Wednesday, January 30, 2013

பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே...!

நான்கைந்து அக்கா தங்கச்சிகளுடன் ஒற்றை ஆணாக பிறந்தவனும், நான்கைந்து அக்கா தங்கச்சி இருக்கும் வீட்டில் கல்யாணம் செஞ்சவனும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் செவ்வாய் "கெரகம்"மும் இல்லை...!

உதாரணமாக நிறைய சம்பவங்கள் இருந்தாலும், இரண்டு சம்பவங்கள் மட்டும் சொல்றேன் இது உண்மையில் நடந்த சம்பவங்கள்.

மூன்று அக்காள் ஒரு தங்கையுடன் பிறந்த என் நண்பன் ஜோசப், வெளிநாடு வந்து வேலை செய்து ஓவர்டைம் பார்த்து தூங்காமல் கொள்ளாமல் வேலை செய்து மூன்று அக்காள்மாரை கல்யாணம் செய்து கொடுத்து கரை ஏற்றினான்.
நான்காவதாக இவனுக்கு பெண் தேடினார்கள், இவன் வெளிநாட்டில் இருந்தபடியால் பெண் பார்க்கப் போனது எல்லாமே இவனுடைய அக்காள் தங்கச்சிகள், ஒரு அக்காளுக்கு பெண்ணைப் பிடித்தால் இன்னொருத்திக்கு பிடிக்கவில்லை இப்படியாக தொடர்ந்து மூன்று வருஷம் [!] பெண் தேடியும் கிடைக்காமல் போனது.

ஒருமுறை ஊருக்குப் போனவன் இவனே செலக்ட் செய்து ஒரு பெண்ணை கல்யாணம் கட்டி ஊரில் விட்டுவிட்டு வந்தான், வந்தவனுக்கு இங்கே நிம்மதி இல்லை ஒரே புகார் பட்டியல் அக்கா தங்கைகளிடம் இருந்து வந்த வண்ணமாக இருந்தது, போன் பேசி பேசி இவன் காசு அதிலேயே கரைந்து போனது.

வேறு வழியே இல்லாமல் கடன் வாங்கி மனைவியை தன்னோடு அழைத்து கொண்டவன், பொண்டாட்டி பேச்சைக்கேட்டு எங்களை மறந்துவிட்டான் என்ற புகாரோடு அக்காக்கள் பேச்சு வார்த்தையை கட் பண்ணிவிட்டார்கள்.

மனம் ஒடிந்தவன் ஓவராக குடிக்க ஆரம்பித்தான், இவளுக  டென்ஷனில் இன்னும் இன்னும் குடித்து வேலை ஸ்தலத்தில் பேரை கெடுத்ததும் அல்லாமல் மனைவிக்கும் பாரமாகிப்போனான். பொருத்து பொருத்து இருந்த மனைவிக்கு மன நலம் பாதிக்கப்பட்டு குழந்தையை பராமரிக்க கூட முடியாமல் திணறிப்போனான்.

ஒருவழியாக இனி வெளிநாடு வேண்டாமென்று ஊர் போனவன், அக்காக்களின் வசைபாடளாலும் மனைவியின் சுகமின்மையாலும் கண்காணாத இடத்திற்கு மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொண்டு ஓடியே போய்விட்டான் பாவம்...!

ஐந்தாறு வருஷம் கழித்து லீவுக்குப் போன இன்னொரு நண்பனிடம் இருந்து எனக்கு போன் வந்தது, "மனோஜ்  நம்ம ஜோசப் கோட்டையத்துல ஒரு சாயாக்கடை நடத்திட்டு இருக்கான் என்னைப்பார்த்து கண்ணீர் விட்டு அழுதே விட்டான், எப்படி இருந்தவன் இப்படி ஆகிட்டானேன்னு எனக்கும் அழுகையா வந்துருச்சு மனோஜ் " என்றான்.

எனக்கு கண்ணில் கண்ணீர் முட்டியது...வெளிநாட்டில் இருந்து அக்கா தங்கைகளுக்கு அவன் வாங்கி அனுப்பிய பொருட்கள், கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்த சாமான்கள், மச்சான்மாருக்கு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்த நண்பனுக்கு சகோதரிகள் கொடுத்தது "அநாதை வாழ்க்கை....!!!"

இனி நான்கைந்து அக்காள் தங்கச்சிகள் இருக்கும் வீட்டில் பெண் எடுத்து கல்யாணம் செய்தவனின் கொடுமைய சொல்றேன்....

