Tuesday, February 8, 2011

கேரளா ஹவுஸ் மேட்

எங்க ஹோட்டல்ல புதுசா ஒரு மலையாளி டாக்டர் குடும்பம் தங்கியிருக்காங்க. அவங்களுக்கு ரெண்டு குழைந்தைங்க உண்டு. பிள்ளைகளை கவனித்து கொள்ளவும் சமைக்கவும் ஒரு ஹவுஸ் மேட் இருக்காங்க. இந்த ஹவுஸ்மேட் தங்கியிருப்பது  வெளியில் என்பதால் இந்த டாக்டர்கள் வெளியே போகும் போது ரூம் சாவியை என்னிடம் தந்து ஹவுஸ்மேட் வரும்போது அவளிடம் கொடுக்க சொல்வார்கள். இது தினம் நடக்கும் சங்கதி.
அந்த ஹவுஸ்மேட் கேரளா பத்தனம்திட்டா ஊர்காரர். இவர் தினமும் சாவி வாங்க வரும் போது சரளமாய் என்னோடு மலையாளத்தில் பேசுவார் நானும் பேசுவேன் [மலையாளத்தில்] நான் தினமும் படிக்கும் மலையாள மனோரமா [கேரளா நண்பன் படித்து விட்டு எனக்கு தருவான்] பேப்பரையும் கொடுப்பேன். நன்றாக சிநேகமாக பேசினாள் பேசுவாள். ஆனால் என் ஊர் எது என அவளும் கேட்க வில்லை நானும் சொல்லவில்லை [ஊமை குசும்பு] இப்படி ஒரு நாள் பேசிகொண்டிருக்கும் போதுதான் திடீரென கேட்டாள் உங்களுக்கு எந்த ஊர்னு [நாசமா போவ] தமிழ்நாடுன்னு சொன்னதுதான் தாமதம்...அவள் முகம் சுருங்கி மூக்கு விடைக்க தொடங்கியது. ஒன்னுமே  பேசாமல் போய்விட்டாள். எனக்கு மேட்டர் புரிஞ்சிடுச்சு [ஹா ஹா ஹா எத்தனை பேரை பாத்துருக்கோம்]
அடுத்த நாள் வந்தாள்.....என்னோடு ஒன்றுமே  பேசவில்லை பேப்பரை கொடுத்தேன் வாங்க வில்லை கோபமாக சாவியை கேட்டாள் கொடுத்தேன். நாலஞ்சு நாள் இது தொடர்ந்தது. நான் வலிய போயி பேசியும் ஒதுங்கி ஓடினாள் அப்புறம் நானும் ஒன்றும் சொல்வதில்லை அவளும் ஒன்றும் பேசுவதில்லை.
திடீரென நேற்று என் முன்னால் வந்து கண் கலங்கினாள். என்னாச்சுனு கேட்டேன். அது மனோ இப்போதான் என் முதலாளி உன்னை பற்றி சொன்னார் நீங்க தமிழன் என்று, நீங்க மலையாளி என்று நினைத்துதான் நீங்க தமிழ்நாடுன்னு [அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்] சொன்னபோது என்னை கேலி செய்கிறீர்கள் என நினைத்து எனக்கு கோபம் வந்து விட்டது மன்னித்து கொள்ளுங்கள் என்றாள். அட இது எனக்கு புதுசில்லை இப்பிடி அடிக்கடி நடப்பதுண்டுனு சொன்னேன். பயங்கரமா ஒரு சிரிப்பு சிரித்து விட்டு மறுபடியும் சாரி சொல்லிட்டு, நீங்க முதல்லையே சொல்லியிருக்கலாமே என்றாள். அட சேச்சி அதை சொல்லத்தான் நீங்க நேரமே தர்ரதில்லையே... உடனே கோபபடுகிறீர்களே நான் என்ன செய்ய முடியும் என்றேன். சிரித்து விட்டு போனாள்......... 
 
