Sunday, May 26, 2013

முக்கிய செய்தி முக்காத செய்தி...!


கூப்பிட்டாளேன்னு நண்பி வீட்டுக்கு போனவன் பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி வந்தான், என்னடான்னா...ஆத்தீ எம்மாம் பெரிய நாய் வளர்குறா அவ"ன்னு சொல்றான் [ஹா ஹா ஹா ஹா செத்தான் கொமாரு]] 
----------------------------------------------------------------------------------

முக்கிய செய்தி முக்காத செய்தின்னு போட்டு எதுக்குடா எங்களை கொல்லுறீங்க...?

வலைத்தளங்களில் மிதி வாங்கிய அம்மிணிக்கு பெரிய நட்சத்திரம் பாட சான்ஸ் குடுத்துருக்காராம்...!
--------------------------------------------------------------------------------

உன்கிட்டே உதவி கேட்டா ஒன்னு ஓகே சொல்லணும் இல்லைன்னா முடியாதுன்னு சொல்லணும் அதை விட்டுட்டு அதோ அவன்கிட்டே கேளுன்னு சொல்லுற நண்பனை பக்கத்தில் ஒட்ட விடாமல் இருப்பது மனுஷனுக்கு அழகு, என்னா நான் சரியாதான் பேசுறேனா...?
--------------------------------------------------------------------------------
கை நனையாம மீன் பிடிக்கனும்னா நடக்குற காரியமா...? ஆனாலும் கை நனையாமல் மீன் பிடித்து தின்று விட்டு பி ஏ"வை மாட்டி விடுறவன் அரசியல்வாதி.
-------------------------------------------------------------------------------
மக்களே நல்லா நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இலங்கை தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிவிட்டு பின்னாலேயே இலங்கையில் தன் வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்கள் கேடி பிரதர்ஸ், தேர்தல் வருகிறது இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
------------------------------------------------------------------------------

பெண்கள்தான் மிஸ் கால் குடுத்து கொல்றாயிங்கன்னா இப்போ ஆண்களும் மிஸ் கால் குடுத்து கொல்றானுக ராஸ்கல்ஸ்....
-----------------------------------------------------------------------------

எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீர் ஒரு அருமருந்து [[அந்த தண்ணி இல்லீங்கோ]] ஆண்டவனின் படைப்போ படைப்பு...!
---------------------------------------------------------------------------
"திமுக என்றாலே எதுக்கு சார் இம்புட்டு கடுப்பாகுறீங்க நீங்க...?"

"நெஞ்சிக்கு நீதி" நான்கு பாகத்தையும் படியுங்க உங்களுக்கே தானாக புரியும் எழுத்துக்கும் இவிங்களுக்கும் என்ன சம்பந்தம்னு" சொன்னேன்.
-----------------------------------------------------------------------------

மேனேஜ்மென்ட் தொழிலாளியை பற்றி சிந்திக்காமல், மெனெஜ்மெண்டை பற்றியே சிந்திக்கிறது, தொழிலாளியும் இப்போ உஷார் ஆகி, தொழிலாளியைப் பற்றி சிந்திக்குது ஆனால் மேனேஜ்மென்ட் தொழிலாளியும் மேனேஜ்மென்ட் பற்றி சிந்திக்கனும்னு சொல்லுது...என்ன எளவோ ஒரு மண்ணும் புரியல...!

மன்மோகன் சிங் மாதிரி ஏதாவது ஆ[ப்]ஃபர் கிடைத்தால் நலமாக இருக்கும் ஹி ஹி...
-------------------------------------------------------------------------

வாக்கிடாக்கியில சார்ஜர் தீர்ந்தது தெரியாம ஒரு இஞ்சினியரை கூப்பிட்டு கூப்பிட்டு சிக்னல் கிடைக்காம திட்டிட்டு இருக்கான் இன்னொரு இஞ்சினீயர், போயி ரெண்டு கொட்டு கொடுத்து சொன்னால்...ஹி ஹி..ன்னு சிரிக்கிறான் அடங்குங்கடா...
-----------------------------------------------------------------------
எங்க ஹோட்டலில் வேலைப் பார்க்கும் ஒரு டிரைவர் ஒரு கோடி ரூபாய்க்கு வீடு கட்டிக்கொண்டு இருக்கிறான், ஒரே ஒரு பெண் பிள்ளை இருக்கு ம்ம்ம்ம்ம் மாப்பிளை கொடுத்து வச்சவன், நாங்களும்தான் இத்தனை வருஷமா வெளி நாட்டுல இருக்கோம், நியாயத்துக்கு வாழ்க்கை இல்லை.

நிர்வாண உலகத்துல நாமதான் கோமணம் கட்டிகிட்டு திரியுறோம் என்னாத்தை சொல்ல போங்க...!

அன்புடன்..
நாஞ்சில்மனோ 

8 comments:

 1. மனுஷனுக்கு அழகான விசயம் - உசாரான விசயம்

  ஒரு டிரைவர் - ஒரு கோடி வீடு ...!!!

  ReplyDelete
 2. //பெண்கள்தான் மிஸ் கால் குடுத்து கொல்றாயிங்கன்னா இப்போ ஆண்களும் மிஸ் கால் குடுத்து கொல்றானுக ராஸ்கல்ஸ்....//
  மனோ, இப்ப நீங்க ரொம்ப கெட்டுப்போயிட்டீங்க. அவ்வ்வ்வ்வ்வ்.

  ReplyDelete
 3. //ஆத்தீ எம்மாம் பெரிய நாய் வளர்குறா அவ//
  இதுக்கெல்லாம் பயப்பட்டா ‘முடியுமா?’

  ReplyDelete
 4. //போயி ரெண்டு கொட்டு கொடுத்து சொன்னால்...ஹி ஹி..ன்னு சிரிக்கிறான் //
  இதுவே ரிசப்சனிஸ்ட்டா இருந்தா என்ன கொடுத்திருப்பீங்க? ஹா ஹா ஹா

  ReplyDelete
 5. ஆஹா.... கலக்கல் மனோ......

  ஆண்களும் மிஸ் கால்! :)

  ReplyDelete
 6. முக்கிய செய்தி முக்காத செய்தின்னு போட்டு எதுக்குடா எங்களை கொல்லுறீங்க...?

  வலைத்தளங்களில் மிதி வாங்கிய அம்மிணிக்கு பெரிய நட்சத்திரம் பாட சான்ஸ் குடுத்துருக்காராம்...!

  ஏன் சகோதரா இந்தக் கொலைவெறி ?...:) அது சரி எனக்கும் ஒரு சான்ஸ் கிடைக்குமா கிடைக்காதா ?...
  இன்றைய எனது பாடல் வரிக்கு அவசியம் கருத்து போடுங்க முடிவு தன்னால தெரியும் (பாவம் நான் :) )

  ReplyDelete
 7. செய்திகளும் தத்துவங்களும்
  மிக மிக அருமை
  மன்மோகன்சிங் வேலை எத்தனை
  லட்சம் கொடுத்தாலும் நம்போன்ற
  நியாயஸ்தர்களுக்கு சரிப்பட்டு வருமா ?
  சுவாரஸ்யமான பதிவு

  ReplyDelete
 8. செய்திகளும் தத்துவங்களும்
  மிக மிக அருமை

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!