Monday, May 30, 2011

மலையாள சேட்டனின் லீலைகள்

நான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உண்மையா வதந்தியா தெரியாது]] அதாவது சவுதியில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய ஒரு மலையாளியின் லக்கேஜை சோதனை செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள்,


லக்கேஜினுள் தங்கம் இருப்பதாக கருவி காட்டி குடுக்க, மலையாளியிடம் கேட்டபோது தங்கம் இல்லவே இல்லை என்று சொல்ல, லக்கேஜ் பிரிக்கபட்டது. பிரிச்சு பார்த்தால் தங்கம் இல்லை. சரின்னுட்டு மறுபடியும் பாக்ஸை திரும்ப கட்ட சொல்ல மலையாளியும் திரும்ப கட்டினான்.


மறுபடியும் கருவி சோதனையில் பீப் பீப் சவுண்ட் வர, மறுபடியும் பிரிக்க சொன்னார்கள். மறுபடியும் நன்றாக சோதனை செய்தார்கள். ஒன்றுமே இல்லை. மறுபடியும் பெட்டியை கட்ட சொன்னார்கள். மறுபடியும் கருவி பீப் பீப்.......


மறுபடியும் பெட்டியை அவிழ்க்க சொன்னார்கள், அவிழ்த்து உள்ளே இருந்த பெரிய பெரிய சோப் கட்டிகளை அறுத்து பீஸ் பீசாக்கி சோதனை செய்தும் உஹும் ஒன்றுமே இல்லை. மறுபடியும் பெட்டியை கட்ட சொன்னார்கள், ஹி ஹி மறுபடியும் பீப் பீப்....


இப்பிடி பல முறை சோதனை செய்தும் தங்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை [[மலையாளியா கொக்கா]] ஒரு கஷ்டம்ஸ் ஆபீசர் [[நம்ம உணவு ஆபீசர் அல்ல]] மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சார், மலையாளியிடம் விசாரித்தார்.


ஹலோ சேட்டன் உங்க லக்கேஜ்ல கண்டிப்பா தங்கம் இருக்கு ஏன்னா மிஷின் [[அசின் அல்ல]] பொய் சொல்லாது என்று வடிவேலு ரேஞ்சுக்கு அழாத குறையாக கேட்டும் சேட்டன் அசரவில்லை.


பின்பு அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து செட்டனிடம் சொன்னார்கள், சேட்டன் நீ நிச்சயமா தங்கம் கடத்துகிறாய் என்பது நல்லாவே தெரியுது, அதனால எந்த டெக்னிகல அயிட்டத்தை உள்ளே வச்சிருக்குறேன்னு சொன்னா உன்னை விட்டுர்றோம் [[தங்கத்தையும்தான்]] என்று அழ...


உஷாரான சேட்டன், அப்போ கஸ்டம்ஸ் எவரிதிங் கிளியர் பேப்பர்ல கையெழுத்து போட்டு தாருங்கள் என கேட்க, ஆபீசரும் சைன் போட்டு கொடுத்தார். அப்புறமா பெட்டி பக்கம் வந்த சேட்டன், பெட்டியை அவிழ்த்து, பெட்டி கட்டிய பிளாஸ்டிக் கயிறை அறுத்து காட்ட.....உள்ளே பிளாஸ்டிக் கயிறுக்குள் தங்கம் நம்ம எலக்ட்ரிக் ஓயருக்குள் இருக்குமே அப்பிடி இருந்ததாம்...!!!


சரி எப்பிடி பெட்டியை பிரித்து சோதனை செய்யும் போது கருவிக்கு தெரியாம போச்சு...??? அங்கேதான் நிக்குறார் நம்ம சேட்டன்... ஹி ஹி. அதாவது ஒவ்வொரு முறையும் பெட்டியை அவிழ்க்கும் போதும், அந்த பிளாஸ்டிக் கயிறை சேட்டன் அப்பாலிக்கா தூக்கி போட்டுடுவார். பின்னே எப்பிடி கருவிக்கு தெரியுமாம் ஹே ஹே ஹே ஹே பெட்டியை கட்டும் போது மட்டுமே சேட்டன் கயிறை அப்பாலிக்கா இருந்து எடுத்து கட்டுவார், கருவி "ங்கே"....!!!!


டிஸ்கி : இது காதில் கேள்வி பட்டு சுவாரஸ்யமா நண்பர்களுக்குள் பேசிகொண்டிருப்போம்...!!!

