Tuesday, February 4, 2014

பெண்ணுக்கு நீச்சல் கத்து கொடுக்காதவன் எல்லாம் ஒரு பதிவரா ?

எனது ட்விட்களில் சில...

@என்னால நீ கெட்டாய் உன்னால நான் கெட்டேன், நாம கெட்டது அடுத்தவனுக்கு கொண்டாட்டமாக போச்சு - தமிழனின் ஒற்றுமை

@கலகலவென்று சிரிப்பூட்டும் நண்பர்கள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள், என்றும் இளமையாக இருப்பார்கள்...!

@நன்னாரி சர்பத்தில் பழுத்த வாழைப்பழம் கலந்து தருவது கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலம், அதில் கொஞ்சம் ஐஸ்சும் கலந்தால் தேவாமிர்தம் !

@ஒவ்வொரு சாதிக்குள்ளும் உட்பிரிவு வெளிப்பிரிவுன்னு வேற இருக்காமே ? ஹா ஹா ஹா ஹா சாவுங்கடா....!

@மனிதனை மனிதன் கொல்ல எத்தனை எத்தனை ஆயுதங்கள், இவைகளை வைத்து என்ன சாதிக்கப் போகிறான் மனிதன் ?

@ஏவுகணை தாக்குதலில் இந்தியா நம்பர் 1: சிவதாணுபிள்ளை // ஒருவேளை சோத்துக்கு கூட வக்கில்லாமல் இருக்கும் 30 கோடி மக்களுக்கு இதனால் இன்னா லாபம்டேய் ?

@காதலிக்கும் போது, உன் பெயரை சொன்னால் என் வாவில் தேன் துளி"ன்னு கவிதை எழுதியவன், கல்யாணத்துக்கு அப்புறம் போன்ல சனியனே"ன்னு திட்டுறான் அவ்வ்வ்வ்வ்....!

@சாப்பாட்டு விஷயத்தில் வயிற்றுக்கு வஞ்சமில்லாமல் சாப்பிடுகிறார்கள் அரபிகள்...!

@கோவம் வார மாதிரி திட்டுறத விட்டுபுட்டு இப்பிடி சிரிப்பு வார மாதிரியா திட்டுவாயிங்க ?

@நீச்சல் குளத்துல எனக்கு நீச்சல் கத்து தாறியான்னு ஃபிகர் கேட்டதுக்கு முடியாதுன்னு சொன்ன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன் போல.... போங்கப்பா....

@பூமி உருண்டை என்பதை கண்டறிந்து, பூஜ்ஜியத்தை கண்டறிந்தான் தமிழன், வாழ்க்கையும் ஒரு உருண்டை என்ற தத்துவத்தையும் அதனுள் அடக்கினான் தமிழன்....!!

@எண்ணெய் தேச்சி சீயக்காய் ஷாம்பூ போட்டு குளிச்சாலும் கூட, எண்ணெய் பிசுக்கு கொஞ்சம் அப்பிடியேதானே இருக்கு, அப்புறம் எதுக்கு குளிக்கணும் ஹி ஹி.

@எட்டப்பனுக்கும் தொண்டைமானுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை பெயர்களைத் தவிர...!

@பிங்க் கலர் பெண்களுக்கு ஃபேவரிட் என்றால், ஆண்களுக்கு...? எனக்கு ஜெர்மன் சிகப்பு பிடித்தமான கலர்...!

@கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, என்று அன்றைய திரைப்படங்கள் அவர்களை ஊக்குவித்தன, இன்றைக்கு "போடாங்கோ போடாங்கோ"ன்னு திரைப்படங்கள் வருகிறது ! நம்ம ஆளுங்களுக்கும் "போடாங்கோ"தான் பிடிக்குது போல...!

