Monday, May 20, 2013

பதிவரிடம் மிதி வாங்கிய பிரபல பதிவர்கள்...!

விக்கியும், சிபி'யும், மனோ'வும் அக்கரைக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்கவேண்டி வந்தது, அங்கே ஆற்றங்கரையில் அழகிய பெண்ணொருத்தி தன்னையும் ஆற்றை கடக்க உதவ வேண்டும் என்று சொல்ல, சிபி'யும், விக்கியும் மறுத்து விடுகிறார்கள் "இது எங்கள் பிளாக்கர் தர்மத்திற்கு எதிரானது" என்று.

ஆனால் மனோ'வோ அந்தப் பெண்ணை தோளில் சுமந்து கரையேற்றுகிறான். பயணத்தின் போது இந்த இருவரும் மனோ'வை கேள்வி கேட்டபடியே வருகிறார்கள்.
இரவானதும் ஒரு சத்திரத்தில் தங்குகிறார்கள், இரவு இரண்டு மணிக்கு சிபி எழும்பி மனோவை எழுப்பி கேள்வி கேக்குறான் "என்ன இருந்தாலும் நீ அந்த பொண்ணை தோளில் சுமந்திருக்கக் கூடாது" என்கிறான்.

அடுத்து மூன்று மணிக்கு விக்கி எழும்பி மனோவை எழுப்பி "என்னதான் இருந்தாலும் நீ அந்த பொண்ணை சுமந்து இருக்கக் கூடாது" என்கிறான்.

பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிபிக்கு மனோ ஓங்கி ஒரு மிதி கொடுக்க, அலறி எழும்புகிறான், விக்கிக்கு அடுத்த மிதி விழும் என தெரிந்ததும் சுவரோடு போயி ஒட்டி கொள்கிறான்.

"ஏன்டா நாதாரிகளா நான் அந்த பொண்ணை சுமந்ததை கரையில் இறக்கி விட்டேன், ஆனால் நீங்கள்தான் அந்த பொண்ணை இப்பவும் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள் நான் எப்பவோ இறக்கி வச்சாச்சு போங்கடா வெண்ணைகளா போயி தூங்குங்க"

சத்திரம் அமைதியாகிறது.

இது ஒரு சீன கதை ஹி ஹி....
---------------------------------------------------------------------------------------------------

குடிச்சிருக்கான்னு கன்பார்ம் பண்ண ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா, டாக்டர் ரூமுக்கு போயி நின்னதும் ஊதாமலேயே பலூன் வெடிச்சிருச்சாம் - சொல்லிட்டு சிரியா சிரிக்கான் நண்பன் 
----------------------------------------------------------------------------------------------------
கஜினி படத்துல அமீர்கான் தலை மூணு மூணா தெரிஞ்சிதுன்னு சொல்லிட்டு ராஸ்கல் விமர்சனமா எழுதி இருக்கே? நீ ஒரு ஃபுல் ஓட்காவை காலி பண்ணிட்டு படத்துக்கு போனதை நான் சொல்லவே மாட்டேன் - யாருக்கோ 
-------------------------------------------------------------------------------------------------
ஆக இந்த ரம்ஜானுக்கும் நாஞ்சில்மனோ'வை உங்களுக்கு பார்க்க குடுத்து வைக்கல போல, லீவை ஒரு கிளி கொத்திகிட்டு போயிருச்சு. கிளி வரட்டும் அப்புறமா ஊருக்கு வாறன் ஆபீசர்.
---------------------------------------------------------------------------------------------------

கருணாநிதி முன்பில் கால்மேல் கால் போட்டு அமரும் ஒரே நபர் நாஞ்சில் மனோகரன், சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தின் போது திமுக கொடியை தேரின் உச்சியில் கொண்டுபோய் குத்தி வைத்தவர், எப்போதும் அதிகாரம் என் கையில் என்று சொல்லாமல் கையில் கோலுடன் இருப்பவர், நாஞ்சில் மனோகரன் தாய் மொழி மலையாளமாம்...! எனக்கு இப்போதான் தெரியும்...!

திமுக"வில் அதிக பட்சமாக தெலுங்கர்கள் இருப்பது தெரியும், ஆனால் நாஞ்சில் மனோகரன் மேட்டர் ஒரு மேட்டர்தான்...!

27 comments:

 1. ஹா... ஹா... சீன கதை இப்படி மாற்றி... கலக்கல்...!

  ReplyDelete
 2. யாருன்னே அந்த கிளி ?

  ReplyDelete
 3. நீங்கள் தோளில் சுமந்து சென்றது ..போட்டோவில் உள்ள சீனா கிளியைதானா?

  ReplyDelete
 4. என்னமோங்க புரிந்தவைகளை ரசிச்சேங்க....

