Thursday, October 11, 2012

எவம்லேய் அங்கே கல்லை தூக்குறது...?


மனோ"தத்துபித்துவங்களும், புலம்பல்களும்....!

 @பார் ஓய்ந்தாலும் பார்"கள் ஓய்வதில்லை...!

@கனவுகள் மெய்ப்பட, அந்த கனவுகள் நினைவில் நிற்பதில்லை...!

@சில்லறைகள் வாழ்க்கைக்கு உதவுவது இல்லை...!

@அழகும் பணமும் நிலைப்பதில்லை, போய்விடும்...!
[[கனகா....ம்ம்ம்ம் எப்பிடி இருந்தவங்க...அழகும் மாயையே...!]]

@நஞ்சிருக்கும் இடத்தில் அமுதம் இருக்குமானால் திரும்பிப் பார்க்காமல் நஞ்சை குடித்துவிடு...!

@ஓடும் வாழ்க்கையை வளைத்துப்பார், வளைந்தால் அண்டர் கண்ட்ரோல், இல்லைன்னா அவுட்டாஃப் கண்ட்ரோல்...!

@நீ...... நீயே அழைக்காமல் தாசி"யும் திரும்பிப் பார்க்கமாட்டாள்...!

@கண்ணாடியை நம்பாதே சில வேளைகளில் அதுவும் பொய் சொல்லும்...!

@கர்நாடகா"காரனை திட்டாதே ஏன்னா நம்ம சூப்பர்ஸ்டார் மனசு வலிக்கும்...!

@நாக்கில் காயம் வந்தால் ஆறிப்போகும் ஆறாதே நாவால் பட்ட காயம்...!

@என்னைப் பார்த்து ஏமாந்து விடாதே நான் இப்போதும் ஒரு குடிசைவாசிதான், வெளிநாட்டில் இருந்தாலும் ஏழையாகவே இருக்கிறேன் இன்னும்...!

@மது அருந்தினால்தான் கண்கள் சிவக்கும் என்று எவன் சொன்னான்...? ரசம் கொட்டும் உன் இதழ்களைப் பார்த்தாலே எனக்கு கண்கள் சிவக்கிறதே...!

@களவும் கற்று மறக்குமுன், அடிவாங்குறது யாரு உன் பாட்டனா...?

@பலபேர் மத்தியில் நெருங்கிய பெண்களை நீ ரொம்ப அழகுன்னு சொல்லிப்பாருங்க, ஆஹா அந்த ஷணம் அவர்கள் முகத்தை பாருங்கள், ஆஹா அழகோ அழகா கொட்டும்...! [[அடி வாங்குனா நான் பொறுப்பல்ல]]

@நீல் நதிக்கரையில் நின்னாலும், கங்கை நதிக்கரையில் நின்னாலும், காவேரி நதிக்கரையில் நின்னாலும், தாமிரபரணி நதிக்கரையில் நின்னாலும் காதலை சொன்னால்தான் அடி கிடைக்கும் ச்சே ச்சீ ஸாரி பதில் கிடைக்கும்...!

@வாழ்க்கை வாழ்வதற்கே......நாய்களும் வாழ்வதற்கே...... ஸோ வாலு ச்சே வாழு, வாழவிடு...!

@அலைவரிசை மாறும்போது யுத்தம் தன் கடமையை செய்கிறது...!

@தஞ்சாவூர் பொம்மை மட்டும்தான் தலையாட்டுமா...? ஏன் எங்கள் பிரதமருக்கு என்ன குறைச்சலாம்...?

@டி ராஜேந்தர், பவர்ஸ்டார், ரித்தீஷ் இவர்களைப் போன்றோரை மட்டும் குறி பார்த்து அவர்கள் "பவரை" புடுங்குவதின் நோக்கம் என்ன...? பொறாமையா கடுப்பா...?

@காருல போறவனுக்கே வலிக்குதாம், தக்காளி அப்போ நடந்து போறவனுக்கு...?

