Wednesday, February 15, 2012

மும்பை நகரசபை தேர்தலும் நாஞ்சில்மனோ'வும்....!!!

அப்பாடா வந்துட்டம்ய்யா, காங்கிரஸை வேரடி மண்ணோடு புடுங்க வேண்டும்னு நான் பல பதிவு எழுதினாலும், செயல்பாடுன்னு ஒன்னு இருக்கா இல்லையா அந்த வாய்ப்பு எனக்கு இப்போ மும்பையில் கிடைத்திருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கிறேன், காங்கிரசுக்கு எதிராக.....

ஏண்டா நீ சிவசேனாவுக்கு ஆதரவா நிக்கிறியே அவன் தமிழனை அடிக்கிரவனாச்சென்னு கேக்குற விக்கி பக்கிக்கெல்லாம் நான் சொல்வது, நாங்க அடிச்சிக்குவோம் பின்னே சேர்ந்துக்குவோம், ஆனால் ஒரு இனத்தையே அழித்த காங்கிரஸை நான் சும்மா விடுறதா இல்லை....!!!


அந்த வேதனை ரணமாக மனசில் வலிச்சிகிட்டே இருக்கு....

இன்னைக்கு ஓட்டு போட்டுட்டு நாளையில் இருந்து தொடர்ந்து வந்துருவேன், இன்னைக்கும் பலமான உள்ளடி வேலை பார்க்கணும் நேர்மையை என்னால் முடிந்த வரை செயல் படுத்திட்டு இருக்கேன் பார்ப்போம்.


என் தங்கச்சி ராஜி, ஆபீசர், இன்னும் பலர் எனக்கு அவார்டு தந்தும் வாழ்த்தியும் எனக்கு அவர்கள் பதிவுகளுக்கு தொடர்ச்சியா போக முடியாமைக்கு வருந்துகிறேன் [[கொஞ்சம் பொறுங்கப்பா]]

ஒரு பதிவு எழுதனும்னு ஆன்லைனுக்கு வந்தா விக்கியும், நக்கீரனும் என்னை படுத்துற பாடு இருக்கே முடியலை, நக்கீரன் போன் வந்தாலே என் மொத்த குடும்பமும் போனை தூக்கி தூர எறிஞ்சி நடுங்குராயிங்க [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]


அதான் இன்னைக்கு அந்த கொய்யால அண்ணன்மார்களுக்கு பயந்து அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி பதிவு எழுதிட்டு இருக்கேன் ஆனாலும் ஒருத்தன் இப்போ உள்ளே வந்துட்டான் [[பிரகாஷ்]] தம்பி உறக்கம் வரலையாக்கும்...?

விரைவில் தமிழகத்தில் நாஞ்சில்மனோ, ஆபீசரை, மற்றும் நண்பர்களை பார்க்க ஆவலுடன்.......!!!

32 comments:

 1. ஐயா மும்பையில் பள பளவென ரெட்கலர் சட்டை போட்டு சேவை செஞ்சது போதும் மக்கா கொஞ்சம் தமிழ் நாட்டுபக்கம் நீங்க தீட்டின அருவாளோட வந்து சேவை செய்தா கொஞ்சம் நல்லா இருக்கும்

  ReplyDelete
 2. வருக நண்பா வருக!

  ReplyDelete
 3. அண்ணே நீங்க நினைப்பது போல வெற்றி பெற வாழ்த்துக்கள்...தமிழ்நாட்டுக்கும் பாத்து எதாவது செய்யுங்க!

  ReplyDelete
 4. Vadi vaa....
  Unakku irukkudi.....
  Unnoda vedio still
  ellam.....vendam....
  Nan onnum sollalai....

  ReplyDelete
 5. Maama...intha...
  Nonnai-ya
  enna seiyalam..?????

  ReplyDelete
 6. உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள், மனோ.

