Thursday, November 3, 2011

போதை தலைக்கேறினால் [[சிரிப்பு]] வரும் விபரீதம்...!!!

பஹ்ரைனில் ஒரு நண்பனை பார்ப்பதற்கு அவன் ரூமிற்கு சென்றிருந்தேன், அது கம்பெனி கொடுத்த ரூம்,அந்த ரூமில் நண்பரும் கூட ஒரு மலையாளியும் தங்கி இருந்தான், ஆனால் அந்த மலையாளி கூட வசிக்கும் நண்பனை மதிப்பதே கிடையாது இவனும்...



சாப்பிடும் போது கூட சாப்புடுறியான்னு சும்மா ஒரு பேச்சிக்கு கூட கேக்கமாட்டானாம் என்கிட்டே சொல்லி நண்பர் வேதனை படுவார், மது அருந்தும்போதும் அப்பிடிதான், ஒத்தைக்கே குடிச்சிட்டு சாப்பிட்டு தூங்குவானாம், ரூமை காலிபண்ணவும் முடியாது கம்பனி ஃபிரியா தந்தது...


இப்பிடி இருக்கும் தருணம்தான் நான் நண்பனை பார்க்க சென்றிருந்தேன், ரூம் உள்ளே நுழைந்ததும், மலையாளி சேட்டன் குடிச்சுட்டு இருந்தார் தனியாக, வணக்கம் சொன்னேன் பதிலில்லை டிவி வால்யூமை கூட்டினான்...


நண்பனுடன் அமர்ந்து பேசிகொண்டிருக்கும் போது, சேட்டன் ஒரு உணவகத்துக்கு போன் பண்ணி பீஃப் ரோஸ்ட், ஆறு பரோட்டா ஆர்டர் செய்தார், மறுபடியும் போதை ஏற்றிகொண்டிருந்தார்...


கொஞ்சம் நேரம் கழிந்ததும் சாப்பாடு வந்தது, காசை கொடுத்துவிட்டு, மறுபடியும் ஒரு ரவுண்ட் விட்டார், அப்புறமா சாப்பாடு பார்சலை பிரித்தவன், அருகில் இருக்கும் எங்களிடம் ஒன்றுமே கேக்காமல், சாப்பிட ஆரம்பித்தான்...


போதை உச்சியில் இருந்தது, சாப்பிடும் போதே ஏதோ உணர்ந்தவனாக, செல்போனை கையில் எடுத்தான், எடுத்து அதே உணவகத்துக்கு போன் செய்து சொல்கிறான், சேட்டோ பீஃப் ரோஸ்ட்ல ஒரு மீன் பீஸ் கிடைச்சது, ஒரு வேளை பை மிஸ்டேக்ல தவறி விழுந்துருக்கலாம், எனக்கு பிரச்சினை இல்லை வேற ஆளுக்கு இதே மாதிரி நடந்துக்காம பார்த்துக்கொன்னு அக்கறையா சொன்னான்....!!!


நாங்களும் பார்த்துட்டே இருந்தோம் கொய்யால அவன் மீன் முள்ளை துப்பிட்டு இருந்தான் நாங்க பலமா கண்ணைகாட்டி சிரித்து கொண்டிருந்தோம், சாப்பிட்டு முடித்துவிட்டு அவனே சொல்லிகிட்டான் சாப்பாடு சரி இல்லைன்னு...!!! [[கர்மம் கர்மம்]]


அந்த சாப்பாடு பார்சல் கொண்டு வந்தவன் மறுபடியும் ஓடோடி வந்தான், சேட்டா சேட்டா சாப்பாடு மாறிப்போச்சு, மீன் ரோஸ்ட்டை தெரியாமல் உனக்கு தந்துட்டேன், இதோ பீஃப் ரோஸ்ட் இங்கே இருக்கு இதை வச்சிகிட்டு அந்த மீன் ரோஸ்ட்டை தரமுடியுமான்னு கேக்கவும், சேட்டன் எங்களை ஒரு முறை முறைச்சான் பாருங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்...


