Thursday, February 17, 2011

பாசம்

 ஒரே பிரச்சினையா இருக்குய்யா. பேஸ்புக் நண்பர்கள் துபாய்ல கப்பல் டிரைவரா இருக்கும் சத்யாவும், கத்தார்ல கத்தி காட்டி மிரட்டும் ராஜா இந்தியாவும் என்ன இன்னைக்கு ஆளையே காணோம்னு சொல்ல, பதிவுலகில் கமென்ட் போட்டுட்டு இருந்த நான் பேஸ்புக் பக்கம் போனேன். அப்புறம் பதிவுலகில் உள்ள நண்பர்கள் என்ன ஏரியா பக்கம் வரலியேன்னு நம்ம விக்கி உலகமும், நண்பன் கருனும், கவிதை வீதி சவ்ந்தரும் சவுண்டு விடுறாங்க.
அதான் கமெண்ட்ஸ் போடவும் பேஸ்புக்'கை நாறடிக்கவும் டைம் டேபிள் வைக்கலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு பனிரெண்டு மணி நேரம் டியூட்டி அதாவது காலை 9:00 am to 9:00pm [பஹ்ரைன் நேரம்] வரை வேலை. வேலைக்கு வந்ததும் முதல் வேலையா பாலோவரின் பதிவுகளுக்கு திட்டியோ, பாராட்டியோ கமெண்ட்ஸ் போடணும் அது 9:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தொடரும் [பேஸ்புக் பார்ட்டிகள் கவனிக்கவும்] அப்புறம் சாப்பாடு. பிறகு 2 :00 மணி முதல் இரவு 9 : ௦௦ மணி வரை பேஸ்புக் டியூட்டி என்ன ஓகே'வா...?? [[வேலை வெளங்கிரும் முதலாளியும் வெளங்கிருவான்]]
சரி இனி என்னை ரப்சரும், பாசமும்  பண்ணினவங்களோட[[நண்பெண்டா]] லிஸ்ட் சொல்லப் போறேன். இம்சை அரசன் பாபு அன்னைக்கு போட்ட போட்டோட  போனவர் போனவர்தான் இன்னும் ஆளையே காணோம். அடுத்து சி பி செந்தில்குமார் என் கூட நீங்க போனில் பேசமாட்டீங்களா வச்சிருக்கேன்னு கோபபட்டார் போன பதிவில். சரி முதல்ல ஒரு மெயில் அனுப்புவோம் அப்புறமா போன் செய்யலாம்னு நான் அனுப்பின  மெயிலும் செந்தில் அனுப்புன பதிலையும் கீழே கொடுத்துருக்கேன் பாருங்க.
நான் : 2011/2/15 tr manasey manasey <manaseytrmanasey525@gmail.com>
வணக்கம் செந்தில் எப்பிடி இருக்கீங்க சவுக்கியமா...
செந்தில் : 2011/2/16 சி.பி.செந்தில்குமார் சென்னிமலை <cpsenthilkumar20@gmail.com>

நீங்க யார்னு தெரியலையே , இருந்தாலும் ஒரு வணக்கத்தை போட்டு வைக்கிரேன்.
நான் : 011/2/16 tr manasey manasey <manaseytrmanasey525@gmail.com>

அடபாவி மக்கா நான் நாஞ்சில் மனோ ஹா ஹா ஹா ஹா.....
கலியுகம் தினேஷ் இப்பதான் வந்து என்னை பாத்துட்டு போனார்....உங்களை பற்றி சொன்னார்..
செந்தில் : 2011/2/16 சி.பி.செந்தில்குமார் சென்னிமலை <cpsenthilkumar20@gmail.com>
அட நீங்களா.. ம் ம் எபடி இருக்கீங்க.. நாலை பதிவ்ர் சந்திப்பு போஸ்ட்டா..

 பாத்தீங்களா நீங்க யாருன்னு தெரியலன்னு தெரியாத ஆளுக்கு வணக்கம் வைக்கிறதை [அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்]
அடுத்த ரப்சர் கோமாளி செல்வா பதிவுலகத்துல நம்ம எல்லார் கழுத்தையும் அருக்குறான்னா பேஸ்புக்ல நாள்தோறும் எங்களை ரத்த காட்டேரி மாதிரி கடிக்கிறதுக்கு இன்றைய அவன் மொக்கைய கீழே பாருங்க.

மொக்கைத் தத்துவம்

வெள்ளைக் கோழி வெள்ளைக் கலர்ல முட்டை போடுதுங்கறதுக்காக,
கருப்புக் கோழி கருப்புக் கலர்ல முட்டை போட முடியாது!!

...நீதி : ஒழுங்கா படிக்கலைனா வாத்தியார் முட்டை போடுவார். (வாத்தியார் ஒழுங்காப் படிக்கலைனா இல்ல நீங்க ஒழுங்காப் படிக்கலைனா )"""
சத்தியமா இவன் என் கையில கிடச்ச அன்னைக்கு கைமா பண்ணியே புடுவேன்....இது நாள்தோறும் நடக்குற சங்கதி ஆகி போச்சு.

