ஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரும்பினது தனி கதை....
மும்பை ஏர்போர்ட் வந்திறங்கியதும், குடும்பத்தார்கள் வரவேற்று கூட்டி சென்றனர், நண்பன் கிருஷ்ணாவின் குடும்பமும் வர, அவனுடைய காரிலேயே [இனோவா] வீடு போயி அவனும் குடும்பமாக என் வீட்டில் தங்கி, அடுத்த நாள், அண்ணே அடிக்கிற வெயிலுக்கு எங்கேயாவது போயி நல்லா குளிப்போம்ண்ணே என்று அம்பர்நாத் அணைக்கு கூட்டி சென்றான்.
அம்பர்நாத் அணைக்கட்டு [இந்த அணைக்கட்டில் குடித்துவிட்டு உள்ளே குதித்து சாவை அருகில் பார்த்து காப்பாற்ற பட்டு வந்த ஒருவனையும் பார்க்க நேர்ந்தது கொடூரமான அனுபவம்]
குழந்தைகளோடு அன்று முழுவதும் விளையாட்டும் கூத்துமாக சந்தோஷமாக கழிந்தது, சரி ஊருக்கு உடனே கிளம்ப வேண்டும், சீசன் நேரமாதலால் டிக்கெட்டும் பிரச்சினையாக இருக்க, கிருஷ்ணாவே 23 தேதிக்கு அவன் நண்பன் மூலமாக ரெடியாக்கி தந்தான்.
குதூகலமாக தங்கை மகள் மகிஷா.
அன்றும் என் வீட்டில் குடும்பமாக தங்கிவிட்டு அவன் வீட்டுக்கு போய்விட்டான், அவன் குழந்தைகள்தான் ஏக்கமாக பிரியா விடை கொடுக்காமல் அழுது கொண்டே சென்றார்கள்.
நண்பனின் இனோவா கார்.
அடுத்து கன்னியாகுமரி செல்ல ஆயத்தமானேன், மும்பை அனல் கொளுத்தியது வெக்கையை...
குடும்பமாக ஆனந்த குளியல்.
நானும் மகளும் வீட்டம்மாவுமாக கிளம்பினோம், ரயில் பயணத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த மகள், இந்த முறை ஆர்வமின்றியே இருந்தாள், கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தும் டாடி ரொம்ப போராக இருக்குன்னு சொல்லிவிட்டாள்.
நாய்க்கும் பிரியாணி ஊட்டும் நண்பன்.
ம்ம்ம்ம்... நாகர்கோவில் நோக்கி பிரயாணம் ஆரம்பம்...ஊரின் பல பழைய நினைவுகளுடன் கடந்து சென்று கொண்டிருந்தேன் ஒரு பெரிய அதிர்ச்சியை அறியாமல்...
தொடரும்...
அதிர்ச்சியா என்னவாக இருக்கும்? இனோவா போக்குவரத்து உடலுக்கு இதன் என்று சொல்ல வாரீங்க! தொடர்கின்றேன்.
ReplyDeleteஎப்படியோ இம்முறை நிறைய குளிர்த்துவிட்டீங்க பாவம் அந்த நயந்தாரா!)))
ReplyDeleteஅன்றும் என் வீட்டில் குடும்பமாக தங்கிவிட்டு அவன் வீட்டுக்கு போய்விட்டான்/
ReplyDeleteவெளிநாட்டிலிருந்து நீண்ட தாள் பசியோடு வந்திருப்பார் என்று அறிந்தும் பசியை தள்ளிப் போட வைத்தது தவிப்பின் உச்சம்.
அட்லீஸ்ட் 20 நாட்களாவது கிடைத்ததுன்னு சந்தோசப்படுங்க... நான் கடந்த முறை இந்தியா வந்து 10 நாட்கள் மட்டுமே ஹும்
ReplyDeleteஆஹா இந்தியா பயணம் பற்றிய கட்டுரையா? 20 நாட்கள் ஓடியே போயிருக்கும். அனுபவங்களை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteவெளியூரை விட்டு குடும்பத்துடன்வந்து சேரும் வாய்ப்பு இருந்தால் நலம்.
ReplyDelete