@வண்ண வண்ண கலர்களில் வண்ணப்பூக்கள் சுற்றி பறந்தாலும், மொய்த்தாலும் மனம் அதில் லயிக்கவேயில்லை ஏனோ...!!!

@மாதவிகளும் அவர்களுக்கான ரூல்ஸ் பேசுகிறார்கள் ஆச்சர்யமாக இருக்கு, ஒவ்வொரு ஆணும் பர்ஸில் ஆணுறை வைத்து கொல்லவேண்டுமாம் ச்சே ஸாரி கொள்ளவேண்டுமாம் அவ்வ்வ்வவ்....!!! 

@நான் மிகவும் ரசிப்பது, எங்கள் சிபி அண்ணனின் அழகும், ஆபிசரின் கம்பீரமும், விக்கி"யின் சுறுசுறுப்பும், விஜயனின் நிதானமும்...!

@கற்பனைகளும் ஒரு குரங்குதான்...!

@"நாள்தோறும் மோர் சாப்பிடாதே வயிறுக்கு நல்லதல்ல"

"என்னய்யா டாக்டரே மோர் நல்லதுன்னு சொல்றாங்க நீ வேறே"

"டாக்டர்கள் அப்பிடி பலதும் சொல்லுவாங்க, ரோகி இல்லைன்னா அவிங்களுக்கு பொழப்பு எப்பிடி ஓடும்...? அதான் மோர் குடிக்க சொல்லி ரோகம் வரவைக்குறாங்க"

அடங்கொன்னியா இப்பிடியும் கிளம்பிட்டீங்களாடா...?

@உன் கோபங்கள் பூங்காற்றை திசை மாறச்செய்யாது...!

@உன் அன்பும் புயலை அடக்க முடியாது, அதது தன் தன் கணக்கை முடித்துவிட்டே செல்கிறது...!

எம்புட்டு அடிக்கனுமா பின்னூட்டத்துல வந்து அடிங்க, எனக்காக அடிவாங்க நம்மகிட்டே ஆள் இருக்கு....!

43 comments:

 1. சும்மா இருக்குற நேரத்துல வானத்துல கோடு போடுறாப்ல போட்டு இருக்க...நடத்து ஓய்!

  ReplyDelete
 2. நஞ்சிருக்கும் இடத்தில் அமுதம் இருக்குமானால் திரும்பிப் பார்க்காமல் நஞ்சை குடித்துவிடு...!

  >>
  தத்துவம் சூப்பர்ண்ணா. நஞ்சு இருக்கும்போது அமுதம் இருந்தும் பயனில்லையே...,

  ReplyDelete
 3. சிபி சார் எம்ஜிஆர் போல தக தக கல்ர்ல இருக்குறதா உங்களுக்கு நினைப்பா? இப்படி ஆண்க்கிள் வெச்சு போட்டோ எடுத்திருக்கீங்க?!

  ReplyDelete
 4. விக்கியுலகம் said...
  சும்மா இருக்குற நேரத்துல வானத்துல கோடு போடுறாப்ல போட்டு இருக்க...நடத்து ஓய்!//

  டேய் அண்ணே, முதல்ல உன் கண்ணாடிக்கு பவரை ஏத்து, பவாரை அல்ல....

  ReplyDelete
 5. தத்துவங்கள் சூப்பர் மனோ அதுவும் வெளிநாட்டில் நான் இன்னும் குடிசைவாசிதான் பிடித்த தத்துவம் பொருள் நிறைந்தது!ம்ம்

  ReplyDelete
 6. ராஜி said...
  நஞ்சிருக்கும் இடத்தில் அமுதம் இருக்குமானால் திரும்பிப் பார்க்காமல் நஞ்சை குடித்துவிடு...!

  >>
  தத்துவம் சூப்பர்ண்ணா. நஞ்சு இருக்கும்போது அமுதம் இருந்தும் பயனில்லையே...,,

  நஞ்சு எப்பிடி இருக்கும்னு கொஞ்சம் டேஸ்ட் பாக்கலாம்ல தங்கச்சி ஹி ஹி....