அடுத்து வருவதுதான் பெரிய திமிங்கலம் அது பன்னிகுட்டி ராமசாமி. போன என் பதிவுல நான் பட்ட அவஸ்தைக்கு அவரின் கமெண்ட்ஸை பாருங்க கீழே.
""பன்னிக்குட்டி ராம்சாமி said...
மக்கா நம்ம காதலர் தினப் பதிவுக்கே இப்படி கொண்டுபோய் விட்ருச்சுன்னா, நாளைக்கு கொஞ்சம் ’ஹெவி’யான பதிவு ஒண்ணு போடப் போறேனே? எதுக்கும் ஒரு கட்டிங் அடிச்சிட்டே நம்ம ப்ளாக் பக்கம் வாய்யா....... """"
படு பாவி சொன்னா மாதிரியே ஹெவி இல்லை இடியையே தலையில போடுறா மாதிரி பதிவு போட்டுருக்கார் வருங்கால முதல்வர் டாகுடர் விஜய் பற்றி [வெளங்குமா] கொஞ்சம் அந்த நாதாரி நடிப்பை பற்றி மறந்துருந்த நேரம். இவர் இந்த பதிவை போட்டு என் உறக்கத்துக்கு ஆப்பு வச்சிருக்கார். ஃபிரண்ட்ஸ் படத்துல விஜய் சிரிச்ச சிரிப்பை பார்த்து நானே போயி கீழ்பாக்கத்துல அட்மிட் ஆகலாம்னு இருந்தேன். நல்லா இருங்கடே மக்கா...
அடுத்தது சித்ரா மேடம் கமெண்ட்ஸ் பாருங்க.
""Chitra said...
:-)))"""
சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியலை அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.......
அவங்க எழுத்துக்கு நான் ரசிகன். அவங்க பதிவின் மூலம் நான் இப்போது அமெரிக்காவை சுத்தி பார்த்துட்டு இருக்கேன்.
அடுத்து எங்கள் "கவிதாயினி" மதுரை பொண்ணு. தோழி சகோதரி நட்பின் ஒளி....இவங்க கவிதைய திருட ஒரு கும்பலே சுத்திட்டு இருக்கு இவங்க கவிதை ஒன்னு கீழே.
""பழகிப்போன பிரிவுகளும்..
மரத்துப்போன மனதுகளும்...
கண்மூடா உறக்கங்களும்
இடைவேளையின்றி தவிக்கின்றன..
அவளின் நினைவுகளால்.."""
இந்த கவிதையை நீங்க எப்பிடி புரிந்து உணர்ந்து கொள்வீர்களோ எனக்கு தெரியாது. ஆனால் அதின் வலியும்  உள் அர்த்தமும்  தெரிஞ்ச  எனக்கு நெஞ்சில் கண்ணீர் சொரியும்.....என் உற்ற தோழி, ஒரு நாள் பேசலைன்னா வீச்சருவாளோடு வந்துருவாங்க. பேஸ்புக் இவரை கண்டால் நடுங்கும். ஆனால் பாசமான ராட்சசி...
அடுத்து நம்ம நிவேதா வேணும் [[பெயர்தான்] பேஸ்புக்'ல என்னை ரவுன்ன்டு கட்டி அடிக்கும் டெரர். எப்பவும் என்னை அங்கிள்'ன்னு உரிமையோட கூப்பிடுவாங்க. இப்போ பஹ்ரைன்'ல பிரச்சினை நடப்பதால்..எப்பவும் என் தொடர்பில் இருங்கன்னு சொல்லி மெசேஜும் போன் நம்பரும்  வாங்கிட்டாங்க [அன்பு] நம்ம ஜெய்லானியும், நாஞ்சில் எக்ஸ்பிரஸ் பிரதாப்பும்தான் இவர் எனிமி [பாசம்] இவங்க மூணு பேரும் ஒன்னா வந்தாலே பேஸ்புக் ஐயோ அம்மான்னு அலறும். 
அடுத்து என் அன்பு தம்பி டெரர் பிரவீன் குமார். அண்ணான்னு பாசமா செல்வா மாதிரி கூப்பிடுவான். இவன் நான் என்ன செய்தாலும் சொன்னாலும் அது தப்பாகவே இருந்தாலும் எனக்குதான் சப்போட் பண்ணுவான். கட்டபொம்மனுக்கு ஒரு வெள்ளைய தேவன் மாதிரி எனக்கு இவன்.
இன்னும் நிறைய பேர் இருக்காங்க. எழுத இடமில்லை. சரி இதெல்லாம் இருக்கட்டும் என் பதிவுலகிலும் பேஸ்புக்'கிலும் இல்லாத என் நண்பர்களை நான் மிஸ் பண்ணுற மாதிரு ஒரு ஃபீலிங்க்ஸ் அது உங்களுக்கு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க....
டிஸ்கி : இந்த பதிவு எழுதி டிஸ்கி எழுதும் நேரம் அமெரிக்காவில் இருந்து போன். நிவேதாவேதான் நலம் விசாரிச்சாங்க [நன்றி மக்கா] நாங்க பாதுகாப்பாய் இருக்கோம் மக்கா.....
டிஸ்கி : மேலே படத்தில் இருப்பது மதுரை பொண்ணு அல்ல...
  