அந்த ஹோட்டல்காரனை எம்புட்டு கெட்டவார்த்தயில திட்டனுமோ அம்புட்டு திட்டினான் எங்களையும் பார்த்துக்கொண்டே, நானும் நண்பனும் வெளியே வந்து சிரிச்ச சிரிப்பு இருக்கே, மனசு மொத்தமும் ரிலாக்ஸ் ஆகிருச்சு....!!! 


டிஸ்கி : இதே மாதிரி முன்னமும் ஒரு பதிவு போட்டுருந்தேன் ஆனால் அது வேற இது இப்போ புதுசா பார்த்து அனுபவிச்சு சிரிச்சது...


எம்புட்டுதான் கூழை கும்பிடு போட்டாலும் பப்பு வேகமாட்டேங்குதே, உலக அரசியல் வரலாற்றுலேயே சொந்த மகளை ஜெயிலுக்கு அனுப்பிய சா[சோ]தனை என்னையே சேரும் "இன்றைய செய்தி நாளைய வரலாறு" தப்பா சொல்லிட்டேனோ...??? [[வரலாறு உங்களை மன்னிக்குமா பார்ப்போம்...???]]

75 comments:

  1. அட கொன்னியா, மீனை தின்னுட்டு, மட்டன்ல மீனுன்னு சொல்லுறியா கபோதி....

    ReplyDelete
  2. மக்கா எனக்கு இன்னும் சிரிப்பு நிக்கல..

    ReplyDelete
  3. /////அந்த ஹோட்டல்காரனை எம்புட்டு கெட்டவார்த்தயில திட்டனுமோ அம்புட்டு திட்டினான் எங்களையும் பார்த்துக்கொண்டே, நானும் நண்பனும் வெளியே வந்து சிரிச்ச சிரிப்பு இருக்கே, மனசு மொத்தமும் ரிலாக்ஸ் ஆகிருச்சு....!!!///

    அண்ணாச்சி முதல்ல உங்களுக்கு போடணும்.. மத்தியான நேரம் பசியோட இந்த பதிவை வாசிக்க வந்தது என் தப்பு..

    படத்தெரிவுகள் உண்மையிலேயே சூப்பர்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

    ReplyDelete
  4. மக்கா உண்மையைச் ஹ்கோல்லுங்க அவன் கூப்பிடாதது உங்களுக்கு வருத்தம் தானே?

    அதை நினைச்சு நீங்க எவ்ளோ சாப்டீங்க?

    ReplyDelete
  5. பார்த்தாலே பசி தீரும் என்பது மாதிரி
    படங்கள் பிரமாதமாக இருக்கு
    (கொசுறுச் செய்தி சைடு டிஷ்ஷா ? )

    ReplyDelete
  6. உண்மையைச் சொல்லுங்க.. தப்பா டைப் பண்ணிட்டேன்..

    ReplyDelete
  7. உங்களுக்கெல்லாம் மஞ்சளைத் திட்டலைன்னா, தூக்கமே வராதா? பாவிகளே...உங்களுக்குக் குஷ்ட ரோகம் வரக்கடவது...

    :-)

    ReplyDelete
  8. மிஸ்டர் இன்னிக்கு வெள்ளிக்கிழமையா...

    இப்படியா போட்டு இம்சைப்பண்றது...

    ReplyDelete
  9. அந்தளவு ஸ்டெடியா இருக்கீங்க...

    சபாஷ்...

    ReplyDelete
  10. குமாரபுரம் யசோதரன் said... 1 2
    அட கொன்னியா, மீனை தின்னுட்டு, மட்டன்ல மீனுன்னு சொல்லுறியா கபோதி....//

    நல்லா திட்டுங்கன்னே...

    ReplyDelete
  11. குமாரபுரம் யசோதரன் said...
    முதல் போதை நான்தானா...?//

    அப்போ ஊறுகாய் நானா..ஹி ஹி..

    ReplyDelete
  12. வேடந்தாங்கல் - கருன் *! said...
    மக்கா எனக்கு இன்னும் சிரிப்பு நிக்கல..//

    எனக்கும்தான்ய்யா...!!!

