Saturday, October 15, 2011

தமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...!!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை கொன்றாய், தாடவையின் கையிலிருக்கும் நீ....!!!



இன்று அடிமடியிலேயே கையை வைத்திருக்கிறாய் தமிழ்நாட்டில், இது என்ன ஸ்பெக்ட்ரம் என நினைத்தாயா சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்ல...?? மக்கள் விட்டுகொண்டிருக்கும் பெருமூச்சிலேயே நீ பொசுங்கி போவாய்...!!!

உனக்கு வெக்கம் இல்லையா, ஈனம் இல்லையா, மானம் இல்லையா, இல்லை ரோஷம்தான் இல்லையா...??? ஊனமுற்ற மாற்று திறனாளிகளை தாக்க, எப்படி மனம் வந்தது...?? அவர்களின் சாபம் உன்னை சும்மா விடுமோ..???


யார் இந்த இளங்கோவன்...?? யார் இந்த தங்கபாலு...?? இவர்களுக்கு மக்களை பற்றி என்ன அக்கறை இருக்கிறது...? சூனியா பூந்தியை குளிர்விக்க இவர்கள் செய்யும் இடும்புகள் கொஞ்சநஞ்சமல்ல...!!!


முதல்வர் அம்மா அவர்கள் குரல் கொடுத்தும், நீ அங்கிருந்து கடிதம் அனுப்பி கொண்டிருக்கிறாய்...!!! இதென்ன பழக்கம்..?? கலைஞர் வழியை பின் பற்றினால் விளைவு, விலாசம் இல்லாமல் போகவேண்டியதுதான்...!!!


முதலில் உங்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்களை [[இருந்தாதானே]] கூடங்குளத்தில் தங்கி வாழசொல்லுங்கள் பார்க்கலாம்...? கட்சியைவிட்டே ஓடிவிடுவார்கள்...!!!

மக்கள் போராட்டம் வெல்வதுதான் சரித்திரம்!!! ஆனால் நீ காந்தி பாதையை மீறி பல காலமாகிவிட்டது என்பதும் எங்களுக்கு தெரியும், ஆனாலும் கலகம் பிறவாது  நீதி கிடைக்காது என்பதும் உண்மையே...!!!


ஜப்பான் அழிவுகளை கண்முன்னால் கண்டும் நீ, மக்கள் நலம் காக்க முன்வராமல் சாக்குபோக்கு சொல்லிகொண்டிருக்கிறாய். ரஷ்ய ராஜதந்திர உறவு வேணும்தான் ஆனால், மக்களுக்கு அழிவு பீதியை உண்டாக்கும் ராஜதந்திரம், பிஞ்ச செருப்புக்கு சமம்...!!!

உண்ணாவிரதம் நடக்கும் ஸ்தலத்திற்கு போக அனுமதி அளிக்காமல் மக்களை தடுக்கும் போலீஸ், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவே நாங்கள் போராடுகிறோம்...!!!


காங்கிரசின் அல்லக்கைகள், வெட்டி பேச்சு பேசாமல் தைரியமிருந்தால், மக்கள் மீது அக்கறை இருந்தால், அணுமின் நிலையம் அருகில் மக்களோடு மக்களாக குடியேறுங்கள் பார்ப்போம்...!!!

பாதுகாப்பானது பாதுகாப்பானது என வெறும் வாயை மெல்லுகிற நீங்கள், ஆலை ஆபத்தின் போது மக்கள் எப்படி தப்பவேண்டும், அவர்களின் மறுவாழ்வின் அடிப்படை தேவைகள் என்ன என்பதனை சோதனை செய்து காட்டுனீர்களா...???


ஜப்பான், அழிவின் நிறைய விஷயங்களை உலகுக்கு மறைத்து விட்டது அதாவது உங்களுக்கு தெரியுமா சிங்கிடி சாமி...???

பெரும் பொருளாதார மேதை என்று நினைத்த என் நினைப்பில் மண்[ன்] அள்ளிப்போட்டுவிட்டு, சூனியா பூந்தியின் சேலை ஓரத்தை பிடித்து தொங்குவதென்ன, அற்பமான நாற்காலி ஆசைதானே அல்லாமல், மக்கள் நலனுக்கு அல்ல என்பது எப்போதோ உங்களை பற்றி சந்தி சிரிக்க ஆரம்பிச்சாச்சு...!!!


அடுத்து, ஊடகங்கள் பலமாக மூடி மறைக்கும் போக்கு என்னவென்றே புரியவில்லை...!!!???  ஏன் நடுநிலை கொள்கையை தளர்த்தி விட்டார்கள்...?? இதற்க்கு பின்பாக ஏதும் சக்தி இருக்கிறதா..? அது என்ன சக்தி..??