டிஸ்கி : நேரில் பார்த்த இன்னும் பல டக்கால்டி'கள் உண்டு, ஒன்னொன்னா சொல்றேன் என்ன...!!!

94 comments:

  1. தங்கம்..... எப்படியெல்லாம் யோசிக்கறாங்க.

    ReplyDelete
  2. தமிழ்வாசி - Prakash said...
    தங்கம்..... எப்படியெல்லாம் யோசிக்கறாங்க.//

    மலையாள மூளை கி கி கி கி கி....

    ReplyDelete
  3. அப்போ கஸ்டம்ஸ் எவரிதிங் கிளியர் பேப்பர்ல கையெழுத்து போட்டு தாருங்கள் என கேட்க, ஆபீசரும் சைன் போட்டு கொடுத்தார்.>>>>>
    சேட்டன் உஷாரு பார்டி தான்,

    ReplyDelete
  4. நேரில் பார்த்த இன்னும் பல டக்கால்டி'கள் உண்டு, ஒன்னொன்னா சொல்றேன் என்ன...!!!>>>>>

    சொல்லுங்க....நாங்க கேட்டுக்கறோம்.

    ReplyDelete
  5. உங்கள மாதிரியே டெரர் மூளை அவருக்கும் இருக்கும் போல, சரி சரி அதே டெக்னிக்க யூஸ் பண்ணி பதிவர் சந்திப்புக்கு வரும் போது அஞ்சு கிலோ தங்கத்த கொண்டு வந்துருங்க, இல்லைன்னா நடக்கிறதே வேற... ஹி ஹி உங்கள நடக்க விட்டுடுவேன்

    ReplyDelete
  6. சேட்டனா கொக்கா!
    நல்ல அருமையான டெக்னிக் கையாண்டுள்ளார்.
    பதிவு படிக்க நல்ல நகைச்சுவையாக இருந்தது. பாராட்டுக்கள். நன்றி.

    [என் “மூக்குத்தி” சிறுகதை இன்றுடன் நிறைவடைந்து விட்டது. முடிந்தால் 7 சிறுசிறு பகுதிகளையும் ஒரு முறை படித்துவிட்டு கருத்துக்கூறவும்]

    அன்புடன் vgk

    ReplyDelete
  7. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.

    Share

    ReplyDelete
  8. சேட்டேண்ட லீலைகள் ஹிஹி!

    ReplyDelete
  9. மலையாள சேட்டனின் லீலைகள்

    அட டைட்டிலை பார்த்து ஏமாந்துட்டேன் ...

    ஏமாதிபுட்டியே மக்கா......

    ReplyDelete
  10. தமிழ்வாசி - Prakash said...
    அப்போ கஸ்டம்ஸ் எவரிதிங் கிளியர் பேப்பர்ல கையெழுத்து போட்டு தாருங்கள் என கேட்க, ஆபீசரும் சைன் போட்டு கொடுத்தார்.>>>>>
    சேட்டன் உஷாரு பார்டி தான்,//

    செம உஷாரு....!

    ReplyDelete
  11. தமிழ்வாசி - Prakash said...
    நேரில் பார்த்த இன்னும் பல டக்கால்டி'கள் உண்டு, ஒன்னொன்னா சொல்றேன் என்ன...!!!>>>>>

    சொல்லுங்க....நாங்க கேட்டுக்கறோம்.//

    சொல்றேன் சொல்றேன்....

    ReplyDelete
  12. இதான்யா மூளைக்காரன் என்பது....

    ReplyDelete
  13. இரவு வானம் said...
    உங்கள மாதிரியே டெரர் மூளை அவருக்கும் இருக்கும் போல, சரி சரி அதே டெக்னிக்க யூஸ் பண்ணி பதிவர் சந்திப்புக்கு வரும் போது அஞ்சு கிலோ தங்கத்த கொண்டு வந்துருங்க, இல்லைன்னா நடக்கிறதே வேற... ஹி ஹி உங்கள நடக்க விட்டுடுவேன்//

    யோவ் வண்டி காற்றை புடுங்கிராதீங்கய்யா அது இம்சை அரசனுடைய கார் ஹி ஹி ஹி...

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் said...
    சேட்டனா கொக்கா!
    நல்ல அருமையான டெக்னிக் கையாண்டுள்ளார்.
    பதிவு படிக்க நல்ல நகைச்சுவையாக இருந்தது. பாராட்டுக்கள். நன்றி.

