Friday, March 4, 2011

டபுள் டக்கர் பஸ்

எல்லா நண்பர்கள் குழுக்களுக்குள்ளும் ஒரு உள் வட்ட நண்பர்கள் உண்டுன்னு ஏற்கெனவே சொல்லி இருக்கேன் இல்லையா அப்பிடி என் நண்பன் சதா [மராட்டிகாரன்] வுக்கு நடந்த சம்பவம். ஷார்ஜாவில் இருந்து லீவுக்கு வந்த நண்பன் ஒருவன், நண்பர்கள் [மும்பை] எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்க டிஸ்கோதே கூட்டி போனான். ஹோஸ்ட் இன் ஹோட்டலில் ஆட்டம் களை கட்டியது. ஆணும் பெண்ணும் இணைந்து ஆடலாம். யாருடைய டான்ஸ் நல்லா இருக்கோ அவர்களோடு பெண்கள் கூட்டம் சேர்ந்து ஆடும். அங்கே டான்ஸ் ஆட நம்ம நடிகைகள் பல்லவி, ரூபிணி'யெல்லாம் வருவது உண்டு. சதா ஆட்டத்தில் கில்லாடி.
அன்னைக்கு ஆடி ஒரு பெண்ணை கவர்ந்து விட்டான். அவள் பஞ்சாப்'காரி. ரொம்ப அழகு.
எங்களுக்கு ஆச்சர்யம் பிளஸ் கோபம்.
ஏன்னா சதாவுக்கு கல்யாணம் ஆகிருச்சி. 
அப்புறம்  அவர்கள் டான்ஸ் ஆடவே
இல்லை இருவரும் சைடில் போயி அமர்ந்து என்னவோ பேசி [[அந்த சத்தத்திலும்]] கொண்டிருந்தனர்.
பார்ட்டி முடிஞ்சது.
இனி அடுத்த நாள் பார்ட்டி காலை பதினோரு மணிக்கு மல்லிகா பாரில் என முடிவானது.
அடுத்த நாள் பதினோரு மணிக்கு நண்பர்கள் எல்லோரும் ஆஜர் சதா தவிர, அந்த நேரம் செல்போன் பணம் உள்ளவர்கள் கையில் மட்டுமே இருந்தது, என் நண்பர்கள் சிலரிடம் மட்டுமே இருந்தது சரி சதாவுக்கு போனை போடுங்கடான்னு கூப்பிட்டா போன் ஸ்விட்ஸ் ஆஃப். சரி நாம தொடங்குவோம்னு ஆரம்பிக்கவும், போலீஸ் அண்ணாச்சிங்க பார் உள்ளே நுழைஞ்சி எங்களை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே போனார்கள். இது எப்பவும் நடக்குறதுதான். எங்க பசங்க பண்ணுற அலப்பறை அப்பிடி. பார் முதலாளி நாங்க பாருக்குள் நுழைந்ததுமே போலீசுக்கு போன் செய்து விடுவான். எங்களை வரப்புடாதுன்னு சொல்ல [[பில் அப்பிடி மச்சி]] மாட்டான். அதான் போலீஸ் வந்துரும்னு சிம்பாலிக்கா இப்பிடி செய்வான். கும்தலக்கா ஆரம்பிச்சி தொடர்ந்துட்டு இருக்கும் போதே எனக்கு சதா நினைப்பு வர, எங்கயோ நெருடுற மாதிரி இருந்துச்சி.  