டிஸ்கி : இந்த அநியாயத்துக்கு ஒரு முடிவு சொல்லுங்கப்பா, வர்றவனெல்லாம் முதல்ல கேக்குற கேள்வி நீ மலையாளிதானேனு  கேட்டு சொன்னாலும் கொல்றானுவ சொல்லலைன்னாலும் கொல்றானுவ....அப்பவாவது ஆம்பிளைங்க, இப்போ இதோ பொம்பளைங்க கூடயும் அக்கப்போர் ஆரம்பிச்சாச்சு....எலேய் கோமாளி செல்வா நீ இங்கே வந்துருலே மக்கா.....

82 comments:

 1. வடை எனக்குத்தான்!!!

  நானும் இந்த பிரச்னையை வழி மொழிகிறேன்,, அதுவும் நம்ம ஊர்மக்கள் ஊர்ல திருநெல்வேலிக்கு போனா மலையாளத்தான்ராய்ங்க.. கேரளாவுக்கு போனா பாண்டின்ராய்ங்க.. இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும் தல. (நாமும் மலையாளம் அவர்களைப்போலவே பேசித்தொலைப்பது தான் கொடுமை!)

  ReplyDelete
 2. நான் தமிழன் என்று போர்ட் வைக்கவும்

  ReplyDelete
 3. //நானும் இந்த பிரச்னையை வழி மொழிகிறேன்,, அதுவும் நம்ம ஊர்மக்கள் ஊர்ல திருநெல்வேலிக்கு போனா மலையாளத்தான்ராய்ங்க.. கேரளாவுக்கு போனா பாண்டின்ராய்ங்க.. இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும் தல. (நாமும் மலையாளம் அவர்களைப்போலவே பேசித்தொலைப்பது தான் கொடுமை!) //

  அப்போ கடுப்புலதான் இருக்கீங்க ஹா ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 4. //நான் தமிழன் என்று போர்ட் வைக்கவும் //

  அரபிக்காரன் கிட்டே அடிவாங்க சூப்பர் ஐடியா.....கி கி கி...

  ReplyDelete
 5. நல்லதொரு “தமிழ்“ப் பதிவு. (ஹிஹி)

  பதிவில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் bold letter'ஆக வைப்பதைத் தவிர்க்கவும்..
  (ஒருவேளை என் கண்ணுக்கு அப்படித் தெரியுதோ??)

  ReplyDelete
 6. //Speed Master said...
  நான் தமிழன் என்று போர்ட் வைக்கவும்

  February 8, 2011 2:45 AM//

  சீமானுடன் சேர்ந்து அடி வாங்க அல்லது/உள்ள போக வச்சிருவீக போல இருக்கே சார்?? இது நியாயமா? ம்ம்ம்ம்ம்ங்ங்...

  ReplyDelete
 7. //நல்லதொரு “தமிழ்“ப் பதிவு. (ஹிஹி)

  பதிவில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் bold letter'ஆக வைப்பதைத் தவிர்க்கவும்..
  (ஒருவேளை என் கண்ணுக்கு அப்படித் தெரியுதோ??//
  கண்டிப்பா மாத்திர்றேன் மக்கா......சுட்டியமைக்கு நன்றி...

  ReplyDelete
 8. இந்த வம்பே வேண்டாம் மனோ. பேசாமல் யாராக இருந்தாலும் ( இந்தியர்கள்தான்) ஆங்கிலத்திலேயே அல்லது இந்தியில் பேசுங்கள். கேட்டால் மட்டும் சொல்லுங்கள். இல்லையென்றால் பேசாமல் இருந்துவிடலாம். தேவையற்ற தொல்லைகள் எதற்கு?

  ReplyDelete
 9. //இந்த வம்பே வேண்டாம் மனோ. பேசாமல் யாராக இருந்தாலும் ( இந்தியர்கள்தான்) ஆங்கிலத்திலேயே அல்லது இந்தியில் பேசுங்கள். கேட்டால் மட்டும் சொல்லுங்கள். இல்லையென்றால் பேசாமல் இருந்துவிடலாம். தேவையற்ற தொல்லைகள் எதற்கு//

  ஹா ஹா ஹா நம்ம மூஞ்சி காட்டி கொடுக்குதே.....

  ReplyDelete
 10. ஏன் மனோ சார் இது நமக்கு அதாவது நம்ம ஊர்ல இருந்தே இது பழகி இருக்குமே .....

