Sunday, August 28, 2011

புயல் கிளம்புதுலேய்.....!!!


எலேய் மக்கா நான் இதோ வாரேன் பஹ்ரைன், ஆனால் என்னை பார்க்க வருகிற மக்காக்கள் பலமான கிப்ட் கொண்டு வந்துதான் என்னை பாக்கோணும் ஜாக்கிரதை, அதுக்காக பிஞ்ச தக்காளி [[விக்கி இல்லை ஹி ஹி]] கல்லு, அழுகின முட்டை, கூமுட்டை, அருவா, கடப்பாரை, சுத்தியல், உளி'ன்னு கொண்டு வந்துராதீக.....!!!

அடுத்து தயவு செய்து எனக்கு பிளக்ஸ் பேனர், கொடி, கம்பு, இத்யாதிகள் வைத்து பஹ்ரைன் அரபிகளை ஓட வைத்து விடாதீர்கள், ஏர்போர்ட்டை நாற வைத்து விடாதீர்கள், பன்னிகுட்டி சவுதியில இருந்து என்னவெல்லாமோ அனுப்பபோறார்னு எனக்கு அப்பவே தகவல் வந்தாச்சு....!!!

கக்கு மாணிக்கம் வேற மிரட்டிட்டே இருக்காரு, ஷார்ஜா தாதா ஒருத்தர் என்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்னு மிரட்டுறார், சிபி சனியன் ஒளிஞ்சதுன்னு சந்தோசப்பட்டு குப்புற கவுந்துட்டானாம்.....

இருங்கடி உங்களுக்கு அங்கே வந்து வேட்டு வைக்கிறேன்....!!

Saturday, August 27, 2011

ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து… ‘பசு’ நடிகராலும் குடைச்சல்!


ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து… ‘பசு’ நடிகராலும் குடைச்சல்!

நீங்க நல்லவரா, கெட்டவரா என்று நாயகன் கமலிடம் அவரது பேரப்பிள்ளை கேட்குமே, அப்படிதான் கேட்க வேண்டியிருக்கிறது இப்போதைய தமிழ் சினிமாவின் நிலைமையை! ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ் சினிமா இப்போ நல்லாயிருக்கா, இல்லையா?

ஆமாம் என்று சிலரும், இல்லை என்று சிலரும் மண்டையை ஆட்டிக் கொண்டிருக்க, பைத்தியம் பிடிக்காத குறையாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் பலர். அதிலும் பைனான்ஸ் வாங்கி படமெடுப்பவர்கள் பாடு சர்வ பேதி!

கோடம்பாக்கத்தில் நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த கைதுகளால் பைனான்ஸ் கிடைப்பதில்லையாம் முன்பு போல. அதுவும் பிரதர்ஸ் இருவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால் பணம் வரும் வழிகளில் எல்லாம் அடைப்பு ஏற்பட்டுவிட்டதாம். மதுரை ஏரியாவில் வெளியாகும் எல்லா படங்களையும் இவர்கள்தான் வாங்கி வெளியிடுவார்கள். இந்த ஒரு பெரிய ஏரியாவின் வியாபாரமும் முடக்கம் ஆகிவிட்டதாக புலம்புகிறார்கள் இப்போது.

அரவத்தின் பெயர் கொண்ட ஒரு படத்தில் நடித்த இரண்டெழுத்து ஹீரோ திடீரென்று சம்பளத்தை எண்ணி வைச்சாதான் டப்பிங் பேசுவேன் என்று முரண்டு பிடிக்கிறார். இவரை பார்த்து பசுவான இன்னொரு ஹீரோவும் முரண்டு பிடிக்க, செய்வதறியாது தவிக்கிறதாம் படக்குழு.

ஒருபுறம் பல பைனான்சியர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள். நல்லவேளையாக யூடிவி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட முன் வந்திருப்பதால் பெரிய நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கிறது திரையுலகம்.

ஆபத்துக்கு குடை பிடிக்கிறாங்க. அதுல ஆகாயம் தெரியலையேன்னு கிழிச்சு வச்சுராதீங்க மக்களே…

Friday, August 26, 2011

சினி மாலா......!!!

குடும்ப உறவுகளையும் பாசத்தையும் தூக்கி நிறுத்தி வெற்றி கண்ட படம், , மாயாண்டி குடும்பத்தார், இந்த படத்தை தயாரித்த சாமு சிவராஜ் தனது நண்பர் கல்கியுடன் இணைந்து, கண்டுபிடி கண்டுபிடி என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்.

இதில் கதை நாயகனாக சீமான் நடிக்கிறார், இவருடன் கேரளா அழகி ஐஸ்வர்யா தேவன், டிவி. புகழ் முரளி, தருண் சத்ரியா, ஜெகன்நாத், செவ்வாளை ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தைப்பற்றி டைரக்டர் ராம் சுபராமன் கூறியதாவது -
முழுக்க முழுக்க கிராமத்தில நடந்த நகைச்சுவை கலந்த திகில் படமாகும், கதை இப்படித்தான் நகரும் என்று யாரும் ஆரம்பம் முதல் இறுதி வரை யாராலும் யூகிக்க முடியாதவாறு இருக்கும்.....


