Wednesday, October 22, 2014

"கத்தி" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...!

காலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேகத்தோடு தியேட்டர் போனால் அங்கே கியூ...படம் வந்துருச்சுன்னு சொன்னாங்க.

"கலியுகம்" தினேஷுக்கு போனைப்போட்டேன் வாறியாய்யான்னு "இல்லைண்ணே தீபாவளி பொங்கல் வச்சு எனக்காக வீட்டுல காத்திருக்காங்க நீங்க பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க"ன்னு சொல்லிட்டார்.

படம் பார்க்க வந்தவர்களில் 25 சதவீதம் மலையாளிகள் என்பது குறிப்பிட தக்கது !

சரி இனி கத்தி"யை தீட்டுவோம்...

ஒரு காலத்தில் தண்ணீர் ஊற்றாக பொங்கியதால் அந்த ஊருக்கு "தண்ணூற்று" என்று பெயர், விவசாயம் அமோகமாக நடந்த அந்த பூமி காலபோக்கில் வறண்ட நிலமாகி விவசாயம் இல்லாமல் போகிறது, தற்போது படித்த இளைஞன் ஒருவன் பூமிக்கடியில் பெரிய நதியே ஓடுவதை கண்டறிகிறான்,

அவன் கூடவே இருக்கும் ஒரு பேராசிரியர் அதை கார்பரேட் கம்பெனிக்கு காட்டி [[துரோகம்]] குடுக்க, கார்பரேட் கம்பெனி குறுக்கு வழியில் உள்ளே புகுந்து வேலையையே ஆரம்பிக்கிறார்கள், அதை நம்ம ஹீரோ எப்படி ஜெயித்து அந்த கிராமத்து மக்களை வாழ வைத்தான் என்பதே கதை.

சரி இனி உள்ளே போவோம்...

இளைய தளபதி என்றே போர்டு போட்டு தப்பித்து கொண்டார்கள், படம் ஆரம்பம் கொல்கத்தா மத்திய சிறையில் ஆரம்பிக்கிறது, கைதி ஒருவன் ஒரு போலீசை போட்டு தள்ளிவிட்டு ஓட...சிறை அதிகாரிகள் அவனை பிடிக்க முடியாமல் தவிக்க...

ஒரு போலீஸ் சிறையில் இருக்கும் விஜயால்தான் முடியும் என்று கூற [[அப்பவே எனக்கு சங்கந்து போச்சு]] விஜய் ஜெயில் மேப்பை காட்ட சொல்ல, மேப் வருகிறது, விஜய் அந்த மேப்பை ஒரு  கோணத்தில் பார்க்க...விசிலடிச்சான் குஞ்சிகள் கும்மி அடிக்கிறார்கள்.

அவனை வெளியே வர விரட்டி வந்து போலீசுக்கு பிடித்து கொடுத்துவிட்டு விஜய் எஸ்கேப் ஆகி சென்னை நண்பன் வீட்டுக்கு வந்து விடுகிறார், நண்பன் அவருக்கு பேங்காங்க போக போலி பாஸ்போர்ட் [[இப்பவும் இருக்கா ?]] செய்து கொடுத்து ஏர்போர்ட் வர அங்கே...

சமந்தாவை கண்டு டாவுகிறார், அங்கே நடக்கும் சம்பவங்கள் விஜய் படங்களில் வரும் நார்மல் சீன்கள்தான். [[அப்பவும் நடுக்கம் எனக்கு வர ஆரம்பிச்சிது]] சமந்தாவும் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி போன் நம்பர் கொடுக்க...

அப்புறம் என்ன ? எனக்கு அவ வேணும்டா என்று டிக்கெட்டை வீசி எறிந்து விட்டு வெளியே வருகிறார்கள், விஜய் நண்பனாக வரும் காமெடி நடிகர் பெயர் தெரியவில்லை ம்ம்ம்ம் பரவாயில்லை, சந்தானம் மாதிரி முயற்சிகிறார்.

சென்னையில் ஒரு பாலத்தில் இருந்து சமந்தாவுக்கு போன் பண்ணும் போது அது நாய் காற்பரேஷனுக்கு போக, கடுப்பாக இருக்கும்போதே கீழே ஒரு கார் விபத்துக்குள்ளாக, எட்டி பார்கிறார்கள், அடுத்த காரில் வந்த ஐந்துபேர் விபத்துக்குள்ளான காரில் இருப்பவரை சராமாரியாக சுட்டு தள்ளி செல்கிறார்கள்.

