Friday, April 22, 2016

சிறைகள் தூங்குவதில்லை !

சிறையில் இருந்தபோது ஒருநாள் நள்ளிரவில்...
பாகிஸ்தானியும், ஒரு சீனா'காரனும் ரகசியமாக பேசிகிட்டே...சாப்பாட்டுத்தட்டை வாயால் கடித்து, மடக்கி, கத்தி போல கூர்மையாக்கி...
என்னை நோக்கி வந்தார்கள், என் செல்லுக்குள் யாருமே இல்லை, ஏசி'யின் கடும் குளிர் வேறு, விளக்குகள் எறிந்தாலும் மையான அமைதி காத்தன...
அவர்கள் இன்னும் அருகில் வந்துவிட்டார்கள், ஓட முடியாதவாறு உன்மத்தம் பிடித்தவனாக நின்று கொண்டிருந்தேன்...
என்னருகில் வந்தவர்கள்...என் இரண்டு கைகளையும் மடக்கி பின்னே ஒருவன் பிடித்துக்கொள்ள...எரியும் விளக்கொன்று அப்பவே உயிர் விட்டது...
ஒருத்தன் கூர்மையாக்கப்பட்ட சாப்பாட்டு கத்தியை என் முகத்துக்கு நேராக கொண்டு வந்து காண்பித்து..."உனக்கு காஷ்மீராடா வேண்டும் ? இதோ" என்று விலாவில் பாயசினான்...
இனி அடுத்தவன் "உனக்கு அசாமாடா வேணும் ?" என்று அடுத்த விலாவில் கத்தியை பாயசினான்...
ஐயோ என்று அலறினேன்...
சிறையிலும் கனவு...
மலரும் நினைவுகள்.

Friday, April 15, 2016

சாப்பிடும் விதமும் ஒரு கலைதான்...!!!

ஹோட்டல்ல போயி, சதீஷ் சங்கவி ஸ்டைல்ல [[ஒருநாளும் அப்பிடி சாப்பிட்டதில்லை]] ரெண்டு பரோட்டா வாங்கி, பீஸ் பீஸா பிளேட்டில் பிச்சிப் போடும்போதே, அருகில் இருந்தவன் ஒரு மாரியா என்னைப் பார்த்தான் 

[[அதெல்லாம் வெக்கமேப் படப்டாதுன்னு சங்கவி சொல்லிட்டாப்ல]]
ஒரு சிக்கன் சுக்கா'வும் ஆர்டர் பண்ணினேன், கொஞ்சூண்டு சால்னா தந்தான் ஒரு சின்ன பிளேட்ல, இது போதாது இன்னும் ஒரு பிளேட் கேட்டேன் [[ஆக்சுவலி இன்னும் ரெண்டு பிளேட் சால்னா வேணுமா இருந்துச்சு, சங்கவி கணக்குப்படி]] தந்தான்.
பிச்சிப்போட்ட பரோட்டா மீது தோசை மாதிரி சால்னாவை ஊற்றி ஊறவச்சேன்...பக்கத்துல இருந்தவன் மெல்ல இருக்கை நுனிக்கு வந்துவிட்டான்.
எப்பிடியும் சிக்கன் சுக்கா ரெடியாகி வர பத்து நிமிஷமாவது ஆகும், ஊற வைத்த பரோட்டா முன்பு, ராம்தேவ் மாதிரி கண்களை மூடிவாறு அமர்ந்திருந்தேன், லேசா கண்விழித்துப் பார்த்தபோது, பக்கத்திலிருந்தவனைக் காணோம்.
ஆஹா...இனி ஃபிரியா சாப்பிடலாம் என நினைத்தபோதே, என்னருகில் வந்தமர்ந்த இன்னொருத்தன், என் நிலைமை "கண்டு" அடுத்த டேபிளுக்கு ஓடினான்.
சுக்கா சிக்கன் வரவும், பரோட்டாவும் சால்னாவில் நன்றாக ஊறிவிட்டது, அங்கிட்டும் இங்கிட்டுமா லேசா பரோட்டாவை கிளறி விட்டு, ஒவ்வொரு பீஸா சாப்பிடலாம்ன்னா...நன்றாக ஊறி விட்டதால் சாதம் ரேஞ்சிக்குத்தான் வாரி சாப்பிட முடிஞ்சுது, ஏற்கனவே உக்காந்து ஜெர்க்காகி அடுத்த டேபிளுக்கு ஓடினவன் என்னையே பார்த்துட்டு இருக்காப்டி இருந்துச்சு, சடேர்ன்னு திரும்பி முறைத்தேன், அப்புறம் அவனைக் காணவே இல்லை.
ஊறவச்ச பரோட்டா சால்னா இதமாக தொண்டையில் இறங்குச்சு, புதிய ருசி, பரோட்டா மீது இருந்த வெறுப்பும் மாறிப்போச்சு...முன்பு பரோட்டா கண்டாலே ஓடிப்போயிருவேன்...
இனி பரோட்டா அடிக்கடி சாப்பிடனும், சும்மாயில்லை போல, எங்க ஊர் பதி"யில இப்பவும் "பரோட்டா சாமியார்"ன்னு ஒருத்தர் இருக்கார் !!
சாப்பாடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம், சாப்பிடும் விதமும் ஒரு கலைதான் இல்லையா...சங்கவி"க்குத்தான் நன்றி சொல்லணும்.