கல்யாணத்துக்கு முந்திவரை செம ஜாலியாக எங்களோடு வேலை செய்து கொண்டிருந்த நண்பன், கல்யாணம் முடிந்து திரும்பி வரும்போது கொலைகளத்தில் இருந்து வந்தவன் போல திகிலாக இருந்தான்.

ஒற்றில் இருந்து மிஸ்கால் வந்தால் உடனே போனை எடுத்துகொண்டு வெளியே ஓடிவிடுவான், என்னாச்சுன்னா கல்யாணம் கட்டினவுடனே தனிக்குடித்தனம் போக மனைவியின் அக்காள் தங்கச்சிகள் உசுப்பேத்த...தாயை பிரிந்து தனிக்குடித்தனம் வைத்தான் நண்பன்.

ஆனால் இந்த தனிக்குடித்தனம் எதுக்கு உதவியது தெரியுமா மனைவியின் அக்காக்கள் தங்கச்சிகள், மற்றும் குழந்தைகள் தங்கும் சுற்றுலா தளமாகிற்று, அவன் அம்மாவுக்கு அங்கே போகவே முடியாதபடி செய்துவிட்டார்கள்.

உன் மாப்பிளை வெளிநாட்டில்தானே இருக்கிறான் அதை வாங்கிக்கேள் இதை வாங்கிக்கேள் என்று மனைவியை உசுப்பேத்தி உசுப்பேத்தி சகோதரிகள் நன்றாக இவன் பணத்தை தின்று உறங்கி சுகிக்க, இவனுக்கு கடன் ஏறி கண்ணுக்குள் காலைவிட்டு ஆட்டியது.

கடன் கொடுத்தவர்கள் மிரட்டியும் கேவலமும் படுத்த தொடங்கியதும் நண்பன் மனநலம் பாதிக்கப்பட்டவனாக கம்பெனி ஊருக்கு திருப்பி அனுப்பியது...

இவனுக்கு இப்படி ஆனதும் மனைவியின் சகோதரிகள் யாவரும் அவரவர் காரியத்தை பார்த்துக் கொள்ள ஓடியேப் போனார்கள், தனிக்குடித்தனம் போன வீடு விற்கப்பட்டது, மறுபடியும் நண்பனின் அம்மா வீட்டிலேயே போயி தஞ்சம் ஆனார்கள்...

மனைவிக்கு அவனின் நிலை புரிந்ததா இல்லையா என்றே தெரியவில்லை, அவளும் அனாதை ஆனாள் அவள் வீட்டாரிடம் [[சகோதரிகளிடம்]] இருந்தும்...

இனி நான் முதல்ல சொல்லி இருக்கும் பாராவை ஒருமுறை கூட படித்துப்பாருங்கள்.

இதைப்பற்றி கே எஸ் ரவிக்குமார் அண்ணன் அழகான ஒரு படம் எடுத்து இருந்தார், சரவணன் ஹீரோவாக நடித்து வெளி வந்தப்படம் "பொண்டாட்டி ராஜ்ஜியம்" முடிந்தால் பாருங்கள்.

Tuesday, January 29, 2013

அடேங்கப்பா வேகம் பிடிக்கும் வலைத்தளம்..!


ஆரம்ப நாட்களில், சும்மா விளையாட்டாக ஆரம்பித்த பேஸ்புக், அதில் காமெடியை மைய்யமாக கொண்டு விளையாடி என்னை பழக்குவித்த தம்பிகள் "கோமாளி" செல்வா, பிரவீன், மதுரை பொண்ணு, தங்கச்சி கல்பனா, நிவேதா,  சத்யசீலன்...மற்றும் பலர்...
பிளாக் மட்டுமே வாசித்துக்கொண்டு இருந்த என்னை நாஞ்சில் மனோ என்று பெயரிட்டு பிளாக் தொடங்குமாறு சொன்ன தம்பி "நாஞ்சில் எக்ஸ்பிரஸ்"பிரதாப், பிளாக் ஒப்பன் செய்தபின் அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற ஐடியாக்கள்  தந்து பின்பலமாக ஆதரவாக இருந்த தம்பி செல்வா மற்றும் பிரவீன் மதுரை பொண்ணு, தங்கச்சி கல்பனா...!