79 comments:

 1. டிஸ்கி : மேலே படத்தில் இருப்பது மதுரை பொண்ணு அல்ல.//

  அவ்வ்வ்வ்... ஆகா.. மக்கா..

  ReplyDelete
 2. என்ன பக்கரின் கலகட்டுதாற்றுக்கு இன்னைக்கு மணாமாவுல 9 பேர் அவுட்டு., மக்கா நானும் பக்கரின்ல தான் இருக்கேன் (Saar) சார் நீங்க எந்த எடம்.

  ReplyDelete
 3. அடுத்து எங்கள் "கவிதாயினி" மதுரை பொண்ணு. தோழி சகோதரி நட்பின் ஒளி....இவங்க கவிதைய திருட ஒரு கும்பலே சுத்திட்டு இருக்கு இவங்க கவிதை ஒன்னு கீழே.
  ""பழகிப்போன பிரிவுகளும்..
  மரத்துப்போன மனதுகளும்...
  கண்மூடா உறக்கங்களும்
  இடைவேளையின்றி தவிக்கின்றன..
  அவளின் நினைவுகளால்.."""
  இந்த கவிதையை நீங்க எப்பிடி புரிந்து உணர்ந்து கொள்வீர்களோ எனக்கு தெரியாது. ஆனால் அதின் வலியும் உள் அர்த்தமும் தெரிஞ்ச எனக்கு நெஞ்சில் கண்ணீர் சொரியும்.....//

  மனோ.. அன்று நீங்க வச்ச ஆப்பு இருக்கே அந்த கவிதைய திருடுன குரங்கை பதிவையே அழிக்க வச்சுடீங்க.. நம் நட்பின் ஆழத்தினை அன்று கண்டுக்கொண்டேன்..

  ReplyDelete
 4. எலேய் மனோ மக்கா .. இதுக்கு தான் நான் கவிதைக்கு படம் தரேன்னு சொன்னப்ப வேண்டாம்னு சொன்னீங்களா.. ஹிஹி... படம் சூப்பர்.... கலக்கல்..

  ReplyDelete
 5. என் உற்ற தோழி, ஒரு நாள் பேசலைன்னா வீச்சருவாளோடு வந்துருவாங்க. பேஸ்புக் இவரை கண்டால் நடுங்கும். ஆனால் பாசமான ராட்சசி...
  //

  என்னை பற்றி மிக சரியாக தெரிந்துக் கொண்ட முதல் நண்பர் நீங்கள் தான்..

  ReplyDelete
 6. ஆரம்பத்தில் புத்தக முகத்தினை பார்த்து நான் நடுங்கினேன்... இப்போது புத்தக முகம் என்னை பார்த்து நடுங்குகின்றது ஹிஹி..

  ReplyDelete
 7. உங்கள் இந்த பதிவு ஒவ்வொரு நண்பர்களையும் அறிமுகம் செய்து வைக்கின்றது.. எழுத்து நடை என்னையும் உடன் அழைத்து செல்கின்றது..

  ReplyDelete
 8. எனக்கு பனிரெண்டு மணி நேரம் டியூட்டி அதாவது காலை 9:00 am to 9:00pm [பஹ்ரைன் நேரம்] வரை வேலை. வேலைக்கு வந்ததும் முதல் வேலையா பாலோவரின் பதிவுகளுக்கு திட்டியோ, பாராட்டியோ கமெண்ட்ஸ் போடணும் அது 9:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தொடரும் [பேஸ்புக் பார்ட்டிகள் கவனிக்கவும்] அப்புறம் சாப்பாடு. பிறகு 2 :00 மணி முதல் இரவு 9 : ௦௦ மணி வரை பேஸ்புக் டியூட்டி என்ன ஓகே'வா...?? [[வேலை வெளங்கிரும் முதலாளியும் வெளங்கிருவான்//

  என்ன ஒரு டையமிங்..என்ன ஒரு டையமிங்..என்ன ஒரு டையமிங்....

  ReplyDelete
 9. எத்தனை பாசக்காரப் பசங்க உங்களைச் சுத்தி!அதிர்ஷ்டக்காரர்தான்!

  ReplyDelete
 10. ரொம்ம்..................ப பெரிய பதிவு.

  ReplyDelete
 11. //ராஜகோபால் said...
  என்ன பக்கரின் கலகட்டுதாற்றுக்கு இன்னைக்கு மணாமாவுல 9 பேர் அவுட்டு., மக்கா நானும் பக்கரின்ல தான் இருக்கேன் (Saar) சார் நீங்க எந்த எடம்.//
  juffar...... panorama hotel pakkam...