சரியாக ஒன்னரை மணிக்கு நண்பன் கிரீஸ் செல்போன் அலறியது, எடுத்தா அது சதாவேதான். அவன் போனை மனோவிடம் கொடு என்று சொல்ல கிரீஸ் மராட்டியில் அவனை துஜி ஆயிஜி @#$#@#@ [மராட்டி] திட்ட...சதாவோ எல்லாம் சரி போனை மனோ'விடம் கொடுக்க சொல்வது கிரீஸின் கண்களில் தெரிந்தது. போன் என்னிடம் வந்ததும் பாரை விட்டு வெளியே வந்து பேசு என்றான் அப்போது எனக்கு எல்லாமே புரிந்து விட்டது....[[ஹே ஹே ஹே ஹே]] 
என்னடா நாயே எங்கே இருக்கே...? 
மனோ நான் பெரிய சிக்கல்ல மாட்டியிருக்கேன் நீதான் ஐடியா தந்து என்னை காப்பாத்தனும்னு சொன்னான். ஐயோ ஆண்டவா சொல்லுடா என்ன பிரச்சினை?
மனோ நேற்றைய பஞ்சாப் பார்டிய பிக் பண்ணி சாக்கி நாக்கா லாட்ஜ்ல ரூம் போட்டு ஜாலியா இருந்துட்டு, மோனி[கா] ய கோரேகாவ் கொண்டு விட பைக்கில் போயிட்டு இருக்கும் போது சக்கலா சிக்னல்ல பைக்கை நிறுத்தி சிக்னலுக்கு காத்திருக்கும் போது, என் அருகில் டபுள் டக்கர் பஸ் வந்து நின்றது. அப்போது எனக்கு பஸ்ஸின் மேலே இருந்து என்னை யாரோ பார்ப்பது போல் இருந்தது, ஏன்னா பைக்கின் பின்னால் மோனி ஜீன்ஸ் பேண்டும் டீசர்டுமாய் என்னை  கட்டி பிடிச்சிருந்ததுதான். எனக்கு மேலே எட்டி பார்க்க பயமா இருந்துச்சு. அதனால பைக் சைட் மிரரை மேல் பக்கமாக திருப்பினேன்.......அரே மாய்லா...............என் பொண்டாட்டியின் அக்கா...எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை சொல்லு மக்கா எதாவதுன்னு அழுறான். எனக்கு கோபம்னா கோபம் நல்லா திட்டி விட்டு, சொன்னேன் சரி நீ ஒன்று செய் உடனே உன் பொண்டாட்டிக்கு போன் செய் செய்துட்டு சொல்லு செல்லம் நீ சாப்பிடு நான் நண்பன் ஒருவன் தங்கையை கோரேகாவ் கொண்டு விட்டுட்டு அப்புறமா வாரேன்னு சொல்லிருன்னு சொன்னேன் [அவ்வ்வ்வவ்வ்வ்வ்] அவனும் அப்பிடியே போன் செய்து கிளம்ப....
சதாவின் மனைவியின் அக்கா சிக்னலின் அடுத்த ஸ்டாப்புல இறங்கி தங்கைக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல...
தங்கை சொன்னாள், அது அவரு நண்பனின் தங்கை, அவளை கோரேகாவ் விட போயிருக்கார்னு கூலா சொல்ல.....அக்கா'காரி "ங்கே".....................
 