பல பிரபல பிளாக்கர்கள் தலை[பிச்சி] தெறிக்க ஓடிய பின்னும்,இன்றைக்கும் ஆலமரம்போல தழைத்து ஓங்கி நிற்கும் "நாஞ்சில்மனோ" வலைத்தளம் பல பிரபலங்கள் வாசித்து ரிலாக்ஸ் ஆகும் தளமாக மாறியதில் எங்க யாவருக்கும் பெருமையும், வாசிக்கும் உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றிகள் பல....!

பேஸ்புக்கிலும் வலைத்தளத்திலும் இம்புட்டு பெரிய பெரிய தலைகள் எல்லாம் பர்சனலாக சாட்டிங்கில் வருவதைப் பார்த்தால் ஆச்சர்யமாகவே இருக்கிறது...!

இதற்க்கு உதாரணம், நடிகை ஷாலினி அஜித் அவர்களின் பேஸ்புக்கில் அவர் போட்டோவின் கீழே ஒரு கமெண்ட்ஸ் போட்டேன்..."என்ன மேடம் எப்ப பார்த்தாலும் போட்டோவா போட்டுட்டு இருக்கீங்களே" என்று...நான் சற்றும் எதிபார்க்கா வண்ணம் சாட்டில் வந்த ஷாலினி, "நீங்க மட்டும் பேஸ்புக்லையே கிடந்து  படுத்து  உறங்கலாமோ...?" என்று கிண்டல் பண்ணி சற்று சாட்டிவிட்டு போனது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது, இதைப்போல பல தலைகள் மின்னல் போல சாட்டிங்கில் வந்து போவதுண்டு...!

எது எழுதினாலும் அது காமெடியாக இருந்தாலும் அதில் ஒரு பிரயோசனம் உள்ள மேட்டர் இருக்கும்படி இனி கவனித்துக் கொள்கிறேன் நண்பர்களே...
மகா சபையில், கர்ணனை கேவலப்படுத்தும் நோக்கோடு  நீ சத்ரியனா..? என்ற கேள்விக்கு கர்ணனிடத்தில் பதிலில்லை ஆனால் அதே மகா சபையில் தன் நண்பனை விட்டுக்கொடுக்காமல் துரியோதனன் அவனை அரசன் ஆக்கி மகிழ்ந்து எதிரிகளின் வாயடைத்தான், அதற்காகவே தவறு என்று தெரிந்தும் கவுரவர்களுக்காக தன் உயிர் தந்து செஞ்சோற்று கடன் தீர்த்தான் கர்ணன்...! அதைப்போல என்னை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் [[நான் தவறே செய்திருந்தாலும்]] நட்புடன் என்னோடு இருக்கும் நண்பர்களைப் பெற்றதும் இங்கேதான்...!

உங்கள் அனைவர் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பணம் செய்கிறேன் நன்றி...!

Monday, January 28, 2013

ஹேங்க் ஓவர்ல இருந்தால் சாவிக்கும் ஸ்டெப்னிக்கும் வித்தியாசம் தெரியாதா...?

 டியூட்டில எப்பவும் என் முதுகை சொறிஞ்சிட்டே இருந்தவனை என்னடா பண்ணன்னு யோசிச்சு கடைசியா கண்டுபிடிச்சேன்ய்யா சூப்பரான ஒரு வழி, கொய்யால இப்பல்லாம் எனக்கு இண்டர்காம்ல கூட போன் பண்ணுறது இல்லே அவன்....!
அப்பிடி என்னய்யா பண்ணுனேன்னு கேக்குறீங்களா...? சிம்பிள்...புதுசா ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் ஒப்பன் பண்ணி அவன் பாஷையையும், எப்பிடி டைப்பும் ஆபரேட்டும் பண்ணுறதுன்னு சொல்லிக்குடுத்தேன் அம்புட்டுதான் பயபிள்ளை இப்போ படுபயங்கர பிசியாகிட்டான், எனக்கும் தொந்தரவு நீங்கிடுச்சு.
--------------------------------------------------------------------------

என் மாமன் பெயர் லிங்கம், மச்சான் பெயர் சுயம்பு லிங்கம், அண்ணனின் நண்பன் பெயர் லிங்கம் [[கன்னியாகுமரி லிங்கமேதான்]] ரெண்டுபேருமே இப்போ உயிருடன் இல்லை, சொக்காரன் பெயர் பரமார்த்தலிங்கம், குடும்ப நண்பர் பெயர் லிங்க[ம்]துரை, கிளாஸ்மேட் மாய லிங்கம் இன்னொருத்தன் ராமலிங்கம், நண்பர் ஆபிசரின் பெயர் சங்கரலிங்கம்...