விஜய்யும் நண்பனும் கீழே ஓடி வந்து காருக்குள் இருக்கும் நபர் உயிரோடே இருக்கிறாரா என்று எட்டி பார்க்க...ஆத்தே...இன்னொரு விஜய் அங்கே, அப்பவே தமிழ் மகனா எழும்பி ஓட கால் பரபரத்தது எனக்கு, ஆனால் சமந்தா பாவமுல்ல அவ்வவ்...

சரி அடிபட்டவர் பெயர் ஜீவானந்தம், பாக்கெட் திருடன் பெயர் கதிர்...ஜீவானந்தம் சாகவில்லை என்றதும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவர் பாக்கெட்டில் இவர் பர்ஸை வைத்து கொல்கொத்தா போலீஸ்கிட்டே மாட்டிவிட்டுகிட்டு எஸ்ஸாகிறார் கதிர்.

சும்மா ஜாலியா ஒருநாள் ரோட்டில் நிற்கும்போது கலக்டர் பார்த்துவிடுகிறார், வண்டியில் ஏற்றி கொண்டு இருபத்தைந்து லட்சம் பணத்தின் செக்கை குடுத்து, ஒரு முதியோர் [[ஆண்கள்]] இல்லத்திற்கு அழைத்து செல்கிறார்.

ஆனால் அங்கே இருக்கும் முதியோர்கள் கலெக்டரை எதிர்கிறார்கள் கலக்டரை, கதிரிடம் கொடுத்த அந்த செக்"கையும் ஒருவர் கிழித்து எறிகிறார், ஆட்டையை போடலாம் என்று இருந்த கதிருக்கு ஏமாற்றம், அந்த முதியோர் இல்லத்தார் கதிரை ஜீவானந்தம் என்றே நம்புகிறார்கள்.

மறுபடியும் கலெக்டர் கதிரிடம், அடுத்த வாரம் இதே செக்"கை உனக்கு தருகிறேன் என்று சொல்லிப்போக, பணத்தை ஆட்டையை போட்டுகிட்டு பேங்காங் போக கதிர் திட்டமிடுகிறார்.

அங்கேயே தங்கி விட்ட நேரத்தில், வெளிநாட்டு மீடியா ஒன்று ஜீவானந்தத்தை பேட்டி எடுக்க வருகிறது [[கதிர்]] இரண்டு வெளிநாட்டு பெண்கள் வந்து மைக் எல்லாம் செட் செய்ய, கதிரும் பேட்டி குடுக்க ரெடியாகும் நேரத்தில் கேமரா ஸ்டான்ட் கத்தியாக வெளியே வர, செம ஃபைட்...இரண்டு பெண்களுடன் வீராவேச சண்டை சூப்பரோ சூப்பர் !

வில்லனின் மிரட்டல் அழைப்பில் செல்லும் கதிர், வில்லனும் கதிரை ஜீவா என்றே நம்பி டீல் பேசுகிறான், தண்னூற்று முதியவர்களை கையெழுத்திட்டு கேஸை வாபஸ் பெற செய்தால் உனக்கு இருபத்தைந்து கோடி பணம் தருவதாக சொல்ல, விஷயம் புரியாமல் ஒகே சொல்லி, ஐந்து கோடி அட்வான்ஸ் வாங்கி செல்கிறான்.

இதற்கிடையில் சில காமெடிகளில், தாத்தாவை பார்க்க வரும் சமந்தாவை கரண்டில்லாமல் யாரென தெரியாமல் கதிர் அடித்துவிட...கரண்ட் வந்ததும் அலறுவது செம காமெடி, அப்புறமென்ன கதிர் அங்கேயே தங்க முடிவெடுத்தாலும்...

ஜீவானந்ததிற்கு வாழ்த்து தெரிவிக்க லயன்ஸ் கிளப் முடிவெடுத்து அழைத்து நான்கு லட்சம் நன்கொடை கொடுக்க அழைக்க..."டேய் அதான் நம்மகிட்டே ஐந்து கோடி இருக்கே" என்று நண்பன் சொல்ல..."அந்த நான்கு லட்சத்தை பேங்காங்ல டிப்ஸ் கொடுக்கலாம்" என்று போகிறார்.

அங்கேதான் உண்மையான பிளாஷ் பேக் மேட்டர் கதிருக்கு தெரிய வருகிறது, மீடியா கவனத்தை ஈர்க்க அதாவது யாருமே கண்டு கொள்ளாததாலும் ஜீவாவை ஜெயிலில் அடைத்ததாலும் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் மீடியா கேமரா முன்பு, இனி மேலே உள்ள என்ன கதை என்பதை வாசிக்கவும்.