Sunday, April 10, 2016

வாயில் வடை சுடும் சில ஐ டி ஆளுங்க...!!!

வாயில் வடை சுடும் சில ஐ டி ஆளுங்க...
இன்டர்நெட் ரூம் கனெக்டிங் பிரசினையை பார்க்க சொன்னா...நெட்'காரனைக் கூப்பிடு அங்கேதான் பிரசினை'ன்னான், அடேய்...டவுன்லோட் ஸ்பீடு அளவுக்கும் மீறி இருக்கும்போது...எப்பிடிடா நெட்'காரன் பிரச்சினையா இருக்கப்போகுது ?ன்னு கேட்டா...கூலா போயி உக்காந்துகிட்டு...ஊருக்கு போன்ல பொண்டாட்டிக்கு போன் போட்டு..."பால் குடுத்தியா ?"..............."
"...டி கழுவினியா ? அய்யயோ சின்ன பிள்ளையாச்சே கழுவப்டாது, டிஷு வச்சி தொடைக்கணும்.."
நாறுமேன்னு பதில் வந்துருக்கும் போல, கெக்கேபிக்கேன்னு சிரிக்கான்...
"தம்பி இங்கே தங்கியிருக்கும் ஹோட்டல் விருந்தாளிகள் என்னை பேதி போக வச்சிருவாயிங்க, பிளீஸ் வந்த வேலையை முதல்ல கவனி..."
"அதான் சொன்னேன்ல நெட்'காரன் கனெக்ஷன் பிரச்சினைன்னு..."
நிறைய வாயால வடைசுட்டு அவன் கிளம்பும்போது...வடிவேலு வாய்சில்..தம்பி...உன்னை தப்பா வேலைக்கு சேர்த்துருக்காயிங்க எதுக்கும் நல்ல சீனியராப் பார்த்து கொஞ்சநாள் அசிஸ்டெண்ட் வேலை செய்யப்பாரு"ன்னு சொன்னதுக்கு, அதே மனோபாலா பதில்தான் பார்வையில்..."எனக்குத்தெரியும் போடா"
சரி போகட்டும்ன்னு வேறோருத்தனைக் கூப்பிட்டேன்...அவனும் அவனால முடிஞ்சளவு வாயில வடை சுட்டான்...இவன் கொஞ்சம் வித்தியாசமா சொன்னான்ய்யா...கம்பெனி டெக்னிகல் பிராப்ளம்'ன்னான்...[[சம்பளம் பிரச்சினையா இருக்குமோ ?]]
அவனும் போயி உக்காந்துகிட்டு ஏதோ ஒரு நாதாரிக் கூட போன்ல கடலை போட்டுட்டு இருந்தான்...
"தம்பி வந்த வேலையைக் கவனியுங்களேன் பிளீஸ்"
"அதான் சொன்னேன்ல கம்பெனி டெக்னிகல் பிராப்ளம்ன்னு ?"
"இல்லியே...இந்த வயர் கனேக்ஷன்ல்லதானே பிரச்சினை போல இருக்கு ?"
என்னை மேலேயும் கீழேயும் பார்த்தான்...போகும்போது..."தம்பி...உன்னை தப்பா...." "தெரியும் போடா " மூவ்மெண்டேதான்...
என்ன செய்ய...? இன்னொருத்தனைக் கூப்பிட்டேன்...வந்தான், பார்த்தான்...ரோசிச்சான்..."ஒரே ஒரு" வயரை கழட்டினான்...இன்னொரு இடத்தில் மாட்டினான், அந்த வயரை இங்கே மாட்டினான்...பிராப்ளம் சால்வ் !!!
"தம்பிக்கு எந்த ஊரு ?"
"நீங்க தமிழா சார் ? எப்பிடி சார் நான் தமிழ்ன்னு கண்டு பிடிச்சீங்க ?"
"அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டி வச்சிருக்கே"
"நான் மதுரை சார், உங்களை மலையாளி"ன்னு நினைச்சிட்டேன்" [[அவ்வ்வ்வவ்]]
நம்மாளுங்க நல்ல உத்திரவாதமாத்தான் வேலை செய்யுறாங்க ம்ம்ம்ம்...முதல்ல நான் கூப்பிட்ட ரெண்டு பேரும் மலையாளிங்க...அவங்க வாங்குற சம்பளம், 60 ஆயிரம் ரூபாய், நம்மாளு வாங்குற சம்பளம், 30 ஆயிரம் ரூபாய்...!
இனி முதல் பாராவை மறுபடியும் படியுங்க.