  ஆனாலும் வெளி நாடுல போயும் இந்த தொந்தரவு ன்ன (என்ன கொடுமை சார் இது .)

  ReplyDelete
 11. //நான் வலிய போயி பேசியும் ஒதுங்கி ஓடினாள் //

  ஏன் மனோ சார் வலிய பேசிநீர்கள இல்ல வளிய(ஜொள்ளு )விட்டு பேசிநீன்களா ...ஹி ஹி

  ReplyDelete
 12. சார் கோபம் புரியுது ....

  ReplyDelete
 13. //ஏன் மனோ சார் இது நமக்கு அதாவது நம்ம ஊர்ல இருந்தே இது பழகி இருக்குமே .....//


  பஹ்ரைன்ல'தான் எனக்கு இந்த அனுபவம் மக்கா....

  ReplyDelete
 14. நீங்க மலையாளியா இருந்தாலும், நல்லா தமிழ்ல பதிவுகள் எழுதுறீங்க...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

  ReplyDelete
 15. //ஏன் மனோ சார் வலிய பேசிநீர்கள இல்ல வளிய(ஜொள்ளு )விட்டு பேசிநீன்களா ...ஹி ஹி//

  இது தேரூர் குசும்பு ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 16. //சார் கோபம் புரியுது ....//

  இதுலயும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுதுப்பா....

  ReplyDelete
 17. //நீங்க மலையாளியா இருந்தாலும், நல்லா தமிழ்ல பதிவுகள் எழுதுறீங்க...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...//

  இது திசையன்விளை லொள்ளு ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 18. இதெல்லாம் தவிர்க்கவே முடியாதது பாண்டிக்காரரே!

  ReplyDelete
 19. ஓ எந்த இது கவலை
  கரையண்ட சேட்டா!!!!

  ReplyDelete
 20. பொம்பளபுள்ள மளையாளத்தில் பேசனா நீங்களும் மலையாளத்தில் பேசவேண்டியதுதானா..
  கேரளாவுக்கும் தமிழை பரப்புங்க பாஸ் ..

  ReplyDelete
 21. அது சரி இப்பு சுமூகமா போகுதா..
  அப்படியே கேரளா பக்கம் போயிடப் போரிங்க பாஸ்...
  உங்க இம்சை தமிழ் நாட்டுக்கு தேவை..

  ReplyDelete
 22. என்ன கொடுமை மனோ இது..:))

  ReplyDelete
 23. ஏன் மக்கா கதைய பாதிலேயே முடிச்சிட்ட..... அப்புறம் சேச்சி என்ன சொல்லுச்சு....?

  ReplyDelete
 24. தமிழரை தமிழனே மதிப்பதில்லை நண்பரே இரண்டு malayalikal சந்தித்துகொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள் ஒரு மலையாளியும் ஒரு தமிழரும் சந்தித்தாலும் மலையாளத்தில் பேசுவார்கள் நம்ம தமிழ் அவனுக்கு தெரிந்தாலும் நம்மாளு மலையாளத்தில் தான் பேசுவான் இது யார் தப்பு உன்னோட தாய் மொழிய மதிகதேரியாத நமக்கு என்ன மதிப்பு .....?(ஆமால ஆமாவா? இல்லையா?)

  ReplyDelete
 25. //இதெல்லாம் தவிர்க்கவே முடியாதது பாண்டிக்காரரே!//

  என்னத்தை சொல்ல....

  ReplyDelete
 26. //பொம்பளபுள்ள மளையாளத்தில் பேசனா நீங்களும் மலையாளத்தில் பேசவேண்டியதுதானா..
  கேரளாவுக்கும் தமிழை பரப்புங்க பாஸ் .. //

  இனி வந்தா தமிழ்லதான் பேசணும்....

  ReplyDelete
 27. //அது சரி இப்பு சுமூகமா போகுதா..
  அப்படியே கேரளா பக்கம் போயிடப் போரிங்க பாஸ்...
  உங்க இம்சை தமிழ் நாட்டுக்கு தேவை.. //

  போங்கண்ணா கிண்டல் பன்னாதீக ஹி ஹி ஹி....