  ReplyDelete
 12. மதுரைக்காரபசங்களப்போலவே பாசக்காரன்களா இருக்காங்கண்ணே... வாழ்க வளமுடன் .

  ReplyDelete
 13. //மதுரை பொண்ணு said...
  டிஸ்கி : மேலே படத்தில் இருப்பது மதுரை பொண்ணு அல்ல.//

  அவ்வ்வ்வ்... ஆகா.. மக்கா.. //


  ஐயோ அம்மா அவ்வ்வ்வவ்வ்வ்வ்....

  ReplyDelete
 14. என்ன தல படம் பயமுறுத்துது

  ReplyDelete
 15. அதெல்லாம் சரிதான் மனோ, அங்கு, பஹ்ரைனில் நிலைமை எப்படி உள்ளது? அதைப்பற்றி சொல்லோவீர்களா.....அதைவிட்டு மொக்கையா சுயபுராணம்? இனி தொடர்ந்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை, அதனால் உண்டான அனுபவங்களை சொல்லவேண்டும். இது நம்ம பன்னி குட்டி சார்பாக ஆர்டர். என்ன புரியுதா???

  ReplyDelete
 16. ippadiyum pathivu theththalaqmo... ithuvum nallathaan irukku.

  ReplyDelete
 17. நல்லாதான் இருக்கு ....

  ReplyDelete
 18. "Chitra said...
  :-)))"""
  சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியலை அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.......


  .....அப்படி போடு அருவாளை!!!!

  நான் அப்படிக்கா திரும்பி இருக்கிறப்போ, என் அருவாளோட இப்படிக்கா என் போட்டோவை எடுத்து, உங்க பதிவுல போட்டுட்டீங்களே! ஹா,ஹா,ஹா,....

  ReplyDelete
 19. வெள்ளைக் கோழி வெள்ளைக் கலர்ல முட்டை போடுதுங்கறதுக்காக,
  கருப்புக் கோழி கருப்புக் கலர்ல முட்டை போட முடியாது!!


  அட அட அட இன்னா தத்துவம்? பாஸ் நீங்க பெரிய ஆள்தான்!

  ReplyDelete
 20. அதெல்லாம் சரிதான் மனோ, அங்கு, பஹ்ரைனில் நிலைமை எப்படி உள்ளது? அதைப்பற்றி சொல்லோவீர்களா.....அதைவிட்டு மொக்கையா சுயபுராணம்? இனி தொடர்ந்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை, அதனால் உண்டான அனுபவங்களை சொல்லவேண்டும். இது நம்ம பன்னி குட்டி சார்பாக ஆர்டர். என்ன புரியுதா???

  இதேதான் எனது கருத்தும் ஆவலும் :))

  ReplyDelete
 21. கேக்குறாங்க டீடைலு எழுதுங்க மனோ என்னதான் விஷயமுன்னு............வைட் பண்ரோமுள்ள!

  எப்படியெல்லாம் பதிவ தேத்துரீங்கப்பா ஹி ஹி!!

  ReplyDelete
 22. //எனக்கு பனிரெண்டு மணி நேரம் டியூட்டி அதாவது காலை 9:00 am to 9:00pm [பஹ்ரைன் நேரம்] வரை வேலை. வேலைக்கு வந்ததும் முதல் வேலையா பாலோவரின் பதிவுகளுக்கு திட்டியோ, பாராட்டியோ கமெண்ட்ஸ் போடணும் அது 9:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தொடரும் [பேஸ்புக் பார்ட்டிகள் கவனிக்கவும்] அப்புறம் சாப்பாடு. பிறகு 2 :00 மணி முதல் இரவு 9 : ௦௦ மணி வரை பேஸ்புக் டியூட்டி என்ன ஓகே'வா...?? [[வேலை வெளங்கிரும் முதலாளியும் வெளங்கிருவான்///


  இதனாலதான் அங்கே கலவரமாமே என்ன கொடுமை சரவணா இது..!!

  ReplyDelete
 23. //டிஸ்கி : மேலே படத்தில் இருப்பது மதுரை பொண்ணு அல்ல...//
  ஒரு வேளை பயந்து போய் அவங்க பெரியம்மா போட்டோவை போட்டுட்டீங்களா ? ஹி..ஹி...

  ReplyDelete
 24. ஆஃபீஸ்ல இதுக்குக்கூட சம்பளம் தர்றாங்களா? நான் எவ்வளவோ தேவலை.