  ReplyDelete
 7. ஒரு காலத்தில் கனஹா என்ன ஒரு மயக்கம் ம்ம்ம் காலம் எல்லாம் தீர்ந்து போகவைக்கும் ஹீ!:))))

  ReplyDelete
 8. ராஜி said...
  சிபி சார் எம்ஜிஆர் போல தக தக கல்ர்ல இருக்குறதா உங்களுக்கு நினைப்பா? இப்படி ஆண்க்கிள் வெச்சு போட்டோ எடுத்திருக்கீங்க?!//

  நம்ம அண்ணன் ஒரு கருப்பு கமல் [[ஹி ஹி]]

  ReplyDelete
 9. MANO நாஞ்சில் மனோ said...

  ராஜி said...
  நஞ்சிருக்கும் இடத்தில் அமுதம் இருக்குமானால் திரும்பிப் பார்க்காமல் நஞ்சை குடித்துவிடு...!

  >>
  தத்துவம் சூப்பர்ண்ணா. நஞ்சு இருக்கும்போது அமுதம் இருந்தும் பயனில்லையே...,,

  நஞ்சு எப்பிடி இருக்கும்னு கொஞ்சம் டேஸ்ட் பாக்கலாம்ல தங்கச்சி ஹி ஹி
  >>>
  ஹா ஹா அண்ணே உங்களுக்கு இம்புட்டு அறிவா?!

  ReplyDelete
 10. தனிமரம் said...
  தத்துவங்கள் சூப்பர் மனோ அதுவும் வெளிநாட்டில் நான் இன்னும் குடிசைவாசிதான் பிடித்த தத்துவம் பொருள் நிறைந்தது!ம்ம்//

  பின்னே என்னய்யா...? எம்புட்டோ உழைக்குறோம் இருந்தாலும் நம் அடிப்படை தேவைகள் இன்னும் அப்பிடியேதானே இருக்கு...? தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் நாம் வெளிநாட்டிலே இருக்குறோம் பணமா கொட்டுதுன்னு இன்னும் நினச்சிகிட்டே இருக்காங்களே...!

  ReplyDelete
 11. தனிமரம் said...
  ஒரு காலத்தில் கனஹா என்ன ஒரு மயக்கம் ம்ம்ம் காலம் எல்லாம் தீர்ந்து போகவைக்கும் ஹீ!:))))//

  அதான்ய்யா மக்கா, எல்லாமே மாயைதான் அழிந்து போகும் இல்லையா...?

  ReplyDelete
 12. பிரதமர் பாவம் இல்ல்ல்ல்ல்ல்ல்ல் லையா?;))))))

  ReplyDelete
 13. நஞ்சு எப்பிடி இருக்கும்னு கொஞ்சம் டேஸ்ட் பாக்கலாம்ல தங்கச்சி ஹி ஹி
  >>>
  ஹா ஹா அண்ணே உங்களுக்கு இம்புட்டு அறிவா?!//

  ஹா ஹா ஹா ஹா சுவர்பக்கமா திரும்பி நின்னு தங்கச்சி தலையில அடிச்சுக்குறது நல்லா தெரியுது ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 14. தனிமரம் said...
  பிரதமர் பாவம் இல்ல்ல்ல்ல்ல்ல்ல் லையா?;))))))//

  சொறிநாயும், வெறிநாயும் எப்போதுமே ஆபத்துதான், பாவம் என்ன வேண்டிகிடக்கு? [[நான் ஆட்சியாளர்களையும் சேர்த்தே சொன்னேன்]]

  ReplyDelete
 15. அந்த போட்டோல முகத்தை மறைசிகிட்டு இருப்பவர் யாரு? யாரவது வேண்டப்பட்ட ஆளா பாஸ்?

  ReplyDelete
 16. காவிரின்னா உடனே ரஜினிகாந்த கலாய்கிறதே நம்ம ஜாப்பா போச்சு... பாஸ் அவரு பச்ச தமிழர்!!