    [என் “மூக்குத்தி” சிறுகதை இன்றுடன் நிறைவடைந்து விட்டது. முடிந்தால் 7 சிறுசிறு பகுதிகளையும் ஒரு முறை படித்துவிட்டு கருத்துக்கூறவும்]

    அன்புடன் vgk//

    இதோ வந்துட்டே இருக்கேன் அய்யா...

    ReplyDelete
  15. saro said...
    உங்கள் பதிவு நன்றாக இருந்தது//

    நன்றி சரோ....

    ReplyDelete
  16. விக்கி உலகம் said...
    சேட்டேண்ட லீலைகள் ஹிஹி!//

    என்றே மோனே...

    ReplyDelete
  17. சூப்பர் ஐடியா!! :-))

    ReplyDelete
  18. அஞ்சா சிங்கம் said...
    மலையாள சேட்டனின் லீலைகள்

    அட டைட்டிலை பார்த்து ஏமாந்துட்டேன் ...

    ஏமாதிபுட்டியே மக்கா......//

    அடபாவி இதென்ன சிபி பிளாக்கா....???

    ReplyDelete
  19. NKS.ஹாஜா மைதீன் said...
    இதான்யா மூளைக்காரன் என்பது....//

    நான் அப்பிடியே ஷாக்காயிட்டேன்....

    ReplyDelete
  20. middleclassmadhavi said...
    சூப்பர் ஐடியா!! :-))//

    ஹா ஹா ஹா ஹா நீங்களும் டிரை பண்ணி பாருங்கள் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  21. நல்லாருக்குங்க

    ReplyDelete
  22. ஷர்மிளா said...
    நல்லாருக்குங்க//

    வாருங்கள் வாருங்கள் வருகைக்கு நன்றி ஷர்மிளா....

    ReplyDelete
  23. தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு போட்டு, கடமையை நிறைவேற்றிட்டேன்.

    ReplyDelete
  24. ஆனா, இந்த மேட்டர் ஏற்கனவே நாம பேசின ஞாபகம் வருதே!

    ReplyDelete
  25. நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து, இம்சை அரசன் பாபு ஒரு போஸ்ட் இன்று போட்டிருக்கார். சகோ கவுசல்யா மற்றும் நண்பர் சங்கவி இன்று பதிவிடுகின்றனர்.

    ReplyDelete
  26. உங்கள விட பெரிய தில்லலங்கடியா இருப்பான் போல

    ReplyDelete
  27. அனுபவம் புதுமை மட்டுமில்லை அருமை

    ReplyDelete
  28. மக்கா நெல்லை வர்றீங்களா...

    ReplyDelete
  29. கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? என்று கேடப்பார்கள் - திருடர்களின் கைங்கர்யத்தை பார்த்து. அப்படி தான் கேட்டு கொண்டேன் இந்த பதிவை பார்த்து.

    ReplyDelete
  30. >>நான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம்

    ஓப்பனிங்க்லயே பொய்யா? டா

    ReplyDelete
  31. >>நேரில் பார்த்த இன்னும் பல டக்கால்டி'கள் உண்டு, ஒன்னொன்னா சொல்றேன் என்ன...!!!

    அதானே.. ஒட்டுக்கா சொல்லீட்டா பதிவு தேத்த முடியாதே? அவ்வ்வ்

    ReplyDelete
  32. >>இது காதில் கேள்வி பட்டு சுவாரஸ்யமா நண்பர்களுக்குள் பேசிகொண்டிருப்போம்...!!

    haa haa ஹா ஹா என்னே ஒரு கண்டு பிடிப்பு? காதுல தான் கேள்விப்படுவீங்களா? உங்க ஊர்ல? ஹே ஹே ஹேய்

    ReplyDelete
  33. நேத்து ஒரு மானஸ்தன் என் பிளாக்ல வந்து சொந்தமா யோசிச்சு பதிவு போடனும்னு சொன்னான்.. அவனை நீ பார்த்தே?

    ReplyDelete
  34. ம்ம் செம புத்திசாலி தான் ...

    ReplyDelete
  35. FOOD said...
    தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு போட்டு, கடமையை நிறைவேற்றிட்டேன்.//

    எப்பவும் ஆபீசர் கடமையில பிஸி'ன்னு எங்களுக்கு தெரியாதா என்ன ஹி ஹி...

    ReplyDelete
  36. FOOD said...
    ஆனா, இந்த மேட்டர் ஏற்கனவே நாம பேசின ஞாபகம் வருதே..///

    ஹி ஹி அப்பிடியா..?