  ReplyDelete
 25. நாம 2 பேரும் சேட்டிங்க் பண்ணுனப்ப நீங்க உங்க ஆஃபீஸ் ஃபிகரை கரெக்ட் பண்ண மேட்டர்ரைப்பற்றி விலா வாரியா சொன்னீங்களே.. அதை ஏன் சென்சார் பண்ணீட்டீங்க? ஹி ஹி

  ReplyDelete
 26. பதிவு போட சர்ரக்கு இல்லாதப்ப உங்க ஐடியாவையும் ஃபாலோ பண்ணலாம் போல

  ReplyDelete
 27. தினேஷூம், நீங்களும் இருக்கற ஃபோட்டோவைப்போட்டு ஒரு பதிவர் சந்திப்பு போஸ்ட் போடறதா சொன்னீங்க?

  ReplyDelete
 28. டிஸ்கி : மேலே படத்தில் இருப்பது மதுரை பொண்ணு அல்ல...///

  இது தான் டாப்.....


  அடுத்து நம்ம நிவேதா வேணும் [[பெயர்தான்] பேஸ்புக்'ல என்னை ரவுன்ன்டு கட்டி அடிக்கும் டெரர்.////

  சொல்லவேயில்லை அப்படியா நான் கூட ரொம்ப நல்லவங்க நினைச்சேன்

  ReplyDelete
 29. அரிவாளோடு தெனாவட்டான சொர்ணாக்கா படம் களை கட்டுது. தலை வெட்டுது.

  ReplyDelete
 30. யப்பா பதிவின் படமே பயங்கரமா இருக்குது

  ReplyDelete
 31. //மதுரை பொண்ணு said...
  எலேய் மனோ மக்கா .. இதுக்கு தான் நான் கவிதைக்கு படம் தரேன்னு சொன்னப்ப வேண்டாம்னு சொன்னீங்களா.. ஹிஹி... படம் சூப்பர்.... கலக்கல்..//


  ஹே ஹே ஹே ஹே ஹே......

  ReplyDelete
 32. //உங்கள் இந்த பதிவு ஒவ்வொரு நண்பர்களையும் அறிமுகம் செய்து வைக்கின்றது.. எழுத்து நடை என்னையும் உடன் அழைத்து செல்கின்றது..//

  நன்றிலே மக்கா...

  ReplyDelete
 33. //சென்னை பித்தன் said...
  எத்தனை பாசக்காரப் பசங்க உங்களைச் சுத்தி!அதிர்ஷ்டக்காரர்தான்!//


  தெய்வத்திற்கு நன்றி....

  ReplyDelete
 34. மேலே படத்தில் இருப்பது மதுரை பொண்ணு அல்ல..../////////////////

  அது சொர்ணாக்கா

  ReplyDelete
 35. //கே. ஆர்.விஜயன் said...
  ரொம்ம்..................ப பெரிய பதிவு.//


  ஹா ஹா ஹா ஹா ஹைய்யோ ஹைய்யோ...

  ReplyDelete
 36. அருமையான நட்பு வட்டம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. உங்க ஆபீசுலேயே உங்க பக்கத்துக்கு சீட்டுல ஏதாவது வேலை காலி இருந்தா சொல்லுங்களேன் ....
  எனக்கும் போதுசெவைனா ரொம்ப பிடிக்கும் .......................

  ReplyDelete
 38. //மதுரை சரவணன் said...
  மதுரைக்காரபசங்களப்போலவே பாசக்காரன்களா இருக்காங்கண்ணே... வாழ்க வளமுடன் .//


  ஆமாம் மக்கா...

  ReplyDelete
 39. //Suresh Kumar said...
  என்ன தல படம் பயமுறுத்துது//


  பேஸ்புக்'ல சுட்டது ஹி ஹி.....

  ReplyDelete
 40. //கக்கு - மாணிக்கம் said...
  அதெல்லாம் சரிதான் மனோ, அங்கு, பஹ்ரைனில் நிலைமை எப்படி உள்ளது? அதைப்பற்றி சொல்லோவீர்களா.....அதைவிட்டு மொக்கையா சுயபுராணம்? இனி தொடர்ந்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை, அதனால் உண்டான அனுபவங்களை சொல்லவேண்டும். இது நம்ம பன்னி குட்டி சார்பாக ஆர்டர். என்ன புரியுதா???//

  அரசகட்டளை'க்கு அடிபணிகிறேன் மக்கா....
  விரைவில் எழுதுறேன் சூப்பர் மேட்டரெல்லாம் இருக்கு....

  ReplyDelete
 41. //ராமலக்ஷ்மி said...
  :))! //


  உங்களுக்கு ஒரு தனி பதிவு எழுதி வீடு கட்டவா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 42. //சே.குமார் said...
  ippadiyum pathivu theththalaqmo... ithuvum nallathaan irukku.//


  ஆமாம் சாமி ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 43. //AN.SHARAPUDEEN said...
  நல்லாதான் இருக்கு ....//


  வருகைக்கு நன்றி மக்கா........
  ஆமா நீங்க என் பேஸ்புக் நண்பர் சர்புதீன்'தானே...??? டவுட்டு அதான் கேட்டேன்...

  ReplyDelete
 44. //Chitra said...
  "Chitra said...
  :-)))"""
  சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியலை அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.......


