அட்ரா சக்க
பதிவுலகின் "சூப்பர்ஸ்டார்" பட்டம் ஏற்கனவே நான் கொடுத்திருந்தாலும், அவார்டும் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் நான், நெல்லை பதிவர் சந்திப்புக்கு பின் கில்மா படங்களை போடுவதை முற்றும் தவிர்த்து விட்டான், காப்பி பேஸ்ட் அறவே நிறுத்திவிட்டான், இவனுடைய பதிவுகளில் வரும் டுவிட்ஸ்களுக்கு நான் தீவிர ரசிகன்.
சினிமா விமர்சனங்களை நடுநிலையாக சொல்லி சினிமா தயாரிப்பாளர்களை கிலி பிடிக்க வைப்பவன், இப்பொல்லாம் எந்த சினிமாவையும் பாருங்கள் இணையதளங்களுக்கு நன்றி என்று போர்ட் போடும் அளவுக்கு வந்துருக்குன்னா அதில் சிபி'யின் பங்களிப்பும் கூடுதல் உண்டு என்றே சொல்வேன்.
ஆபீசர் சங்கரலிங்கம், இவரும் சரி இவர் எழுத்தும் சரி ஒரு நேர்மையான நேர் கோட்டில் செல்வதை அவதானிக்க முடியும், இவருடைய பதிவுகள் எல்லாம் விழிப்புணர்வும், உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை காணலாம்.
மற்றும் அல்லாது அவருடைய அதிரடி நடவடிக்கைகளையும் சொல்லி, கலப்படம் செய்யப்பட்ட உணவை பாதுகாப்பாக எப்பிடி உண்ணவேண்டும் என்பதையும் விளக்கமாக சொல்லித்தருகிறார். நாமெல்லாம் சும்மா எழுதுவதோடு சரி ஆனால் ஆபீசர் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம்...!!!
அதுவுமல்லாமல் அநாதை குழந்தைகளுக்கு உதவிகள் இப்படி வெளியே தெரியாத உதவிகளை செய்து வருகிறார் ஆபீசர், சல்யூட் ஆபீசர்...[[இதில் பதிவர்கள் பங்களிப்பும் உண்டு என்பது சந்தோஷமான விஷயம்...!!!]]
விக்கி, இவன் அமெரிக்கன் டாலர் சம்பளம் வாங்கிகிட்டே டாலர் நாட்டுக்காரனை போட்டு தாக்குறவன், எல்லாவிதமான உள்குத்து ஊமைகுத்து உண்டோ எல்லாம் இவனிடம் ஸ்டாக் உண்டு, இவனிடமிருந்து சிபி அடிவாங்காத நாளே கிடையாது.
இவன் எழுத்துக்கள் சமூக ஆர்வத்தினால் பயங்கர கோபமாக இருக்கும், அனுபவங்களையும் சேர்த்து எழுதி அசத்துவான், இவன் பதிவுகளில் வியட்னாம் வரலாறை தெரிந்து கொள்ளலாம்..!!!
கிச்சிளிக்காஸ் அப்பிடின்னு வீடியோ கிளிப்புகளை போட்டு சிரிக்க வைப்பதும் உண்டு, இவனுக்கு சண்டைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்...!!!
இது என் இன்னொரு தங்கச்சி, பெயர் தேன்மொழி, அம்மா சமையல் அப்பிடின்னு சமையல் பற்றி புதுசா சொல்றாங்க, அடுத்து காதல் அன்பு பற்றியும் சொல்லிட்டு இருக்காங்க இவங்க எழுத்து நடை எனக்கு நல்லா பிடிக்கும் அல்லாது புதுசா வந்து என் மனசில் இடம் பிடிச்சிருக்காங்க வாழ்த்துக்கள் தங்கச்சி...!!!
பாசமாக என்னை அண்ணே என்று அழைக்கும் தங்கச்சி ராஜி, இவர் கோவில் ஸ்தலங்கள் பற்றியும், இன்னும் நமக்கு தேவையான சில டிப்ஸ்களும் தருகிறார், திருவள்ளுவர் + வாசுகி பற்றி இவர் எழுதியிருக்கும் கதை இன்றைய தலைமுறை பிள்ளைங்களுக்கு அதிகம் தெரியாதென்றே தோன்றுகிறது....!!!