    ReplyDelete
  13. ம.தி.சுதா♔ said...
    /////அந்த ஹோட்டல்காரனை எம்புட்டு கெட்டவார்த்தயில திட்டனுமோ அம்புட்டு திட்டினான் எங்களையும் பார்த்துக்கொண்டே, நானும் நண்பனும் வெளியே வந்து சிரிச்ச சிரிப்பு இருக்கே, மனசு மொத்தமும் ரிலாக்ஸ் ஆகிருச்சு....!!!///

    அண்ணாச்சி முதல்ல உங்களுக்கு போடணும்.. மத்தியான நேரம் பசியோட இந்த பதிவை வாசிக்க வந்தது என் தப்பு..

    படத்தெரிவுகள் உண்மையிலேயே சூப்பர்..//

    ஹா ஹா ஹா ஹா இங்கே இப்போ காலைதான்....

    ReplyDelete
  14. அண்ணே உங்கள் கிட்ட இப்டி மேட்டர் நிறையாயிருக்கு போல பேசாம போதைதரும் பதிவு அப்படினு தலைப்பை வச்சுட்டு ஓரு தொடரை ஆரம்பிங்க...அதில இப்படி சமபவங்களை எழுதுங்க படிக்கிறவங்களுக்கும் கிக்கா இருக்கும்....ஹி.ஹி.ஹி.ஹி....நீங்களும் பதிவெழுத சரக்கு இல்லாத நேரம் அந்த தொடரை எழுதி ஓட்டலாம்....

    ReplyDelete
  15. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    மக்கா உண்மையைச் ஹ்கோல்லுங்க அவன் கூப்பிடாதது உங்களுக்கு வருத்தம் தானே?

    அதை நினைச்சு நீங்க எவ்ளோ சாப்டீங்க?//

    யோவ் வாத்தி நாங்கல்லாம் நல்லவிங்க தெரியாதா...?

    ReplyDelete
  16. Ramani said...
    பார்த்தாலே பசி தீரும் என்பது மாதிரி
    படங்கள் பிரமாதமாக இருக்கு
    (கொசுறுச் செய்தி சைடு டிஷ்ஷா ? )//

    ஹா ஹா ஹா ஹா குரு......

    ReplyDelete
  17. வேடந்தாங்கல் - கருன் *! said...
    உண்மையைச் சொல்லுங்க.. தப்பா டைப் பண்ணிட்டேன்..//

    ஹி ஹி நாங்க ரொம்ப நல்லவங்க...

    ReplyDelete
  18. வெளங்காதவன் said...
    உங்களுக்கெல்லாம் மஞ்சளைத் திட்டலைன்னா, தூக்கமே வராதா? பாவிகளே...உங்களுக்குக் குஷ்ட ரோகம் வரக்கடவது...

    :-)//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  19. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    மிஸ்டர் இன்னிக்கு வெள்ளிக்கிழமையா...

    இப்படியா போட்டு இம்சைப்பண்றது...//

    ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  20. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    அந்தளவு ஸ்டெடியா இருக்கீங்க...

    சபாஷ்...//

    டண்டனக்கா.....

    ReplyDelete
  21. உண்மையிலேயே போதை தலைக்கேறிடுச்சு மக்களே.....

    ReplyDelete
  22. K.s.s.Rajh said...
    அண்ணே உங்கள் கிட்ட இப்டி மேட்டர் நிறையாயிருக்கு போல பேசாம போதைதரும் பதிவு அப்படினு தலைப்பை வச்சுட்டு ஓரு தொடரை ஆரம்பிங்க...அதில இப்படி சமபவங்களை எழுதுங்க படிக்கிறவங்களுக்கும் கிக்கா இருக்கும்....ஹி.ஹி.ஹி.ஹி....நீங்களும் பதிவெழுத சரக்கு இல்லாத நேரம் அந்த தொடரை எழுதி ஓட்டலாம்....//

    அட இந்த ஐடியா நல்லா இருக்கே....!!!

    ReplyDelete
  23. படமும், பகிர்வும் அருமை.சிரிப்பை வரவழைத்தன.

    ReplyDelete
  24. சூப்பர் பாஸ்! மலையாளிங்க பற்றி கேள்விப்படுறது எல்லாமே டெரரா இருக்கே! :-)

    ReplyDelete
  25. ஏற்கனவே ஸ்டாலின் ஜெயிலுக்கு போனவர்னு அவரை தியாகி ஆக்கியாச்சு, இப்ப இந்த கனிமொழி அடுத்த தியாகி போலிருக்கு, தமிழ் நாட்டை துண்டு துண்டா பிரிச்சு எடுத்துக்குவான்களோ..

