Thursday, October 18, 2012

தமிழ் எங்கள் உயிர்மூச்சு...!

என்னய்யா நீ தமிழ் தமிழ்னு உயிரை விட்டுட்டு இருக்கே உன் பிள்ளைக்கு தமிழில் பேசக்கூடத் தெரியலையே, இப்படி அநேகர் என்னிடம் கேட்டதுண்டு, அண்மையில் குழந்தையோடு பேச மும்பைக்கு போன் செய்த "மனதோடு மட்டும்"கவுசல்யா தமிழில் மகளிடம் பேச, என் மகளுக்கோ தமிழ் பேச வரவில்லை...! அப்புறம் நான் மேலே சொன்ன வாக்கியத்தைதான் அவர்களும் என் வீட்டம்மாவிடம் சொல்லி புலம்பி இருக்கிறார்கள்.
என் பிள்ளைங்களுக்கு தமிழ் பேசத்தெரியாது வாசிக்கத்தெரியாதுன்னு பெருமையா பேசிகிட்டு திரிந்த பெற்றோர்களைப் பார்க்கும்போது எனக்கு எரிச்சலாகவும் மூஞ்சில நாலு அப்பு அப்பனும் போலவும் இருந்த காலம் உண்டு, ஆனால் நான் பெருமையாக சொல்லாமல் மனசுக்குள் கூனிக்குறுகி இருக்கேன் பல இடங்களில்.
நாங்கள் வளர்ந்த வாழ்ந்த சூழ்நிலைகள் அப்படி, மும்பை ஒரு யுத்தபூமி, அடிக்கடி இடமாற்றம் நடப்பதுண்டு எல்லார் குடும்பத்திலும், நிரந்தரமாக தங்கி இருக்குறாப்ல நம்ம ஊரை மாதிரி அங்கே கிடையாது, கூடியமட்டும் அஞ்சி வருஷத்துக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு வேறு இடம் போயி விடுவார்கள் மும்பை தமிழ்வாசிகள்...!
என் குடும்பம் மட்டுமே நிலையான ஒரே இடத்தில் இருக்கிறோம், அதுவும் நான் வெளிநாட்டில் இருப்பதாலோ என்னவோ..? இப்போ மும்பையில் தமிழ் ஸ்கூல் கிடையாது அப்படியே தாராவியில் இருந்தாலும் எங்களுக்கு அம்புட்டு தூரம் போக இயலாது.
என் அக்கா குடும்பம் எங்கள் ஏரியாவில் இருந்தபடியால் [[அக்காவையும் மும்பையில்தான் கல்யாணம் செஞ்சி குடுத்துருக்கோம்]] என் மகன் தமிழ் எழுதப்படிக்க கற்றுகொண்டான், என் அக்கா ஹிந்தி எழுதப் படிக்க தெரிந்திருந்தாலும் யாரிடமும் ஹிந்தியில் பேசமாட்டாள், கேட்டால் ஏன் தமிழுக்கு என்ன குறைச்சல், வேண்ணா அவங்க என்கிட்டே இருந்து தமிழ் கத்துக்கட்டும் என்று கறாராக சொல்லிவிடுவாள் [[தமிழ் பக்தி]] மராட்டிகாரர்கள் அக்காவிடம் தமிழ் பேச கற்று கொண்டார்களோ பின்னே காய்கறி கடைக்கு போனால் அக்கா கேட்கும் காய்கறிகள் அனைத்தும் அவர்கள் சமத்தா எடுத்து கொடுப்பதை பார்த்துருக்கிறேன்...!
என் மனைவி வீட்டில் அவர்கள் அக்கா தங்கச்சி அண்ணன் தம்பிகள், இவர்கள் யாருமே தமிழில் பேசுவதே கிடையாது, காரணம் இவர்கள் மும்பையில் பிறந்து மராட்டிய இன்னும் பல மாநிலத்தவர்கள் மத்தியில் வாழ்ந்தபடியால், ஹிந்தியிலேயே பேசிப் பழகிவிட்டார்கள், இவர்கள் அம்மாவும் என் அக்கா மாதிரிதான்,வீட்டில் அம்மாவோடும் அப்பாவோடும் தமிழ் பேசுவார்கள்....ஆக வெளியிலோ அல்லது வீட்டிற்குள் சொந்தங்களுடன் பேசும்போதும் ஹிந்திதான்.
என் பையன் பிறந்து வளரும்போது என் மாமியார் அருகில் இருந்தபடியாலும், என் அக்காளின் படிப்பாலும் தமிழ் "ஓரளவு" கற்று கொண்டான், ஆனால் மகள் வளரும்போது என் மாமியார் உயிருடன் இல்லை, என் அக்காக்களும் தூரமான இடங்களுக்கு போய்விட்டார்கள்.
சரி தமிழ் டியூசனாவது சொல்லிக்குடுக்க யாராவது இருக்காங்களா என்று பார்த்தாலும் யாரும் இல்லை, என் மனைவிக்கோ தமிழ் வாசித்தாலும் அதன் உள் அர்த்தம் தெரியாது, ஸோ நானும் அருகில் இல்லை, எனவேதான் நாங்கள் ஊருக்கு வரும் வேளையில் கொஞ்சி கொஞ்சி தமிழ் கற்று பேசுவாள், நானும் தமிழில் பேசியே பழக்குவேன், தாயாரிடம் பேசும்போது ஹிந்தியில் ஆரம்பித்து விடுவாள்...!
மறுபடியும் மும்பை வந்ததும் கற்ற தமிழ் மறந்துவிடும் அவளுக்கு, என்ன செய்யவென்று நாங்கள் வாழும் சூழ்நிலையை நினைத்து தலையில் அடித்து கொள்வதை தவிர வேற வழியில்லை. 
மும்பையில் கல்யாணம் ஆகி வீட்டம்மாவை ஊருக்கு கூட்டி வந்துட்டு, அவளுக்கு தமிழ் கற்று கொடுக்க நான் பட்டபாடுக்கு ஒரே ஒரு உதாரணம் சொல்லுறேன், பைக்கில் கன்னியாகுமரி டூ நாகர்கோவில் வரும் வழியில், வயல் வெளிகளை வீட்டம்மாவுக்கு காட்டிக்கொண்டு வந்தேன். மற்றும் வயல் அருகில் அழைத்து சென்றும் காட்டினேன்.
"அதோ பார் அதான் வயல்"