மனதில் குத்தபட்ட கதிர் மனம் மாறுகிறார், ஐந்து கோடியையும் வில்லனுக்கு திருப்பி தர, கடுப்பாகிறான் கார்பரேட் வில்லன், உடனே ஐம்பது அடியாட்களை அனுப்புகிறான் கதிரை [[ஜீவா]] கொல்ல, அந்த சண்டை கொஞ்சம் வித்தியாசமாக ரசிக்கும்படி இருக்கிறது, கொய்ன்ஸ் போட்டு போட்டு கரண்டை ஆன் ஆஃப் செய்து கலக்குகிறார்.

வில்லன் போன் செய்து உன்னை கொன்னுபுடுவேன் என்று கதிரை மிரட்ட...நானே வந்து உன்னை கொல்வேன் என்று சொன்னதும் கதிர் சிரித்து விட்டு "ஐயம் வெயிட்டிங்" என்று சொல்கிறார், நல்லாத்தான் இருக்கு...

இடைவேளை...

கோர்டில் கேஸ் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது, அதாவது அந்த கிராமம் கார்பரேட் கம்பெனிக்கா அல்லது கிராமத்துக்கா என்ற விசாரணை, தீர்ப்பு வர இன்னும் மூன்று, ஐந்து நாட்கள்தான் இருக்கும் நிலையில், ரெண்டாயிரத்துக்கும் மேலான தண்னூற்று  இளைஞர்கள் வெளிநாட்டில் இருந்து தங்களுக்கு கார்பரேட் நிறுவனம் வேண்டும் என்று லெட்டர் அனுப்பியதாக மனு தாக்கல் செய்கிறார் வில்லன், எல்லாமே பொய் ஆனால் கோர்டில் செல்லுபடியாகும்.

ஐந்து நாட்களுக்குள் தீர்ப்பை மாற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் ? என்று கதிர் யோசித்து ஒரு முடிவெடுக்கிறார், அதாவது மக்களுக்கு நம்ம விவசாயிகள் நிலைமையை மீடியாக்கள் வெளியிடாத பட்சத்தில் ஒரு அதிரடியை செய்கிறார்.

இதற்கிடையில்  ஜீவானந்தம் சிறையில் இருந்து தப்பிக்கிறார்.

சென்னைக்கு வரும் எல்லா ஆற்று குழாய்களையும் மூன்று நாட்கள் திறக்க விடாமல் குழாய்க்குள் போயி முதியவர்கள் பெட்ரோல் குண்டை கையில் வைத்து போலீஸ் உள்ளே வரமுடியாமல் போராட்டம் நடத்துகிறார்கள், காரணம் சிட்டியில் உள்ளவர்கள் கிராமம் விவசாயம் என்றால் என்ன என்று தெரிய வைப்பதற்கு மற்றும் தண்னூற்று மேட்டரும் இந்த உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காக.

சென்னை சிட்டி தண்ணீர் இல்லாமல் தவிக்க, மொத்த மீடியாவும் பரபரப்பாகிறது, சென்னை மக்கள் தண்ணீருக்காக தவிகிறார்கள் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை...நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து நீச்சல் குளம் தண்ணீரெல்லாம் களவாடப்பட்டு போகும் போது ஒருவர் ஆங்கிலத்தில் திட்ட...

நம்ம முருகதாஸ் வந்து செமையா திட்டுகிறார், அந்த திட்டு இணைய தளங்களுக்கான திட்டான்னு எனக்கு மைல்டா ஒரு டவுட்டு.

சென்னை மக்கள் செம கடுப்புடன் இருக்கும் அதே வேளையில் ஜீவா வில்லனால் கடத்தப்படுகிறார், காலை எட்டு மணிக்கு ஜீவா பிரஸ்'க்கு பேட்டி குடுக்க வெளியே வருகிறார் என்றதும் ஒரே பரபரப்பு, வில்லனோ எகத்தாளமாக சிரிக்குறான், ஏன்னா ஜீவா அவன் அண்டரில்...

வில்லன் மற்றும் மீடியா, மக்கள் அந்த நேரத்தை நோக்கி காத்திருக்கிறார்கள், வில்லன் மிக ஆர்வமாக இருக்கிறான் காரணம் ஜீவா வந்து பேட்டி கொடுத்தால் தீர்ப்பு தண்னூற்று விவசாயிகளுக்கு சாதகமாகி விடும் என்பதே.

