Tuesday, July 5, 2011

மும்பை கிளம்புமுன் என்ன நடந்தது....!!!!

அவசரமா மும்பை கிளம்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் நண்பன் கே ஆர் விஜயனுக்கு போன் பண்ணினேன். மக்கா டிக்கெட் புக பண்ண வேண்டும், கொஞ்சம் பணம் டி டி எடுத்து மும்பை அனுப்ப வேண்டும், மொபைல் போன் உயிரை விட்டு விட்டது அதையும் சரி செய்ய வேண்டும் என நான் சொல்லவும், உடனே கிளம்பி நாகர்கோவில் வாங்க மக்கா நான் எதுக்கு இருக்கேன் எல்லாம் சரி பண்ணி தாரேன் கிளம்பி வாங்கன்னு சொன்னார்....!!!


அடுத்த நாள் கிளம்பி பஸ்சில் போகும் போதே ஆபீசர் போன் பண்ணினார், என்ன எப்போ மும்பை கிளம்புறீங்க மனோ...??? ஆபீசர் நாளை அல்லது நாளை மற்ற நாளாக இருக்கும் ஏன்னா விஜயன்'கிட்டே போன பின்தான் முடிவாகும், முடிவானதும் சொல்றேன்னு சொன்னேன்.


சரி டிக்கெட் கன்பார்ம் ஆனதும் போன் பண்ணுங்க ஏன்னா உங்க ரயில் எங்க ஆபீஸ் பக்கம்தான் [[நெல்லை]] நின்று போகும் ஸோ நான் உங்களை வந்து பார்க்குறேன் [[செக் பண்ணுரதுலையே இருக்காயிங்க இந்த ஆபீசருங்க ம்ஹும்]] என்றார். ஆபீசர் அங்கே அந்த ரயில் கொஞ்ச நேரம்தான் நிற்கும், அதுவும் அதிகாலை வேறு நீங்க வரவேணாம், நான் எப்பிடியும் மும்பை போயிட்டு திரும்பி வருவேன் உங்களை பார்க்க என்றேன்...

அவர் சம்மதிக்கவே இல்லை, நான் கண்டிப்பா வந்து உங்களை பார்த்துட்டு டிஃபன் வாங்கி கொடுத்துட்டுதான் வருவேன்னு அடம்பிடிக்கவே [[பாசம்......நன்றி ஆபீசர்]] ஒகே சொல்லிட்டேன்.


அப்புறமா விஜயன் கடைக்கு வந்து, நண்பன் "மாப்பிளை"ஹரீஷ், அங்கே பணி புரியும் அழகான தங்கச்சி [[இன்னைக்கும் பெயர் கேட்க மறந்து போச்சி]] எல்லாரையும் பார்த்து சந்தோசமா பேசிட்டு இருந்தோம். இடையிடையே விஜயனை உசுப்பிட்டே இருந்தேன், மக்கா சீக்கிரமா போகணும் வேலையை முடிக்கணும்னு......


சரிய்யா வாங்க முதல்ல பணம் அனுப்பும் வேலையை பார்ப்போம்னு கிளம்பி, வெஸ்டன் யூனியன் பேங்க் போனோம், அங்கே மணி டிரான்ஸ்பர் கிடையாதுன்னு சொன்னாங்க ஆச்சர்யமா இருக்கு...?? ஏன்னே எனக்கு இன்னும் புரியலை....!!!


நல்லா ஆலோசனை செய்த விஜயன், அவருடைய ஃபார்முலாபடியே செயல் பட்டார். நேரே அவருடைய பேங்கிற்கு என்னை கூட்டி சென்றார். ம்ஹும் அங்கே போனால் நெட் வேலை செய்யவில்லை என இன்னொரு கஸ்டமரை ஒரு ஊழியர் மிரட்டி கொண்டு இருந்தார் [[எங்களைத்தான்]]

சுசீந்திரம் பாலம், கீழே பழையாறு [[பாழாறு'தான் சரியான சொல்]]

சரிய்யா கடை பக்கத்துலதான இருக்கு போயிட்டு அப்புறமா வருவோம்னு மீண்டும் அவர் கடைக்கு போய் சேர்ந்து, என்னை அம்போ என அவர் கடையில் விட்டுவிட்டு, அவர் வீட்டம்மாவுக்கு மீன் வாங்கி குடுக்க [[மிரட்டிருப்பாயிங்களோ]] ஓடியே போயிட்டார்.....!!!

மீன் வலை இன்னும் விரியும்.......

பிரிட்டிஷ்'காரன் கட்டுன பாலம் இன்னும் உயிருடன்.....!!! சுசீந்திரம் பாலம்..!!!

டிஸ்கி : டேய் உனக்கு இதெல்லாம் [[அனுபவ கட்டுரை]] தேவையாடா'ன்னு கேக்குறவங்களுக்கு சரியான மேட்டர் ஒன்னு சொல்ல போறேன் பொறுங்க மக்கா......!!!!


30 comments:

 1. ஆத்தோரம் வாங்கிய காற்று.....அழகாக இருந்தது நேற்று!

  ReplyDelete
 2. இது என்ன மெகா சீரியல் கணக்கா போகும் போல

  ReplyDelete
 3. பாலத்தை இன்னும் கொஞ்சம் அகலமா கட்டிருந்தாங்கன்னா டிராபிக் பிரச்சினை வராமலிருந்திருக்கும் ....சிலநேரம் மணிக்கணக்குல வெயிட் பண்ணவேண்டியிருக்கு ....

  ReplyDelete
 4. கியுலகம் said...
  ஆத்தோரம் வாங்கிய காற்று.....அழகாக இருந்தது நேற்று!//

  டேய் அண்ணா ஏதாவது உள்குத்து இல்லைதானே...??? ஹி ஹி.....

