Monday, November 28, 2011

பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால் காமெடி கும்மி...!!!

விஜயகாந்த் முதற்கொண்டு, விஜய், அஜித், சொம்பு ச்சே ச்சீ சிம்பு, தனுஷ், பவர்ஸ்டார், ரித்தீஷ் ஏன் நடிகைகள் குஷ்பு, சினேகா, ரஞ்சிதா [[நித்யா]] சினேகா, த்ரிஷா, இவர்களெல்லாம் நான்தான் அடுத்த முதல்வர்னு சொல்லும்போது, பிரபல பிராப்ள பதிவர் நாஞ்சில்மனோ'வாகிய நான் ஏன் 2016 ல தமிழக முதல்வர் ஆகக்கூடாது...????
கிராபிக்ஸ் போட்டோ உபயம் மதுரை தமிழன்.

மொள்ளமாரி, முடிச்செருக்கி அப்பிடிப்பட்டவன் எல்லாம் அரசியலில் இருந்து, அமைச்சரா இருக்கானுக சிலர், ஏன் நம்ம பதிவுலகில் உள்ள சிபி, விக்கி, சத்ரியன், ராஜி, வானதி எல்லாம் ஏன் அமைச்சர் ஆகக்கூடாது ஹி ஹி.....

நான் முதல்வர் ஆனால் எந்தெந்த பதிவர்களுக்கு எந்தெந்த இலாக்காக்கள் கொடுக்கப்படும் என்பதை சொல்லுறேன் கவனமா படியுங்க....

சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.


விக்கி : வெளியுறவு துறை அமைச்சர் [[அப்பிடி ஒன்னு இருக்கா..?]]

கவிதைவீதி : சட்டமன்ற புலவர்.

கருண் : மாமியார் வீட்டு அமைச்சர் ஸாரி கல்வித்துறை அமைச்சர்.

ஆபீசர் : உணவுத்துறை அமைச்சர். இவருக்கு தப்பு செஞ்சவிங்க யாரைவேண்டுமானாலும் பெல்ட்டால் அடிக்க உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது, ஸ்பெஷல் பெல்ட் வியட்னாம்'ல இருந்து வந்துகிட்டே இருக்கு.

திவானந்தா : ரவுடி துறை அமைச்சர், அதாவது என்கவுண்டர்ல போட்டு தள்ளுறது.


கல்பனா : சுற்றுலாத்துறை அமைச்சர்.

கே ஆர் விஜயன் : வனத்துறை அமைச்சர்.

"என் மனவானில்" செல்வி : முறுக்கு துறை அமைச்சர்.


மொக்கைராசு மாமா : நகைச்சுவை துறை அமைச்சர்.

நாய் நக்ஸ் : சுகர் வாரியம் அமைச்சர்.

நிரூபன் : பிஞ்சி போன காதல்துறை அமைச்சர்.

பன்னிகுட்டி : பயடேட்டா துறை அமைச்சர்.


"கோமாளி"செல்வா : ரேடியோ துறை அமைச்சர்.

சிரிப்பு போலீஸ்" ரமேஷ் : சிங்கை டூ தமிழ்நாடு நல்லுறவு அமைச்சர்.

ஆமீனா : பதிவர்கள் துறை அமைச்சர்.

கோமதி அக்காள் : சிரிப்பு துறை அமைச்சர்.

சத்ரியன் : கவிதை துறை அமைச்சர்.

ருஃபினா : புத்தகம் துறை அமைச்சர்.


தேனம்மை லட்சுமணன் : பத்திரிக்கை துறை அமைச்சர்.

சிநேகிதி : தாய்மார்கள் துறை அமைச்சர் [[குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காதவங்களுக்கு அடி நிச்சயம்]]

மேனகா : சமையல் துறை அமைச்சர்.

சென்னை பித்தன் : அறநிலை துறை அமைச்சர்.

ரமணி குரு : சிந்தனை துறை அமைச்சர்.

மகேந்திரன் : புவவர் துறை அமைச்சர்.

வெளங்காதவன் : கப்பல் வியாபாரத்துறை அமைச்சர்.


காட்டான் : விசா'துறை அமைச்சர்.

துஷ்யந்தன் : விளையாட்டு துறை அமைச்சர்.

"கலியுகம்"தினேஷ் : தண்ணி தொட்டித்துறை அமைச்சர்.

"தமிழ்வாசி"பிரகாஷ் : இன்ஜினியரிங் பேர்பார்ட்ஸ் துறை அமைச்சர்.

"மெட்ராஸ் பவன்"சிவகுமார் : போக்குவரத்து துறை அமைச்சர்.

பிரபாகரன் : டாஸ்மாக் துறை அமைச்சர். [[மரியாதையா கமிஷன் வந்துறனும், இல்லைன்னா திவானந்தா அல்லைக்கை சண்முகபாண்டியை அருவாளோடே அனுப்பி வச்சிருவேன் ஹி ஹி]]


அஞ்சாசிங்கம் : சண்டை துறை அமைச்சர்.

சிவா : நடிகைகள் துறை அமைச்சர்.

கோகுல் : கொங்கு மண்டல துறை அமைச்சர்.

அரசன் : ஹைக்கூ கவிதை அமைச்சர்.

ராஜி : ஜவுளித்துறை அமைச்சர்.

ஐ ரா ரமேஷ் : மின்சாரத்துறை அமைச்சர் [[ஹா ஹா ஹா ஹா மாட்னாருய்யா]]

கே எஸ் எஸ் ராஜ் : சுகாதாரத்துறை அமைச்சர் [[ஆனால் இவர் குளிக்கமாட்டார் ஹி ஹி]]


பொன்னர் அம்பலத்தார் : ரகசியத்துறை அமைச்சர்.

"நல்லநேரம்"சதீஷ் : சட்டமன்ற ஆஸ்தான ஜோசியர்.

அம்பாலடியாள் : கண்ணீர் கவிதை துறை அமைச்சர்.

ராஜராஜேஸ்வரி : தமிழ்நாடு கவர்னர்.


சரி இனி எல்லாரும் ஒழுங்கா கவர்னர் மாளிகை போயி பதவி பிரமாணம் எடுத்துக்கோங்க, அடுத்து, வாங்குற கமிஷன்ல பாதி, முதல்வரான நாஞ்சில்மனோ டேபிளுக்கு வந்துரனும், சேட்டை பண்ணி கமிஷன் எனக்கு வரலைன்னா ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அடிக்கடி முந்திரி சபை ச்சே ச்சீ மந்திரி சபை மாற்றி அமைக்கப்படும், சட்டசபையில் தினமும் வேஷ்டி கிழிக்கப்படும் என்பதால், சண்டையில் கிழியாத வேஷ்டி வாங்கி கொல்லவும் ஸாரி கொள்ளவும்...

நான் அடிக்கடி போடாநாடு போயி ரெஸ்ட் எடுப்பதை யாரும் கண்டுக்கப்புடாது, குண்டக்க மண்டக்க விலையை ஏற்றுவேன், அதனால மக்களிடம் எனக்கு நல்ல பெயர் கிடைக்க கோயபல்ஸ் வேலை செய்யணும்...

அடுத்து எனக்கு ஒரு நாளைக்கு மூன்று நான்கு பாராட்டுவிழா சினிமாத்துறையினர் செய்து தரணும் இல்லைனா, தமிழ் சினிமாவுக்கு மலையாளம் தலைப்பு வைக்க சொல்லி சட்டம் கொண்டு வந்துருவேன்.

அஜீத், விஜய், ரஜினி, கமல் எல்லாரும் கண்டிப்பாக விழாவுக்கு வரவேண்டும், இல்லையெனில் திவானந்தா தலைமையில் குண்டாந்தடிதுறை களமிறக்கப்டும், மிரட்டப்படுவார்கள், அல்லது வலுகட்டாயமாக கதற கதற தூக்கி வரப்படுவார்கள்.


டிஸ்கி : எம்புட்டு அடிக்கனுமோ அம்புட்டு அடியுங்க மிதியுங்க ஆனால், கல்லெடுத்து மட்டும் எறிஞ்சிபுடாதீங்க, ஏன்னா எனக்கு கல்லுலதான் கண்டம்னு எங்க கோமதி அக்கா "நல்லநேரம்"சதீஷ்'கிட்டே ஜோசியம் பார்த்துட்டு சொன்னாங்க ஹி ஹி...