[[நெருங்கிய நண்பர்களுக்கு கூட அணுமின் நிலையத்தின் விபரீதம் தெரியாமல்தான் இருந்தார்கள், இப்போது எல்லாம் எடுத்து விளக்கியபின், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம்...!!!]]


இனி உங்களுக்கு ஆயுள் இல்லை என்பது என் சாபம் மட்டுமல்ல, மக்கள் நலம் விரும்பும் நல்லோரின் சாபமும் கூட....கடைசியாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கேள்வியோடு முடிக்கிறேன், உங்கள் தங்க தானை தலைவி குடும்பம் மட்டும் அங்கே வந்து குடியேறட்டும் பார்ப்போம்...???

--------------------------------------------------------------------------------------


கூடன்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முற்றுகை போராட்டம் நடந்தது.அங்கு மக்கள் உணவருந்த சாப்படுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
இதற்கு ஊடகங்கள் திரு.உதயகுமார் அவர்களிடம் இவ்வளவு செலவு செய்கிறீர்களே இதற்க்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது?என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு உதயகுமாரும் மக்கள் தான் தந்தார்கள்.வேறு யாரும் எங்களுக்கு தரவில்லை என்று கூறினார்.வெறும் 20 மக்களை(வறுமை கோட்டிற்க்குகீழ் உள்ள மக்களை) கொண்டு இருக்கும் காமநேரி என்ற ஊர் மக்கள் 3500-ரூபாய் தந்தார்கள் எனவும் கூறினார்.

எங்களிடம் கணக்கு வழக்கு கேட்கிறீர்களே.அப்படியென்றால் நீங்கள்உங்களது அணு உலையின் வரவு செலவு கணக்குகளை காட்டுங்கள்.என்று ஊடகத்தின் வாயிலாக கேட்டார்.ஆனால் ஊடகமோ இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை இது வருத்தத்தை அளிக்கிறது.
[[நன்றி "வைறை சதீஷ்"]]

ஊடகங்களே கொஞ்சம் மக்கள் நிலையையும், ஏன் உங்கள் நிலைமையையும் யோசித்து நடுநிலைமையாக செயல்படுங்கள், இது உயிர் பிரச்சினை, பாழாய் போன அரசியல் பிரச்சினை இல்லை....

பணம் என்ன பணம், போராட்டத்துக்காக நாங்கள் பணம் அனுப்பவும் தயாராக இருக்கிறோம்...!!

----------------------------------------------------------------------------------
வைறை சதீஷ் பிளாக்.

கவிதை வீதி'சவுந்திரபாண்டியன் பிளாக்.

தம்பி கூடல் பாலா பிளாக், இவர் ஏற்கெனவே உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்..!!!

நண்பன் சூர்யா ஜீவா பிளாக்.

நண்பன் விக்கியின் பிளாக்.

பூவுலகின் நண்பர்கள் பிளாக்.

தமிழ் மீடியா.

பூந்தளிர் பிளாக்.

ஊடறு பிளாக்.
புலவர் இராமாநுசம் அய்யா'வின் பிளாக்.
http://pulavarkural.blogspot.com/2011/10/blog-post_15.html

இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்...!!!

டிஸ்கி : நான் போராட்ட களத்தில் உங்களுடன் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன், அல்லாமலும் எனது மனம் முழுவதும் அங்கேயே இருக்கிறது. மனம் தளராமல் போராடும் டாக்டர் . உதயகுமாருக்கும், தம்பி கூடல் பாலா போன்றோருக்கும், இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் "நாஞ்சில் மனோ" தெரிவித்து, தலைவணங்கி ராயல் சல்யூட் செய்கிறேன் நன்றி....

 படங்கள் நன்றி கூகுள்.


44 comments:

  1. மனோ சார், hats off to you
    இன்குலாப் ஜிந்தாபாத்

    ReplyDelete
  2. \\\பாதுகாப்பானது பாதுகாப்பானது என வெறும் வாயை மெல்லுகிற நீங்கள், ஆலை ஆபத்தின் போது மக்கள் எப்படி தப்பவேண்டும், அவர்களின் மறுவாழ்வின் அடிப்படை தேவைகள் என்ன என்பதனை சோதனை செய்து காட்டுனீர்களா...???\\\ அணுசக்தி நிர்வாகத்தின் வீக் பாய்ண்டே இப்போது இதுதான்

    ReplyDelete
  3. \\\நான் போராட்ட களத்தில் உங்களுடன் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன், அல்லாமலும் எனது மனம் முழுவதும் அங்கேயே இருக்கிறது.\\\ உங்களை நினைத்து பெருமைகொள்கிறேன் ...இது மட்டும் போதும் எங்களுக்கு .