    ReplyDelete
  26. இன்னைக்கு நான் விரதம் நான் கடைசியா இருக்க படத்த சொன்னேன் என்னமோ அந்த ஆளை கண்டாலே காண்டாவுது

    ReplyDelete
  27. போதை தலைக்கேறினால் [[சிரிப்பு]] வரும் விபரீதம்...!!
    >>>
    சரிங்கண்ணே போதை தெளியட்டும் நான் அப்புறமா வரேன்.

    ReplyDelete
  28. உங்க பதிவு தான் போதை ஏற்றுது அண்ணே

    ReplyDelete
  29. மகேந்திரன் said... 43 44
    உண்மையிலேயே போதை தலைக்கேறிடுச்சு மக்களே.....//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  30. ஸாதிகா said...
    படமும், பகிர்வும் அருமை.சிரிப்பை வரவழைத்தன.//

    ஹே ஹே ஹே நல்லா சிரியுங்க...

    ReplyDelete
  31. ஜீ... said...
    சூப்பர் பாஸ்! மலையாளிங்க பற்றி கேள்விப்படுறது எல்லாமே டெரரா இருக்கே! :-)//

    ஐயோ இன்னும் நிறைய மேட்டர் இருக்கு...

    ReplyDelete
  32. suryajeeva said...
    ஏற்கனவே ஸ்டாலின் ஜெயிலுக்கு போனவர்னு அவரை தியாகி ஆக்கியாச்சு, இப்ப இந்த கனிமொழி அடுத்த தியாகி போலிருக்கு, தமிழ் நாட்டை துண்டு துண்டா பிரிச்சு எடுத்துக்குவான்களோ..//

    அதான் கோர்ட் சொருகி வச்சிருச்சே...!!!

    ReplyDelete
  33. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    இன்னைக்கு நான் விரதம் நான் கடைசியா இருக்க படத்த சொன்னேன் என்னமோ அந்த ஆளை கண்டாலே காண்டாவுது//

    ஆமாம்ய்யா எனக்கும்தான்...!!

    ReplyDelete
  34. ராஜி said... 55 56
    போதை தலைக்கேறினால் [[சிரிப்பு]] வரும் விபரீதம்...!!
    >>>
    சரிங்கண்ணே போதை தெளியட்டும் நான் அப்புறமா வரேன்.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  35. அரசன் said...
    உங்க பதிவு தான் போதை ஏற்றுது அண்ணே//

    ஆஹா முடியல....

    ReplyDelete
  36. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  37. கிளம்பிட்டானுங்கய்யா கிளம்பிட்டானுங்க....!!

    ReplyDelete
  38. ஒரே கவுச்சி வாடை நான் போயிட்டு அப்புறமா வரேன் தம்பி

    ReplyDelete
  39. துரைராஜ் said...
    கிளம்பிட்டானுங்கய்யா கிளம்பிட்டானுங்க....!!//

    ஹி ஹி....

    ReplyDelete
  40. சி.பி.செந்தில்குமார் said...
    ஒரே கவுச்சி வாடை நான் போயிட்டு அப்புறமா வரேன் தம்பி//

    கொஞ்சம் மீனாவது சாப்புட்டுட்டு போ அண்ணே...

    ReplyDelete
  41. ஏய் கல கலா கண்ணடிச்சா கலக்கலா! அண்ணே ஜிவ்வுன்னு இருக்கு!

    ReplyDelete
  42. விக்கியுலகம் said... 83 84
    ஏய் கல கலா கண்ணடிச்சா கலக்கலா! அண்ணே ஜிவ்வுன்னு இருக்கு!//

    ருசி அறிஞ்சவன்ய்யா நீ ஹி ஹி...

    ReplyDelete
  43. koodal bala said...
    செம காமெடி !//

    ஹா ஹா ஹா ஹா......

    ReplyDelete
  44. என்னது பீஃப் ரோஸ்ட்ல ஒரு மீன் துண்டா...?