தமிழ் பட உலக பிரபலங்களில், மிகவும் விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள் மூன்றே மூன்று பேர், ஒருவர் ஆர் கே, இன்னொருவர் ஹாரீஸ் ஜெயராஜ், மற்றொருவர் உதயநிதி ஸ்டாலின், இவர்கள் மூன்று பேரும் வைத்திருக்கும் காரின் பெயர் "ஹம்மர்"!


கதாநாயர்களையும், டைரக்டர்களையும் கைக்குள் போட்டுக்கொள்கிற கதாநாயகிகள் பட்டியலில் இப்போது புதுசாக இணைந்திருப்பவர், அமலா பால் [[சிபி'யின் கவனத்திற்கு]] இவருடைய வலையில் ஒரு தெலுங்கு டைரக்டரும் சிக்கி இருக்கிறார்....
சுரேந்தர் என்ற அந்த தெலுங்கு டைரக்டர் அமலா பாலுக்கு சிபாரிசு செய்து, ஒரு புதிய தெலுங்கு பட வாய்ப்பை வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்க்காகவே, ஐஸ்வர்யா தனுஷ் டைரக்ட் செய்யும் "3" படத்தை தியாகம் செய்திருக்கிறார் அமலா பால்...!!!


சினேகா இது வரை ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார், முதன் முதலாக அவர் அழகு சாதன பொருட்களின் விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார்...
இந்த விளம்பர படத்தை டைரக்ட் செய்தவர், டான்ஸ் மாஸ்டர் கல்யாண்..!!! இவர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர், அந்த அனுபவத்தை வைத்து விளம்பர படத்தை இயக்கினாராம்...!!!


களவாணி படத்தை இயக்கிய சற்குணம், நல்ல குரல் வளம் கொண்டவர், பிடித்த பாடல்களை சத்தம் போட்டு பாடுவார், இப்போது இவர் டைரக்ட் செய்துள்ள "வாகை சூடவா" படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெறுகின்றன, 
இந்த ஐந்து பாடல்களையும் மனப்பாடமாக வைத்து இருக்கிறார் சற்குணம், அவரை தேடி செல்பவர்களை உட்கார வைத்து ஐந்து பாடல்களையும் பாடி காட்டுகிறார் சற்குணம்...!!!

Thursday, August 25, 2011

அறிவியல் நாங்களும் சொல்வோமுல்ல...!!!