பிஸ்கி : சும்மா சும்மா சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க ஹி ஹி...

பஸ்கி : பதிவர்கள் ஒரிஜினல் படம் போடுவது போரா இருக்கு, இனியும் தொடர்ந்து போடுவாயானால் நான் மலையில் இருந்து குதிச்சிருவேன் என்று என் கால் சுண்டு விரலை பிடித்து சிபி கதறியதாலும், விக்கி டைம்பாம் பார்சல் அனுப்பப்படும் என்று மிரட்டியதாலும், படங்கள் போடவில்லை, கண்டிப்பா படம் போடணும்னு சொல்லுறவிங்க கீழே கமெண்டுங்க...

170 comments:

 1. சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.///

  இதுல ஊழல் எப்படி பண்ண முடியும்?

  ReplyDelete
 2. மக்களே,
  கும்மி கோஷ்டி அருமையா அமைஞ்சிருக்கு...

  அமைச்சரவை விரிவாக்கம் முடிஞ்சுதா....
  ஹா ஹா ஹா ஹா ..

  ஆனாலும் எப்புடித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ....

  ReplyDelete
 3. விக்கி : வெளியுறவு துறை அமைச்சர் [[அப்பிடி ஒன்னு இருக்கா..?]]//

  இருக்கு,,,, விக்கி இருக்காருல...

  ReplyDelete
 4. போட்ட கண்டிசன் எல்லாம் யாரையோ குத்துற மாதிரியே இருக்குதே.....

  ReplyDelete
 5. கவிதைவீதி : சட்டமன்ற புலவர்.//

  புலவரே.... அமைச்சரவை முதல் நாள் கூட்டத்துக்கு ஒரு இன்ட்ரோ பாட்டு ரெடி பண்ணுங்க

  ReplyDelete
 6. திருஷ்டி சுத்தி போடச் சொல்லுங்கய்யா
  முதல்வர் ஆனதும் திருஷ்டி ஏறிப்போச்சு உங்களுக்கு....

  ReplyDelete
 7. கருண் : மாமியார் வீட்டு அமைச்சர் ஸாரி கல்வித்துறை அமைச்சர்.///

  கல்வித் துறையில் சாரியா? எந்த டீச்சர் சாரி...

  ReplyDelete
 8. தமிழ்வாசி பிரகாஷ் said...
  முதல் ஊழல்... ஹி ஹி//

  அடப்பாவிகளா முதல்லயே ஊழலா, களி திங்க வச்சிருவாயின்களோ...

  ReplyDelete
 9. தமிழ்வாசி பிரகாஷ் said...
  சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.///

  இதுல ஊழல் எப்படி பண்ண முடியும்?//

  கில்மா டிவிடி ஹி ஹி...

  ReplyDelete
 10. அட பாவி ....எனக்கு இந்த துறை வேண்டாம் .....
  என்னை ....
  சினிமா துறை-ல வில்லன் துறை
  கொடுக்கவும் ...ஹி ஹி ..

  ReplyDelete
 11. மகேந்திரன் said...
  மக்களே,
  கும்மி கோஷ்டி அருமையா அமைஞ்சிருக்கு...

  அமைச்சரவை விரிவாக்கம் முடிஞ்சுதா....
  ஹா ஹா ஹா ஹா ..

  ஆனாலும் எப்புடித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ....//

  அடுத்த காமெடி கும்மியில விரிவாக்கம் பண்ணிருவோம் புலவரே...

  ReplyDelete
 12. ஆபீசர் : உணவுத்துறை அமைச்சர்.///

  ஒ.. இவரு முக்கியம்.... பஞ்சத்த போக்கும் அமைச்சர்.

  ReplyDelete
 13. தமிழ்வாசி பிரகாஷ் said...
  விக்கி : வெளியுறவு துறை அமைச்சர் [[அப்பிடி ஒன்னு இருக்கா..?]]//

  இருக்கு,,,, விக்கி இருக்காருல...//

  அவன் சரக்கடிச்சுட்டு மட்டையாகிருவானே ஹி ஹி...

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. நல்லா சொல்லுரார்யா ... DEPARTMENT-டு ......

  ReplyDelete
 16. மகேந்திரன் said...
  போட்ட கண்டிசன் எல்லாம் யாரையோ குத்துற மாதிரியே இருக்குதே....//

  உள்குத்து இருக்கு ஹி ஹி...

  ReplyDelete
 17. திவானந்தா : ரவுடி துறை அமைச்சர்,

  நித்தியானந்தா கவனிக்க. உம் ஆஸ்ரமத்தை பாதுகாக்க இவரை கவனியும்...

  ReplyDelete
 18. 'மனோ'தத்துவ கலைஞர் போட்டோ செம

  ReplyDelete
 19. தமிழ்வாசி பிரகாஷ் said...
  கவிதைவீதி : சட்டமன்ற புலவர்.//

  புலவரே.... அமைச்சரவை முதல் நாள் கூட்டத்துக்கு ஒரு இன்ட்ரோ பாட்டு ரெடி பண்ணுங்க//

  அழாமல் இருப்பதற்கு முதல்ல டிரைனிங்க குடுக்கணும் ஹி ஹி...

  ReplyDelete
 20. கல்பனா : சுற்றுலாத்துறை அமைச்சர்.///

  ஆமா, பஸ், ரயில் கட்டணம் கூடி போயிருச்சே... எப்படி ஊர் சுத்த முடியும்?

  ReplyDelete
 21. மகேந்திரன் said...
  திருஷ்டி சுத்தி போடச் சொல்லுங்கய்யா
  முதல்வர் ஆனதும் திருஷ்டி ஏறிப்போச்சு உங்களுக்கு....//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 22. கே ஆர் விஜயன் : வனத்துறை அமைச்சர்.///

  பாவம்யா வன விலங்குகள்...

  ReplyDelete
 23. தமிழ்வாசி பிரகாஷ் said...
  கருண் : மாமியார் வீட்டு அமைச்சர் ஸாரி கல்வித்துறை அமைச்சர்.///

  கல்வித் துறையில் சாரியா? எந்த டீச்சர் சாரி...//

  எதுக்குய்யா அவரை கையை பிடிச்சி இழுக்குதீறு...

  ReplyDelete
 24. இந்த துறைகள் எல்லாம் வந்தால் நிச்சயம் தமிழ்நாடு உருப்பட்டுடும்(?)
  ஹிஹி

  ReplyDelete
 25. "என் மனவானில்" செல்வி : முறுக்கு துறை அமைச்சர்.//

  அட முறுக்கு உலக்கில் ஊழல்... தற்போதைய செய்தி.

  ReplyDelete
 26. NAAI-NAKKS said...
  அட பாவி ....எனக்கு இந்த துறை வேண்டாம் .....
  என்னை ....
  சினிமா துறை-ல வில்லன் துறை
  கொடுக்கவும் ...ஹி ஹி ..//

  பதவி தந்தா சமர்த்தா இருக்கணும் இல்லைன்னா டிஸ்மிஸ் பண்ணி கஞ்சா கேஸ்ல உள்ளே தூக்கி வச்சிருவேன் கி கி கி கி...

  ReplyDelete
 27. பேசுனதுக்கப்பறம் மேஜை தட்டனுமா?இல்ல முன்னாடியே தட்டனுமான்னு சொல்லிடுங்க.
  டைமிங் முக்கியம் அமைச்சர்!

  ReplyDelete
 28. மொக்கைராசு மாமா : நகைச்சுவை துறை அமைச்சர்.//

  மொக்கை பிரிவில் ஊழல் செய்து மொத ஜெயிலுக்கு போன மாமா இவரு தான்... ஹே ஹே...

  ReplyDelete
 29. தமிழ்வாசி பிரகாஷ் said...
  ஆபீசர் : உணவுத்துறை அமைச்சர்.///

  ஒ.. இவரு முக்கியம்.... பஞ்சத்த போக்கும் அமைச்சர்.//

  வயிறார சாப்பாடு தருற வள்ளலாச்சே...!!!

  ReplyDelete
 30. நாய் நக்ஸ் : சுகர் வாரியம் அமைச்சர்.///

  சுகாதார துறைன்னு சொல்ல வந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிருச்சா?