Thursday, April 7, 2016

அமேரிக்கா பணமா கொக்கா !முன்பு மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம், காலை எட்டு மணி முதல் மூன்று மணி வரை பிளேன் வரத்துப் போக்கு ரொம்ப குறைவாக இருக்கும், அந்த நேரத்தில் வேலைகள் இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் தூங்கலாம் என்று, ட்ரான்சிட் பயணிகள் தூங்கும் இடத்துக்குப் போயி, ஏர்போர்ட் பாஸை கழட்டி பாக்கெட்டுல வச்சிகிட்டு தூங்குவது உண்டு, ஏர்போர்ட் மேனேஜர் செக்கிங் வந்தால் நாங்களும் பயணிகள் என்று போய்விடுவார்.

அன்று [[எப்போவும்]] வழக்கம்போல தூங்குனப்போ, ஏசி குளிர் கொஞ்சம் கூடுதலா இருந்ததால ரெண்டு கையும் குளிர்ல நடுங்கியதும், ஏதாவது இடுக்குகுள்ள கைவிரல்களை சொருகலாம்ன்னு தூக்கத்திலேயே பெட்டில் தடவிய போது, ஒரு இடுக்கில் கைபோனது...

உள்ளே என்னமோ இருக்குபோலன்னு  உணர்ந்தாலும், தூக்கத்தில் தூங்கிவிட்டு எழும்பி போயி முகம் கழுவிகிட்டு இருக்கும்போதுதான், அந்த நினைவு  வந்துச்சு...திரும்பவும் ஓடிப்போயி கைவிட்டுப் பார்த்தால் ஏதோ பேப்பர் சுருட்டுனாப்ல இருக்கவே, வெளியே எடுத்தேன்...அமெரிக்கன் டாலர் மாதிரி தெரியவே...எடுத்து விரித்துப் பார்த்தேன்...ஆத்தி...மூன்று நூறு டாலர் நோட்டுகள்...

அப்போது டாலர் ரேட் 33 ரூபாய்...ஆக மொத்தம் கிடைத்தது 9900 ரூபாய்...

அப்புறம் எங்கே உக்காந்தாலும் இந்தப்பழக்கம் தொத்திகிச்சு, ஏர்போர்ட் என்பதால் அதுவும் செக்கியூரிட்டி செக்கிங் [[முன்பு, இப்போ பிச்சிபுடுவான் மிலிட்டிரிக்காரன்]] நடக்கும் முன்பு பயணிகள் ஆசுவாசமாக அமரும் இடம் என்பதாலும், அடிக்கடி இப்படி காசு கிடைப்பதுண்டு, பென்"கள் நிறைய கிடைக்கும், மலையாளிகள் அதிகம் போகையில் நம்ம ரூபாய் வெளிநாட்டில் செல்லுபடி ஆகாதுன்னு [[அப்போ]] இப்படி ஒளித்து வைத்து செல்வதுண்டு...!

சரி அன்னிக்கு கிடைச்சுதே டாலர், அதை என்ன செய்தாய்ன்னு கேக்குறீங்களா ?

இலவசமா கிடைத்ததை இலவசமாக கொடு பாலிசிதான்...மூன்று மணி நேரத்தில் மும்பை லேடீஸ் நடன பாரில் நண்பர்களோடு என்ஜாய்...பத்தாயிரம் [[அப்போ]] காலி...!

எங்க அண்ணன் இப்பவும் என்னைப் பார்த்து கவலையும்  வேதனையுமாக சொல்லும் டையலாக் "உனக்கு பணத்தோட அருமை இன்னும் தெரியவில்லை மனோ"

இப்போல்லாம் அப்பிடி முடியுமா ஆத்தே...?!!! [[இது கல்யாணத்துக்கு முந்தி நடந்தது சாமிங்களா, போட்டுக் குடுத்துராதீக]]

குடிசையில் பிறந்து வளர்த்தவனே இப்பிடின்னா குபேரனின் பிள்ளைங்க...? ஸ்ஸ்ஸ் அபா...சோடா பிளீஸ்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!