விண்ணில் சில விண்மீன்கள் ஒரே மாதிரியான அளவுடன் எப்போதும் ஒளிர்வதில்லை. சில விண்மீன்கள் மங்கலாகவும் பின்னர் அதிக பிரகாசத்துடனும் என மாறி மாறி தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன.
இது ஒரு சுற்று போல அவற்றில் நிகழ்கிறது. இப்படி ஒரே ஒழுங்கில் மாறுபட்டு ஒளிரும் விண்மீன்களை (cepheid Variables)  அல்லது (Cepheids) என அழைக்கின்றனர். தமிழில் இதை சீபீட் மாறிகள் அல்லது சீபீட்கள் எனவழைக்கலாம்.
மேலும் இவற்றை மாறும் விண்மீன்கள் (Variable Stars) என்றும் அழைக்கின்றனர். இந்த சீபீட்கள் மங்கலாக மாறுவதில் இருந்து பின் பிரகாசமாகி இறுதியாக மங்கலாக மாறுவது வரை உள்ள காலத்தை அவற்றின் ‘கால அளவு’ என அழைக்கின்றனர் (Periods). சில சீபீட்களின் கால அளவு ஒரு நாளைக்கும் குறைவாக இருக்கிறது. சிலவற்றின் கால அளவு இரண்டு மாதங்கள் கூட நீள்கிறது.
சீபீட்கள் என்ற பெயர் எப்படி இந்த விண் மீன்களுக்கு வந்தது என்று நாம் காண்போம். முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இப்படியான விண்மீன் சீபஸ் (Cepheus) என்கிற விண்மீன் தொகுதியில் அமைந்த டெல்டா சீபி (Delta Cephie) என்கிற விண்மீன் தான். அதனால் தான் இப்படி மாறும் விண்மீன்களை சீபீட்கள் என அழைக்கின்றனர். டெல்டா சீபியின் கால அளவு 5.3 நாட்கள் ஆகும். நமக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள சீபீட் துருவ நட்சத்திரம் (Pole Star) ஆகும். இதன் கால அளவு வெறும் 4 நாட்கள் தான். சீபீட்கள் எனப்படும் மாறும் விண்மீன்கள் விண்வெளியில் தொலைவுகளை அளப்பதில் மிகவும் உதவியாக உள்ளன.
வானத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களுமே என்றென்றும் மாறாதவை என்றும் நிரந்தரமானவை என்றும் நிலவி வந்த கருத்துக்களுக்கு சாவு மணி அடித்தது, இந்த சீபிட்களின் கண்டுபிடிப்பு தான். இன்னொரு வகையான மாறும் விண்மீன்கள் கூட உள்ளன. அவற்றை ‘மறைக்கும் மாறிகள்’ (Eclipsing Variables) என்கின்றனர். சில விண்மீன்கள் வானத்தில் இரட்டை விண்மீன்களாக (Binary Star‡) உள்ளன. அதாவது இரண்டு விண்மீன்களும் தங்களின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. இப்படியான இரட்டை விண்மீன்களில் ஒன்று பிரகாசமாக ஒளிரக் கூடியதாகவும் மற்றொன்று மங்கலான விண்மீனாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் இரு விண்மீன்களும் ஒரு பொது மையத்தைப் பொறுத்து ஒன்றை ஒன்று சுற்றி வரும்போது, மங்கலான விண்மீன் பிரகாசமாக ஒளிரும் விண்மீனுக்கு முன்பாக வர வாய்ப்பு உள்ளது. அப்போது அது ஒளிரும் விண்மீனை மறைத்து விடுகிறது. இது ஒரு தற்காலிக ஒளி இழப்பு தான். மங்கலான விண்மீன் மீண்டும் தன் சுழற்சியில் ஒளிரும் விண்மீனை விட்டு விலகும்போது, அது மீண்டும் பிரகாசிக்கிறது. இது போல ஒரு ஒழுங்கில் எல்லாமே நிகழ்கிறது. முதன் முதலில் (1782ம் ஆண்டு) இந்தக் கருத்தை சொன்னவர் ஆங்கில வானியல் வல்லுனர் ஜான் கூட்ரிக் (John Goodricke) என்பவர் தான். ஆல்கால் (Algol) என்கிற இரட்டை விண்மீன்கள் இதற்கு உதாரணம். இப்போதைக்கு இந்த ‘மறைக்கும் மாறிகளை’ நாம் கண்டு கொள்ளாமல் விடுவோம்.
விண்மீன்களை வகைப்படுத்துவதில் அதனுடைய ஒளிரும் தன்மை அல்லது பிரகாசம் (Brightne‡‡) முக்கியமான பங்கு வகிக்கிறது. ஹிப்பார்கஸ் என்பவர்தான் விண்மீன்களை முதன் முதலாக அவற்றின் பிரகாசத்தை வைத்து தரம் பிரித்தார். அவர் மொத்தம் ஆறு அளவு நிலைகளாக (Magnitîde) விண்மீன்களை வரிசைப்படுத்தினார். மிகவும் பிரகாசமாக ஒளிரும் விண்மீன்கள் இவருடைய தரப்படி குறைந்த அளவு நிலைகளைக் கொண்டிருந்தது. விண்ணில் தெரிந்த இருபது பிரகாசமான விண்மீன்களை அவர் முதல் அளவு நிலை (Fir‡t Magnitîde) அல்லது முதல் தர விண்மீன்கள் என அழைத்தார்.
முதல் தர விண்மீன்களை விட சற்றே மங்கலான விண்மீன்களை அவர் இரண்டாம் அளவு நிலை (Second Magnitîde) அல்லது இரண்டாம் தர விண்மீன்கள் என வகைப்படுத்தினார். இப்படி  மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் அளவு நிலை வரை விண்மீன்களை வரிசைப்படுத்தப் பட்டது. இவற்றில் ஆறாம் தர விண்மீன்கள் மட்டும் ஓரளவு கண்ணுக்குப் புலனாகும் அளவு மங்கலானவை ஆகும்.

நன்றி : அறிவியல் செய்திகள்.

டிஸ்கி : என்ன சிபி மட்டும்தான் ஒருநாளைக்கு அஞ்சாறு பதிவு போடுவானா...??? ஏன் என்னால் போடமுடியாதா....??? இதோ இது இன்னைக்கு என் மூணாவது பதுவு...!!!

கருணை இல்லா காங்கிரஸ் தலைமை.....!!!


சென்னை, ஆக.26,2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து தங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இம்மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து வேலூர் சிறைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இம்மூவரையும் தூக்கிலிடக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஏற்க மறுத்து, அண்மையில் தள்ளுபடி செய்து விட்டார்.  இதனால், அவர்கள் 3 பேரும் தூக்கில் இடப்படுவது உறுதியானது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஒருமித்த குரலில் இந்தத் தூக்கு தண்டனைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மூவரின் கருணை மனு நிராகரிப்பு குறித்த ஜனாதிபதியின் முடிவு பற்றிய தகவலை, தமிழக அரசு மூலம் வேலூர் மத்தியச் சிறை சிறைக்கு மத்திய உள்துறை வியாழக்கிழமை இரவு அனுப்பியுள்ளது.

இன்று காலை கிடைக்கப்பெற்ற அந்த அவசர கடிதத்தில் (ஸ்பீட் போஸ்ட்) மத்திய அரசின் கடிதத்தை இதனுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது என உறுதியான தகவல்கள் வெளியாகின.

தூக்கு தண்டனை விஷயத்தில் ஜனாதிபதியின் முடிவு தெரிவிக்கப்பட்ட 7-வது நாளில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மரபு.