டிஸ்கி : அக்காகாரியின் போன் முந்தியிருந்தால் இவன் குடும்பத்தில் பெரும் பிரளயமே வந்திருக்கும் காரணம் இவன் மனைவி கடும் கோவக்காரி...
 
டிஸ்கி : இவனை நேரில் பார்த்த போது நான் கொடுத்த டோஸில், என் இன்னொரு முகத்தை பார்த்தான்.
அதன் பிறகு என் முன்பு அழகு பிகரை கண்டால் கூட ஒரு கமெண்ட்சும் சொல்ல மாட்டான். திருந்திட்டானோ....

78 comments:

 1. ஐ வடை ஐ வடை ஐ வடை ஐ வடை ஐ வடை ஐ வடை ஐ வடை ....................

  ReplyDelete
 2. இருங்க மக்கா படிச்சுட்டு வரேன்

  ReplyDelete
 3. நமக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ன சபலம் தான் கொஞ்சம் அதிகம் ..................

  ReplyDelete
 4. நாஞ்சில் மனோ நல்லவருங்கோ! யாராவது மாட்டிகிட்டா இவருக்கு போன் பண்ணி ஐடியா கேட்கலாம்.

  ReplyDelete
 5. ஆகா!நட்புக்கு இலக்கணமே நீங்கதான்.என்னமா ஆலோசனை தந்து நன்பனைக் காப்பாத்திட்டீங்க!

  ReplyDelete
 6. //அஞ்சா சிங்கம் said...
  ஐ வடை ஐ வடை ஐ வடை ஐ வடை ஐ வடை ஐ வடை ஐ வடை ....................//


  வடைன்னு தானே சொல்லுவாங்க,
  இதென்ன ஐ வடை..? புதுசா இருக்கே...

  ReplyDelete
 7. //அஞ்சா சிங்கம் said...
  நமக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ன சபலம் தான் கொஞ்சம் அதிகம் ..................//

  ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 8. //FOOD said...
  நாஞ்சில் மனோ நல்லவருங்கோ! யாராவது மாட்டிகிட்டா இவருக்கு போன் பண்ணி ஐடியா கேட்கலாம்.//

  மாட்டி விடாம இருந்த சரி....

  ReplyDelete
 9. //சென்னை பித்தன் said...
  ஆகா!நட்புக்கு இலக்கணமே நீங்கதான்.என்னமா ஆலோசனை தந்து நன்பனைக் காப்பாத்திட்டீங்க!//

  என்ன திட்டுரீங்கதானே ஹா ஹா ஹா...

  ReplyDelete
 10. எப்படியெல்லாம் ஜடியா தறீங்க..

  பெரிய ஷாஜகான் விஜய்-ன்னு நினைப்பு..

  நான் உள்ளே வரலாமா..?

  ReplyDelete
 11. டிஸ்கி : அக்காகாரியின் போன் முந்தியிருந்தால் இவன் குடும்பத்தில் பெரும் பிரளயமே வந்திருக்கும் காரணம் இவன் மனைவி கடும் கோவக்காரி...

  ஹ ஹ நல்ல நட்பு.... நண்பன் டா....

  ReplyDelete
 12. எல்லா இடத்திலும் நட்பு தான் கை கொடுக்குது. தல அடுத்த தடவை ஏதும் பிரச்சனைன்ன உடனே உங்களுக்கு போன் பண்ணிடறேன்

  ReplyDelete
 13. /அக்காகாரியின் போன் முந்தியிருந்தால் இவன் குடும்பத்தில் பெரும் பிரளயமே வந்திருக்கும் காரணம் இவன் மனைவி கடும் கோவக்காரி...//

  அப்புறம் சதாவுக்கு பேச்சுலர் வாழ்க்கைதான்...

  நண்பேண்டா.....

  ReplyDelete
 14. ஏன் சார் இப்ப அந்த மேட்டரை உடைச்சீட்டீங்களே

  ReplyDelete
 15. மனோ.. லேடீஸ் எல்லாம் வருவாங்க உங்க பிளாக்கிற்கு.. இப்படி எழுதலாமா?


  ஹி ஹி

  ReplyDelete
 16. >>>>அக்காகாரியின் போன் முந்தியிருந்தால் இவன் குடும்பத்தில் பெரும் பிரளயமே வந்திருக்கும் காரணம் இவன் மனைவி கடும் கோவக்காரி...

  அங்கே மட்டும் என்ன வாழுது?

  ReplyDelete
 17. >>அஞ்சா சிங்கம் said...

  நமக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ன சபலம் தான் கொஞ்சம் அதிகம் ..................


  ஹா ஹா ரிப்பீட்டு

  ReplyDelete
 18. CPS சார் சினிமா போய்வந்தாச்சா..
  அப்படியே கவிதை வீதிப்பக் வற்றது..

