Wednesday, October 24, 2012

என்னை சுற்றி கும்மியடிக்கும் காமெடி கலாட்டா...!

எங்க ஹோட்டல்ல காப்பி ஷாப் மானேஜர் [கோவா'காரன்]] ஒருவன், அடிக்கடி அங்கே சாப்பிட [!!!] வரும் ஒரு சவூதி பெண்ணிடம் வழி வழி யென வழிவதை பார்த்து கடுப்பான அரபிச்சி ஒருநாள், சிரித்து கொண்டே  அவனைப்பார்த்து சோன்னாள்...."ஜஹாஸ்" என்று...
மானேஜருக்கோ  சந்தோஷம் தாங்கமுடியவில்லை [[அரபி தெரியாது]] சரி அப்பிடியே சும்மா இருக்கலாம்தானே, அவன் கிரகம் அவனை இருக்கவிடாம மூதேவிகிட்டே வந்துட்டான்... நான்தான் ஹி  ஹி...
"மனோஜ் மனோஜ் அந்த அரபிச்சி என்னை நேசிப்பதாக சொல்லிவிட்டாள் ஆஹா ஆஹா ஆஹா ஆஹாஹா" [[என்னை கடுப்பெத்துறானாம்]] 
நான் அர்த்தம் புரிந்தவனாக..."அப்படியா இது பெரிய சந்தோசமான விஷயமாச்சேப்பா....ஒன்னு செய்யேன் போயி அதோ நிக்குறானே அரபி செக்கியூரிட்டி அவன்கிட்டே சொல்லேன் அவனும் கொஞ்சம் கடுப்பாகட்டுமே...!"
அவனிடம் போகிறான்....

"ஹலோ டியர் பாரு, உங்க ஊருப்பொண்ணு என்னை நேசிக்கிறாள் தெரியுமா..?!"

அவனும் ஆச்சர்யமாக [[ஜாலி டைப்]]

"ஒ அப்பிடியா...? வல்லா ஆச்சர்யமா இருக்கே....அப்பிடி என்னதான் சொன்னாள் சொல்லு...?"

"ஜஹாஸ் என்று சொன்னாளே..."

"ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....." [[அரபி வயிற்றை கையில் பிடித்து கொண்டே அலறி சிரிக்க...]]
நம்மாளு கலவரமாகிட்டான்.....அரபி செக்கியூரிட்டி சும்மா இருந்தானா...கொய்யால எல்லாருகிட்டேயும் சொல்லி சொல்லி, மொத்த ஹோட்டல் ஸ்டாஃபும் சிரியோ சிரின்னு சிரிச்சு பெரிய காமெடி கலாட்டாவே நடந்துருச்சு...!

படுபந்தாவா வலம் வந்த காபி ஷாப் மானேஜர் அதன் பிறகு காபி ஷாப்பை விட்டு வெளியே வருவதே இல்லை....[[இதற்குதான் ஆசைப்பட்டாயா நீ ஹி ஹி ]]

சரி அப்பிடி அந்த அரபிச்சி என்னய்யா சொன்னாள்...?
"நீ ஒரு பெரிய கழுதை" [[ஜஹாஸ்]]
---------------------------------------------------------------------------
இன்னும் ஒரு ஜோக்.....
தீ அலாரம் ஹோட்டலில் அடிக்கவும், முறையே சைலன்ட் பண்ணும் விதம் தெரியாமல் நான் மேனுவல் பார்த்து முயற்சி பண்ண சற்று தாமதாகிவிட....ஃபயர் இஞ்சினியர் [[தமிழர்]] ஓடிவந்து டென்ஷன் ஆக, நான் ஃபயர் ஸ்டேசன் போன் பண்ணி ஃபால்ட் அலாரம் என்று விளக்க [[இல்லைன்னா உடனே தீ வண்டியோடு வந்து விடுவார்கள் சைரன் அடித்துக்கொண்டு]] 

ஃபயர் பிரச்சினை என்றால் அதன் உத்திரவாதி இந்த இஞ்சினியர்தான், மனுஷன் செம டென்ஷனாகி எங்கே புகை வருகிறது என்று கண்டுபிடிக்க ஓடிக்கொண்டிருந்தவர்....

