Sunday, October 24, 2010

கலாபவன் மணியை ஏமாற்றிய நண்பன்

  
                  நான் பத்து வருஷம் முன்னாடி middle east hotel [பஹ்ரைன்]ல வேலை செஞ்சிட்டு இருக்கும் போது, கலை நிகழ்சி நடத்த நிறைய மலையாளி நடிக நடிகைங்க வருவாங்க. அப்போ நான் ரூம் சர்வீஸ்ல சர்வரா வேலை தொடங்கிய சமயம். ஹோட்டலுக்கு முதலாளி மலையாளி என்பதால்,கலை நிகழ்ச்சிக்காக வரும்  எல்லா மலையாள சினிமாக் காரங்களும் எங்கள் ஹோட்டலில்தான் பெரும்பாலும்  தங்குவாங்க.
 அவர்களை பற்றி  ஒரு சில சுவாரஸ்ய தகவல்கள்  என்னிடமும் உண்டு
.

  நம்ம கலாபவன் மணி, காமடியனாக இருந்த சமயம் அது, ஒரு டபுள் பெட்ரூல கலாபவன் மணி, கோட்டயம் நசீர், இன்னும் ஒருவர் பெயர் ஞ்சாபகம் இல்லை தங்கி இருந்தனர்.
   இரவு நேரம்,


 ரூம் சர்வீசுக்கு போன் கலாபவன் மணியிடமிருந்து,  போனை நான்தான் அட்டன்ட் பண்ணேன். ஐஸ் கியூப்ஸ் வேணும் என்றார், எனக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது,
நானே ஐஸ் கொண்டு போனேன். நல்ல ஜாலியாக பேசி பழகினார்கள். என்ன அயிட்டம் குடிக்கிறார்கள்னு கண்களை அலையை விட்டேன்,பாட்டிலை தேடினேன் ரகசியமாக,
பக்கத்து டேபிளில் இருந்தது அந்த பாட்டில். பெயர், நெப்போலியன் பிராண்டி. ஆச்சர்யமாக
 நான் மணியிடம் கேட்டேன், சார் இதா நீங்கள் குடிக்கும் பிராண்ட் என்று, அவர் சொன்னார், மனோ, இது என் நண்பன் வாங்கி தந்தான், அதுவும் அல்லாமல்  இது ரொம்ப காஸ்ட்லி சரக்காம் என்றார். எனக்கு சிரிப்பு பொத்து  கொண்டு வந்தது அடக்கிக் கொண்டேன். மேலும் அவர் சொன்னார், இருபது தினாருக்கும்[2500 ரூபா] மேலாம் என சொல்லி ஆச்சர்யப் பட்டார். அப்படியா என்று சொல்லிக் கொண்டே நான் ரூம் சர்வீசுக்கு வந்து என் சக நண்பர்களிடம் விசயத்தை சொன்னேன். அது ஹோட்டலில் எங்கும் பரவி விட்டது.  அய்யோடா, எப் அன்  பி மானேஜர் முதல், ஆபரேஷன் மானேஜர் அடக்கம் போய் பார்த்து ஆச்சர்யமா குலுங்கி குலுங்கி சிரிச்சாங்க......மலையாளிங்க. காரணம்...
          அந்த சமயம், நெப்போலியன் பிராண்டியின் விலை இரண்டரை தினார்தான், அதாவது நம்ம ஊர் பணம் 250  ரூபாய்தான், சாதாரணமா யாரும் அந்த பிராண்டை குடிப்பது இல்லை.........
       பாவம் கலாபவன் மணியை அவர் நண்பன் நல்லா ஏமாத்தி[கலாய்ச்சி] இருக்கான்.  இதே மாதிரி இன்னும் நிறைய துணுக்குகள் உண்டு.
    நம்ம ஐஸ்வர்யா[நடிகை லட்சுமி மகள்], கேரள நடிகர் முரளி, சுரேஷ் கோபி, குஞ்சாக்க கோபன், முகேஷ், கேப்டன் ராஜ், அப்புறம் நம்ம திருச்சி சிவா  எம் பி, பிரதமர் ஆவதற்கு முன்பு வாஜ்பாய், இப்படி நிறைய பேருடைய செய்திகள் உண்டு.  சம்பவம் நடந்தது பத்து வருஷம் முன்பு.....

தொடரும்........

8 comments:

 1. விடாதீர்கள். போட்டு தாக்குங்கள் ராஜா!
  --

  ReplyDelete
 2. நம்ம ஊர்க்காரரா ! சந்தோஷம். உங்களுடைய எல்லா செய்திகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. ம்ம்ம்... இப்படி நிறைய வரட்டும்.

  ReplyDelete
 4. //விடாதீர்கள். போட்டு தாக்குங்கள் ராஜா!
  --//


  எதை மக்கா, பிராண்டியையா.....:]]

  ReplyDelete
 5. //ம்ம்ம்... இப்படி நிறைய வரட்டும்.//


  போட்டுட்டா போச்சு...

  ReplyDelete
 6. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 7. //இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்//
  புலிகுட்டினு சொல்லி பயன்காட்டுரீங்களே...........:]]

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!