன்னு சொல்லி லிங்கை கொடுத்து கமெண்ட்ஸ் போடசொல்றாங்கோ, அதானே பார்த்தேன் கொய்யால ஒரு நாளும் வராத பயபுள்ளை இன்னைக்கு சாட்டிங்க்ல வருதேன்னு டேய் இதை முதல்லயே சொல்லவேண்டியதுதானே..?!!!


#  எப்போ ஸ்கைப்ல பேசுனாலும், ஒன் கப் ஆஃப் டீ அன்ட் புட் சம் ஹாட் வாட்டர்னு ஸ்டெனோவுக்கு ஆர்டர் குடுக்குறாப்ல பில்டப் கொடுக்குறானே ஒரு மூதேவி அது என்னையும் ஆபீசரையும் விஜயனையும் கடுப்பேத்தவா அல்லது டுபாக்கூரா தெரியலையே.....!


# எண்ணெய் தேச்சி சீயக்காய் ஷாம்பூ போட்டு குளிச்சாலும் கூட, எண்ணெய் பிசுக்கு கொஞ்சம் அப்பிடியேதானே இருக்கு, அப்புறம் எதுக்கு குளிக்கணும் ஹி ஹி...# பதிவுலகின் சூப்பர் டூப்பர்ஸ்டார் சத்தமில்லாமல் ஒதுங்கிட்டானே என்னாச்சுய்யா அவனுக்கு யாராவது கேட்டீங்களா...?


# ஈரோடுல எத்தனையோ பதிவர்கள் இருந்தும் [[பேஸ்புக் இத்யாதி உட்பட]] காவிரி ஆற்றில் கூவம் கலந்து நாறுதே யாராவது சவுண்டே [[சென்னிமலை அண்ணன் உட்பட]] விடக்காணோம்...???!!! [[என்ன ஊர் பக்தியா இருக்குமோ...?]] அந்த பக்கம் ரயில்ல போறவங்க அந்த நாத்தத்தை கடந்துதான் போவோணும்....!!!

# ரொம்ப லொள்ளு பண்ணுற நம்ம நித்தியை பேசாம சனாதிபதி ஆக்கிட்டா என்ன, ஏன்னா நம்ம ஊரும் தப்பிச்சிரும் இல்லையா, அய்யாவும் சும்மா கனடா, எகிப்து, ஈரான், ஈராக், மொரோக்கா......................[[எவம்லேய் அங்கே முழிச்சி பாக்குறது பிச்சிபுடுவேன் பிச்சி]] லண்டன், சிறீ லங்கா, ரஷ்யா, சைனா இப்பிடி வெரைட்டிசா பாக்க வெளியே ஓடிருவார்ல [[ஜிஞ்சிதா மன்னிச்சு]] அமெரிக்காகாரன் சோதனை போடவும் முடியாது ஹி ஹி ஏன்னா அய்யா கோவணம்தான் கட்டுவாரு, அடிக்கிற கப்புல அமெரிக்கா நாறிப்போகும்...!


# கன்டினியூவா சரக்கடிச்சுட்டு திடீர்னு நிப்பாட்டினாலும் சும்மா சரக்கடிச்ச மாதிரி [[குறிப்பிட்ட நேரத்தில்]] தெம்பாதான்யா இருக்கு - நண்பனின் சந்தோசம்...!


#  நான் மட்டும் மரம் நட்டால் ஏன் அந்த செடி செத்து போகிறது...? என்னாது கைராசியா..? எங்க அண்ணன் ஜோதிராஜ்'கிட்டே சொல்லி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா.....

# பங்களாதேசிகளின் வருகையால் பஹ்ரைன் நிரம்பி வழிகிறது, ஆனாலும் மலையாளி போக மாட்டேங்குறான் [[அப்போ நீ]]


# இனி எந்த இந்திய சனாதிபதியை அமெரிக்காகாரன் துகிலுறிஞ்சி [[சோதனை [[கலாம்]]] பாக்கப்போறானோ, எதுக்கும் கோவணம் கட்டிட்டு போக சொல்லுங்க அதான் லங்கோட்டி லங்கோட்டி....!!!


# பூமி உருண்டை என்பதை கண்டறிந்து, பூஜ்ஜியத்தை கண்டறிந்தான் தமிழன், வாழ்க்கையும் ஒரு உருண்டை என்ற தத்துவத்தையும் அதனுள் அடக்கினான் தமிழன்....!!! 

# நான் உடுத்தும் ஆடைகளை ரசித்தும், வெறுப்பாகவும் நேரிடையாக விமர்சிக்கும் என் சில அண்ணிகள், சில அக்காக்கள், நண்பிகள், நண்பர்கள் விஜயன், ராஜகுமார், கிருஷ்ணா, ராபர்ட் மற்றும் பலர்....இதுக்கும் ஒரு தைரியம் வேணுமப்பா என்னால அப்பிடி முடியிறதில்ல....!!!

உலகிலேயே பீர் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது........வியட்னாம்.....!!! [[அதானே பார்த்தேன் ஏண்டா விக்கி இப்பிடி ஊதிப்போயி இருக்கானேன்னு...!கடைசியாக.......

# அடுத்த பிரதமரா நரேந்திரமோடிதான் வரணும் வருவார்.....!!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!