Friday, May 25, 2012

கன்னியாகுமரியின் அதிசயம்....!!!

வாரவனையும் வரவிடமாவிடமாட்டேங்குறான் இவனும் வரமாட்டேங்குறான், போறவனையும் போகவிடமாட்டேங்குறான் இவனும் போகமாட்டேங்குறான் என்னடா உலகம் இது.....????!!!

சரி, நாம பத்னாபபுரம் அரண்மனையை சுற்றி பார்ப்போம் வாருங்கள்.....!!

 ராஜாவை கொலை செய்ய எத்தனிக்கும் எத்தர்களின் வரைபடத்தில் என் நிழலும் தெரியவைத்து வரலாற்றில் இடம் பெற செய்த விஜயனுக்கு நன்றிகள்...

 மார்த்தாண்ட வர்மா குளிக்கபோகும் தங்கத்தால் ஆன கிணறு......[[இவைகள் அங்கே வரைந்து வைத்திருக்கும் சித்திரங்கள் அழகோ அழகு....!!!


 எல்லாம் மரத்தால் ஆன படிகள்..............[[விஜயன் மகன் அர்ஜூன்]]

 அரண்மனையை கட்டும் போது வாஸ்து எல்லாம் பார்த்து கூடவே இருந்து கவனிக்கும் ராஜா மார்த்தாண்ட வர்மா.....!!! [[விஜயன் இவரை பார்த்துட்டு மந்திரவாதி'ன்னு சொல்லவே இல்லை ஹி ஹி]]

 அரமனை உள்ளடி கதவு....!!! [[டேய் நான்தாண்டா மகாராஜா எங்கப்பன் வெறும் கூஜா - அர்ஜூன்]]

 எல்லாம் மரத்தால் செய்யப்பட்டவை முன்னூற்றி அம்பது வருஷமா அப்பிடியே இருக்குய்யா.....!!!

 சுண்ணாம்பு, கருப்பட்டி, முட்டைகளால் கட்டப்பட்ட தளங்கள், சுவர்கள்....!!! கொஞ்சம் உடைந்து இருந்ததை நான் போட்டோ எடுக்க சொல்லி விஜயன் எடுத்த போட்டோ.


 என் மகன் தோளை விட்டு இறங்கவே மாட்டேன்னு அடம்பிடிக்கும் மோனிஷா குட்டி, விஜயனின் தங்கச்சி மகன் அஸ்வின்.

 மகாராஜாக்கள், மகாராணிகள் தங்கும் அறைகள் மிக சிறியதாகவே இருக்கிறது இங்கே, ஆனால் வெளிநாட்டவர்கள் தங்கி போவதற்கு மிகவும் விஸ்தாரமான அறைகளும் பிரமாண்டமான முற்றங்களையும் செய்து வைத்துள்ளார்கள்....!!!

 மோனிஷா [[பூ]] முகத்தை பார்த்தால் எவ்வளவு சங்கடம் மனசில் இருந்தாலும் பறந்தே போயிரும் அவள் சிரிப்பின் அழகு அப்படி, அழுதாலும் சிரிப்பதை போல இருக்குமாம், விஜயன் அதை போட்டோ எடுத்து உங்க மிஸ்'கிட்டே காட்டிருவேன்னு சொன்னதும் பயந்து அழுகையை நிப்பாட்டிருவாளாம். மோசஸ், மோனிஷா குட்டி....!!!

 அங்கே மகாராஜா மாமனார் வீட்டுக்கு போகும் வழியில் இடதுபுறம் உள்ள தெப்பக்குளம், அருகில் அஸ்வின்.

 அர்ஜூன்.

 தெப்பக்குளத்தில் குளித்து கரையேறி இருக்கும் நீர்காக்கை...!!!

 மகாராஜாக்கள் சின்ன சின்ன பொருட்கள், புக் படிக்க வசதியாக ஸ்டேன்ட்.....!!!

 அரிசி, நெல் போட்டு வைக்கும் குதில்கள்...!

 அந்தகால அளவைகள், மரக்கால், பக்கா என்று சொல்லுவோம்...!

 பலவகையான பூக்களை மரத்தால் செய்து வைத்துள்ளார்கள், அநேகமான உள்ளறைகளும் மர்மமாகவே இருக்கிறது, அவைகளை எல்லாம் பூட்டி வைத்துள்ளார்கள்...!

சீனா'வின் ராஜா கொடுத்த வெகுமானம் இந்த சேர்.....!

பேச்சு பேச்சாதான் இருக்கணும், இந்த கோட்டை தாண்டி நானும் அங்கிட்டு வரமாட்டேன், நீயும் இங்கிட்டு வரக்கூடாது எப்பூடீ [[அஸ்வின், என் வீட்டம்மா, நான்..... .[[என்னை இப்பிடி கைபுள்ளையா போட்டோ எடுத்து நாரடிச்ச போட்டோ கிராபர் ஒழிக ஹி ஹி...]]

படங்கள் இன்னும் தொடரும்........

டிஸ்கி : போட்டோக்கள் உபயம் விஜயன் [[நன்றி மக்கா]]


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!