உயர் நீதிமன்றத்தில் அணுக முடிவு...

மூவரையும் தூக்கிலிட உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று அணுகுவது என முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்களது கருணை மனுக்களை, முந்தைய இரண்டு ஜனாதிபதிகளும் நிராகரிக்காத நிலையில், தற்போது அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து வாதிடப்படவுள்ளது.

மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக, பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானில் ஆஜராவார் எனத் தெரிகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பான நடவடிக்கையை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து தங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

நன்றி : விகடன்.

நாடு போற போக்கை பாரு......!!!

எலேய் நாடு போற போக்கை பாருலேய் மக்கா...............!!??

லோக்பல் மசோதாவை நிறைவேற்ற லோக்சபாவில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் மன்மோகன் சிங்[டி] திருவாய் மலர்ந்தார்...காந்தியின் பேத்தி சோனியா பெர்மிஷன் குடுத்துட்டாயிங்க போல, எலேய் என்னலேய் பிலிம் காட்டுறீங்க....?? இதனால் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிடுகிறார்...!!! உங்க உயிர் எங்களுக்கு முக்கியம்னு மக்கள் சொல்றது காதில் கேட்க்குது...!!!

கே என் நேரு மீது மேலும் ஒரு வழக்கு பாஞ்சிருக்கு, நிலமோசடி வழக்கு அல்லாமல் இன்னும் "வேற" ஒரு கேஸ்'சுக்கு செட்டில் பண்ணிட்டார் போல.....!!!!

தங்கம் விலை கடுமையா சாஞ்சிடுச்சி.......பொதுமக்கள் சந்தோசம்......!!! அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ நானு.......!!!

சங்கராச்சார்யார் லேசுபட்ட ஆளு இல்லை போல, நீதிபதிகிட்டேயே பேரம் பேசுன ஆளுன்னா சும்மாவா...!!!

லாட்டரி சீட்டுக்கும், பறிமுதல்களுக்கும் என்னே ஒரு ஒற்றுமை....அடிங்கோ........!!!

தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு, மத்திய அரசு வழக்கம்போல் இலங்கை தமிழர் விவகாரத்தில் மழுப்பலான பதில்....யோவ் மத்திய அரசுதானே இலங்கை தமிழனை நாசமாக்குச்சி, இருந்தாலும் இப்பவாவது ஏதாவது அந்த மக்களுக்கு கிடைக்க போராடுங்க...!!

தமிழகம் - புதுச்சேரி மாநிலங்களில் இடியுடன் மழை பெய்யும்.....நான் மும்பையில் இருக்கும் போது எப்பிடிய்யா அங்கே இடியும் மழையும்...???

உடல் தகுதி பெற்றார் கம்பீர்......ஆமாய்யா நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ஹி ஹி.....!!!

ராஜ[நாய்]பக்ஷேவை போர் குற்றவாளியாக நிறுத்த ஐநா'வை வலியுறுத்த எதிர்கட்சிகள் வலியுறுத்தல்......அதுவும் உடனே கைது பண்ண சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...!!!

கன்யாகுமரியில் மார்ஷல் நேசமணி'க்கு மணி மண்டபம்.......வாழ்த்துக்கள்....!!!

எதிர்கட்சியினர் என்மீது தனிப்பட்ட விரோதத்தினால் குற்றம் சுமத்துகிறாகள் - மன்மோகன் சிங்[டி] ......ஏ எய்யா சாமி சோனியாதான் ஸ்கிரீனில் வருவதே கிடையாதே, அப்பிடியே வந்தாலும் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் என்னா சம்பந்தம்...???

அண்ணா ஹசாரே' பற்றி மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் குடு குடு'ன்னு ஓடிய காந்தி பரம்பரை ராகுல் காந்தி.......ஹா ஹா ஹா ஹா அந்த வீடியோவை [[நியூஸ்]] பார்த்து நான் சிரிச்ச சிரிப்பு இருக்கே வீடே அதிர்ந்து விட்டது ஹா ஹா ஹா ஹா ஹா......!!!

அன்பில் பெரியசாமி கைது கடலூர் சிறையில் அடைப்பு...........ஹி ஹி ஊறுகா ஊறுகா, அதான் அப்பவே சொன்னேனே ராவா அடிக்கிறவன் ஊறுகாயை ஹி ஹி....!

ஸ்பெக்ட்ரம் ஊழல் அடுத்த கைது யார்....??? பன்மோகன் சிங்[டி] அதிர்ச்சி....??!!! சோனியா காந்தி [[ @#$%@#$#@!@#$]] இத்தாலி பயணம்.......கைவிட்டுட்டாயிங்களே சிங்கிடியை......!!!

தமிழக கவர்னராக ஆந்திரா முன்னாள் முதல்வர் ரோசய்யா நியமிக்கப்பட்டார்........ஏ அக்கட சூடு ஏ இக்கட சூடு ஏ எக்கட சூடு ஏமண்டி ஆகாரம் ஷேசியா...??

