Thursday, January 7, 2021

ஆட்டோ சங்கர் 5

By வரலாறு சுரேஷ் ஆட்டோ சங்கர் நாள் 5 சங்கர் தொடர்பான விவகாரத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சங்கர் இருந்தது என்னவோ சிறைதான் என்றாலும், அவனுடைய பண பலமும், அவனுக்கிருந்த செல்வாக்கும் சிறையில் அவனுக்கென தனி சுதந்திரத்தை வழங்கியிருந்தது என்பதை மறந்து விட கூடாது. ஆகவேதான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும் போது கூட காவல்துறையினர் சங்கருக்கு நெருக்கடி கொடுத்ததில்லை. ஒரு முறை மத்திய சிறையில் இருந்து செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டுக்கு சென்று சாவகாசமாக சாப்பிட்டு விட்டு சென்றதெல்லாம் சங்கருக்கும் காவலர்களுக்குமான நெருக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டின. அந்த வகையில் சிறையில் இருந்து சங்கர் தப்பிப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் சிலர் உதவியிருப்பார்கள் என்ற சந்தேகம் அனைவருக்குமே எழுந்தது. இதுமட்டுமல்லாமல் சிறையில் இருந்த கணபதி என்பவரை சந்திக்க அவரது மனைவி தேவி வரும் சமயங்களில் தேவியுடன் சங்கர் பேசி வந்துள்ளார். பெண்களுடன் அதிகளவில் நேரத்தை செலவிடும் சங்கர் அங்கும் தன்னுடைய லீலைகளை தொடர்ந்துள்ளார். நாளைடைவில் கணவனை பார்க்க தவறிய தேவி, சங்கரை சந்திப்பதை வழக்கமாகி கொண்டுள்ளார். இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அறிந்த சங்கரின் முதல் மனைவி ஜெகதீஸ்வரி, தேவியுடன் கட்டி புரண்டு சிறை வாசலிலேயே சண்டை போட்டதும், அதனை காவல் துறை அதிகாரிகள் விலக்கி விட்டதும் நடந்திருக்கிறது. இந்நிலையில் தான் சிறையில் இருந்து சங்கர் உள்ளிட்டோர் தப்புவதற்கு தேவியை பயன்படுத்தி கொண்டனர். சங்கரின் மீதான ஆசையில் தேவி இவர்களோடு இணைந்து செயல்பட்டார். இவர்களை பிடிப்பதற்கு, சிறைத் துறை, சிபிசிஐடி , மாநகர காவல் துறை என 3 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தினர். தனிப்படை போலீஸாரின் தேடுதலில் சங்கருக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர் ராஜாவும், சுண்டல் குமாரும் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒடிசா சென்ற தனிப்படை போலீசார் ரூர்கேலா அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சங்கரை சுற்றி வளைத்தனர். கணபதியின் மனைவி தேவியை திருமணம் செய்து அவருடன் வாழ ஆரம்பித்திருந்த சங்கரை சிறையில் இருந்து தப்பிய 12 நாட்களில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விமானம் மூலமாக அவர்கள் இருவரும் சென்னை கொண்டு வரப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டான் சங்கர் . சங்கரின் தம்பி மோகனும், கூட்டாளி செல்வராஜும் தலைமறைவாக இருந்ததால் அவர்கள் தொடர்பான வழக்கு தனியாக நடைபெற்றது. இறுதியில் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கர் உள்ளிட்ட 8 பேரும், தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றே அப்போதும் தெரிவித்தனர். 8 பேர் மீதும் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், சங்கர், எல்டின், சிவாஜி உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.... நாளையே இப்படம் கடைசி...

1 comment:

  1. தேவி வடிவில் சங்கருக்கு மூதேவி வந்துவிட்டது.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!