  ReplyDelete
 19. நானும் வந்துட்டேன் மக்கா

  ReplyDelete
 20. //மனோ.. லேடீஸ் எல்லாம் வருவாங்க உங்க பிளாக்கிற்கு.. இப்படி எழுதலாமா?//

  ஹி ..ஹி ..உண்மையபேசுரதுக்கும் ஒரு மனசு வேண்டும் ..மனோ சார் என்னமோ ஒரு பொன்னை தள்ளிகிட்டு போன மாதிரி சொல்லுறீங்க ....மக்கா ஆனாலும் இந்த விசயத்தில் நண்பனை காட்டி கொடுகலைனாலும் ..அவர் செய்தது தப்பு

  ReplyDelete
 21. டபுள் டக்கர் போஸ்ட்..

  ReplyDelete
 22. இப்ப தெரிஞ்சுடுமே அண்ணா

  ReplyDelete
 23. நானா இருந்தா அவன் வீட்டில சொல்லி முதுகில டின்னு கட்ட வச்சி இருப்பேன் .சான்ஸ் போச்சே...!!!

  ReplyDelete
 24. இது புதுசா இருக்கே ஹெஹேஹே

  ReplyDelete
 25. அரே மாய்லா...............என் பொண்டாட்டியின் அக்கா...எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை சொல்லு மக்கா //
  இதான் ஆப்பு

  ReplyDelete
 26. பேனர் ஃபோட்டோவை சிறிதாக்குங்கள் பாஸ் ...பிளாக் ஓபன் ஆக லேட்டாகுது

  ReplyDelete
 27. என்ன இருந்தாலும் மனைவிக்கு துரோகம் பண்ணியவரை நீங்களும் சேர்ந்து காப்பாற்றி இருக்கிறீங்க. very bad!!!!!

  ReplyDelete
 28. //கவிதை வீதி # சௌந்தர் said...
  எப்படியெல்லாம் ஜடியா தறீங்க..

  பெரிய ஷாஜகான் விஜய்-ன்னு நினைப்பு..//

  என்ன பண்ண மக்கா நண்பனாச்சே...

  ReplyDelete
 29. //ரேவா said...
  டிஸ்கி : அக்காகாரியின் போன் முந்தியிருந்தால் இவன் குடும்பத்தில் பெரும் பிரளயமே வந்திருக்கும் காரணம் இவன் மனைவி கடும் கோவக்காரி...

  ஹ ஹ நல்ல நட்பு.... நண்பன் டா....//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 30. //VELU.G said...
  எல்லா இடத்திலும் நட்பு தான் கை கொடுக்குது. தல அடுத்த தடவை ஏதும் பிரச்சனைன்ன உடனே உங்களுக்கு போன் பண்ணிடறேன்//

  ஏன் எனக்கு முதுகுல டின் கட்டுரதுக்கா...

  ReplyDelete
 31. //சங்கவி said...
  /அக்காகாரியின் போன் முந்தியிருந்தால் இவன் குடும்பத்தில் பெரும் பிரளயமே வந்திருக்கும் காரணம் இவன் மனைவி கடும் கோவக்காரி...//

  அப்புறம் சதாவுக்கு பேச்சுலர் வாழ்க்கைதான்...

  நண்பேண்டா.....//

  அப்புறம் அவனும் தண்ணி அடிச்சிட்டு என் மூஞ்சில வாந்தி எடுத்துருப்பான் அவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 32. //Speed Master said...
  ஏன் சார் இப்ப அந்த மேட்டரை உடைச்சீட்டீங்களே//

  பேரு மாறிடிச்சே மக்கா....

  ReplyDelete
 33. ஹோஸ்ட் இன் ஹோட்டலில் ஆட்டம் களை கட்டியது. ஆணும் பெண்ணும் இணைந்து ஆடலாம். யாருடைய டான்ஸ் நல்லா இருக்கோ அவர்களோடு பெண்கள் கூட்டம் சேர்ந்து ஆடும். அங்கே டான்ஸ் ஆட நம்ம நடிகைகள் பல்லவி, ரூபிணி'யெல்லாம் வருவது உண்டு.