இன்னும் தேடுனா நிறைய லிங்கங்கள் கிடைக்கக்கூடும், பாருங்கய்யா நம்மள சுத்தி எத்தனை லிங்கங்கள் இருக்காயிங்கன்னு...!
----------------------------------------------------------------------------

காலை மணி ஒன்பது, நண்பனுடன் ஒரு உரையாடல்...

"ஹலோ நேற்று ராத்திரி சரக்கடிச்சுட்டு கார் சாவியை எங்கேடா வச்சே..?"

"கார்லதான் இருக்கு"

"டேய் மக்கா, கார் கீ எங்கேடான்னு கேட்டேன்"

"காருக்கு உள்ளேதான் இருக்கு"

"அடேய் கார் சாவி கார் சாவி கார் சாவி..."

"இரு இரு இப்போ ஏன் இப்பிடி நாய் மாதிரி கத்துறே...?"

"டேய் கார் கம்பெனிகாரன் காரை கேக்குறான்டா கார் கீ எங்கே வச்சிருக்கே சொல்லிதொலை"

"அது காருக்கு உள்ளேதாம்டா இருக்கு என் சிப்ஸு"

"எலேய் அங்கே வந்தேம்னா கொன்னேப்புடுவேன், கார் கீ கீ கீ கீ எங்கேடா விளக்கெண்ணெய்..?"

"என்ன...நான்தான் நேத்தடிச்ச ஹேங்க் ஓவர்ல இருக்கேம்னா உனக்கு என்னாச்சு காலையிலே தண்ணி போட்டுட்டியா..?"

"ப்த்விவ் ஹ்விவ்ட்க்பி லெப்ஜ்ஹ்ர்ஹ்கெ ஒக்ஜ்த் ப்ப்ப்ப்ஹ்ப்..."

"ஸ்டாப் ஸ்டாப் ஏன்டா இப்பிடி திட்டுறே...? இம்புட்டு கெட்ட வார்த்தைகளை உனக்கு சொல்லித்தந்தது "அது"தானே, இரு அதுக்கு இருக்கு இன்னைக்கு"

"அண்ணே.... சார்..... சேட்டா... உஸ்தாத்...வண்டி சாவி எங்கே வண்டியை தூக்கவேண்டும் ச்சே ச்சீ எடுக்கவேண்டும் ஆகையால் சாவியை எங்கே வைத்துள்ளாய் என்று சொல்லவும்"

"ஒ சாவியா..? அதை முதல்லையே கேட்டு தொலச்சிருக்க வேண்டியதுதானே...? நானும் "ஸ்டெபினி"யை கேக்குறியோன்னு நினச்சிட்டேன், சாவி ரிசப்ஷனில் இருக்கு போயி எடுத்துக்க"

"ஆஷெ யெய்ட்க்யூ ஜ்ஜ்ஹ்த் ஹுஜ்ப்கே க்க்ட்ஜுக்ப்..."

"ஓஹோ மறுபடியும் நீளமான கெட்ட  வார்த்தையா தேங்க்யூ டா செல்லம்"

#கொய்யால சரக்கடிச்சிகிட்டு இருக்குறவன் கூட தெறமையா பேசி சமாளிச்சிரலாம் போல, ஆனால் காலையில ஹேங்க் ஓவரோடு டியூட்டியில் இருப்பவனிடம் பேசினால் சாவிக்கும் கார் ஸ்டெப்னிக்கும் வித்தியாசம் தெரியாமல் கொலையா கொல்லுறானுங்க...!

Sunday, January 27, 2013

இதயத்திற்கு பிடித்ததை உடனே செய்துவிடு...!

பசிக்குதே வெளியே [[எங்க ஹோட்டல் சாப்பாடு எனக்கு பிடிக்காது]] போயி "திக்கா" [[அரபிகள் விரும்பி சாப்பிடும் சாப்பாடு]] வாங்கிட்டு வாய்யான்னு ஒரு அரபியை அனுப்பினேன், அவனும் வாங்கிவந்தான் அந்த சாப்பாடுகூட பச்சை வெங்காயத்தை வைத்து சாப்பிட்டால்தான் ருசியாக இருக்கும், ஆனால் வாய் நாறும், எனவே டியூட்டி நேரத்தில் வெங்காயம் சாப்பிடுவது இல்லை.
நான் வெங்காயம் சாப்பிடாமல் வைத்திருப்பதைக் கண்ட அந்த அரபி நண்பன் என்னிடம் அன்பாக கடிந்து கொண்டான்.

