Thursday, December 22, 2011

கொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...!!!

தொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக்கிறது, பஹ்ரைனில் வேலை பார்க்கும் பங்களாதேஷ் நாட்டுக்காரனுகளுக்கு, தொண்ணூறு சதவீதம் ஆளுங்களுக்கு தொப்பையே இல்லையே ஏன்........?



பயங்கரமான ஆராய்ச்சி.....[[அதுக்கு ஏன் மேலே பாக்குறீங்க]] 

அப்புறம் ரிப்போர்ட் எடுத்து பார்த்தால் சிம்பிள் மேட்டருய்யா, தொப்பையில்லாத பங்காளிகள் எல்லார் கையிலும் சொந்தமா சைக்கிள் வச்சிருக்காங்க, எங்கே போனாலும் சைக்கிள்லதான் போயிட்டு வாறாங்க...!!!


சைக்கிள் இல்லாத பங்காளிகளுக்கு தொப்பை விழுந்துருக்கு, நம்மாளுங்க இருக்காங்களே செனை பன்னி மாதிரி [[பன்னிகுட்டி அல்ல]] தின்னுப்புட்டு கார்ல சுத்துரானுக, பின்னே எப்பிடி தொப்பை வராமல் இருக்கும்...?


அப்போ சைக்கிள் ஓட்டினால் தொப்பை வராது மக்களே, நல்ல உடற்பயிற்சியும் கூட, பெட்ரோல் காசு மிச்சம், கூச்சத்தை பார்க்காமல் சைக்கிள்ல வேலைக்கு போகலாம், காய்கறி வாங்க, டீ குடிக்க போகும் போதெல்லாம் சைக்கிள்ல போக பழகுங்கள் உடல் ஆரோக்கியம் பெரும்...!!!


இவளவுக்கும் பங்காளிகள் சாப்பிடுவது மூன்று வேளையும் அரிசி சாதம் என்பது குறிப்பிடத்தக்கதும் அல்லாமல், நாம் மீன்கறியோ, ஆட்டுக்கறியோ வைக்கும் போது தண்ணீர்தானே ஊற்றுவோம், அவர்கள் அந்த அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெயை சாப்புடுகிறார்கள்...!!!


நானும் இப்போது காரில் வேலைக்கு போவதில்லை, என் கூட வேலைபார்க்கும் அனில் அண்ணன் ஒரு சைக்கிள் வாங்கி தந்துள்ளார், அதில்தான் வேலைக்கு போவதும் வருவதும்னு இருக்கேன், என்னை தெரிந்தவர்கள் நான் சைக்கிள் போவதை பார்க்கும் போது, ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ஹி ஹி...!!!


சரி கிளம்புங்க சைக்கிள் வாங்க......காசும் மிச்சம், உடலும் சச்சம்.....!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர் எங்கள் நெஞ்சத்தில் என்று மாமனிதர் பென்னிகுக்கை சொன்னோம், இனி அவர் பேரனையும் அந்த லிஸ்டில் சேர்க்கப்போகிறோம், ஆம் கழிந்த 2005 ஆண்டு முல்லைப்பெரியார் அணையை வந்து பார்வையிட்டு சென்றாராம்...!!!


இங்கே முல்லைப்பெரியார் பிரச்சினை நடப்பதை அறிந்து, சட்டம் பயின்றவரான [[பேஸ்புக்கில் வந்த செய்தி இது, அவர் பெயரை போடவில்லை]] அவர் விரைவில் தமிழகம் வர இருக்கிறாராம், அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து வாழ்த்துவோம் நண்பர்களே...!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


குழந்தைகள் காலை எழும்பிதும் முதலில் செய்யும் வேலை டிவியை ஆன் செய்வது என்னடான்னு பார்த்தா தப்பு நம்ம மேலேயே இருக்கு, என்ன..? நான் எழும்பியதும் பல்லுகூட தேய்க்காமல் ஆன் செய்வது லேப்டாப்பை...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------