  ......அப்படியா? எங்க ஜெனரல் knowledge அய் வளர்க்கிறதில் உங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

  ReplyDelete
 34. //கவிதை வீதி # சௌந்தர் said...
  யாராவது இருக்கிங்கீளா..//

  இவளவு ஆட்கள் இருக்கோமே தெரியலையா...

  ReplyDelete
 35. //சி.பி.செந்தில்குமார் said...
  மனோ.. லேடீஸ் எல்லாம் வருவாங்க உங்க பிளாக்கிற்கு.. இப்படி எழுதலாமா?


  ஹி ஹி//

  போட்டு குடுத்தாச்சு இப்போ சந்தோஷமா ஒய்....
  பிச்சி புடுவேன் பிச்சி....

  ReplyDelete
 36. //சி.பி.செந்தில்குமார் said...
  >>>>அக்காகாரியின் போன் முந்தியிருந்தால் இவன் குடும்பத்தில் பெரும் பிரளயமே வந்திருக்கும் காரணம் இவன் மனைவி கடும் கோவக்காரி...

  அங்கே மட்டும் என்ன வாழுது?//

  எங்கே ஒய்...

  ReplyDelete
 37. //சி.பி.செந்தில்குமார் said...
  >>அஞ்சா சிங்கம் said...

  நமக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ன சபலம் தான் கொஞ்சம் அதிகம் ..................


  ஹா ஹா ரிப்பீட்டு//

  கொய்யால பிச்சி புடுவேன் பிச்சி....

  ReplyDelete
 38. //வேடந்தாங்கல் - கருன் said...
  நானும் வந்துட்டேன்..//


  Suresh Kumar said...
  நானும் வந்துட்டேன் மக்கா


  வாங்க வாங்க பாயாசம் குடிச்சிட்டு போங்க...

  ReplyDelete
 39. //இம்சைஅரசன் பாபு.. said...
  //மனோ.. லேடீஸ் எல்லாம் வருவாங்க உங்க பிளாக்கிற்கு.. இப்படி எழுதலாமா?//

  ஹி ..ஹி ..உண்மையபேசுரதுக்கும் ஒரு மனசு வேண்டும் ..மனோ சார் என்னமோ ஒரு பொன்னை தள்ளிகிட்டு போன மாதிரி சொல்லுறீங்க ....மக்கா ஆனாலும் இந்த விசயத்தில் நண்பனை காட்டி கொடுகலைனாலும் ..அவர் செய்தது தப்பு//

  அந்த நாயை அப்புறம் போட்டு தாளிச்சிட்டேன்'ல கொக்கா மக்கா வாழ்க்கையில இனி ஒரு பொன்னையும் ஏறெடுத்து பார்க்க முடியாம பண்ணிட்டேனே....

  ReplyDelete
 40. //கே.ஆர்.பி.செந்தில் said...
  டபுள் டக்கர் போஸ்ட்..//

  யப்பா....

  ReplyDelete
 41. உண்மையை சொன்னால் எனக்கும் எற ரொம்ப ஆசை ஆனால் இன்னும் கை கூடல..

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா

  பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

  ReplyDelete
 42. //பலே பிரபு said...
  இப்ப தெரிஞ்சுடுமே அண்ணா//

  பேரையே மாத்திட்டேன் மக்கா....

  ReplyDelete
 43. //ஜெய்லானி said...
  நானா இருந்தா அவன் வீட்டில சொல்லி முதுகில டின்னு கட்ட வச்சி இருப்பேன் .சான்ஸ் போச்சே...!!!//

  நீரு வீட்ல நெதமும் சொத்தாப்பை அடி வாங்கி உமக்கு மரத்து போச்சு ஒய்....