அநியாயம் கண்டால் பொங்குகிற, என்னைப்போலவே அருவாள் தூக்கும் தங்கச்சி....!!!
மும்பைக்கு எனக்கு தெரியாமல் வந்து ஓடிப்போன நண்பன் சிவகுமார், குடி குடியை கெடுக்கும் என்ற சொந்த வாழ்க்கை பதிவை தொடராக தருபவர், அதை படிப்பவர்கள் கண்டிப்பாக கொஞ்சமேனும் குடியை நிறுத்தி இருப்பார்கள் என்பது என் கருத்து[[விக்கி நிறுத்திட்டான்]]
அல்லாமலும் பிரயாணம் அனுபவங்களை சுவைபட எழுதுவதில் கில்லாடி, தப்பு என்றால் உடனே ஸ்பாட்டில் சுண்டி காட்டும் வீரன், எனக்கு அந்த தைரியம் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் மக்கா...!!!
[[சிபி கண்ணாடி மேல சத்தியமா நான் இனி செல்போன்ல உனக்கு போன் பண்ணமாட்டேம்டா ராஸ்கல், நேற்றைக்கு நான் வாங்கி கட்டினது போதும் ராஸ்கல்]]
சென்னை பித்தன், செல்லமாக இவரை தல என்றுதான் அழைப்பேன், இவரின் எழுத்துக்கள் ஊனை உருக்கி குடைந்தெடுக்கும் எழுத்துக்கள், நகைச்சுவை மேம்பட அவர் எழுத்துக்கு தீவிர ரசிகன் நான்.
சிறுகதை மன்னன், சென்டிமேன்றாக எழுத ஆரம்பிச்சிட்டார்னா கண்ணில் கண்ணீர் பொங்கும் அளவுக்கு எழுதி உணர்ச்சி வசப்படுத்துவார், அதே வேளையில் காமெடின்னா சொல்லவே வேண்டாம் மனுஷன் புகுந்து விளையாடுவார்...!!!
தம்பி பிரகாஷ், என்னை மக்கா மக்கா என்றே அன்புடன் அழைப்பவர், இவர் மெக்கானிக்கல் துறை மாணவர்களுக்கு உபயோகமான பதிவுகளை மன நிறைவுடன் எழுதி வருகிறார்.
இடையிடையே அனுபவ பதிவுகள் போட்டு அசத்துகிறார், வலைச்சரம்'ம்மில் நிர்வாகியாக இருக்கிறார், அரசியல்வியாதிகளை சவுக்கடி கொடுத்து பெண்டேடுபபதில் வல்லவர், கேப்டன் இவர்கிட்டே மாட்டிட்டு படும் பாடு சொல்லி மாளாது...!!!
மேனகா மேடம், பஹ்ரைனில் பேச்சுலராக இருப்பதால், சமையல் என்பது எனக்கு தெரியவே தெரியாது செஞ்சாலும் வாயில் வைக்கமுடியாது, அப்படி இருக்கும் வேளையில்தான் மேனகா'வின் சமையல் செய்யும் பதிவுகளை பார்த்து நாக்கில் சப்பு கொட்டுவேன்...
கடைசியா ஊர் போனபோது என் வீட்டம்மாவுக்கு மேனகா'வின் சமையல் குறிப்புகளை காட்டி, எனக்கு இதே போல செய்து தா, அதே மாதிரி செய்து தாம்மா என சொல்லி, நானும் பிள்ளைகளும் அட்டகாசமாக சாப்பிட்டோம்.
என் மனைவி இப்போதும் மேனகா'வின் சமையல் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு குழந்தைகளுக்கு சமைத்து கொடுப்பது உண்டு, அம்புட்டு ருசி...!!!
நண்பன் சௌந்திரபாண்டியன், கவிஞன், புலவன் என பண்முகம் கொண்டவர், இவர் கவிதைகளுக்கு நான் அடிமை, திடீர்னு கோபம் வந்து சமுதாயத்தை சாடுவார், அரசியல்வாதிகளையும் விடமாட்டார்..
புரட்சிகாரன்னு ஒருத்தனை வலை வீசி தேடிட்டு இருக்கார், அம்புட்டானாய்யா...?