எலேய் மக்களே கவனமா சூதானமா இருங்க என்ன.........வர்ட்டா................!!!

டிஸ்கி : தயவு செய்து நான் பஹ்ரைன் ஏர்போர்ட்டில் இறங்கும் போது பேனர், கொடி எல்லாம் கட்டி என்னை வரவேற்று ஏர்போர்ட்டை நாறடிக்க வேண்டாம்னு எனது தொண்டர்களையும், ஆதாரவாளர்களையும் கண்டிப்பாக கேட்டுக்கொள்கிறேன், முக்கியமாக ரவிகுமார், தினேஷ்குமார், குளச்சல் சதீஷ் இன்னும் நிறைய இருக்காயிங்க பேர் சொல்லமாட்டேன் ஹி ஹி.....

Wednesday, August 24, 2011

அந்தபிரிவின் நேரம் செத்துப்போகாதா.....!!!

இன்பமான நாட்களை கடந்து
கடல் கடக்கும் நாள் வந்தது
மனதில் பாரமா இல்லை
சந்தோசமா தெரியவில்லை......


நாளும் தோளிலும்
நெஞ்சிலும் தூங்கிய
செல்லமகள் என்னை
தேடும் அந்நேரம் என்மனம்.....


ஏங்கி தவிக்கும்
நேரம் நோக்கி மணித்துளிகள்
நகர்வதை பார்த்து
குளத்தில் கல்லாய் மனசு......


கனவுகள் நனவாகாமல் கலைந்து
மறுபடியும் கடல்
என்னை அழைக்கிறது
வா என்னை கடந்து செல் என.....


சிலகாலம்
என் உயிர் நண்பர்களே
என் உயிர் உற்றார்களே
உங்களை விட்டு பிரிகிறேன் அழுகையோடு.....


என்னதான் சந்தோசமாக
விடுமுறை கழிந்தாலும்
உறவைப்பிரிந்து செல்லும்
அந்தபிரிவின் நேரம்
செத்துப்போகாதா........!!!!

Tuesday, August 23, 2011

கனிமொழி என்ன சொல்றாங்கன்னா.......


ஸ்பெக்ட்ரம் ஊழல் : பிரதமர், சிதம்பரம் மீது கைகாட்டுகிறார் கனிமொழி...!!!

[[அப்போ ராசா அண்ணாச்சி....???]]


அ.தி.மு.க., அரசின் 100 நாள் ஆட்சி: கட்சிகள், மக்கள் மதிப்பீடு என்ன?

[[சமசீர் கல்வியில ஆப்பு]]


கலைஞர் "டிவி' சொத்து பறிமுதல் : அமலாக்கத்துறை தீவிரம்...!!

[[அப்பிடியே தாத்தாவையும் கஸ்டடியில எடுங்க, உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியே திமுக'வை அழிச்சிருவர் போல தெரியுது..!!!]]


தமிழ் புத்தாண்டு மாற்றம் : கருணாநிதி கண்டனம்...!!

[[அடங்கும்ய்யா ஏற்காட்டில் போயி ரெஸ்ட் எடுக்குற வழியை பாக்குறது]]


சென்னை:அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, தமிழ்த் திரையுலகத்தின் சார்பில், சென்னையில்  உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளவில்லை......!!!


[[ஐயோ  ஐயோ உடம்புல வெயில் பட்டுறபோகுது]]


துரோகக்காரர்கள் நாட்டை நடத்துவதா? : ஹசாரே ஆவேசம்... 

[[சோனியாவை அருமையா வாரிவிட்டார் சூப்பர்ப்]]


பாட்னா: லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு, அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என, பீகார் அரசு அறிவித்துள்ளது.....!!!

[[உடனே நாஞ்சில்மனோ பீஹார் கிளம்புறார் ஹி ஹி]]


[[சிங்[டி]க்கு வேற வழி....??!!! சோனியா கண்ணை மூடியாச்சு....]]


[[முடிவா தொடரா....?? எவனை நம்புனாலும் காங்கிரஸ்'காரனை நம்ப முடியாதுப்பா ஜாக்குரதை]]


டிஸ்கி : ஆயிரம் பதிவு போடுரவனுக்கெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு பதிவை நான் போட படும் பாடு இருக்கே........முடியல........

நன்றி : தினமலர்.

Sunday, August 21, 2011

முத்துக்கள் மூன்று தொடர்....

முத்துக்கள் மூன்று தொடர் எழுதுடா தம்பின்னு கோமதி அக்கா அன்பால் "மிரட்டுனதினால்," இன்னொரு முறை எழுதுறேன் சற்று வித்தியாசமாக..
.http://haasya-rasam.blogspot.com/2011/08/blog-post_17.html[[இது கோமதி அக்காள் லிங்க்]]


[[இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

என்னை எப்பொழுதும் வம்புக்கு இழுக்கும் இரண்டு தம்பிகள்
1-திவா
2-நாஞ்சில் மனோ
3-வம்பு பண்ணாத சகோதரி சித்ரா]]

------------------------------------------
1) விரும்பும் மூன்று விஷயங்கள்?