  ReplyDelete
 31. NAAI-NAKKS said...
  நல்லா சொல்லுரார்யா ... DEPARTMENT-டு ..//

  ஹஹா ஹா ஹா ஹா ஹா அண்ணே வணக்கம்ன்னே...

  ReplyDelete
 32. அருமையான கற்பனை நண்பரே

  ஹாஸ்யம்

  ReplyDelete
 33. நிரூபன் : பிஞ்சி போன காதல்துறை அமைச்சர்.//ஹிஹி...ஹாஹா...
  அவரின் சோகம் உங்களுக்கு நக்கல்.
  அங்கிள், யாரவது நல்ல பெண்ணா இருந்தா சொல்லுங்க. இந்தப் பதிவுலகமே சேர்ந்து நிரூபனுக்கு கல்யாணம் செய்து வைச்சிடலாம்.

  ReplyDelete
 34. தமிழ்வாசி பிரகாஷ் said...
  திவானந்தா : ரவுடி துறை அமைச்சர்,

  நித்தியானந்தா கவனிக்க. உம் ஆஸ்ரமத்தை பாதுகாக்க இவரை கவனியும்...//

  நித்தியானந்தாவை திவானந்தா கட்டையால அடிக்கிறதை கற்பனை பண்ணி பாருங்க செம காமெடியா இருக்கும்...!!

  ReplyDelete
 35. கோகுல் said...
  'மனோ'தத்துவ கலைஞர் போட்டோ செம//

  ஹா ஹா ஹா ஹா நண்பன் சாஜூ கைவண்ணம்...

  ReplyDelete
 36. தமிழ்வாசி பிரகாஷ் said...
  கல்பனா : சுற்றுலாத்துறை அமைச்சர்.///

  ஆமா, பஸ், ரயில் கட்டணம் கூடி போயிருச்சே... எப்படி ஊர் சுத்த முடியும்?//

  நம்ம தங்கச்சி பாப்பாவுக்கு மெரிசிடிஸ் கார் வாங்கி குடுப்பேன்ய்யா...

  ReplyDelete
 37. \\\\\\\\\\\\\\\\\\\\மொள்ளமாரி, முடிச்செருக்கி அப்பிடிப்பட்டவன் எல்லாம் அரசியலில் இருந்து, அமைச்சரா இருக்கானுக சிலர், ஏன் நம்ம பதிவுலகில் உள்ள சிபி, விக்கி, சத்ரியன், ராஜி, வானதி எல்லாம் ஏன் அமைச்சர் ஆகக்கூடாது ஹி ஹி.....
  \\\\\\\\\\\\\\\\\\\\\

  இந்த நண்பர்களை எல்லாம் திட்டுறீங்களா பாராட்டுறீங்களா? பாவம் அவர்கள்...

  ReplyDelete
 38. தமிழ்வாசி பிரகாஷ் said...
  கே ஆர் விஜயன் : வனத்துறை அமைச்சர்.///

  பாவம்யா வன விலங்குகள்...//

  ஹா ஹா ஹா ஹா பாவம் அவரு கூடுதலா அசைவம் சாப்பிட மாட்டார்ய்யா...

  ReplyDelete
 39. கோகுல் said...
  இந்த துறைகள் எல்லாம் வந்தால் நிச்சயம் தமிழ்நாடு உருப்பட்டுடும்(?)
  ஹிஹி//

  ஹா ஹா ஹா சிபி உருப்பட விடுவானாக்கும்...

  ReplyDelete
 40. தமிழ்வாசி பிரகாஷ் said...
  "என் மனவானில்" செல்வி : முறுக்கு துறை அமைச்சர்.//

  அட முறுக்கு உலக்கில் ஊழல்... தற்போதைய செய்தி.//

  மலேசியாவில் இருந்து வந்து மிதிச்சி போடப்போறாங்க ஜாக்கிரதை...

  ReplyDelete
 41. கோகுல் said...
  பேசுனதுக்கப்பறம் மேஜை தட்டனுமா?இல்ல முன்னாடியே தட்டனுமான்னு சொல்லிடுங்க.
  டைமிங் முக்கியம் அமைச்சர்!//

  வேஷ்டி கிளியாதவரைக்கும் தட்டலாம்...

  ReplyDelete
 42. நல்ல கற்பனை முதல்வரே..... :)

  ReplyDelete
 43. நிரூபன் : பிஞ்சி போன காதல்துறை அமைச்சர்.///

  இதுல செருப்பு ஊழலுக்கு நிறைய வாய்ப்பு இருக்கே,,,

  ReplyDelete
 44. தமிழ்வாசி பிரகாஷ் said...
  மொக்கைராசு மாமா : நகைச்சுவை துறை அமைச்சர்.//

  மொக்கை பிரிவில் ஊழல் செய்து மொத ஜெயிலுக்கு போன மாமா இவரு தான்... ஹே ஹே..//

  ஜெயிலில் போயும் ஊழல் செஞ்சிருவார் பார்த்துக்கோங்க...

  ReplyDelete
 45. பன்னிகுட்டி : பயடேட்டா துறை அமைச்சர்.///

  மனுஷன் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாரு... இப்ப கொடி கட்டி பறக்குது பதிவுலகில்...

  ReplyDelete
 46. தமிழ்வாசி பிரகாஷ் said...
  நாய் நக்ஸ் : சுகர் வாரியம் அமைச்சர்.///

  சுகாதார துறைன்னு சொல்ல வந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிருச்சா?//

  இல்லை சுகரேதான்...

  ReplyDelete
 47. M.R said...
  அருமையான கற்பனை நண்பரே

  ஹாஸ்யம்//

  நன்றி நண்பரே....

  ReplyDelete
 48. vanathy said...
  நிரூபன் : பிஞ்சி போன காதல்துறை அமைச்சர்.//

  ஹிஹி...ஹாஹா...
  அவரின் சோகம் உங்களுக்கு நக்கல்.
  அங்கிள், யாரவது நல்ல பெண்ணா இருந்தா சொல்லுங்க. இந்தப் பதிவுலகமே சேர்ந்து நிரூபனுக்கு கல்யாணம் செய்து வைச்சிடலாம்.//

  கல்யாணம் கட்டி வச்சிருவோம் அவரின் மனசுக்கேத்தபடி கவலையை விடுங்க...

  ReplyDelete
 49. "தமிழ்வாசி"பிரகாஷ் : இன்ஜினியரிங் பேர்பார்ட்ஸ் துறை அமைச்சர்.///

  அய்.... நன்றி மக்கா.... ஊழல் செய்ய வாய்ப்பு நெறைய இருக்கு.... அதுக்குத்தானே பதவியில வந்திருக்கோம்....

  யாருல அங்க போலீசுக்கு போன் போடறது?

  ReplyDelete
 50. அப்பு said...
  \\\\\\\\\\\\\\\\\\\\மொள்ளமாரி, முடிச்செருக்கி அப்பிடிப்பட்டவன் எல்லாம் அரசியலில் இருந்து, அமைச்சரா இருக்கானுக சிலர், ஏன் நம்ம பதிவுலகில் உள்ள சிபி, விக்கி, சத்ரியன், ராஜி, வானதி எல்லாம் ஏன் அமைச்சர் ஆகக்கூடாது ஹி ஹி.....
  \\\\\\\\\\\\\\\\\\\\\

  இந்த நண்பர்களை எல்லாம் திட்டுறீங்களா பாராட்டுறீங்களா? பாவம் அவர்கள்...//

  ஹா ஹா ஹா ஹா அப்பு முடியல....

  ReplyDelete
 51. வெங்கட் நாகராஜ் said...
  நல்ல கற்பனை முதல்வரே..... :)//

  நன்றி அடுத்து அமைச்சர் ஆகபோகிறவரே ஹி ஹி...

  ReplyDelete
 52. ஆஹா எனக்கும் பதவியா மிக்க நன்றிங்கோ....இன்னும் 1 மாசத்துல நான் கோடீஸ்வரீஈஈஈஈஈஈஈஈ....