ஹோட்டலில் முக்கியமான நபர்களுக்கு வாக்கிடாக்கி கொடுக்கப்பட்டிருப்பதால், உடனுக்குடன் தகவல் அறியலாம்...அந்த வகையில் தகவல்கள் ஆங்கிலத்தில் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

அன்னைக்கு நம்ம இஞ்சினியருக்கு என்னாச்சுன்னே தெரியல...."மனோஜ் அண்ணா காப்பாத்துங்க அண்ணா" என்று பத்தாவது மாடியில் இருந்து தமிழில் வயர்லெசில் கதறிவிட....மொத்தபேருக்குமே ஷாக்....! பிரச்சினையை சால்வ் பண்ணி கம்ப்ளேயின்ட் இல்லாமல் பண்ணிவிட்டேன் அவருக்காக....

ஆனால் ஜி எம்மில் இருந்து முக்கிமுக்காத டேமேஜர்களுக்கு "அதுக்கு" என்னா அர்த்தம்னு பதில் சொல்லி தாவு தீர்ந்து போனது எனக்கு, சொன்னவர்  என் பெயரை சொல்லாமால் சொல்லி இருக்கலாம், கொய்யால "மனோஜ்" அண்ணா காப்பாத்துங்க அண்ணா என்று என் பேரை சேர்த்து சொல்லி கொடுமை படுத்திட்டார் போங்க...

இனி ஹோட்டல் உள்ளே இந்தியன் பாஷையில் பேசக்கூடாது என்று அவருக்கு வார்னிங் லெட்டர் மட்டும் கொடுத்து இருக்கேன். பாவம் என் உயிர் தமிழ் இல்லையா...?

14 comments:

 1. நிறைய நல்ல காரியம் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க என்ன அரசியலில் இறங்க போறதா பிளானா?

  ReplyDelete
 2. Avargal Unmaigal said...
  நிறைய நல்ல காரியம் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க என்ன அரசியலில் இறங்க போறதா பிளானா?//

  லேசா வாயை தொரந்தாலே தூக்கி உள்ளே போட்டுறப் போறாயிங்கவேய்...அரசியலாவது சாக்கடையாவது....!

  ReplyDelete
 3. ஸ்கூல் பையன் said...
  தமிழ் வாழ்க...//

  வாழும் வாழவேண்டும்....

  ReplyDelete
 4. ஹாஹா தொடரட்டும் உம் பணி..

  ReplyDelete
 5. சிறு சிறு உதவிகள் செய்வதை விட, வேறு என்ன பெரிய வேலை செய்து விடப் போகிறோம்...?

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 6. மொழி தெரியாத நாட்டில் வாழ்வது துன்பமே!

  ReplyDelete
 7. போட்டோவுக்கு நடுவுல உங்க பதிவை படிக்கறதுக்கு...... செய்ங்க.

  ReplyDelete
 8. மேனேஜரை மாட்டி விட்டாச்சு;பொறியாளரைக் காப்பாத்தியாச்சு;அப்புறம்?!

  ReplyDelete
 9. அனுபவ பகிர்வுகள்! அருமை! ஜாகாஸ் ஜோக்கை நினைத்து நினைத்து சிரிப்பு வருகிறது!

  ReplyDelete
 10. வருங்கால முதல்வர் மனோ வாழ்க,.

  இப்படிக்கு,
  கொ.ப.செ

  ReplyDelete
 11. செம கலகலப்பு பதிவு :)))))))))
  அண்ணே நீங்க பெரிய ஜாலி பேர்வழி என்று நினைக்கிறேன்.... ஹீ ஹீ.... எஞ்சாய் எஞ்சாய் ...... அதுவும் அந்த கழுதை ஜோக் சிரிச்சு வயிறு நோகுது ... நானும் பிரான்ஸ் வந்த புதிதில் இப்படி எல்லாம் ஜோக்கர் ஆகியிருக்கேன் ஆவ்வ்வ்

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. ஹாஹா....

  பாவம் அந்த காப்பி ஷாப் ஓனர்....

  எஞ்ஜினியரை காப்பாத்திட்டீங்க நல்லவேளை மனோ :)

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!