௧ : அன்பு
௨ : பாசம் 
௩ : நேசம் 

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?

௧ : கோபம்
௨ : வஞ்சகம் 
௩ : வெறுப்பு 

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

௧ : உயரம்
௨ : ஆழம்
௩ : ஏணிப்படி 

4) புரியாத மூன்று விஷயங்கள்?

௧ : பெண் மனசு
௨ : பெண்ணின் கோபம் 
௩ : பெண்ணின் அன்பு 

5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

௧ : லேப்டாப்
௨ : இப்போ புதுசா வாங்குன கண்ணாடி
௩ : செல்போன் மற்றும் அருவாக்கள், கத்திகள் ஹி ஹி..

6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?

௧ :பன்னிகுட்டி ராம்சாமி
௨ : தம்பி "கோமாளி" செல்வா [[ரயில் தண்டவாளத்துலையே ஸ்பீட் பிரேக் வைக்க சொல்றான்]]
௩ : சுப்ரமணியன் சுவாமி 

7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

௧ : பிளாக் எழுதுவது 
௨ : நெட் கனெக்சன் கிடைக்காமல் லேப்டாப்பை அலற வைத்தல்
௩ : லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

௧ : சுவிஸ்ல இருக்குற கருப்பு பணத்தை கொண்டு வந்து, "கருப்பு பணம் மாநிலம்" அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...
௨ : ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழம்..
௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...

9) செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

௧ : சீக்கிரம் ஊரில் செட்டில் ஆகவேண்டும் 
௨ : என்னால் முடிந்த அளவு உதவிகள் செய்வது
௩ : நன்றே செய் அதை இன்றே செய் 

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

௧ : அண்ணா ஹசாரே'வுக்கு காங்கிரஸ் அளிக்கும் சல்சாப்பு பதில்கள்..
௨ : பால்தாக்கரேயின் இன துவேஷம்..
௩ : ஜாதி...

11) கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்?

௧ : கார் ஓட்டுவது [[இன்னும் கனவாவே இருக்கு அப்பிடியே கார் ஓட்டினாலும் பக்கத்துல ஒரு ஆள் வேணும், ஆனால் லைசென்ஸ் பக்காவா வச்சிருக்கேன் ஹி ஹி...
௨ : எல்லார் மேலும் நான் அன்பு கூறனும், என் மீதும் எல்லாரும் அன்பு கூறனும்..
௩ : சினிமா டைரக்ஷன்...

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?

௧ : சில்லி சிக்கன்..
௨ : என் வீட்டம்மா செய்யும் நல்லி மட்டன்...
௩ : என் அம்மா செய்யும் மீன் கறி...

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

௧ : நிலா நீ வானம் காற்று மழை....
௨ : நீ ஒரு காதல் சங்கீதம்...
௩ : மேகம் கொட்டட்டும் மின்னல் வெட்டட்டும் ஆட்டம் உண்டு [[எனக்குள் ஒருவன்]]

14) பிடித்த மூன்று படங்கள்?

௧ : விருமாண்டி...
௨ : மைனா...
௩ : அன்பே சிவம்...

15)இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?)

௧ : நான் காதலித்து மணந்த என் மனைவி...
௨ : பணம் கண்டிப்பா வேணும்..
௩ : பிரயாணங்கள்.....


டிஸ்கி : கிண்டல் பண்ணி குதறாம எழுதணும்னா என்னா கஷ்டமா இருக்குடா சாமீ......


டிஸ்கி : கோமதி அக்காளுக்காக என் பாணியை மாத்தி எழுதி இருக்கேம்டே மக்கா....


ஓ இதை தொடர்ந்து எழுத ஆள் வேணுமே......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......யாரை மாட்டிவிடலாம்....????..........


ஆங்.......விக்கி உலகம்...
ஆங்......வானதி...
ஆங்.......திருமதி சங்கரலிங்கம் [[உணவு உலகம்]]

Saturday, August 20, 2011

கொலைவெறி பதிவர்கள்.....!!!

கையும் ஓடலை காலும் ஓடலை, ஏன் நெட் கனெக்சன் என்னை படுத்தி எடுக்குதுன்னு புரியலை, கமெண்ட் போடலைன்னு, சிபி கொலை மிரட்டல் அனுப்பி இருக்கான், அம்மா"கிட்டே புகார் குடுத்து குண்டாஸ்ல போடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்...

அண்ணனுக்கு இன்னைக்கு பிறந்தநாள், அண்ணே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே...அண்ணன் பிறந்த வருஷம் 1985 என பதிஞ்சி வச்சிருக்கான் ஹி ஹி [[போட்டு குடுப்போம்ல]]

அடுத்து விக்கி தாதா ஏகே 47 கொண்டு வந்து வச்சிகிட்டு குறி பார்த்துட்டு இருக்கான்...!!!


ஆபீசர் சாப்பாடு போட்டே என்னை பெல்ட்டால அடிக்க பெல்ட்டை உருவி வச்சிட்டு இருக்காராம்...!!!


பன்னிகுட்டி எனக்கு சூனியம் வச்சிட்டதா பேசிக்குராயிங்க.....