ஆர்வமாக வில்லன் காத்திருக்கும் நேரம் கதிர் வெளியே வர வில்லன் கலவரமாகிறான், ஜீவா கதிரை நினைத்து பெருமை கொள்கிறார், வெளியே வந்த கதிர் கிராமம் பற்றியும், விவசாயம் பற்றியும் விரிவாக விவரித்து, தீர்ப்பை தண்னூற்று கிராமத்திற்கு சாதகமாக்குகிறார்.

பின்னே என்ன ? வழக்கமான விஜய் சண்டை கிளைமாக்ஸ், வில்லன்களை அழித்து ஜீவாவை காப்பாற்றி கொண்டு வருகிறார்.

ரசித்த வசனங்கள்...

விஜயிடம் அவர் தங்கை "அண்ணா கம்னியூசம்'னா என்ன அண்ணா ?" "நம்ம பசிக்கு சாப்புட்டுட்டு அதுக்கு மேலே சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் அடுத்தவங்களுடையது"

"பூசணிக்காய் கொடியில காய்க்குதா மரத்துல காய்க்குதான்னு சிட்டியில் இருப்பவர்களுக்கு தெரியுமா?"

மீடியா பேட்டியில் விஜய்...."ஐயாயிரம் கோடி பேங்கில் கடன் வாங்கிய பீர் கம்பெனி முதலாளி அதை கட்ட முடியாமல் தற்கொலை செய்யவில்லை, கடன் கொடுத்த அதிகாரிகளும் தற்கொலை செய்யவில்லை, ஒரு விவசாயி வெறும் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கி கட்ட முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி ஏறி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்கிறான் [[பயங்கர கிளாப்ஸ்]]

2g அலைக்கற்று விஷயத்தில் ஒரு லட்சத்தி எழுபதாயிரம்கோடி  ரூபாய் ஊழலும் நம்ம நாட்டுலதான் நடக்கிறது" என்று சொல்லி நம்ம தாத்தாவையும் அந்த பீர் ஆளையும் காலை வாரிருக்கார் செம கிளாப்ஸ் ஆடியன்ஸ்...!

அடுத்து...

விஜய் கூட சமந்தா நடனம், சூப்பரு, விஜய் பற்றிதான் நமக்கு தெரியுமே.

ரெண்டாவது பாட்டுக்கு ஏழெட்டுப்பேர் தலைதெறிக்க வெளியே ஓடுவது பார்த்து மிரண்டு போனேன்.

செல்ஃபி பாட்டு செமையா இருக்கு நடனமும், சமந்தா ஆட்டத்தை [[செம]] பார்த்து என் பக்கத்தில்  இருந்தவன் பாப்கான் கோப்பையை கீழே போட்டு தடவினான் பாருங்க அவ்வவ்...

விஜய்யின் மேனரிசம் கொஞ்சம் அழகாகவே இருக்கிறது அவரும்.

சமந்தாவை இப்போதான் பார்கிறேன் அழகோ அழகு, நடிப்பில்லை இருந்தாலும் வழக்கம் போல வந்து போகிறார்.

இன்றைய இளைய தலைமுறைகள் விவசாயம் பற்றி அறிந்து கொள்ள இந்த படத்தை பார்க்கலாம்.

மொத்தத்தில் கத்தி "கத்தாமல் பார்க்கலாம்"

வாழ்கையில் ஒரு படத்தை முதல்நாள் முதல் ஷோ நான் பார்த்ததும் இந்த படம்தான் !

9 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. ஆக..படம் ..ஓக்கே..:)

    ReplyDelete
  3. தீபாவளி வாழ்த்துக்கள்! கத்தி கத்தி போல ஷார்ப்பா இல்லையோ?!!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. தீபாவளி வாழ்த்துக்கள் இன்னும் பார்க்கவில்லை உங்க விமர்சனம் பார்த்த ]பின் பார்க்கலாம் என்று தோன்றுது .

    ReplyDelete
  6. இப்ப எல்லாம் கோர்ட் விசயம் செம கமடியாகப்போச்சு!ஹீ

    ReplyDelete
  7. ப்ப்ப்பாஆஆஆ திரைக்கதை ஒன்னு விடல போல :-)

    ReplyDelete
  8. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  9. பட விமர்சனத்தைப் படித்தேன். நேரில் படம் பார்ப்பதுபோல இருந்தது.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!