"அறிவு கெட்டவனே அறிவு இருக்காடா உனக்கு, உங்க நாட்டுக்காரன் எதுக்கு சீக்கிரம் சீக்கிரமா ஹார்ட் அட்டாக் வந்து சாவுரான்னு இப்பதாண்டா தெரியுது...?"

"யோவ் இதுக்கும் சாக்காலத்துக்கும் என்னய்யா சம்பந்தம்" என்றேன் 

"டேய் [[ஹபீபி]] வெங்காயம் நன்றாக சாப்பிடுவது இதயத்திற்கு மிகவும் நல்லது என்றுதான் எங்கள் மூதாதையர்கள் எங்களை சாப்பாட்டில் பச்சை இலைகளையும் அதோடு வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிட சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா...?"

"ஓஹோ"

"எங்க நாட்டுக்காரனையும் பாரு, உங்க நாட்டுக்காரனையும் நல்லாபாரு எவன் அற்பாயுசுல சாகுறான்னு"கேட்டான் பாருங்க...!!

ஆச்சர்யத்தில் வாயடைத்துப்போனேன்.

அதே அரபி சொன்ன இன்னொன்னு...

வெள்ளைப்பூண்டை வறுத்து தின்றால் அதுவும் இதயத்திற்கு மிகவும் நல்லதாம், மிகவும் ஆரோக்கியமாக இருக்குமாம் இதயம்...உடலுக்கு மிகவும் சுறுசுறுப்பு கொடுக்குமாம்...!

நாம் இவைகளை எல்லாம் புஸ்தகங்களில் வாசிப்பதோடு சரி, நடைமுறைப்படுத்துவதில்லை என்ற தோணல் ஆச்சர்யத்தைதான் உண்டாக்கியது...!

Thursday, January 24, 2013

எங்கள் அண்ணன் கமலுக்கு ஆதரவான அவசர பதிவு இது...!


கமலஹாசனுக்கு என் முழுமனதான ஆதரவை நாஞ்சில்மனோ வலைத்தளம் சார்பாக சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்...
என்னதான் அவரை நாங்கள் கிண்டல் செய்தாலும் அவரை நாங்கள் மிகவும் ரசிப்பவர்கள், நேசிப்பவர்கள் இது எங்கள் நட்பு வட்டங்களுக்கு நன்றாகவேத் தெரியும் அவர் சினிமா மீது காட்டும் ஆர்வம கண்டு மனம் சிலாகிப்பவர்கள் நாங்கள்.....

இடையில மார்கெட் பிடிக்க அவர் சில கொல்மால்கள் செய்வதுண்டு, இது எல்லாருமே செய்வதுதான் இருந்தாலும்.....இந்தமுறை அந்த மார்க்கெட்டுக்கு வரவேர்ப்பில்லாமல் போனது என்னமோ உண்மை, ஆனாலும்...

இந்த தடை....[[திட்டமிட்ட சில நயவஞ்சகர்களின் செயல்கள் என்பது கமலின் வாய்ஸ் ஸ்லாங்கில் நல்லாவே புரிகிறது தெரிகிறது]]

நாஞ்சில்மனோ வலைத்தளம் இதை "சகிக்காமல்" தன் கண்டனத்தை பதிவு செய்கிறது...

கமலஹாசனை குறி வைக்கும் பதர்களுக்கு, உலகம் உங்களுக்கு தெரியாதடா மானிடா நீ என்னப்படித்தாலும் என்றே சொல்லத் தோன்றுகிறது....

ஒரே ஒரு போட்டோ ஆதாரம் போட்டேன்னு வச்சிக்கோங்க உங்க டண்டனக்கா டிண்டனக்கா ஆகிரும்....

கலையை ரசிப்போம் உண்மையை பரிஷ்கரிப்போம் இதுதாண்டா மனுஷன் இல்லைன்னா நீ ப்பூப்பூப்பூப்ப்...

போங்கடா கொய்யால.....