தமிழ்வாசி'கிட்டே இருந்து இன்னக்கி தப்பிச்சிட்டேன், காரணம் கொஞ்சம் நெட் ஒப்பன் ஆனதும் கமெண்ட் போட்டு தப்பிச்சிட்டேன்...


கருண் வேற எனக்கு ஸ்பெஷல் டியூஷன் எடுக்கணும்னு மிரட்டுராராம், உளவுத்துறை தகவல்......


கவிதைவீதி கவிதையால் என்னை அறம் பாடி அழிக்க போறாராம்.....


சித்ரா மேடம் சிரிச்சி சிரிச்சே என்ன கொலை செய்யப்போறாராம்...


நிரூபன் வேற, பதிவர்களை போட்டு தள்ளுவது எப்படி, அவர்களை கைமா பண்ணி தாளிப்பது எப்பிடின்னு என்னை வலை வீசி தேடுகிறாராம்...


வானதி, எங்க அங்கிளை காணோம்னு பஹ்ரைன் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்துட்டாயிங்களாம்.....


இம்சை அரசன் மட்டும் ரொம்ப சந்தோசமா இருக்கானாம், ம்ஹும் தொல்லை ஒழிஞ்சதுப்பான்னு [[எலேய் எப்பிடியாவது புகுந்து வந்துருவேம்லெய் ஹி ஹி]]


நாசமா போன சிரிப்பு போலீஸ் ரமேஷ், மூத்துரசந்துக்குள்ளே போயி ரகசியமா சிரிப்பதாக அடுத்த தகவல் வந்துருக்கு....


கந்தசாமி, படங்களை உல்டா உல்டாவா போட்டு தாக்க பிளான் பண்ணிட்டு இருக்காராம்.....


மெட்ராஸ் பவன் "சிவகுமார்" என் பேட்டியை கேட்டு வாங்கிட்டு, அதை காட்டிட்டு என்னை மிரட்டுறார்....


சிவா, உனக்குன்னு தனி பதிவு போட்டு நசுக்கிருவேன்னு சொல்றார்.......


சென்னை பித்தன் தல வேற மரியாதையா வந்து சேர் ராசா'ன்னு அன்பால் [[இல்லை]] மிரட்டுறார்...

இன்னும் நிறைய பேர், குண்டாந்தடி, உருட்டு கட்டை, வேல் கம்பு, அருவா, அழுகுன முட்டை, கூமுட்டை, அழுகுன தக்காளி இன்னும் பிற அயிட்டங்களோடு ஊர் ஊரா என்னை கொலை வெறியோட தேடிட்டு இருக்காயிங்களாம்.....

அடிக்குமுன் நான் சொல்றதையும் கேட்டுக்கோங்க ஏன்னா, நேர்மை, கருமை, எருமைன்னு ஒன்னு இருக்கா இல்லையா....??? [[ஹி ஹி]] நெட் கனெக்சன் சரியில்லை, அஞ்சி மினிட் வருது அப்புறம் ஒரு மணிநேரம் கட்டாகிருது, கேட்டா மழை நேரம் அப்பிடிதான் இருக்கும்னு சொல்றாயிங்க.....!!!

முப்பத்து ஏழு வயசுலேயே எல்லாம் செக் பண்ணனும்னு எல்லார் வேண்டுகோளையும் ஏற்று, சுகர் இருக்கான்னு செக் பண்ண, பிளட் மற்றும் இன்னபிற'ங்களும் கொடுத்துட்டு வந்துருக்கேன் ஹி ஹி......!!!

டிஸ்கி : கொஞ்சம் பொறுத்துக்குங்க, என் அதிரடி வேகம் இன்னும் கூடி உங்களை உற்சாகப்படுத்தும்.....!!!

ஸ்பெஷல் டிஸ்கி : பார்வையற்ற மாற்று திறனாளிகளின், வெள்ளை குச்சி பற்றி நான் அறியாத விஷயத்தை பற்றி நம்ம ரத்னவேல் அய்யா அவர்கள் தளத்தில் பகிர்ந்துள்ளார்கள், யாவரும் அறியவேண்டிய தகவல் அது...!!! கீழே லிங்க் குடுத்துருக்கேன்.

http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_20.html


Tuesday, August 16, 2011

சில வேதனையான,சுவாரஸ்யமான ஆச்சர்யங்கள்....!!!

சில வேதனையான,சுவாரஸ்யமான ஆச்சர்யங்கள்....!!!

௧ : மும்பையின் ரோடு....!!!

௨ : மு க நடத்திய செம்மொழி மாநாடு...!!!

௩ : மும்பையின் மழை....!!!

௪ : மும்பையின் டிரைன்னேஜ்கள், எவ்வளவு வேகமாக மழை பெய்தாலும் உடனே வடிந்து விடுகிறது...!!!

௫ : அண்ணா ஹசாரேயும், காங்கிரசும்.....!!!

௬ : ஜெயலலிதாவும், காந்தி அழகிரியும் [[உபயம் சிபி பிளாக்]]

௭ : அதிமுக'வும், திமுக புள்ளிகளின் கைதும்.....!!!