  .....அப்படி போடு அருவாளை!!!!

  நான் அப்படிக்கா திரும்பி இருக்கிறப்போ, என் அருவாளோட இப்படிக்கா என் போட்டோவை எடுத்து, உங்க பதிவுல போட்டுட்டீங்களே! ஹா,ஹா,ஹா,....//

  ஹேய் அப்போ அது நீங்கதானா......
  அவ்வ்வ்வவ்வ்வ்வ்....

  ReplyDelete
 45. //மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
  வெள்ளைக் கோழி வெள்ளைக் கலர்ல முட்டை போடுதுங்கறதுக்காக,
  கருப்புக் கோழி கருப்புக் கலர்ல முட்டை போட முடியாது!!


  அட அட அட இன்னா தத்துவம்? பாஸ் நீங்க பெரிய ஆள்தான்!//


  என்னாது தத்துவமா அவ்வ்வ்வவ்வ்வ்வ்.......உங்களை விட அவன் [மொக்கையன்] பரவாயில்லையோ...

  ReplyDelete
 46. மனோ... நீங்கதான் அடுத்த கவுன்சிலர்... இல்ல கவர்மண்ட்... பெரீய கூட்டம் உங்கள சுத்தி......
  கவனமா இருக்கணும்... நான் என்ன சொன்னேன்.

  ReplyDelete
 47. //மாணவன் said...
  அதெல்லாம் சரிதான் மனோ, அங்கு, பஹ்ரைனில் நிலைமை எப்படி உள்ளது? அதைப்பற்றி சொல்லோவீர்களா.....அதைவிட்டு மொக்கையா சுயபுராணம்? இனி தொடர்ந்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை, அதனால் உண்டான அனுபவங்களை சொல்லவேண்டும். இது நம்ம பன்னி குட்டி சார்பாக ஆர்டர். என்ன புரியுதா???

  இதேதான் எனது கருத்தும் ஆவலும் :))//

  என் பேஸ்புக்'ல சுட சுட நியூஸ் போட்டுட்டுதான் இருக்கேன் மக்கா....
  ஆனாலும் பதிவும் கண்டிப்பா எழுதுறேன். இந்த கலவர சூழ்நிலையிலும் நண்பர்களின் பெரிய காமெடி ஸீன் எல்லாம் நடந்துருக்கு கண்டிப்பா சொல்றேன் நிலைமை சகஜமானதும்.

  ReplyDelete
 48. //விக்கி உலகம் said...
  கேக்குறாங்க டீடைலு எழுதுங்க மனோ என்னதான் விஷயமுன்னு............வைட் பண்ரோமுள்ள!

  எப்படியெல்லாம் பதிவ தேத்துரீங்கப்பா ஹி ஹி!!//


  ரைட்டு மக்கா....
  என் பேஸ்புக் பக்கம் வாங்களேன்...
  facebook.com/nmano1

  ReplyDelete
 49. //ஜெய்லானி said...
  இதனாலதான் அங்கே கலவரமாமே என்ன கொடுமை சரவணா இது..!!//

  ரெண்டு வெடிகுண்டு பார்சல் டூ ஷார்ஜா....................

  ReplyDelete
 50. //ஜெய்லானி said...
  //டிஸ்கி : மேலே படத்தில் இருப்பது மதுரை பொண்ணு அல்ல...//
  ஒரு வேளை பயந்து போய் அவங்க பெரியம்மா போட்டோவை போட்டுட்டீங்களா ? ஹி..ஹி...//


  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...
  யோவ் உண்மையிலேயே மதுரை பொண்ணு வீச்சருவாளோட வரும்முன் ஓடிருவோம் வாருமய்யா....

  ReplyDelete
 51. //சி.பி.செந்தில்குமார் said...
  ஆஃபீஸ்ல இதுக்குக்கூட சம்பளம் தர்றாங்களா? நான் எவ்வளவோ தேவலை.//
  //நாம 2 பேரும் சேட்டிங்க் பண்ணுனப்ப நீங்க உங்க ஆஃபீஸ் ஃபிகரை கரெக்ட் பண்ண மேட்டர்ரைப்பற்றி விலா வாரியா சொன்னீங்களே.. அதை ஏன் சென்சார் பண்ணீட்டீங்க? ஹி ஹி//

  //தினேஷூம், நீங்களும் இருக்கற ஃபோட்டோவைப்போட்டு ஒரு பதிவர் சந்திப்பு போஸ்ட் போடறதா சொன்னீங்க?//

  //பதிவு போட சர்ரக்கு இல்லாதப்ப உங்க ஐடியாவையும் ஃபாலோ பண்ணலாம் போல//

  1 : அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.......
  2 : நாசமா போச்சு பப்ளிக்ல போட்டு குடுத்திட்டீரே மக்கா....
  3 : பண்ணுங்க எசமான் பண்ணுங்க...
  4 : பதிவர் சந்திப்பு போடுறேன் மக்கா...

