நேற்றிரவு...
தினம்தோறும் பலமணி நேரமாக இரவு வீட்டம்மாகூட போன் பேசிகிட்டு இருப்பார் பக்கத்து ரூம் மலையாளி சேட்டன், என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும், சமையல் எல்லாம் அவர்தான் பண்ணித்தருவார், என்னை எதுவுமே செய்ய விடமாட்டார். [[தெரிஞ்சாதானே]]
இங்கே மணி இரவு பத்து என்றால் ஊரில் மணி இரவு பனிரெண்டரை, அதுவும் கேரளா கிராமங்களில் ஏழு எட்டு மணிக்கே ஆளரவம் இருக்காது தூங்கிவிடுவார்கள்...
இவர் வீட்டம்மா தூங்காமல் அப்பிடி என்னதான் பலமணி நேரமா பேசுறாங்கன்னு கேக்க [[ஒட்டுதான்]] ஆசையாகிருச்சு நேற்று...
"காம்பௌண்ட் கேட்டை மூடினாயா ?"
"..........."
"ஸ்கூட்டரை கவர் போட்டு மூடினாயா ?"
".........."
"மெயிண்டோர் கதவை பூட்டியாச்சா ?"
"பிள்ளைங்க ரூம் கதவையெல்லாம் சாத்திட்டியா ?"
"அப்பா அம்மா தூங்கியாச்சா ?"
"கியாஸ் பூட்டுனியா ?"
"நம்ம ரூமுக்கு வந்துட்டியா ?"
"கதவை தாழ்பாள் போட்டுட்டியா ?"
"பெட்ஷீட் தலையணை எல்லாம் கிளீனா இருக்கா ?"
"................."
அப்புறம் எல்லாமே 18+ ங்கோ...கொய்யால எனக்குத்தூக்கமே போச்சு...
வெளிநாட்டு மனித வாழ்க்கையின் விநோதங்களில் இதுவும் ஒன்று...
நண்பர் ஒருவர் சொன்னார், ஒற்றைத் தலையணை வாழ்க்கை சரியானதல்ல"வென்று...சரிதான் !