கம்பியூட்டர் டிசைனர், என் கையில் அருவாள் கொடுத்து[[மாமூல் ஹி ஹி]] நண்பர் ஆனவர், இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் அவார்டை டிசைன் பண்ணினது இவர்தான், சிறுகதை ஒன்று எழுதி இருக்கிறார் அருமையாக இருந்தது..!
அல்லாமலும் பல்சுவையாக பல பதிவுகள் எழுதி பாராட்டுகளை பெற்றவர், இந்த ஆண்டின் சிறந்த தமிழ் சினிமா பற்றி விரிவாக எழுதி இருக்கிறார், மிக்க நன்றி மக்கா அவார்ட் டிசைனுக்கு...!
டெக்னிக்கல் பதிவர், நம் தமிழ் வலைத்தள பதிவர்களின் பொக்கிஷம் இவர் என்று சொன்னால் மிகையாகாது, வலைத்தளம், பேஸ்புக், கூகுள் பிளஸ் என்ன புதுசா என்ன அறிமுகமானாலும் வஞ்சனை இல்லாமல் நமக்கு உடனே செய்தி சொல்லி விளக்கி விடுவதில் கில்லாடி...!
என் பிளாக்கில் கர்சரில் இருந்து அழகாக பறவைகள் பறக்கிறதே அது இவர் பதிவில் சொல்லி தந்ததுதான்...!!! இவர் பிளாக்கை படித்துதான் அநேக பதிவர்கள் தங்கள் தளங்களை அலங்கரித்து வைத்து உள்ளார்கள் என்றே நினைக்கிறேன் நன்றி மக்கா...!!!
ரூபினா மேடம், பெண் பதிவர்கள் என்றாலே நாலடி தள்ளிதான் நிற்பேன், தங்கச்சி கல்பனா ராஜேந்திரன், ராஜி, கோமதி அக்காள், என் மனவானில்'செல்வி, மேனகா இவர்களுக்கு அடுத்து உரிமையாக பேசுவது, கமெண்ட்ஸ் போடுவது ரூபினா மேடம் கூடத்தான்...
சென்னை பயணம் பற்றியும், தேனம்மை லட்சுமணன் அவர்களை சந்தித்தது பற்றியும் சும்மா கலகல பதிவு போட்டு அசத்தி இருந்தார், இன்னும் சமூக அக்கறையுள்ள பல பதிவுகள், ஆபீசர் மகள் பிருந்தா நிச்சயதார்த்தம் பற்றியும் எழுதி நமக்கு விபரங்களை சுடசுட தந்தவர் வாழ்த்துக்கள் மேடம்...!!!
புலவன், கவிஞன் நண்பன் மகேந்திரன், நாட்டுப்புறப்பாடல்களை புதுமையாக தருபவர், அதே நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அவலங்களை கேலிபேசி [[பாடி]] சிரிப்பாக பகிரங்கமாக கடப்பாரையை நெஞ்சினில் ஏற்றும் நவீன பாரதி....!!!
இவர் பாடல்களை ஊர் போனால் கேசியோ இசைத்து பாட ஆசையாக இருக்கிறேன், சும்மாவே அவர் நாட்டுப்புற பாடல்களை பாடி டேபிளில் தாளம் தட்டி நான் பாடுவது உண்டு, இவருக்கு சினிமாவில் சிறப்பான எதிகாலம் இருக்கு என பட்சி சொல்லுது வாழ்த்துக்கள் மக்கா...!!!
ஆமீனா மேடம், நான் ரசித்து வாசிக்கும் பெண் பதிவர்களில் ஒருவர், பரமக்குடி கலவரத்தை லைவ் ரிப்போர்ட்டாக தந்தவர், பத்திரிக்கையில் வெளி வராத செய்தியெல்லாம் இவர் பதிவில் போட்டு பத்திரிக்கைக்கே குட்டு வைத்தவர்...!!!
இவர் பிளாக் ஒரு பல்கலைகழகம்'ன்னு சொல்லலாம், எல்லாம் கொட்டி கிடக்கிறது, பயணம், மருத்துவம், சமையல், கோபம், வருத்தம், இயலாமை, சந்தோசம், காமெடி என்று படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கிறது வாழ்த்துக்கள் மேடம்...!!!