"வயல்னா...?"

"நெல்லு புள்ள..."

"நெல்லுன்னா...?"

"அரிசி அரிசி கொய்யால..."

"திட்டாதீங்க என்ன...? அத்தான் பக்கத்துல கூட்டிட்டு போங்களேன்"

வயல் அருகில் போனதும் ஒரு நாத்தை மட்டும் கையில் புடுங்கி எடுத்தவள் கேட்டாள் பாருங்க...!

"அய் அத்தான் இதுதான் "அரிசி மரமா...?"
ஸ்ஸ்ஸ்ஸ் அபா......அன்னைக்கு கட்டுன கண்ணுதான் இன்னும் தொறக்கவே இல்லை....!

இது எங்கள் நாடோடி வாழ்க்கையின் கஷ்டங்களின் சூழ்நிலைகளா, சூழ்நிலையின் கஷ்டங்களா எப்படியென சொல்லத்தெரியவில்லை.....போனில் பேசும்போது விக்கி"யின் மகன் அழகாக தமிழ் பேசுவதை மிகவும் ரசித்து கேட்பேன், அழகா கத்து கொடுத்து வச்சிருக்காங்க அவன் வீட்டம்மா...! ம்ம்ம்ம் நமக்கு கொடுப்பினை இல்லை அம்புட்டுதான்...!
---------------------------------------------------------------------
உங்களுக்கு பிடித்த தமிழ் பாடல்களை தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ, ரசிக்க இதோ ஒரு இலவச தளம், என்ஜாய்....!


21 comments:

 1. நல்லதொரு பதிவு..ஆதங்கம் தெரிகிறது..இருப்பது எங்கு என்றாலும் நம் தாய்மொழி என்ற முறையில் வீட்டிலும், தமிழர்களிடமும் பேசும்போது தமிழில் மட்டுமே பேசவேண்டும் என இருந்தால் தவிர்க்கலாம் என்பது என் கருத்து..உண்மைதான் தமிழ் தெரியாது என்பதை பெருமையாகக் கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..

  ReplyDelete
 2. உரையாடல் நகைச்சுவையாக இருந்தாலும் உங்கள் மனதின் வலி புரிகிறது...

  ReplyDelete
 3. மீ நோ தமிழ்...

  ஐ ட்ரின்க் தமிழ்...

  ஓகே! யு பிபில் சை டு ஸ்பீக் தமிழ்...

  இட் இஸ் அன் பேர்...

  #நன்னி.

  ReplyDelete
 4. வணக்கம் அண்ணாச்சி!
  புலம்பெயர்ந்தவர்கள் உண்மையில் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று என்ன செய்வது சூழல் தமிழ் படிக்கவும், தெளிவு பெறவும் முடியும் என்றால் நல்லது ஆனாலும் மொழி படிக்க விருப்பமும் கூடிவரவேண்டும் தினிக்க முடியாது தினித்தால் பின் வெறுப்பு வந்துவிடும். ஆதங்கம் பலருக்கு உண்டு  !எனக்கும் தான் .

  ReplyDelete
 5. வெவ்வேறு சூழலில் வாழும்போது அந்ததந்த நாட்டு பொதுமொழியைப் பேசுவதும் தவறு இல்லை என்பது என் கருத்து .

  ReplyDelete
 6. உங்கள் வருத்தம் புரிகின்றது பாஸ் மொழிதானே எப்பவும் கற்றுக்கொள்ளாம்
  கவலையை விடுங்க உங்கள் மகள் வளர்ந்த பின் திருமணம் செய்யும் போது தமிழ் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுங்க.

