Monday, May 13, 2013

கண்ணீர் அஞ்சலி.....!

கண்ணீர்....

நண்பனின் மரணம்.....

பட்டாபட்டி....சந்தோஷமாக இறைவனடி சேர்ந்தாய் எங்களை தவிக்க விட்டு விட்டு....நீ சந்தோசமாக இருடே....மக்கா அங்கே.....ஆனால் நாங்கள்...?


வானத்தில் இருந்து எங்கள் கண்ணீரை பாருடே மக்கா....!

உன் பிரிவில் வாடுவது உன் குடும்பம் மட்டும் இல்லை மக்கா.....நாங்களும்தாம்டே....

உன் குடும்பத்துக்கு ஆறுதலையும் தேறுதலையும் எல்லா வல்ல இறைவன் கொடுக்க வேண்டுகிறேன்.....

அண்ணனை விட்டுட்டு போயிட்டியேடே!

என் கண்ணீரை எந்த வார்த்தையில் சொல்லுவேம்லெய் மக்கா புரியலைடே....

உன்னை நான் நேரில் பார்த்தில்லை....உன் எழுத்துகள் என்னை ஒரு நிலைப்பாட்டில் வைத்திருந்தது....ஆனால் இனி......?

போடே...போடே....நாங்களும் அங்கேதானே வரவேண்டும் அன்று உன்னை கட்டி அணைப்பேன் நெஞ்சோடு.....தூங்கு செல்லம் தூங்கு.....ஆறுதலாக தூங்கு....உலகம் நமக்கு போராட்டம்தான்.....இப்போ நீ தூங்கு என் செல்லம் தூங்கு....

நாஞ்சில் மனோ வலைத்தளம்.......நம்முடைய நண்பனுக்காக.....அஞ்சலியும்....அவர் தம் குடும்பத்துக்கு இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறது.

கண்ணீர்கள்..... என்னோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

மாரடைப்பே....உனக்கு ஒரு மாரடைப்பு வராதா.....

மரணமே உனக்கு ஒரு மரணம் வாராதா...

ஏய்....நாசமா போன கண்ணீரே உனக்கு ஒரு கண்ணீர் வாராதா....

என் நண்பனை கொண்டு போயிட்டியே.....

உன்னை கொண்டு போக யாருமே இல்லையா....

நண்பா..... நண்பா.... நண்பா.......

வாறேம்டேய்....நாங்களும் உன்னைப் பார்க்க....

உன் வழிதனை நிறைவேற்றுவேன் நானும் முடிந்தவரை....எனக்குத் தெரியும் உன் எண்ணம்....

தூங்குடேய் மக்கா நிம்மதியாக தூங்கு....நாங்கள் உன் பின்னால்....!

கண்ணீர் அஞ்சலி.....!


21 comments:

 1. எமது ஆழ்ந்த இரங்கல்கள்...

  ReplyDelete
 2. தங்களுக்கும், தங்களின் நண்பரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் அய்யா.

  ReplyDelete
 3. மனம் கனக்குது மக்களே..
  நம்பமுடியவில்லை..செய்தியை..
  நண்பர் பட்டாபட்டியின் திருவடிகளுக்கு என் மலரஞ்சலிகள்..
  நண்பரின் இன்னுயிர் இறைவன் திருவடியில் இளைப்பாரட்டும்...
  அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்..

  ReplyDelete
 4. அவரது முகம் கூட தெரியாது. ஆனாலும் எதோ ஒரு உறவு இருந்ததை போன்ற உணர்வு. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்

  ReplyDelete
 5. பட்டாபட்டிக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் :(((

  ReplyDelete
 6. கண்ணீர் அஞ்சலிகள் வேறு என்ன சொல்ல?... பேசியதில்லை பழகியதில்லை என்றாலும் நண்பன் மறைந்ததை போன்ற துக்கம் ... நண்பரே இறைவனடியில் நிம்மதியாக துயில் கொள்ளுங்கள்

  ReplyDelete
 7. எமது ஆழ்ந்த இரங்கல்கள்..

  ReplyDelete
 8. பதிவுலகில் தனக்கென தனிப்பட்ட பாணியில் அனைவரும் மனதிலும் இடம்பிடித்தவர்...

  நண்பரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...

  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்...

  ReplyDelete
 9. கண்ணீர் அஞ்சலி....

  அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தவிர வேறென்ன சொல்ல முடியும் இப்போது.....

  ReplyDelete
 10. ஆழ்ந்த இரங்கல்கள். யார் அவர் மனோ?. புகைப்படம் போடலாமே.

  ReplyDelete
 11. அதிர்ச்சியாக இருக்கிறது...ஆழ்ந்த இரங்கல்கள்!!!

  ReplyDelete
 12. வருந்தும் உன் மனதுக்கு ஆறுதலாய் ஒரு
  வார்த்தை கூட இல்லை இந்நேரம் :(
  திருத்தாத மரணத்தால் வந்த துயர் உனக்கும்
  உன் நண்பனின் உறவுகளுக்கும் தீர வேண்டும் என்றே
  கனத்த மனத்துடன் என் கண்ணீர் அஞ்சலியைச்
  சமர்பிக்கின்றேன் சகோதரா :((((

  ReplyDelete
 13. இறையடி சேர்ந்த அன்பர் தம் ஆன்மா
  இணையற்ற சொர்க்கத்தில் இதமாகத் தூங்கட்டும் !

  ReplyDelete
 14. ஆழ்ந்த இரங்கல்கள் . ..இறைவன் அவரது குடும்பத்துக்குமற்றும் அவரை பிரிந்து வாடும் நண்பர்களுக்கும் ஆறுதலை தருவாராக .

  ReplyDelete
 15. வருந்துகிறேன்... :-((
  http://swamysmusings.blogspot.com/2013/05/blog-post_4497.html

  ReplyDelete
 16. ஆழ்ந்த இரங்கல்கள்!

  -Maakkaan.

  ReplyDelete
 17. நண்பர்களே...
  நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
  அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
  நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
  பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
  எதுவும் வெளியிடாமல்...
  அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
  இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

  அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
  இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 18. பட்டபட்டி அவர்களைப் பற்றி அவரது இறப்புக்கு முன் அறியாதவனாக இருந்தேன். இத்தனை பேரைக் கவர்ந்த அந்த உள்ளம் அமைதியில் உறங்கட்டும்.

  ReplyDelete
 19. எமது ஆழ்ந்த இரங்கல்கள்..

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!