  ReplyDelete
 53. தமிழ்வாசி பிரகாஷ் said...
  நிரூபன் : பிஞ்சி போன காதல்துறை அமைச்சர்.///

  இதுல செருப்பு ஊழலுக்கு நிறைய வாய்ப்பு இருக்கே,,,//

  "அம்மா"வை அநியாயத்துக்கு நியாபகப் படுத்துரீங்களே....

  ReplyDelete
 54. தமிழ்வாசி பிரகாஷ் said...
  பன்னிகுட்டி : பயடேட்டா துறை அமைச்சர்.///

  மனுஷன் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாரு... இப்ப கொடி கட்டி பறக்குது பதிவுலகில்...//

  இப்போ அமைச்சரே ஆகிட்டாரு ஹி ஹி

  ReplyDelete
 55. தமிழ்வாசி பிரகாஷ் said...
  "தமிழ்வாசி"பிரகாஷ் : இன்ஜினியரிங் பேர்பார்ட்ஸ் துறை அமைச்சர்.///

  அய்.... நன்றி மக்கா.... ஊழல் செய்ய வாய்ப்பு நெறைய இருக்கு.... அதுக்குத்தானே பதவியில வந்திருக்கோம்....

  யாருல அங்க போலீசுக்கு போன் போடறது?//

  யோவ் ஆபீசர் பெல்ட்டோடு வந்துரப்போராறு...

  ReplyDelete
 56. S.Menaga said...
  ஆஹா எனக்கும் பதவியா மிக்க நன்றிங்கோ....இன்னும் 1 மாசத்துல நான் கோடீஸ்வரீஈஈஈஈஈஈஈஈ....//

  ஹா ஹா ஹா ஹா "களி"யும் நியாபகம் இருக்கட்டும், அப்புறம் நம்ம கமிஷனை கரீக்டா அனுப்பிறனும், இல்லைன்னா பதவி டமால் ஹி ஹி...

  ReplyDelete
 57. பாதி முதல்வரான நாஞ்சில்மனோ //
  மீதி முதல்வர் யாரு?

  ReplyDelete
 58. எனக்கு பிடிச்ச துறைக்கே அமைச்சர் ஆக்கியதால் மற்ற துறைகளும் அவரவர்க்கு பிடிச்சதா பார்த்து தான் போட்டு இருப்பீங்க.
  திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க. என்ன ஒரு சென்ஸ் ஆப் ஹுமர்

  ReplyDelete
 59. வானதி எல்லாம் ஏன் அமைச்சர் ஆகக்கூடாது ஹி ஹி.....//எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், அப்பு.
  குடியரசுத் தலைவர், பிரதமர் பதவி இது மேல தான் எப்போதும் கண். ரெக்கமன்ட் பண்ணுங்க.

  ReplyDelete
 60. மொள்ளமாரி, முடிச்செருக்கி அப்பிடிப்பட்டவன் எல்லாம் அரசியலில் இருந்து, அமைச்சரா இருக்கானுக சிலர், ஏன் நம்ம பதிவுலகில் உள்ள சிபி, விக்கி, சத்ரியன், ராஜி, வானதி எல்லாம் ஏன் அமைச்சர் ஆகக்கூடாது ஹி ஹி.....
  ஹி ஹி

  ReplyDelete
 61. அமைச்சரவை மாற்றத்தில் எங்களுக்கும் இடம் உண்டா சார், அம்மா அவையில் புதியவர்களுக்கும் இடம் உண்டு .............. அண்ணா(மனோ அண்ணா ) அவையில் இடம் கிடைக்குமா ???????????????????

  ReplyDelete
 62. rufina rajkumar said...
  பாதி முதல்வரான நாஞ்சில்மனோ //
  மீதி முதல்வர் யாரு?//

  பாதி முதல்வரா நோ நோ முழு முதல்வரும் நாந்தேன் ஹி ஹி...

  ReplyDelete
 63. rufina rajkumar said...
  எனக்கு பிடிச்ச துறைக்கே அமைச்சர் ஆக்கியதால் மற்ற துறைகளும் அவரவர்க்கு பிடிச்சதா பார்த்து தான் போட்டு இருப்பீங்க.
  திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க. என்ன ஒரு சென்ஸ் ஆப் ஹுமர்//

  ஹா ஹா ஹா ஹா நன்றி மேடம்...

  ReplyDelete
 64. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  ஹா..ஹா...//

  ஹே ஹே ஹே ஹீ...

  ReplyDelete
 65. vanathy said...
  வானதி எல்லாம் ஏன் அமைச்சர் ஆகக்கூடாது ஹி ஹி.....//

  எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், அப்பு.
  குடியரசுத் தலைவர், பிரதமர் பதவி இது மேல தான் எப்போதும் கண். ரெக்கமன்ட் பண்ணுங்க.//

  அமெரிக்கா பிரசிடென்ட் பதவிக்கு ரெக்கமேன்ட் பண்ணவா..

  ReplyDelete
 66. Mahan.Thamesh said...
  மொள்ளமாரி, முடிச்செருக்கி அப்பிடிப்பட்டவன் எல்லாம் அரசியலில் இருந்து, அமைச்சரா இருக்கானுக சிலர், ஏன் நம்ம பதிவுலகில் உள்ள சிபி, விக்கி, சத்ரியன், ராஜி, வானதி எல்லாம் ஏன் அமைச்சர் ஆகக்கூடாது ஹி ஹி.....
  ஹி ஹி//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 67. சீக்கிரமே கட் அவ்ட் வைக்கணும்....”சிரிப்பு மந்திரியே வருக வருக சிரிப்பை அள்ளித் தருகன்னு” ..வைரமுத்துவை பாடல் எழுதித் தரச்சொல்லணும்.....

  ReplyDelete
 68. எனக்கு பிடித்தவை said...
  அமைச்சரவை மாற்றத்தில் எங்களுக்கும் இடம் உண்டா சார், அம்மா அவையில் புதியவர்களுக்கும் இடம் உண்டு .............. அண்ணா(மனோ அண்ணா ) அவையில் இடம் கிடைக்குமா ???????????????????//

  கவலையே படாதீங்க யாரையாவது போட்டு தள்ளிட்டு, பை எலக்சன் வச்சிருவோம்....!

  ReplyDelete
 69. என்னாது நீங்க தான் அடுத்த் முதல்வரா? இருங்க ஒங்கள வாழ்த்தி ஒரு பாட்டு பாடிட்டு மேல வாசிக்கிறேன்...
  சுனாமியின் பினாமியே
  குள்ளநரிகளை ஒழிக்கும் நல்ல நரியே.. கண்ணுக்கழியாத கவர்ச்சிக் கண்ணனே!!!..ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே...நீ உக்காந்தா எழுந்திருக்கும் எழுச்சி நாயகன்...2016 நம்ம கையில..சந்திப்போம்டா போடா நாம சட்ட சபையில...

  ReplyDelete
 70. //சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.////
  ஹி ஹி... அண்ணே இன்னும் சாந்தி அப்புறம் நித்யாவ விடுற மாதிரி தெரியல.. சோ இவர தவிர இதுக்கு வேற ஆளே கெடையாது...

  ReplyDelete
 71. ////மொக்கைராசு மாமா : நகைச்சுவை துறை அமைச்சர்///

  தேங்க்ஸ் அண்ணே...மொத கமிஷன ஒங்களுக்கு முழுசா தந்துறேன்...

  ReplyDelete
 72. ///பன்னிகுட்டி : பயடேட்டா துறை அமைச்சர்////
  ஆமா இவர ஏன் ரொம்ப நாளா ஆளையே காணல, தூக்கிட்டாங்களா?

  ReplyDelete
 73. //ஆமீனா : பதிவர்கள் துறை அமைச்சர்.///
  அக்காக்கு பொருத்தமான பொறுப்புதான், ஆனா நீங்களே ஏன் இத கூடுதல் பொறுப்பா ஏத்துக்க கூடாது?

  ReplyDelete
 74. ஹீ ஹீ... எல்லாமே சூப்பர்...
  /// சட்டசபையில் தினமும் வேஷ்டி கிழிக்கப்படும் என்பதால், சண்டையில் கிழியாத வேஷ்டி வாங்கி கொல்லவும் ஸாரி கொள்ளவும்//////

  அண்ணே பட்டா பட்டி பரவாயில்லையா?

  ReplyDelete
 75. ஐயோ மனோ!!