26 comments:

 1. கடப்பாரை நீச்சலாவது கத்துக்கொடுத்திருக்கலாம் மனோ

  ReplyDelete
 2. // போன்ல "சனியனே"ன்னு திட்டு // இது எவ்வளவோ பரவாயில்லை... ஹிஹி... தமிழன் கண்டிபிடித்தது சூப்பர்...!

  ReplyDelete
 3. இனிய வணக்கம் நண்பர் மனோ...
  துணுக்குகள் எல்லாம் அசத்தல்...
  வாழைப்பழ சர்பத் ..ம்ம்ம்ம்ம்ம் செம ருசி...
  ==
  பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியத்தை ஆண்டவன் தமிழன்..
  ==
  சாப்பாடு விஷயத்தில் கொஞ்சமும் கூச்சம் இல்லாது
  சாப்பிடுபவர்கள் அரபிகள்...

  ReplyDelete
 4. ட்வீட் அத்தனையும் முத்துகள். ஒன்றைத் தவிர!

  ReplyDelete
  Replies
  1. அந்த ஒன்று எதுன்னு உள்டப்பில சொல்லிருங்க பிள்ளே...மிதிச்சு தூரப்போட்டுருதேன், அண்ணன் இல்லையா உடனே அழிச்சிருதேன்.

   Delete
  2. ராஜின்னு யாரோ கிறுக்குனது

   Delete
  3. வெட்டி தூக்கி எறிஞ்சிட்டேன்...ம்ஹும்...ராஜி அண்ணனா கொக்கா...

   Delete
 5. பெண்ணுக்கு நீச்சல் கத்து கொடுக்காதவன் எல்லாம் ஒரு பதிவரா ?//

  அதானே?

  ReplyDelete
 6. நல்லாத்தான் இருக்கு.....

  ReplyDelete
 7. சாதி உட்பிரிவு,வெளிப்பிரிவு அடங்கவே மாட்டாங்க போல........

  ReplyDelete
 8. அனைத்தும் அருமை,

  ஒன்றை தவிர,, தொண்டைமான், எட்டப்பன் ஒற்றுமை.
  கட்டபொம்மனை காட்டி கொடுத்தது தொண்டைமான், தவறென்றால் திருத்தவும்...

  ReplyDelete
  Replies
  1. ரெண்டுபேருமே துரோகிகள் என்ற அர்த்தத்தில் சொன்னேன் சார்.

   Delete
 9. கலக்கல் ட்விட்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. சிரிப்பும் சிந்தனையும் சொல்லும் ட்விட்ஸ்.

  ReplyDelete
 11. டுவீட்ஸ் சுவீட்ஸ்

  ReplyDelete
 12. உங்க ட்வீட்டுல ஒண்ணு மட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சது.. (அதுதான் அக்காவுக்கு பிடிக்கலேன்னு சொல்லவும் வேணுமா?) ;-)

  ReplyDelete
  Replies
  1. வெட்டி தூக்கி எறிஞ்சிட்டேன்...ம்ஹும்...ராஜி [[உன்]] அண்ணனா கொக்கா...

   எலேய் உன்னை பிச்சிபுடுவேன் பிச்சி...

   Delete
 13. பிங்க் கலர் பெண்களுக்கு ஃபேவரிட் என்றால், ஆண்களுக்கு...? அந்த கலருதான் !!

  ReplyDelete
 14. //மனிதனை மனிதன் கொல்ல எத்தனை எத்தனை ஆயுதங்கள், இவைகளை வைத்து என்ன சாதிக்கப் போகிறான் மனிதன் ?//

  அனைத்திலும் பிடித்தது இது....

  மற்றவையும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மனோ.

  ReplyDelete
 15. பதிவுகளில் நான் ரசித்தது. //கலகலவென்று சிரிப்பூட்டும் நண்பர்கள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள், என்றும் இளமையாக இருப்பார்கள்...!// நன்றி.

  ReplyDelete
 16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 17. நான் ’அந்த’ ட்விட்டை படிக்க முடியாமலே போச்சே! :)

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!