    ReplyDelete
  37. FOOD said...
    நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து, இம்சை அரசன் பாபு ஒரு போஸ்ட் இன்று போட்டிருக்கார். சகோ கவுசல்யா மற்றும் நண்பர் சங்கவி இன்று பதிவிடுகின்றனர்.//

    இம்சை அரசன் பதிவு பார்த்தேன் ஆபீசர்...

    ReplyDelete
  38. Speed Master said...
    உங்கள விட பெரிய தில்லலங்கடியா இருப்பான் போல//

    அடப்பாவி மீ பாவம்...

    ReplyDelete
  39. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    அனுபவம் புதுமை மட்டுமில்லை அருமை//

    ஹா ஹா ஹா நன்றி மக்கா..

    ReplyDelete
  40. சங்கவி said...
    மக்கா நெல்லை வர்றீங்களா...//

    கண்டிப்பா வர முயற்சிக்கிறேன், வரலைன்னா இம்சை அரசன் வீட்டுக்கே அருவாளை அனுப்பிருவான் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  41. தமிழ் உதயம் said...
    கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? என்று கேடப்பார்கள் - திருடர்களின் கைங்கர்யத்தை பார்த்து. அப்படி தான் கேட்டு கொண்டேன் இந்த பதிவை பார்த்து.//

    ரைட்டு...

    ReplyDelete
  42. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Sema idea...//

    ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  43. என் ராஜபாட்டை"- ராஜா said...
    Rompa nalla nama pakkam kanum//


    மக்கா உங்க பதிவ படிச்சுட்டு ஓட்டு போட்டுட்டுதான் இருக்கேன் ஆனால் உங்க போஸ்ட் கமெண்ட்ஸ் ஒர்க் ஆகலை அதை செக் பண்ணுங்க..

    ReplyDelete
  44. சி.பி.செந்தில்குமார் said...
    >>நான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம்

    ஓப்பனிங்க்லயே பொய்யா? டா///

    டேய் அண்ணே அருவாளுக்கு வேலை குடுத்துறாதே ராஸ்கல்...

    ReplyDelete
  45. சி.பி.செந்தில்குமார் said...
    >>இது காதில் கேள்வி பட்டு சுவாரஸ்யமா நண்பர்களுக்குள் பேசிகொண்டிருப்போம்...!!

    haa haa ஹா ஹா என்னே ஒரு கண்டு பிடிப்பு? காதுல தான் கேள்விப்படுவீங்களா? உங்க ஊர்ல? ஹே ஹே ஹேய்//

    நீ திருந்தவே மாட்டியாடா கொன்னியா...?

    ReplyDelete
  46. செம ஐடியா தாங்க..

    இதுபோல புதுசுபுதுசா யோசிச்சி கடத்தி நாட்டை குட்டிசுவராக்குராங்க....

    ReplyDelete
  47. சி.பி.செந்தில்குமார் said...
    >>நேரில் பார்த்த இன்னும் பல டக்கால்டி'கள் உண்டு, ஒன்னொன்னா சொல்றேன் என்ன...!!!

    அதானே.. ஒட்டுக்கா சொல்லீட்டா பதிவு தேத்த முடியாதே? அவ்வ்வ்//

    அதை நீ சொல்ரியாக்கும் ஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

    ReplyDelete
  48. அவங்க சேட்டை உம்முடைய சேட்டைதாங்க ஓவரா போயிடுச்சி...

    ReplyDelete
  49. விட்டா அஜால் குஜால் கதைக்கு இணையா டைடில் வைப்பிங்க போல....

    ReplyDelete
  50. சி.பி.செந்தில்குமார் said...
    நேத்து ஒரு மானஸ்தன் என் பிளாக்ல வந்து சொந்தமா யோசிச்சு பதிவு போடனும்னு சொன்னான்.. அவனை நீ பார்த்தே?//

    ஆமாம் குடும்பம் ஊர்ல இருந்து வந்ததும் மானஸ்தன் ஆகிட்டதா சொன்னான். ஆமா தக்காளி சொன்னதுல என்னடா தப்பு ஹி ஹி....

    ReplyDelete
  51. கந்தசாமி. said...
    ம்ம் செம புத்திசாலி தான் ...///

    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  52. ஹலோ சேட்டன் உங்க லக்கேஜ்ல கண்டிப்பா தங்கம் இருக்கு ஏன்னா மிஷின் [[அசின் அல்ல]] பொய் சொல்லாது என்று வடிவேலு ரேஞ்சுக்கு அழாத குறையாக கேட்டும் சேட்டன் அசரவில்லை..///
    இங்கே தான் நிற்குறார் நாஞ்சில் மனோ

    ReplyDelete
  53. கவிதை வீதி # சௌந்தர் said...
    செம ஐடியா தாங்க..