இவ்வளவு கண்டிப்பாக முல்லைப்பெரியார் போராட்டம் நடந்தும் கேரளாவுக்கு மணல் கடத்தல் ஜாம் ஜாம்னு நடந்துகிட்டு இருப்பதை நினைத்தால், அந்த தமிழனை [[துரோகி]] நினைத்து வேதனையாக இருக்கிறது, ஒற்றுமையா இருங்கடா டுபுக்குகளா...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------


தமிழகம் வரும் பொளந்தமருக்கு ச்சே ச்சீ பிரதமருக்கு [[அப்பிடியா]] முல்லைப்பெரியார் பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் இருப்பதால், அன்றைய தினம் தமிழக மக்கள் வாயில் துணி கட்டி நடந்தால் என்ன...???
-------------------------------------------------------------------------------------------------------------------


சிபி : அறிவிருக்காடா உனக்கு...?

விக்கி : அதாண்டா எனக்கும் சந்தேகமா இருக்கு அறிவு இருந்தால் நீ எனக்கு சிநேகிதன் ஆகியிருக்க முடியாதே...!!!


45 comments:

  1. இன்றைய பதிவு செம கலக்கல் அண்ணா

    ReplyDelete
  2. மனோ அண்ணனுக்கு ஒரு சைக்கிள் பாஎசல்

    ReplyDelete
  3. கலக்கல்ஸ்! அப்புறம் உங்க லேப்டாப் பார்த்தேன்! :-)

    ReplyDelete
  4. மோனே ! ஞானும் சைக்கில் கொண்டே பணிக்கு போகும், வரும். மார்கெட் போகனுமெங்கில் காலுண்டல்லோ ??
    பட்சே, எனக்கும் கொறைச்சு கொடல் வண்டி யுண்டேடா? எந்து செய்யும் பறயு !

    ReplyDelete
  5. ////அப்போ சைக்கிள் ஓட்டினால் தொப்பை வராது மக்களே, நல்ல உடற்பயிற்சியும் கூட, பெட்ரோல் காசு மிச்சம், கூச்சத்தை பார்க்காமல் சைக்கிள்ல வேலைக்கு போகலாம், காய்கறி வாங்க, டீ குடிக்க போகும் போதெல்லாம் சைக்கிள்ல போக பழகுங்கள் உடல் ஆரோக்கியம் பெரும்...!!////

    எங்கள் ஊரில் பலரின் வாகனமே சைக்கிள் தான் பாஸ்

    ReplyDelete
  6. அருமையான தொகுப்புக்கள் பாஸ்

    ReplyDelete
  7. @ராஜி

    மிக்க நன்றி தங்கச்சி...!!!

    ReplyDelete
  8. @ராஜி

    சீக்கிரமா அனுப்புங்க சிபி ராஸ்கல்க்கு தெரியாமல் ஹி ஹி...

    ReplyDelete
  9. ஜீ... said...
    கலக்கல்ஸ்! அப்புறம் உங்க லேப்டாப் பார்த்தேன்! :-)//

    இப்போதான் பார்தீங்களாக்கும் ஹி ஹி..

    ReplyDelete
  10. கக்கு - மாணிக்கம் said...
    மோனே ! ஞானும் சைக்கில் கொண்டே பணிக்கு போகும், வரும். மார்கெட் போகனுமெங்கில் காலுண்டல்லோ ??
    பட்சே, எனக்கும் கொறைச்சு கொடல் வண்டி யுண்டேடா? எந்து செய்யும் பறயு !//

    சோறு சாப்புடுரதை கண்ட்ரோல் பண்ணுங்க அண்ணே...!

    ReplyDelete
  11. K.s.s.Rajh said...
    ////அப்போ சைக்கிள் ஓட்டினால் தொப்பை வராது மக்களே, நல்ல உடற்பயிற்சியும் கூட, பெட்ரோல் காசு மிச்சம், கூச்சத்தை பார்க்காமல் சைக்கிள்ல வேலைக்கு போகலாம், காய்கறி வாங்க, டீ குடிக்க போகும் போதெல்லாம் சைக்கிள்ல போக பழகுங்கள் உடல் ஆரோக்கியம் பெரும்...!!////

    எங்கள் ஊரில் பலரின் வாகனமே சைக்கிள் தான் பாஸ்//

    ரொம்ப நல்லது பாஸ்...!!!