  ReplyDelete
 5. லீவை ஒரு கிளி கொத்திகிட்டு போயிருச்சு. கிளி வரட்டும் அப்புறமா ஊருக்கு வாறன் ஆபீசர்.//கிளி கொத்திட்டு போனது லீவைத்தானே?? ம்ம்...

  ஆனால் மனோ'வோ அந்தப் பெண்ணை தோளில் சுமந்து கரையேற்றுகிறான். // என்னவொரு உதவி செய்யும் மனப்பான்மை...

  ReplyDelete
 6. நல்லதொரு நகைச்சுவைப் பகிர்வு :)))) (கிளிக்கா காவல் இருக்குறீங்க !!
  அண்ணியிடம் தான் இந்த விசயத்தை முதலில் சொல்ல வேணும் :) )

  ReplyDelete
 7. சீனக்கதை எல்லாம் சரிதான். அந்த அழகியை தூக்க பெரும் அடிதடி நடந்த விஷயத்தை மாற்றி எழுதி விட்டீர்களே? :))

  ReplyDelete
 8. ஒரு சீன நீதிக்கதைய எங்க கோர்த்துவிட்டாருக்கார் பாருய்ய....
  ம்.. மற்ற கலாய்த்தல்களும் கலக்கல்

  ReplyDelete
 9. ராமகிருஷ்ணரின் கதைகளில் கூட இப்படி படித்தது உண்டு! நாஞ்சில் மேட்டர் புதுசுதான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. கிளி மேட்டர் அண்ணிக்கு தெரியுமா? ஊருக்கே புத்தி சொல்ற நாட்டாமை இப்படி செய்யலாமுங்களா!? தங்கச்சி இருக்கேன் அருவாளை தூக்க :-)

  ReplyDelete
 11. நாஞ்சில் மனோகரன் தகவல் புதிது அண்ணாச்சி!

  ReplyDelete
 12. அட எனக்கும் நாஞ்சில் மனோகரன் தகவல் புதிது மனோ.

  ReplyDelete
 13. கிளி மேட்டர் அண்ணிக்கு தெரியுமா? ஊருக்கே புத்தி சொல்ற நாட்டாமை இப்படி செய்யலாமுங்களா!? தங்கச்சி இருக்கேன் அருவாளை தூக்க :-)//

  அருவா தூக்கும் தங்கச்சிங்க இருக்குறப்போ....அண்ணனுக்கு எப்பிடி தைரியம் வரும் பிள்ள...?

  கிளி'ன்னு சொன்னது அண்ணனின் அர்த்தம் வேறேன்னுன்னு இன்னுமா புரியல? பிச்சிபுடுவேன் ஆமா....

  ReplyDelete
 14. கிளி ரகசியம் என்ன மக்கா?

  ReplyDelete
 15. பொருத்தமான சீனாக் கதையை விட பொருத்தமான பாத்திரங்கள் தான் சூப்பர்

  ReplyDelete
 16. குரூ , சிஷ்யனை வைத்து படித்த கதையை உல்டா பண்ணிடிங்களா ?
  அருமை

  ReplyDelete
 17. கஜினி படம் இப்பதான் பாத்தாரா ? அவ்வ்வ்வவ்

  ReplyDelete
 18. சீனைக்கதையை வச்சி பதிவா??நல்லா வருவிங்க

  ReplyDelete
 19. பெண்ணைத் தோளில் வைத்துச் சுமக்க மனோவுக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன?!.:-))
  நல்ல காக்டெயில்!

  ReplyDelete
 20. ”பதிவரிடம் மிதி வாங்கிய பதிவர்கள்”- உங்ககிட்ட மிதி வாங்கினவரு எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரே! :)

  ReplyDelete
 21. //ஆக இந்த ரம்ஜானுக்கும் நாஞ்சில்மனோ'வை உங்களுக்கு பார்க்க குடுத்து வைக்கல போல, லீவை ஒரு கிளி கொத்திகிட்டு போயிருச்சு. கிளி வரட்டும் அப்புறமா ஊருக்கு வாறன் ஆபீசர்.//
  இது அநியாயம், அக்கிரமம்.

  ReplyDelete
 22. //குடிச்சிருக்கான்னு கன்பார்ம் பண்ண ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா, டாக்டர் ரூமுக்கு போயி நின்னதும் ஊதாமலேயே பலூன் வெடிச்சிருச்சாம் - சொல்லிட்டு சிரியா சிரிக்கான் நண்பன் //
  வெடிச்சது பலூன் மட்டுமல்ல, அவர் வாழ்வும்தான்னு புரியவேயில்லையா!

  ReplyDelete
 23. நாஞ்சில் மனோகரன் அவர்களைப் பற்றிய தகவல் சான் கேள்விப்பட்டிராத ஒன்று. தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 24. அன்பின் மனோ - குரு சிஷ்யன் கத சீனக் கதயாயி -இங்கே பகிரவும் ஆச்சு - ம்ம்ம்ம் - படங்களோடு பதிவுகள் - நல்லாத்தான் இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!