௮ : ராசாவும், கனிமொழியும், திகார் ஜெயிலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும்.....!!!

௯ : காங்கிரசும், சுவிஸ் வங்கியும்.....!!![[இவனுக பணம்தான் எம்பது சதவீதம் இருக்கு அங்கே]]

௰ : டீன் ஏஜ் காதல்....!!!

௧௧ : கலைஞரும் திரைக்கதையும்.....!!!

௧௨ : சிபி'யும் ஃபிகர் பதிவும் [[ஹி ஹி]]....!!!

௧௩ : பொடுகும், தலையும்....!!!?

௧௪ : வாஜ்பாயும், பிஜேபி'யும்...!!!

௧௫ : சுஷ்மா சுவராசும், அவர் நான்ஸ்டாப் பேச்சும்....!!!

௧௬ : ராமராஜனும், அவர் சட்டை பேண்டும்....!!!

௧௭ : எம்ஜிஆரும் அவர் தொப்பியும்.....!!!

௧௮ : பன்னிகுட்டி ராமசாமியின் பிளாக்கின் உண்மையான பெயர், "பன்னும் ரொட்டியும்" அதுதான் திரிஞ்சி பன்னிகுட்டி ஆகிருச்சி ஹி ஹி....!!!

௧௯ : நடிகர் ரித்தீஷின் நடிப்பும், ஃபைட்டும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!

௨௦ : பாமாக'வின் "அபார வளர்ச்சி" [[ப்பூப்ப்]]......!!!

டிஸ்கி : ஏ யப்பா.......படம் போட்டா தாவு தீர்ந்து போயிருது, அதான் படங்கள் போடலை.....

Sunday, August 14, 2011

சுதந்திர நாடெனும் போதினிலே......!!!

சுதந்திர இந்தியாவில்......

ஒரு லட்சத்தி எழுபத்தாறு லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழல் செய்துவிட்டு ஹாயாக ஜெயிலில் நாளை கழிக்கும் குடும்பம்....!!! # சி பி ஐ விசாரணை நாசமா போயாச்சு.....!!!???


பத்மநாத சுவாமி கோவிலில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் தங்கம்......!!! அப்பிடின்னு முதல்ல சொன்னவிங்க, இப்போ ஒரு லட்சத்தி அம்பதாயிரம் கோடி தங்கம்னு சொல்றாயிங்க # அப்போ மீதி தங்கம் போன இடம் எங்கே.....???


காமென்வெல்த் ஊழல் செய்தவன் விரைவில் விடுதலை, மறதி நோய் பிடிச்சிருக்காம் # பொண்டாட்டியாவது நினைவிருக்குமா...???


யோகா மாஸ்டர் ராம்தேவ் போராட்டம்னு ஓங்கி அடிச்சார், அவருக்கு காங்கிரஸ்காரன் வச்ச ஆப்புல எஸ்கேப் # பணம் பத்துமில்லை, ஓடவும் வைக்கும்.....!!!!??


தமிழகத்தையே மொத்தமா விலைக்கு வாங்கிய குடும்பமும் கட்சியும் படும் அவஸ்தையும், பாடும் இருக்கே.....!!!?? # ராவா குடிக்கிரவன் ஊறுகாயை நக்கியே ஆகணும் [[ஹி ஹி]]


டாஸ்மாக் கடையும் இவன்தான் திறந்து வச்சிருக்கான், கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டு போலீஸ்காரன் ஊதுங்குறான் # கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா...???!!!


மின்வெட்டு மின்வெட்டு மின்வெட்டு # போயஸ்கார்டனில், கோபாலபுரத்தில், சி ஐ டி காலனியிலும் மின்வெட்டு உண்டா..?? டவுட்டு....!!!


தலையில ஹெல்மெட் இல்லாம ஸ்டைலா போகமுடியலை, போலீஸ்காரன் அம்பது ரூவா வாங்கிட்டு இருந்தவன் இப்போ நூறு ரூவா தான்னு வெக்கமே இல்லாமல் கேக்குறான் # யோவ் சாவுறது நான்தானே, நீயான்னு சண்டை நடக்குது....!!!


பிள்ளைங்க சுமக்கும் பாடபுஸ்தகங்களை, புஸ்தகமூட்டைன்னு சொல்லுங்கன்னு பிள்ளைங்க சொல்லுது # பாவம் பிஞ்சிகள்....!!!

பிளாக்ல தகிரியமா எழுதுனா மைனஸ் ஓட்டு # நல்லதுதானே எழுதுறோம்...!!!

டிஸ்கி : இப்பிடி ஆயிரத்தேழு கேள்விக்கு மேலே இருக்கு சொன்னா எவன் கேக்குறான்........

டிஸ்கி : பாத்தீங்களா இதுதான் நம்ம சுதந்திர நாட்டின் நிலை.....!!!

"ம்ஹும் ஊழல் நிறைந்த நாட்டில், சுதந்திரம் கண்ணீர் வடிக்கிறது என்பதே உண்மை"

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!