எங்க அண்ணன் கமலுக்கு இது ஒன்னும் புதுசு இல்லை போ...போ...போ...போ....போய்யா....உன்னைப்போல பலபேரை பார்த்தவன் அவர்...

இன்னுமொன்னு ராசா....கமல் ரஜினியல்ல நியாபகம் இருக்கட்டும்...!

உண்மையை சொல்லனும்னா நெஞ்சில மாஞ்சா வேணும்ய்யா...!

எங்க அண்ணன் எல்லா மதத்தையும் மதிப்பவன்ய்யா எத்தனையோ முறை சொல்லி நொந்து போயிட்டார் போங்கடா....!

மோதுறவன் தைரியமா வந்து மோது....


Sunday, January 20, 2013

சுற்றுலா போகிறவர்களுக்கான ஆலோசனையில் ஒன்று...!

லேட்டாகிடுச்சே என்று இரவு டியூட்டிக்கு வேகமாக வந்த நான் ரிஷப்சனில் ஒரு குடும்பம் டியூட்டி பெண்ணுடன் கலவரமான தர்க்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தேன், என்னைப்பார்த்ததும் அந்த குடும்பத் தலைவனுக்கும் தலைவிக்கும் முகத்தில் பலமான நம்பிக்கை மின்னல் கீற்று...
என்ன சம்பவம்...?

கேரளா தம்பதி, மூன்று குழந்தைகள் ஒரு குழந்தைக்கு பனிரெண்டு வயது இன்னொரு குழந்தைக்கு பத்து வயது இன்னொன்றுக்கு எட்டு வயது, இவர்கள் ஓமனில் இருந்து சுற்றுலாவிற்காக ஆன்லைனில் புக் செய்துவிட்டு வந்தவர்கள், ஆனால் பிள்ளைகள் இருப்பதாக குறிப்பிடவில்லை, ரெண்டு அடல்ட் என்றே குறிப்பிட்டு அதன் பணத்தை செலுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் வந்ததோ ஐந்துபேர், அவர்கள் செலுத்திய பணம் இரண்டுபேர் தங்குவதற்க்கே, எனவேதான் பிலிப்பைனி ரிசப்சனிஸ்ட் அவர்களை அனுமதி மறுத்துக் கொண்டிருந்தாள்.
என்னிடம் பஞ்சாயத்து வந்ததும் நானும் அவர்களிடம் விளக்கி சொன்னேன் ஆனாலும் அவர்கள், இல்லை நாங்கள் ஒரு ரூமில் அட்ஜஸ் செய்து கொள்கிறோம் எங்களுக்கு நோ பிராப்ளம் என்றார்கள், "இல்லை சார், எங்கள் ஹோட்டலுக்கு என்று சில ரூல்ஸ்கள் உண்டு, நீங்கள் எத்தனைபேர் என்று கண்டிப்பாக குறிப்பிட்டு [[வயது உட்பட]] அதன் பணத்தை செலுத்தினால் நாங்கள் அதற்க்கான அறை'யை செலக்ட் செய்து வைப்போம்.

நீங்கள் குறிப்பிட்டது இரண்டுபேர், ஸோ அதற்கான அறை'யை மட்டுமே எங்களால் கொடுக்கமுடியும், ஆனால் நீங்கள் வந்திருப்பதோ ஐந்துபேர், எனவே இரண்டுபேர் தங்கும் அறையில் ஐந்துபேர் தங்கவைக்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை, வேண்டுமானால் இன்னொரு ரூம் உங்களுக்கு தருகிறேன் அதற்க்கான பணத்தை செலுத்துங்கள் என்று சொன்னேன்.
அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை, நாங்கள் ஒரே ரூமில் அட்ஜஸ் செய்து கொள்கிறோம் என்றே சாதித்தார்கள். முடியவே முடியாது என்று மறுத்துவிட்டேன் [[இருந்தாலும் மனசு கேட்கவில்லை]] 

எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி உங்களுக்கு ஒன்று செய்கிறேன் இரண்டு எக்ஸ்ட்ரா பெட் கொடுத்து ஒரே ரூமில் [!!!!] அடைக்கிறேன் ஸாரி கொடுக்குறேன் ஆகவே இரண்டுபேருக்கு மட்டும் எக்ஸ்ட்ரா சார்ஜ் டிஸ்கவுன்ட் போட்டுத்தருகிறேன் என்று சொன்னதும் ஓகே சொன்னார் சேட்டன்.
எழுத்தில் நடந்த சம்பவங்களை சரியாக விளக்க இயலவில்லை ஆனால் நடந்தது மோசமான அனுபவம் எனவேதான் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதை சொல்கிறேன்...சில ஹோட்டல்களில் வேறு அறைகள் இல்லாவிட்டால் இப்படிபட்டவர்களுக்கு ரூமும் கொடுக்க இயலாது, எக்ஸ்ட்ரா குழந்தைகளை அனுமதிக்கவும் முடியாது...[[நடுரோட்டுல இன்னொரு நாட்டுல]]

