ரயில் பயணத்தில் இப்போது பயோ டாய்லெட் வசதி இருப்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது, மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் பழைய டாய்லட்டும் பயோ டாய்லெட்டுமாக இருக்கிறது, நம்மாளுகளுக்கு இன்னும் பயோ டாய்லெட் பற்றிய விபரம் சரியாக தெரியவில்லை, அதனால் பழைய டாய்லெட்டையே நாஸ்தி ஆக்குகிறார்கள் !
ஆனால் திரும்பும்போது கன்னியாகுமரி மும்பை எக்ஸ்பிரஸில் [ஜெயந்தி ஜனதா] எல்லா டாய்லெட்டுமே பயோ"தான்.
நாகர்கோவிலில் வந்திறங்கி காலை 3.30 ஆனதால் ரயில்வே ஸ்டேஷனிலேயே கொஞ்சம் உக்கார்ந்து டீ சாப்பிட்டுவிட்டு டாக்சியில் ஊரை நோக்கி கிளம்பினோம்.
குளித்து முடித்து குடும்பங்களை சந்திக்க சென்றபோதுதான் அந்த அதிர்ச்சி என்னை புரட்டி போட்டது, ஆம்...என் உயிர் நண்பன் ராஜகுமாரனுக்கு பைக்கில் விபத்து ஏற்பட்டு படுக்கையில் இருப்பது தெரிந்து அதிர்ந்து போனேன்.
அவனைப் பார்க்க சென்றால்...நீ வருத்தப்படுவேன்னு நான்தான் உன் கிட்டே சொல்லக்கூடாதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சேன் மக்கா என்றான்...எப்போதுமே அவனருகில் அமர்ந்து அவனோடு நேரம் செலவிட்டேன்.
இந்தமுறைதான் நடந்தே ஊரை சுற்றி வர முடிந்தது, மகளையும் வீட்டம்மாவையும் நடத்தியே ஊரை சுற்றி பார்க்க வைத்தேன், அவர்கள் புலம்பிக்கொண்டுதான் வந்தார்கள்.
அம்மா இல்லாததால் வீடு பெருச்சாளிகள் கூடாரமாகி விட்டதால் வெளியில்தான் தங்க நேர்ந்தது, சாமிதோப்பு பதியில் வைகாசி திருவிழா நடந்து கொண்டிருந்தது விஷேசம்.
தொடரும்...
அம்மா இல்லாத வீடு எங்கும் பெருச்சாளிகள் கொண்டாட்டம் தான் போலும்!
ReplyDeleteஇப்போது நண்பர் நிலை நலமா?
ReplyDeleteவைகாசியில் தான் இலங்கையில் வைகாசி விசாகம் நோன்பு /புத்தன் பூரண பெளர்னமி என்று (வெசாக்) கொண்டாட்டம் என்று இந்த வைகாசி அதிக நினைவுத்தொல்லை)) நினைவுச்சின்னம் படத்தில் கூட வைகாசி மாசத்தில பந்தல் ஒன்று என்ற பாடல் இலங்கை பண்பலையில் அதிக ஹிட்சு!))
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் பின் வருகின்றேன் மக்கா!
ReplyDeleteபயணங்களைப் போல சுவாரஸ்யமானவை எதுவும் இல்லை.அதுவும் எதையும் முழுமையாய் இரசிக்கவும் அதை அப்படியே படிப்பவரும் இரசிக்கும்படியாய் எழுதவும் கூடிய தங்களைப் போன்றவர்களுக்கு கூடுதல் சுவாரஸ்யமாகவே இருக்கச் சாத்தியம்.வாழ்த்துக்களுடன்
ReplyDeleteஅம்மா இல்லாத வீடு - கஷ்டம் தான் மனோ. தொடர்கிறேன்.
ReplyDelete