  ReplyDelete
 28. //என்ன கொடுமை மனோ இது..:)) //

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 29. //ஏன் மக்கா கதைய பாதிலேயே முடிச்சிட்ட..... அப்புறம் சேச்சி என்ன சொல்லுச்சு....? //

  நெனச்சேன் நீர் வந்தா இந்த கேள்வியை கண்டிப்பா கேப்பீருன்னு ஹா ஹா ஹா.....
  கொக்காமக்கா பிச்சிபுடுவேன் பிச்சி......:]]

  ReplyDelete
 30. //தமிழரை தமிழனே மதிப்பதில்லை நண்பரே இரண்டு malayalikal சந்தித்துகொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள் ஒரு மலையாளியும் ஒரு தமிழரும் சந்தித்தாலும் மலையாளத்தில் பேசுவார்கள் நம்ம தமிழ் அவனுக்கு தெரிந்தாலும் நம்மாளு மலையாளத்தில் தான் பேசுவான் இது யார் தப்பு உன்னோட தாய் மொழிய மதிகதேரியாத நமக்கு என்ன மதிப்பு .....?(ஆமால ஆமாவா? இல்லையா?)//


  சில மலையாளிகளுக்கு தமிழ் தெரிந்தாலும், அவர்கள் பேசும் தமிழை கேக்க நமக்கு சகிக்காது என்பதே உண்மை....உதாரணம் மத்திய அமைச்சர் வயலார் ரவி[கேரளா] தமிழ் மீடியாக்களுக்கு தமிழில் பேட்டி குடுப்பதை கவனிக்கவும்.....

  ReplyDelete
 31. //ஓ எந்த இது கவலை
  கரையண்ட சேட்டா!!!!//

  ஹோ மை நஹி ரோவுங்கா தோஸ்த்...

  ReplyDelete
 32. உங்கள் மேசையில் ஒரு தமிழக முதலமைச்சர் படத்தை வைத்து பாருங்கள்.

  ReplyDelete
 33. //உங்கள் மேசையில் ஒரு தமிழக முதலமைச்சர் படத்தை வைத்து பாருங்கள்.//

  ஆத்தீ முல்லை பெரியார் பிரச்சினைக்கு நம்மகிட்டே வந்துருவானுக.....

  ReplyDelete
 34. இதுல பகுதி மேட்டர் பறஞ்சது செரி , மீதி எந்தான்னு சாரு செரிக்க பறஞ்ச்சிட்டில்லலலோ... ..ஆயாள் வறாம் நேரம் எப்போ...???? உச்சிக்கா...வழிநேரம்...????? எந்தெங்கிலும் பிரஷ்னம் ஆனால் சாரு எவ்விட போவாம் ...!! போம்பேவுக்கா இல்ல பத்தனம் திட்டா...ஹி..ஹி....

  ReplyDelete
 35. என்னது நீங்க தமிழா..............................?.மக்கா பொய் தானே.

  ReplyDelete
 36. தமிழ்நாட்டில் நீங்க மலையாளியா என்றுக் கேட்டு சந்தோசமாகத் தானே பழகுறோம் ? ஆனால் கேரளாவில் ஏன் இந்த இனதுவேசம் > ? விளக்கினால் புரிந்துக் கொள்வேன்?

  ReplyDelete
 37. நான்கூட சில காலம் வட இந்தியாவிலிருந்தேன்
  அவர்கள் தென் பகுதியைச் சர்ந்த எல்லோரையுமே
  மதராசி எனத்தான் சொல்வார்கள்.
  உங்கள் விசயத்தில் உங்கள் நல்ல
  மலையாள உச்சரிப்புத்தான் இந்த
  குழப்பத்திற்கு காரணம் என நினைக்கிறேன்
  எப்படியோ எங்களுக்கு இதனால்
  ஒரு நல்ல பதிவு கிடத்தது தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 38. நானும் இந்தமாதிரி ஒரு விஷயத்துல 20 நாளுக்கு முன்னாடி மாட்டினேன்.
  அத பதிவாவும் முடிச்சி வச்சிட்டேன் ஆனா நாளைக்கு அதுக்கு ஒரு முடிவு இருக்கு(!)
  அது என்னன்னு பாத்துட்டு அந்தப்பதிவ release பண்றேன்(!?)