டிஸ்கி : நண்பன் : எந்த அடிப்படையில் இந்த அவார்டை நீ குடுக்குற சொல்லு [[சத்தியமா பக்கி இல்லை]] ???
நான் : நான் வாசித்து ரசித்த பதிவுகள், பதிவர்கள் என் பார்வையில் மட்டும், போதுமாடா அண்ணே, ஒன்னுமட்டும் நிச்சயம் சொல்வேன் இந்த நாஞ்சில்மனோ அவார்ட் வாங்குகிறவர்கள் எழுதி வச்சுக்கோங்க, இன்னும் ஐந்து வருஷத்தில் தமிழ் கூறும் நல்லுலகில், நீங்கா இடம் பெறுவீர்கள் என்பது பட்சி சொல்லும் உண்மை......!!!!
டஸ்கி [[டிஸ்கி]] : அவார்ட் தொடரும்..............
நன்றி : அவார்ட் வடிவமைத்து கொடுத்த நண்பன் "வீடு" சுரேஷ்குமாருக்கு....!!!
செய்தி : நெல்லையில் நடந்த சம்பவம், நெல்லை கிரைம் பிராஞ் போலீசின் ஒரு அதிரடி நடவடிக்கை, என் உயிர் நண்ப"ரி"ன் வேண்டுகோளுக்கு இணங்க ஜஸ்ட் ஸ்டாப் செய்யப்பட்டு [[தொடரலாம்]] இருக்கிறது...!!! [[யப்பா நம்ம கையில ஒன்னுமே இல்லை]]]
செய்தி : நெல்லையில் நடந்த சம்பவம், நெல்லை கிரைம் பிராஞ் போலீசின் ஒரு அதிரடி நடவடிக்கை, என் உயிர் நண்ப"ரி"ன் வேண்டுகோளுக்கு இணங்க ஜஸ்ட் ஸ்டாப் செய்யப்பட்டு [[தொடரலாம்]] இருக்கிறது...!!! [[யப்பா நம்ம கையில ஒன்னுமே இல்லை]]]
மொத அவார்ட்
ReplyDeleteமனோ விருதை வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆமா..இந்த லோகோ டிசைனை செய்யற குழுவை எங்க புடுச்சீங்க. கலக்கறாங்க.
ReplyDelete//சிபி கண்ணாடி மேல சத்தியமா நான் இனி செல்போன்ல உனக்கு போன் பண்ணமாட்டேம்டா ராஸ்கல், நேற்றைக்கு நான் வாங்கி கட்டினது போதும் ராஸ்கல்//
ReplyDeleteஒரு தொழில் அதிபரின் பினாமி இப்படியெல்லாம் பேசப்படாது..
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteஉங்களைப் போலவே உங்களது கற்பனையும் எல்லை தாண்டி அல்லவா செல்கிறது..சுவை..
வீடு சுரேஷ் மாதிரி இதுக்கு முன்ன டிசைன் செஞ்சி தந்த நல்லவங்க யாருனா இருந்தா அவங்க பேரையும் போடுங்க..
ReplyDeleteநல்ல அலசல் - எழுத்துகளை புரிந்து உணர்வு.
ReplyDeleteவாழ்த்துக்கள் மக்கா.
நாஞ்சில் மனோவின் (பதிவுலக நாஞ்சிலார்)பார்வையில்:
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
// கவிஞன், புலவன் என பண்முகம் கொண்டவர் //
ReplyDeleteவி.வி.சி...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமனோ உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவாடு கொடுத்துவிடுங்கள் இல்லையெனில் அவர்களும் உங்களை மாதிரி அருவாளை தீட்ட ஆரம்பிடிச்சுடுவாங்க ....
ReplyDeleteஉங்கள் முந்தைய புத்தாண்டு பதிவு வித்தியாசமாக இருந்தது. எனக்கு தெரிந்தவரையில் ஒரே ஒரு குறைதான் உங்கள் நண்பர்கள் பெயரை போட்டு இருக்கிரிர்கள் அதன் மேலேயே அவர்களின் வலைத்தளத்திற்கு லிங்க் கொடுத்து இருந்தால் மிக நன்றாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து
மக்கா தலைப்பு - நாஞ்சிமனோ அவார்டா? நாஞ்சில் மனோ அவார்டா?