  ReplyDelete
 17. //@கற்பனைகளும் ஒரு குரங்குதான்...!//னு சொல்லிட்டு, அதுக்கு மேல சிபியோட படத்தைப் போட்ருக்கீங்களே.. ம்ம் சரியில்ல..
  (பத்தவைக்கலாம்னு பார்க்குறேன்.. ஏதோ என்னால முடிஞ்சது)

  ReplyDelete
 18. முகநூலில் பார்த்தவை பல. அனைத்தும் அருமை.

  ReplyDelete
 19. மொக்கராசு மாமா said...
  அந்த போட்டோல முகத்தை மறைசிகிட்டு இருப்பவர் யாரு? யாரவது வேண்டப்பட்ட ஆளா பாஸ்?//

  ஆமாய்யா "ரா" அவனைத் தேடுது அதான் பொத்திட்டு இருக்கான்.

  ReplyDelete
 20. மொக்கராசு மாமா said...
  காவிரின்னா உடனே ரஜினிகாந்த கலாய்கிறதே நம்ம ஜாப்பா போச்சு... பாஸ் அவரு பச்ச தமிழர்!!//

  தமிழர்களின் உயிர்னு சொல்லுங்க...

  ReplyDelete
 21. இந்திரா said...
  //@கற்பனைகளும் ஒரு குரங்குதான்...!//னு சொல்லிட்டு, அதுக்கு மேல சிபியோட படத்தைப் போட்ருக்கீங்களே.. ம்ம் சரியில்ல..
  (பத்தவைக்கலாம்னு பார்க்குறேன்.. ஏதோ என்னால முடிஞ்சது)//

  அவன் அடிவாங்கி வாங்கி நோந்துபோயி இருக்கான், இந்தப்பக்கமே வரமாட்டான் வேணா பாருங்களேன், போன்ல மட்டுமே திட்டுவான் ஹி ஹி....

  ReplyDelete
 22. பால கணேஷ் said...
  முகநூலில் பார்த்தவை பல. அனைத்தும் அருமை.//

  பிளாக்ல போட்டுட்டுதாம்ண்னே பேஸ்புக்ல போட்டேன், நன்றி அண்ணே...

  ReplyDelete
 23. அந்த பர்சுல வைச்சுக்க சொன்னது நம்ம ... கா தானே அண்ணே ..

  ReplyDelete
 24. தத்துபித்துவங்கள் கலக்கல...ம்ம் அதான் பேஸ்புக்ல ஒவ்வொன்னையும் ஸ்டேட்ஸ் போட்டாச்சா...

  ReplyDelete

 25. //@கர்நாடகா"காரனை திட்டாதே ஏன்னா நம்ம சூப்பர்ஸ்டார் மனசு வலிக்கும்...!///

  SUPERRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR

  ReplyDelete
 26. ஜாலி பதிவு.. கனகாவிற்கு அதற்குள் வயதாகிவிட்டதா? கரகாட்டக்காரன் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதோ.. என்னமோ இப்போதுதான் பார்த்த திரைப்படம் போல் இருக்கு.

  ReplyDelete
 27. கனகா... ஏன் அண்ணாச்சி இந்த கொலவெறி உங்களுக்கு - படத்தை போட்டு பயமுறுத்தறீகளே!

  ReplyDelete
 28. /////@பார் ஓய்ந்தாலும் பார்"கள் ஓய்வதில்லை...!//////

  பார்’ ஓய்ந்தாலும் ரூமில் வைத்து அடிப்போம்.......

  இப்படிக்கு
  தலைவர்
  டாஸ்மாக் ரசிகர்மன்றம்

  ReplyDelete
 29. /////@சில்லறைகள் வாழ்க்கைக்கு உதவுவது இல்லை...!////

  சிறுதுளி பெருவெள்ளம்....

  ReplyDelete
 30. ///@கனவுகள் மெய்ப்பட, அந்த கனவுகள் நினைவில் நிற்பதில்லை...!////

  பகல்கனவு காண பழகிக் கொள்ளவும்.....