    ReplyDelete
  4. உங்கள் உயிரென்ன பூவால் செய்ததா?
    எங்கள் உயிர் மட்டும் களிமண்ணால் செய்ததா?
    வாங்க வங்க உனக்கும் எனக்கும் சோடி போட்டு பார்ப்போம் சோடி....
    வாங்கய்யா வாங்க
    எல்லாம் உத்திரவாதமா பாதுகாப்பா இருக்குன்னா
    நீங்களும் இங்கே வந்து தங்குங்க..

    பதிவு நன்று மக்களே..

    ReplyDelete
  5. suryajeeva said...
    மனோ சார், hats off to you
    இன்குலாப் ஜிந்தாபாத்//

    அணுமின் நிலையம் முர்தாபாத்...

    ReplyDelete
  6. koodal bala said...
    \\\பாதுகாப்பானது பாதுகாப்பானது என வெறும் வாயை மெல்லுகிற நீங்கள், ஆலை ஆபத்தின் போது மக்கள் எப்படி தப்பவேண்டும், அவர்களின் மறுவாழ்வின் அடிப்படை தேவைகள் என்ன என்பதனை சோதனை செய்து காட்டுனீர்களா...???\\\

    அணுசக்தி நிர்வாகத்தின் வீக் பாய்ண்டே இப்போது இதுதான்//

    அதுலயே ஆப்பு வச்சுரனும்...

    ReplyDelete
  7. koodal bala said...
    \\\நான் போராட்ட களத்தில் உங்களுடன் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன், அல்லாமலும் எனது மனம் முழுவதும் அங்கேயே இருக்கிறது.\\\

    உங்களை நினைத்து பெருமைகொள்கிறேன் ...இது மட்டும் போதும் எங்களுக்கு .//

    நன்றி மக்கா..

    ReplyDelete
  8. மகேந்திரன் said...
    உங்கள் உயிரென்ன பூவால் செய்ததா?
    எங்கள் உயிர் மட்டும் களிமண்ணால் செய்ததா?
    வாங்க வங்க உனக்கும் எனக்கும் சோடி போட்டு பார்ப்போம் சோடி....
    வாங்கய்யா வாங்க
    எல்லாம் உத்திரவாதமா பாதுகாப்பா இருக்குன்னா
    நீங்களும் இங்கே வந்து தங்குங்க..

    பதிவு நன்று மக்களே..//

    கூப்பிடுங்க சோடி போட்டு பாத்துருவோம் அவனுகளை...

    ReplyDelete
  9. உணர்ச்சி பிரவாகம்.

    ReplyDelete
  10. 1-வது படமும் 5-வது படமும் அசத்தல்


    இன்குலாப் ஜிந்தாபாத்

    ReplyDelete
  11. நியாயமான கோபம்தான்

    //உங்களுக்கு ஆயுள் இல்லை என்பது என் சாபம் மட்டுமல்ல, மக்கள் நலம் விரும்பும் நல்லோரின் சாபமும் கூட//

    அரசியல் பண்ணுரான்கலாம்... தமிழன் உயிர் அவ்வளவு மலிவாகவ போச்சி

    ReplyDelete
  12. யார் இந்த இளங்கோவன்...?? யார் இந்த தங்கபாலு...?? இவர்களுக்கு மக்களை பற்றி என்ன அக்கறை இருக்கிறது...? சூனியா பூந்தியை குளிர்விக்க இவர்கள் செய்யும் இடும்புகள் கொஞ்சநஞ்சமல்ல...!!!//ஐயா இதுகளுக்கு கொஞ்சமாவது நட்டு நலனைப் பற்றி அக்கறை இருந்தால் இப்படி மக்களுக்கு எதிராக செயல் படுவார்களா ? நாம் இதுகளை அடையலாம் கொள்ள வேண்டும் இதுகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் ...

    ReplyDelete
  13. FOOD said... 17 18
    உணர்ச்சி பிரவாகம்.//

    ரத்தம் கொதிக்குது ஆபீசர்...

    ReplyDelete
  14. வைரை சதிஷ் said...
    1-வது படமும் 5-வது படமும் அசத்தல்


    இன்குலாப் ஜிந்தாபாத்//

    அணுமின் நிலையம் முர்தாபாத்...

