Tuesday, January 5, 2021
ஆட்டோ சங்கர் 4
By வரலாறு சுரேஷ்
ஆட்டோ சங்கர்
நாள் 4
வேலூரை சேர்ந்த ஜெகதீஸ்வரியை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் அதனைத் தொடர்ந்து பாலியல் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட சுமதி, சுந்தரி ஆகியோரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தான். சுமதியையும் சுந்தரியையும் தொழிலுக்கு அறிமுகம் செய்து வைத்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை தமக்கு தெரியாமல் அவர்கள் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் சுடலையை கொன்று எரித்து அவனுடைய சாம்பலை கடலில் கரைத்ததாக கூறியுள்ளான். இதே போன்று, சுடலை காணாமல் போனதாக தேடி வந்த ஆட்டோ ஓட்டுநர் ரவியையும் கொலை செய்து புதைத்ததாக தெரிவித்தான் . மந்தவெளியை சேர்ந்த மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகிய மூன்று பேரை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு... அவர்கள் மூவரும் ஒவ்வொரு முறையும் இங்கு வந்து செல்லும் பொழுதும் பணம் கொடுப்பதில் தகராறு செய்ததாகவும் ஆகையினால் அவர்களையும் திட்டமிட்டு போட்டு தள்ளியதாக கூறியிருக்கிறான் சங்கர்.
இந்நிலையில், சங்கரின் நான்காவது மனைவியும் ஆசை காதலிகளில் ஒருத்தியான லலிதாவையும் கொன்றது குறித்து, சங்கரின் தம்பி மோகன் வாக்குமூலம் அளித்தான். அதில், பெங்களூருவை சேர்ந்த லலிதாவை ஆட்டோ ஓட்டுநர் சுடலைதான் சங்கருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், லலிதாவின் அழகில் மயங்கிய சங்கர், சுமதி, சுந்தரியை போன்று லலிதாவையும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினான். ஆனால், சங்கரின் முரட்டு தனமான நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த லலிதா, சங்கரை விட்டு சுடலையோடு ஓட்டம் பிடித்ததால் சுடலை மீது சங்கர் கோபத்தில் இருந்ததாக கூறியுள்ளான். இதனையடுத்து பல்லாவரத்தில் சுடலையுடன் தங்கியிருந்த லலிதாவை சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்தே சுடலையை கொன்று எரித்தாகவும், ஆத்திரம் தீராத சங்கர் லலிதாவையும் கழுத்தை நெரித்து அடித்து கொன்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிய வந்தது.
இந்த கொலை குற்றங்கள் தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை 2 வது நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. சங்கர் உள்பட 10 பேர் மீது 1100 பக்கம் அளவிலான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆள் கடத்தல், சாட்சியங்களை மறைத்தல், கலவரம் செய்தல், சதி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், செங்கல்பட்டு கூடுதல் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 9 நடுவர் மன்ற நீதிபதிகள், 5 காவல் ஆய்வாளர்கள், நடிகை புவனி உள்பட உள்பட 134 பேர் சாட்சியம் அளித்தனர். 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி ஆட்டோ சங்கர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பட வேண்டும் . வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியிருந்த நிலையில், ஆட்டோ சங்கர் உள்ளிட்ட 5 பேர் சென்னை மத்திய சிறையில் இருந்து தப்பியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின....
Subscribe to:
Post Comments (Atom)
1100 பக்க படிக்க நீதிபதிகள் எத்தனை நாட்கள் எடுத்து இருப்பாரோ![[[
ReplyDelete