ReplyDeleteAvargal Unmaigal said...
ReplyDeleteமனோ உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவாடு கொடுத்துவிடுங்கள் இல்லையெனில் அவர்களும் உங்களை மாதிரி அருவாளை தீட்ட ஆரம்பிடிச்சுடுவாங்க ....
உங்கள் முந்தைய புத்தாண்டு பதிவு வித்தியாசமாக இருந்தது. எனக்கு தெரிந்தவரையில் ஒரே ஒரு குறைதான் உங்கள் நண்பர்கள் பெயரை போட்டு இருக்கிரிர்கள் அதன் மேலேயே அவர்களின் வலைத்தளத்திற்கு லிங்க் கொடுத்து இருந்தால் மிக நன்றாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து//
சரியா சொன்னீங்க மக்கா, ஆனால் அதற்க்கு ஆகும் நேரம் மிக கூடுதல்ய்யா முடியல, நண்பர்களுக்கு என் உணர்வு கண்டிப்பா புரியும் என பெயர் மட்டும் போட்டேன்......
வரும் காலத்தில் கண்டிப்பாக நீங்கள் சுண்டி காட்டியதை நிறைவேற்றுவேன் நன்றி மக்கா...!
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteலோகோ சூப்பரா இருக்கு பாஸ்!
வணக்கம் அண்ணாச்சி..
ReplyDeleteஅவார்ட் வாங்குன அத்துனை நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கொடுத்த உங்களுக்கும்..
>>>>செய்தி : நெல்லையில் நடந்த சம்பவம், நெல்லை கிரைம் பிராஞ் போலீசின் ஒரு அதிரடி நடவடிக்கை, என் உயிர் நண்ப"ரி"ன் வேண்டுகோளுக்கு இணங்க ஜஸ்ட் ஸ்டாப் செய்யப்பட்டு [[தொடரலாம்]] இருக்கிறது...!!! [[யப்பா நம்ம கையில ஒன்னுமே இல்லை]]]
ReplyDeleteஅய்யய்யோ
//இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...
ReplyDeleteமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.
http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html//
இவருக்கு அவார்ட் இல்லையா? என்ன அநியாயம் இது?
FOOD NELLAI said...
ReplyDelete//அநாதை குழந்தைகளுக்கு உதவிகள் இப்படி வெளியே தெரியாத உதவிகளை செய்து வருகிறார்//
இதில் பதிவர்கள் அனைவர் பங்கும் இருக்கிறதென்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்.///
ஒ ஸாரி ஆபீசர், கண்டிப்பா பதிவர்களின் பங்களிப்பும் நிறைய உண்டு என்பதும் உண்மையே....!!! இப்பவே திருத்தி சொல்லிறேன்...
என் பதிவுலக குரு சிபியுடன் இந்த சின்னபையனுக்கும்!விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி!(நானே லோகோ வரைஞ்சு எனக்கே விருதா...!வேண்டாம் அண்ணாச்சி...பதிவுகில என்னைவிட திறமையானவர்கள் நிறையஇருக்கிறார்கள்....என்று மன்றாடினேன் எலேய்...!திறமை இருப்பதால்தான் தருகிறேன்....என்று என்னை அன்பாக குட்டி எனக்கு விருது..பதிவுலகில் முதன்முதலாக கொடுத்த மனோவுக்கு....நன்றி!நன்றி!நன்றி)
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்........
அவார்டுக்கு என் முதற்கண் நன்றி
ReplyDeleteபிளாக்ல இருக்குற மாதிரி கோல்ட் மெடல் எப்போ தருவீங்களா?- இப்படிக்கு காரியத்தில் கண்ணாயிருப்போர் சங்கம்
ReplyDelete@! சிவகுமார் !
ReplyDeleteoOoமனோ விருதை வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆமா..இந்த லோகோ டிசைனை செய்யற குழுவை எங்க புடுச்சீங்க. கலக்கறாங்க.oOo
சத்தியமங்கலம் காட்டுல...அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஐயோ அண்ணே நிஜம்தானா? என்னை நானே கிள்ளி பார்க்கறேன். எனக்கும் அவார்ட் டா? ரொம்ப நன்றி அண்ணே.....