    ReplyDelete
  15. மனசாட்சி said...
    நியாயமான கோபம்தான்

    //உங்களுக்கு ஆயுள் இல்லை என்பது என் சாபம் மட்டுமல்ல, மக்கள் நலம் விரும்பும் நல்லோரின் சாபமும் கூட//

    அரசியல் பண்ணுரான்கலாம்... தமிழன் உயிர் அவ்வளவு மலிவாகவ போச்சி//

    எலியை விட கேவலமா நினச்சிட்டானுங்க, ஏன் டெல்லியில் எம்புட்டோ பெரிய நிலப்பரப்புகள் இருக்கே அங்கே கொண்டு போய் வைக்கவேண்டியதுதானே கொய்யால...

    ReplyDelete
  16. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    இன்குலாப் ஜிந்தாபாத் .//

    அதே அதே.....

    ReplyDelete
  17. மாலதி said...
    யார் இந்த இளங்கோவன்...?? யார் இந்த தங்கபாலு...?? இவர்களுக்கு மக்களை பற்றி என்ன அக்கறை இருக்கிறது...? சூனியா பூந்தியை குளிர்விக்க இவர்கள் செய்யும் இடும்புகள் கொஞ்சநஞ்சமல்ல...!!!//ஐயா இதுகளுக்கு கொஞ்சமாவது நட்டு நலனைப் பற்றி அக்கறை இருந்தால் இப்படி மக்களுக்கு எதிராக செயல் படுவார்களா ? நாம் இதுகளை அடையலாம் கொள்ள வேண்டும் இதுகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் ...//

    இவனுக ஏற்கனவே முடிஞ்சி போனவனுகதான் மாலதி,ஆனால் பாருங்க ஊடகங்கள் இவனுக பேச்சைத்தான் பிரதானமாக போடுதுக.....

    இனி வருங்காலம், ஒருத்தனும் நியூஸ் பேப்பர் வாங்கமாட்டாங்க காரணம், வலைபதிவர்களே நியூஸ் பதிவு தொடங்கிருவாங்க, அப்போ இருக்கு இவனுங்களுக்கு ஆப்பு...

    ReplyDelete
  18. கட்சிக்கு கொள்கை இருக்கிறதோ இல்லையோ? தப்பித் தவறி தெரியாமல் இருந்துவிட்டாலும் அதை இவர்கள் கடைப் பிடிக்கிறார்களோ இல்லையோ? அரசியல் வாதியாக இருக்கும் போது சூடு சுரணை இல்லாமல் இருப்போம் என்ற எண்ணத்தை, கொள்கையை கடைபிடிக்கும் இளங்கோவன், தங்கபாலு போன்ற புல்லுருவிகள் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் நிகழ்வே செய்யும். அருமையான பதிவு மனோ சார்

    ReplyDelete
  19. உணர்ச்சி பிரவாகம்... அருமையான பதிவு.

    ReplyDelete
  20. தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பலாம்னு நினைக்கிறேன்...... மக்கள் அதையும் வலியுறுத்தலாம்!

    ReplyDelete
  21. அக்னி பதிவு .-
    உங்களுடன்
    பதிவு உலகில் நானும்
    ஒருவன் என
    பெருமைப்படும்
    பதிவு ....
    நல்லது நடக்கும்...

    ReplyDelete
  22. அக்னி பதிவு .-
    உங்களுடன்
    பதிவு உலகில் நானும்
    ஒருவன் என
    பெருமைப்படும்
    பதிவு ....
    நல்லது நடக்கும்...

    ReplyDelete
  23. நம்மையும் ஏமாற்றி !
    நம் ஊருக்குள் இருக்கும் ...தங்கபாலு
    ஏன் சொந்தமாக நான்கு டிவி சனல்
    வைத்து உள்ளார் .
    காரணம் புரிகிறதா ?????

    ReplyDelete
  24. நம்மையும் ஏமாற்றி !
    நம் ஊருக்குள் இருக்கும் ...தங்கபாலு
    ஏன் சொந்தமாக நான்கு டிவி சனல்
    வைத்து உள்ளார் .
    காரணம் புரிகிறதா ?????

    ReplyDelete
  25. கடிதம் எழதி எமாற்றும் வழி+ வலி ......
    .ஜெயலலிதா !!மன்மோகன் !!!
    சூப்பர் .வாழ்க நம் ஜனநாயகம் !!!!

    ReplyDelete
  26. கடிதம் எழதி எமாற்றும் வழி+ வலி ......
    .ஜெயலலிதா !!மன்மோகன் !!!
    சூப்பர் .வாழ்க நம் ஜனநாயகம் !!!!

    ReplyDelete
  27. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்.

    http://lawyersundar.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  28. இன்குலாப் ஜிந்தாபாத் .