  ReplyDelete
 44. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  இது புதுசா இருக்கே ஹெஹேஹே//

  இன்னும் நெறைய மேட்டர் இருக்குய்யா...

  ReplyDelete
 45. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  அரே மாய்லா...............என் பொண்டாட்டியின் அக்கா...எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை சொல்லு மக்கா //
  இதான் ஆப்பு//

  ஹா ஹா ஹா எப்பிடி இருந்துருக்கும் அவனுக்கு...

  ReplyDelete
 46. //ர்.கே.சதீஷ்குமார் said...
  பேனர் ஃபோட்டோவை சிறிதாக்குங்கள் பாஸ் ...பிளாக் ஓபன் ஆக லேட்டாகுது//

  சரி மக்கா...

  ReplyDelete
 47. //vanathy said...
  என்ன இருந்தாலும் மனைவிக்கு துரோகம் பண்ணியவரை நீங்களும் சேர்ந்து காப்பாற்றி இருக்கிறீங்க. very bad!!!!!//

  நான் போட்ட போடுல பய அலறி சரண்டர் ஆகிட்டான்....இப்போ ரொம்ப நல்லவன். திருந்த ஒரு சந்தர்ப்பம்... சாரி'ப்பா...

  ReplyDelete
 48. //Chitra said...
  ஹோஸ்ட் இன் ஹோட்டலில் ஆட்டம் களை கட்டியது. ஆணும் பெண்ணும் இணைந்து ஆடலாம். யாருடைய டான்ஸ் நல்லா இருக்கோ அவர்களோடு பெண்கள் கூட்டம் சேர்ந்து ஆடும். அங்கே டான்ஸ் ஆட நம்ம நடிகைகள் பல்லவி, ரூபிணி'யெல்லாம் வருவது உண்டு.


  ......அப்படியா? எங்க ஜெனரல் knowledge அய் வளர்க்கிறதில் உங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...//

  நல்லா திட்டுங்கோ.....

  ReplyDelete
 49. //ம.தி.சுதா♔ said...
  உண்மையை சொன்னால் எனக்கும் எற ரொம்ப ஆசை ஆனால் இன்னும் கை கூடல..//

  எங்கே போய் ஏற?????

  ReplyDelete
 50. நீங்கள் எழுதிப்போகும் எழுத்தின் நடையும்
  சொல்லிப் போகும் குஷாலான விஷயமும்
  ஒன்றை ஒன்று மிஞ்சிப போவதால் இந்தப் பதிவு
  படு சுவாரஸ்யமான பதிவாக மாறிப்போனது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 51. //Ramani said...
  நீங்கள் எழுதிப்போகும் எழுத்தின் நடையும்
  சொல்லிப் போகும் குஷாலான விஷயமும்
  ஒன்றை ஒன்று மிஞ்சிப போவதால் இந்தப் பதிவு
  படு சுவாரஸ்யமான பதிவாக மாறிப்போனது
  தொடர வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி குரு......

  ReplyDelete
 52. சாகி நாக்கா....யோவ்வ்....நீ எப்பய்யா துபாயில வேல செஞ்ச. அடபோக்கிரி , சரியான மண்டைதான் உனக்கு. கூமுட்ட மராட்டி நண்பன காப்பாத்திட்டியே . வெல் டன் ராஜா. நீ நண்பேண்டா...:)))) HATS OFF MANO!!

  ReplyDelete
 53. மக்கா நிகழ்வு எப்படி நடந்ததோ.. அதனை ஒரு துளி அளவு கூட மாற்றம் வராமல் வார்த்தைகளில் கூறி உள்ளீர்கள்.. சாரி காட்டி உள்ளீர்கள் என்பது பொருத்தமாய் இருக்கும்.. பேசமா எழுத்தாளரா போகாலாம்.. நெறய திறமைகள் இருக்கு உங்க கிட்ட.. நிகழ்வுகளை அதன் பதற்றம் மாறாமல் கூறி உள்ளீர்கள்..