  எனக்கு எந்த பதவியும் வேண்டாம்.. ஏன்னா நான்”கோமணத்தோட”சட்ட சபைக்கு வருவதை சட்டமும் அனுமதிக்காது நம்ம சட்ட சபை உறுப்பினர்களை நம்பியும் வர முடியாது.. ஹி ஹி

  ReplyDelete
 76. amaissaravai ippadi anumaan vaal poola irukkee ?

  ReplyDelete
 77. மன்னிச்சுகோங்க நான் தமிழ்லதான் எழுதினான் அது இங்கிலீசு எழுத்துல வந்துட்டு..ஹி ஹி ஹி அமைச்சர் ஆகினா இங்கிலீசு எழுதனுமாம் அதுதான் பழகி பார்தேன்..!!

  ReplyDelete
 78. அடேங்கப்பா மொத்த பதிவுலகமும் இங்கதான் இருக்கு போல...

  ReplyDelete
 79. நானுமா...? பாசக்கார பயலுக... விட்டுட்டு சாப்பிடவே மாட்டாங்க... இட்லியை சாம்பார்ல பெனஞ்சு அடிடா...

  ReplyDelete
 80. நாஞ்சில் மனோ - அந்தரங்க செயலாளர்.

  ReplyDelete
 81. //சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்//

  கில்மாத்துறை துணை அமைச்சர் - நமீதா!!!!

  ReplyDelete
 82. //சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.//
  இப்பவே தாங்க முடியல!

  ReplyDelete
 83. //விக்கி : வெளியுறவு துறை அமைச்சர் [[அப்பிடி ஒன்னு இருக்கா..?]]//
  யாரை வச்சுகிட்டு இப்படி ஒரு கேள்வி கேட்டுப்புட்டீங்க!

  ReplyDelete
 84. //திவானந்தா : ரவுடி துறை அமைச்சர், அதாவது என்கவுண்டர்ல போட்டு தள்ளுறது.//
  ரவுடிகளை மட்டும்தானா, சில ராவடிகளையும் சேர்த்தா?

  ReplyDelete
 85. //கே ஆர் விஜயன் : வனத்துறை அமைச்சர்.//
  நாஞ்சில் நாட்டு மரங்களின் மீது ஒரு கண்ணோ!

  ReplyDelete
 86. //ருஃபினா : புத்தகம் துறை அமைச்சர்.//
  இன்னும் நிறைய புத்தகம் வாங்கி பரிசளிப்பாங்க!

  ReplyDelete
 87. அத்தனையும் அசத்தல். எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. சூப்பர் மனோ.

  ReplyDelete
 88. ஏன்யா இருக்குற அத்தன பேரையும் அமைச்சராக்கிட்டியே...யாரு அப்போ மக்கள் பணி செய்யிறது...கொய்யால...நாலு பேரு அமைதியா இருந்தா புடிக்காதே உமக்கு ஹிஹி...இன்னொரு கொஸ்டீன்... அது என்ன பதிவு போட்டா எங்கயாவது சுட்டு போடுற இல்ல இருக்குற பதிவர்களா வச்சி பொட்டலமா கட்டி பதிவு போடுறே...ஆக மொத்தம் உமக்கு டீ ஆறிப்போசின்னு சொல்லு ஹிஹி!

  ReplyDelete
 89. ராஜி : ஜவுளித்துறை அமைச்சர். >>> நன்றி அண்ணே! இனி உங்க வீட்டு விஷேசத்துக்கு மட்டுமில்லை, உங்க அக்காவோட ஒண்ணுவிட்ட மாமியாரோட தம்பி பொண்ணோட மச்சினன் மகளோட பேத்தி காது குத்துக்கு கூட துணிகள் இலவசமா வீடு தேடி வந்துடும்ண்ணே!

  ReplyDelete
 90. புத்தாண்டுக்கு அனைத்து பதிவுலக நண்பர்கள் குடும்பத்தினருக்கும் ஜவுளி இலவசம் என விரைவில் அறிவிக்கப்படும்(யார் அப்பன் வீட்டு காசு? நம்ம பதிவுலகமும் அனுபவிச்சுட்டு போகட்டுமே!)

  ReplyDelete
 91. S.Menaga said...

  ஆஹா எனக்கும் பதவியா மிக்க நன்றிங்கோ....இன்னும் 1 மாசத்துல நான் கோடீஸ்வரீஈஈஈஈஈஈஈஈ....
  >>
  நீங ரொம்ப லேட் சகோதரி. நான் இப்பவே வைர நெக்லஸுக்கும், கொடைக்கானல் ஒரு எஸ்டேடுக்கும், ஹெலிசப்டர் ஒன்றுக்கும் அட்வான்ஸ் குடுத்துட்டேன்.

  ReplyDelete
 92. goma said...
  சீக்கிரமே கட் அவ்ட் வைக்கணும்....”சிரிப்பு மந்திரியே வருக வருக சிரிப்பை அள்ளித் தருகன்னு” ..வைரமுத்துவை பாடல் எழுதித் தரச்சொல்லணும்...//

  கட் அவுட் பாளையங்கோட்டை ஜங்சன்ல வையுங்க அங்கேதான் நம்ம சொந்தக்கார பயலுக நிறைய இருக்காங்க ஹி ஹி...

  ReplyDelete
 93. மொக்கராசு மாமா said...
  என்னாது நீங்க தான் அடுத்த் முதல்வரா? இருங்க ஒங்கள வாழ்த்தி ஒரு பாட்டு பாடிட்டு மேல வாசிக்கிறேன்...
  சுனாமியின் பினாமியே
  குள்ளநரிகளை ஒழிக்கும் நல்ல நரியே.. கண்ணுக்கழியாத கவர்ச்சிக் கண்ணனே!!!..ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே...நீ உக்காந்தா எழுந்திருக்கும் எழுச்சி நாயகன்...2016 நம்ம கையில..சந்திப்போம்டா போடா நாம சட்ட சபையில...//

  ஏ டண்டனக்கா டண்டனக்கா....

  ReplyDelete
 94. மொக்கராசு மாமா said...
  //சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.////
  ஹி ஹி... அண்ணே இன்னும் சாந்தி அப்புறம் நித்யாவ விடுற மாதிரி தெரியல.. சோ இவர தவிர இதுக்கு வேற ஆளே கெடையாது...//

  ஹா ஹா ஹா ஹா ஆமாய்யா....

  ReplyDelete
 95. மொக்கராசு மாமா said...
  ////மொக்கைராசு மாமா : நகைச்சுவை துறை அமைச்சர்///

  தேங்க்ஸ் அண்ணே...மொத கமிஷன ஒங்களுக்கு முழுசா தந்துறேன்...//

  அப்பாடா, யார்லேய் அங்கே விக்கிக்கு போனை போட்டு சுவிஸ்ல அக்கவுண்ட் ஒப்பன் பண்ண சொல்லி போனியாக்கணும்.

  ReplyDelete
 96. மொக்கராசு மாமா said...
  ///பன்னிகுட்டி : பயடேட்டா துறை அமைச்சர்////
  ஆமா இவர ஏன் ரொம்ப நாளா ஆளையே காணல, தூக்கிட்டாங்களா?//

  ஆமாய்யா நானும் தேடிட்டுதான் இருக்கேன்.

  ReplyDelete
 97. மொக்கராசு மாமா said...
  //ஆமீனா : பதிவர்கள் துறை அமைச்சர்.///
  அக்காக்கு பொருத்தமான பொறுப்புதான், ஆனா நீங்களே ஏன் இத கூடுதல் பொறுப்பா ஏத்துக்க கூடாது?//

  தகுதிக்கு மேலே ஆசைபடக்கூடாதுய்யா....

  ReplyDelete
 98. மொக்கராசு மாமா said...
  ஹீ ஹீ... எல்லாமே சூப்பர்...
  /// சட்டசபையில் தினமும் வேஷ்டி கிழிக்கப்படும் என்பதால், சண்டையில் கிழியாத வேஷ்டி வாங்கி கொல்லவும் ஸாரி கொள்ளவும்//////

  அண்ணே பட்டா பட்டி பரவாயில்லையா?//

  பட்டாபட்டியையும் உருவுறதுக்கு ஆளுங்க சட்டசபை வாசல்லயே நிக்குறதா தகவல் வந்துருக்கு...