    ReplyDelete
  12. K.s.s.Rajh said...
    அருமையான தொகுப்புக்கள் பாஸ்//

    மிக்க நன்றி மக்கா...

    ReplyDelete
  13. அண்ணே உங்க இள(!)மை ரகசியம் இதானா...ஹிஹி!

    ReplyDelete
  14. கலக்கல் பதிவு .
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. கலக்கல் யோசனைகள். கவனிக்கப்ப்படவேண்டியவை.

    ReplyDelete
  16. சிபிகிட்ட இல்லாததை விக்கிக்கிட்ட கேட்டிருக்கார். விடுங்க மனோ.

    ReplyDelete
  17. ஆனா அதையும் ஓசியில கேட்டிருப்பாரே!

    ReplyDelete
  18. சும்மா சொல்லக்கூடாது.

    அண்ணன் இன்னைக்கு அருசுவை விருந்து வெச்சிருக்கார்.

    //ஒற்றுமையா இருங்கடா டுபுக்குகளா...!!!//

    யோவ் என்னய்யா இது?

    நீங்க சொல்றமாதிரி ஒத்துமையா இருந்துட்டா, நம்ம இனத்துக்கே அவமானம்யா.

    ReplyDelete
  19. //நான் எழும்பியதும் பல்லுகூட தேய்க்காமல் ஆன் செய்வது லேப்டாப்பை...!!!
    //
    ரொம்ப நாளா லப் டாப் பத்தி வரலயேனு பார்த்தேன்

    ReplyDelete
  20. கடைசி ஜோக் உண்மை

    ReplyDelete
  21. லப் டாப் மனோ அண்ணன் அவர்கள்
    என்று முதல்
    தொப்பைக்கு GOOD BYE
    சொன்ன அண்ணாவாக அழைக்க படுகிறார்கள்
    பல்லு விளக்காத மனோ அண்ணன் வாழ்க

    ReplyDelete
  22. சைக்கிள் ஒட்டுனா தொப்பை குறையும்..நல்ல செய்திதான், ஆனா எங்க ஓட்டனும்?

    ReplyDelete
  23. கடைசி ஜோக்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  24. கேரளாவுக்கு தேவையான பாதியளவு மணல் தமிழகத்தில் இருந்துதான் போகிறது...

    அவ்வளவும் பணம்...

    அவர்களுக்கு ஆட்டுப்புழுக்கைதான் வேண்டாம்.. ஆடு வேண்டும்...

    நம்மிடமும் குறை இருக்கிறது லாரிகள் நிறுத்தியதில் உணர்வைவிட வாருமான இழப்பைத்தான் அதிகம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

    ReplyDelete
  25. அவ்வ்.. பாஸ் நானும் நாலு வருசமா சைக்கிள் தான் ஓட்டுறேன்.. தொப்பை குறையமாட்டேங்குதே

    ReplyDelete
  26. //குழந்தைகள் காலை எழும்பிதும் முதலில் செய்யும் வேலை டிவியை ஆன் செய்வது என்னடான்னு பார்த்தா தப்பு நம்ம மேலேயே இருக்கு, என்ன..? நான் எழும்பியதும் பல்லுகூட தேய்க்காமல் ஆன் செய்வது லேப்டாப்பை...!!!//

    சேம் பிளட்

    ReplyDelete
  27. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    கலக்கல் பதிவு .
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி நண்பா....

    ReplyDelete
  28. வண்டி ஆகாது ,,, சைக்கிள் மிகச்சிறந்தது தான் அண்ணே ..
    நம்மாளுகளுக்கு சும்மா பம்மாத்து கட்டுறதுல தான் ஈடுபாடு ஆதிகம் ...

    ReplyDelete
  29. வணக்கம்!