  ReplyDelete
 54. தோள் கொடுக்கும் நட்பு ஐடியாவும் கொடுக்கிறது

  ReplyDelete
 55. இனி அடுத்த நாள் பார்ட்டி காலை பதினோரு மணிக்கு மல்லிகா பாரில் என முடிவானது//

  வெளங்கிரும்

  ReplyDelete
 56. அவனை துஜி ஆயிஜி @#$#@#@ [மராட்டி] திட்ட...//

  நான் கூட சைனீஸ்ன்னு நினைச்சேன்...பாவம் அவரே கன்ப்யூஸ் ஆயிட்டாரு...

  ReplyDelete
 57. .அக்கா'காரி "ங்கே".//

  எதோ பூக்காரி மாதிரி சொல்றீங்களே...

  ReplyDelete
 58. இவனை நேரில் பார்த்த போது நான் கொடுத்த டோஸில், என் இன்னொரு முகத்தை பார்த்தான்.

  - மக்கா எங்க அந்த முகத்த தளத்துல போடுங்க ப்ளீஸ் ஹி ஹி!

  அங்கிள் அங்கிள் ப்ளீஸ்!

  ReplyDelete
 59. "சி.பி.செந்தில்குமார் said...
  மனோ.. லேடீஸ் எல்லாம் வருவாங்க உங்க பிளாக்கிற்கு.. இப்படி எழுதலாமா?

  ஹி ஹி"

  >>>>>>>>>>>>>>
  யாரு சொல்றா அத..........என்ன கொடும சிபி இது............

  தம்பி நேத்து பள்ளிக்கூடத்துல ஒரு ஷோவா ரெண்டு ஷோவா ஹி ஹி!

  ReplyDelete
 60. //கக்கு - மாணிக்கம் said...
  சாகி நாக்கா....யோவ்வ்....நீ எப்பய்யா துபாயில வேல செஞ்ச. அடபோக்கிரி , சரியான மண்டைதான் உனக்கு. கூமுட்ட மராட்டி நண்பன காப்பாத்திட்டியே . வெல் டன் ராஜா. நீ நண்பேண்டா...:)))) HATS OFF MANO!!//

  பஞ்சாபி சேச்சி...இப்போ சந்தோஷம்தானே....

  ReplyDelete
 61. //மதுரை பொண்ணு said...
  மக்கா நிகழ்வு எப்படி நடந்ததோ.. அதனை ஒரு துளி அளவு கூட மாற்றம் வராமல் வார்த்தைகளில் கூறி உள்ளீர்கள்.. சாரி காட்டி உள்ளீர்கள் என்பது பொருத்தமாய் இருக்கும்.. பேசமா எழுத்தாளரா போகாலாம்.. நெறய திறமைகள் இருக்கு உங்க கிட்ட.. நிகழ்வுகளை அதன் பதற்றம் மாறாமல் கூறி உள்ளீர்கள்.. //

  நல்ல வேளை தப்பிச்சென் எங்கே அருவா வெளியே வந்துருமோன்னு பயந்துகிட்டு இருந்தேன்.

  ReplyDelete
 62. //டக்கால்டி said...
  தோள் கொடுக்கும் நட்பு ஐடியாவும் கொடுக்கிறது//

  ஹே ஹே ஹே ஹே என்னல்லாம் பண்ண வேண்டி இருக்கு மக்கா...

  ReplyDelete
 63. //டக்கால்டி said...
  இனி அடுத்த நாள் பார்ட்டி காலை பதினோரு மணிக்கு மல்லிகா பாரில் என முடிவானது//

  வெளங்கிரும்//

  நாசமா போச்சி....