  ReplyDelete
 99. காட்டான் said...
  ஐயோ மனோ!!

  எனக்கு எந்த பதவியும் வேண்டாம்.. ஏன்னா நான்”கோமணத்தோட”சட்ட சபைக்கு வருவதை சட்டமும் அனுமதிக்காது நம்ம சட்ட சபை உறுப்பினர்களை நம்பியும் வர முடியாது.. ஹி ஹி//

  சட்டமே நம்ம கையில்தானே இருக்கு....

  ரெண்டாவது மேட்டர்தான் கஷ்டம், சிபியை நம்பவே முடியாது ஹி ஹி...

  ReplyDelete
 100. காட்டான் said...
  amaissaravai ippadi anumaan vaal poola irukkee ?

  November 28, 2011 11:59 AM


  காட்டான் said...
  மன்னிச்சுகோங்க நான் தமிழ்லதான் எழுதினான் அது இங்கிலீசு எழுத்துல வந்துட்டு..ஹி ஹி ஹி அமைச்சர் ஆகினா இங்கிலீசு எழுதனுமாம் அதுதான் பழகி பார்தேன்..!!//

  தமிழ் நடிகைகள் பேசுராப்லையே இருக்குய்யா...

  ReplyDelete
 101. Philosophy Prabhakaran said...
  அடேங்கப்பா மொத்த பதிவுலகமும் இங்கதான் இருக்கு போல...//

  இன்னும் நிறைய மிஸ் ஆகிருச்சு...

  ReplyDelete
 102. Philosophy Prabhakaran said...
  நானுமா...? பாசக்கார பயலுக... விட்டுட்டு சாப்பிடவே மாட்டாங்க... இட்லியை சாம்பார்ல பெனஞ்சு அடிடா...//

  பெனைஞ்சி அடிக்கிறது இருக்கட்டும், கமிஷன் கமிஷன் ஹி ஹி...

  ReplyDelete
 103. சிவகுமார் ! said...
  நாஞ்சில் மனோ - அந்தரங்க செயலாளர்.//

  எனக்குத்தானே அந்தரங்க செயலாளர் வேணும், நான் எப்பிடி ஹி ஹி...

  ReplyDelete
 104. சிவகுமார் ! said...
  //சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்//

  கில்மாத்துறை துணை அமைச்சர் - நமீதா!!!!//

  அதெல்லாம் முடியாது, பாவம் நமீதா ஹி ஹி...

  ReplyDelete
 105. FOOD said...
  //சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.//
  இப்பவே தாங்க முடியல!//

  அமைச்சர் ஆகிட்டாம்னா ரூமை விட்டு வெளியே வராமல் நிலாகாயுது நேரம் நல்ல நேரம்னு ராப்பகலா வீட்டுக்குள்ளேயே முடங்கிருவான், நாம தப்பிச்சிரலாம் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 106. FOOD said...
  //விக்கி : வெளியுறவு துறை அமைச்சர் [[அப்பிடி ஒன்னு இருக்கா..?]]//

  யாரை வச்சுகிட்டு இப்படி ஒரு கேள்வி கேட்டுப்புட்டீங்க!//

  இல்ல அவன் அதுக்கு சரிப்படுவானான்னு ஒரு சண்டை ஸாரி சந்தேகம் ஹி ஹி...

  ReplyDelete
 107. FOOD said...
  //திவானந்தா : ரவுடி துறை அமைச்சர், அதாவது என்கவுண்டர்ல போட்டு தள்ளுறது.//

  ரவுடிகளை மட்டும்தானா, சில ராவடிகளையும் சேர்த்தா?//

  ராவடிகளையும் சேர்த்துதான், நமக்குதான் இருக்கவே இருக்கானே ராவடி சிபி...

  ReplyDelete
 108. FOOD said...
  //கே ஆர் விஜயன் : வனத்துறை அமைச்சர்.//
  நாஞ்சில் நாட்டு மரங்களின் மீது ஒரு கண்ணோ!//

  முதல் குறி, மான்கறி.....அப்புறம், சந்தானம், தேக்கு இப்படி பட்டியல் நீளும்....

  ReplyDelete
 109. FOOD said...
  //ருஃபினா : புத்தகம் துறை அமைச்சர்.//
  இன்னும் நிறைய புத்தகம் வாங்கி பரிசளிப்பாங்க!//

  பரிசு தரலைன்னா, வீடு புகுந்து எல்லா புத்தகத்தையும் களவாண்டுட்டு ஓடிருவேன்...

  ReplyDelete
 110. FOOD said...
  அத்தனையும் அசத்தல். எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. சூப்பர் மனோ.//

  மிக்க நன்றி ஆபீசர்....

  ReplyDelete
 111. siva said...
  Last photo nice...:)//

  என்ன நடிகைதுறை அமைச்சரே, உங்களை அமைச்சர் ஆக்கி இருக்கேன் நீங்க படத்தை பார்த்துட்டு இருக்கீங்க...?

  ReplyDelete
 112. விக்கியுலகம் said...
  ஏன்யா இருக்குற அத்தன பேரையும் அமைச்சராக்கிட்டியே...யாரு அப்போ மக்கள் பணி செய்யிறது...கொய்யால...நாலு பேரு அமைதியா இருந்தா புடிக்காதே உமக்கு ஹிஹி...இன்னொரு கொஸ்டீன்... அது என்ன பதிவு போட்டா எங்கயாவது சுட்டு போடுற இல்ல இருக்குற பதிவர்களா வச்சி பொட்டலமா கட்டி பதிவு போடுறே...ஆக மொத்தம் உமக்கு டீ ஆறிப்போசின்னு சொல்லு ஹிஹி!//

  டேய் போனாபோகுது நண்பன் ஆச்சேன்னு அமைச்சர் பதவி குடுத்தா ராஸ்கல் என்னையையே கேள்வி கேக்குறியா பிச்சிபுடுவேன் பிச்சி...

  ReplyDelete
 113. ராஜி said...
  ராஜி : ஜவுளித்துறை அமைச்சர். >>> நன்றி அண்ணே! இனி உங்க வீட்டு விஷேசத்துக்கு மட்டுமில்லை, உங்க அக்காவோட ஒண்ணுவிட்ட மாமியாரோட தம்பி பொண்ணோட மச்சினன் மகளோட பேத்தி காது குத்துக்கு கூட துணிகள் இலவசமா வீடு தேடி வந்துடும்ண்ணே!//

  ஆஹா கமிஷன் தரணும்னு சொன்னதை தங்கச்சி கற்பூரம் மாதிரி பத்திகிச்சே ஹே ஹே ஹே..

  ReplyDelete
 114. ராஜி said...
  புத்தாண்டுக்கு அனைத்து பதிவுலக நண்பர்கள் குடும்பத்தினருக்கும் ஜவுளி இலவசம் என விரைவில் அறிவிக்கப்படும்(யார் அப்பன் வீட்டு காசு? நம்ம பதிவுலகமும் அனுபவிச்சுட்டு போகட்டுமே!)//

  தயாநிதி மாறன் எல்லாம் உங்க முன்னாடி ஜுஜிபி போங்க, ஆரம்ப அரசியலே அமர்களமா இருக்கே ஹி ஹி...

  ReplyDelete
 115. துணை முதலமைச்சர் பதவிக்கு யாரையும் சொல்லலை போல இருக்கே??

  ReplyDelete
 116. ராஜி said...
  S.Menaga said...

  ஆஹா எனக்கும் பதவியா மிக்க நன்றிங்கோ....இன்னும் 1 மாசத்துல நான் கோடீஸ்வரீஈஈஈஈஈஈஈஈ....
  >>
  நீங ரொம்ப லேட் சகோதரி. நான் இப்பவே வைர நெக்லஸுக்கும், கொடைக்கானல் ஒரு எஸ்டேடுக்கும், ஹெலிசப்டர் ஒன்றுக்கும் அட்வான்ஸ் குடுத்துட்டேன்.//

  ஆஹா கூட்டணி போட்டு நம்மளை முதல்லயே திகார்ல களி திங்கவச்சிருவாங்களோ, மனோ சூதானமா இருந்துக்கோ...