  ReplyDelete
 39. எல்லாம் இருக்கட்டும். தலைப்பைப் பார்த்துட்டு mate ன்னு நினைச்சுட்டேன். Maid ன்னு இருக்கவேணாமா?

  ReplyDelete
 40. //இதுல பகுதி மேட்டர் பறஞ்சது செரி , மீதி எந்தான்னு சாரு செரிக்க பறஞ்ச்சிட்டில்லலலோ... ..ஆயாள் வறாம் நேரம் எப்போ...???? உச்சிக்கா...வழிநேரம்...????? எந்தெங்கிலும் பிரஷ்னம் ஆனால் சாரு எவ்விட போவாம் ...!! போம்பேவுக்கா இல்ல பத்தனம் திட்டா...ஹி..ஹி.... ///

  பன்னிகுட்டிக்கும் உமக்கும் என்ன டெலிபதி ஓய்.......
  ரெண்டு பேரும் ஒரே கோணத்துல ரோசிக்கிறீங்க பிச்சிபுடுவேன் பிச்சி.....

  ReplyDelete
 41. //என்னது நீங்க தமிழா..............................?.மக்கா பொய் தானே.//

  இனி இதுக்கு ஒரு கோனார் தமிழ் உறையா....அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..........

  ReplyDelete
 42. //தமிழ்நாட்டில் நீங்க மலையாளியா என்றுக் கேட்டு சந்தோசமாகத் தானே பழகுறோம் ? ஆனால் கேரளாவில் ஏன் இந்த இனதுவேசம் > ? விளக்கினால் புரிந்துக் கொள்வேன்?//

  இதுக்கு பதில் ரமணி அண்ணன் சொல்லியிருக்குறார் படிச்சி பாருங்க....கமெண்ட்ஸ்....

  ReplyDelete
 43. //நான்கூட சில காலம் வட இந்தியாவிலிருந்தேன்
  அவர்கள் தென் பகுதியைச் சர்ந்த எல்லோரையுமே
  மதராசி எனத்தான் சொல்வார்கள்.
  உங்கள் விசயத்தில் உங்கள் நல்ல
  மலையாள உச்சரிப்புத்தான் இந்த
  குழப்பத்திற்கு காரணம் என நினைக்கிறேன்
  எப்படியோ எங்களுக்கு இதனால்
  ஒரு நல்ல பதிவு கிடத்தது தொடர வாழ்த்துக்கள்//

  உங்க எழுத்துக்கு நான் தீவிர ரசிகன். . . .
  கமெண்ட்சும் என் மனசு சொன்ன மாதிரியே போட்டு அசத்திட்டீங்க அண்ணா.....

  ReplyDelete
 44. மீதி கதைய எனக்கு தனியா மெயில் பண்றீங்களா ?

  ReplyDelete
 45. //நானும் இந்தமாதிரி ஒரு விஷயத்துல 20 நாளுக்கு முன்னாடி மாட்டினேன்.
  அத பதிவாவும் முடிச்சி வச்சிட்டேன் ஆனா நாளைக்கு அதுக்கு ஒரு முடிவு இருக்கு(!)
  அது என்னன்னு பாத்துட்டு அந்தப்பதிவ release பண்றேன்(!?)//

  போட்டு தாக்கு மக்கா போட்டு தாக்கு......

  ReplyDelete
 46. //எல்லாம் இருக்கட்டும். தலைப்பைப் பார்த்துட்டு mate ன்னு நினைச்சுட்டேன். Maid ன்னு இருக்கவேணாமா///

  எனக்கு விரோதமாக மலையாளிதான் பிரச்சினை பண்றான்னு நினச்சேன் ஆனா கூகுளும் சதி செய்யும்னு கம்பியூட்டர்ல [கனவுல] நினச்சி பாக்கலை சாரி மக்கா.....

  ReplyDelete
 47. //மீதி கதைய எனக்கு தனியா மெயில் பண்றீங்களா ?//

  பிச்சிபுடுவேன் பிச்சி........ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 48. ஹே....யாராக்கும் இவிடே பெஹளம் வைக்குனது???????

  ஈ பாண்டிமாரு மலையாளியோ கொலையாளியோன்னு ரைம்ஸ் ஒக்க வச்சுட்டுண்டு கேட்டோ!!!!!