    இதுபோல புதுசுபுதுசா யோசிச்சி கடத்தி நாட்டை குட்டிசுவராக்குராங்க....//

    ஹய்யோ ஹய்யோ....

    ReplyDelete
  54. கவிதை வீதி # சௌந்தர் said...
    அவங்க சேட்டை உம்முடைய சேட்டைதாங்க ஓவரா போயிடுச்சி...//

    அடப்பாவி இப்பிடி வாருரீங்களே ஹி ஹி...

    ReplyDelete
  55. கவிதை வீதி # சௌந்தர் said...
    விட்டா அஜால் குஜால் கதைக்கு இணையா டைடில் வைப்பிங்க போல....//

    இப்பிடி தலைப்பு வைக்க சிபி'தான் சொன்னான்...மாட்னான் சிபி ஹி ஹி...

    ReplyDelete
  56. கே. ஆர்.விஜயன் said...
    ஹலோ சேட்டன் உங்க லக்கேஜ்ல கண்டிப்பா தங்கம் இருக்கு ஏன்னா மிஷின் [[அசின் அல்ல]] பொய் சொல்லாது என்று வடிவேலு ரேஞ்சுக்கு அழாத குறையாக கேட்டும் சேட்டன் அசரவில்லை..///

    இங்கே தான் நிற்குறார் நாஞ்சில் மனோ///

    யோவ் என்ன உள்குத்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  57. மனோ இதெல்லாம் பழைய டெக்னிக்கா போச்சு சாரே! இப்பவெல்லாம் கஸ்டம்ஸ் காரங்க ஒன்னையும் விடுறதில்லை. சந்தேகம் வந்தால் தலைமுடி, கால் ஷூ முதல் கொண்டு எல்லாத்தயும் ஆராய்கிறார்கள். எல்லாம் பார்த்து தெரிந்துகொண்டது.

    ReplyDelete
  58. இளம் தூயவன் said...
    மலையாளியா கொக்கா.//


    கொக்கா மலையாளியா'ன்னும் சொல்லலாம்...

    ReplyDelete
  59. அண்ணாச்சி தங்கம் மலையாளிக்கு கிடைத்ததா இல்லையா??
    நல்ல பதிவு நல்ல ஐடியா

    ReplyDelete
  60. அமுதா கிருஷ்ணா said...
    ஆஹா சூப்பர் ஐடியா..//

    நீங்களும் இந்த மாதிரி செய்து மாட்டிக்காதீங்கோ...

    ReplyDelete
  61. கக்கு - மாணிக்கம் said...
    மனோ இதெல்லாம் பழைய டெக்னிக்கா போச்சு சாரே! இப்பவெல்லாம் கஸ்டம்ஸ் காரங்க ஒன்னையும் விடுறதில்லை. சந்தேகம் வந்தால் தலைமுடி, கால் ஷூ முதல் கொண்டு எல்லாத்தயும் ஆராய்கிறார்கள். எல்லாம் பார்த்து தெரிந்துகொண்டது.//

    இது நடந்து பல காலமாச்சு சாரே...

    ReplyDelete
  62. A.R.ராஜகோபாலன் said...
    அண்ணாச்சி தங்கம் மலையாளிக்கு கிடைத்ததா இல்லையா??
    நல்ல பதிவு நல்ல ஐடியா//

    அதான் சைன் வாங்கிட்டு போயிட்டானே...

    ReplyDelete
  63. அடப்பாவிகளா இப்படியும் தங்கம் கடத்தலாமா? ரொம்ப புதுஷா இருக்கே! அந்த சேட்டு கொஞசமாவது பயந்தாரா? [ நயந்தாரா அல்ல)

    ReplyDelete
  64. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    அடப்பாவிகளா இப்படியும் தங்கம் கடத்தலாமா? ரொம்ப புதுஷா இருக்கே! அந்த சேட்டு கொஞசமாவது பயந்தாரா? [ நயந்தாரா அல்ல)//


    பயந்தா பொழைக்க முடியுமா...
    ஜோ டர்கயா சம்ஜோ ஓ மர்கயா...

    ReplyDelete
  65. இதே மாதிரி கடத்துரன்னு வெளிக்கிட்டு மனோ பிடிபடல தானே??

    ReplyDelete
  66. எப்பிடி நம்ம பெபோர்மன்ச்சு இன்னிக்கு??