  ReplyDelete
 117. "நல்லநேரம்"சதீஷ் : சட்டமன்ற ஆஸ்தான ஜோசியர்.//என்னையும் விடலையா...:-))

  ReplyDelete
 118. புதுமையான் முயற்சி..நகைச்சுவை மசாலா

  ReplyDelete
 119. நிரந்தர முதல்வர்,தானைத்தலைவர் மனோ வாழ்க!
  //அடுத்து, வாங்குற கமிஷன்ல பாதி, முதல்வரான நாஞ்சில்மனோ டேபிளுக்கு வந்துரனும், சேட்டை பண்ணி கமிஷன் எனக்கு வரலைன்னா ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.//
  என்னோட துறையில கமிசனுக்கு வாய்ப்பு இல்லையே!

  ReplyDelete
 120. பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சராக ஹினா ரப்பானி இருக்கும் வரை விக்கி சாருக்கு ஆட்சேபனை இல்லையாம்

  ReplyDelete
 121. நல்ல நேரம் சதீஷ்குமார் said...
  "நல்லநேரம்"சதீஷ் : சட்டமன்ற ஆஸ்தான ஜோசியர்.//என்னையும் விடலையா...:-))//

  கொல்லனும்னு கிளம்பியாச்சு, உங்களை மட்டும் விட்டுட்டு போக மனசில்லை ஹி ஹி...

  ReplyDelete
 122. நல்ல நேரம் சதீஷ்குமார் said...
  புதுமையான் முயற்சி..நகைச்சுவை மசாலா//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 123. சென்னை பித்தன் said...
  நிரந்தர முதல்வர்,தானைத்தலைவர் மனோ வாழ்க!
  //அடுத்து, வாங்குற கமிஷன்ல பாதி, முதல்வரான நாஞ்சில்மனோ டேபிளுக்கு வந்துரனும், சேட்டை பண்ணி கமிஷன் எனக்கு வரலைன்னா ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.//
  என்னோட துறையில கமிசனுக்கு வாய்ப்பு இல்லையே!//

  ஐயோ தல இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கீங்க ஹி ஹி....

  ReplyDelete
 124. suryajeeva said...
  பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சராக ஹினா ரப்பானி இருக்கும் வரை விக்கி சாருக்கு ஆட்சேபனை இல்லையாம்//

  ஆஹா அவன் அப்பிடி யோசிக்கிறானா...?

  ReplyDelete
 125. சிரிப்பு போலீஸ்" ரமேஷ் : சிங்கை டூ தமிழ்நாடு நல்லுறவு அமைச்சர்.//

  hehe

  ReplyDelete
 126. கஞ்சப்பிசனாரி. எனக்கு குடுத்திருக்கிற துறைய வெச்சி என்னய்யா பண்ணமுடியும்.

  நீங்க நண்பர்களை ஒரே மாதிரியா பாக்கலை. சிபிக்கு மட்டும் சிறப்பா ‘எதோ’வொரு துறைய குடுத்திருக்கீங்க.

  நான் இப்பவே வெளி நடப்பு செஞ்சிங்...!

  ReplyDelete
 127. நான் தான் துணை முதல்வர் .. இல்ல அமலாவை கவுத்துடுவேன் சாரி ஆட்சிய கவுத்துடுவேன்

  ReplyDelete
 128. உங்களை முதல்வராக வச்சு ஒரு பதிவு போட்டுவசுருகேன் .. அதுக்குள்ள நீங்க போட்டுடிங்க

  ReplyDelete
 129. தமிழ்வாசி பிரகாஷ் said...

  சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.///

  இதுல ஊழல் எப்படி பண்ண முடியும்?
  >>>
  நான் ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்வதால் எனக்கு பொருளாதார துறையை அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்

  ReplyDelete
 130. ராஜி said...

  புத்தாண்டுக்கு அனைத்து பதிவுலக நண்பர்கள் குடும்பத்தினருக்கும் ஜவுளி இலவசம் என விரைவில் அறிவிக்கப்படும்(யார் அப்பன் வீட்டு காசு? நம்ம பதிவுலகமும் அனுபவிச்சுட்டு போகட்டுமே!)
  >>
  எம்புட்டு நல்ல மனசு மகராசிக்கு

  ReplyDelete
 131. வித்தியாசமாக சிந்தித்து இருக்கின்றீர்கள்.கடைசிக்கு முந்திய படம் சூப்பர்.

  ReplyDelete
 132. [ma]முதல்வர் மனோ அறிவிப்பு கமெண்ட்க்கு 10 கிலோ நாத்தம் புடிச்ச அரிசி வாங்கலையின்னா ரேசன் கார்டு பிடுங்கப்படும்..[/ma]

  ReplyDelete
 133. சத்ரியன் said...
  கஞ்சப்பிசனாரி. எனக்கு குடுத்திருக்கிற துறைய வெச்சி என்னய்யா பண்ணமுடியும்.

  நீங்க நண்பர்களை ஒரே மாதிரியா பாக்கலை. சிபிக்கு மட்டும் சிறப்பா ‘எதோ’வொரு துறைய குடுத்திருக்கீங்க.

  நான் இப்பவே வெளி நடப்பு செஞ்சிங்...!//

  யோவ் வைரமுத்து, பா விஜய், கபிலன், வாலி இவிங்ககிட்டே எல்லாம் கமிஷன் வாங்கலாம்ய்யா பாவி....

  ReplyDelete
 134. என் ராஜபாட்டை"- ராஜா said...
  நான் தான் துணை முதல்வர் .. இல்ல அமலாவை கவுத்துடுவேன் சாரி ஆட்சிய கவுத்துடுவேன்//

  அமலாவா அமலா பாலா...? தெளிவா சொல்லுங்கய்யா, எனக்கு அமலாபால் ஓகே...ஹி ஹி...

  ReplyDelete
 135. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  உங்களை முதல்வராக வச்சு ஒரு பதிவு போட்டுவசுருகேன் .. அதுக்குள்ள நீங்க போட்டுடிங்க//

  ஹி ஹி அதையும் போட்டு விடுங்க....

  ReplyDelete
 136. அமுதா கிருஷ்ணா said...
  துணை முதலமைச்சர் பதவிக்கு யாரையும் சொல்லலை போல இருக்கே??//

  யாரையும் நம்பமுடியாதுல்ல அதான் ஹா ஹா ஹா...

  ReplyDelete
 137. சி.பி.செந்தில்குமார் said...
  தமிழ்வாசி பிரகாஷ் said...

  சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.///

  இதுல ஊழல் எப்படி பண்ண முடியும்?
  >>>
  நான் ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்வதால் எனக்கு பொருளாதார துறையை அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்//

  கில்மா அமைச்சர்ன்னா சும்மாவாடா, வரும் எல்லா கில்மா படத்துக்குமே உன்னை செமையா கமிஷன் வருமே...

  ReplyDelete
 138. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  சிரிப்பு போலீஸ்" ரமேஷ் : சிங்கை டூ தமிழ்நாடு நல்லுறவு அமைச்சர்.//

  hehe//

  ஹா ஹா ஹா ஹா என்ன நம்பமுடியலையாக்கும்...

  ReplyDelete
 139. சி.பி.செந்தில்குமார் said...
  ராஜி said...

  புத்தாண்டுக்கு அனைத்து பதிவுலக நண்பர்கள் குடும்பத்தினருக்கும் ஜவுளி இலவசம் என விரைவில் அறிவிக்கப்படும்(யார் அப்பன் வீட்டு காசு? நம்ம பதிவுலகமும் அனுபவிச்சுட்டு போகட்டுமே!)
  >>
  எம்புட்டு நல்ல மனசு மகராசிக்கு//

  அதான் இன்னைக்கு செஞ்சுரி பதிவு போட்டுருக்காயிங்க ஹி ஹி...

  ReplyDelete
 140. ஸாதிகா said...
  வித்தியாசமாக சிந்தித்து இருக்கின்றீர்கள்.கடைசிக்கு முந்திய படம் சூப்பர்.//

  மிக்க மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 141. veedu said...
  [ma]முதல்வர் மனோ அறிவிப்பு கமெண்ட்க்கு 10 கிலோ நாத்தம் புடிச்ச அரிசி வாங்கலையின்னா ரேசன் கார்டு பிடுங்கப்படும்..[/ma]

  குடியுரிமையே பிடுங்கப்படும்...