  எங்கூர்லே தமிழரும் (நாங்கதான்) மலையாளிகளும் ரொம்பவே நட்புணர்வோடுதான் இருக்கோம்.

  கேரள சங்கத்தின் முக்கிய புள்ளியாக்கும் கேட்டோ!

  ReplyDelete
 49. நான் எதுக்கு வரணும் ? ஹி ஹி ..
  மொக்கை போட்ட அடிக்க கூடாது .. அப்படின்னா வரேன் ..

  ReplyDelete
 50. ஆஹா .. மலையாள ஃபிகரா.. எங்கே எங்கே..?

  ReplyDelete
 51. யோவ் என்னய்யா பிளாக் நடத்தறீங்க..இதுதான் சாக்குன்னு 2 கேரளா ஃபிகரை கொண்டாந்து இறக்கி இருக்க வேணாமா..? ஹி ஹி ஹி

  இப்படிக்கு காஞ்சு கிடக்கும் காளைகள் சங்கம்

  ReplyDelete
 52. >>>அட சேச்சி அதை சொல்லத்தான் நீங்க நேரமே தர்ரதில்லையே... உடனே கோபபடுகிறீர்களே நான் என்ன செய்ய முடியும் என்றேன். சிரித்து விட்டு போனாள்.........

  இதுல ஏண்ணா சஸ்பென்ஸ்.. அப்புறம் கதை என்னாச்சு?

  ReplyDelete
 53. //நான் தமிழன் என்று போர்ட் வைக்கவும் //

  ha... ha... ha....

  Boardai marakkamal malayalaththil vaikkavum....

  ReplyDelete
 54. //சே.குமார் said...
  //நான் தமிழன் என்று போர்ட் வைக்கவும் //

  ha... ha... ha....

  Boardai marakkamal malayalaththil vaikkavum...

  ஆமாம்
  பேசாமல் நீங்கள் மலையாளத்தில் பிளாக் எழுதலாம்

  ReplyDelete
 55. முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
  எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.

  ReplyDelete
 56. //கேரள சங்கத்தின் முக்கிய புள்ளியாக்கும் கேட்டோ//

  நல்லா இருங்கடே மக்கா....

  ReplyDelete
 57. //நான் எதுக்கு வரணும் ? ஹி ஹி ..
  மொக்கை போட்ட அடிக்க கூடாது .. அப்படின்னா வரேன் ..//

  இதுல ரெண்டு நன்மை இருக்கு...
  ஒன்னு : சேட்டன் சேச்சிமார்களிடம் இருந்து நான் தப்பிக்க...
  இரண்டு : உன் தொல்லையில் இருந்து நான் தப்பிக்க....

  ReplyDelete
 58. //ஆஹா .. மலையாள ஃபிகரா.. எங்கே எங்கே..? //

  அடபாவி அலையுறதை பாரு.....

  ReplyDelete
 59. //இப்படிக்கு காஞ்சு கிடக்கும் காளைகள் சங்கம் //
  காயடிச்சாதான் சரி படுவீங்க.....ஹே ஹே...

  ReplyDelete
 60. //இதுல ஏண்ணா சஸ்பென்ஸ்.. அப்புறம் கதை என்னாச்சு?//

  ஆமா நீங்க யாரு.....?
  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 61. //Boardai marakkamal malayalaththil vaikkavum...

  ஆமாம்
  பேசாமல் நீங்கள் மலையாளத்தில் பிளாக் எழுதலாம் //

  அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....
  நான் ஊருக்கு போறேன்...

  ReplyDelete
 62. உங்கள் மேசையில் ஒரு தமிழக முதலமைச்சர் படத்தை வைத்து பாருங்கள்.
  உங்க இடத்துக்கு[your post][யோகன்]பாரிஸ் லேயிருந்து ஒரு பயோ-டேட்டா வந்திருக்குன்னு சொன்னாங்களே உண்மையா?

  ReplyDelete
 63. //முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
  எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை//

  இதோ வந்துட்டேன்...
  ஹே ஹே வேற வேலை...