  ReplyDelete
 52. //இராஜராஜேஸ்வரி said...
  அரிவாளோடு தெனாவட்டான சொர்ணாக்கா படம் களை கட்டுது. தலை வெட்டுது.//


  ரிப்பீட்டே.....

  ReplyDelete
 53. //February 17, 2011 9:56 PM
  Speed Master said...
  யப்பா பதிவின் படமே பயங்கரமா இருக்குது//

  ஓடாதீங்கப்பு.....

  ReplyDelete
 54. //அஞ்சா சிங்கம் said...
  மேலே படத்தில் இருப்பது மதுரை பொண்ணு அல்ல..../////////////////

  அது சொர்ணாக்கா//

  யப்பா....

  ReplyDelete
 55. //February 17, 2011 10:58 PM
  அஞ்சா சிங்கம் said...
  அருமையான நட்பு வட்டம் வாழ்த்துக்கள்//

  நன்றிலே மக்கா..

  ReplyDelete
 56. //ebruary 17, 2011 10:59 PM
  அஞ்சா சிங்கம் said...
  உங்க ஆபீசுலேயே உங்க பக்கத்துக்கு சீட்டுல ஏதாவது வேலை காலி இருந்தா சொல்லுங்களேன் ....
  எனக்கும் போதுசெவைனா ரொம்ப பிடிக்கும் ......//

  என்னாது பொது சேவையா பிச்சி புடுவேன் பிச்சி ஆமா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 57. //சி.கருணாகரசு said...
  மனோ... நீங்கதான் அடுத்த கவுன்சிலர்... இல்ல கவர்மண்ட்... பெரீய கூட்டம் உங்கள சுத்தி......
  கவனமா இருக்கணும்... நான் என்ன சொன்னேன்.//

  அடப்பாவமே அவ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 58. என்னதான் நடக்குது இங்க???

  ஒன்னுமே புரியலயே...

  ஏதோ ஒரு சைனீஸ் படம் பாக்குர மாதிரியே இருக்கே..

  (இன்னும் இங்க என்ன பண்ற?? ஓடு ஜெ.ஜெ ஓடு)

  ReplyDelete
 59. உள்ளேன் அய்யா..

  என்ன ஒரு டைப்பா இறங்கிட்டிங்க..

  ReplyDelete
 60. தமிழ்மணம் வேலை செய்ய வில்லை அடுத்த ரவுணடுல வற்றேன்..

  ReplyDelete
 61. அடடா பதிவுலகத்தில என்னவெல்லாம் நடக்குதப்பா... ஹ...ஹ....

  கவனமாத் தான் இருக்கோணும்...

  ReplyDelete
 62. //இவன் நான் என்ன செய்தாலும் சொன்னாலும் அது தப்பாகவே இருந்தாலும் எனக்குதான் சப்போட் பண்ணுவான். கட்டபொம்மனுக்கு ஒரு வெள்ளைய தேவன் மாதிரி எனக்கு இவன்//

  ஹி ஹி .. பாவம் டெரர் பிரவீன் இப்ப என் மொக்கைப்பக்கம் வரதில்லை .. ஹா ஹா .. எனக்கு வெற்றி ..

  ReplyDelete
 63. //கோமாளி செல்வா said...
  //இவன் நான் என்ன செய்தாலும் சொன்னாலும் அது தப்பாகவே இருந்தாலும் எனக்குதான் சப்போட் பண்ணுவான். கட்டபொம்மனுக்கு ஒரு வெள்ளைய தேவன் மாதிரி எனக்கு இவன்//

  ஹி ஹி .. பாவம் டெரர் பிரவீன் இப்ப என் மொக்கைப்பக்கம் வரதில்லை .. ஹா ஹா .. எனக்கு வெற்றி .. //
  ஏலே மக்கா செல்வா..!! உன்னைய கும்மியெடுக்க... திங்கள்கிழமை முதல் டெரர் அவதரிக்கிறான். (டி.என்.பி.எஸ்.சி (வி.ஏ.ஓ)தேர்வுக்கு படிப்பதால் தற்போது உனக்கு லீவுலே..) அதன் பிறகு ரொம்ப ஜாக்கிரதையாக இருந்துக்கோ... ஹி...ஹி...

  ReplyDelete
 64. //ஜெ.ஜெ said...
  என்னதான் நடக்குது இங்க???

  ஒன்னுமே புரியலயே...

  ஏதோ ஒரு சைனீஸ் படம் பாக்குர மாதிரியே இருக்கே..

  (இன்னும் இங்க என்ன பண்ற?? ஓடு ஜெ.ஜெ ஓடு)//

  ஐயோ ஓடாதீங்க நில்லுங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 65. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  உள்ளேன் அய்யா..

  என்ன ஒரு டைப்பா இறங்கிட்டிங்க..//

  ஹே ஹே ஹே ஹே......