  ReplyDelete
 64. //டக்கால்டி said...
  அவனை துஜி ஆயிஜி @#$#@#@ [மராட்டி] திட்ட...//

  நான் கூட சைனீஸ்ன்னு நினைச்சேன்...பாவம் அவரே கன்ப்யூஸ் ஆயிட்டாரு...//

  ஹா ஹா ஹா....

  ReplyDelete
 65. //டக்கால்டி said...
  .அக்கா'காரி "ங்கே".//

  எதோ பூக்காரி மாதிரி சொல்றீங்களே...//

  ஐ இது நல்லா இருக்கே....

  ReplyDelete
 66. //விக்கி உலகம் said...
  இவனை நேரில் பார்த்த போது நான் கொடுத்த டோஸில், என் இன்னொரு முகத்தை பார்த்தான்.

  - மக்கா எங்க அந்த முகத்த தளத்துல போடுங்க ப்ளீஸ் ஹி ஹி!

  அங்கிள் அங்கிள் ப்ளீஸ்!//

  நான் சைனா பாஷைல பேசுனா எப்பிடி இருக்கும் கற்பனை பண்ணிக்கோங்க மச்சி...

  ReplyDelete
 67. //விக்கி உலகம் said...
  "சி.பி.செந்தில்குமார் said...
  மனோ.. லேடீஸ் எல்லாம் வருவாங்க உங்க பிளாக்கிற்கு.. இப்படி எழுதலாமா?

  ஹி ஹி"

  >>>>>>>>>>>>>>
  யாரு சொல்றா அத..........என்ன கொடும சிபி இது............

  தம்பி நேத்து பள்ளிக்கூடத்துல ஒரு ஷோவா ரெண்டு ஷோவா ஹி ஹி!//

  ரெண்டுன்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 68. நல்ல யோசனை.. ப்ரசன்ஸ் ஆஃப் மைன்ட்.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 69. அண்ணே உங்களுக்கு இந்த யோசனை எல்லாம் எப்படிங்க வருது??

  ReplyDelete
 70. வணக்கம் சகோதரம், கொஞ்சம் சீரியசான விடயத்தை, சமயோசிதமாக தீர்த்திருக்கிறீர்கள். அருமையான நண்பர். அவரை திருத்த ஆலோசனை வழங்கிய அன்பர். அருமையான கதையோட்டம், ஆனால் அவரின் மனைவியின் தங்கை சொன்னது தான் அவருக்கு இடி விழுந்த மாதிரி உணர்வினை வர வழைத்திருக்கும்.

  ReplyDelete
 71. //வசந்தா நடேசன் said...
  நல்ல யோசனை.. ப்ரசன்ஸ் ஆஃப் மைன்ட்.. வாழ்த்துக்கள்.//

  என்னை குத்த வச்சி உக்கார சொல்லி நீங்க திட்டுற மாதிரியே இருக்கு மக்கா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 72. //எம் அப்துல் காதர் said...
  அண்ணே உங்களுக்கு இந்த யோசனை எல்லாம் எப்படிங்க வருது??//

  வரலாறு பாடத்துல இருந்து படிச்சது...இனி இதை பாடத்துல வைப்பாங்க...கி கி கி கி கி....

  ReplyDelete
 73. //நிரூபன் said...
  வணக்கம் சகோதரம், கொஞ்சம் சீரியசான விடயத்தை, சமயோசிதமாக தீர்த்திருக்கிறீர்கள். அருமையான நண்பர். அவரை திருத்த ஆலோசனை வழங்கிய அன்பர். அருமையான கதையோட்டம், ஆனால் அவரின் மனைவியின் தங்கை சொன்னது தான் அவருக்கு இடி விழுந்த மாதிரி உணர்வினை வர வழைத்திருக்கும்.//

  திருந்த ஒரு சந்தர்ப்பம்....

  ReplyDelete
 74. makkaa ippo padichaa punture aaga maattanaaa unga frnd?? ethukku ippadi kothu vittu vedikka paakkureenga... ithai ennaal othu kolla mudiyaathu...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!