  ReplyDelete
 64. MANO நாஞ்சில் மனோ said...
  //சில மலையாளிகளுக்கு தமிழ் தெரிந்தாலும், அவர்கள் பேசும் தமிழை கேக்க நமக்கு சகிக்காது என்பதே உண்மை....உதாரணம் மத்திய அமைச்சர் வயலார் ரவி[கேரளா] தமிழ் மீடியாக்களுக்கு தமிழில் பேட்டி குடுப்பதை கவனிக்கவும்..... //

  தமிழ் நாட்டுத் தமிழனுக்கே ஒழுங்காகத் தமிழில் பேசத் தெரியாது. இந்த அழகில் மற்றய மாநிலத்தவனின் உச்சரிப்பை நையாண்டி செய்வதிலும் குறைவில்லை.

  ReplyDelete
 65. அட என்னய்யா இது கொடுமயா இருக்கு..

  ReplyDelete
 66. //உங்கள் மேசையில் ஒரு தமிழக முதலமைச்சர் படத்தை வைத்து பாருங்கள்.
  உங்க இடத்துக்கு[your post][யோகன்]பாரிஸ் லேயிருந்து ஒரு பயோ-டேட்டா வந்திருக்குன்னு சொன்னாங்களே உண்மையா? ///

  அடபாவி என் வேலைக்கே ஆப்பு வைக்கவா........

  ReplyDelete
 67. //அட என்னய்யா இது கொடுமயா இருக்கு.. //

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 68. //தமிழ் நாட்டுத் தமிழனுக்கே ஒழுங்காகத் தமிழில் பேசத் தெரியாது. இந்த அழகில் மற்றய மாநிலத்தவனின் உச்சரிப்பை நையாண்டி செய்வதிலும் குறைவில்லை.//

  ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 69. மலையாள பென்குட்டியோ ?

  எங்க போனாலும் இதேதொல்லை தான் காரணம் தமிழ் தெரிந்தவர்களுக்கு கொஞ்ச நாளுலேயே மலையாளம் சரளமாக பேச வந்துவிடும்
  இதனால் மல்யாளிகளுடன் சரளமாக பேசும் பொது எங்களையும் மலையாளிகள் என்று நினைகின்றனர் கதாரிலும் இதே பிரஷ்ணம் தான் மனசிலாயி?

  ReplyDelete
 70. //மலையாள பென்குட்டியோ ?///


  எந்து பேடிச்சி போயோ மோனே....

  ReplyDelete
 71. எந்தா சேட்டோ அறிவர் அறிவார் மொழிதனில் பிரிவார் மறுகாய் வருவார் மனமத்திலடைப்பர்

  ReplyDelete
 72. //எந்தா சேட்டோ அறிவர் அறிவார் மொழிதனில் பிரிவார் மறுகாய் வருவார் மனமத்திலடைப்பர்//

  தமிழ் கவிஞன் வந்தாச்சி.....

  ReplyDelete
 73. இதுக்கெல்லாம் கவலைபட்டா முடியுமா? பதிவும், பின்னூட்டத்திற்கான பதில்களும் சூப்பர்!

  ReplyDelete
 74. என்னை ஞாபகம் இருக்கா?

  என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

  See,

  http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

  ReplyDelete
 75. பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! மறந்துடீங்க பாஸ்..

  ReplyDelete
 76. //இதுக்கெல்லாம் கவலைபட்டா முடியுமா? பதிவும், பின்னூட்டத்திற்கான பதில்களும் சூப்பர்! //

  வாங்க வாங்க ரொம்ப நன்றி...

  ReplyDelete
 77. //என்னை ஞாபகம் இருக்கா?//


  உங்களை மறப்பேனோ......

  ReplyDelete
 78. //பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! மறந்துடீங்க பாஸ்.. //

  இதோ வந்துட்டேன் மக்கா....

  ReplyDelete
 79. வணக்கம் நண்பரே உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள் நன்றி

  ReplyDelete
 80. . அட சேச்சி அதை சொல்லத்தான் நீங்க நேரமே தர்ரதில்லையே... \\\\\\நேரம் தந்திருந்தால் நல்லா வெளங்கி இருக்கும் அவங்க ஏற்கனவே பிசியா இருந்திருப்பாங்கன்னு நினைக்கிரேன்...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!