    ReplyDelete
  29. நிவாஸ் said... 37 38
    கட்சிக்கு கொள்கை இருக்கிறதோ இல்லையோ? தப்பித் தவறி தெரியாமல் இருந்துவிட்டாலும் அதை இவர்கள் கடைப் பிடிக்கிறார்களோ இல்லையோ? அரசியல் வாதியாக இருக்கும் போது சூடு சுரணை இல்லாமல் இருப்போம் என்ற எண்ணத்தை, கொள்கையை கடைபிடிக்கும் இளங்கோவன், தங்கபாலு போன்ற புல்லுருவிகள் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் நிகழ்வே செய்யும். அருமையான பதிவு மனோ சார்//

    சொந்த கட்சிகாரனே இவர்கள் உருவபொம்மையை எரித்து காறி துப்பியும் இவர்கள் அடங்கவில்லை துரோகிகள்...!!!

    ReplyDelete
  30. சே.குமார் said...
    உணர்ச்சி பிரவாகம்... அருமையான பதிவு.//

    நன்றி குமார்....

    ReplyDelete
  31. இராஜராஜேஸ்வரி said... 41 42
    மனம் தளராமல் போராடும் டாக்டர் . உதயகுமாருக்கும், தம்பி கூடல் பாலா போன்றோருக்கும், இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் ஆதரவையும் நாங்களும் தெரிவித்துக்கொள்கிறோம்.//

    மிக்க நன்றி மேடம்...

    ReplyDelete
  32. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பலாம்னு நினைக்கிறேன்...... மக்கள் அதையும் வலியுறுத்தலாம்!//

    ஆமாய்யா இதுவும் நல்ல யோசனைதான்!!!!

    ReplyDelete
  33. யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
    அக்னி பதிவு .-
    உங்களுடன்
    பதிவு உலகில் நானும்
    ஒருவன் என
    பெருமைப்படும்
    பதிவு ....
    நல்லது நடக்கும்...//

    கண்டிப்பாக...

    ReplyDelete
  34. யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
    நம்மையும் ஏமாற்றி !
    நம் ஊருக்குள் இருக்கும் ...தங்கபாலு
    ஏன் சொந்தமாக நான்கு டிவி சனல்
    வைத்து உள்ளார் .
    காரணம் புரிகிறதா ?????//

    சாகும் போது கொண்டா போகப்போறாங்க தருதலைங்க...!!!

    ReplyDelete
  35. யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
    கடிதம் எழதி எமாற்றும் வழி+ வலி ......
    .ஜெயலலிதா !!மன்மோகன் !!!
    சூப்பர் .வாழ்க நம் ஜனநாயகம் !!!!//

    என்னாத்தை சொல்ல...

    ReplyDelete
  36. வழக்கறிஞர் சுந்தரராஜன் said...
    கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்.

    http://lawyersundar.blogspot.com/2011/10/blog-post.html//

    உங்க பதிவின் மகத்துவம் தெரிஞ்சி உடனே என் பேஸ்புக், பஸ்,டுவிட்டர்'ல எல்லாம் உங்கள் பதிவை ஷேர் பண்ணிட்டேன் சார்...

    ReplyDelete
  37. M.R said...
    இன்குலாப் ஜிந்தாபாத் .//

    அணுமின் நிலையம் முர்தாபாத்....

    ReplyDelete
  38. C.P. செந்தில்குமார் said... 79 80
    Thambi romba soodairuka.//

    ரெண்டு நாளா எங்கேடா போயிருந்தே ராஸ்கல்....

    ReplyDelete
  39. மக்களுக்காகத்தான் அரசாங்கம், அரசாங்கத்துக்காக மக்கள் இல்லை என்பதை இவங்க எப்போ உணரப்போராங்களோ...!!!???

    ReplyDelete
  40. வணக்கம் மனோ அண்ணா,
    உங்களுக்கு முதலில் இச் சிறியேனின் பாராட்டுக்கள்.
    மக்கள் பிரச்சினையினைப் புரிந்து கொள்ளாத அரசிற்கும், ஊடகவியலாளர்களிற்கும் அனல் பறக்கும் வார்த்தைகளால் சாட்டை அடி கொடுத்திருக்கிறீங்க.


    கடந்த கால அரசுகள் விட்ட தவறினை அம்மா நினைத்துப் பார்த்து கூடங்குளப் பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும் எனும் உண்மையினைச் சொல்லி நிற்கும் ஆழமான பதிவு இது!

    ReplyDelete
  41. கள்ளன்களுக்கு ஆப்படித்த சிறுவாண்டின் கதை அருமையாக உள்ளது

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!