மனிதாபிமான முறையில் என் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் எனக்கு நிர்வாகத்திடம் இருந்து வார்னிங் மெமோ வந்துவிட்டது, இன்னும் சிலபல கடுமைகளை சந்தித்தேன்.

சரி போகட்டும் விடுங்கள்...

இனி நண்பர்களுக்கு இதன் மூலம் சில ஆலோசனைகள் சொல்கிறேன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ஹோட்டலில் ரூம் புக் செய்பவர்கள், அல்லது டிராவல் ஏஜென்சியில் புக் செய்பவர்கள், அது வெளிநாடாக இருக்கட்டும் அல்லது உள்நாடாக இருக்கட்டும், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் நீங்கள் எத்தனை பேர்கள் தங்கப்போகிறீர்கள், ஆண்கள் எத்தனைபேர் பெண்கள் எத்தனைபேர், குழந்தைகள் அவர்கள்தம் வயது முதலியவற்றை தெளிவாக குறிப்பிட்டு அதற்கான ரசீதையும் மறக்காமல் [[கன்பர்மேஷன் நம்பர்]] வாங்கி கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த சேட்டன் வந்ததுபோல நீங்களும் போயி எங்கேயாவது மாட்டிக்கொள்ளாதீர்கள், கம்பெனி அனுப்புவதாக இருந்தாலுமே ஜாக்கிரதையாக இருங்கள், நான் நினைத்து இருந்தால் அன்றைக்கு அந்த குடும்பத்தை தங்கவிடாமல் செய்து, நான் நல்லபெயர் எடுத்திருக்க முடியும், நாமதான் எங்கே போனாலும் கைப்புள்ள ஆச்சே ஹி ஹி....!

டிஸ்கி : நீங்கள் பார்த்த மூன்று ரிசப்ஷன் படத்தில் ஒன்று எங்கள் ஹோட்டல்...!

Sunday, January 13, 2013

இடிமுழக்கங்கள் ஓய்வதில்லை....!

நேற்று போல் இன்று இல்லை இன்றுபோல் நாளை இல்லை என்று கவிஞர்கள் சொன்னது [!] உண்மைதான் போல....இதற்க்கு வருஷங்களும் விதிவிலக்கல்ல...

2009 - 2010 - 2011 வருஷங்கள் பதிவுலகின் பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது, ஆனால் 2012 ஆம் வருஷம் படு சுட்டியாக  சுவாரஷ்யமாக எழுதிய பதிவுலக எழுத்தாளர்கள் பலரைக் காணவே இல்லை, சரக்கு தீர்ந்து போனதா இல்லை அவர்கள் சோர்ந்து போனார்களா அவதானிக்க இயலவில்லை...!
இதனால் புதிய பதிவர்களின் வரவு அறவே குறைந்து போனது, அடுத்து சிறப்பாக எழுதிய எழுத்தாளர்கள் பலரை இந்த பதிவுலகம் கண்டு  [கொள்ள கொல்ல]வில்லை என்பதும் உண்மை...!

சரி..... ஏன் பதிவு எழுத புதிய விஷயங்கள் இல்லையா என்ன...? சம்பவங்கள் இல்லையா என்ன...? கற்பனை கதைகள் இல்லையா...? காதல் இல்லையா...? காவியங்கள் இல்லையா...? 

இருக்கு...
இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலருக்கு இடிமுழக்கம் பற்றியும், இடிதாங்கி பற்றியும் தெரியுமா...? இங்கே பஹ்ரைனில் வானுயர்ந்த கட்டிடங்களைப் பார்க்கிறேன் ஆனால் இடிதாங்கிகள் இல்லை, ஒருவேளை வளைகுடா நாடுகளில் இடி மின்னல் மழை அதிகமாக இல்லை என்ற காரணமாக இருந்தாலும், இப்போதைய இயற்கையானது சற்று விநோதமாகவே இருக்கிறது...!