    எப்படி மக்கா உமக்கு மட்டும் எங்க போனாலும் “பதிவுக்கு” சரக்கு கெடைச்சிருது.

    ReplyDelete
  45. நான் ஒரு வெஜிடேரியன்! கடைசி ஃபோட்டோ கமெண்டை ரசித்தேன்!!

    ReplyDelete
  46. கனிமொழி ரொம்ம்ம்ப பாவம்.
    மனோ, மீன் பக்கோடாவாவது செஞ்சு சிபியை சாப்பிட வச்சிடணும் நீங்களும் நானும் கூட்டணி போட்டுக்குவோம்

    ReplyDelete
  47. சத்ரியன் said... 91 92
    என்னது பீஃப் ரோஸ்ட்ல ஒரு மீன் துண்டா...?

    எப்படி மக்கா உமக்கு மட்டும் எங்க போனாலும் “பதிவுக்கு” சரக்கு கெடைச்சிருது.//

    சுஜாதா நமக்கு என்னா சொல்லி தந்துருக்காருங்குறது மறந்து போச்சாக்கும்...?

    ReplyDelete
  48. middleclassmadhavi said...
    நான் ஒரு வெஜிடேரியன்! கடைசி ஃபோட்டோ கமெண்டை ரசித்தேன்!!//

    ஓ ஸாரி, கதைக்கும் நான்வெஜ்'க்கும் பொருத்தமா இருக்குமேன்னு போட்டேன் மன்னிக்கவும்...

    ReplyDelete
  49. rufina rajkumar said...
    கனிமொழி ரொம்ம்ம்ப பாவம்.
    மனோ, மீன் பக்கோடாவாவது செஞ்சு சிபியை சாப்பிட வச்சிடணும் நீங்களும் நானும் கூட்டணி போட்டுக்குவோம்//

    நெல்லைக்கு வருவாம்ல்லா அப்ப கருவாட்டு பஜ்ஜியே அவனுக்கு செஞ்சி குடுத்துருவோம், எவ்வளவு பண்ணி இருக்கோம் இதை பண்ணமாட்டோமா ஹஹா ஹா ஹா சிபி மாட்னான் ராஸ்கல்...

    ReplyDelete
  50. என்னது மனோவைக் கூட கூப்பிடாமல் மீன் தின்ற சேட்டன் மீது அந்த வாளை தீட்டனும்!
    இப்படியும் சிலர் இருக்கின்றாங்கள் மற்றவர்களை பார்க்க வைத்து சாப்பிடுவதும் ராவா அடிப்பது!

    ReplyDelete
  51. பதிவு படிச்சுட்டேன் என்னபின்னூட்டம் கொடுப்பதுன்னு தெரியல்லே ஆஜர் சொல்லிட்டு போயிடரேனே

    ReplyDelete
  52. அடடா... பீப் மீனாயிருச்சே.. :))

    ReplyDelete
  53. பாவம் தாத்தா ஊழ்வினை  மகளை சூழ்ந்து விட்டது!

    ReplyDelete
  54. முதல் முறையா மக்காவை தண்ணி காட்டி ஏமாற்றிய சேட்டன் வாழ்க.


    நம்ம தளத்தில்:
    இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...

    ReplyDelete
  55. தனிமரம் said...
    என்னது மனோவைக் கூட கூப்பிடாமல் மீன் தின்ற சேட்டன் மீது அந்த வாளை தீட்டனும்!
    இப்படியும் சிலர் இருக்கின்றாங்கள் மற்றவர்களை பார்க்க வைத்து சாப்பிடுவதும் ராவா அடிப்பது!//

    கொன்ன அருவாளை தீட்டனும்ய்யா...

    ReplyDelete
  56. Lakshmi said...
    பதிவு படிச்சுட்டேன் என்னபின்னூட்டம் கொடுப்பதுன்னு தெரியல்லே ஆஜர் சொல்லிட்டு போயிடரேனே//

    ஹா ஹா ஹா ஹா மீனை பார்த்து பயந்துட்டீங்களா ஹா ஹா ஹ ஹா..

    ReplyDelete
  57. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அடடா... பீப் மீனாயிருச்சே.. :))//

    ஹா ஹா ஹா ஹா பாவம் அம்புட்டு மப்பு மாப்புக்கு....