  ReplyDelete
 5. பலே பிரபு said...
  இது என்ன மெகா சீரியல் கணக்கா போகும் போல//

  தம்பி மக்கா பயந்துராதேப்பா....

  ReplyDelete
 6. Balaganesan said...
  பாலத்தை இன்னும் கொஞ்சம் அகலமா கட்டிருந்தாங்கன்னா டிராபிக் பிரச்சினை வராமலிருந்திருக்கும் ....சிலநேரம் மணிக்கணக்குல வெயிட் பண்ணவேண்டியிருக்கு ....//

  ஆமா மக்கா சொன்னா கேக்கவே மாட்டேங்குறாங்க டுபுக்குங்க....!!!

  ReplyDelete
 7. பயணக் கட்டுரை அருமையாகப் போகிறது
  படங்களும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. Ramani said...
  பயணக் கட்டுரை அருமையாகப் போகிறது
  படங்களும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்//

  நன்றி குரு.......

  ReplyDelete
 9. பயணக்கதை அழகாய் வருகிறது நல்ல படங்கள் சில இடங்களில் பணம் அனுப்பும் போது அதிக இம்சை இதை கடந்த ஆண்டு சென்னை போனபோது உணர்ந்த நேரடி அனுபவம் எப்பதான் இங்கு உள்ளது போல் விரைவாக செயல்கள் நடக்குமோ?

  ReplyDelete
 10. வணக்கம்னே..
  பயணங்கள் தொடரட்டும்..

  ReplyDelete
 11. அனுபவக் பயணக் கட்டுரைகள்

  பயணத்தை சீக்கிறம் முடித்து விட்டு பதிவுக்குள் வாங்க தல...

  ReplyDelete
 12. அல்லோ தல..அவ் ஆர் யூ?

  ReplyDelete
 13. குடும்பத்தை மும்பையில விட்டுட்டு வந்து, குமரி பக்கம் ஜோடி சேர்ந்து சுத்தினதா, உளவுத்துறை தகவல்.அதான், ட்ரெயின்ல தனியா போறீங்களான்னு செக் பண்ணலாம்னு பார்த்தா, விடியறதுக்கு முன்ன, நெல்லையைக் கடந்து விட்டீர்கள்! சந்தேகமாத்தான்யா இருக்கு.

  ReplyDelete
 14. பயணக் கட்டுரை அருமையாகப் போகிறது
  படங்களும் அருமை

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் மனோ.
  எல்லோருக்கும் உங்கள் மேல் அன்பு தான்.

  ReplyDelete
 16. நடத்துங்க மக்கா நடத்துங்க...

  ReplyDelete
 17. பாவங்க மனோ!ரொம்ப நல்லவரு. அவரைப் போயி ஆஃபீசர் சந்தேகப் படறாரே!

  ReplyDelete
 18. Nesan said...
  பயணக்கதை அழகாய் வருகிறது நல்ல படங்கள் சில இடங்களில் பணம் அனுப்பும் போது அதிக இம்சை இதை கடந்த ஆண்டு சென்னை போனபோது உணர்ந்த நேரடி அனுபவம் எப்பதான் இங்கு உள்ளது போல் விரைவாக செயல்கள் நடக்குமோ?//

  அதைத்தான் எழுதபோறேன் மக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு......

  ReplyDelete
 19. கவிதை வீதி # சௌந்தர் said...
  அனுபவக் பயணக் கட்டுரைகள்

  பயணத்தை சீக்கிறம் முடித்து விட்டு பதிவுக்குள் வாங்க தல...//

  சரி மக்கா சரி........

  ReplyDelete
 20. FOOD said...
  குடும்பத்தை மும்பையில விட்டுட்டு வந்து, குமரி பக்கம் ஜோடி சேர்ந்து சுத்தினதா, உளவுத்துறை தகவல்.அதான், ட்ரெயின்ல தனியா போறீங்களான்னு செக் பண்ணலாம்னு பார்த்தா, விடியறதுக்கு முன்ன, நெல்லையைக் கடந்து விட்டீர்கள்! சந்தேகமாத்தான்யா இருக்கு.//

  ஹா ஹா ஹா ஹா ஆபீசர் நான் உங்க சிஷ்யன் அல்லவா அதான் உஷார் ஆகிட்டேனோ ஹி ஹி ஹி.....

  ReplyDelete
 21. மாலதி said...
  பயணக் கட்டுரை அருமையாகப் போகிறது
  படங்களும் அருமை//

  நன்றி'ப்பா......

  ReplyDelete
 22. Rathnavel said...
  வாழ்த்துக்கள் மனோ.
  எல்லோருக்கும் உங்கள் மேல் அன்பு தான்.//

  ஆமாம் அய்யா நன்றி அய்யா.....

  ReplyDelete
 23. உம்ம அலும்பு தாங்கலியே.

  ReplyDelete
 24. செங்கோவி said...
  உம்ம அலும்பு தாங்கலியே.//

  :-) Athey athey..sabaapathey

  ReplyDelete
 25. ஊருக்கு போயும் (பயணப்) பதிவை போட்டு தாக்குறீங்க. கலக்குங்க மக்கா!!

  ReplyDelete
 26. ஊருக்கு போயும் (பயணப்) பதிவை போட்டு தாக்குறீங்க. கலக்குங்க மக்கா!!

  ReplyDelete
 27. MEEEEEEEEEEE THE FIRST COMMENT...

  ReplyDelete
 28. உங்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் எட்டாப் பொருத்தமோ...

  எங்கே போனாலும் டெக்னாலாஜி கோளாறு பண்ணுதே.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!