ReplyDeleteஉண்மையிலேயே உங்க அவார்ட் கரெக்ட் தான் சொல்றமாதிரி கண்டிப்பா இந்த வருடம் நிறைய எழுதுறேன்.. உங்க அவார்ட் க்கு மரியாதையை செய்வேன்... உங்க அன்பும் ஆதரவும் இந்த தங்கைக்கு என்றும் வேண்டும்..
மீண்டும் மீண்டும் நன்றி அண்ணே.. சத்தியமா நினைக்கல என் பெயர் வரும்னு...
/////மனம்குளுந்து போச்சுதய்யா
ReplyDeleteதொண்டக்குழி அடைக்குதய்யா!
என்னை நானும் கிள்ளிப்பார்த்தேன் அண்ணாச்சி
எனக்கொரு விருதை இங்கே
நட்போட கொடுத்ததுக்கு!
தலைதாழ்த்தி வணங்குகிறேன் அண்ணாச்சி/////////
அன்புநிறை நண்பர் மனோ,
பெரிய பெரிய ஜாம்பவான்கள் மத்தியில்
என்னையும் இணைத்து எனக்காக
விருது அளித்தமைக்கு கோடானுகோடி
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
விருதுபெற்ற அணைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமனோ”சார்” விருதை பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஇது போன்ற விருதுகள் உற்சாகம் கொள்ள வைக்கும்.
ReplyDeleteபதிவுலகம் வந்த புதிதில் எங்கும் விருதுகள் கொடுப்பதும் பெறுவதும் அணிவகுத்து இருக்கும்...இப்போது அவை குறைந்துவிட்டதா இல்லை முற்றிலும் நின்றுவிட்டதா என தெரியவில்லை.
உங்களின் இந்த விருது பலருக்கும் நிச்சயம் மகிழ்வை கொடுக்கும்.
விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கொடுத்த உங்களுக்கு என் பாராட்டுகள்.
எழுத்தாளர்களுக்கு காசு/பணத்தை விட கௌரவமும், அங்கீகாரமும் தான் பெருசு! அன்புடன் சேர்த்து வழங்கப்படும் போது மதிப்பு மிக்கதாகிறது!
ReplyDeleteதொடரட்டும் உமது நற்பணி!
விருது வழங்கிய அண்ணனுக்கும் , விருதை பெற்ற தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த மனோ புதுசு புதுசா கலக்குறாரே....
ReplyDeleteஇப்ப அவார்டா...!
நல்லது...
அப்புறம் அந்த அவார்டு படத்துல தொப்பி போட்டுகிட்டு இருக்கிறது யார்ன்னு சொல்ல முடியுமா...
என்பதிவுகலையும் மதிச்சி கௌவரவித்ததுக்கு நன்றி மக்கா...!
ReplyDelete//// நெல்லை பதிவர் சந்திப்புக்கு பின் கில்மா படங்களை போடுவதை முற்றும் தவிர்த்து விட்டான், ///
ReplyDeleteஇது எப்ப?
தமிழ்ப் பதிவுலகத்துலேயே அதிகமான பதிவுகளை வழமையா படிச்சிட்டு வர்ரது நீங்கதான்னு நினைக்கிறேன், அந்த விதத்துல நீங்க கொடுக்கும் விருதுகள் ரொம்பச் சரி......!
ReplyDeleteதங்கள் அன்புக்கும், அவார்டுக்கும் நன்றி மக்கா.....
ReplyDeleteஅவார்டு வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவார்டு லோகோ டிசைன் செய்த வீடு சுரேஷ்க்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி....
ReplyDeleteவிருது வடிவமைப்பு அசத்தல....
ReplyDeleteவிருது வழங்கனும்னு உங்கள் ஐடியா சுப்பர்ப்...
நீங்க அவார்ட் கொடுத்தவர்களின் வலைப்பூ போய் பார்க்கிறேன்பா..
விரு(ந்)து பெற்ற அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்....
ஆமினாவின் பிளாக் நானும் பார்த்திருக்கிறேன்... உண்மையே நீங்கள் சொன்னது... அருமையான வலைப்பூ....அன்பு வாழ்த்துகள் ஆமினா...