இப்போதைய காலநிலைகளில் பலவிதமான மாற்றங்கள் வந்து கொண்டிருப்பதை காண்கிறோம் இல்லையா...? 
இந்தியாவில் பல இடங்களில் கட்டிடங்களில் இடிதாங்கியை பார்த்துள்ளேன், அந்த இடிதாங்கியின் பயன் என்ன, அதன் அர்த்தம் என்னவென்று நம் குழந்தைகளுக்கு நாம் சொல்ல கடமை பட்டுல்லோமா இல்லையா...?

இங்கே [[பதிவுலகில்]] டீச்சர்களும், வாத்தியார்களும் எனது நண்பர்களாக இருப்பதால் அவர்களுக்கு இந்த வேண்டுகோளை பதிவு செய்கிறேன்.

மாணவர்களுக்கு இடிதாங்கி பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும்  சொல்லித் தாருங்கள்.

இனி இடிதாங்கியின் பயன்கள் பற்றி நான் வாசித்ததில் இருந்து சில உங்கள் பார்வைக்கு...

இடிதாங்கி எனும் கருவி மின்சார பாதுகாப்பு அமைப்பு இடி மின்னல் போன்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து சேதமாவதை தடுக்க மின்சார அமைப்புகளுள் பயன்படுத்தபடுகிறது. பெரும்பாலான இடிதாங்கிகள் மின்னலின் தாக்கத்திலிருந்து வெளிப்படும் உச்ச கட்ட மின்சாரத்த்தை பூமிக்கு மாற்றி செலுத்துகிறது. இதனால் மின்சாதங்களுக்கோ மின்அமைப்புகளுக்கோ பழுது ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

     இடிதாங்கி என்பது கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் இடி, மின்னல் தாக்காமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கருவியாகும். இதன் முனைப்பகுதி காந்தச் சக்தியால் ஆனது. இந்தக் கருவியைக் கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் வைத்து தடித்த காப்பர் பட்டையின் மூலம் பூமியில் எர்த் செய்து விடுவார்கள். இடி தாக்கும்போது இடிதாங்கிமின்னலை ஈர்த்து பட்டை வழியாக பூமியைச் சென்றடைகிறது. இதனால், கட்டடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதோடு சேர்ந்து நாமும் பாதுகாக்கப்படுகிறோம்.
                இடி மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல இலட்சக்கணக்கான ஓல்ட் அழுத்தமுடையதாகக் காணப்படுகிறது. இந்த உயர்ந்த அழுத்த மின்சாரம் நம்மையும்கட்டடங்களையும் தாக்குவதால் பேரிழப்பு ஏற்படுகிறது.
                இடிதாங்கி கூர்மையான அம்பு போன்ற அமைப்பையுடையதாகக் காணப்படுகிறது. கூர்மையானப் பகுதியில் எலக்ட்ரான், புரோட்டான்கள் மிக வேகமாக தயார் நிலையில் இருக்கும். தட்டையான வடிவமுடையதாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான் சிதறிய நிலையில் காணப்படும். இடி தாக்கும்போது இடிதாங்கி கூர்மையான பகுதியாக இருந்தால் எலக்ட்ரான்,புரோட்டான்கள் வேகமாக செயல்பட்டு தன்னகத்தே இழுத்து பூமிக்குச் செலுத்த வசதியாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒயர் மற்றும் ஹோல்டருடன் கூடிய ஒரு பல்பை எடுத்துக் கொள்வோம்.
                பல்பைச் சுற்றி கருமை நிற காகிதத்தை நன்றாக ஒட்டிவிட்டு பல்பின் முன்பகுதியின் காகிதத்தில் சிறிய துவாரம் எடுத்துமின்சாரத்தைச் செலுத்தும்போது மின்விளக்கு எரிகிறது. சிறிய துவாரத்தில் மின்னொளி பீறிட்டுப் பாய்வதைக் காணலாம். காகிதத்தை எடுத்துவிட்டால் மின்னொளி எல்லா திசைகளிலும் சிதறி விழுகிறது.

                அதனால்தான் கூரிய அமைப்பைக் கொண்டதாக இடிதாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்றி நன்றி நன்றி.....தகவல் களஞ்சியம் அண்ணாச்சிகளுக்கு....

இந்த வருஷத்தின் முதல் பதிவும் இதுதான்...!

யாவருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!