  ReplyDelete
 66. //ம.தி.சுதா said...
  அடடா பதிவுலகத்தில என்னவெல்லாம் நடக்குதப்பா... ஹ...ஹ....

  கவனமாத் தான் இருக்கோணும்...//

  இனி டெலிபோன் ஒட்டு கேப்பும் நடக்கும் ஹா ஹா ஹா....

  ReplyDelete
 67. //ஹி ஹி .. பாவம் டெரர் பிரவீன் இப்ப என் மொக்கைப்பக்கம் வரதில்லை .. ஹா ஹா .. எனக்கு வெற்றி ..//

  அவன்கிட்டே அடி வாங்காம உனக்கு உறக்கம் வராதுன்னு எனக்கு தெரியும் மக்கா.....

  ReplyDelete
 68. //ஏலே மக்கா செல்வா..!! உன்னைய கும்மியெடுக்க... திங்கள்கிழமை முதல் டெரர் அவதரிக்கிறான். (டி.என்.பி.எஸ்.சி (வி.ஏ.ஓ)தேர்வுக்கு படிப்பதால் தற்போது உனக்கு லீவுலே..) அதன் பிறகு ரொம்ப ஜாக்கிரதையாக இருந்துக்கோ... ஹி...ஹி...//


  ஹா ஹா ஹா ஹா மொக்கையனுக்கு இப்பவே ஜுரம காய்ச்சல் வந்துருக்குமே ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 69. ம்....
  அடுத்த ரவுண்டு வந்தாச்சி..

  என்னப்ப ஆளாளளுக்கு இப்படி பேரரசு படம் மாதிரி ஒரே சண்டையில் இறங்கிட்டிங்க..

  ReplyDelete
 70. தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். வாழ்த்துக்கள் சார்.உங்களுக்கு ஒன்னும் அங்க பிரச்சனை அல்லையே?

  ReplyDelete
 71. என்ன மக்கா அப்போ உனக்கும் டாகுடரு விஜய்ய புடிக்குமா? சொல்லவே இல்ல?

  ReplyDelete
 72. அந்த அருவாள எப்பிடி எடுப்பாங்க.....? இல்ல இல்ல, எப்பிடி வெச்சாங்க.....?

  ReplyDelete
 73. //sakthistudycentre-கருன் said...
  தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். வாழ்த்துக்கள் சார்.உங்களுக்கு ஒன்னும் அங்க பிரச்சனை அல்லையே?//

  நாங்க பாதுகாப்பா இருக்கோம் மக்கா....

  ReplyDelete
 74. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்ன மக்கா அப்போ உனக்கும் டாகுடரு விஜய்ய புடிக்குமா? சொல்லவே இல்ல?//

  மறுபடியும் மொதல்ல இருந்தே ஆரம்பிச்சிடாதீரும் ஓய....

  ReplyDelete
 75. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அந்த அருவாள எப்பிடி எடுப்பாங்க.....? இல்ல இல்ல, எப்பிடி வெச்சாங்க.....?//

  இந்த குசும்புதான் எனக்கு உம்மகிட்டே பிடிச்சது...

  ReplyDelete
 76. மனோ!அந்தக்கா எளனி வெட்ட நிக்கிறாங்களா?எலே நீ வெட்ட நிக்கிறாங்களா?

  சரி அத விடுங்க!பஹ்ரைன் போராட்டங்கள் குறித்து கொஞ்சம் சொல்லலாமே!பக்கத்து வீட்ல நாங்கெல்லாம் இருக்கிறோமே!

  ReplyDelete
 77. //மனோ!அந்தக்கா எளனி வெட்ட நிக்கிறாங்களா?எலே நீ வெட்ட நிக்கிறாங்களா?

  சரி அத விடுங்க!பஹ்ரைன் போராட்டங்கள் குறித்து கொஞ்சம் சொல்லலாமே!பக்கத்து வீட்ல நாங்கெல்லாம் இருக்கிறோமே!//

  சொல்றேன் மக்கா சொல்றேன் வருகைக்கு நன்றி....

  ReplyDelete
 78. MEEEEEEEEEEEEEEEE

  THE FIRST......

  ENDRU MUDAL FOLLOW PANREN ANNACHI..

  ReplyDelete
 79. //அடுத்து என் அன்பு தம்பி டெரர் பிரவீன் குமார். அண்ணான்னு பாசமா செல்வா மாதிரி கூப்பிடுவான். இவன் நான் என்ன செய்தாலும் சொன்னாலும் அது தப்பாகவே இருந்தாலும் எனக்குதான் சப்போட் பண்ணுவான். கட்டபொம்மனுக்கு ஒரு வெள்ளைய தேவன் மாதிரி எனக்கு இவன்.// ஹா...ஹா..ஹா... ரொம்ப ரொம்ப சந்தோசம்ணே.,!! இந்த வரிகளை படிக்கும் போதே என் மனசு மகிழ்ச்சியில் தள்ளாடியது....!!! தங்களது அன்பான அறிமுக பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணே...!!!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!