ReplyDeleteவசந்தமண்டபம் மகி நீங்கள் சொன்னது போலவே சிறப்பான நாட்டுப்பாடல் இசையின் வடிவில் வரிகள் அமைத்து அதில் சமூகத்தில் நடக்கும் தீமைகளை சாடி அதே சமயம் நாம் எல்லோரும் ரசிக்கும் விதமாகவும் அமைத்திருப்பார்...
ReplyDeleteஅன்பு வாழ்த்துகள் மகி...
அவார்டு வாங்கிய அனைத்து பதிவுலக நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅவார்டு குடுத்த நண்பருக்கும் அவர்கள் சார்பில் நன்றிகள் பல
சிபி அண்ணனின் கில்மாகளை நிறுத்திய உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்...ஹி ஹி..
ReplyDeleteவிருது பெரும் மக்கா அனைவரும் இனிமே பதிவர் சந்திப்புக்கு வரும்போது கைல கொஞ்சம் நெறையா காசு எடுத்துட்டு வாங்க...ட்ரீட் க்கு தான்..
நீங்கள் எழுதியதைப் படித்து உணர்ச்சி வசப்பட்டேன்.நன்றி மனோ.
ReplyDeleteநீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.
அவார்ட் வாங்கிய நண்பர்களுக்கும் அதை வழங்கிய மக்கா மனோ அவர்களுக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteமிகச் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து
ReplyDeleteஅருமையான அவார்டைத் தந்துள்ளீர்கள்
பெற்றவர்களுக்கும் வடிவமைத்துக் கொடுத்தவருக்கும்
கொடுப்பதில் மனமகிழ்வு கொள்ளும்
நாஞ்சிலார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
மனோ விருதை வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் அண்ணா,
ReplyDeleteவிருதினைப் பெற்றுக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்!
விருதினை வழங்கிக் கௌரவித்த உங்களுக்கு நன்றிகள்!
இவ் விருதுகளைக் கலக்கலாக டிசைன் பண்ணிய நண்பர் சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! சகோ தங்கள் அன்புக்கு மிக்க நன்றி,சந்தோஷமாவும் இருக்கு நீங்க என் சமையலை செய்து பார்த்து பாராட்டுவது..தங்கள் வீட்டம்மாவுக்கும் என் அன்பு!! அப்புறம் மேடம்லாம் வேணாமே,தங்கள் தங்கச்சியை எப்படி கூப்பிடுவீங்களோ அப்படியே பெயர் சொல்லி கூப்பிடுங்க..மீண்டும் உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!!
ReplyDeleteஆமா நீங்க பாலுமகேந்திரா தம்பியா?? தொப்பிலாம் போட்டு பயமுறுத்துறீங்க...
ReplyDeleteவிருது குடுத்த மனோ...உங்க ரசனைக்கும் வாங்கியவங்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் !
ReplyDeleteவணக்கம் மனோ!
ReplyDeleteபுது வருட வாழ்த்துக்கள்..!! அதிக பதிவுகளை மேய்பவர் என்றபடியால் உங்கள் விருதுகள் நம்பகத்தன்மை பெறுகிறது.. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!
அசத்தல் விருதுகள். எனக்கு கிடைக்கவில்லையே என்று கவலையாக இருந்தாலும்... நான் இன்னும் வளரனும் என்ற உண்மையும் உறைக்குது.. ஹா ஹா....விருது வாங்கியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள் பாஸ்
ReplyDeleteஇதில் விருது பெற்ற பெரும்பாலான பதிவர்களின் பதிவுகளை நானும் வாசித்து இருக்கின்றேன் பொருத்தமான விருதுகள்
இப்படி ஒரு முயற்சியை எடுத்த உங்களுக்கும் பாராட்டுக்கள்
விருது பெற்ற அனைவரும் அதற்க்கு மிகவும் பொருத்தமானவர்கள்
ReplyDeleteஉங்களுக்கு எருது மன்னன் சாரி விருது மன்னன் என்ற பட்டம் வழங்குகின்றேன்
ReplyDeleteஎன்னைப்போல அவார்ட் வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்
This comment has been removed by the author.
ReplyDelete