  ReplyDelete
 142. மக்கா எனக்கு குடுத்த அமைச்சர் பதவி ஓகே..  கில்மா அமைச்சர் சரியான தேர்வு..
  ஹீ..ஹீ..

  ReplyDelete
 143. உள்ளுறவுத்துறை அமைச்சர்னு ஒண்ணு வச்சுக்கலாம். அமைச்சர்களுக்குள்ள சண்டை வந்தா தீர்த்துவக்க...

  என் வலையில் ;

  யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...!

  கருணாவும் ஜெயாவும் பாடும் 'கொலைவெறி' பாட்டு!

  ReplyDelete
 144. ராஜராஜேஸ்வரி : தமிழ்நாடு கவர்னர்.

  எனக்கும் பதவியா......

  நன்றி..

  கலகல்ப்பான பகிர்வு.

  விறுவிறுப்பான ரசிக்க வைக்கும் பின்னூட்டங்கள்...

  பாராட்டுக்கள்...

  ReplyDelete
 145. ஆயுதத்துறை அமைச்சர் எங்கே??

  அருவாள் கொண்டுவரும் அவருக்கு அறிவால் பதவி கொடுப்பீர்களா??

  ReplyDelete
 146. அண்ணே வணக்கம் .. பதவி ஏற்க போயிருந்தேன் அதான் தாமதம் ...
  மசாலா நிறைய இருந்தாலும் , மனசுல நெனச்சத சரியா சொல்லிட்டிங்க போல ..
  வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 147. அண்ணே எனக்கு ஏன் அண்ணே விளையாட்டு துறை??? அவ்வவ் ........ நமிதா நயன் விளையாட வருவாங்க என்றால் மட்டும் இந்த பதவியை ஏத்துப்பேன் ..... ஹீ ஹீ

  ReplyDelete
 148. கலக்கல் காமெடி தர்பால் பாஸ்...

  ReplyDelete
 149. உங்கள் கட்சியின் நீண்ட கால உறுப்பினன் எனக்கு எந்த பதவியும் தரப்படாததற்கு கடும் கண்டனங்கள். நாளை கண்ட ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளேன்.

  ReplyDelete
 150. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ....

  அப்புறம் கெட்டவார்த்தை துறை அமைச்சர்ன்னு ஒரு பதவி இருக்கே அது யாருக்கு பாஸ் ?

  ReplyDelete
 151. வேடந்தாங்கல் - கருன் *! said...
  மக்கா எனக்கு குடுத்த அமைச்சர் பதவி ஓகே..  கில்மா அமைச்சர் சரியான தேர்வு..
  ஹீ..ஹீ..//

  அவன் அதுக்குதான் சரிப்படுவான் ஹி ஹி...

  ReplyDelete
 152. மாயன் : அகமும் புறமும் said...
  உள்ளுறவுத்துறை அமைச்சர்னு ஒண்ணு வச்சுக்கலாம். அமைச்சர்களுக்குள்ள சண்டை வந்தா தீர்த்துவக்க...//

  ஹா ஹா ஹா அதான் ஆபீசர் பெல்ட்டோடு இருக்காரே ஹி ஹி

  ReplyDelete
 153. இராஜராஜேஸ்வரி said...
  ராஜராஜேஸ்வரி : தமிழ்நாடு கவர்னர்.

  எனக்கும் பதவியா......

  நன்றி..

  கலகல்ப்பான பகிர்வு.

  விறுவிறுப்பான ரசிக்க வைக்கும் பின்னூட்டங்கள்...

  பாராட்டுக்கள்...//

  ஹா ஹா ஹா ஹா நன்றி மேடம்..

  ReplyDelete
 154. இராஜராஜேஸ்வரி said...
  ஆயுதத்துறை அமைச்சர் எங்கே??

  அருவாள் கொண்டுவரும் அவருக்கு அறிவால் பதவி கொடுப்பீர்களா??//

  ஹா ஹா ஹா ஹா அந்த துறையை நானே கையில் வைப்பதுதான் நல்லது, இல்லைன்னா நம்மளையே சீவிருவாயிங்க...

  ReplyDelete
 155. அரசன் said...
  அண்ணே வணக்கம் .. பதவி ஏற்க போயிருந்தேன் அதான் தாமதம் ...
  மசாலா நிறைய இருந்தாலும் , மனசுல நெனச்சத சரியா சொல்லிட்டிங்க போல ..
  வாழ்த்துக்கள் ...//

  நன்றி அரசன் ஹா ஹா ஹா...

  ReplyDelete
 156. துஷ்யந்தன் said...
  அண்ணே எனக்கு ஏன் அண்ணே விளையாட்டு துறை??? அவ்வவ் ........ நமிதா நயன் விளையாட வருவாங்க என்றால் மட்டும் இந்த பதவியை ஏத்துப்பேன் ..... ஹீ ஹீ//

  அவிங்க நீச்சல் கத்துக்க வருவாங்கலாமே சிபி சொன்னான்..

  ReplyDelete
 157. துஷ்யந்தன் said...
  கலக்கல் காமெடி தர்பால் பாஸ்...//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 158. KANA VARO said...
  உங்கள் கட்சியின் நீண்ட கால உறுப்பினன் எனக்கு எந்த பதவியும் தரப்படாததற்கு கடும் கண்டனங்கள். நாளை கண்ட ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளேன்.//

  அமைச்சரவை மாற்றம் வரும்ம்ய்யா, நம்ம ஆட்சியிலேயே போராட்டம் நடத்தாதீங்க ஹி ஹி..

  ReplyDelete
 159. அஞ்சா சிங்கம் said...
  எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ....

  அப்புறம் கெட்டவார்த்தை துறை அமைச்சர்ன்னு ஒரு பதவி இருக்கே அது யாருக்கு பாஸ் ?//

  அய்யய்யோ விட்டா பச்சையா திட்டுவீங்களோ...>?

  ReplyDelete
 160. எல்லாருக்கும் நல்ல நல்ல பதவி குடுத்திருக்கீங்க மனோ.அதுக்கு அநியாயத்துக்கு எம்.ஜி.ஆர் படத்தைப் போட்டு அவர் மதிப்பையே போகப்பண்றீங்க !

  ReplyDelete
 161. //கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...//

  இதுதானா சமாச்சாரம் ஒரு வாரமா கண்ணில் infection வந்து ஆண்டிபயாடிக்ஸ் சாப்பிடறேன் .
  நௌ கமிங் டு த டாபிக் .ஏன் எனக்கு ஒரு சின்ன இலாகா கூட ஒதுக்கல .
  விரைவில் இடைதேர்தல் வரும்

  ReplyDelete
 162. அடிக்கடி அமைச்சரவை மாற்றம் உண்டா?!! :-))

  ReplyDelete
 163. கற்பனை நகைச்சுவை மன்னன் .உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ .
  இதெல்லாம் எப்படி முடியுது :.......¨!!!

  ReplyDelete
 164. அஞ்சா நெஞ்சன், பதிவுலக நகைச்சுவை செம்மல்,
  பதிவுலகிருந்து அரசியலினுள் நுழைந்த அதிரடி சிங்கம்! நம்ம நாஞ்சில் அண்ணர் வாழ்க!

  கலக்கல் கற்பனை!

  எம்புட்டு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறீங்க.

  ReplyDelete
 165. நமக்கு எதுக்குண்ணே அமைச்சர் போஸ்ட்டுலாம்,நான் மக்களோடு மக்களாவே இருக்கறவன், அதுனால ஏதாவது ஒரு நல்ல ஊர்ல ஜனாதிபதியா ஆக்கி விட்ருங்கண்ணே......

  ReplyDelete
 166. ஆமா அந்த கில்மாத்துறை அமைச்சரோட பணி என்ன? சிடி ரிலீஸ் பண்றதா இல்ல வேற மாதிரி எதுவுமா?

  ReplyDelete
 167. அப்புறம் டாஸ்மாக் துறை இல்லீங்களா? ஓ அதை நீங்களே வெச்சுக்கிட்டீங்களா? சரி சரி, சேல்சுக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்கப்பு, மக்கள் வருத்தப்படுவாங்கள்ல?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!