  ReplyDelete
 31. ////[கனகா....ம்ம்ம்ம் எப்பிடி இருந்தவங்க...////

  அடப்பாவமே... அவங்க படத்த பாத்தா இயற்கையா வயசாகி அப்படி ஆன மாதிரி தெரியல.....!

  ReplyDelete
 32. /////ஓடும் வாழ்க்கையை வளைத்துப்பார், வளைந்தால் அண்டர் கண்ட்ரோல், இல்லைன்னா அவுட்டாஃப் கண்ட்ரோல்...!////

  ஒடிஞ்சிட்டா......?

  ReplyDelete
 33. ////என்னைப் பார்த்து ஏமாந்து விடாதே நான் இப்போதும் ஒரு குடிசைவாசிதான், வெளிநாட்டில் இருந்தாலும் ஏழையாகவே இருக்கிறேன் இன்னும்...!//////

  வணக்கம் ஏழை சார்......

  ReplyDelete
 34. ////மது அருந்தினால்தான் கண்கள் சிவக்கும் என்று எவன் சொன்னான்...?////

  மது அருந்தலேன்னாலும் கேப்டன் கண்ணு செவந்திருக்குமே?

  ReplyDelete
 35. ////@பலபேர் மத்தியில் நெருங்கிய பெண்களை நீ ரொம்ப அழகுன்னு சொல்லிப்பாருங்க, ஆஹா அந்த ஷணம் அவர்கள் முகத்தை பாருங்கள், ஆஹா அழகோ அழகா கொட்டும்...! /////

  டெக்குனிக்குலாம் நல்லாத்தான் இருக்குது........ பட் டெஸ்ட் பண்ணி பாக்க பிகர்தான் சிக்க மாட்டேங்கிது.....

  ReplyDelete
 36. /////@டி ராஜேந்தர், பவர்ஸ்டார், ரித்தீஷ் இவர்களைப் போன்றோரை மட்டும் குறி பார்த்து அவர்கள் "பவரை" புடுங்குவதின் நோக்கம் என்ன...? பொறாமையா கடுப்பா...?//////

  ஏற்கனவே பவர்கட்ல நொந்து போய் கெடக்கும் மக்களை இவங்களாவது குஷிப்படுத்திட்டு இருந்தாங்க..... இப்ப அதுவும் போச்சு.......

  ReplyDelete
 37. ////@நான் மிகவும் ரசிப்பது, எங்கள் சிபி அண்ணனின் அழகும், ஆபிசரின் கம்பீரமும், விக்கி"யின் சுறுசுறுப்பும், விஜயனின் நிதானமும்..////////

  வெளங்கிரும்.......

  ReplyDelete
 38. //////எம்புட்டு அடிக்கனுமா பின்னூட்டத்துல வந்து அடிங்க, எனக்காக அடிவாங்க நம்மகிட்டே ஆள் இருக்கு....!///////

  யோவ் வெச்சிருக்கறது ஓசி ப்ளாக்கு, இதுல இது வேறயா.......?

  ReplyDelete
 39. யோவ் பன்னி, மலை மாதிரி விக்கி"யை பக்கத்துல வச்சிருக்கேன் அவன் ஒருத்தன் போதாதா என் அடிகளை வாங்க...? இல்லைன்னா சிபி"யையும் கூப்புடுவோம் அவன் எம்புட்டு அடிச்சாலும் தாங்குவானே ஹி ஹி....

  ReplyDelete
 40. முகநூலில் முகவுரை எழுதிவிட்டு, வலைத்தளத்திலும் வகையாய்ப் பகிர்ந்திருக்கீங்க போல! :)

  ReplyDelete
 41. கலக்கல்.
  எல்லாமே அருமை.

  ReplyDelete
 42. வெளிநாட்டில் இருந்தாலும் நான் இன்னும் ஏழைதான் என்ற தத்துவம் சிந்திக்க வைக்கிறது பலபேரை.
  அருமையான பதிவு. வாழ்த்துகள்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!