  ReplyDelete
 7. ////என் மனைவிக்கோ தமிழ் வாசித்தாலும் அதன் உள் அர்த்தம் தெரியாது////

  அப்ப உங்க ப்ளாக் அவங்க படிக்கமாட்டாங்க என்று சொல்லுறீங்க

  ReplyDelete
 8. My kids understand tamil but they do not speak in tamil. I am not proud of that at all. My parents visit us once a year, my in laws live far away and visit us once a year. So my kids are stuck with me all the time. I speak in tamil but at school they have American friends and they only speak English. I hope if I keep speaking in tamil one day they will speak it. Right?

  ReplyDelete
 9. ம்ம்ம் புரியுது! தமிழ் சொல்லிக் கொடுக்க ஒரு வெப்சைட் இருக்கு! go4guru என்று 1 வெப்சைட்ல நீங்க ரெஜிஸ்டர் செய்துட்டீங்கனா உங்களை அழைத்து முதலில் பேசி ஒரு டெமோ வகுப்பு வைப்பார்கள்! அவர்களுடன் ஒத்துப்பொனால் நீங்கள் தங்களது மகளுக்கு நன்றாகவே தமிழ் பயிற்றுவிக்கலாம்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 10. உங்கள் ஆதங்கம் புரிகிறது மனோ. இங்கே தில்லியிலும் பல தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் பேசத் தெரியாது!

  ReplyDelete
 11. எல்லாவற்றையும் கடந்துதான் போகணும்....

  :)))))))

  ReplyDelete
 12. நாம் எந்த ஊரில் வாழ்கிறோமா அந்த ஊரின் மொழிதான் நமக்கு நன்றாக வரும்.என்றாலும் வீட்டில் தாய்மொழி பேசினால் மறந்து போகாமளாவது இருக்கும்.அவ்வாறில்லாத சூழலில் கடினம்தான்.
  அரசி மரம் சூப்பர்.
  சென்னையில் கூட பள்ளி மாணவர்களுக்கு அரிசி எப்படி விளைகிறதென்று தெரியவில்லை.

  ReplyDelete

 13. நலமா நண்பரே! பதிவில் தங்கள் ஆதங்கம் நன்கு தெரிகிறது இது சூழ்நிலைக் கோளாறு .நேரம் கிடைக்கும்போது தாங்கள் முயன்றால் உங்கள் மகள் தமிழ் உறுதியாகப் பேசுவாள்

  ReplyDelete
 14. மும்பைக்கு வந்தது இல்லை ஒரு நாள் மும்பைக்கு வந்தா உங்க வீட்டுக்குதான் வரணும்ணு நினைச்சுகிட்டிருக்கப்ப என்ன சார் இப்படி அருவாவை தூக்கி போடுறீங்க ஒழுங்க சம்மர் லீவுக்கு குழந்தைகளை தமிழ் நாட்டுக்கு அனுப்பிவையுங்க

  ReplyDelete
 15. இதெல்லாம் அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது போல அப்படித்தான் தெரியும் ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது ஒன்றும் கம்பசூத்திரம் கிடையாது! இதில் கவலைப் பட தேவையில்லை!

  ReplyDelete
 16. 1 . யூதன் தான் எங்கு சென்றாலும் யூதனாகவே வாழ்வான்.
  2. ஆங்கிலேயன் செல்லும் இடமெல்லாம் தன் கலாச்சார, பழக்க வழக்கங்களையெல்லாம் மற்றவர் மீது திணிப்பான்.
  3 . நீக்ரோ தான் செல்லும் இடத்திற்கு சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்வான்.

  தமிழர்கள் நாம் எந்த வகை?

  ReplyDelete
 17. என்ன மக்கா இது........? எப்படியாவது ட்ரை பண்ணி கத்து கொடுத்துடுங்க, சின்ன வயசுலயே கத்துக்கிட்டா ரொம்ப சுலபமா இருக்கும்.....!

  ReplyDelete
 18. உங்களுக்கு பிடித்த தமிழ் பாடல்களை தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ, ரசிக்க இதோ ஒரு இலவச தளம், என்ஜாய்....!

  http://www.no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs
  // நன்றி பகிர்வுக்கு பாஸ்§

  ReplyDelete
 19. மனோ ஆச்சரியமா இருக்கு??நாங்கள் எல்லாம் புலம்பெயர்ந்து வந்து (புலைமை)ஆகாவிட்டாலும்,ஏதோ ஓரளவு கற்றுக்கொண்டேன்.எப்படியாவது தமிழ் படிக்கனும் மனோ.புலிக்கு பிறந்தது பூனையாகலாமா?

  ReplyDelete
 20. அரிசி மாமா ன்னு
  சொல்லியிருப்பாவா
  நீர்தான்
  மரம் நினைச்சி நின்னுட்டீர்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!