  ReplyDelete
 7. // நக்கீரன் போன் வந்தாலே என் மொத்த குடும்பமும் போனை தூக்கி தூர எறிஞ்சி நடுங்குராயிங்க [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]//
  அங்கேயுமா!!!

  ReplyDelete
 8. //விரைவில் தமிழகத்தில் நாஞ்சில்மனோ//
  பஹ்ரைன் வருங்கால மன்னர் வருகிறார் பராக் பராக். :))

  ReplyDelete
 9. மக்களே,
  வணக்கம்.
  நீங்க தமிழ்நாடு வருகிற நேரம்
  நான் அங்கே இல்லையே என வருத்தமா இருக்குது.
  நான் தூத்துக்குடிக்கு வருவதற்கு இன்னும் பதிமூன்று
  நாட்கள் இருக்குது.

  ReplyDelete
 10. அச்சு அசலா நீண்டகால அரசியல்வாதி மாதிரியே இருக்கீங்களே :-)

  ReplyDelete
 11. உங்க பதிவ படிக்கரதுக்கு நீண்ட நாட்களா காத்திருகிரோம், வந்து கலக்குஙக,

  நீங்கலும் அரசியல்வாதி ஆகிடிஙக போல..

  ReplyDelete
 12. அந்த சட்டை கலரு....... ஆஹா.. ஏன்னே இந்த கொலவெறி...

  ReplyDelete
 13. என்ன மனோசார் நான் உங்களை ரொம்ப நல்லவனாக கற்பனை பண்ணி வைச்சு இருக்கேன் ஆனால் உங்கள் நண்பர்கள் உங்களை ரொம்ப மோசமான ஆள்(அரசியல்வாதி) என்று சொல்லுகிறார்களே அது உண்மையா??

  ReplyDelete
 14. நீங்க நடத்துங்க சார், அடிக்கற அடியுல தாரை தப்பட்டை எல்லாம் கிழியனும் :-)

  ReplyDelete
 15. உங்க சட்டை கலரை பாத்தே காங்கிரஸ்காரன் தெறிச்சி ஓடிருவான். அதுவும் உச்சி வெயில்ல நடந்து போனா...சொல்லவா வேணும்.

  - 'கிளிப்பச்சை, டார்க் ரெட் சட்டை' ராமராஜன் வெறியர் மன்றம்,
  வடமேற்கு அண்டார்டிகா.

  ReplyDelete
 16. ரெண்டாவது போட்டோல கெம்பீரமா போஸ் குடுத்தும் யூஸ் இல்லை. நிழல் மறச்சிடுச்சே...ஹி..ஹி..

  ReplyDelete
 17. //என் தங்கச்சி ராஜி, ஆபீசர், இன்னும் பலர் எனக்கு அவார்டு தந்தும் வாழ்த்தியும் எனக்கு அவர்கள் பதிவுகளுக்கு தொடர்ச்சியா போக முடியாமைக்கு வருந்துகிறேன்//

  அவங்க ரெண்டும் பெரும் உங்களுக்கு தொடர்ந்து ஓட்டு போடலைன்னு சாட்ல பொலம்பனீங்க. இப்ப என்னடான்னா..என்னவோ போங்க.

  ReplyDelete
 18. // நக்கீரன் போன் வந்தாலே என் மொத்த குடும்பமும் போனை தூக்கி தூர எறிஞ்சி நடுங்குராயிங்க [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]//

  அதேதான் இங்கயும். சட்டசபைல இவரு பேசுனா மத்தவங்க எல்லாம் 'தானே தங்கள் சட்டைகளை எல்லாம் கிழித்து கொள்வார்கள்' போல.

  ReplyDelete
 19. அரசியல்ல இதெல்லாம் சகஜம‌ப்பா... தமிழ்நாட்டு பக்கமும் வர்றது.. உங்க ஊருகாரவுக உங்களை தேடிக்கிட்டு இருக்காங்களாம்.. சீக்கிரம் வந்து ஐக்கியமாகிருங்க..