    ReplyDelete
  58. தனிமரம் said...
    பாவம் தாத்தா ஊழ்வினை மகளை சூழ்ந்து விட்டது!//

    ஒரு கடல்லையும் அந்த ஜா'மீன் இல்லையாம்...!!!

    ReplyDelete
  59. சென்னை பித்தன் said...
    சேட்டன் மாட்டி!//

    சேட்டன் தெரி பரஞ்சு....

    ReplyDelete
  60. தமிழ்வாசி - Prakash said...
    முதல் முறையா மக்காவை தண்ணி காட்டி ஏமாற்றிய சேட்டன் வாழ்க.//

    அந்த அருவாளை எங்கே வச்சேன்...?

    ReplyDelete
  61. மனோ....எப்பிடித்தான் உங்களைச் சுத்தி இப்பிடியெல்லாம் நடக்குதோ !

    ReplyDelete
  62. கடைசி போட்டோவும் கமெண்ட்ஸ் ம் நச்சுண்ணு இருக்கு பாஸ்... ரெம்ப ரசிச்சேன்

    ReplyDelete
  63. இனிய காலை வணக்கம் அண்ணே,
    எப்படி இருக்கிறீங்க?
    மலையாளியை ரவுண்டு கட்டி காமெடி பண்ணி நீங்களும், உங்க நண்பனும் சிரித்த மேட்டரை நினைத்து நானும் சிரித்தேன்

    ஹே....ஹே...

    கடைசி போட்டோ...

    சிட்டுவேசன் படமா?
    நாம எவ்வளவு தான் போட்டுக் கும்மினாலும் இவங்க திருந்தமாட்டாங்களே...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  64. இந்த பதிவுக்கேத்த மாதிரி படங்கள் போடுறேன்னு இப்படி பசிய கிளப்பி விட்டுட்டீங்களே?

    கடைசி படம் செம

    ReplyDelete
  65. ஹேமா said...
    மனோ....எப்பிடித்தான் உங்களைச் சுத்தி இப்பிடியெல்லாம் நடக்குதோ !//

    ஹா ஹா ஹா ஹா என் கெரகம் அப்பிடி ஹி ஹி...

    ReplyDelete
  66. துஷ்யந்தன் said...
    கடைசி போட்டோவும் கமெண்ட்ஸ் ம் நச்சுண்ணு இருக்கு பாஸ்... ரெம்ப ரசிச்சேன்//

    எங்கேய்யா போனீங்க ரொம்பநாளா ஆளையே காணோம்...?

    ReplyDelete
  67. நிரூபன் said...
    இனிய காலை வணக்கம் அண்ணே,
    எப்படி இருக்கிறீங்க?
    மலையாளியை ரவுண்டு கட்டி காமெடி பண்ணி நீங்களும், உங்க நண்பனும் சிரித்த மேட்டரை நினைத்து நானும் சிரித்தேன்

    ஹே....ஹே...

    கடைசி போட்டோ...

    சிட்டுவேசன் படமா?
    நாம எவ்வளவு தான் போட்டுக் கும்மினாலும் இவங்க திருந்தமாட்டாங்களே...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    காங்கிரஸ்'காரன் காலை நக்க சொன்னாலும் நக்குவாணுக போல....

    ReplyDelete
  68. பாலா said...
    இந்த பதிவுக்கேத்த மாதிரி படங்கள் போடுறேன்னு இப்படி பசிய கிளப்பி விட்டுட்டீங்களே?

    கடைசி படம் செம//

    ஹா ஹா ஹா ஹா..........

    ReplyDelete
  69. பீப் மீனான காமெடி கலக்கல்!

    //
    கடைசி படம்

    எவ்வளவு பம்முனானாலும் நடக்காது!!

    ReplyDelete
  70. மீன் நான் வாங்கி தர்றேன் பிரதர் டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி
    மார்பகங்களை மாற்றுவதற்கு அரசே நிதியுதவி! (இத படிங்க முதல்ல )

    ReplyDelete
  71. சிரிப்பு........

    இனி மீனப்பார்த்தாலே சிரிப்புதான் வரும்...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!