    //இவளவுக்கும் பங்காளிகள் சாப்பிடுவது மூன்று வேளையும் அரிசி சாதம் என்பது குறிப்பிடத்தக்கதும் அல்லாமல், நாம் மீன்கறியோ, ஆட்டுக்கறியோ வைக்கும் போது தண்ணீர்தானே ஊற்றுவோம், அவர்கள் அந்த அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெயை சாப்புடுகிறார்கள்...!!!//

    நல்ல விளக்கம்.

    ReplyDelete
  30. வணக்கம் அண்ணாச்சி...

    சைக்கிள் பயணம் நல்லதுதானு தோணுது.

    பெட்ரோல் விலைய பார்த்தால் பேசாம சைக்கிளுக்கே மாறிடலாமுன்னு கூட நினைச்சதுண்டு..

    ReplyDelete
  31. எனக்கு தொப்பை இல்லைப்பா.... ஹா ஹா....

    அப்புறம் ரெண்டாவது போட்டோவுல இருக்கிறது மனோ அண்ணா தானே..... :))))

    ReplyDelete
  32. அண்ணாச்சி..அறிவு வளருதோ..இல்லையோ...நமக்கு..
    தொப்பை வந்திருது...முக்கிய செய்தி விக்கியின் எடை 30 கிலோ குறைஞ்சிருச்சாம்....மூளையும் குறைஞ்சிருக்குமோ!...டவுட்
    அதா சிபி கேட்டதும் கடுப்பாயிட்டாரு போல...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  33. மொத படத்துல எடது ஓரத்ல இருக்குற உங்க ஸ்டில் சூப்பர் அப்பு!!

    ReplyDelete
  34. மனோசார் உங்க ஐடியா நல்லா இருக்கு ஆனா உங்க தொப்பை குறைய என் கிட்ட சூப்பர் ஐடியா இருக்கு அது என்ன தெரியுமா? லேப்டாப் முன்னால நீங்க உட்காரும் டைமை குறைச்சிங்கனா தன்னால உங்க தொப்பை குறையும் ஹீஹீஹீ ( நீங்க உங்க நண்பரை திட்டுகிற மாதிரி என்னையும் மனசுகுள்ள திட்டுறது என் காதுல விழுகிறது நீங்க என்ன திட்டினீங்கனு தெரியுமா வந்துட்டான் நல்ல ஐடியா சொல்ல பொறாமை புடிச்ச முதேவி நாம வலைதளத்தில் பிரபலமாகிறது இவனுக்கு புடிக்கல ராஸ்கல் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

    ReplyDelete
  35. ஆஹா பல விசயங்கள போட்டு அசத்திடிங்க போங்க... ஆமாண்ணே சைக்கிள் ஓட்ட தெரிதவங்க என்ன பன்றது? டபிள்ஸ் போலாமா? (எப்பூடி ஐடியா )

    ReplyDelete
  36. மிதிவண்டி மிதிப்பதும்/...
    நீச்சல் அடிப்பதும்
    அழகான வழிமுறைகள் மக்களே....
    .....................................................................
    மக்களே, சென்னைபித்தன் ஐயா போட்டிருந்த பதிவைப் பார்த்தீங்களா...
    என்ன ஒரு கலைப்பு ... சில பெண்களும் மனோவும்......
    ஹா ஹா ஹா .

    ReplyDelete
  37. நல்ல விழிப்புணர்வு பதிவு..

    ஹிஹி...

    தொப்பை வரக்கூடாதுன்னா.. பாதுகாப்பு சாதனம் உபயோகப்படுத்தினா போதும்னு கேள்விப்பட்டு இருக்கேன்.. நிசமாண்ணே?

    ReplyDelete
  38. வணக்கம் அண்ணாச்சி,

    தொப்பையைக் குறைக்க சைக்கிள் ஓட்டம் நல்லது எனும் ஆராய்ச்சிப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    அப்படியே சிபியையும், விக்கி அண்ணரையும் வாரி இருப்பதும் கலக்கல்.

    ReplyDelete
  39. சைக்கிள் பயணம் உடலுக்கு நல்லது..குட் வெரி குட்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!