  ReplyDelete
 20. //அதான் இன்னைக்கு அந்த கொய்யால அண்ணன்மார்களுக்கு பயந்து அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி பதிவு எழுதிட்டு இருக்கேன் //

  ஆமா..கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதறாரு..இதுக்கு ஒரு விளக்கம் வேற.. :)

  ReplyDelete
 21. //ஆனாலும் ஒருத்தன் இப்போ உள்ளே வந்துட்டான் [[பிரகாஷ்]] தம்பி உறக்கம் வரலையாக்கும்...?//

  காரு வச்சிருந்த சொப்பன சுந்தரி அட்ரஸ் தேடி பிரகாஷ் ரெண்டு வாரமா அலைஞ்சதுல தூக்கம் எப்படி வரும். அது உங்க கிட்டதான் இருக்காமே....

  ReplyDelete
 22. //விரைவில் தமிழகத்தில் நாஞ்சில்மனோ, ஆபீசரை, மற்றும் நண்பர்களை பார்க்க ஆவலுடன்.......!!!//

  தானே புயல் தாக்கமே இன்னும் முழுசா முடியல. அடுத்து 'அண்ணாத்த' புயல்..ஸ்ஸ்ஸ்..!!

  ReplyDelete
 23. அப்படியே மே மாதம் வரைக்கும் வெயிட் பண்ணுங்க நானும் வர்றேன் அண்ணே

  ReplyDelete
 24. உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

  மின்வெட்டு நகருக்குள் வாங்க.. வாங்க என்று வரவேற்கிறோம்.

  ReplyDelete
 25. மனோ...ஜீ எனிக்கு இங்கே ஸ்வீட் செய்யரான் அதால மும்பை வரமுடியல...எனிக்கு பதிலா ஒரு பேட்டா இருக்கார்! சந்தோஷம்! சீக்கிரம் இங்க வாங்கோ! சேட் நன்றி சொல்ரான்..அச்சா..

  ReplyDelete
 26. உங்கள் ஆதரவு வேட்பாளர் வெற்றிவாகை சூடட்டும் விரைவில் தமிழகம் சென்று விட்டு அடுத்த பிளைட்டில் பாஹாரைன் ஓடிவாங்க அண்ணாச்சி. ஒரே மின்வெட்டு தமிழ்நாட்டில் என்று நண்பன் சங்கு ஊதுறான்.

  ReplyDelete
 27. சென்னை வரும் அண்ணாச்சிக்கு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படும் அருவாள் வைத்து இருப்பதால். ஹீ ஹீ

  ReplyDelete
 28. வருங்கால முதல்வர் அண்ணன் மனோ வாழ்க !

  ReplyDelete
 29. அண்ணே அப்படியே ஊருக்கு போய் ஒரு கட்சிய ஆரம்பிச்சி, இந்த கழகங்களுக்கு ஒரு முடிவு கட்டுங்கண்ணே....

  ReplyDelete
 30. ///! சிவகுமார் ! said...
  //அதான் இன்னைக்கு அந்த கொய்யால அண்ணன்மார்களுக்கு பயந்து அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி பதிவு எழுதிட்டு இருக்கேன் //

  ஆமா..கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதறாரு..இதுக்கு ஒரு விளக்கம் வேற.. :)//////

  இது பீருகட்டும் இதிகாசம்ணே.......

  ReplyDelete
 31. >>// நக்கீரன் போன் வந்தாலே என் மொத்த குடும்பமும் போனை தூக்கி தூர எறிஞ்சி நடுங்குராயிங்க [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]//

  அடங்கொய்யால

  ReplyDelete
 32. தாய்நாட்டில் இருக்கீங்களா .நானும் ஒரு வாரம் போயிட்டு வந்துட்டேன் .have a great time with your family .

  .........

  ஆமா அது எப்படி நீங்களும் சிபியும் ஒரே கலர்ல ஷர்ட் போட்டிருக்கீங்க ?????????????

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!