    ReplyDelete
  67. மைந்தன் சிவா said...
    இதே மாதிரி கடத்துரன்னு வெளிக்கிட்டு மனோ பிடிபடல தானே??

    May 31, 2011 8:51 AM
    மைந்தன் சிவா said...
    எப்பிடி நம்ம பெபோர்மன்ச்சு இன்னிக்கு??//

    பெர்பாமேன்சா...?? இங்கே என்ன சினிமாவா எடுக்குராயிங்க...

    ReplyDelete
  68. மாமா சேட்டன்கள் நல்ல தக்காளிகள் எங்களை சட்டினியாக்கினவர்கள் இவர்கள் தானே!

    ReplyDelete
  69. கலக்கல் ..ஒன்னொன்னா சொல்லுங்கண்ணே..

    ReplyDelete
  70. मनो बैया, पधिवु सूप्पर है. बहुत अच्चा है. दिलवाले धुल्हानिया ले जायेंगे. बाज़ीगर. कुछ कुछ होता है.

    ReplyDelete
  71. கலக்கல் முழுசா ரசிச்சு படிச்சேன்..

    ReplyDelete
  72. சேட்டனின் லீலைகள் தலைப்பு மட்டும் விவகாரமா இருக்கு

    ReplyDelete
  73. ஒயருக்குள் தங்கம் கடத்துனதை சொல்லியிருக்ககூடாது..அடுத்த தபா புதுசா யோசிக்கணுமே

    ReplyDelete
  74. Nesan said...
    மாமா சேட்டன்கள் நல்ல தக்காளிகள் எங்களை சட்டினியாக்கினவர்கள் இவர்கள் தானே!//

    'மாமா' ஹேய் இது சூப்பரா இருக்கே...?

    ReplyDelete
  75. செங்கோவி said...
    கலக்கல் ..ஒன்னொன்னா சொல்லுங்கண்ணே..

    1 2 3 4 5 6 7 8 9 10 ஹி ஹி சொல்லிட்டேன்....

    ReplyDelete
  76. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    கலக்கல் முழுசா ரசிச்சு படிச்சேன்..//

    நன்றி...

    ReplyDelete
  77. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    ஒயருக்குள் தங்கம் கடத்துனதை சொல்லியிருக்ககூடாது..அடுத்த தபா புதுசா யோசிக்கணுமே//

    யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை மக்கா நடந்த சுவாரஷ்யமான சம்பவங்கள் நிறைய கைவசம் இருக்கு ஹி ஹி...

    ReplyDelete
  78. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    சேட்டனின் லீலைகள் தலைப்பு மட்டும் விவகாரமா இருக்கு//

    இது சிபி பண்ணுன அநியாயமாக்கும்...

    ReplyDelete
  79. பதினேழாவது மலையாள சேட்டனா நான் வந்திருக்கேன். அவ்...

    ReplyDelete
  80. பாஸ், அருமையான ஐடியாவினைப் பயன்படுத்தித் தான் தங்கத்தைக் கடத்தியிருக்கார் சேட்டன்.

    ReplyDelete
  81. இது போன்ற டக்கால்டிகளை எதிர்பார்த்திருக்கிறோம்.

    ReplyDelete
  82. அடிச்ச கோளு சேட்டனுக்கு! கொள்ளாம்!
    இது மாதிரி மற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் மனோ சேட்டன்!

    ReplyDelete
  83. நிரூபன் said...
    பதினேழாவது மலையாள சேட்டனா நான் வந்திருக்கேன். அவ்...//

    ஹே ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  84. நிரூபன் said...
    பாஸ், அருமையான ஐடியாவினைப் பயன்படுத்தித் தான் தங்கத்தைக் கடத்தியிருக்கார் சேட்டன்.//

    சேட்டன் வாழ்க...

    ReplyDelete
  85. நிரூபன் said...
    இது போன்ற டக்கால்டிகளை எதிர்பார்த்திருக்கிறோம்.//

    ஹி ஹி தொடரும்......

    ReplyDelete
  86. சென்னை பித்தன் said...
    அடிச்ச கோளு சேட்டனுக்கு! கொள்ளாம்!
    இது மாதிரி மற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் மனோ சேட்டன்!//

    ஓகே தல....

    ReplyDelete
  87. நேரில் பார்த்த இன்னும் பல டக்கால்டி'கள் உண்டு, ஒன்னொன்னா சொல்றேன் என்ன...!!!///


    innum solalaye ninga

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!